அமைதி நிலவும் நாட்டிலேதான் அனைவரும் அல்லற் படாமல் வாழ முடியும். அறிவுள்ளவர்களால் அளப்படும் ஆட்சியே அமைதிக்குக் கேடில்லாமல் நடந்து கொள்ளும். உள்நாட்டிலே சமாதானம் நிலவக் குடி மக்களுடன் ஒத்துழைக்கும். வெளிநாட்டு அரசாங்கங்களோடும் சமாதான உடன்படிக்கைகள் செய்துகொள்ளும். ஆழ்ந்த சிந்தனையும், பொறுமையும், சர்வ தேசக் கண்ணோட்டமும் உள்ளவர்களால் அளப்படும் நாடு எப்பொழுதும் அமைதிக்கு அபத்தில்லாமல் நடந்து கொள்ளும்.
பகையால் தீமை
தன்னுடன் விரோதங் கொண்டி ருப்பவர்களைச் சமாதான முறையிலேயே சரிப்படுத்த வேண்டும். அவர்களுடன் பகைத்துப் போர் செய்து அழித்து விடலாம் என்று எண்ணாவது அறிவுள்ளோர்க்கு அழகன்று. இப்படி எண்ணுவது போர் வெறிப்பிடித்தவர்களின் தன்மை; இதனால் நன்மை உண்டா காது; உலகத்திலே அமைதி நிலவாது,; என்று கூறுகிறார் வள்ளுவர்.
பகையால் துன்பங்கள் எல்லாம் தொடரும்,;நட்புக் கொள்ளுவதால் நல்ல நீதியாகிய உயர்ந்த நிலைமை தோன்றும்.” (ஞு.860) யாருடனும் திடீரென்று பகைத்துக் கொள்ளுவதால் தீமைதான் ஏற்படும். பகையில்லாமல் பலருடன் நட்பினராய் வாழ்வதே நலமமாகும்; என்று இவ்விரண்டு குறள்களும் இயம்பின.
அமைதிக்காகப் போர்
நமது பக்கத்திலேயே வாழ்கின்றனர்; எவ்வளவு சொல்லி யும் அவர்கள் நலமுடன் சமாதானத்துடன் வாழ விரும்பவில்லை. காலங்கிடைத்தால் நம்மைக் காலைவாரிவிடவே விரும்புகின்றனர்; இதற்கான பருவத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர். இவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர் திட்டமாக வரையறுத்துக் கூறுகின்றார்.
கொடுத்தும் கொளல்வேண்டும்; மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
தன் அண்டையிலேயே இருந்துகொண்டு எப்பொழுதும் தஇமைகளையே செய்து கொண்டி ர௬ுப்பவனுடைய பகையை விலை கொடுத்தாவது வாங்கிக்கொள்ள வேண்டும். (ஞூ.867)
“இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கை கொள்ளும் காழ்த்த இடத்து.
முள்ளுடைய மரத்தை முற்றவிடக்கூடாது; இளமரமாக இருக்கும்போதே வெட்டி வீழ்த்திவிட வேண்டும்; அம்மரம் முற்றி முதிர்ந்துவிட்டால் அதை வெட்டுகின்றவர்களின் கையையே அது வருத்தும்.”(கஞு.879)
இவ்விரண்டு வெண்பாக்களும், தம்மை அடுத்து நிற்கும் பகைவர்களை எப்படியாவது அழித்தால்தான் சமாதானத்துடன் வாழமுடியும் என்பதை வலியுறுத்தினார். எவ்வகையிலும் சமாதானத்துக்குக் கட்டுப்படாமல் - இணங்காமல் - நமக்கு இடையூறு விளைவிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பகைவர்களை வேறு என்ன தான் செய்ய முடியும்? இத்தகைய இராப்பகைவர்கள் உள் நாட்டினராயினும் சரி, வெளி நாட்டின ராயினும் சரி அவர்கள் ஆபத்தானவர்கள். இவ்வுண்மையை எடுத்துரைத்தார் வள்ளுவர்.
உள்ளத்திலே ஒற்றுமை இல்லாதவர்களுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிலே பாம்புடன்ஓன்று கூடி வாழ்வது போன்றதாகும்.” (ஞ.890) நட்பினர்களைப் போல நடிக்கும் வஞ்சகப் பகைவர்களை அழிக்க வேண்டும்; அப்பொழுதுதான் ஒரு நாடோ ஒரு மனிதனோ சமாதானமாக வாழ முடியும்; இவ்வுண்மையை இவ்விரண்டு குறள்களும் எடுத்துக் காட்டின.
மேலே காட்டிய, 867, 879, 882, 890 அகிய நான்கு வெண்பாக்களால் மற்றொரு உண்மையையும் உணரலாம். சமாதானத் தை நிலைநாட்டும் நோக்கத்துடன் சண்டை பிடிப்பதும் தவறன்று என்பதே அந்த உண்மை. பகையை வளர விட்டால் சண்டையின் அடிப்படையும் வளர்ந்துகொண்டே போகும். ஆதலால் சமாதனத்திற்கு இணங்காத பகைமைப் பூண்டுகளை முளையிலே கிள்ளிவிடுதல் நலம். இது சமாதானம் வளர்வதற்கு வழி. இதுவே வள்ளுவர் கருத்து என்பதில் ஐயம் இல்லை.
வல்லவர் கூட்டுறவு
அமைதியை நிலை நாட்ட முயல வேண்டுவதே ஒரு அரசாங்கத்தின் கடமையாக இருக்கவேண்டும். எந்த வழியிலும் சமாதானத்திற்குச் சம்மதிக்காமல், சண்டைக்கே ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் பகைவர்களை அழிப்பதே அரச நீதி. இதற்கேற்ற அறிவும் ஆற்றலும் ஆளுவோரிடம் அமைந்திருக்க வேண்டும். இவ்வறிவையும் அற்றலையும் அடைய வேண்டுமானால் எந்த அரசாங்கமும் தன்னைவிட வலுவுள்ள அரசாங்கத்துடன் உறவு கொண்டிருக்கவேண்டும். அறிஞர்களின் கூட்டத்தையும் தனக்கு வழிகாட்டுவோராக அணைத்துக் கொண்டிருக்க வேண்டும். இவ்வுண்மையைப் பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தில் காணலாம். இவ்வதிகாரத்தில் உள்ள பத்துப் பாடல்களும் இவ்வுண்மையை எடுத்துக்காட்டுகின்றன.
“தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
தம்மைக்காட்டிலும் எல்லாவற்றிலும் பெரியவர்களா யிருப்பவர்களை உறவினராகக் கொண்டு வாழ்வது ஆற்றல் எல்லாவற்றிலும் சிறந்த ஆற்றலாகும்.”(கு.144)
“சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
ஆராய்ந்து அறிவுரை கூறும் அறிஞர்களையே உலகம் கண்ணாகக் கொண்டு வாழ்கின்றது அதலால் ஆராய்ந்து அறிவுரை கூறும் அறிஞர்களையே அரசன் தேர்ந்தெடுத்து நட் பாகக் கொளள வேண்டும்.” (ஞ.445)
நம்மைக் காட்டிலும் சிறந்த வல்லரசுகளுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்; அறிஞர்களை துணையாக் கொண்டிருக்கவேண்டும்; என்ற உண்மைகளை இவ்விரண்டு குறள் வெண்பாக்களும் எடுத்துக்காட்டின.
தானாகவே யாருடனும் பகை கொள்ளக்கூடாது. பகைமை யால் துன்பங்கள் தாம் தொடரும். நட்பால் நன்மையுண்டாகும். தீராத பகைவர்களுடன் வெளிப்படையாகப் பகைமை கொள்ளலாம். அப்பகையை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். நேரடியான பகைவர்க்குத் தான் பயப்படவேண்டும். பகைவருடன் உறவு கொண்டு வாழ்வது பாம்புடன் சேர்ந்து வாழ்வது போன்றதாகும். தம்மைப் பகைவர்கள் தாக்காமல் இருக்க வேண்டுமானால் வல்லரசுகளுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்; அறிஞர்களின் துணையையும் பெற்றியிருக்க வேண்டும்.