Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 03 God and Satan. கடவுளும் சாத்தானும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
03 God and Satan. கடவுளும் சாத்தானும்
Permalink  
 


 கடவுளும் சாத்தானும்ஒரு அறிவியல் உண்மை அல்லது கொள்கை, அது கண்டுபிடிக்கப் பட்ட உடனேயே உலகில் உள்ள எல்லாருக்கும் பொதுவான சொத்தாகிவிடுகிறது. ஆனால் மதம் சார்ந்த ஒரு உண்மை அல்லது கருத்து அப்படி ஆவதில்லை என்று ஓஷோ கூறுகிறார். ஐசக் நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். ஒவ்வொருவரும் அதை மறுபடியும் முயன்று கண்டுபிடிக்க வேண்டியதில்லை. ஆனல் இயேசு கிறிஸ்துவோ, புத்தரோ, கிருஷ்ணரோ அல்லது மகாவீரரோ சொல்லிய உண்மையையோ கொள்கையையோ அறிவுடையவர் உடனே ஏற்றுக்கொள்வதில்லை, அதைத் தாங்களே சுயவிசாரணை செய்து அவர்கள் மனம் ஒத்துகொண்ட பின்னர்தான் ஏற்றுக்கொள்வர். இதுதான் உலகவழக்கு. மதம் சார்ந்த உண்மைகளை அறிவியல் உண்மைகளைப் போல் பாடபுத்தகத்தின் வழியாக ஒருவர் மனதில் ஏற்ற முடியாது. அப்படி ஏற்றமுடியுமெனில் அவை சுயசிந்தனைக்கு இடமளிக்காமல் மூடநம்பிக்கைகளாகவே விளங்கும். பெரும்பாலும் மதநம்பிக்கைகள் இவ்வாறு புத்தகங்கள் வாயிலாகவும், உபதேசங்களாகவும்தான் பாமரமக்கள் மனதில் ஏற்றப்படுகின்றன.

 

கடவுளுக்கு எதிராக சாத்தான் என்ற உருவகம் யூத மதத்தில் கிறிஸ்துவுக்கு முன் 1000 முதல் 500 வருடங்களுக்குள் உருவானது. சாத்தானோடு பிசாசுகளும் உருவாக்கப் பட்டன. மனிதர்களுக்கு உண்டாகும் அநேக  நோய்கள் பிசாசு பிடித்ததனால் உண்டாகின்றன என்ற நம்பிக்கை பரவலாக வளர்ந்தது. கிறிஸ்தவமதம் தோன்றிய பின்னர் இந்த நம்பிக்கைகள் வலுப்பெற்றன. காரணம் இயேசு கிறிஸ்துவில் ஆரம்பித்து இன்றைய கிறிஸ்துவ மதபோதகர்கள் வரை பிசாசுகளை விரட்டுதல் என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் மோசஸ் எழுதியதாகக் கருத்ப்படும் பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களில் சாத்தான் மற்றும் பிற பிசாசுகளையோ, பிசாசு பிடித்த மனிதர்களையோ பற்றி குறிப்பிடப்படவேயில்லை.

 

ஆதியாகமத்தில் கடவுளால் தடை செய்யபட்ட அறிவு தரும் பழத்தை ஏவாளைக்கொண்டு சாப்பிடச்செய்த பாம்பைப்  பிற்காலத்தில் சாத்தான் என்று கூற ஆரம்பித்தனர். சர்ப்பம் ஏவாளைக் கடவுளால் தடை செய்ய்யப்பட்ட ஞானவிருட்சத்தின் பழத்தைச் சாப்பிடத்தூண்டியது. கடவுள் சர்ப்பத்திற்கு பேசும் சக்தியைக் கொடுத்திருந்தார். "அவர் உண்டாக்கின சகல பிராணிகளிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது" (ஆதியாகமம் 3:1) என்று பைபிள் சொல்லுகிறது. சாத்தான் பாம்பு வேடத்தில் வந்து ஏவாளைத் தடையை மீறச்செய்தான் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும், சர்ப்பம் இவ்வாறு செய்ததற்குக் கடவுள் சாத்தானைச் சபிக்கவில்லை, சர்ப்பத்தைத்தான் சபிக்கிறார். "நீ இதைச் செய்தபடியால் சகல மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய்" (ஆதியாகமம் 3:14) என்று கடவுள் சர்ப்பத்தைச் சபிக்கிறார். எனவே சாத்தானுக்கும் (அப்படி ஒருவன் இருந்திருந்தால்) இந்த சம்பவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது. அப்போஸ்தலர் பவுலும் "சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது" (2 கொ¡¢ந்தியர் 11: 3) என்று சர்ப்பத்தைத்தான் குற்றம் சாட்டுகிறாரே தவிற சாத்தானை அல்ல. சாத்தான் ஏவாளை ஏமாற்றி வஞ்சித்தான் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் பைபிளில் இல்லை.

 

இல்லாத ஒன்றை இருக்கிறது என்றும் இருக்கிற ஒன்றை இல்லை என்றும் நம்புவது சாதாரண மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. பிசாசும் இருட்டும் ஒரே மாதி¡¢யானவை. இருட்டு  என்று ஒன்று தனியாகக் கிடையாது. இருட்டு என்பது வெளிச்சம் இல்லாத ஒரு நிலை. அதுபோல், இறைத்தன்மை இல்லாத ஒரு நிலைதான் சாத்தான் அல்லது பிசாசு. ஒரு அறையில் இருட்டாக இருக்கிறது. அங்கே வெளிச்சம் உண்டாக்கவேண்டும் என்றால் என்ன செய்வோம்? ஒரு விளக்கை ஏற்றுவோம் அல்லது மின்விளக்கின் பொத்தானை அழுத்துவோம். உடனே அந்த அறை வெளிச்சத்தால் நிரம்பும். அது மட்டுமல்ல, அந்த அறையிலுள்ள வெளிச்சம் ஜன்னல் கம்பிகளின் இடைவெளிகள் வழியாகவும் அறைக்கதவு திறந்திருந்தால் அதன் வழியாகவும் அறைக்கு வெளியேயும்  வரும். மறுபடியும் அந்த அறைக்குள் இருட்டு கொண்டுவர என்ன செய்வோம்? விளக்கை அணைப்போம். அவ்வளவுதான், மறுபடியும் அந்த அறைக்குள் இருள் சூழும். அறைக்குள் இருக்கும் இருட்டு, ஜன்னல் அல்லது திறந்திருக்கும் கதவு வழியே வெளியே வராது. வெளியிலிருக்கும் வெளிச்சம்தான் உள்ளே போகும். இருட்டைப் போக்கவும் திரும்ப வரவழைக்கவும் நாம் இருட்டை ஒன்றும் செய்வதில்லை. விளக்கைத்தான் ஏற்றி அணைக்கிறோம். ஏனெனில் இல்லாத இருட்டை ஒன்றும் செய்ய இயலாது. இருக்கிற வெளிச்சத்தைத்தான் கொண்டுவரவோ போக்கவோ முடியும். எப்படி இல்லாத இருட்டோடு யுத்தம் செய்ய முடியாதோ அவ்வாறே இல்லாத சாத்தானோடும் போ¡¢ட முடியாது. நல்ல செயல்களையும், நமக்குப் பிடித்த நிகழ்வுகளையும், இனிமையான விஷயங்களையும் கடவுள் செயல் என்றும், தீமையான செயல்களையும், நமக்குப் பிடிக்காத  நிகழ்வுகளையும், கசப்பான சங்கதிகளையும் சாத்தானின் செயல் என்றும் கருதுவது மனிதர் இயல்பு. எதெல்லாம் நல்ல நோக்கத்தோடு செய்யப்படுகிறதோ அதிலெல்லாம் கடவுள் தன்மை (Divinity இருக்கிறது. எதெல்லாம் தீய நோக்கத்தோடு செய்யப்படுகிறதோ அதிலெல்லாம் கடவுள் தன்மை இல்லை, அவ்வளவுதான். கடவுள் தன்மை இல்லை என்பதைச் சாத்தானின் வேலை என்று சொல்வது மூடநம்பிக்கை. அதுமட்டுமல்ல சர்வ வல்லமையுள்ள இறைவனைக் குறைத்து மதிப்பிடுவதுமாகும்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சாத்தான் என்ற சொல்  யூதர்களின் எபிரேய மொழியிலிருந்து வந்தது. இதை ஆங்கிலத்தில்         Satan என்று எழுதினார்கள். எபிரேய மொழியில் இதன் பொருள் எதி¡¢ (adversary),அல்லது எதிராளி என்பதாகும். சாத்தான் பிசாசுகளின் தலைவன்தேவதூதர்களில் மிக உயர்ந்த பதவியிலிருந்தவன்கடவுளுக்கு நிகராகத் தன்னை நினைத்துகொண்டு அகம்பாவத்தால் கட்வுளை எதிர்த்துப் போ¡¢ட்டு தோற்று பாதாளத்தில் தள்ளப்பட்டவன் என்று கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த கதைக்கு எவ்வித ஆதாரமும் யூதர்களின் வேதமானபைபிளின் முதல் பகுதியான பழைய ஏற்பாட்டில் இல்லை. எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் எதி¡¢ அல்லது எதிராளி என்ற பொருளில் பல இடங்களில் வழங்கப்பட்ட சாத்தான் என்ற வார்த்தையை  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது சில இடங்களில் சாத்தான் (satan) என்றும் மற்ற இடங்களில் எதி¡¢ (adversary) ) என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இத்ற்கு பைபிளில் பல ஆதாரங்கள் உள்ளன. 1சாமுவேல் 29: 4 ல் தாவீது மன்னன் சாத்தான் என்று (எதி¡¢அல்லது சத்துரு என்ற பொருளில்) எபிரேய பைபிளில் அழைக்கப்படுகிறான்.1 இராஜாக்கள்11:23 ல் தமஸ்குவின் மன்னன் ரேசன் என்பவன் சாத்தான் என்று அதே பொருளில் அழைக்கப்படுகிறான். 2 சாமுவேல் 19: 22 ல் செரூயாவின் குமாரர்கள் சாத்தான்கள் என்று பன்மையில் 'சத்துருக்கள்என்ற பொருளில் அழைக்கப்படுகிறார்கள். இவை அனைத்திலும் சாத்தான் என்ற எபிரேய வார்த்தை (satan ) ஆங்கில பைபிளில் எதி¡¢ (adversary) என்றே மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

 

எண்ணாகமம் 22: 22 ல் 'கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு 'எதிராளி'யாக நின்றார்" என்று தேவதூதனையே எபிரேயமொழி  பழைய ஏற்பாட்டில் 'சாத்தான்என்று சொல்லப்பட்டுள்ளது. 1 நாளாகமம் 21: 1 மற்றும்  2 சாமுவேல் 24: 1 ஆகிய இரண்டு  வசனங்களையும்அவற்றின் பின்வரும் வசனங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கடவுளையே (Jehova) சாத்தான் என்று அவருடைய வேதபுத்தகத்திலேயே சொல்லியிருப்பது தொ¢யவரும்.

 

ஏசாயா தீர்க்கத்தா¢சி சாத்தானை "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே" என்று அழைக்கிறார் (ஏசாயா 14:12). திருவெளிப்பாடு (வெளிப்படுத்தின விசேஷம்) 22: 16 ல் இயேசு,"நான் தாவீதின் வேரும் சந்ததியும்பிரகாசமுள்ள விடிவெள்ளியுமாயிருக்கிறேன்" என்கிறார். இதில் எது உண்மைசாத்தானா அல்லது கிறிஸ்துவாஇவர்களில் உண்மையான விடிவெள்ளி (Morning Star) யார்இப்படி எந்த பகுதியைப் புரட்டினாலும் தேவனுடைய வார்த்தைகள் என்று கிறிஸ்தவர்களால் போற்றப்படுகிற பைபிளில் முரண்பாடுகளே காணப்படுகின்றன.

 

யூதர்களின் வழக்கப்படி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எடுத்துரைக்கும் வழக்குறைஞர் (prosecutor) அல்லது குற்றம் சுமத்துகிறவர் (accuser) நீதிபதியின் வலதுபுறத்தில் நிற்பார். சாத்தானும் அவ்வாறே செயல்படுவதாக பைபிளில் சில இடங்களில் சொல்லப்படுகிறது. சகா¢யா 3: 1, சங்கீதம் (திருப்பாடல்) 109: 6 மற்றும் யோபு 1; 9 முதல் 11 வரை வாசித்தால் சாத்தான் எப்படி அரசு வழக்குறைஞராகச் செயல்படுகிறான் என்பது தொ¢யவரும்.

 

உண்மையில் சாத்தான் (என்று நம்பப்படுகிற கதாபத்திரம்) கடவுளுக்கு மிக வேண்டியவனாக பழைய ஏற்பாட்டின் பிற்பகுதியிலும்புதிய ஏற்பாட்டிலும் சித்தா¢க்கப்படுகிறான். கடவுளுக்கு விரோதமாக செயல்படுகிறவன் சாத்தான் என்று பாதி¡¢கள் கிறிஸ்தவ மக்களை நம்பவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனல் பைபிளில் பல இடங்களில் சாத்தான்  கடவுளுடன் இணைந்து அவருடைய நம்பிக்கைக்கு¡¢ய உதவியாளன் போல் செயல்படுகிறான். பழைய ஏற்பாட்டில் யோபு என்ற ஒரு நேர்மையான உத்தம மனிதனின் சா¢த்திரம் தனிப்பகுதியாக இருக்கிறது. அதில் கடவுளுடைய (Jehova) சந்நிதியில் தேவபுத்திரர்களுடன் சாத்தானும் சுதந்திரமாக வந்து நிற்கிறான். கடவுளும் அவனிடம் மிக இயல்பாக ஒரு நண்பனிடம் பேசுவதுபோல் உரையாடுகிறார்.  யோபுவைச் சோதிக்க கடவுள் சாத்தானை அனுப்புகிறார் (யோபு 1:1 முதல் 6 வரை).

 

"இவர் என்னுடைய நேசகுமாரன்இவா¢ல் பி¡¢யமாயிருக்கிறேன்" என்று பா¢சுத்த ஆவியானவர் இயேசுவுக்கு சான்றிதழ் வாசித்த ( மத்தேயு 3:17) மறுகணம், "இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு  ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப் பட்டார்" (மத்தேயு 4: 1) என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.  இங்கே சாத்தான்  பிசாசு (Devil) என்று அழைக்கப்படுகிறான்.தம்முடைய ஒரே பேறான குமாரனைச் சோதிப்பதற்குக்கூட கடவுளுக்கு சாத்தானின் உதவி தேவைப்படுகிறது என்றால் பைபிள் கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலுள்ள உறவும் நட்பும் எத்தகையது என்பதைப் பு¡¢ந்து கொள்ளலாம்.

 

மனிதர்கள் செய்கின்ற எல்லா தீமையான செயல்களுக்கும்அவர்களின் எல்லா ஒழுக்கக்கேடுகளுக்கும் சாத்தானின் தூண்டுதலே காரணம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அப்படி என்றால் புராணக்கதைப்படி தேவலோகத்தில் தலைமை தேவதூதனாக இருந்த 'ஒளிமயமானவன்' (Lucifer) (அதுதான் சாத்தானின் இயற்பெயர்) கடவுளுக்கு எதிராக சதி செய்து தான் கடவுளுக்கு நிகரான பதவியை அடைய நினத்தானேஅந்த கெட்ட எண்ணத்தை சாத்தானின் மனதில் விதைத்த  super சாத்தான் யார்இந்தக் கேள்விக்குப் பதில் இருக்கிறதா?

 

பதில் பைபிளிலேயே இருக்கிறது. இயேசு கிறிஸ்து சொல்கிறார், "இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும்கொலைபாதகங்களும்விபசாரங்களும்வேசித்தனங்களும்களவுகளும்பொய்சாட்சிகளும்தூஷணங்களும் புறப்பட்டுவரும்." (மத்தேயு 15: 19). இதிலிருந்துமனிதர்களுக்குக் கெட்ட எண்ணங்கள் உண்டாவத்ற்கு கற்பனைப் பாத்திரமான சாத்தானின் தூண்டுதல் அவசியம் அல்ல என்பது தெளிவாகிறது.

 

மேலும் கீழ்கண்ட பைபிள் வசனங்கள் இந்தக் கருத்தை வலுவாக்குகின்றன. புதிய ஏற்பாட்டில் ஜேம்ஸ் சொல்லுகிறார், "அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டுசிக்குண்டுசோதிக்கப்படுகிறான்" (யாக்கோபு 1: 14). பவுலும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்  (கலாத்தியர் 5: 19). பழைய ஏற்பாட்டில் ஏசாயா தீர்க்கத்தா¢சியும் இந்தக் கருத்தையே உரைக்கிறார் (ஏசாயா 57:17).

 

எபிரேய பைபிளில் மோசே எழுதியதாகக் கருதப்படும் முதல் ஐந்து புத்தகங்களில் (Pentateuch) சாத்தானைப் பற்றியோ பிசாசுகளைப் பற்றியோ குறிப்பிடப்படவில்லை. அதன் பின்னர் எழுதப்பட்ட யோபு சங்கீதம்நாளாகமம் மற்றும் தீர்க்கத்தா¢சிகள் எழுதியவை ஆகிய புத்தகங்களில் தான் சாத்தானைப் பற்றிப் பேசப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பிசாசுகளைப் பற்றிய நம்பிக்கை கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடமிருந்து யூதர்களிடையே நன்றாகப் பரவிவிட்டது  ஆகையால் புதிய ஏற்பாடு முழுவதும் இயேசுவும் அவரது சீடர்களும் பிசாசுகளை விரட்டும் சம்பவங்கள் பல விவா¢க்கப்பட்டுள்ளன.

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

God and Satan

God and Satan are a scientific fact or principle, and as soon as it is discovered it becomes the common property of everyone in the world. But Osho says that a religious fact or opinion does not become like that. Isaac Newton discovered the force of gravity. Not everyone has to try and find it again. But the wise do not immediately accept the truth or doctrine told by Jesus Christ, Buddha, Krishna or Mahavira, they will only accept it after self-examination and their consent. This is the case in the world. Religious facts cannot be loaded into one's mind through textbooks like scientific facts. If so, they would be superstitions without allowing for selfishness. Often the beliefs are thus loaded into the minds of the laity through books and sermons.

The metaphor of Satan against God originated in Judaism between 1000 and 500 years before Christ. Demons were created with Satan. There is a widespread belief that many of the diseases that afflict humans are caused by the Devil. These beliefs were strengthened after the emergence of Christianity. The reason is that the practice of casting out demons is practiced from Jesus Christ to the Christian clergy of today. But the first five books of the Bible, which are believed to have been written by Moses, do not mention Satan and the other demons or demon-possessed people.

They later began to call Satan the serpent who ate the fruit of knowledge that God forbade in Genesis with Eve. The serpent caused Eve to eat the fruit of the forbidden wisdom. God had given the serpent the power to speak. The Bible says, "The serpent was cunning in all its creatures" (Genesis 3: 1). Nowhere is it mentioned that Satan came in the guise of a serpent and broke Eve's barrier. Moreover, God did not curse Satan for what the serpent did, but cursed the serpent. God curses the serpent, saying, "Cursed be the beast of the field" (Genesis 3:14). So it is clear that Satan (if there was one) had nothing to do with this incident. The apostle Paul also blames the serpent, not Satan, for "the serpent deceived Eve by his craftiness" (2 Corinthians 11: 3). There is no evidence in the Bible that Satan deceived Eve.

It is normal for ordinary people to believe that there is something that does not exist and that there is something that does not exist. The devil and the dark are one and the same. There is no such thing as darkness alone. Darkness is a state of no light. Similarly, Satan or the Devil is a state without divinity. A room is dark. What do we do if there is to be light? Let's mount a light bulb or press the light bulb button. Immediately the room was filled with light. Not only that, the light in that room will come in through the gaps in the window bars and if the room door is open it will come in and out of the room. What do we do to bring darkness into that room again? Let's turn off the light. That's it, again darkness envelops the room. The darkness inside the room does not come out through the window or the open door. Only the light from the outside goes inside. We do nothing in the dark to dispel darkness and bring it back. We turn off the light. Because nothing can do without the darkness. Only the existing light can be brought in or out. Just as you cannot fight with darkness that does not exist, you cannot go with Satan who does not exist. It is human nature to think of good deeds, our favorite events, and pleasant things as the work of God, and evil deeds, events we do not like, and bitter associations as the work of Satan. It is superstition to say that there is no God in everything that is done with good intentions, and there is no God in everything that is done with evil intent.

The word Satan comes from the Hebrew language of the Jews. They wrote this in English as Satan. In Hebrew it means adversary, or adversary. Christians believe that Satan is the leader of the demons, the highest of the angels, who thought of himself as equal to God and was defeated by God and plunged into the abyss. There is no evidence for this story in the Old Testament, the first part of the Jewish Scriptures, the Bible. In the Old Testament, written in the Hebrew language, the word Satan is translated into English as satan in some places and adversary in other places. There are many sources for this in the Bible. In 1 Samuel 29: 4 David is called King Satan (meaning enemy) or in the Hebrew Bible.1 In Kings 11:23 the king of Damascus is called Satan in the same sense as Satan. In 2 Samuel 19:22 the sons of Zeruiah are called Satans in the plural form of 'enemies'. In all of these, the Hebrew word satan is translated as adversary in the English Bible.

The angel himself is referred to in the Hebrew Old Testament as "Satan" in Numbers 22:22, "and the angel of the Lord was his adversary in the way." ) It is true that Satan is mentioned in his Bible.

Isaiah the prophet calls Satan "the son of the morning light" (Isaiah 14:12). In Revelation 22:16 Jesus says, "I am the root and seed of David, and the bright morning." Which of the following is true? Satan or Christ, which of the following is the true Morning Star? Turning to any such passage, there are contradictions in the Bible, which is revered by Christians as the Word of God.

According to Jewish custom, the prosecutor or accuser stands to the right of the judge. The Bible says that Satan does the same thing. Zechariah 3: 1, Psalm 109: 6 and Job 1; Reading 9 to 11 shows how Satan acts as a public prosecutor.

In fact Satan (the character he is believed to be) is portrayed in the latter part of the Old Testament and in the New Testament as the most deserving of God. Half of the Christian people are convinced that Satan is the one who acts against God. But in many places in the Bible, Satan acts as a helper with God in his faith. In the Old Testament the story of a righteous man named Job is unique. In it Satan comes freely with the sons of God in the presence of God (Jehovah). God also speaks to him very naturally as if he were talking to a friend. God sends Satan to test Job (Job 1: 1 to 6).

The Bible says that the Holy Spirit read the testimony to Jesus (Matthew 3:17), "This is my beloved Son, in whom I am well pleased" (Matthew 4: 1) Here, Satan is called the Devil.

Christians believe that Satan is the cause of all the bad things that humans do and all their immorality. So, according to legend, the 'Lucifer' (Satan's real name) who was the chief angel in the heavens conspired against God and wanted to attain a position equal to God. Is there an answer to this question?

The answer is found in the Bible. Jesus Christ says, "Out of the heart proceed evil thoughts, murders, adulteries, fornications, thefts, false witnesses, blasphemies." (Matthew 15:19). From this it is clear that the imagination of Satan is not necessary for humans to have bad thoughts.

And the following Bible verses support this view. In the New Testament James says, "Everyone is tempted and enticed by his own will" (James 1:14). Paul emphasizes the same point (Galatians 5:19). The prophet Isaiah in the Old Testament echoes this idea (Isaiah 57:17).

 

The first five books (Pentateuch) believed to have been written by Moses in the Hebrew Bible do not mention Satan or the demons. Satan was later mentioned in the books of Job, Psalms, Chronicles, and the Prophets. The belief in demons spread well between Greeks and Romans and Jews during the time of Jesus Christ, so throughout the New Testament many incidents of Jesus and his disciples casting out demons are discussed.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard