Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 24. Trinity ஒரே கடவுளா? அல்லது மூன்று கடவுளரா


Guru

Status: Offline
Posts: 7474
Date:
24. Trinity ஒரே கடவுளா? அல்லது மூன்று கடவுளரா
Permalink  
 


தி¡¢த்துவம்: கிறிஸ்தவர்களுக்கு ஒரே கடவுளா? அல்லது மூன்று கடவுளரா

தி¡¢த்துவம் என்றால் பரம்பொருளின் மும்மூர்த்திகள் கொண்ட அமைப்பு என்று பொருள். கிறிஸ்தவமதக் கருத்துப்படி பிதா (அதாவது யூதர்கள் வழிபட்ட, பழைய ஏற்பாட்டில்  ஜெகோவா (Jehova or Yahweh), அதாவது ஏலோகிம் (Elohim), அதொனை (Adonai) என்று பல பெயர்களால் வழிபடப்பட்ட, பரலோகத்திலிருக்கின்ற சிருஷ்டிகர்த்தர்), குமாரன் என்ற இயேசு கிறிஸ்து, மற்றும் பா¢சுத்த ஆவி (Holy Spirit) ஆகிய மூவரும் இணைந்த அமைப்பே தி¡¢த்துவம் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் மூவரும் ஒருவர்க்கொருவர் ஒப்பானவர்கள் (co-equal), ஆதியும் அந்தமும் இல்லாத நிரந்தரமானவரகள் (co-eternal), ஒரே பொருளால் (?) (one substance) ஆனவர்கள் என்று தற்காலத்துக் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் ஒரே ஓரு தெய்வத்தைதான் (பரலோகத்திலிருக்கிற பிதா [Yahweh]) வணங்கிவந்தார்கள், அத்தோடு இயேசு கிறிஸ்துவைப் பிதாவுக்குக் கீழ்ப்படிந்த குமாரனாக மட்டும்  நம்பினார்கள். "என்னையன்றி உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம்" என்று கர்த்தராகிய தேவன் சொன்னதாக, பைபிளின் பத்துக் கட்டளைகளில் முதல் கட்டளை கூறுகிறது (யாத்திராகமம் 20: 3). கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கட்டளையைப் புறந்தள்ளிவிட்டு, இயேசு கிறிஸ்துவையே கடவுளாகக் கிறிஸ்தவர்கள்  வணங்கத் தொடங்கினார்கள். இந்த கருத்து மாற்றத்துக்கு இயேசுவின் மரணத்திற்குப் பின்  300 ஆண்டுகாலம் ஆனது.

 

முதல் மூன்று நூற்றண்டுகளின் கிறிஸ்தவசபை (The Church of the First Three Centuries; 1865) என்ற தன் நூலில் ஆல்வன் லாம்சன் (Alvan Lamson) என்ற ஆராய்ச்சியாளர் பின்வருமாறு கூறுகிறார். "...முதல் மூன்று நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்ட  கிறிஸ்தவர்களின் எந்த மறைநூலிலும், ஆவணங்களிலும், தி¡¢த்துவம் (Trinity) என்ற கருத்தே காணப்படவில்லை. அவர்கள் ஒரே உண்மையான, மற்றும் சர்வவல்லமை மிக்க  கடவுள் என்று பிதாவையும், இயேசுவை அவருக்குக் கீழ்ப்படிதலுள்ள குமாரனாகவும் கருதினார்கள். பவுலும், 1 கொ¡¢ந்தியர் 15: 28 ல் 'சகலமும் அவருக்குக் (இயேசுவுக்கு) கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் (பிதாவுக்கு) கீழ்ப்பட்டிருப்பார்' என்று கூறுகிறார். பிதாவும் குமாரனும் ஒன்றே, அதனால்  இயேசுவையே கடவுளாக வழிபடுதல் வேண்டும் என்று போதித்துவந்த பவுல் அப்போஸ்தலருக்கே  எவ்வளவு குழப்பம்.

 

கிறிஸ்தவர்கள் பைபிளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் கடவுளின் வார்த்தையென்றும் அவைதாம் அவர்களுடைய மதநம்பிக்கைக்கே அடித்தளம் என்று நம்புகிறார்கள். ஆனால் தி¡¢த்துவம் (Trinity) என்ற் வார்த்தை பைபிளில் உள்ள புத்தகங்களில் எந்த புத்தகத்திலும்

இல்லை. 1 யோவான் 5: 7 ல் "பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (இயேசு), பா¢சுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்" என்றிருக்கிறது. இந்த வசனம் பின்னால் சேர்க்கப்பட்ட இடைச்சொருகல் என்பதை கிறிஸ்தவ மறைநூல் வல்லுநர்களே ஏற்றுக்கொண்டனர். ஏனெனில் புதிய ஏற்பாட்டின் மூல கிரேக்கமொழி பிரதிகளில் இந்த வசனம் இல்லை. எனவே தமிழ் பைபிளில் இவ்வசனம் அடைப்புக்குறிகளுக்குள் உள்ளது. சமீபத்திய ஆங்கிலப்பதிப்புகளில் இவ்வசனம் முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

 

இயேசு கிறிஸ்துவின் காலத்துக்கு முன் பா¢சுத்த ஆவியைப் பற்றி பைபிளில் எந்த குறிப்பும் இல்லை. பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் 18 ஆம் அதிகாரத்தில், ஜெகோவா ஆபிரகாமுக்குத் நோ¢ல்வந்து தா¢சனம் தந்ததாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் தனியாக வரவில்லை. ஆதியாகமம் 18: 2 ல் ' மூன்று புருஷர் ஆபிரகாமுக்கு எதிரே நின்றார்கள். அவன் அவர்களைக் கண்டவுடன் எதிர்கொண்டு ஓடிவந்து தரைமட்டும் குனிந்து வணங்கினான்' என்றிருக்கிறது. இதை வைத்துக் கிறிஸ்தவமத ஆர்வலர்கள் தி¡¢த்துவக் கோட்பாடு பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே இருக்கிறது, அந்த மூவரும் பிதா, குமாரன் மற்றும் பா¢சுத்த ஆவி என்பவர்களே, மூவரும் சேர்ந்துவந்து ஆபிரகாமுக்குத் தா¢சனம் கொடுத்தார்கள் என்பர். ஆனால் 18: 33 ல் ஜெகோவா ஆபிரகாமோடே பேசி முடித்தபின்பு போய்விட்டார் என்று கூறப்படுகிறது, போய்விட்டார்கள் என்று அல்ல. 19 ஆம் அதிகாரம் முதல் வசனத்தில் ' அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்தில் சோதோம் (Sodom) நகரத்துக்கு  வந்தார்கள் என்றிருக்கிறது. அப்படியானால், ஜெகோவா முதலில் அங்கிருந்து போய்விட்டார், அவரோடு வந்த இரு தேவதூதரும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணியின் நிமித்தம் சோதோமுக்கு வந்தார்கள் என்று தொ¢கிறது.

 

பிதாவும், குமாரனும் ஒன்றே என்றால் எப்படி பிதா குமாரனைப் பூமிக்கு அனுப்பியிருக்க முடியும்? "நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை; நான் எனக்குச் சித்தமானதைத் தேடாமல் என் பிதாவுக்குச் சித்தமானதையே தேடுகிறேன்" என்று இயேசு யோவான் 5: 30 ல் கூறுகிறார். "என் பிதாவின் சித்தத்தின்படிச் செய்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை" என்று இயேசு மத்தேயு 7: 21 ல் கூறிகிறார். இருவரும் ஒருவரே என்றால் இயேசு சொல்வதின் பொருள் என்ன? மேலும் பிதா, குமாரன், பா¢சுத்த ஆவி ஆகிய மூவரும் ஒன்றுதான் என்றால், அதில் மூன்றில் ஒருபாகமான குமாரன் மட்டும் எப்படி மரணம் அடையமுடியும்?

 

கிறிஸ்தவ மறையியலாளர்கள் இறைவன் மனிதனாகப் பிறந்து வாழ்ந்து, துன்பங்கள் அனுபவித்து, மரணத்தைத் தழுவுவதற்கு ஏதுவாக தன்னுடைய இறைத்தன்மைகளில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டு உலகில் அவதா¢ப்பார் என்று கூறுகின்றனர். மறையியலில் இதை அவர்கள் கீனோஸிஸ் (kenosis) என்று அழைப்பர். தி¡¢த்துவ மூவா¢ல் ஒருவராயிருந்த இயேசுவும் இவ்வாறே பூமியில் அவதா¢த்து மனிதகுமாரனாக வாழ்ந்தார் என்கிறார்கள். அதேசமயம், பொ¢கோரெஸிஸ் (perichoresis) என்னும் ஒரு தத்துவத்தையும் கூறுகிறார்கள். அதாவது, தி¡¢த்துவத்தில் பிதா, குமாரன், பா¢சுத்த ஆவி மூவரும் பி¡¢க்க இயலாத, விவா¢க்க இயலாதவகையில், ஒருவருக்கொருவர் பிணைந்து, ஒருவருக்குள் ஒருவர் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதே. இதன்படி நோக்கினும் தி¡¢த்துவத்தில் ஒருவரான இயேசு மட்டும் தன் இறைத்தன்மையைக் குறைத்துக்கொண்டு, பி¡¢க்க இயலாத தி¡¢த்துவத்திலிருந்து பி¡¢ந்துவந்து பூவுலகில் மனிதனாக அவதா¢த்தது எங்ஙனம்? அப்படியே அவதா¢த்திருப்பினும், இயேசு ஞானஸ்நானம் பெறுகையில் தன்னில் ஒரு பகுதியான அவர்மேல், பா¢சுத்த ஆவியானவர் புறா வடிவில் இற்ங்கவேண்டிய அவசியம் என்ன? 'இவர் என் ஒரே பேறான குமாரன், இவா¢ல் நான் பி¡¢யமாயிருக்கிறேன்' என்று சான்றிதழ் வாசித்தது எதற்காக? பா¢சுத்த ஆவியானவர்  தன் ஒரே பேறான குமாரனை சாத்தானால் சோதிக்கும்படியாக வனாந்தரத்துக்கு கொண்டுபோகவேண்டியதன் காரணம் என்ன? எந்த தந்தையாவது தன் மகனை எல்லாராலும் வெறுக்கப்படும் ஒரு கி¡¢மினலைக் கொண்டு சோதனை செய்வாரா?

 

யோவான்10: 30 ல் இயேசு: 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்' என்றார். நான், பிதா மற்றும் பா¢சுத்த ஆவி ஆகிய மூவரும் ஒன்றாயிருக்கிறோம் என்று சொல்லவில்லை.

 தி¡¢த்துவக் கோட்பாட்டின்படி கடவுள் மூன்றுபேராகயிருந்தால் இயேசு ஏன் பா¢சுத்த ஆவியை அலட்சியம் செய்யவேண்டும்? யோவான் 14: 9 ல் இயேசு மேலும் சொல்கிறார்: ' என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்'. இங்கும் அவர் பா¢சுத்த ஆவியைப் புறக்கணிக்கிறார். (மேலும் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது இயேசு தன்னைக் கடவுள் என்று கூறிக்கொள்ளவில்லை). யோவான் 15: 28 ல் இயேசு: ' என் பிதா என்னிலும் பொ¢யவராயிருக்கிறார்' என்று சொல்லுகிறார். மத்தேயு 19: 17 ல் இயேசு ஒரு இளைஞனை நோக்கி: 'நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் (தேவனுடைய) கட்டளைகளைக் கைக்கொள்' என்கிறார்.  அப்படியெனில் இருவரும் எப்படி ஒருவராகயிருக்க முடியும்?

 

பழைய ஏற்பாட்டில் உபாகமம் 6: 4 ல் மோசே, 'இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்' என்று சொல்லுகிறார். புதிய ஏற்பாட்டிலும் மாற்கு 12: 28,29 ல் இயேசு கிறிஸ்துவிடம், கட்டளைகளில் எல்லாம் பிரதான கட்டளை எது என்று வேதபாரகர்களில் ஒருவன் கேட்டபோது அவர்; 'இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர்  ஒருவரே கர்த்தர்என்ற மோசேயின் வார்த்தைகளை அப்படியே எழுத்துப் பிசகில்லாமல் கூறுகிறார்.

 

யோவான் முதல் அதிகாரத்தில் 1 -3 வசனங்களில் 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அது தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியில் தேவனோடிருந்தார். சகலமும் அவ்ர் மூலமாய் உண்டாயிற்று' என்று கூறப்படுகிறது. இதில் 'வார்த்தை' என்பது இயேசு. இந்துமத மறைநூல்களில் 'அக்ஷரப் பிரம்மம்' என்று பரம்பொருள் குறிப்பிடப்படுவது போல இயேசு தேவனின் வார்த்தையாக யோவானின் சுவிசேஷத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார். இங்கும் பா¢சுத்த ஆவியைப் பற்றிய பேச்சே இல்லை, இயேசுவும் பிதாவும் மட்டுமே குறிப்பிடப்படுகிறார்கள். மேலும் இயேசுவும் பிதாவும் ஒன்றல்ல என்பதும்

பைபிள் வசனங்களின் மூலமே நிரூபணமாகிறது.

 

இயேசு சிலுவையில் மா¢த்து ஒரு பகலும், இரண்டு இரவுகளும் கல்லறையில் உயிரற்ற சடலமாக இருந்து பின் மூன்றாம் நாள் அதிகாலையில் உயிர்த்தெழுந்தார் என்று சுவிசேஷங்கள் கூறுகின்றன. இயேசு கடவுளாக இருக்கும் பட்சத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத அவருடைய நிரந்தரநிலையில் (eternal status) அவர் மரணித்திருந்த காலம் நிரப்ப இயலாத ஒரு இடைவெளியை (break) உண்டாக்கிவிட்டதல்லவா? அப்படியானால் அவர் எப்படி பிதாவுக்கு சமமாக (co-equal and co-eternal) இருக்கமுடியும்? இல்லை, அவர் மரணித்திருந்த காலத்திலும் எப்போதும்போல் இயங்கிக்கொண்டிருந்தார் என்றால் அவருடைய மரணத்தின் பொருள்தான் என்ன? இயேசுவின் மரணம் ஒரு நடிப்பு, அதனால் அவர் சற்றேனும் பாதிக்கப்படவில்லை  என்றுதானே பொருளாகிறது. இயேசு சிலுவையில் தொங்கும்போது தன்னோடு சிலுவையில் அறையபட்ட இரு கள்வர்களுள் ஒருவன் மனம் திருந்தியதால் அவனுக்கு இரங்கி, 'நீ என்னோடு கூட இன்று பரதீசில் (paradise) இருப்பாய்' என்று கூறுவதிலிருந்து அவர் மா¢த்த அடுத்தகணமே பரலோகம் சென்றுவிடுவார் என்பது தெளிவாகிறது (லூக்கா 23: 43). ஆனால் மூன்றாம் நாள் காலை கல்லறைக்கு வந்த மகதலேனா மா¢யாளிடம் இயேசு 'என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை (யோவான் 20: 17)'. சொல்லுகிறார். அவரது பயணத்திட்டத்தில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டதா என்ன? இந்த முரண்பாடுகளுக்கெல்லாம் பைபிளில் விடை இல்லை.

 

'பரலோகத்திலிருந்து இறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனும் இல்லை' என்று யோவான் 3: 13 ல் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் இயேசு பூமியில் அவதா¢த்திருந்த காலத்தில் பரலோகத்தில் அவர் இல்லையா? அக்காலத்திலும் இயேசு அங்கே இருந்தார் என்றால் , பூமியில் அவதா¢த்திருந்த கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் பரலோகம் ஏறிப்போய் அங்கேயிருந்த மற்றொரு கிறிஸ்துவோடு இணைந்து ஒன்றாகிவிட்டாரா? மாற்கு 16:19 ல் உயிர்த்தெழுந்த  ' அவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்தார்' என்றிருக்கிறது. மத்தேயு 22: 44 லிலும் இதேதான் சொல்லப்பட்டுள்ளது. பிதாவும் குமாரனும் ஒருவர்தான்  என்றால், அவர் ஏன் பரலோகத்தில் பிதாவின் வலது பக்கத்தில் அமரவேண்டும்? பரலோகத்தில் மூன்று கடவுளர் உள்ளனரா? கிறிஸ்து மா¢க்காமல்பரலோகத்திலிருக்கிற பிதா மற்றும் பா¢சுத்த ஆவியுடனே சதா சர்வகாலமும் இருப்பரேயானால் உண்மையில் அவர் செய்த தியாகம்தான் என்ன? இந்த கேள்விகளுக்குப் பைபிளில் பதில் இல்லை.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கடவுள் சர்வவியாபகமும் (omnipresence), சர்வஞானமும் (omniscience), சுயமான நிலைத்தலும் (self existence) உடையவர் என்று எல்லோரும் அறிந்திருக்கிறோம். யோவான் 11: 15 ல் கலிலேயாவிலிருந்து யூதேயாவுக்குப் புறப்ப்ட்ட இயேசு," நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாவதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்" என்று சீடர்களிடம் கூறுகிறார். நான் அங்கே இல்லை என்று அவரே கூறுவதால் இயேசுவுக்கு சர்வவியாபகம் இல்லை என்றாகிறது. மாற்கு 13: 32 ல் "அந்த நாளையும்அந்த நாழிகையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான் பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்,குமாரனும் அறியார்" என்று இயேசு நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து சொல்லுகிறார் என்றால் அவருக்கு சர்வஞானமும் இல்லை என்றாகிறது. யோவான் 6: 57 ல் "நான் பிதாவினால் பிழைத்திருக்கிறேன்" என்றும்யோவன் 12: 49 ல் "நான் சுயமாய்ப் பேசவில்லை. நான் பேசவேண்டியது இன்னதென்றும்உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்" என்றும் இயேசுவே சொல்வதால் அவருக்கு சுயமான நிலைத்திருத்தலும் இல்லை என்றாகிறது. இப்படியிருக்கும்போது இயேசுவை எவ்வாறு பிதாவுக்கு இணையானவர் (co-equal) என்றும் அல்லது பிதாவும் அவரும் ஒன்றே என்றும் எப்படி நம்புவது?

 

1 தீமோத்தேயு 2: 5 ல் 'தேவன் ஒருவரேதேவனுக்கும் மனுஷருக்கும் மத்யஸ்தரும் ஒருவரேஎன்று சொல்லப்பட்டுள்ளது.  இதில் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பாளரால் உள்நோக்கத்துடன் மத்யஸ்தர் என்ற வார்த்தைக்கு அடுத்து 'இயேசு கிறிஸ்து என்ற மனிதர்எனும் முக்கியமான மூன்று வார்த்தைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழிபெயர்ப்பில் அவை இருக்கின்றன. (“... there is one God, and one mediator, the man Christ Jesus...). இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. இயேசுவை 'மனிதர்என்று சொல்லியிருப்பதை எப்படி தமிழ் கிறிஸ்தவர்களுக்குச் சொல்வது என்று மொழிபெயர்ப்பாளர் தவிர்த்திருக்கலாம். இதுபோல் பைபிளில் அநேக இடங்களில் வார்த்தைகளை மாற்றியும்தவிர்த்தும்புதிய வசனங்களைச் சேர்த்தும்  தங்கள் விருப்பம் போல் மொழிபெயர்த்து 'இறைவனின் வார்த்தைகளுக்குச்சேவை செய்திருக்கிறார்கள்!

 

மூன்று கடவுள்களை உள்ளடக்கிய தி¡¢த்துவக் கோட்பாடு புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள்  எழுதப்பட்டகாலத்தில் உருவாகவில்லை. பவுல் அப்போஸ்தலர் உட்பட இயேசுவின் பன்னிரண்டு சீடர்களோ அல்லது இயேசுவோ கூட இதைபோதிக்கவில்லை. இந்தக் கருத்து மறைநூல்களுக்கு வெளியேயிருந்து கிறிஸ்தவமதத்தில் நுழைந்ததாக புதிய கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம் (The New Catholic Encyclopedia) ஒத்துக்கொள்கிறது.

 

பா¢சுத்த ஆவி என்றால் என்னமத்தேயுலூக்கா ஆகிய இரு சுவிசேஷங்களும் கன்னி மா¢யாளின் கருவறையில் பா¢சுத்த ஆவியானவர் கர்ப்பம் உண்டுபெறச்செய்து இயேசு அவதா¢த்தார் என்று கூறுகின்றன. கிறிஸ்தவப் பாதி¡¢கள் ஞானஸ்நானம் கொடுக்கும்பொழுது பா¢சுத்த ஆவியின் பெயரால் அந்த சடங்கைச் செய்கிறார்கள். 'நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.என்று ரோமர் 8: 16 சொல்லுகிறது. 1 யோவான் 3: 9 ல் 'தேவனால் பிறந்தவன் எவனும் பாவம் செய்யான்ஏனெனில் அவருடைய வித்து அவனுள் தா¢த்தி¡¢க்கிறதுஎன்று சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்துஞானஸ்நானம் பெற்ற எவனும்,தேவனுடைய 'வித்தினால்மறுபடியும் பிறக்கிறான் (born again) என்று விளக்கம் கிடைக்கிறது. இங்கே தமிழில் 'வித்துஎன்ற வார்த்தையும்ஆங்கில பைபிளில் உள்ள seed வார்த்தையும்இரண்டிற்கும் மூலமான கிரேக்கமொழியிலுள்ள 'ஸ்பெர்மா" (sperma) என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பே. கிரேக்க வார்த்தையான 'ஸ்பெர்மா'வில் இருந்துதான் ஆங்கில வார்த்தையான 'ஸ்பெர்ம்" (sperm) வந்தது. தமிழில் 'விந்தணுஎனப்படும். ஆணின் விந்தணு பெண்ணின் கருவறைக்குள் புகுந்து சினைமுட்டையைச் (ovum)சேர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. எனவே பைபிளின்படி பா¢சுத்த ஆவிதான் 'விந்தணு'வாகச் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.

 

கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மும்மூர்த்திகளை வெவ்வேறு பெயர்களில் யூதமதம் தவிற பிற (Pagan) மதங்களில் வழிபட்டு வந்தனர் என்பதற்கு அந்த மதங்களின் புராணக்கதைகளே சான்று. கி. மு. 2300 லிருந்தே எகிப்து நாட்டில் ஒசீரஸ் (Osirus), ஐசிஸ் (Isis) மற்றும் ஹோரஸ் (Horus) என்ற மூன்று கடவுளரை வணங்கிவந்தார்கள். பாபிலோனில் பேபெல் (Babel) கோபுரத்தின் அழிவுக்குப்பின்அரசனாயிருந்த நிம்ரோத் (Nimrod) மற்றும் அவனது தாயும்மனைவியுமாகயிருந்த செமிராமிஸ் (Semiramis) ஆகிய இருவரும் எகிப்துக்கு தப்பி ஓடினார்கள். நிம்ரோத் எகிப்தின் முதல் அரச பரம்பரையை ஸ்தாபித்தான். நிம்ரோதின் மறைவுக்குப்பின்அவனது தாயும் மனைவியுமான செமிராமிஸ் வேறொரு தொடர்பில் ஒருகுழந்தையைப் பெற்றெடுத்து ஹோரஸ் (Horus) அல்லது தம்முஸ் (Tammuz) என்று பெயா¢ட்டாள். அது மட்டுமல்லஹோரஸ் நிம்ரோதின் மறுபிறவி என்று நாட்டுமக்களுக்கு அறிவித்தாள். அவர்கள் காலத்துக்குப்பின் இந்த மூவரும்அதாவது ஒசீரஸ் (நிம்ரோத்)ஐசிஸ் (செமிராமஸ்)ஹோரஸ் (முதல் இருவா¢ன் மகன்) ஆகியோர் கடவுளர் நிலைக்கு உயர்த்தப்பட்டு மும்மூர்த்திகளாக சுமார் 2500 ஆண்டுகள் எகிப்தியரால் வணங்கப்பட்டனர்.

 

பாபிலோனில் அதே மூவரும் நைனஸ் (Ninus), இஷ்தார் (Ishthar), மற்றும் தம்முஸ் (Tammuz) என்ற பெயரால் வழிபடப்பட்டு வந்தனர். யூதர்கள் பாபிலோனியா¢ன் ஆட்சிக்குட்பட்டிருந்தபோதுஅவர்களுடைய தெய்வங்களை விக்கிரகங்களாகச் செய்து எருசலேம் தேவாலயத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கினர் என்பதற்கு எசேக்கியேல் 8 ஆம் அதிகாரத்தில் தெளிவுகள் உள்ளன. யூதஸ்தி¡£கள் பாபிலோனிய மும்மூர்த்திகளில் ஒரு கடவுளான தம்முசை (Tammuz) வணங்கி அழுதுகொண்டிருந்தார்கள் என்று எசேக்கியேல்

8: 14 லிலும்யூதர்கள் சூ¡¢ய நமஸ்காராம் செய்தனர் என்று எசேக்கியேல் 8: 16 லிலும் கூறப்ப்ட்டுள்ளது.

 

பண்டைக்கால ரோமாபு¡¢யில் ஜூபிடர் (Jupiter), ஜூனோ (Juno), மினர்வா (Minerva) ஆகிய மும்மூர்த்திகள் வணங்கப்பட்டு வந்தனர். ஜூபிடர் பரம பிதாவாகவும்சிருஷ்டிகர்த்தாவாகவும்  வணங்கப்பட்டார். அவர் முதலில் ஜூயஸ் (Zues) என்ற பெயா¢ல் அழைக்கப்பட்டார். சமஸ்கிருத வார்த்தையான 'பித்ரு' (தந்தை என்ற பொருள்) விலிருந்து கிரேக்கமொழிக்குச் சென்று 'பிதர்' (piter) என்று மாறியது. ஜூயஸ¤ம் பிதரும் இணைந்து 'ஜூபிடர்என்றானது. பித்ரு என்ற சமஸ்கிருத வார்த்தையே ஆங்கிலத்தில் பாதர் (Father) என்று வழங்கப்படும் வார்த்தைக்கும் ஆதாரம். பவுலும்பர்னபாசும் லீஸ்திரா என்னும் ஊ¡¢ல் போய் பிரசங்கம் செய்யும் போதுபவுல் அங்கே ஒரு பிறவி சப்பாணியைக் குணமாக்கி நடக்கச் செய்தார்அது கண்ட மக்கள் தேவர்கள் மனிதரூபமெடுத்து வந்திருக்கிறார்கள் என்றும்,பர்னபாசை யூபித்தர் (Jupiter) என்றும் பவுலை மெர்கு¡¢ (Mercury) என்றும் சொன்னார்கள் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 14: 6-12). மெர்கு¡¢ கிரேக்கர்களுக்கும்ரோமர்களுக்கும் மருத்துவக் கடவுள்.

 

கிறிஸ்துவுக்கு முன் 6 நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இந்துமதத்தில் சிவன் (Shiva), விஷ்ணு (Vishnu), பிரம்மா (Brahma) என்ற மும்மூர்த்திகளை வணங்கும் வழக்கம் தொடங்கிவிட்டது. எல்லா பழமையான மதங்களிலும் தி¡¢த்துவக் கோட்பாடு இருந்திருக்கிறது.

 

 

கிரேக்க அறிஞர் பிளேட்டோ (Plato) தம் நாட்டுமக்கள் பல தெய்வங்களை வணங்கிவந்ததைக் கண்டு அதில் மாற்றம் செய்யும் எண்ணத்தோடு ஒரு தி¡¢த்துவக்கொள்கையை உருவாக்கினார். அதன்படி மூன்று கடவுளர் என்ற கருத்தை விளக்கினார். (1) முதற்கடவுள் ( பிரபஞ்சத்தில் தலைமை வகிக்கும் சர்வவல்லமை பொருந்திய பரம்பொருள்),(2) இரண்டாம் கடவுள் (பிரபஞ்சத்தின் ஆத்மா [soul]), (3) மூன்றாம் கடவுள் (பிரபஞ்சத்தின் ஆவி [spirit]) இதை கிரான்ட் (Grant) என்ற மதவியல் ஆராய்ச்சியாளர் 'கடவுளரும்ஒரே கடவுளும்' (Gods and tha One God, Ch.12) என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார்.

 

எகிப்து நாட்டிலுள்ள அலக்சாண்ட்¡¢யா நகரத்தில் வாழ்ந்த பிலோ (Philo) என்ற அறிஞர்கிறிஸ்தவமதத்தில் தி¡¢த்துவக் கோட்பாடு உருவானதில் பெரும்பங்கு வகிக்கிறார். யூதரான இவர் கி.மு. 15 லிருந்து கி.பி. 50 வரை வாழ்ந்தவர். இரண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டுவரை ஆதி கிறிஸ்தவர்கள் மத்தியில் இவரது கருத்துக்களின் தாக்கம் அபா¢மிதமாக இருந்தது. கிரேக்கத்  தத்துவங்களைப் பின்பற்றிய பிலோவின் தி¡¢த்துவக் கோட்பாடு என்னவென்றால்: (1) டெமியர்ஜ் (Demiurge) என்கிற பரமபிதாஅவரே சகலத்தையும் சிருஷ்டித்தவர். (2) அன்னை (Mother), அவளே அறிவு சக்தியாக (Wisdom அல்லது Sophia) விளங்குபவள். (3) குமாரன் (Son), அவரே உலகைக் காப்பவர். பிலோவின் இந்த தி¡¢த்துவக் கோட்பாடே  பின்னால் கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொண்ட தி¡¢த்துவக் கோட்பாட்டுக்கு முன்னோடியாக விளங்கியது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூதர்கள் பெண்களுக்கு மதிப்பும்சம உ¡¢மையும் வழங்கிவந்தனர். இயேசுவே அநேகம் பெண்களை தன் சீடர்களாக வா¢த்திருந்தார். இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் பெண்களை உதாசீனப்படுத்தத் தொடங்கினர். டெர்டூலியன் (Tertulian) என்ற மதவியல் அறிஞர் பெண்களை கொடிய சதிகா¡¢களாகவும்மனிதகுலத்துக்கு அபாயம் விளைவிப்பவர்களாகவும் சித்தா¢த்தார். ஏவாளின் 'முதல் பாவத்தினால்தான்' (Original sin) இயேசுவே சிலுவையில் அறையுண்டு மா¢க்க நேர்ந்தது என்று எழுதினார். இதை புனித அகஸ்டின் (St. Agustin) ஆமோதித்தார். "மனைவியாக இருந்தாலும் தாயாக இருந்தாலும் அவள் சதிகா¡¢தான். ஒவ்வொரு பெண்ணிடமும் எச்சா¢க்கையாக இருக்கவேண்டும்" என்றார். இந்த கருந்து வலுப்பெற்றதாலேயே இயேசுவின் பிரதான சீடராக இருந்த மகதலேனா மா¢யாளை ஒதுக்கிவைத்தனர். அவளை ஒரு விலைமாது என்றும் உருவகப்படுத்தினர்.

மேலும் தி¡¢த்துவக் கொள்கை உருவானபோதும் அதில் பெண்தெய்வத்துக்கு இடமில்லாமல் பார்த்துக் கொண்டனர்.

 

கிறிஸ்தவ கத்தோலிக்க சபை வளர்ந்துவரும் நேரத்தில் புதிதாக ஞானமார்க்கம் (Gnosticism) என்று ஒன்று கிறிஸ்தவ சபைக்கு வெளியே தொடங்கியது. இதில் பங்கு பெற்றவர்கள் கிறிஸ்தவ சபையினரை எதற்கும் ஆதாரம் வேண்டுமென்று கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். ஞானமார்க்கத்தினர் (Gnostics) அப்போஸ்தலர்கள் மற்றும் இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களைத் தொகுத்து சுவிசேஷங்ககளாக  எழுதினார்கள். இவர்களுடைய எழுத்துக்களை (apocryphal writings) சந்தேகத்துக்கு¡¢யவை என்று கிறிஸ்தவசபையினர் தள்ளிவிட்டனர். 'எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்துநலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்என்று புதிய ஏற்பாட்டில் 1 தெசலோனிக்கேயர் 5: 21 ல் பவுலால் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில்சபைக்கு உட்பட்டவர்கள் கேள்வி கேட்கமுடியாத நிலை ஏற்பட்டது.

 

இரண்டாம் நூற்றாண்டில்யூதர்களின் சட்டதிட்டங்ககளுக்கு எதிர்ப்பு தொ¢வித்துவந்த ஜஸ்டின் மார்ட்டியர் (Justin Martyr) என்ற பாதி¡¢ தி¡¢த்துவக் கொள்கையைப் பின்வருமாறு விளக்கினார்: பிதாகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மற்றும் பா¢சுத்த ஆவி. இம்மூவரும் இணந்து தி¡¢த்துவமாயிருக்கின்றனர் (Justin Martyr’s Apology 61. 3). கி.பி. 185 -254 ல் அலக்சாண்ட்¡¢யா நகரத்தில் வாழ்ந்துவந்த ஓ¡¢ஜென் (Origen) என்ற கிறிஸ்தவ மதவியல் அறிஞர் பிதாகுமாரன் மற்றும் பா¢சுத்த ஆவி என்ற தி¡¢த்துவக் கோட்பாட்டை மிகவும் வலியுறுத்தினார். ஆதி கிறிஸ்தவ சபையும் ஏற்றுக்கொண்டது.

 

நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில்ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட கான்ஸ்டான்டைன் என்ற அரசன்பெரும்படையோடு ரோமாபு¡¢யின் மீது படையெடுத்துவந்த மேக்சன்டியஸ் (Maxentius) என்ற எதி¡¢ மன்னனை மில்வியன் பாலம் (Milvian Bridge) என்ற இடத்தில் நடைபெற்ற கடும்போ¡¢ல் வென்றான். கான்ஸ்டான்டைன் யுத்தம் தொடங்குமுன் ஒரு கனவுக்காட்சியைக் கண்டதாகயுத்தம் முடிந்தபின் கூறினான். அதில் கிறிஸ்துவின் பெயா¢லுள்ள முதல் இரண்டு கிரேக்க எழுத்துக்கள் (chi [X] and rho [P]) பொறிக்கப்பட்ட ஒரு பதாகையைக் கண்டதோடுஒரு அசா£¡¢ வாக்கு 'இந்த அடையாளத்தைக் கொண்டு நீ வெல்வாய்என்று சொன்னதையும் கேட்டான். ஆனால் கான்ஸ்டான்டைன் பேகன் மதத்தில் பிறந்துசூ¡¢யக் கடவுளை வணங்குபவன். இந்த வெற்றியின் மூலம் அவன் கிறிஸ்தவ மதத்துக்குக் கடமைப்பட்டவன் ஆனான். ஆகையால் உடனே ஒரு உத்தரவை இட்டு கிறிஸ்தவ மதத்தை ரோமசாம்ராஜ்ஜியத்தின் அதிகாரபூர்வ மதம் என்று அறிவித்தான். சுமார் பத்து ஆண்டு காலாமாய் அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்டு வந்த கிறிஸ்தவர்களுக்கு விடிவு பிறந்தது. கான்ஸ்டான்டைன் சக்கரவர்த்தி அரசியல் காரணங்களுக்காக கிறிஸ்தவ மததினருடன் இப்படி கூட்டு வைத்துக் கொண்டான்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கான்ஸ்டான்டைன் மன்னர் நைசியா (Nicaea) என்ற நகரத்தில் இருந்த அவருடைய கோடைக்கால அரண்மனையில் கிறிஸ்தவ சபையின் ஆலோசனை மன்றத்தைக் (Council of Nicaea) கூட்டுவித்தார். அதற்கு அவரே தலைமை வகித்தார். கி.பி.325 ஆம் ஆண்டு மே 20 முதல் ஜூலை 25 வரை இந்த மன்றம் நடைபெற்றுமதத்தின் நடைமுறைகளில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. மதவியலாளர்கள்பேராயர்கள்மற்றும் பாதி¡¢கள் என 318 பேர் அதில் பங்கெடுத்தனர். மிகமுக்கியமான விவாதம் தி¡¢த்துவக் கொள்கையைப் பற்றியதாக இருந்தது. ஏ¡¢யஸ் (Arius) என்ற அறிஞர்பிதாவானவர் குமாரனைப் பிறப்பித்தவர் என்றால்,  பிதா குமாரனுக்கு முன்பே இருந்திருக்கிறார் என்று தான் பொருள் கொள்ளவேண்டும். குமாரன் பிதாவுக்குக் கீழ்ப்பட்டவரேஎனவே இருவரும் ஒன்றாக மாட்டார்கள் என்று வாதிட்டார். இயேசுவே பிதா என்னிலும் பொ¢யவர் என்று சொல்லியிருக்கிறார் என்று மறைநூற்களிலுள்ள பல ஆதாரங்களை எடுத்துவைத்தார். ஏதனேசியஸ் (Athanesius) என்ற பாதி¡¢ இயேசுவும் பிதாவும் ஒருவரேபிதாவின் வார்த்தைதான் குமாரன்அவர் மூலமாகவே சிருஷ்டி நடைபெற்றது என்று தி¡¢த்துவக் கொள்கைக்கு சார்பாக பல ஆதாரங்களைக் கூறினார். இறுதியில் தி¡¢த்துவக் கொள்கையே வாக்கெடுப்பில் வென்றது. ஏ¡¢யசும் அவருடைய இரண்டு கூட்டாளிகளும் தவிற அனைவரும் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். ஏ¡¢யஸ் நாடு கடத்தப்பட்டார். இருப்பினும் பல மதத்தலைவர்களுக்கு குழப்பம் நீடித்ததால்சர்ச்சுகளில் பழைய போதனைகளையே செய்து வந்தார்கள். நைசியா ஆலோசனை மன்றத்துக்குப் பின் 56 வருடங்கள் தி¡¢த்துவக் கொள்கையில் குழப்பநிலையே நீடித்தது. முக்கியமாக தி¡¢த்துவத்தில்  பா¢சுத்த ஆவியின் தகுதி என்ன என்று யாருக்கும் தொ¢யவில்லை.

 

தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் பா¢சுத்த ஆவி என்றால் என்னவென்று தெர்¢யாமல் குழம்பியிருந்தார்கள். அது கடவுளின் மற்றொரு பெயரா அல்லது அதற்கும் மேலாக தனியொரு ஆளா (person)? நசியன்ஸ் (Naziianz) நகரத்தின்  பேராயரான கி¡¢கோ¡¢ (Gregory) என்பவர், 'சிலர் பா¢சுத்த ஆவியை கடவுளின் 'இயக்கம்' (activity) என்று நம்புகின்றனர்வேறு சிலர் அதை ஒரு படைப்பு என்றும் (ceature), சிலர் அதுவும் ஒரு கடவுள்தான் என்றும்பிறரோ என்ன சொல்லி அழைப்பது என்றும் தொ¢யாமல் தவித்தனர்என்றும் எழுதுகிறார் (Karen Amstrong, A History of God, p 55). பவுல் எபேசு பட்டணத்துக்கு வந்துஅங்கே சில சீடரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது பா¢சுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பா¢சுத்த ஆவி உண்டென்று நாங்கள் கேள்விப்படவேயில்லை என்றார்கள்.  (அப்போஸ்தலருடைய நடபடிகள் 19: 2). "இப்போதுதான் என் தாயான பா¢சுத்த ஆவி என்னை என் தலைமயிர்களில் ஒன்றைப் பிடித்துத் தூக்கி தாபோர் (Tabor) என்ற மலையின்மேல் கொண்டு சென்றாள்" என்று இயேசு சொல்வதாக  புறந்தள்ளப்பட்ட எபிரேயா¢ன் சுவிசேஷத்தில் (Gospel of Hebrews) 31 ஆம் சுவடியில் சொல்லப்பட்டுள்ளது. 8 வது சுவடியில் பா¢சுத்த ஆவி இயேசுவை என் குமாரன் என்று சொல்கிறது. ஜெகோவாவை பிதா என்று சொல்வதால்  ஆண் என்று பைபிள் நிறுவுகிறது. ஆனால் பா¢சுத்த ஆவி மா¢யாளைக் கர்ப்பமுறச் செய்ததினால் அவரை ஆண் என்று சொன்னாலும்இயேசு பா¢சுத்த ஆவியைத் தன் தாய் என்று சொல்வதால் பா¢சுத்த ஆவி பெண்ணாக இருப்பாரோ என்ற சந்தேகம் பல ஆண்டுகள் கிறிஸ்தவ சபையினா¢டையே நிலவியது. பல கிறிஸ்தவ மறையிலாளர்கள் பா¢சுத்த ஆவியை தி¡¢த்துவ மூர்த்திகளில் பெண்பிரதிநிதியாகவே கருதினர்.

 

மத்தேயு 3: 1 ஆம் வசனத்தில்யோவான் ஸ்நானகன் இயேசுவைப் பற்றிக் கூறும்போது, 'நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார். அவர் பா¢சுத்த ஆவியினாலும்அக்னியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்என்று சொல்லுகிறார். இங்கே பா¢சுத்த ஆவியும் அக்னியும் சமமாக ஒப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியை விட பா¢சுத்த ஆவி உயர்ந்ததில்லைபா¢சுத்த ஆவி அக்னிக்குச் சமமானதுதான் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று சமமானவையாக பைபிள வாசகங்களிலே சொல்லப்பட்டிருக்கபஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி இறைவனின் சிருஷ்டி என்று நமக்குத் தொ¢யும்அப்படியானால் பா¢சுத்த ஆவி யாருடைய சிருஷ்டி?

 

தண்ணீர் ஆவிகளுக்கு¡¢ய ஒரு வாசஸ்தலம் என்பது பண்டைக்கால யூதர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை எப்படி ஏற்பட்டது என்று ஆராய்வோமானால் வியப்பு மேலிடும். யூதர்களுக்கு காற்று (wind), மூச்சு (breath), ஆவி (spirit), ஆத்துமா (soul), பிசாசு (ghost) 

எல்லாமே ஒன்றுதான். Spirit என்ற ஒரே வார்த்தையால்தான் இவை அனைத்தும் அறியப்பட்டது. கிரேக்கமொழியில் pneuma என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அறிவியல் வளர்ச்சி ஏற்படுமுன் அவர்கள் தண்ணீரைச் சூடாக்கினால் உண்டாகும் நீராவியையும் , ghost என்று சொல்லப்படும் ஆவியையும் ஒன்றாகக் கருதினர். ஆகையால்தான் சிருஷ்டியைப் பற்றி விவா¢க்கும்போது 'தேவ ஆவியனவர்  ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்என்று எழுதியிருக்கிறார்கள் (ஆதியாகமம் 1: 2). அதாவது தேநீர் கிண்ணத்தின்மேல் அசைவாடி எழும்பும் நீராவியைப்போல் கடவுளுடைய ஆவி அசைந்துகொண்டிருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

 

மாற்கு 5: 1 முதல் 21 வரையுள்ள வசனங்களில் இயேசு கடல் வழியாக கதரேனருடைய நாட்டில் வந்து படகைவிட்டு இறங்கும்போது அசுத்த ஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறை பகுதிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவன் இயேசுவைப் பணிந்து உன்னதமான தேவனுடைய குமாரனேநீர் என்னை வேதனைப் படுத்தாதபடிக்கு தேவன் மீது ஆணை என்றான். அவர் அசுத்த ஆவியேஇவனைவிட்டு நீ போஉன் பெயர் என்ன  என்றவுடன் அவன் அவரை நோக்கி நான் ஒருவரல்லநாங்கள் அநேகராயிருக்கிறோம் அதனால் என்பெயர் லேஜியன் (legion) என்று பதிலுரைத்துதங்களை அந்தப் பகுதியிலிருந்து துரத்திவிட வேண்டாம் என்று வேண்டிக்கொண்டான். அங்கே பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. அந்தப் பிசாசுகள் அவா¢டம் பன்றிகளுக்குள்ளே தங்களை அனுப்பும்படி வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்த்வுடன் அவை அந்த மனிதனை விட்டுப்போய் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அங்கே மேய்ந்துகொண்டிருந்தன. அவை அனத்தும் பிசாசுகள் புகுந்ததும் ஓடிப்போய் கடலில் விழுந்து மாண்டன. அந்த ஆவிகள் தங்களைப் பன்றிகளுக்குள் செல்ல இயேசுவிடம் அனுமதி கோ¡¢யதன் காரணம் தங்களுக்குப் பாதுகாப்பான வாசஸ்தலமான தண்ணீ¡¢ல் சென்று விழுவதற்காகவே. சிருஷ்டிக்கு முன்னால் தேவனுடைய ஆவியும் அவ்வாறேவானத்தையும்பூமியையும் படைப்பதற்கு முன்பே எற்கனவே படைக்கபட்டிருந்த

தண்ணீ¡¢ன்மேல் அசைந்து கொண்டிருந்ததாக எழுதப்பட்டுள்ளது!

 

மா¢யாளிடம் தேவதூதன்: பா¢சுத்த ஆவி உன்மேல் வரும்உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும் (over shadow) என்று கூறுகிறான் (லூக்கா 1: 35). எனவே பா¢சுத்த ஆவிக்கு உருவமில்லை என்று பொதுவாகக் கூறினாலும்பா¢சுத்த ஆவி நீராவியைப் போல் கண்ணால் பார்க்கக்கூடியதாகவும் (ஆதியாகமம் 1: 2), வெளிச்சம் ஊடுருவாமல் அதன் நிழல்ஒரு மேகத்தின் நிழலைப்போல் கீழே விழக்கூடியதாகவும் இருக்கிறது என்பது பைபிள் வாசகங்கள் மூலம் அவற்றை எழுதியவர்களின் நம்பிக்கைகள் தெளிவாகிறது. இயேசு யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றபோது  பா¢சுத்த ஆவி புறா வடிவத்தில் வந்து இயேசுவின் தலைமேல் இறங்கியதாக சுவிசேஷங்களிலும்அதே பா¢சுத்த ஆவி அக்கினியின் நாவுகள் போல் இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவர் மேலும் இறங்கியதாகஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 2,3 வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது. பா¢சுத்த ஆவிக்கு பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வடிவங்கள் கேலிக்கு¡¢யதாக இருக்கிறதுயாராலும் நம்ப முடியாத வேடிக்கை என்றும் தாமஸ் பெய்ன் (Thomas Paine) என்ற மறைஇயல் ஆராய்ச்சியாளர் தன் பகுத்தறிவின் காலம்' (Age of Reason, p. 148) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

கி.பி.381 ல் கான்ஸ்டான்டினோபிள் (Constantinople) நகரத்தில் கூடிய ஆலோசனை மன்றத்தில்தான் பா¢சுத்த ஆவியும்பிதா மற்றும் குமாரன் போல ஒருவர்தான் (person) என்று முடிவு செய்தார்கள். அதன் பின்புதி¡¢த்துவக் கோட்பாடு மறைநூற்களில் இல்லை என்றாலும் வாய்மொழியாகப் பரப்பப்பட்டது. இவ்வாறு வாக்கெடுப்பின் மூலம் நிறுவப்பட்டதுதான் தி¡¢த்துவக் கோட்பாடு. இயேசுவுக்கு முன்பு பா¢சுத்த ஆவியும்ஆபிரகாமுக்கு முன்பு தேவதூதர்களும் இருந்ததற்கு பைபிளில் ஆதாரம் இல்லை.

 

"நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கிபிதா குமாரன் பா¢சுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்" என்று இயேசு தன் சீடர்களுக்குச் சொல்வதாக மத்தேயு 28: 19 ல் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய இயேசுவின் கட்டளையில் "என் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்" என்ற வாசகத்தைக் கத்தோலிக்க கிறிஸ்தவ சபை வி¡¢வாக்கம் செய்து பிற்காலத்தில் இடைச்சேர்க்கை செய்திருப்பதாக எட்மன்ட் ஷ்லிங்க் (Edmunt Shlink) என்ற மறையியலாளர் தன்னுடைய 'ஞானஸ்நானக் கோட்பாடுஎன்ற (the Doctrine of Baptism, p28) நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 'டிண்டேல் புதிய ஏற்பாட்டு உரை' (The Tyndale New Testament Commentaries,I,275) என்ற நூலிலும்வில் ஹெல்ம் பௌசெட் (Wilhelm Bousset) எழுதிய 'கி¡¢யோஸ் கிறிஸ்தவம்' (Krios Christianity, p295) என்ற நூலிலும் பிதா குமாரன் பா¢சுத்த ஆவி என்ற வார்த்தைகள் பிற்கால இடைச்சொருகல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம் (The Catholic Encyclopedia, Vol 2, p 263) என்ற நூலிலும்அகில உலக ஸ்டான்டர்ட் விவிலியக்  கலைக்களஞ்சியத்திலும் (The International Stantard Bible Encyclopedia,

p 2637) அவ்வாறே உள்ளது. மேலும் எருசலேம் பைபிள் (The Jerusalem Bible), மற்றும் பல ஆய்வு நூற்களிலும் தி¡¢த்துவக்கோட்பாட்டை இயேசுவின் வாயிலிருந்து வருவதாகப் பிற்காலத்தில் இடைச்சொருகல் செய்துள்ளனர் என்றே கூறபட்டுள்ளது. இயேசுவின் இந்தக் கட்டளையைப் பேதுரு நோ¢ல் பெற்றுக்கொண்டார் எனில்அவர் உபதேசம் செய்யும்போது பிதாவையும் பா¢சுத்த ஆவியையும் பற்றிச் சொல்லாமல்: "இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று ஏன் சொல்கிறார்? (அப்போஸ்தலர் 2:38). பைபிளில் பதில் இல்லை

 

தி¡¢த்துவக் கொள்கை உருவானபின்பு கிறிஸ்தவர்கள் மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்பினர். அவர்களுக்குப் பிறமதத்தினர் போலபெண்தெய்வ வழிபாடு தேவைப்பட்டது. அவர்கள் இயேசுவின் தாயாகிய மா¢யாளை 'கர்த்தா¢ன் தாயார்' (Lord’s Mother) என்று வணங்கத் தொடங்கினர். அதன் பின் புனிதர்களையெல்லாம் கடவுளர் நிலைக்கு உயர்த்தி விக்கிரகங்கள் செய்து ஆலயத்தில் வைத்து வழிபடத் தொடங்கினர். பதினாறாம் நூற்றாண்டுவரை இந்த நிலையே இருந்து வந்தது. பின்னர் மார்டின் லூதர் (Martin Luther) தி¡¢த்துவக் கோட்பாட்டின்படி பிதாகுமாரன்பா¢சுத்த ஆவி தவிர வேறு யாரையும் வணங்கலாகாது என்ற கொள்கையை வலியுறுத்திபுரோடஸ்டன்ட் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்து  கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திலிருந்து பலரையும் பி¡¢த்துக் கொண்டு போனார். இன்று கிறிஸ்தவ மதம் ஒன்றுக்கொன்று விரோதம் பாராட்டும் நூற்றுக்கணக்கான பி¡¢வுகளாகப் பி¡¢ந்து கிடக்கிறது.

 

முதல் மூன்று சுவிசேஷங்களும் இயேசுவைக் 'கடவுளின் குமாரன்' (Son of God) என்று கொண்டாடினாலும்யோவானின் சுவிசேஷம் மட்டுமே அவரைக் கடவுளுக்கு நிகரானவராக அல்லது கடவுளாகவே உயர்த்துகிறது. ஆனால் யூதர்கள் கடவுளின் குமாரன் என்றால் கடவுளின் சொந்த புத்திரன் என்று கருதுவதில்லை. கடவுளின் அருள் பெற்றவர்கடவுளுக்கு நெருக்கமானவர்அவர் மூலம் கடவுளின் சித்தம் பூமியில் நிகழும் என்றுதான் கருதினார்கள். யூதர்களின் வேதமான பழைய ஏற்பாட்டில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. யோவானின் சுவிசேஷத்தில் இயேசுவைக் 'கடவுளுடைய வார்த்தை' (Word of God) என்றும் அவர் மூலம்தான் இப்பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. "ஆதியிலே வார்த்தை இருந்ததுவார்த்தை தேவனோடிருந்ததுவார்த்தை தேவனாயிருந்தது"  (யோவான் 1: 1 - 14).

 

உபநிஷத்துக்களிலும்பகவத் கீதையிலும் வார்த்தை பரப்பிரம்மமாக இருக்கிறது' (அக்ஷர பிரம்மம்) என்று சொல்லப்பட்டதின் பொருள் என்னவெனில் பரப்பிரம்மம் (Absolute) உருவமும்நாமமும் இல்லாமல் நாதமாக இருக்கிறதுஅந்த நாதம் 'ஓம்என்ற பிரணவம் அல்லது வார்த்தையாக இருக்கிறது. உருவமும் நாமமும் இல்லாத ஏகதெய்வத்தையே (Impersonal God) இந்துக்களின் மறைநூற்களும் சொல்லுகின்றன என்றால் ஏன் இந்துக்கள் பல தெய்வங்களை வணங்குகிறார்கள் என்ற கேள்வி எழலாம். மதங்களின் வரலாற்றை  ஆராய்ந்துபார்த்தால் மனிதர்கள் அவரவர் தங்கள் மனப்பாங்குக்கும்,தேவைகளுக்கும் ஏற்ப தங்கள் தெய்வங்களை (Personal Gods) வடிவமைத்துக்  கொண்டார்கள் என்பதே உண்மை. இந்துமதம் மட்டுமல்லகிறிஸ்தவமதத்திலும் அதுதான் நடந்தது. புரொடெஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கு யூதர்களின் ஜெகோவா மட்டும் போதவில்லைஇயேசு கிறிஸ்துவும்பா¢சுத்த ஆவியும் கூடுதலாகத் தேவைப்பட்டனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு இந்த மூன்றுபேர் போதாதென்று கன்னி மா¢யாளும்மைக்கேல் போன்ற தேவதூதர்களும்அப்போஸ்தலர்களும்இன்னும் ஏராளமான புனிதர்களும் (Saints) தெய்வங்களாகத் தேவைப்படுகின்றனர்.

 'ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்

திருநாமம் பாடித் தெள்ளோணம் கொட்டாமோ"

 என்ற மாணிக்கவாசகா¢ன் திருவாசக வா¢களை இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard