Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளும் சமயமும் உ. தாமரைச்செல்வி


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருக்குறளும் சமயமும் உ. தாமரைச்செல்வி
Permalink  
 


திருக்குறளும்சமயமும் . தாமரைச்செல்வி

முன்னுரை

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எந்தவொரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த நூலாகவும் இல்லை. ஏனெனில், திருவள்ளுவர் தான் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு இனத்தையோ, சாதியையோ, சமயத்தையோ, அரசையோ, ஆளும் வர்க்கத்தையோ அவர் இயற்றிய திருக்குறளில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், திருவள்ளுவரைத் தங்கள் சமயத்தவர் என்றும், திருக்குறளைத் தங்கள் சமயம் சார்ந்த நூலென்றும் சில குறிப்புகளைக் காண்பித்துத் தவறான கருத்துக்களைச் சிலர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

சமணபுத்தசமயங்கள்

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள கடவுள் குறித்த விளக்கங்கள் சமண சமயக் கடவுளுக்கும், பௌத்த சமயப் பெரியோர்களுக்கும் பெரிதும் பொருந்துகின்றன என்று சமண, புத்த சமயத்தினர் கூறுகின்றனர். கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்தில் இடம் பெற்றிருக்கும் குறள்களில் இடம் பெற்றிருக்கும் கடவுள் என்று பொருள்படும் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் எனும் சொற்கள் சமணம் மற்றும் புத்த சமயம் தொடர்பிலான பெரியோர்களையே குறிக்கின்றன என்றும், இந்தச் சொற்கள் குறிப்பிடும் கருத்துகள் அனைத்தும் தங்கள் சமய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன என்றும் சில குறிப்புகளைக் குறிப்பிடுகின்றனர்.

இந்துசமயம்

கடவுள் வாழ்த்தில் முதல் குறளில் இடம் பெற்றிருக்கும் ஆதிபகவன் என்ற சொல் அரனையும், இரண்டாம் குறளில் இடம் பெற்றிருக்கும் வாலறிவன் என்ற சொல் மாலவனையும், மூன்றாம் குறளில் இடம் பெற்றிருக்கும் மலர்மிசை ஏகினோன் என்ற சொல் அயனையும் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர் இங்கு சிவன், திருமால், பிரம்மா எனும் இந்து சமயத்தின் முப்பெரும் கடவுள்களை மறைவாகக் குறித்து இருக்கிறார் என்று இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர். இந்து சமயத்தினரில் சிவன் வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட சைவ சமயப் பிரிவினர் சிலர் திருக்குறளின் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் சைவ சமயம் தொடர்புடையவை என்கின்றனர். மற்றொரு பிரிவினரான வைணவர்கள் இதை மறுப்பதுடன், கடவுள் தொடர்பான சொற்களும், அதில் இடம் பெற்றிருக்கும் கருத்துகளும் வைணவத்திலேயே அதிகமாக இருக்கிறது என்கின்றனர்.

சைவ சமயப் பிரிவினர் திருவள்ளுவரைத் திருவள்ளுவ நாயனார் என்றே அழைக்கின்றனர். திருவள்ளுவரை சைவர் என்றும், திருக்குறளைச் சைவ நூல் என்றும் குறிப்பிடுகின்றனர். திருவாவடுதுறை ஆதீனமான கொரடாச்சேரி வாலையானந்த அடிகள் என்பவர்திருவள்ளுவர் சித்தாந்த சைவர்எனும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதாக எழுதியுள்ளார். சோ. சண்முகம் என்பவர் எழுதியதிருக்குறளில் சைவ சமயம்எனும் கட்டுரையில் திருக்குறளில் சைவ சமயக் கருத்துகளே அதிகம் நிரம்பியிருக்கின்றன என்கிறார்.

சமயச்சார்புடையதா?

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் தமிழ் மொழி பேசுபவர்கள் சார்ந்திருக்கும் சமயங்களில் புத்தம், சமணம், இந்து சமயம் போன்றவைகளே திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்து இருப்பதாகக் கருதப்படுகின்றன. பிற சமயங்கள் திருவள்ளுவர் வாழ்ந்ததாகக் கருதப்படும் காலத்திற்குப் பின் தோன்றியவைகளாக இருக்கின்றன. இல்லையெனில், திருக்குறளிலுள்ள கருத்துகள் தங்களுடைய சமயம் சார்ந்த கருத்துகளாக இருக்கின்றன என்கிற சான்றுகளும் முன் வைக்கப்பட்டிருக்கும். உண்மையில் திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் பொதுவானதாக இருக்கின்றன. இந்தக் கருத்துகள் அனைத்துச் சமயப் பிரிவினருக்கும் பொருந்துவதாக இருக்கின்றன. இதனால்தான் திருக்குறளைச் சமயப் பாகுபாடின்றி, கருத்து வேறுபாடுகளின்றி அனைவரும் போற்றுகின்றனர். திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் சமயம், கடவுள் தொடர்பான கருத்துகள் எந்தவொரு சமயத்தையும் சார்ந்ததாக இல்லை என்பதைத் திருக்குறளை முழுமையாகப் புரிந்து கொண்டால் உணர முடியும்.

இங்கு திருக்குறள் சமய சார்பற்றது என்பதை அறிந்து கொள்ள, ஒரு சில குறள்களை மட்டும் நாம் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம்.




__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

முதல்குறள்
திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து பகுதியில் முதல் குறளாய் இருக்கும் திருக்குறளையே இங்கு முதலில் எடுத்துக் கொள்வோம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (குறள் -1)

அகர ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதலாவதாக இருக்கிறதுஇது போல் ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் முதல்வனாக இருக்கிறான் என்பதே..இதன் பொருள்.

தமிழில் முதன்மையாக இருக்கும் எழுத்து “” என்பதுதான்அகரத்திற்குத் தமிழ் எழுத்துக்களில் முதல் மரியாதை உண்டுஇந்த எழுத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறதுஅதாவதுதமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களிலும் உள்ள கோடுகள்வளைவுகள் எல்லாம் “” எனும் எழுத்து ஒன்றிலேயே அடங்கியிருக்கின்றனஅகரத்திலுள்ள மேற்சுழிகுறுக்குக்கோடு (-), நேர்கோடு (|), கீழ்வளைவு ஆகிய இந்த நான்கு குறியீடுகளையும் வைத்துத்தான் தமிழின் ஏனைய எழுத்துக்கள் அனைத்தும் உருவாகியுள்ளன என்ற கருத்தைச் சேதுரகுநாதன் என்பவர் குறிப்பிடுகிறார்.

இது போல்உலகத் தோற்றம் கதிரவனிடமிருந்து தோன்றியதென்பர்அவ்வாறு தோன்றி தொங்கிய நிலையில் ஞாலம் என்ற பெயர் அமைந்தது என்றும் கூறுவர்இவ்வாறு தோன்றி நிலைத்த நிலப்பரப்பில்பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னர் உயிர்த்தோற்றம் ஏற்படலாயிற்று என்று சொல்வதுண்டுஉயிர்த் தோற்றத்தின் முதன்மையாகக் கூறப்படும் கதிரவனைத்தான் ஆதிபகவன் என்கிற பெயரில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்இக்குறளில் திருவள்ளுவர் இயற்கையை வலியுறுத்திச் சிறப்பித்திருக்கிறார்இங்கு அவர் எந்தவொரு சமயத்தையும் முன்னிறுத்திப் பார்க்கவில்லை என்பதை உணர வேண்டும்.

இரண்டாவதாகஒருகுறள்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (குறள் -2)

தூய அறிவு வடிவானவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால்அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை என்பது இதன் பொருள்.

மனிதன் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்கிறான்கல்வியும் அறிவும் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதன் அந்தத் துறைகளில் முழுத்தூய்மை பெறுவது இல்லைமனித அளவில் மூன்று குறைகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளனஅறிவு பெருகப் பெருக அறியாமையும் நிழல் போல் தொடருகிறதுஅறிவுப் பெருகப் பெருக ஐயமும் விடாமல் தொடருகிறதுஅறிவு பெருகப் பெருக ஒன்றை வேறொன்றாகக் கொள்ளும் மருட்சி தோன்றுகிறதுஇருள்ஐயம்மருள் ஆகிய மூன்றும் நீங்கிய ஒருவன் “வாலறிவன்” என்று இக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளதுஇங்கு குறிப்பிடப்பட்டுள்ள வாலறிவன் என்பதைஎந்தச் சமயத்தின் கடவுளோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லைஎந்த சமயத்தின் தனிக் கருத்துகளும் இங்கு இடம் பெறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 மூன்றாவதாகஒருகுறள்

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (குறள்-9)

எண் வகைக் குணங்களில் உருவான மேன்மையானவன் திருவடிகளை வணங்காத் தலைகேளாக் காதும்காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது என்பது இக்குறளின் பொருள்.

கடவுளுக்கு குணமுண்டாஅதுவும் எட்டு வகையான குணமுண்டாஇக்குறளில் கடவுள் எண்குணத்தான் என்று எப்படி சுட்டிக்காட்டப்படுகிறார்எண்குணத்தான் என்பதற்குஎண்ணியபடி குணம் கொண்டவன் என்றும் கூட பொருள் கொள்ளலாம்இப்படியிருக்கஎண்குணத்தான் என்பது தங்கள் சமயத்தின் இறைவனையே குறிப்பிடுகிறது என்று சொல்லிக் கொள்வதில் பொருள் எதுவுமில்லை.

எட்டு வகையான குணங்கள் மனிதனின் எட்டு வகையான மெய்ப்பாடுகளையே குறிப்பிடுகிறதுதொல்காப்பியத்தில் ஒரு பாடல் இருக்கிறது.

நகையே அழுகை இனிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன
அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப” (தொல்காப்பியம்மெய்ப்பாட்டியல்நூ-3)

சிரிப்புஅழுகைதுன்பம்மயக்கம்அச்சம்பெருமிதம்சினம்மகிழ்ச்சி என மெய்ப்பாடுகள் எட்டாகும் என்பதே இந்தத் தொல்காப்பியப் பாடலின் பொருள்இந்த 8 வகையான மெய்ப்பாடுகளும்   எட்டு வகையான குணங்களின் அடிப்படைகளாக இருக்கின்றனஎட்டு மெய்ப்பாடுகளில் சிறப்புற்று விளங்குபவன் மனிதன் எனும் நிலையிலிருந்து மேம்பட்டவனாக இருக்கிறான்அவனின் திருவடிகளை வணங்கிஅவன் வழியாக நல்லவைகளைப் பார்த்திட வேண்டும்நல்ல செய்திகளை அறிந்திட வேண்டும்அப்படியே அவன் வழியைக் கடைப்பிடித்து நாமும் நல்வாழ்க்கையினை அடைந்திட   வேண்டும் என்பதையே திருவள்ளுவர் வலியுறுத்தி இருக்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள   வேண்டும்தவறான பொருள் கொண்டுதவறாகச் சிந்திப்பதைத் தவிர்த்திட வேண்டும்.

நான்காவதாகஒருகுறள்
பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு(குறள் -350)

இந்த உலகிலுள்ள பற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கு உரிய ஒரே வழிஎந்தப் பற்றும் இல்லாதவனைப் பற்ற வேண்டும் என்பதே இதன் பொருள்.

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஏதாவது ஒன்றின் மீது பற்று கொண்டிருக்கின்றனஇல்லற வாழ்க்கையைத் துறந்து வாழும் துறவிக்குக் கூடதுறவறத்தின் மீது தனிப் பற்று இருக்கத்தான் செய்கிறதுஎந்தவிதப் பற்றும் இல்லாத ஒருவன் மனிதனை விட மேலான நிலையிலிருப்பவனாகத்தான் இருக்க முடியும்அவனைப் பின்பற்றுங்கள்அவனை வழிபடுங்கள் என்று பொதுவாக இந்தத் திருக்குறள் குறிப்பிடுகிறதுஇந்தத் திருக்குறளில் எந்தச் சமய சார்புடைய கடவுளைப் பற்றிய குறிப்பும் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஐந்தாவதாகஒருகுறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.(குறள் -50)

உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான் என்பது இதன் பொருள்.

இந்த உலகம் துன்பம் நிறைந்ததுஇது நிலை இல்லாததுபொய்யானதுமாயமானது என்றுதான் அனைத்து சமயங்களும் குறிப்பிடுகின்றனஆனால்இந்த உலக வாழ்க்கையைக் கண்டு அஞ்சக் கூடாதுநல்ல நெறியைநல்ல ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு எந்தத் துன்பமுமில்லைஇந்த உலக வாழ்வில்நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு நன்மையும்நல்ல வளமையும் கிடைக்கும் என்பதில் ஐயமுமில்லைமேல் உலகம் எனும் வீடு பேற்றில் எத்தகைய சிறப்புஇன்பம் போன்றவை கிடைக்கும் என்று நாம் நம்புகிறோமோ அவை அனைத்தும் இந்த உலகத்திலேயே கிடைக்கிறதுஉலக வாழ்வை வெறுக்காமல்இந்த உலகில் பற்று கொண்டுநல்லெண்ணத்துடன் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று புதியதொரு கருத்தைக் குறிப்பிடும் திருவள்ளுவர்சமயக் கருத்தாளர்களுக்கு மாறுபட்ட கருத்தினைக் கொண்டவர்அவரைக் குறிப்பிட்ட சமயத்தவர் என்றும்அவர் இயற்றிய திருக்குறள் நூலைக் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தது என்றும் கருதுகிற பார்வையை மாற்றிட வேண்டும்திருக்குறளை உலகப் பொதுமறையாகப் போற்றிட வேண்டும்
.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard