கானானியப் பெண்ணின் நம்பிக்கை (மாற் 7:24 - 30) மத்தேயு15:1 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர்.24 இயேசு மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ' என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார்.26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார்.28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. |
கானானியப் பெண்ணின் நம்பிக்கை(மத் 15:21 - 28) மாற்கு 7:24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ' முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.28 அதற்கு அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ' என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ' நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ' என்றார்.30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார். |
யூத மதம் என்பது இஸ்ரேலுடைய எபிரேய் மொழி பேசுவோர் மதம், இது பக்கத்து நாடுகள் பலவற்றின் கருத்துக்களை சேர்த்து வந்த கலவை மதம். இது கடவுள் - இறை நம்பிக்கை என்பதைவிட அரேபியரான ஆபிரகாம், இன்றைய ஈராக்(பாபிலோன்)கில் வாழ்ந்த போது கர்த்தர் அவரை அழைத்து, இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்துவந்து இஸ்ரேல் நாட்டிற்கான ஆட்சி அரசியல் உரிமை ஆபிரகாமின் சந்ததிகளுக்கு எனும் கோட்பாடு தான் பைபிள் அடிப்படை புராணக் கதை பைபிள், பக்கத்து நாட்டு மக்களை மிகவும் கேவலமாக கர்த்தர் கூறுவதாகப் புனைந்ததைப் படித்தவர்கள். யூதர்கள் தங்களை இனரீதியில் உயர்ந்தவர் எனும் மூட நம்பிக்கையில் உழல்பவர்கள். இயேசுவும் ஒரு பழமைவாத யூத இனவெறியராய் கிரேக்கப் பெண்ணை நாய் என்றார். தன்மானமுள்ள மனிதர் யாரும் இதை ஏற்க முடியாது. |