Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Preface - முகவுரை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Preface - முகவுரை
Permalink  
 


முகவுரை

 

 

 

 

உலகில் நூற்றுக்கணக்கான மதங்கள் இருப்பினும், அவற்றுள் அநேக உள்பி¡¢வுகள் இருந்தாலும் இறைபொருளை அறியவேண்டும் என்று அன்பும், பக்தியுமாய் உள்ளத்தைச் செலுத்தி  முனைபவர்க்கு இறைவன் ஒருவனே என்பதும் அவன் எந்த மதத்தையும், எந்த உள்பி¡¢வையும் சார்ந்தவன் இல்லை என்பதும், எம்மதத்தவராயினும் எல்லா மக்களும் அவனுடைய மக்களே என்பதும், இறுதியில் இறைவன் என்பதிலுள்ள பால்விகுதியும் போய் இறை என்பது மட்டுமே உண்மை என்பதும்  தொ¢யவரும்.  மறைநூற்களும், மதங்களும் இறை என்கிற கரையைச் சென்றடைய உதவும் படகுகள் மட்டுமே, கரையைச் சென்றடைந்துவிட்டால் இந்த படகுகளால் எந்தப் பயனும் இல்லை. கற்றுணர்ந்த சான்றோர் இதை ஏற்றுக்கொள்வர். இப்படியிருக்குங்கால் ஒவ்வொரு மதத்தாரும் தங்கள் மதமே பிறமதங்களை விட பொ¢யது என்றும், தங்கள் வேதமே இறைவன் தந்த வேதம் என்றும், தாங்கள் வணங்கும் தெய்வமே உண்மையான தெய்வம் அல்லது உயர்ந்த தெய்வம் என்று நினைத்துக்கொண்டு பிறமதங்களைப் பழித்தும், அவர்கள் வணங்கும் தெய்வங்களைப் ஏளனம் செய்தும் வருகின்றனர். இதில் கிறிஸ்தவமதத்தினர் முதன்மையானவராய் திகழ்கின்றனர். இயேசுவையே வணங்கினாலும் தங்களுக்குள் வழிபாட்டுமுறைகளாலும், கொள்கை மாறுபாடுகளாலும் நூற்றுக்கணக்கான பி¡¢வுகளாகப் பி¡¢ந்து இயங்கும் கிறிஸ்தவமதத்தினர்  பிறமதத்தினரை, முக்கியமாக இந்துமத்தினரைப் பழிப்பதோடு மட்டுமல்லாது, அவர்கள்மேல் பா¢தாபப்பட்டு அவர்களைத் தங்களோடு சேர்த்து உய்விக்கவேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தால்(!) அவர்களையும் தங்கள் மதத்துக்கு மாற்ற எண்ணிப் பிரச்சாரம் செய்கின்றனர். ஒரு அரசியல் கட்சியைப்போல் தங்கள் மதத்தைப் பலவிதமான குயுக்திகளைப் பயன்படுத்தி வளர்க்க முயல்கின்றனர். அது அவர்கள் விருப்பம், நாம் ஓன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் பிறமதங்களைப் பழித்து அவர்கள் வழிபாட்டு முறைகளை இகழ்வதற்குமுன் தங்கள் மதத்திலுள்ள குற்றங்குறைகளையும், மூடநம்பிக்கைகளையும் ஆய்ந்துணரும் பக்குவம் அவர்களுக்கு வரவேண்டும். "மாயக்காரனே! முதலில்  உன் கண்ணிலிருக்கும் உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போட வகை கூறு" என்று இயேசு கிறிஸ்துவே கூறியிருக்கிறார் (மத்தேயு 7: 5) என பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கிறிஸ்தவமதத்தை குறைத்துப் பேசவேண்டுமென்பது என் நோக்கமல்ல. எந்த மதத்தையும் தாழ்த்திப்பேச யாருக்கும் உ¡¢மையில்லை. இந்துமதமே உலகில் மிக உயர்ந்தமதம், அது ஒன்றே முக்திக்கு வழி என்று நிலைநாட்டுவதும் இந்நூலின் நோக்கம் அல்ல. பின் எதற்காக இந்த நூல்?    

 

நமக்கு முன்பாக நடந்து செல்லும் ஒருவா¢ன் முதுகில் பட்டிருக்கும் கறையை அவருக்குத் தொ¢யப்படுத்துவது நாகா¢கம் அறிந்த ஒருவா¢ன் கடமையல்லவா? அதைத்தான் நான் செய்ய முயல்கின்றேன். தேவனின் வார்த்தைகளால் உருவாக்கப்பட்டது என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் பைபிளில் இருக்கும் முரண்பாடுகளையும், அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத  நம்பிக்கைகளையும், வன்முறைகளையும், பாலியல் வக்கிரங்களையும் அநேக கிறிஸ்தவ சகோதரர்கள் அறிந்திருக்கவில்லை. ஏனெனில் தேவாலயத்திலும், மறைப்பயிற்சி அரங்கங்களிலும் மற்றும் விழாமேடைகளிலும் பிரசங்கம் செய்யும் பாதி¡¢களும், ஆயர்களும் அவற்றையெல்லாம் மூடிமறைத்துவிட்டு கேட்போர் மனதைக் கவரும் வண்ணமாக பைபிளில் உள்ள ஒருசில கருத்துக்களை மட்டும் தேர்வுசெய்து மக்களோடு பகிர்ந்துவிட்டுப் போய்விடுவார்கள். அதனால் அனுதினமும் வேதாகமத்தை வாசித்து நல்லதொரு கிறிஸ்தவனாக வாழவேண்டும் என்று நினைப்போர்கூட வேதாகமத்திலுள்ள இத்தகைய

முரண்பாட்டுப் பகுதிகளில் கவனம் செலுத்துவதில்லை. கிறிஸ்தவர்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக்கூறும் சுவிசேஷங்கள் எழுதப்பட்டு, அவை பைபிளில் இணைக்கப்பட்டு, மக்கள் மத்தியில் இயேசுவைப்பற்றிப் பிரச்சாரம் செய்யத்தொடங்கிய காலம் முதற்கொண்டுதான் தங்கள் மதத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். அதற்கு முன் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளையும், அல்லது புதிய ஏற்பாடு உருவான விதத்தையும், மத்தியகாலத்தில் (medieval period) மேற்கத்திய நாடுகளிலும், கிழக்காசிய நாடுகளிலும் மதத்தின் பெயரால் கிறிஸ்தவர்கள் யூதர்கள் மீதும், இஸ்லாமியர் மீதும், பிற இனத்தார்மீதும், தங்களைப்போன்ற கிறிஸ்தவர்கள் மீது அவர்கள் வேறு பி¡¢வைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவும் நடத்திய வன்முறைகளையும், கொன்றுகுவித்த மக்களையும் பற்றித் தொ¢ந்துகொள்ளவோ, ஏன் கேள்வி கேட்கவோகூட  விரும்புவதில்லை.

 

முரண்பாடுகளும், மூடநம்பிக்கைகளும், கற்பனைக்கதைகளும் பிறமதங்களில் இல்லையா என்று கேட்கலாம். நிச்சயமாக எல்லா மதங்களிலும் இருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவமதத்தில் இருப்பதை விட மிகக் குறைவே.

 

இந்துமதத்தில் மறைநூற்களைப் வேதங்கள்புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் என பாகுபாடு செய்து வைத்திருக்கிறார்கள். வேதங்களின் இறுதிப்பகுதியான வேதாந்தம் அல்லது உபநிடதங்கள் (Upanishads) பரம்பொருளின் தன்மையை விளக்குமுகமான உயர்ந்த கருத்துக்களைச் சொல்கின்றன. பரம்பொருளின் நிலையை உணர்த்துகின்ற கருத்துக்களும், தத்துவ விசாரணைகளும் உபநிடதங்களில் இருப்பதுபோல் வேறு எந்த மதத்தின் மறைநூற்களிலும் இல்லை என்பதை பல்வேறு மதங்களின் மறைநூற்களை ஆய்வுசெய்த பொ¢யோர் அவர் எம்மதத்தினராக இருந்தபோதிலும்  ஏற்றுக்கொள்வார்கள். (இந்நூலின் இறுதியில் கொடுத்துள்ள இந்துமத வேதாந்தம் பற்றிய மேல் நாட்டு அறிஞர்களின் கருத்துக்களைக் காணவும்) இந்துமத மறைநூற்களில் பெரும்பகுதியைக் கற்றுணர்ந்த ஒரு இந்து தன் மறைநூற்களில் எவை அறிவியலுக்கு ஒத்தவை, எவை ஒவ்வாதவை, எவை சத்தியமான கருத்துக்கள் என்பதை அறிவான். அவரவர் வாழ்க்கைநிலைக்கும், படிப்பறிவிற்கும், பக்திநிலைக்கும், மனப்பாங்கிற்கும் ஏற்ப பல படிகள் இந்துமதத்தில் உள்ளன. பக்திமார்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு இந்துவும் ஒவ்வொரு படியில் நிற்கிறான் என்பதே உண்மை. ஆகையால் எல்லா இந்துக்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கமுடியாது. ஆனால் கிறிஸ்தவமதத்தில் அப்படியல்ல. கற்பனக்கும் வரலாற்றுக்கும் வேற்றுமையில்லாது எல்லாவற்றையும் பைபிள் என்ற ஒரே புத்தகத்தில் தொகுத்துவைத்து அவையனைத்துமே தேவனுடைய வார்த்தைகள், எனவே பைபிளில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகத்தான் இருக்கவேண்டும், பைபிளில் விவா¢க்கப்பட்டுள்ள எல்லா நிகழ்வுகளுமே உண்மையாக நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளே என்று நம்புகின்றனர். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியால் அருளப்பட்டிருக்கிறது" (2 தீமோத்தேயு 3: 16) என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல யாராவது பைபிளில் உள்ள கருத்துக்களை விமர்சனம் செய்தாலோ, அவற்றைப் பற்றிக் கேள்விகேட்டாலோ உடனே அவரைச் சாத்தானின் பிள்ளை என்று முத்திரை குத்திவிடுவார்கள். எனினும் பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரைக்கும் ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும், பிற ஐரோப்பியநாடுகளிலும், அமொ¢க்காவிலும் அநேக  கிறிஸ்தவ அறிஞர்கள் தோன்றி கிறிஸ்தவமதத்தையும், பைபிளையும் பகுத்தறிவுடன் ஆராய்ந்து நூற்றுக்கணக்கான நூற்களை எழுதியிருக்கிறார்கள். அவருள் பலர் கிறிஸ்தவ மறையியலில் பல பட்டங்களைப் பெற்றவர்கள், ஆயர் (pastor or father), பேராயர் (bishop), கிறிஸ்தவ மறைஇயல் பேராசி¡¢யர் போன்ற பல பதவிகளை வகித்தவர்கள.

 

 

இப்படி ஒரு நூலை எழுதவேண்டுமென்ற எண்ணத்தை எனக்குள் தூண்டிய காரணங்கள் இரண்டு. முதலாவது: மனிதகுலத்துக்கு இயேசு கிறிஸ்து ஒருவரே இரட்சகர். இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவன் இரட்சிப்பை அடையமுடியும். அவரைக் கடவுளாக  ஏற்றுக்கொண்டவனுக்கு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும், ஏற்றுக்கொள்ளாத மற்றவர்கள் எவ்வளவு ஒழுக்கசீலர்களாக, நல்லவர்களாக இருப்பினும் அவர்களுக்கு உய்வே கிடையாது என்ற மூடநம்பிக்கை. இரண்டாவது: எல்லா தெய்வங்களும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள்தாம் என்பதை உணராமல், கிறிஸ்தவர்கள் பிறமதங்களின் தெய்வங்களையும், வழிபாட்டுமுறைகளயும் பழித்தும் இழித்தும் பேசி இந்துமதத்தைச் சார்ந்த பாமரமக்களை மூளைச்சலவை செய்து தங்கள் மதத்துக்கு ஈர்ப்பது.

 

வானத்தையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த கடவுள் அந்த பூமியின் ஒரு மிகச்சிறிய பகுதியான இஸ்ரேல் நாட்டை மட்டும் தேர்ந்தெடுத்து அங்குள்ள யூதமக்களை மட்டும் தன்னுடைய மக்களாகவும், பிற நாட்டினரையும், இனத்தாரையும் இரண்டாந்தர மக்களாகவும், விரோதிகளாகவும் கருதுகிறார் என்ற பைபிள் நம்பிக்கை எத்தகைய மூடநம்பிக்கை என்பது சாதாரண அறிவுடையவர்க்கே பு¡¢யும்.  அதே நம்பிக்கையை வலியுறுத்தி யூதர்களைத் திருத்தி, அவர்களை ஒரு உயர்ந்த சமூகமாக மாற்றவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து, தோல்வியுற்று, யூதர்களாலேயே கொலை செய்யப்பட்ட இயேசு உலகமக்கள் யாவரையும், அல்ல, ஒரு திருத்தம், அவரைக் கடவுளாக ஏற்றுக்கொண்டவர்களை மட்டும் இரட்சித்து மோட்சத்துக்கு அழைத்துச்செல்ல விரைவில் வருவார் என்று கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பதைக் காணும்போது என்ன சொல்வது? "இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள், இவர்களை மன்னியுங்கள் இறைவனே!" என்ற இயேசு கிறிஸ்துவின் வாசகங்களோடு இந்நூலைத் தொடங்குகிறேன். யாருடைய மனதையாவது புண்படுத்தும்படியான வார்த்தைகளை இந்நூலில் நான் பயன்படுத்தியிருந்தால், அவை என் கவனக்குறைவால் வந்திருக்குமேயன்றி என் உள்ளத்திலேயிருந்துப் புறப்பட்டவை அல்ல என்பதை அன்புடன் தொ¢வித்துக்கொள்கிறேன்.

 

இந்நூலில் முன்வைக்கப்படும் தொண்ணூற்றொன்பது விழுக்காடு வாதங்கள் பைபிளிலுள்ள வசனங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவைதாம். எனவே இந்நூலை வாசிக்கின்ற அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  பக்கத்தில் பைபிளை வைத்துக்கொண்டு இந்நூலை வாசித்தால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார வசனங்களை உடனுக்குடன் தொ¢ந்துகொள்ள உதவியாக இருக்கும் என்று தொ¢வித்துக் கொள்கிறேன்.

 

இந்நூலின் தட்டச்சுப்பிரதிகளை ஆழ்ந்து படித்து சில திருத்தங்களைச் செய்யத்தூண்டியும், இந்நூலுக்கு ஓர் அணிகலன் போல் அணிந்துரை வழங்கியும் உதவிய  திரு. சா. காசிவேலு, சமய ஒப்பீட்டு எழுத்தாளர் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியைத் தொ¢வித்துக் கொள்கிறேன். இந்நூலை ஒரு அழகான புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட  ----------------                      பிரசுரத்தாருக்கு என் நன்றி உ¡¢த்தாகுக.

 

 

 

 

 

                                                                                    ஜெயக்கொடியோன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard