Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 23 Idolatry


Guru

Status: Offline
Posts: 7329
Date:
23 Idolatry
Permalink  
 


   கிறிஸ்தவமும் விக்கிரக ஆராதனையும்

 கண்ணுக்குத் தொ¢யாத தெய்வத்துக்குக் கண்ணுக்குத் தொ¢கிறமாதி¡¢ வடிவம் கொடுத்து வழிபடுவது விக்கிரக ஆராதனை என்று சொல்லப்படுகிறது. இந்தியாவிலுள்ள மதங்களான இந்துமதம், பௌத்தமதம், சமணமதம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்கள் விக்கிரகங்களை வடிவமைத்து அவற்றைத் தெய்வத்தின் குறியீட்டு அடையாளங்களாக வைத்து அவற்றின் மூலம் தெய்வத்தை வழிபடுகின்றனர். பண்டைக்காலத்தில் மேற்கத்திய நாடுகளிலும், மத்திய ஆசியநாடுகளிலும் வழங்கிவந்த பேகன் மதங்களிலும் விக்கிரக ஆராதனை வழக்கத்திலிருந்தது. ஆபிரகாம் வழிவந்த மதங்களைச் சார்ந்தவர்கள், அதாவது யூதமார்க்கம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இவற்றைப் பின்பற்றுபவர்கள் விக்கிரக ஆராதனை என்றால் இறைவனுக்குச் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு ஜடப்பொருளைக் கடவுள் என்று நினைத்து வழிபடுவது என்று கருதுகிறார்கள்.

 பைபிளில் ஜெகோவா தன்னைத் தவிர வேறு தெய்வங்களையோ விக்கிரகங்களையோ வணங்கவேண்டாம் என்று மோசேயின் மூலம் யூதர்களுக்குக் கொடுத்த பத்துக் கட்டளைகளில் முதல் இரண்டு கட்டளைகளாக மிகவும் கண்டிப்பாகக் கூறியிருக்கிறார். " என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்தைலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீ¡¢லும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். நீ அவைகளை நமஸ்கா¢க்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராகிய நான் பொறாமையுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசா¡¢க்கிறவராயிருக்கிறேன்" (யாத்திராகமம் 20: 3-5). என்னைத் தவிர பிற தெய்வங்களையோ விக்கிரகங்களையோ நீங்கள் வணங்கினால் பொறாமைப் படுவேன் என்றும், தகப்பன் செய்த அக்கிரமத்துக்கு (விக்கிரக ஆராதனைக்கு) மூன்றம் நான்காம் தலைமுறைவரைப் பிள்ளைகளை விசா¡¢த்துத் தண்டிப்பேன்  என்றும் சொல்லுவதிலிருந்தே  ஜெகோவா எப்படிப்பட்ட கடவுள் என்பதைப் பு¡¢ந்து கொள்ளலாம். மேலும் இவ்வாறு சொல்வதின் மூலம் ஏற்கனவே தன்னைத் தவிர வேறு தெய்வங்கள் உண்டு என்பதை ஜெகோவாவே ஏற்றுக்கொள்கிறார். மேற்கண்ட மேற்கோளில் 5 ஆம் வசனத்தில் 'பொறாமை' என்ற சொல்லை, கர்த்தர் சாதாரண மனிதனைப்போல் பொறாமைப்படும் குணம் உடையவர் என்று நாம் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ் பைபிளில் '¡¢ச்சல்; என்று மாற்றி மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசேயினால் அறிவுறுத்தப்பட்டிருந்த ஏகதெய்வமான ஜெகோவாவை விடுத்து யூதர்கள் பல தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள் என்பதற்கு பைபிளில் நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொருமுறையும் பிறநாட்டினரால் இஸ்ரேல் கைப்பற்றப்பட்டு அவர்கள் ஆட்சியின் கீழ் யூதர்கள் வாழ்ந்தபோது அந்தந்த நாட்டினா¢ன் தெய்வங்கள் அவர்களுக்குப் பா¢ச்சயமாகி அத்தெய்வங்களை அவர்களும் வணங்க ஆரம்பித்தனர். ஆபிரகாமின் காலத்துக்கு முன்பே விக்கிரகங்களை வணங்கும் வழக்கம் யூதர்களுக்கு இருந்தது. அது மட்டுமன்றி விக்கிரகங்களை வணங்கக்கூடாது என்று எச்சா¢த்த கர்த்தராகிய தேவனே மோசேயிடம்  நாகவிக்கிரகத்தை வடிவமைத்து வணங்கச் சொன்ன சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

 

பைபிளில் விக்கிரக ஆராதனைக்கான முதற்சான்று ஆதியாகமம் 31: 19 ல் உள்ளது. ஆபிரகாமின் பேரனான யாக்கோபு தன் மாமனார் லாபானின் வீட்டிலிருந்து தன் தேசத்திற்குப் புறப்பட எத்தனிக்கையில் அவனுடைய மனைவி ரேச்சல் (ராகேல்) தன் தகப்பன் தொழுவதற்காக வைத்திருந்த சொரூபங்களையும் தன்வசம் எடுத்து வைத்துக்கொண்டாள். யூதர்கள் எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்த காலத்தில் எகிப்தியா¢ன் விக்கிரக வணக்கத்தைப் பின்பற்றிவந்தனர் என்பதற்கான சான்று யோசுவா 24: 14; மற்றும் எசேக்கியேல் 20: 7 லும் உள்ளது.

 

எகிப்து நாட்டிலிருந்து யூதர்களை விடுவித்து வருகையில் மோசே சினாய் மலைமேல் உபவாசம் இருந்து கர்த்தரைச் சந்திக்கச் சென்றான். பலநாட்கள் கழிந்தும் அவன் திரும்பிவரத் தாமதமானதால் மக்கள் மோசேயின் சகோதரனான ஆரோனிடத்தில் சென்று தெய்வத்தை வழிபடுவதற்காக எங்களுக்கு விக்கிரகங்களை உண்டுபண்ணும் என்றார்கள். அவன் அவர்களிடத்திலிருந்து பொன் நகைகளைப்பெற்று  சிற்பிகளைக்கொண்டுப் பொன்னால் ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். மக்கள் அந்த விக்கிரகத்துக்குப் பலிகள் கொடுத்து வணங்கினார்கள் (யாத்திராகமம் 32: 1-6). இந்தக் கன்றுக்குட்டியின் விக்கிரகம் எகிப்தியா¢ன் தெய்வங்களுள் இயற்கை வளத்தையும் செழிப்பையும் கொடுக்கும் ஏபிஸ் (Apis) என்ற தெய்வத்தின் வடிவம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

 

எகிப்திலிருந்து தன் ஜனங்களை மோசே அழைத்துவரும்போது அவர்களில் பலரைப் பாம்புகள் தீண்டி உயி¡¢ழந்தார்கள். மோசே அவர்களுக்காகக் கர்த்தா¢டம் வேண்டியபோது, கர்த்தர் மோசேயை நோக்கி நீ ஒரு கொள்ளிவாய் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை, கடிபட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி அதை ஒரு கம்பத்திமேல் தூக்கிவைத்தான் (எண்ணாகமம் 21:7-9). எசேக்கியா என்னும் மன்னன் யூதேயாவின் ஆட்சிக்கு வரும்வரைக்கும் மக்கள் அந்த வெண்கல சர்ப்பத்தை வணங்கிவந்தனர். எசேக்கியா மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே நிறுவியிருந்த வெண்கல சர்ப்பத்தை உடைத்துப்போட்டான், அந்நாட்கள் மட்டும் இஸ்ரேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள் ( 2 இராஜாக்கள் 18: 4). மோசே நிறுவியதிலிருந்து எசேக்கியாவின் காலம் வரை சுமார் ஆயிரம் ஆண்டுகள் அந்த வெண்கல சர்ப்பத்தை யூதர்கள் வணங்கிவந்ததாக எம். ஜி. ஈஸ்டன் (M.G.Easton) என்ற வரலாற்றறிஞர் கூறுகிறார். புதிய ஏற்பாட்டில் யோவானின் சுவிசேஷத்தில் 3: 14-15 ல் "சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்படவேண்டும்" என்று இயேசுவே தன்னைக்குறித்து சொல்கிறார். இதிலிருந்து, பிதாவினால் மோசே அறிவுறுத்தப்பட்டு அவனால் நிறுவப்பட்ட வெண்கல சர்ப்பத்தை பிற்காலத்தில் எசேக்கியா உடைத்துப்போட்டதை இயேசு அங்கீகா¢க்கவில்லை என்றே தோன்றுகிறது. இது விக்கிரக வணக்கத்துக்கு ஒரு மறைமுகமான ஆதரவே ஆகும்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

எகிப்திலிருந்து மீண்டுவந்து கானான் தேசத்தைக் கைப்பற்றித் தங்கள ராஜ்யத்தை அமைத்துக் கொண்டபின் கொஞ்சம் கொஞ்சமாக மோசே காண்பித்த தங்கள் ஏக தெய்வமான

ஜெகோவாவை மறக்க ஆரம்பித்தார்கள். "அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்புகர்த்தரையும் அவர் இஸ்ரேலுக்காக செய்த கி¡¢யைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று. தேவனாகிய கர்த்தரை விட்டுதங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய்அவர்களைப் பணிந்துகொண்டு  கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள். அவர்கள் கர்த்தரை விட்டுபாகாலையும் (Baal), அஸ்தரோத்தையும் (Astarot) சேவித்தார்கள் (நியாயாதிபதிகள் 2: 10-13).

 

ஒவ்வொரு அந்நியதேசமும் இஸ்ரேலை ஆக்கிரமித்துக் கைபற்றியபின் அந்தந்த நாட்டு தேசியக் கடவுளையும் பிற தேவதைகளையும் யூதர்கள் வணங்க ஆரம்பித்தனர். ஒரு நாட்டினா¢ன் கடவுளை வணங்கும் பழக்கம் ஏற்பட்டபின் மற்றொரு நாடு இஸ்ரேலைக் கைப்பற்றி அவர்கள் ஆட்சி வந்தவுடன் யூதர்கள் இதுவரை வணங்கிவந்த தெய்வங்களைப் புதிய ஆட்சியாளர்களுக்குத் தொ¢யாமல் இரகசியமாக வழிபடவேண்டியிருந்தது. வீட்டுக் கதவுகளின் பின்புறத்திலும்தானியங்களைப் போரடிக்கும் களங்களிலும்திராட்சைமதுத் தொட்டிகளிலும் தெய்வங்களின் உருவங்களை மறைவாக வைத்து வணங்கிவந்தனர் (ஏசாயா 57: 8; ஓசியா 9: 1-2).

 

சாமுவேலின் நிர்வாகத்தில் யூதர்களின் விக்கிரக ஆராதனைக்கு ஒரு முடிவு வந்தது (1 சாமுவேல் 7: 3-4). ஆனால் சாலமோனின் ஆட்சியில் எல்லாம் தலைகீழானது. சாலமோனே விக்கிரக வழிபாட்டில் ஈடுபட்டு பல தெய்வங்களுக்கு வழிபாட்டுத்தலங்களையும்பலிபீடங்களையும் கட்டுவித்தான் (1 இராஜாக்கள் 11: 5-7). சாலமோனின் குமாரனாகிய ரெகோபெயாமின் காலத்தில் விக்கிரக ஆராதனை இன்னும் வலுப்பெற்றது (1 இராஜாக்கள் 14: 22-23).

 

பைபிளில் தடை செய்யப்பட்டிருப்பினும் கிறிஸ்தவமதத்தில் விக்கிரக ஆராதனை குறித்து இரு வேறு மாறுபட்டக் கருத்துக்கள் இருக்கின்றன. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும்கிழக்கத்திய வைதீகக் கிறிஸ்தவர்களும் (Eastern Orthodox Church) விக்கிரக ஆராதனையை ஒர் அளவில் ஏற்றுக்கொண்டும்புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் அதற்குக் கட்டுப்பாடுகள் விதித்தும் உள்ளனர். புரொடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் சிலுவையின் வடிவத்தைக் கல்லிலும்கான்க்¡£ட்டிலும்மரத்திலும்உலோகங்களிலும் செய்து பயன்படுத்துகின்றனர். அணிகலனாகவும் அணிந்துகொள்கின்றனர். சிலுவை அவர்களுக்கு இயேசுவை நினைவூட்டும் குறியீட்டு அடையாளமாக உள்ளது.

 

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் விக்கிரக வழிபாட்டைத் தாங்கள் ஏற்றுக்கொண்டதற்குச் சான்றாக யோவான் 1: 14 ஆம் வசனத்தில் "வார்த்தை மாமிசமானது" என்று இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டிருப்பதைக் காண்பிப்பார்கள். ஆத்மரூபமான இறைவன் மனிதவடிவில் அவதா¢த்தான். கர்த்தருடைய மகிமை தன் ஒரே பேறான குமாரனிடத்தில் வெளிப்பட்டது. கண்ணுக்குத் தொ¢யாத கடவுள் கண்ணுக்குத் தொ¢கின்ற பஞ்சபூதங்களால் மனித வடிவம் பூண்டான். ஆகையால் கண்ணுக்குத் தொ¢யாத கடவுளைக் கண்ணுக்குத் தொ¢கின்ற உருவமாக வடிவமைத்து வழிபடுவதில் தவறில்லை என்பது அவர்கள் கூற்று. உருவ வழிபாடு தவறு என்றால் கர்த்தர் மானுடனாக அவதா¢த்தார் என்ற கருத்தே தவறு என்றாகிவிடும்மேலும் ஆதியாகமத்தில் கர்த்தர் தன்னுடைய சாயலாகவும்ரூபத்தின்படியேயும் மனிதனைப் படைத்தார் என்றிருப்பதனால் அவருக்கு ஒரு வடிவம் இருக்கின்றது என்பதுதானே பொருள்? (ஆதியாகமம் 1: 26). அந்த வடிவத்தைக் கண்களுக்கு எதி¡¢ல் கொண்டுவர முயற்சிப்பதில் தவறில்லை என்பது அவர்கள் வாதம்.

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய விக்கிரக வழிபாட்டில் மூன்று நிலைகள் உள்ளன. பரலோகத்திலிருக்கும் பிதாகுமாரனாகிய இயேசுமற்றும் பா¢சுத்த ஆவி ஆகிவர்களை வழிபடுதல் முதல் நிலை. கிரேக்கமொழியில் லேட்¡¢யா (latria) எனப்படுகிறது. இயேசுவின் தாயாராகிய கன்னி மா¢யாளை வணங்குவது இரண்டாம் நிலை. இது ஹைபர்டுலியா (hyperdulia) எனப்படும். ஏராளமான புனிதர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். அவர்களை வணங்குவது மூன்றாம் நிலை. இது டூலியா (dulia)  என்று அழைக்கப்படும்.

 

"பிரார்த்தனை செய்யும்போது மனதால் இறைவனின் வடிவத்தை உருவகப்படுத்துதல் கூட கைகளால் இறைவிக்கிரகத்தை வடிப்பதற்கு ஒப்பாகும்ஆகையால் அது இரண்டாம் கட்டளையை மீறிய செயலாகும்" என்று கிறிஸ்தவ மறையியலாளரும்தீவிர விக்கிரக வழிபாட்டு எதிர்ப்பாளருமான ஜே.ஜே.பாக்கர் (J.J.Packer) தன்னுடைய 'கடவுளை அறிதல்’ (Knowing God, Ch. IV) என்ற நூலில்  கூறுகிறார். ஆனால் இயேசு கிறிஸ்து விக்கிரக வணக்கத்தைப் பற்றித் தன் பிரசங்கங்களில் எதுவுமே சொல்லவில்லை.

 

இந்துமதத்தில் இறைவனுடைய தன்மையை இரண்டு நிலைகளாகப் பி¡¢த்திருக்கிறார்கள் : 1. நிர்குண பிரம்மம், 2. சகுண பிரம்மம். பிரம்மம் என்றால் பரம்பொருள். நிர்குணம் என்றால் எதுவும் இல்லாத சூன்யநிலைநாமமோ அல்லது உருவமோ இல்லாத நிலை (without  attributes). இதைத்தான் மாணிக்கவாசகர் "ஒருநாமம்  ஓருருவம் ஒன்றுமில்லார்" என்று சொல்கிறார். ஒன்றுமில்லார் என்ற சொல்லில் ஆண்விகுதி இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால் இதுவும் பிழைதான். ஏனெனில் பரம்பொருள் என்று சொல்லப்படுகிற பிரம்மம் ஆணுமல்லபெண்ணுமல்ல மற்றும் இடைப்பட்ட நபும்சகமும் அல்ல. பு¡¢ந்துகொள்ள கடினமான இந்த நிலையே நிர்குண பிரம்மம. இரண்டாவது நிலையாகிய சகுண பிரம்மம் மூன்று வகைப்படும். 1) அருவம், 2) அரு உருவம், 3) உருவம். அருவம் என்றால் இறைவனுக்கு உருவம் இல்லை என்று பொருள். ஆனால் நாமம் உண்டு. இறைவனின் இந்த நிலையைத்தான் இஸ்லாமியர் வணங்குகின்றனர். அல்லாஹ் என்று பெயர் சொல்லி இறைவனை அழைக்கின்றனர்மற்றும் 'படைத்தவன்' (creator) என்று ஆண் விகுதியிட்டு அழைக்கின்றனர். ஆனால் அல்லாவுக்கு உருவம் இல்லை. அரு உருவம் என்றால் வடிவம் இருந்தும் வடிவமில்லாதஒரு நிலை. இந்துமதத்தினர் வழிபடும் சிவலிங்கத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். பைபிளில் யாக்கோபு கல்லை எடுத்துத் தூணாக நிறுத்தி அதன்மேல் எண்ணெய் வார்த்து அபிஷேகம் செய்துநான் நிறுத்தின இந்த தூண் தேவனுக்கு இருப்பிடமாகும்தேவா£ர் எனக்குத்தரும் எல்லாவற்றிலும் தசமபாகம் தருவேன் என்று நேர்ச்சை செய்துகொண்டான் என்று ஆதியாகமம் 28: 18 -22 ல் சொல்லப்பட்டுள்ளது சிவலிங்க வழிபாட்டுக்கு ஒப்பான அரு உருவ வழிபாடாகும். சகுண பிரம்மத்தின் மூன்றாம் நிலையான உருவம் என்பது இறைவனுக்கு உருவம் கொடுத்துவழிபடுவதாகும். உருவ வழிபாட்டில் இறைவனுக்குப் பெரும்பாலும் மனித வடிவே கொடுத்தாலும் அவற்றைச் சாதாரண மனிதவடிவத்தைவிடச் சற்று மேலான வடிவமாக அமைக்கின்றனர். இந்துமதத் தெய்வ வடிவங்கள் நான்கு கரங்களுடனும் கிறிஸ்தவமதத் தெய்வ வடிவங்கள் தங்கள் தலையைச் சுற்றி ஒளிவட்டத்துடனும் விளங்குகின்றன.

 

இந்துமதத்தில் இறைவனுடைய வடிவங்களுக்கு நான்கு கரங்கள் ஏன் கொடுத்தார்கள் என்று சிந்திப்போமானால் ஞானிகளும், ¡¢ஷிகளும் பிரபஞ்சத்தையே பரம்பொருளின் பிரத்தியட்ச வடிவமாகக் கண்டார்கள் என்பது தொ¢யவரும். மகாவிஷ்ணு நீலவண்ண உடலும் நான்கு கரங்களும் உடையவராகச் சித்தா¢க்கப்படுகிறார். பஞ்சபூதங்களுள் ஆகாயம் நீலநிறமானதுஎல்லையற்றதுஅதுவே திருமாலின் உடலானது. நான்கு கரங்களும் நீர்நெருப்புவாயுமண் என்ற மீதம் நான்கு பூதங்களைக் குறிக்கும். இரண்டு கால்களும் புருஷபிரகிருதி தத்துவங்களை உணர்த்துகின்றன. நாம் காண்கின்ற யாவும் புருஷப் பிரகிருதி தத்துவங்களிலிருந்து தோன்றி அவற்றால் தாங்கப்படுகின்றன என்பதே வேதங்கள் உரைக்கும் சிருஷ்டி உண்மை. இப்படி எல்லா இறைவடிவங்களும் உள்ளர்த்தங்கள் நிறைந்த குறியீட்டு அடையளங்களே (symbolic representations) தவிர கிறிஸ்தவர்கள் கருதுவதுபோல் கேலிக்குறிய வடிவங்கள் அல்ல. கொலைக்கருவியான சிலுவையை இறைவனை நினைவூட்டும் மதச்சின்னமாக ஏற்றுக் கொண்டவர்கள் சற்றும் சிந்திக்காமல் பிறமதத்து தெய்வங்களை இழிவுபடுத்துவது சா¢யா என்று எண்ணிப்பார்க்கவேண்டும்.

 

இந்துமதத்தில் அவரவர் தங்கள் மனப்பாங்குக்கு ஏற்ப இஷ்டதெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உ¡¢மை உள்ளது. இருப்பினும் இந்துமத மறைநூற்களில் ஆழ்ந்த அறிவுடையவர்களுக்கு ஒரே பரம்பொருள்தான் பல வடிவங்களில் வணங்கப்படுகிறது என்பது தொ¢யும். இதைத்தான் " ஏகன் அநேகன் அடி வாழ்க" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். ஒரே இறைவன்தான் ஒருவனாகவும் அநேகராகவும் தோன்றுகிறான். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா தனனை அர்ஜுனனிடம் பரம்பொருளாக வெளிப்படுத்திக்கொண்டு: " விவரமறியா மக்கள் பல்வேறு தெய்வங்களை வணங்குகின்றனர்ஆனால் அவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அந்த வழிபாடு என்னையே வந்து சேருகிறது" என்று பெருந்தன்மையோடு கூறுகிறார் (பகவத் கீதை 9: 23). தன்னை விடுத்து வேறு தெய்வங்களை வணங்கினால் பொறாமைப்படுவேன் என்றும் அப்படி வணங்குபவர்களை மூன்றாம் நான்காம் தலைமுறை வரைத் தண்டிப்பேன் என்று சொல்லும் கர்த்தரையும்கிருஷ்ண பரமாத்மாவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். 

பலதெய்வங்களை விக்கிரகவடிவில் வழிபடும் முறை பரம்பொருளின் பல்வேறு பிரதிபலிப்புகளை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தைக் காட்டுவதும்ஏகதெய்வ வழிபாடு என்பது மனிதர்களின் கருத்து சுதந்திரத்தை சகிப்புத்தன்மையில்லாது அழிக்கமுயலுவது மட்டுமல்லாமல் தெய்வத்தைப்பற்றிய ஒரே பார்வையை அவர்கள்மேல் பலாத்காரமாகத் திணிக்கமுயலுவதுமாகும் என்று டேவிட் ஹ்யூம் (David Hume) என்ற தத்துவவியலாளர் கூறுகிறார். 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Christianity and Idolatry

Idolatry is the act of worshiping an invisible deity in the form of an invisible deity. The followers of the religions of India such as Hinduism, Buddhism and Jainism design idols and worship the deity through them as symbols of the deity. Idolatry was practiced in ancient times in the pagan religions of the West and Central Asia. The religions of Abraham's descendants, such as Judaism, Christianity, and Islam, view idolatry as the worship of something incarnate as God.

 In the Bible, Jehovah makes it very clear that the first two of the Ten Commandments given to the Jews by Moses were that they should not worship gods or idols other than Himself. Thou shalt have no other gods before me, neither shalt thou make an image of any thing that is in heaven above, or that is in the earth beneath. I am the third and fourth generation of children ”(Exodus 20: 3-5). You can understand what kind of God Jehovah is by saying that if you worship gods or idols other than me, you will be jealous and will punish the children of the third and fourth generation for the iniquity (idolatry) committed by the father. By saying this, Jehovah acknowledges that there are already gods besides himself. In verse 5 of the above quote, the word 'jealousy' is used in the Tamil Bible so that we should not think that the Lord is jealous like an ordinary man; Have translated that.

The Bible contains hundreds of examples of Jewish worship of many gods, apart from Jehovah, the one God instructed by Moses in Old Testament times. Each time Israel was conquered by the colonists and the Jews lived under their rule, the gods of their respective nations became obsessed with them and began to worship the same gods. Idolatry was practiced by the Jews long before the time of Abraham. Not only that, but there was also the incident where the Lord God, Moses, told Moses not to worship idols.

The earliest evidence of idolatry in the Bible is found at Genesis 31:19. As Abraham's grandson Jacob was about to leave his father-in-law Laban's homeland, his wife Rachel (Rachel) took with her the scorpions that her father had kept for worship. Evidence that the Jews practiced Egyptian idolatry during slavery in Egypt Joshua 24:14; And also in Ezekiel 20: 7.

Moses went to meet the Lord on Mount Sinai from fasting when he was delivering the Jews from the land of Egypt. And it came to pass after many days, that he returned, and the people said unto Moses' brother Aaron, Make us idols, that we may worship him. He took gold jewelry from them and cast a calf in gold with the sculptors. The people sacrificed and worshiped the idol (Exodus 32: 1-6). Researchers say that the idol of this calf is a form of the goddess Apis, who gives natural resources and prosperity to the gods of Egypt.

When Moses brought his people out of Egypt, many of them were bitten by snakes and died. And when Moses prayed unto the LORD for them, the LORD said unto Moses, Make thee a fiery serpent, and set it upon a pole; So Moses made a bronze serpent and threw it on a pole (Numbers 21: 7-9). The people worshiped the bronze serpent until King Hezekiah came to rule over Judea. Hezekiah removed the altars, smashed the idols, cut down the groves of idols, and broke the bronze serpent that Moses had installed, only in those days did the children of Israel burn incense to it (2 Kings 18: 4). The bronze serpent was worshiped by the Jews for about a thousand years from the time of Moses until the time of Hezekiah. G. Says the historian M.G.Easton. In the New Testament Gospel of John 3: 14-15, Jesus Himself says, "The Son of Man must be lifted up, that whoever believes in him should not perish but have eternal life, just as the serpent was lifted up by Moses in the wilderness." From this, it appears that Jesus did not acknowledge that Hezekiah later broke the bronze serpent that Moses had instructed and established by his father. This is an implicit support for idolatry.

Little by little after returning from Egypt and conquering the land of Canaan and establishing their kingdom, Moses showed their only god.

They began to forget Jehovah. "And after that all that generation was gathered together unto their fathers, another generation rose up after them, which knew not the LORD, nor the works that he did for Israel. , Also served Astarot (Judges 2: 10-13).

After each foreign invasion and conquest of Israel, the Jews began to worship their respective national gods and other angels. After the conquest of Israel by one nation and the conquest of Israel, the Jews had to secretly worship the deities they had worshiped until the new rulers. The images of the gods were hidden behind the doors of houses, in the threshing floors, and in the winepresses (Isaiah 57: 8; Hosea 9: 1-2).

Jewish idolatry came to an end during Samuel's reign (1 Samuel 7: 3-4). But under Solomon's rule everything turned upside down. Solomon engaged in idolatry and built shrines and altars to many gods (1 Kings 11: 5-7). Idolatry flourished during the reign of Solomon's son Rehoboam (1 Kings 14: 22-23).

Although forbidden in the Bible, there are two different views on idolatry in Christianity. Both Catholic and Eastern Orthodox Christians accept idolatry to some extent and Protestant Christians impose restrictions on it. Protestant Christians use the shape of the cross in stone, concrete, wood, and metal. They are also worn as an accessory. The cross is the symbolic symbol that reminds them of Jesus.

Catholics show that in John 1:14 it is said of Jesus that "the Word is flesh" in reference to their acceptance of idolatry. The incarnate Lord is incarnate in human form. The glory of the Lord was revealed in his only begotten Son. The invisible God took on human form with invisible five giants. Therefore, they claim that there is nothing wrong with designing and worshiping an invisible God as a visible image. If idolatry is wrong, then the very idea that the Lord appeared to man is wrong, and does it mean that in the Genesis the Lord created man in His own image and likeness? (Genesis 1:26). They argue that there is nothing wrong with trying to bring that form to the eyes.

For Catholic Christians there are three stages in their idolatry. The first step is to worship the heavenly Father, the Son Jesus, and the Holy Spirit. In Greek it is called latria. Worship of the Virgin Mary, the mother of Jesus, is secondary. This is called hyperdulia. Many saints live and die in Catholic Christianity. Worshiping them is the third level. This is called dulia.

JJ Packer, a Christian theologian and staunch anti-pagan, said in his 'Knowing God, Ch. IV' that even imagining the image of God with the mind while praying is tantamount to shaping the idol with the hands, so it is a transgression of the Second Commandment. Says in the book. But Jesus Christ did not say anything in his sermons about idolatry.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard