Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நுழைவாயில் புறம் 6.


Guru

Status: Offline
Posts: 7474
Date:
நுழைவாயில் புறம் 6.
Permalink  
 


நுழைவாயில்

மதுரையில் 2000 ஆண்டுகளுக்கு முந்தையா நிலை புலவர் காரிகிழார் பாடிய புறநானூறு  6ம் பாடல் கூறுவது பாண்டிய அரசன் முதுகுடுமிப் பெருவழுதி நகர்வலம் செய்யும் போது  

பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே             புறம் 6: 15-17.

 

May your umbrella bow down when it circumambulates
the temple of Sivan with three eyes who is praised by sages! 

உனது கொற்றக்குடை முனிவரால் போற்றப்படும் முக்கட் செல்வனாகிய   (நெற்றிக் கண்ணோடு   மூன்று கண் உடைய)  சிவபெருமான் கோயிலை வலம் வருவதற்கு தாழ்க!  

இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே		20
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்

May your head bend down when the Brahmins of the four
Vedas praise you!  May your garland wilt, assaulted by
the smoke of flames you lit in the lands of your enemies!

உனது தலை, நான்கு வேதத்தினை அறிந்து சிறந்த பார்ப்பனர் (அந்தணர்) உன்னை நீடு வாழ்க என வாழ்த்தும் கையின் முன்னே வணங்குக பெருமானே!   

இங்கே 4 வெதங்களை ஓதும்  பார்ப்பனரை முனிவர் எனற் சொல்லால் புலவர் சுட்டுகிறார் 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அற்தியமான் போரில் வென்ற நிலையில் போரில் பெற்ற விழுப்புண்களோடு இருந்த போது பாடிய புலவர்.ஔவையார்   புறநானூறு  93 ம் பாடல் 

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த

their bodies laid out on fine green grass
by Brahmins who desire righteousness, who
know the four Vedas, who chant, “Go where
the great warriors with splendid war anklets
go, those who have died in battles with bravery
as their crutch,” and forgetting any love
they had for them,

 போரில் பங்கு பெறாமல் நோயால் இறந்தவர் சிறுமை நீக்க , நான்கு வேதங்களையும் அதன் சாரமான அறத்தை வலியுறுத்தும் அந்தணர் தருப்பையைப் புல் பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து இறுதி சடங்கு செய்து இழிவிலிருந்து தப்புவர் எனும் பாடலில் தமிழர் சடங்கு பற்றிய குறிப்புகள் உறுதி செய்கிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

மேலே இரண்டு பாடல்களில் வேதங்கள் என உள்ளதை விளக்க புறநானூறு 166ம் பாடல் 

 

திருவள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில் அரசனின் செங்கோல் என்பது பார்ப்பனர் வேதஙகள் மற்றும் அதனில் எழுந்த நீதி நூல்களிற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என கூறி உள்ளார்.

 

விண்ணத்தாயனின் மூதாதையர் – நல்லது கெட்டது என்று தெளிவாக ஆராய்ந்து அறிந்தவர்கள். நீண்டுநிமிர்ந்த சடையை உடைய பிரமன் வழியில் தவறு நேராமல் ஒன்றுபட்டு வாழ்பவர்கள். அவர்கள் பின்பற்றிய நெறிநூல் ‘முதுநூல்’. அவை ஈரிரண்டு. (நான்கு வேதம்). அது வாழும் ஆற்றுநெறிகளைக் கூறுவது. அதில் 21 துறைகள் காட்டப்பட்டிருந்தன. அதன் நெறிகளோடு மாறுபட்டோரை இவனது மூதாதையர் வெல்லும் அறிவாற்றல் மிக்கவர். இவர்களின் வழிவந்தவன் இந்த விண்ணத்தாயன். இவன் தன் தொழிலைச் செய்வதற்காக பச்சைத் தருப்பைப் புல்லாலான பூணூல் அணிந்திருந்தான். இவனுக்குப் பல மனைவியர். அவர்கள் அவன் நெறிகளுக்கு மாறுபடாமல் நடக்கும் கற்பு வலையை அமைத்துக்கொண்டவர்கள். சிறிய நெற்றி, பெரிய அல்குல் (பாலுறவுறுப்பு) சில சொற்களே பேசும் பழக்கம், பலவாகித் தழைய்யிருக்கும் கூந்தல் ஆகியவற்றை உடையவர்கள். அவன் தொழிலுக்குத் தகுந்தவாறு செயலாற்றுபவர்கள். காடோ, நாடோ, ஈரேழ் இடங்களோ (கீழே 7, மேலே 7 = 14 உலகம்) எங்கும் இவன் வேள்வி செய்தான். தண்ணீர் போல நெய்யை ஊற்றிச் செய்தான். அதனால் தன் புகழைப் பரப்பியிருந்தான். அத்துடன் விருந்து வந்தபோது திருத்தமாகப் பேணினான். யாரும் புகமுடியாத தன் காப்பு இல்லத்தில் வழங்கினான். காலை வேளையில் வழங்கினான். இவற்றைத் தான் காணவேண்டும் என்றும், அவன் வழங்கியதைத் தன் ஊருக்குக் கொண்டுசென்று உண்ணவேண்டும், தின்னவேண்டும் என்று புலவர் விரும்பி வாழ்த்துகிறார். குடகு நாட்டுப் பொன்மலையின் இடி முழக்கத்தால் காவிரியில் நீர் பெருகும் நாட்டில் வாழ்பவன் இவன். இமயம் போல இவன் உயர்ந்தும் உதவியும் வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.

 

மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே!

வேள்விக்காக, நீ காட்டு மானின் தோலை உன் பூணுலுக்கு மேல் அணிந்திருக்கிறாய். குற்றமற்ற, அரிய கற்பும், அற நூல்களில் புகழப்பட்ட வலை என்னும் ஆடையையும், சிறிய நெற்றியையும், அகன்ற இடையையும், அதிகமாகப் பேசாத இயல்பையும், மிகுதியான கூந்தலையும் உடைய, உன் தகுதிக்கேற்ற துணைவியராகிய உன் மனைவியர் அவர்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கின்றனர். காட்டிலும் நாட்டிலும் வாழ்ந்த பதினான்கு பசுக்களின் நெய்யை, நீரைவிட அதிகமாக வழங்கி, எண்ணற்ற பல வேள்விகளைச் செய்து உலகெங்கும் புகழ் பரப்பிய, அரிய வேள்வி நிறைவு பெறும் வேளையில் விருந்தினரோடு கூடியிருக்கும் உன் மேன்மையான நிலையை இன்றுபோல் நாங்கள் என்றும் காண்போமாக; மேற்கில், பொன் மிகுதியாக உள்ள உயர்ந்த மலையில் மேகம் இடியோடு முழங்கியதால் மலர்ந்த பூக்களைச் சுமந்து வரும் காவிரியில் புது வெள்ளம் பெருகி வருவதால் குளிர்ந்த நீருடைய தோட்டங்களுடைய எங்கள் ஊரில், நாங்கள் உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடியும் மகிழ்வோம்; யான் செல்கிறேன். மேகங்கள் அகலாது மழை பொழியும் உயர்ந்த மலைகளையுடைய, மூங்கில் வளரும் இமயம் போல் நீ இவ்வுலகில் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: இரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்பவை வேதத்தின் நான்கு பிரிவுகளாகும். சிட்சை, நிருத்தம், சந்தசு, சோதிடம், கற்பம், வியாகர்ணம் என்ற ஆறு நூல்களும் வேதத்தின் ஆறு அங்கங்களாகும்.

 

 நன்றாய்ந்த நீள்நிமிர்சடை

முதுமுதல்வன் வாய்போகாது

ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்

ஆறுணர்ந்த ஒருமுதுநூல்  புறம் 166, 1-9

மேன்மை பொருந்திய நீண்ட சடை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவ பெருமான் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு பிரிவுகள் (ஆறங்கம்)  உடைய தொன்மையான நூலாகிய வேதங்கள்.

தமிழர் வரலாற்றை அறிய மூல பாட்டுத் தொகை பாடல்களை தமிழ் இலக்கண இலக்கிய முறையில் அறிய வேண்டும். 

புறநானூறு 166, பாடியவர்: ஆவூர் மூலங்கிழார், பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன், திணை: வாகை. துறை: பார்ப்பன வாகை
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார், 5
மெய் அன்ன பொய் உணர்ந்து,
பொய் ஓராது மெய் கொளீஇ,
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக!
வினைக்கு வேண்டி நீ பூண்ட  10
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண் ஞாண் மிசைப் பொலிய,
மறங்கடிந்த அருங்கற்பின்,
அறம் புகழ்ந்த வலை சூடிச்,
சிறு நுதல் பேர் அகல் அல்குல்,  15
சில சொல்லின், பல கூந்தல் நின்
நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்பக்,
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர் ஏழின் இடம் முட்டாது  20
நீர் நாண நெய் வழங்கியும்,
எண் நாணப் பல வேட்டும்,
மண் நாணப் புகழ் பரப்பியும்,
அருங்கடிப் பெருங்காலை,
விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை,  25
என்றும் காண்க தில் அம்ம யாமே! குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல் ஏறு சிலைப்பின்,
பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்,
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;  30
செல்வல் அத்தை யானே, செல்லாது
மழை அண்ணாப்ப நீடிய நெடுவரைக்
கழை வளர் இமயம் போல,
நிலீஇயர் அத்தை நீ நில மிசையானே.

Puranānūru 166, Poet Āvūr Mulankizhār sang to Chōnāttu Poonchātrūr Pārpān Kouniyan Vinnanthāyan, Thinai: Vākai, Thurai: Pārpana Vākai
You who is an heir of learned men who performed
the twenty-one rituals without fault, who understood
those who disrespected and spoke truth-like lies,
defeating those who would contend with the ancient
work of four divisions and six sections, focused on
righteousness, never swerving from the well chosen
words of the ancient Being with long matted hair!

You glow in the deer skin that you are wearing over
the thread on your shoulder.  Your beloved wives
worthy of your high station, precious and virtuous
with no harshness, wearing sacred jewels, their
foreheads small, their loins wide, of few words and
thick hair, perform the requested duties.

Whether it is in the forest or land with citizens,
without omitting the fourteen ritual sites, you pour out
more ghee than water, sacrifice more times than there
are numbers, spread your fame wider than the earth,
and at the moment when a precious ritual is completed,
may we always see you, who offers your hospitality!

Once I have eaten the food, I will ride and go to our town
with cool streams and fields, protected by the Kāviri River
spread with flowers when thunder from clouds roar in the tall
gold-bearing mountain in the west.  May you last on earth like
the tall Himalayas which clouds look up, where bamboos grow!

Notes:  This poet wrote Puranānūru38, 40, 166, 177, 178, 196, 261 and 301.  This is the only song written for this man.  பதிற்றுப்பத்து 74 –  புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் பருதி போகிய புடை கிளை கட்டி எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன் சூடு நிலை உற்றுச் சுடர்விடு தோற்றம் விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப நலம் பெறு திருமணி கூட்டு நல் தோள்.  புறநானூறு 374 – நீர் நாண நெய் வழங்கி.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம் இடையியல் 28).

 

Meanings:  நன்று ஆய்ந்த – analyzed carefully, நீள் நிமிர் சடை – very long hair, முது முதல்வன் – ancient god, வாய் போகாது – never swerving from truth, ஒன்று புரிந்த – desired just one thing (righteousness), ஈர் இரண்டின் – two times two, four divisions, ஆறு உணர்ந்த – understood by six sections, ஒரு முதுநூல் – an ancient book, the Vedas, இகல் கண்டோர் – those who disrespected, மிகல் – greatly, சாய்மார் – to ruin, மெய் அன்ன பொய் உணர்ந்து – understanding their truth-like lies, பொய் ஓராது மெய் கொளீஇ – not taking their lies as truths (கொளீஇ – அளபெடை), மூ ஏழ் துறையும் முட்டின்று போகிய – performed the twenty one rituals with perfection, உரை சால் சிறப்பின் – with great fame,  உரவோர் மருக – O heir of learned men, வினைக்கு வேண்டி – desiring for your rituals, நீ பூண்ட – what you are wearing, புலப் புல்வாய்க் கலைப் பச்சை – the leather of a male deer/antelope of the forest, சுவல் பூண் ஞாண் – worn over the thread on your shoulders, மிசைப் பொலிய – glowing above, மறம் கடிந்த – removed harshness, meaning ‘without harshness’, அரும் கற்பின் – precious and virtuous, அறம் புகழ்ந்த வலை சூடி – wearing sacred jewels, சிறு நுதல் – tiny forehead, பேர் அகல் அல்குல் – big wide loins, சில சொல்லின் – of few words, பல கூந்தல் – thick hair, நின் நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர் – your wives fitting your status, தமக்கு அமைந்த தொழில் கேட்ப – they perform the requested duties, காடு என்றா நாடு என்று – whether it is the jungle or the land, ஆங்கு – there, ஈரேழின் இடம் – the 14 sites, முட்டாது – not reducing, நீர் நாண நெய் வழங்கியும் – and pouring ghee more than water (water is embarrassed), எண் நாணப் பல வேட்டும் – and doing many rituals that embarrass numbers, மண் நாணப் புகழ் பரப்பியும் – and spreading fame that the earth embarrassing the earth, அருங்கடிப் பெருங்காலை – at a time when a hard-to-obtain (precious) ritual is performed, விருந்து உற்ற – being hospitable to guests, நின் திருந்து ஏந்து நிலை – your perfect situation, என்றும் – always, காண்க – we will see, தில் – விழைவின்கண் வந்த இடைச்சொல், a particle which implies desire, அம்ம – கேட்பித்தல் பொருட்டு, அசைநிலை, an expletive, யாமே – me, குடாஅது – in the west, மேற்கில் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), பொன்படு நெடுவரை – tall mountains with gold, புயல் ஏறு சிலைப்பின் – if there are sounds of thunder from clouds (புயல் – ஆகுபெயர் முகிலுக்கு), பூ விரி – spread with flowers, புது நீர்க் காவிரி புரக்கும் – Kāviri with fresh water protects, தண் புனல் படப்பை – cool streams and fields, எம் ஊர் – my town, ஆங்கண் – there, உண்டும் – eating, தின்றும் – devouring, ஊர்ந்தும் – riding, ஆடுகம் செல்வல் – I will celebrate and leave, அத்தை – அசைநிலை, an expletive, யானே – me (ஏகாரம் அசைநிலை, an expletive), செல்லாது – not going, மழை அண்ணாப்ப – clouds look up, நீடிய நெடுவரை – very tall mountains, கழை வளர் இமயம் – Imayam where bamboo grows, போல – like, நிலீஇயர் அத்தை நீ – may you last (நிலீஇயர் – அளபெடை, இயர் வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, அத்தை – அசைநிலை, an expletive) நில மிசையானே – on this earth (மிசையானே – ஏகாரம் அசைநிலை, an expletive)



-- Edited by admin on Wednesday 6th of November 2024 02:58:35 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

நேர் இன மணியை நிரல்பட வைத்த ஆங்கு
ஓர்_இன பொருளை ஒரு வழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர்

ஓத்து இன்னது என்பது

 

16நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப
தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர் .
 
நேர் இன மணியை நிரல் பட வைத்து ஆங்கு - ஒரு சாதியாய் உள்ள மணிகளை வரிசையாகப் பதித்தாற் போல , ஓரினப் பொருளை ஒரு வழி வைப்பது - ஒரு சாதியாய் உள்ள பொருள்களை ஒரு வழிப்படச் சொல்வது , ஓத்து என மொழிப - ஓத்து உறுப்பாம் என்று சொல்லுவர் , உயர் மொழிப் புலவர் - உயிர்க்கு உறுதி பயக்கும் மெய்ம் மொழிகளை யுடைய புலவர் .

https://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=6&auth_pub_id=15&pno=16



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஓத்து

ஓத்து என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக்குகளாகத் தொல்காப்பியம் சூத்திரம், ஓத்து, படலம்பிண்டம் என்னும் நான்கினைக் குறிப்பிடும்போது இதனைத் தெளிவுபடுத்துகிறது.[1]

நன்னூல் நூலின் படியடுக்குகளைக் குறிப்பிடும்போது வெறுமனே 'ஓத்து' எனக் குறிப்பிடுகிறது.[2] தொல்காப்பிய இலக்கண நூலில் இந்த 'ஓத்து' என்னும் சொல்லை 'இயல்' என்னும் சொல்லால் வழங்கிவருகின்றனர். நன்னூல் குறிப்பிடும் 'படலம்' என்னும் சொல்லும் 'அதிகாரம்' என்று வழங்கப்படுகிறது.

ஓத்து என்னும் சொல்லுக்கு இயல் [3] என்று பொருள் கூறியுள்ளனர்.

ஓதப்படும் வேதப் பாடல்
[தொகு]
  • திருக்குறள் ஓத்து என்னும் சொல்லை பார்ப்பான் ஓதும் மந்திரத்தைக் குறிப்பதாக உள்ளது.[4]
  • தொல்காப்பியம் இதனை முன்மொழிந்துள்ளது.[5]
  • பாடப்படுவது 'பாட்டு', கூட்டப்படுவது கூட்டு [6] என்பது போல, ஓதப்படுவதை 'ஓத்து' என்பது தமிழ்நெறி.
பிற நூல்கள் தரும் விளக்கம்
[தொகு]
  • ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை [7]
  • ஓத்தின் சாலை [8]
  • ஓத்துஉடை அந்தணர்க்கு [9]
  • இன்னா, ஓத்து இலாப் பார்ப்பான் உரை.[10]
  • அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே [11]
  • கொல்லானேல்.-பல்லவர் ஓத்தினால் என்ன குறை? [12]
  • மாய உயிர்க்கு ஊனம் என்று ஊனம் தீர்ந்தவர் ஓத்து கூறும் 5 நெறிகள் - ஆர்வம், செற்றம், கதம், உலோபம், மானம் [13]
  • ஓத்தும் ஒழுக்கமும் உடையார் சென்றால் இழிவு உண்டாக்கும் இடங்கள் 5 - கூத்து, விழா, திருமண நிகழ்ச்சி, கொலைக்களம், போர்முனை [14]
  • ஓத்து வினையால் செயலாற்ற முடியும் [15]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1.  'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
    இன மொழி கிளந்த ஓத்தினானும்,
    பொது மொழி கிளந்த படலத்தானும்,
    மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
    ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)
  2. நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
    பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
    நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
    ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
    எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
    என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
    விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே (நன்னூல் 4)

  3.  நன்னூல் காண்டிகை உரை
  4.  மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான்
    பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (திருக்குறள்)
  5.  உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான (தொல்காப்பியம் 3-33)
  6.  கூட்டுப்பொறியல்
  7.  சிலப்பதிகாரம் 15-70
  8.  தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும், ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று, (சிலப்பதிகாரம் 22-28)
  9.  மணிமேகலை 13-25
  10.  இன்னா நாற்பது 21
  11.  இனியவை நாற்பது 7
  12.  சிறுபஞ்சமூலம் 82
  13.  சிறுபஞ்சமூலம் 61
  14.  சிறுபஞ்சமூலம் 62
  15.  ஓத்தான் வினை ஆம்; (சிறுபஞ்சமூலம் 72)


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஓத்து என்பதன் விளக்கம் என்பது, ஒரு நூலில் கூறப்படும் கருத்துகளை எவ்வாறு வரிசைப்படுத்தித் தொகுப்பது என்பதை விளக்க நன்னூல் கூறும் விதியாகும்.

ஒன்றோடொன்று பொருந்தக்கூடிய ஓரினமான மணிகளை வரிசையாகப் பதித்து அடுக்கி அணிகலன் தொடுப்பது போல ஓரினமான பொருள்களை ஓரிடத்தில் அமைத்து ஒருசேரத் தொகுத்து நூலை ஆக்கவேண்டும் என உயர்ந்த மொழி பேசும் அறிஞர்கள் கூறுவர்.[1]

அடிக்குறிப்புகள்

[தொகு]

  1.  நேரின மணியை நிரல்பட வைத்தாங்
    ஓரினப் பொருளை யொருவழி வைப்பது
    ஓத்தென மொழிப வுயர்மொழிப் புலவர்.-நன்னூல் (16)


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

காலை அன்ன சீர் சால் வாய்மொழி
  உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/4,5
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று - அகம் 78/16

 

வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதே - பரி 1/68
மாயா வாய்மொழி உரைதர வலந்து - பரி 3/11
வாய்மொழி ஓடை மலர்ந்த - பரி 3/12
வாய்மொழி மகனொடு மலர்ந்த - பரி 3/93
வாய்மொழி புலவீர் கேள்-மின் சிறந்தது - பரி 9/13
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் - பரி 13/45
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
  இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை - பரி  15/63,64
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே - கலி 26/25

கவை_முள்_கருவியின் வடமொழி பயிற்றி - முல் 35

 
கவலை முற்றம் காவல் நின்ற		30
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து
அயில் நுனை மருப்பின் தம் கை இடைக் கொண்டு எனக்
கவை_முள்_கருவியின் வடமொழி பயிற்றிக்		35
கல்லா இளைஞர் கவளம் கைப்பக்
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றிக்

நாற்சந்தியான முற்றத்தில் காவலாக நின்ற 30 மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை உயர்ந்து நிற்றலையுடைய கரும்புகளுடன் (நெற்)கதிரைச் செறிந்து கட்டிப்போட்ட வயலில் விளைந்த இனிய (அதிமதுரத்)தழையைத் உண்ணாது, (அவற்றால் தம்)நெற்றியைத் துடைத்து, கூர்மையான முனையுடைய கொம்புகளில் (வைத்த)தம் துதிக்கையில் கொண்டு நின்றனவாக, கவைத்த முள்ளையுடைய பரிக்கோலால் குத்தி, (யானைப் பேச்சான)வடசொற்களைப் பலகாலும் சொல்லி, 35 (வேறொரு தொழிலைக்)கல்லாத இளைஞர் கவளத்தை ஊட்டிவிட - (ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன் (தன்)முக்கோலில் (அந்த உடையினை)இட்டுவைத்த தன்மையை ஒக்க, (அறத்தால் பொருகின்ற)நல்ல போரில் நழுவி விழாத வலிய (ஊன்றப்பட்ட)வில்லில் அம்புக்கூடுகளைத் தூக்கி

 

வயக்குறு மண்டிலம் வடமொழி பெயர் பெற்ற - கலி 25/1

 
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்த ஆங்குக்
ஒளிமிக்க ஞாயிற்று மண்டிலத்துக்குரிய வடமொழிப் பெயரான பகன் என்ற கண்ணற்றவனின்
முகத்தைக்கொண்டவனான திருதராட்டிரனின் மக்களுள் மூத்தவனின் சூழ்ச்சியால்
ஐவர் என்று உலகம் போற்றும் அரசர்கள் உள்ளேயிருக்க,
வேலைப்பாடு மிக்க அரக்கு மாளிகையைக் கட்டுக்கடங்காத நெருப்பு சூழ்ந்துகொண்டதைப் போல்,
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

the path is surrounded with flame and smoke,
male elephants that protect their herds with
trunks as large as the cross bars of fort walls,
are caught in the rapid, roaring flames from dry
bamboo that surrounds them like the wax house
of the five great kings praised by the world on fire,
set by the eldest son of the man whose
name is the bright sun in northern language,
the fierce male elephants with musth escape
together with their herds, stepping through fire
and smoke creating a path, like the wind god
who blew and protected the wax house from fire
saving those inside with their close relatives,
 

Notes:  வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் (1-2) – நச்சினார்க்கினியர் உரை – வடமொழிப் பெயர்பெற்ற வயக்குறுமண்டிலம் போலும் முகத்தவனென்றது, ஆதித்தரிற் பகனென்றும் வடமொழிப் பெயரைப் பெற்ற விளங்குதலுறும் ஆதித்தனைப் போலும் முகத்தை உடையவன் என்பது. அவன் தான் குருடானமையின் பிறரைக் காணாதவாறு போல இவனும் பிறரைக் காணாத முகத்தையுடையவன் என்றவாறு என்றது திருதராட்டிரனை. இனி விளக்கமுற்ற கண்ணாடியின் பெயரை வட சொல்லாகிய பெயரால் பெற்ற முகத்தவன் என்றலுமாம்; அது தர்ப்பணானன என்னும் பெயரை. அது பிறரைத் தான் காணாதவாறு போல இவனும் பிறரைக் காணான் என்பதாம்.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  வயக்குறு மண்டிலம் – bright orb (sun), வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் – the sons of the one who is famed in northern language – Thirutharāttiran who is with a face which is blind like the sun that has no eyes, முதியவன் – eldest son – Thuriyōthanan, புணர்ப்பினால் – due to being together, ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – the five kings who are praised by the world are inside, five Pāndavars (அகத்தரா – அகத்தவாக, ஈறு கெட்டது), கை புனை அரக்கு – hand made wax, இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு – like how rapid fire surrounded the house, களி திகழ் – happy, கடாஅத்த கடும் களிறு அகத்தவா – caught fierce male elephants with musth (அளபெடை, அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல் – roaring flames in the tall mountains with dry bamboo, ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல – like how the wind god saved the bright wax palace and those who were in it with their close relatives and went, எழு உறழ் – like  the cross bars of fort doors (உறழ் – உவம உருபு, a comparison word), தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம் – beautiful male elephants that protect their herds with large trunks, அழுவம் சூழ் – surrounding the forest, புகை அழல் – smoke and flame, அதர்பட மிதித்து – stepping and creating the path, தம் குழுவொடு புணர்ந்து போம் குன்று – mountain where they join together with their herd, அழல் வெஞ்சுரம் இறத்திரால் – if you want to go through the harsh wasteland with flames (இறத்திரால் – இறத்திர் ஆயில், ஆயில் ஆலென விகாரமாயிற்று), ஐய – sir,  மற்று இவள் நிலைமை கேட்டீமின் – also listen to her situation (கேட்டீமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person),



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard