Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இலக்கியச்சுவை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இலக்கியச்சுவை
Permalink  
 


இலக்கியச்சுவை

வள்ளுவரின்‌ இலக்கியத்‌ திறமையைத்‌ திருக்குறளிலே எல்லாப்‌ பகுதிகளிலும்‌ காணலாம்‌. சிறப்பாகக்‌ காமத்துப்‌ பாலிலே கருத்தைக்‌ கவரும்‌ செய்யுட்கள்‌ பல அமைந்து கிடைக்‌கின்றன. படி.ப்போர்‌ சிந்தையிலே பதியவேண்டுமானால்‌ சிறந்த உவமைகளுடன்‌ கூறவேண்டும்‌. பண்டைத்‌ தமிழ்ப்புலவர்கள்‌ நல்ல உவமைகள்‌ காட்டிப்‌ பொருளை விளக்குவதிலே வல்லவர்கள்‌. இச்சிறப்பை வள்ளுவரிடம்‌ மிகுதியாகக்‌ காணலாம்‌.

ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா போன்ற பாடல்களில்‌, நினைத்த பொருளை அப்படியே அழகுபடச்‌ சொல்ல முடியும்‌.

அவைகள்‌ பல அடிகளைக்‌ கொண்டவை; விஷயத்திற்குத்‌ தக்கவாறு அடிகளைக்‌ குறைத்து கொள்ளலாம்‌; வளர்த்துக்‌ கொள்ளலாம்‌. குறள்‌ வெண்பாவுக்கோ இரண்டடிகள்‌ என்பது தான்‌ இலக்கணம்‌. இரண்டடிப்பாக்கள்‌ என்று சொல்லும்‌ கணக்குக்கூட சரியானதன்று; உண்மையாகப்‌ பார்த்தால்‌ ஒன்றே முக்கால்‌ அடிகளைக்‌ கொண்டதுதான்‌ குறள்‌ வெண்பா.

இத்தகைய குறள்‌ பெண்பாவிலே அரிய பொருளை, இனிய சுவையுடன்‌, சொல்வதென்றால்‌ அதற்குப்‌ பெரும்‌ புலமை வேண்டும்‌. ஒப்பற்ற உயர்ந்த கவிதா சக்தியும்‌, புலமையும்‌ பொருந்தியவர்களால்தான்‌ இலக்கியச்‌ சுவை அமையும்படி குறள்‌ வெண்பாக்களை இயற்ற முடியும்‌. இதை மறவாமல்‌ திருக்குறள்‌ வெண்பாக்களைப்‌ படித்தால்‌ அவற்றின்‌ அருமை பெருமைகளை அறியலாம்‌.

இன்பத்தின்‌ சிறப்பு

“தம்‌இல்‌ இருந்து தமதுபாத்து உண்டுஅற்றால்‌

அம்மா அரிவை முயக்கு.

தமது வீட்டிலே இருந்துகொண்டு; தாம்‌ தேடிய உணவைப்‌ பிறர்க்கும்‌ கொடுத்துத்‌ தாமும்‌ உண்டது போல்‌ இருக்கின்றது அழகிய மாமை நிறமுள்ள இப்பெண்ணைத்‌ தழுவுதல்‌.” (கு.1107)

தன்‌ காதலியைத்‌ தழுவி மகிழ்ந்த கணவன்‌, தான்‌ பெற்ற இன்பத்தைப்‌ பற்றி இவ்வாறு கூறினான்‌. அவன்‌ தான்பெற்ற இன்பத்தை மறைக்காமல்‌ வாய்விட்டுக்‌ கூறினான்‌; அவன்‌ காதலி வாய்விட்டுக்‌ கூறவில்லை; ஆயினும்‌ அவனைப்‌ போலவே தான்‌ அவளும்‌ மகிழ்ந்தாள்‌.

பிறர்‌ வீட்டிலே இருந்துகொண்டு பிறர்‌ உழைப்பால்‌ வரும்‌ உணவைத்‌ தாம்‌ மட்டும்‌ பெற்று உண்பதிலே இன்பம்‌ இல்லை. அவ்வுணவு எவ்வளவு சுவையுள்ளதானாலும்‌ அதனால்‌ மனத்துக்கு மகிழ்ச்சியில்லை. தமது வீட்டிலேயே இருந்துகொண்டு தாம்‌ தேடிய உணவைப்‌ பிறருக்கும்‌ கொடுத்துத்‌ தாமும்‌ உண்பதிலே தான்‌ இன்பம்‌ உண்டு. இதைப்‌ போலவே, தாமே ஒருவரை ஒருவர்‌ சந்தித்துக்‌ காதல்‌ உற்று, மணம்‌ புரிந்து, மணம்‌ ஒருமித்து வாழும்‌ தம்பதிகளின்‌ வாழ்க்கையிலேதான்‌ இன்பம்‌ உண்டு. இந்த உண்மையை இக்குறள்‌ விளக்கி நின்றது. இன்பம்‌ இன்னதென்று சொல்லும்போது, “எப்படி. வாழ வேண்டும்‌?” என்ற வழியையும்‌ காட்டியது இக்குறள்‌.

உவமை நயம்‌

“மதியும்‌ மடந்தை முகனும்‌ அறியாபதியில்‌ கலங்கிய மீன்‌. சந்திரனையும்‌, இப்பெண்ணின்‌ முகத்தையும்‌, இது சந்திரன்‌, இது முகம்‌ என்று அறிய முடியாமல்‌ வானத்தில்‌ உள்ள நட்சத்திரங்கள்‌ தமது நிலையில்‌ தடுமாறின.” (7176)

முகம்‌ சந்திரனைப்போல இருந்தது என்பதை இவ்வாறு இனிமையாகக்‌ கூறினார்‌. சந்திரன்‌ பக்கத்திலே இருக்கவேண்டிய நட்சத்திரங்களுக்கு எது சந்திரன்‌, எது பெண்ணின்‌ முகம்‌ என்று அடையாளம்‌ தெரியவில்லை. சந்திரனும்‌ இவள்‌ முகமும்‌ ஓன்று போலவே இருக்கின்றன என்பதே இக்குறளில்‌ உள்ள நயம்‌.

“காமக்‌ கடும்புனல்‌ நீந்திக்‌ கரைகாணேன்‌

யாமத்தும்‌ யானே உளேன்‌.

காமம்‌ என்னும்‌ கடும்‌ வெள்ளத்தை நீந்தியும்‌ அதன்‌ கரையை யான்‌ காணேன்‌; அதனால்‌ நள்ளிரவிலும்‌ நான்‌ தூங்க வில்லை; தனியாக விழித்திருக்கின்றேன்‌.” (ஞு.1767)

கணவனைப்‌ பிரிந்த துன்பத்தால்‌ வருந்தும்‌ காதலி கூறியது இது. பகல்‌ முழுவதும்‌ துன்ப வெள்ளத்திலே மிதந்து கொண்டிருந்‌தாள்‌. மாலைக்‌ காலத்திலே காதலன்‌ வந்துவிடுவான்‌ என்ற

நம்பிக்கையுடன்‌ பகலிலே அவ்வெள்ளத்திலே நீந்திக்கொண்டிருந்தாள்‌. கணவனைச்‌ காண்பதுதான்‌ அவள்‌ ஏறும்‌ கரையாகும்‌.

பகல்‌ முழுதும்‌ அந்தக்‌ காம வெள்ளத்திலே நீந்தியும்‌ மாலையிலே கணவனாகிய கரையைக்‌ காண முடியவில்லை; இரவிலும்‌ காண முடியவில்லை. நள்ளிரவு வந்துங்கூடக்‌ காண முடிய வில்லை. அப்பொழுதுதான்‌ அவள்‌ இவ்வாறு வருந்திக்‌ கூறினாள்‌. இதிலே காமத்தைப்‌ பெரிய வெள்ளமாகவும்‌, காதலனை அவ்வெள்ளத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும்‌ கரையாகவும்‌ உருவகம்‌ செய்யப்பட்டது.

“வாழ்வார்க்கு வானம்பயந்து அற்றால்‌ வீழ்வார்க்கு

வீழ்வார்‌ அளிக்கும்‌ அளி.

தம்மை விரும்பும்‌ மகளிர்க்குக்‌ காதலர்‌ அளிக்கும்‌ அன்பு, வானம்‌, தன்னை எதிர்பார்த்து உயிர்‌ வாழ்வார்க்கு மழை பெய்ததுபோல்‌ ஆகும்‌” (ஞ.1792)

காதலனைப்‌ பிரித்து வருந்தும்‌ காதலியின்‌ நிலையை இக்குறள்‌ எடுத்துக்‌ காட்டுகின்றது. மழையை எதிர்பார்த்து வாழ்கின்றவர்கள்‌, மழை பெய்யாவிட்டால்‌ உள்ளம்‌ வருந்து வார்கள்‌) அவர்கள்‌ எதிர்பார்த்த மழை வந்து விட்டால்‌ மகிழ்ச்சிப்‌ பெருக்கால்‌ இன்பம்‌ அடைவடார்கள்‌. கணவன்‌ அன்பையே எதிர்பார்த்து வாழும்‌ பெண்கள்‌ அவன்‌ அன்பு காட்டாவிட்டால்‌ அவதிப்படுவார்கள்‌. அவன்‌, பிரியாமல்‌ உடனிருந்து அன்பு காட்டினால்‌ அகம்‌ மகிழ்வார்கள்‌. கணவன்‌ மழை, காதலி மழையை நம்பியிருப்போர்‌ அவாள்‌.

“துஞ்சும்கால்‌ தோள்மேலர்‌ ஆகி, விழிக்குங்கால்‌

நெஞ்சத்தர்‌ ஆவர்‌ விரைந்து

என்‌ காதலர்‌ நான்‌ தூங்கும்போது கனவில்‌ வந்து, என்‌ தோள்மேல்‌ உள்ளவராகி, விழிக்குபோது விரைந்து என்‌ நெஞ்சத்துள்‌ புகுந்திருப்பவர்‌ ஆகிவிடுகின்றார்‌.” (ஞ.1218)

காதலனை பிரிந்திருக்கும்‌ காதலி, தான்‌ கண்ட கனவை இவ்வாறு உரைத்தாள்‌. அவள்‌ பகற்‌ பொழுதிலே கணவனைக்‌ காணாமல்‌ வருந்தினாள்‌. அப்பொழுது அவள்‌, காதலனோடு கூடியிருந்த போது நுகர்ந்த இன்பத்தை எண்ணி எண்ணி ஏங்கினாள்‌. இரவிலே தூங்கப்‌ படுத்தாள்‌; உறக்கம்‌ வரலில்லை. கண்ணை மூடினால்‌ கனவுதான்‌ வருகின்றது. அக்கனவிலே அவள்‌ கணவனுடன்‌ சேர்ந்திருந்தபோது அடைந்த இன்பத்தையே

காண்கிறாள்‌. காதலன்‌ தன்னுடன்‌ இருப்பதாகவே நினைக்‌கிறாள்‌, திடீரென்று விழித்துப்பார்த்தாள்‌; காதலனைக்‌ காணவில்லை. தனித்துதான்‌ இருக்கிறாள்‌. அந்த நிலையைத்தான்‌ அவள்‌ இவ்வாறு எடுத்துரைத்தாள்‌, நினைவுதான்‌ கனவுக்குக்‌ காரணம்‌ என்பதையும்‌ இக்குறள்‌ காட்டுகின்றது.

“காலை இரும்பிப்‌ பகல்‌எல்லாம்‌ போதுஆகி

மாலை மலரும்‌ இந்நோய்‌.

இந்தக்‌ காம நோயாகிய பூ காலைப்‌ பொழுதிலே அரும்‌பாகத்‌ தோன்றி பகல்‌ முழுவதும்‌ மலரும்‌ பக்குவம்‌ உள்ள பெரிய மொட்டாகி, மாலைப்‌ பொழுதில்‌ மலரும்‌.”(கு.1227)

இக்குறள்‌ காமத்தை ஒரு மலராக உருவகித்துக்‌ கூறியிருக்‌கின்றது. காம உணர்ச்சியுள்ளவர்கள்‌ மாலைக்‌ காலத்திலும்‌ இரவிலும்‌ தான்‌ அவ்வுணர்ச்சியால்‌ வருந்துவர்‌; அவர்கள்‌ உணர்ச்சி வெளிபடும்‌ காலம்‌ மாலையே. காலையிலே அரும்பாக இருக்கும்போது மணமில்லை; பகல்‌ முழுவதும்‌ மொட்டாக முற்றும்போதும்‌ மணமில்லை; மாலைக்‌ காலத்திலேயே மலர்ந்‌தால்தான்‌ மணம்‌ வீசும்‌; இது மலரின்‌ தன்மை. காமமும்‌ காலையிலே உள்ளத்தில்‌ மட்டுந்தான்‌ இருக்கும்‌. பகல்‌ முழுதும்‌ அவ்வுணர்ச்சி வளர்ந்து கொண்டே யிருக்கும்‌; மாலை நேரத்தில்‌ தான்‌ வெளிப்படும்‌ இவ்வாறு மலரையும்‌ காமத்தையும்‌ ஒப்பிட்டி ருப்பது நம்‌ உள்ளத்தைக்‌ கவர்கின்றது.

பெண்ணின்‌ பெருமை

“புலப்பல்‌ எனச்‌ சென்றேன்‌, புல்லினேன்‌, நெஞ்சம்‌

கலத்தல்‌ உறுவது கண்டு

அவர்‌ வந்த பொழுது ஊடுவேன்‌ என்று எண்ணிச்‌ சென்றேன்‌, எனது நெஞ்சம்‌ அவருடன்‌ ஒன்றுபடுவதைக்‌ கண்டு அவரைத்‌ தழுவிக்கொண்டேன்‌” (க.1259) 

இக்குறள்‌ ஒரு பெண்ணின்‌ உண்மையான அன்பை எடுத்துக்‌ காட்டிற்று. காதலன்‌ பிரிந்திருந்த போது அவள்‌ கடுங்கோபம்‌ கொண்டிருந்தாள்‌. “அவன்‌ வரட்டும்‌; அவனை என்ன செய்கிறேன்‌ பார்‌; அவனோடு பேச மாட்டேன்‌. அவன்‌ ஏதாவது பேசினால்‌ சண்டை போடுவேன்‌.” என்று நினைத்துக்‌ கொண்டிருந்தாள்‌. இச்சமயத்தில்‌ திடீரென்று காதலன்‌ வந்தான்‌.

அவன்‌ மீது சீறி விழுவது என்றே அவனிடம்‌ போனாள்‌. அவனைக்‌ கண்டவுடன்‌ அவள்‌ உள்ளம்‌ கனிந்து விட்டது. அது அவனிடம்‌ ஓடிவிட்டது. அவன்‌ சினமெல்லாம்‌ இருந்த இடம்‌ தெரியவில்லை; அவலுடன்‌ ஓடி. அவனைத்‌ தழுவிக்‌ கொண்டாள்‌. உண்மையான அன்பும்‌ கற்பும்‌ நிறைந்த மகளிர்‌ இயல்பு இதுதான்‌.

“அலந்தாரை அல்லல்நோய்‌ செய்துஅற்றால்‌, தம்மைப்‌

புலந்தாரைப்‌ புல்லா விடல்‌

தம்முடன்‌ ஊடியவரை நீக்கித்‌ தழுவாமலிருப்பது, முன்பே துன்புற்று வருந்தியவரை மேலும்‌ துன்ப நோயால்‌ வருந்துவது போலாம்‌.”(கு.1303) காதலனும்‌, காதலியும்‌ தமக்குள்‌ பிணங்கியிருக்கின்றனர்‌.

அப்பிணக்கத்தால்‌ அவர்கள்‌ இருவரும்‌ இன்பத்திலிருந்து விலகியிருக்கின்றனர்‌. “துன்புற்றவரை மேலும்‌ மேலும்‌ துன்புறச்‌ செய்வது தவறு; அது பெருங்கொடுமையாகும்‌. பிணங்கியிருப்பவரைத்‌ தழுவிக்‌ கொள்ளாவிட்டால்‌, பிணக்கம்‌ மேலும்‌ மேலும்‌ வளரும்‌. அதனால்‌ துன்பந்தான்‌ உண்டாகும்‌” இவ்வுண்மையை இருவர்‌ உள்ளத்திலும்‌ அப்பொழுது பிறக்கின்றது. கருத்திலே ஒன்றுபட்ட காதலர்களிடந்தான்‌ இத்தகைய எண்ணம்‌ பிறக்கும்‌. இந்த உண்மையை அடக்கிக்‌ கொண்டிருக்கின்றது இக்குறள்‌.  வருந்துகிறவர்களை மேலும்‌ வருந்தும்படி செய்யக்‌ கூடாது என்ற அறமும்‌ இதில்‌ அடங்கியிருக்கின்றது. “நவில்தொறும்‌ நூல்‌ நயம்போலும்‌, பயில்தொறும்‌

பண்புடை யாளர்‌ தொடர்பு

சிறந்த நூல்‌ கற்ககற்க இன்பம்‌ தருவதுபோல்‌, நற்குணம்‌ உள்ளவர்களின்‌ நட்பு பழகப்‌ பழக இன்பந்தரும்‌” (ஞ.783)

இது பொருட்பாலில்‌ நட்பு என்னும்‌ அதிகாரத்தில்‌ உள்ள குறள்‌. குறளில்‌ எல்லாப்‌ பகுதிகளிலும்‌, இலக்கியச்‌ சுவையுள்ள பாடல்கள்‌ நிறைந்திருக்கின்றன என்பதற்கு இது ஒன்றே போதும்‌. இக்குறள்‌ நட்பின்‌ தன்மையை விளக்கியதோடு, ஒரு சிறந்த இலக்கியம்‌ எப்படியிருக்கும்‌ என்பதையும்‌ எடுத்துரைத்தது.

இங்கே எடுத்துக்காட்டிய இச்சில குறள்களைக்‌ கொண்டே வள்ளுவர்‌ செய்யுட்களின்‌ இலக்கிய வளத்தைக்‌ காணலாம்‌.  நீதிநூல்கள்‌ எல்லாம்‌ பெரும்பாலும்‌ சட்ட நூல்கள்‌ போன்றவை. நம்‌ நாட்டிலே பண்டைக்‌ காலத்தில்‌ நடைமுறை யில்‌ இருந்த ஸ்மிருதிகள்‌ எல்லாம்‌ சட்டங்கள்தாம்‌; அவைகளிலே இலக்கிய இன்பத்தைக்‌ காணமுடியாது.வள்ளுவர்‌ குறளும்‌ ஸ்மிருதி போன்றதுதான்‌. அனால்‌ எல்லா மக்களும்‌, சாதி, மத, மொழி, நாடு என்ற பேதம்‌ இன்றிப்‌ பின்பற்றக்கூடிய அறங்களையே அவர்‌ தொகுத்துக்‌ கூறினார்‌. அந நூலாயினும்‌ அதைச்‌ சிறந்த இலக்கியமாக - இலக்கியச்‌ சுவை நிறைந்ததாக அமைந்திருப்பது ஒரு தனிச்‌ சிறப்பாகும்‌. இதனால்தான்‌ திருக்குறள்‌ சொற்சுவை பொருட்‌ சுவை நிறைந்த ஒப்பற்ற இலக்கியமாக அறிஞர்களால்‌ போற்றப்படுகின்றது.

 __________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard