பண்டைத் தமிழகத்தில் காதல் மணமே நடைபெற்று வந்தது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தாமே ஒருவரை ஒருவர் காதலித்து மணம் புரிந்து கொண்டனர். இவர்களுடைய காதலிலே - மணத்திலே - சாதியோ, மதமோ, குறுக்கிடுவதில்லை; நாள் நட்சத்திரங்கள் கூடத் தடை செய்வதில்லை.
மணமாகாத அடவன் ஒருவன், மணமாகாத மங்கை ஒருத்தியைக் கண்டு காதலிப்பான் அவளும் அவன் மீது அன்பு கொள்ளுவாள். இருவர் உள்ளத்திலும் தோன்றும் இக் காதல் அவர்களை ஒன்றாக பிணைக்கும்; கணவன் மனைவிகளாக ஆக்கிவிடும். இக்காதலும் ஊழ்வினையாலேயே உண்டாகும்; அவர்கள் இருவரும் கணவன் மனைவிகளாக வேண்டும் என்ற தலைவிதி - ஊழ்வினை - முன்வினை இருந்தால்தான் அவர்களுக்குள் காதல் பிறக்கும்.
“ஒன்றே வேறே என்று இருபால் வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப;
மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே.
இருவரும் ஒரு நிலத்தைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்; அல்லது வேறு வேறு நிலத்தில் வாழ்கின்றவர்களாகவும் இருக்கலாம்; அவர்களுடைய உயிர்களோடு ஓன்று பட்டு உயர்ந்து நிற்கின்ற வினையின் கட்டளைப்படி பிறப்பால்--பருவத்தால் - உருவத்தால் - குணத்தால் ஓத்த ஒரு தலைவனும், தலைவியும் சந்திப்பர்; தலைவன் தலைவியை விட உயர்ந்த வனாயினும் குற்றம் இல்லை” இதுவும் தொல்காப்பியக் களவியல் சூத்திரம். பூர்வ வினை காரணமாகவே தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காண்பர்; காதல் கொள்வர்; களவு மண வாழ்வை மேற் கொள்வர்; என்று கூறிற்று. தெய்வச் செயலை அழிக்க முடியாது. ஆதலால் காதல் கொண்ட தம்பதிகள் எக்காலத்திலும் பிரியாமல் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதை வலியுறுத்தவே காதலுக்குக் காரணம் வாழ்வினை தான் என்றார் தொல்காப்பியர்.
“வெளிப்பட வரைதல் படாமை வரைதல்்என்று
ஆயீரண்டு என்ப வரைதல் ஆறே.
மணந்து கொள்ளும் முறையைக் களவுப் புணர்ச்சி வெளிப்பட்ட பின் மணந்து கொள்ளுதல், களவுப் புணர்ச்சி வெளிப்படுவதற்கு முன்பே மணந்துகொள்ளுதல் ஆகிய இரண்டு வகை என்பர்” இதுவும் தொல்காப்பியத் களவியல் சூத்திரம், முதலில் ஆணும் பெண்ணும் தாமே சந்தித்து உறவு கொள்ளுவதற்கு முன் திருமணம் நடைபெறுவதில்லை என்பதை இதனால் காணலாம்.
குலத்தாலும் நலத்தாலும் சிறந்த ஆண்மகன் ஒருவன்; அவன் மணமாகாத கட்டிளைஞன்; ஒரு மலைச்சாரலிலே பூத்துக் குலுங்கும் மலர்க்கொடி, போன்ற ஒரு மங்கையைக் கண்டான். கண்டதும் வியப்புற்றான்.
“ அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனம் குழை
மாதர்கொல்? மாலும்என் நெஞ்சு,
இத்தோற்றம் இக் காடுறை தெய்வமோ! அல்லது சிறந்ததொரு மயிலோ! அல்லது கனமான குழையை அணிந்த பெண்தானோ! யார் என்று தெளிய முடியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றது”. (ஞ.1087)
இவ்வாறு எண்ணிக் கொண்டான். அவன் தோற்றத்தை உற்று நோக்கியபின் அவள் இம்மண்ணுலக மங்கைதான் என்று தெளிந்தான். அவள் அழகிலே மயங்கினான்; அவள் பார்வை யிலே நெஞ்சத்தைப் பறி கொடுத்தான். இவன் அவளைப் பார்த்துக் காதல் கொண்டது போலவே அவளும் இவனைக் கண்டாள்; காதல் கொண்டாள். அவள் குறிப்பை இவன் கண்டறிந்தான்.
“நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்; அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர்
நான் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணி வணங்கினாள்; அது இருவரிடமும் உள்ள அன்புப் பயிர் வளர அவள் பாய்ச்சிய நீராகும்” (கு.1093)
நான் பார்க்கும்போது அவள் நிலத்தை நோக்கித் தலை குனிவாள்; நான் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்துத் தன்னுள்ளே மகிழ்ச்சியடை கின்றாள்” (கு.1094) தலைவியின் இக்குறிப்பை உணர்ந்த பின்னரே தலைவனுடைய காதல் மிகுந்தது. அவளும் தன்மேல் காதல் கொண்டாள்
என்று அறிந்த பிறகு தான் அவன் அவளை மணக்க எண்ணங் கொண்டான். இது வள்ளுவர் காலத்திலும் அவர் காலத்துக்கு முன்னும் தமிழகத்திலிருந்து அடவர்களின் ஒழுக்கச் சிறப்பை உணர்த்துகின்றது. மனப்பூர்வமாகத் தன்னை காதலிக்காத பெண்ணைத் தானும் காதலிப்பதில்லை இதுவே பண்டைத் தமிழ் மகன் பண்பு. இவ்விரண்டு வெண்பாக்களுமே இதற்குச் சான்று.
காதலன் தன் காதலியால் பெற்ற இன்பத்தைப் பாராட்டிப் புகழ்வதைப் பற்றி மூன்று அதிகாரங்களிலே இருபத்தைந்து வெண்பாக்களிலே விளக்கி யிருக்கிறார் வள்ளுவர். புணர்ச்சி மகிழ்தல்; நலம்புனைந்து உரைத்தல்; காதற் சிறப்பு உரைத்தல்; என்பவைகளே அவ்வதிகாரங்கள். இவற்றுள் புணர்ச்சி மகிழ்தல் என்பது காதலன் தன் காதலியிடம் நுகர்ந்த இன்பத்தை எண்ணி மகிழ்வது. அவன் அடைந்த இன்பம் வாயால் சொல்ல முடியாதது; சொற்களில் அடங்காதது; எண்ணி எண்ணித்தான் இன்புற முடியும். இவ்வுண்மையையே புணர்ச்சி மகிழ்தலில் கூறினார்.
நலம்புனைந்து உரைத்தல் என்னும் அதிகாரத்திலே காதலன் தன் காதலியின் அழகையும், பண்பையும் பாராட்டிப் புகழ்கின்றான். அவளுடைய ஓவ்வொரு அவயங்களுக்கும் உவமை சொல்லி மகிழ்ச்சி படை கின்றான்.
காதல் சிறப்பு உரைத்தல் என்னும் அலாரத்திலே முதல் ஐந்து வெண்பாக்கள் காதலன் கூற்று. அடுத்து ஐந்து வெண்பாக்கள் காதலியின் கூற்று காதலன் கூற்றாக இருபத்தைந்து வெண்பாக்களைக் கூறிக், காதலியின் கூற்றாக ஐந்து வெண்பாக்களை மட்டும் அமைத்திருப்பது சிந்தனைக்கு உரியது.
தமிழ் நாட்டுப் பெண்களின் நாணத்தையும், அடக்கத்தையும், பண்பையும் காட்டவே இவ்வாறு அமைத்தார் வள்ளுவர்.
காதல் துறையிலே பெண்கள் அண்களை விட அடக்கம் உள்ள வர்கள்; அதைப் பற்றி அண்களைப் போல் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள். தங்கள் உள்ளத்தில் எவ்வளவு காதல் உணர்ச்சியிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்ளும் பண்பு பெண்களுக்குத்தான் உண்டு. இவ்வுண்மையை வள்ளுவர் செய்யுட்கள் உணர்த்துகின்றன.
பண்டைத் தமிழ் மக்கள் கொண்ட காதல், என்றும் பிரியாதது; யாராலும் பிரிக்க முடியாது. அது உடம்பையும் உயிரையும் போன்றது; உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படியோ அப்படிப்பட்டது உடம்பும் உயிரும் ஒன்று பட்டி ருந்தால் தான் மனித உருவத்துடன் இயங்க முடியும். அதுபோலக் காதலனும் காதலியும் பிரியாமலிருந்தால்தான் அவர்கள் உயிர் வாழ்வார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாகவே வாழ்வார்கள். இப்படி, வாழ்வதுதான் உண்மை யான காதல் வாழ்க்கை. இதுவே முன்னோர் கொள்கை. இதுதான் வள்ளுவர் கொள்கையும்.
“உடம்பொடு உயிர் இடைஎன்ன, மற்றுஅன்ன
மடந்தையொடு எம்இடை நட்பு
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ, அத்தகையதே. இந்த மடந்தைக்கும் எமக்கும் உள்ள தொடர்பு.” (சூ.1112) இது காதலனே சொல்வதாக அமைந்த வெண்பா. இதனால் களவு மணம் புரிந்து கொண்ட காதலன் காதலிகளின் உறுதியைக் காணலாம்.
ஒருவரும் அறியாமல் - பெற்றோர், உற்றார், உறவினர் அறியாமல் - மறைவிலே மணம் புரிந்து கொண்ட தம்பதிகள் பின்னர் வெளிப்படையாக மணந்து கொள்ளுவார்கள், காதலன் தான் கைப்பிடித்த மங்கையை மணந்து கொள்ளுவதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அவ்விடையூறுகளுக்கு அவன் அஞ்சமாட்டான். மடலேறுதல் என்னும் காரியத்தைச் செய்து அவளை அடைந்தே தீருவான். அப்படியும் அவளை மனைவியாகப் பெற முடியாவிட்டால் மாண்டு போவான்; காதலன் இறந்த செய்தி கேட்டால் காதலியும் இறப்பாள் காதலன் உறுதிக்கும், காதலியின் கற்புக்கும் இது எடுத்துக்காட்டு.
பனமட்டைகளால் குதிரை வடிவாக ஒரு உருவம் செய்யப் படும். அதன்மேல் காதலன் உட்கார்ந்து கொள்ளுவான். தான் காதலித்த பெண்ணின் படத்தை எழுதிக் கையிலே பிடித்துக் கொள்ளுவான். அவன் ஏறியிருக்கும் பனைமடற் குதிரையின் பனைமடல்களின் கருத்துக்கள் அவன் உடம்பைக் கிழித்துப் புண்படுத்தும், இதைக்கண்ட ஊரார், அவன் காதலித்த பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைப்பர். இன்றேல் அவன் ஒரு மலை உ௨ச்சியிலேறிக் கீழே விழுந்து மாளுவான். இது கேட்டு அவள் காதலியும் மடி வாள். இவ்வாறு மடலேறும் வழக்கம் அண் மக்களிடம் மாத்திரந்தான் உண்டு; பெண் மக்களிடம் இல்லை; என்று கூறுகிறார் வள்ளுவர்.
“கடல்அன்ன காமம் உறந்தும் மடல் ஏறாப்
பெண்ணின பெரும் தக்கது இல்.
கடல்போன்ற காமநதோயால் வருந்தியும், மடல் ஏறுவதைப் பற்றி எண்ணாத பெண் பிறவியைப் போலப் பெருமையுள்ள பிறவி வேறு இல்லை” (க.1137) இக்குறளால் பெண்ணின் பெருமையைக் கூறினார் வள்ளுவர். அண் மகன் தன் காதலை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு எதையும் செய்வான். மானம் அவமானம் என்று பார்க்க மாட்டான். நாணத்தைத் துறப்பான்; பலர் பார்த்து நகைப்பார்கள் என்று எண்ணாமல் மடலேறுவான். இதை நாணுத் துறவுரைத்தல் என்னும் அதிகாரத்திலே கூறினார் வள்ளுவர்.
வள்ளுவர் காலத்திலே ஒரு அணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலே தோன்றிய காதல், என்றும் நிலைத்திருக்கும் காதல், அது வெறும் காம உணர்ச்சியை - உடல் இன்பத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டது அன்று. இருவர் உள்ளமும் வாழ்வும் என்றும் பிரியாமல் இயங்கும்; இத்தகைய பிரியாக் காதலே ஏற்றமுடையது; அண் பெண் கூட்டுறவு வாழ்விலே அன்பும், இன்பமும் வற்றாமல் வளர்வதற்கு வழிகாட்டுவதாகும். இல்லறத்தை இனிது நடத்துவதற்கு அடிப்படையான காதல் இது தான். இவ்வுண்மைகளைக் காமத்துப் பாலில் களவியலில் உள்ள முதல் ஏழு அதிகாரங்களால் அறியலாம்.