Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 33. JESUS Seminar -இயேசு கருத்தரங்கம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
33. JESUS Seminar -இயேசு கருத்தரங்கம்
Permalink  
 


இயேசு கருத்தரங்கம்

 

ராபர்ட் பங்க் (Robert Funk) என்ற கிறிஸ்தவ மறையியல் அறிஞர் 1985 மார்ச் மாதம் அமொ¢க்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் பெர்க்லி (Berkeley) என்ற இடத்திலுள்ள பசிபிக் இறையியல் கல்லூ¡¢யில் (Pacific School of Religion) ஒரு கருத்தரங்கத்தை ஆரம்பித்து நடத்தினார். இந்த கருத்தரங்கம் 'இயேசு கருத்தரங்கம்' (Jesus Seminar) என்று வழங்கப்பட்டது. இதன் நோக்கம் என்னவென்றால், சுவிசேஷங்களில் இயேசு  சொன்னதாகக் கூறப்படும் வாசகங்களில் எத்தனை உண்மையாகவே அவரால் பேசப்பட்டவை, எத்தனை சுவிசேஷ ஆசி¡¢யர்களின் கற்பனையில் உதித்தவை என்பதைக் கண்டறிவதேயாகும். இந்த கருத்தரங்கத்தில் புதிய ஏற்பாட்டில் அங்கீகா¢க்கப்பட்டுள்ள நானகு சுவிசேஷங்களும், அங்கீகா¢க்கப்படாமல் புறந்தள்ளப்பட்ட சுவிசேஷங்களும் மற்றும் இது சம்பந்தமான எல்லா மறையியல் ஆவணங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தக் கருத்தரங்கம் ஆறு ஆண்டுகள் பலமுறை கூடி விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சுமார் முப்பது மறையியல் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

 

எப்படி முடிவுகள் எடுப்பது என்பதற்கு ஒரு திட்டம் வைத்திருந்தனர். இயேசு பேசிய ஒவ்வொரு விஷயத்தையும் விவாதித்தபின் கூடியிருந்த அறிஞர்களிடையே வாக்கெடுப்பு நடந்தது. அவர்களுக்கு சிவப்பு, இளஞ்சிவப்பு (Pink), சாம்பல் மற்றும் கறுப்பு என நான்கு வண்ணங்களில் கொடிகள் தரப்பட்டிருந்தன. இயேசு நிச்சயமாக இந்த வாசகங்களைச் சொல்லியிருப்பார் என்று நினைப்பவர்கள் சிவப்புக்கொடியை உயர்த்திக்காட்டுவர். இந்த வாசகங்களுக்கும்  இயேசுவின் வார்த்தைகளுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது போலிருக்கிறது என்பவர்கள் இளஞ்சிவப்பு வண்ணக்கொடியையும், இவைகள் இயேசுவின் வார்த்தைகளாக இருக்கமுடியாது, ஆனால் இவைகளில் அவருடைய வார்த்தைகளின் பிரதிபலிப்பு உள்ளது என்பவர் சாம்பல் நிறக்கொடியையும், இவை நிச்சயமாக இயேசுவின் வார்த்தைகள் இல்லை என்பவர் கறுப்பு நிறக்கொடியையும் உயர்த்திக்காட்டுவர். இவ்வாறு ஆறு ஆண்டுகள் இந்த கருத்தரங்கம் நிகழ்ந்து முடிவுக்கு வந்தது.

 

இயேசு கருத்தரங்கத்தில் மேற்கூறிய ஆய்வுடன் சேர்த்து சுவிசேஷங்களைப் புதியதாக ஒரே புத்தகமாக மொழிபெயர்க்க வேண்டும் என்ற பணியும் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களுடன், புறந்தள்ளப்பட்ட சுவிசேஷங்களில் ஒன்றான தோமாவின் சுவிசேஷத்தையும் (Gospel of Thomas) அதன் கருத்தாழம் கருதி அறிஞர்கள் ஒருமனதாகச் சேர்த்துக்கொண்டனர். புதிய மொழிபெயர்ப்பு சுவிசேஷம் 'அறிஞர் தொகுப்பு' (Scholars’ Version) என்று அழைக்கப்படுகிறது. இயேசு கருத்தரங்கத்தின் முடிவுகள் 1993 ல் 'ஐந்து சுவிசேஷங்களும் இயேசுவின் நம்பத்தகுந்த வார்த்தைகளின் தேடலும்' (The Five Gospels: The Search for the Authentic Words of Jesus) என்ற பெயா¢ல் ராபர்ட் பங்க் (Robert Funk) மற்றும் ராய் டபிள்யு. ஹ¥வர் (Roy W. Hoover) என்ற மறையியல் அறிஞர்களால் வெளியிடப்பட்டது.

 

இந்த இயேசு கருத்தரங்க ஆய்வுகளின் இறுதியில்  நான்கு சுவிசேஷங்களிலும் இயேசு சொன்னதாக எழுதப்பட்டுள்ள  உரைகளில் 82 விழுக்காடு அவர் உண்மையிலேயே பேசியவை அல்ல என்ற முடிவுக்கு வந்தனர். இதில் ஆச்சா¢யம் என்னவென்றால் இந்த முடிவுக்கு வந்தவர்கள் அனைவருமே கிறிஸ்தவ மறையியல் அறிஞர்கள்.

 

 

உலகின் முடிவுநாள் அல்லது நியாயத்தீர்ப்பு நாளில் மக்கள் அவரவர் பாவபுண்ணியத்துகேற்ப  நியாயம் தீர்க்கப்படுவர் என்பதும், பரலோகராஜ்யம் விரைவில் வரும் என்பதும் யோவான் ஸ்நானகனின் கருத்தியலாக இருந்தது. இயேசுவுக்கு முன்பே யோவான் ஸ்நானகன் நியாயத்தீர்ப்புநாளைக் குறித்து மக்கள் மத்தியில் பிரசங்கித்து, அவர்களை மனம் திருந்தி பாவமன்னிப்பு பெறுமாறு அழைத்து ஞானஸ்நானம் அளித்துவந்தார் (மத்தேயு 3: 3; லூக்கா 3: 6 -15).  இயேசு  யோவான் ஸ்ஞானகனின் சீடர்களில் ஒருவராக இருந்து இந்த கருத்தியலை ஏற்று, பின்னர் யோவானின் வனாந்தர வாழ்க்கை பிடிக்காமல் பி¡¢ந்து வந்துவிட்டார் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

 

யோவானின் இரண்டு சீடர்களும் அவரைப் பி¡¢ந்து இயேசுவுடன் வந்துவிட்டனர். அவர்களின் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனான அந்திரேயா என்பவன் (யோவான் 1: 37, 40). யோவானின் துறவு வாழ்க்கை பிடிக்காமல் நகர வாழ்க்கைக்கு வந்த இயேசுவின் கொள்கை வேறு மாதி¡¢ இருந்தது. அவர் இலஞ்சம் பெறுகிற வா¢வசூலிப்பவர்களுடனும், தீவினைகள் செய்து மக்களிடம் அவப்பெயர் பெற்றவர்களுடனும் சேர்ந்து உணவு மற்றும்  மது அருந்துவதுமாக இருந்தார். பரலோகராஜ்யத்தைப் பற்றியும், வாழ்வியல் ஒழுக்கங்களையும், நியாயதர்மங்களைப் பற்றியும்  மக்களுக்கு உபதேசித்துவிட்டுச் சொந்த வாழ்க்கையில் அவர் இவ்வாறு நடந்துகொள்வதைப் பார்த்து பா¢சேயர் கேள்வி கேட்டதற்கு, இயேசு: பிணியாளர்களுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நான் நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திருந்த அழைக்கவந்தேன்என்று பதிறுத்தார் ( மாற்கு 2:17). இயேசு உலகியலைச் சார்ந்த பழக்கவழக்கங்களைக் கைகொண்டு அதேநேரம் அத்ற்கு எதிர்மறையான மறுமை வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளையே எப்போதும் உபதேசம் செய்து தேசாந்தி¡¢யாக வாழ்ந்தார் என்ற ஒரு மாறுபாடான  சித்திரத்தையே முதல் மூன்று ஒத்தமை சுவிசேஷங்களும் (synoptical gospels) வழங்குகினறன.

 

சுவிசேஷ ஆசி¡¢யர்கள் காதுவழிச் செய்திகளாகக் கேட்டறிந்த இயேசுவின் வரலாற்றுச் சம்பவங்களுடன் அற்புதங்கள், பிசாசு விரட்டுதல் போன்ற கற்பனை வர்ணனைகளைச் சேர்த்து, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த தீர்ககத்தா¢சிகள் அந்தந்த காலத்து அரசியல் வாழ்க்கையைச் சார்ந்து சொல்லிவைத்த அருள்வாக்குகளையெல்லாம் இயேசுவின் வழ்க்கையோடு இணைத்துத் தெய்வீகச் சாயம் பூசி அவரை ஒரு தேவபுருஷனாகக் காட்டுவதையே நோக்கமாகக் கொண்டு எழுதிவைத்துள்ளனர். இப்படிப்பட்ட இயற்கைக்கு மாறான அற்புதங்களுக்கும், புராணக்கதைகளுக்கும் மேற்கத்திய நாடுகளிலுள்ள

அக்கால மக்கள் ஏற்கனவே பா¢ச்சயப்பட்டிருந்தனர். ஆகையால் அவர்கள் சுவிசேஷங்களை அப்படியே ஏற்றுக்கொண்டதில் ஆச்சா¢யமில்லை.

 

மாற்குவின் சுவிசேஷம்தான் முதன்முதல் எழுதப்பட்ட இயேசுவின் வரலாற்று சுவிசேஷம் என்று மறையியல் வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மாற்கு இயேசுவின் சீடரான பேதுருவின் அன்புக்கு¡¢ய சீடராயிருந்ததோடு அவருடைய கிரேக்கமொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். மாற்கு இயேசுவை நோ¢ல் பார்த்தவா¢ல்லை. அவர் தன் குருவான பேதுருவிடமிருந்து கேள்விப்பட்ட செய்திகளையே தொகுத்துத் தன் கற்பனையும் சேர்த்து எழுதியிருக்கவேண்டும். பல அறிஞர்கள் கி.பி. 70 ஆம் ஆண்டு வாக்கில் (அதாவது, இயேசு மா¢த்து சுமார் 40 ஆண்டுகள் சென்றபின்னர்) வேறு யாரோ ஒருவரால் எழுதப்பட்டு பின்  மாற்குவின் பெயரால் வெளியிடப்பட்டதாகக் கருதுகின்றனர்.

 

மாற்குவின் சுவிசேஷத்தையே முதல் நூலாகக்கொண்டு மத்தேயு மற்றும் லூக்கா ஆகிய்வர்களின் சுவிசேஷங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த இரு சுவிசேஷங்களிலும் மாற்குவிலிருந்து எடுக்கப்பட்ட பல பகுதிகள் எழுத்து பிசகாமல் உள்ளன என்பதே இதற்கு சான்றாகும். மாற்குவின் சுவிசேஷம் தவிர வேறு ஒரு பெயர் தொ¢யாத சுவிசேஷத்திலிருந்தும் எடுக்கப்பட்ட ஒரே மாதி¡¢யான பகுதிகள் மத்தேயுவிலும், லூக்காவிலும் இருக்கின்றன. ஆகையால் மத்தேயுவும் லூக்காவும் எழுதப்பட்ட காலத்தில் இப்போது கிடைக்கப்பெறாத மற்றொரு சுவிசேஷம் இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அதற்கு ஜெர்மன் மொழியில் குய்ல்’ (Qulle) என்று பெயா¢ட்டிருக்கிறார்கள். ஜெர்மன் மொழியில் குய்ல்என்றால் மூலநூல் என்று பொருள் , அதைச் சுருக்கமாக ‘Q’ சுவிசேஷம் என்று அழைக்கின்றனர். மத்தேயு இயேசுவின் நேரடிச் சீடராக இருந்தவர். அவர் முதலில் வா¢வசூலிக்கும் பணியில் இருந்தவர். கி.பி. 80 முதல் 90 வரையுள்ள காலத்தில் மத்தேயுவின் சுவிசேஷம் வேறு ஒருவரால்  எழுதபட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இயேசுவின் நேரடிச் சீடரான மத்தேயு அவரே இந்த சுவிசேஷத்தை எழுதியிருப்பாராகில் அவர் இயேசுவுடனான தன் சொந்த அனுபவங்களை விடுத்து, மாற்குவின் சுவிசேஷத்தை முதல்நூலாகக் கொண்டு எழுதியிருக்கத் தேவையில்லை .

 

 

 



-- Edited by devapriyaji on Tuesday 10th of October 2017 10:24:47 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
RE: 32. JESUS Seminar -இயேசு கருத்தரங்கம்
Permalink  
 


லூக்கா யூதரல்லர். அவர் சி¡¢யா நாட்டைச் சார்ந்த அந்தியோக் (Antioch) நகரத்தவர். மருத்துவராக பணிசெய்த அவர் பவுல் அப்போஸ்தலருடைய சீடராகவும்வலிப்புநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவுலின் தனிப்பட்ட மருத்துவராகவும் இருந்தார். அவரும் பவுலைப் போலவே இயேசுவை நோ¢ல் பார்த்ததில்லை. கி.பி. 80 லிருந்து 90 வரையுள்ள காலத்தில் லூக்காவின் சுவிசேஷம் எழுதப்பட்டிருக்கிறது. லூக்காவின் சுவிசேஷமும் யூதரல்லாத மற்றொருவரால் எழுதப்பட்டு லூக்காவின் பெயா¢ல் வெளியிடப்பட்டது என்பாருமுளர். லூக்காவே அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தையும் எழுதினார் என்ற கருத்தும் நிலவுகிறது.

 

யோவானுடைய சுவிசேஷம் ஒத்தமை சுவிசேஷங்களைப்போல் கதை சொல்லுவது போல எழுதப்படாமல் நாடகபாணியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இயேசுவின் வரலாற்றைக் கூறுவதைவிட அவரைத்  தேவனுடைய குமாரன் என்று நிலைநிறுத்துவதிலேயே இலக்கு கொண்டிருக்கிறது. இயேசுவின் உவமைக்கதைகள் மற்றும் பிசாசு விரட்டிய சம்பவங்கள் முதலியவை முற்றிலும் தவிர்க்கப்பட்டுபிறவிஷயங்கள்  தத்துவா£தியில் எழுதப்பட்டுள்ளதால் இது  முதல் மூன்று சுவிசேஷங்களிலிருந்து வேறுபட்டுள்ளது. கி.பி. 105 வாக்கில் இது  எழுதப்பட்டிருக்கலாம் என்பது மறையியல் அறிஞர்களின் கூற்று. யோவான்  எழுத்தறிவு இல்லாதவன் என்று கூறப்பட்டுள்ளதால்  உயர்ந்த மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த சுவிசேஷம் நிச்சயமாக  வேறு யாரோ எழுதியதுதான் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.

 

சுவிசேஷங்கள் யாவும் தேவனுடைய அருளால் தூண்டப்பட்டு சுவிசேஷ ஆசி¡¢யர்களால் எவ்விதப் பிழையும் இல்லாமல் எழுதப்பட்டவை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

தேவனுடைய அருளால் எழுதப்பட்ட வரலாறு என்றால் அனைத்து சுவிசேஷங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் ஒரேமாதி¡¢ நடைபெற்றிருக்கவேண்டுமல்லவாஆனால் உண்மையில் அப்படி இல்லை. பல சம்பவங்கள் மாறுபாடுகளுடன் விவா¢க்கப்பட்டுள்ளன. தற்காலத்தில் எந்த சுவிசேஷத்துக்கும் மூலப்பிரதிகள் இல்லை. சுருங்கச் சொன்னால் பைபிளில் உள்ள எந்தப்புத்தகத்துக்கும் மூலப்பிரதிகள் இல்லை. சுவிசேஷங்களைப் பொறுத்தவரை அவற்றின் மிகப்பழையப் பிரதிகள் என்று சொல்லவேண்டுமானால் கிறிஸ்துவின் மரணத்துக்கு நூற்றிஎழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்டவைகளேயாகும்.  அவைகளிலும் எந்த இரண்டு பிரதிகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை. கிடைக்கப்பெற்ற கையெழுத்துப் பிரதிகள் எல்லாவற்றிலும் ஆங்காங்கே வெவ்வேறு கைகளினால் திருத்தங்கள் செய்யப்பட்டுக் காணப்படுகின்றன.

 

இங்கிலாந்தின் ஜேம்ஸ் மன்னர் ஆணைப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் கி.பி.1611 முதல்,  ஆங்கிலம் பேசும் ஐரோப்பிய நாடுகளில் அதிகாரபூர்வ மறைநூலாக வழங்கி வந்தபடியால் சுமார் இரண்டரை நூற்றாண்டுக் காலம் கிரேக்க மூலப்பிரதிகளை ஆராய்ந்து பார்ப்பது முடங்கியது. கி.பி. 1844 ல் சினாய் தீபகற்பத்திலுள்ள புனித காதா¢ன் துறவிகள் மடத்தில் (St Catherine’s Monastery) கண்டுபிடிக்கப்பட்ட 'கோடெக்ஸ் சினாய்டிகஸ்' (Codex Sinaiticus) என்ற நான்காம் நூற்றாண்டு மறைஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு கான்ஸ்டான்டின் டிஷெண்டோர்ப் (Constantin Tischendorf) என்பவர் ஒரு திருத்தப்பட்ட புதிய ஏற்பாட்டின் கிரேக்கமொழி பதிப்பை வெளியிட்டார். புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்படாமல் புறந்தள்ளப்பட்ட சுவிசேஷங்களுள் பல 1945 ல் எகிப்திலுள்ள நாக் ஹம்மடியில் கண்டுபிடிக்கப்பட்டபின் இயேசுவின் வாழ்க்கைச் சா¢த ஆராய்ச்சி பல கோணங்களில் தீவிரமடைந்தது. 1947 ல் 'சாவுக் கடல் சுருளாவணங்கள்' (Dead Sea Scrolls) கண்டுபிடிக்கப்பட்டன. அவை இயேசு மற்றும் யோவான் ஸ்நானகன் ஆகியோ¡¢ன் வாழ்வையும்அவர்களுக்கு முன்பு சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரையுள்ள எபிரேய மறைநூற்களையும் பு¡¢ந்துகொள்ள உதவியது. 

 

கையெழுத்துப்பிரதிகளில் உள்ள இயேசுவின் வரலாற்றுக்குறிப்புகளுக்கும் அச்சுஎந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின்  அச்சுப்பிரதிகளில் உள்ள வரலாற்றுக்குறிப்புகளுக்கும் வேற்றுமைகள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். மேலும் வரலாற்றின்படி அறியப்பட்டிருக்கும் இயேசுவுக்கும்விசுவாசத்தின்படி அறியப்பட்டிருக்கும் கிறிஸ்துவுக்கும் நிரம்ப வேற்றுமைகள் உள்ளன என்பது அறிஞர்களின் கூற்று. மனிதனாகப் பிறந்து வளர்ந்த ஒருவரைப் பரலோகத்திலிருந்து இறங்கிவந்த  தேவகுமாரனாக்கி  மீண்டும் பரலோகம் ஏறச்செய்துமறுபடியும் உலகமுடிவில் அவர் வருகைத்ந்து ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவார் என்ற நம்பிக்கையை கிறிஸ்தவ மக்கள் மனதில் விதைத்து அவர்களை இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கச் செய்ய நான்கு சுவிசேஷங்களும் உதவியிருக்கின்றன என்றால் மிகையாகாது.

 

இந்த நம்பிக்கையை வைத்தே கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு தடவை ஆலயத்தில் பிரார்த்தனை முடிவின்போது சொல்லுகின்ற அப்போஸ்தலருடைய நம்பிக்கை' (Apostles’ Creed) என்ற பின்வரும் உறுதிமொழி உருவாக்கப்பட்டுள்ளது.

 

"வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பரமபிதாவை நான் விசுவாசிக்கிறேன். பா¢சுத்த ஆவியினால் ஜனித்தவரும்கன்னி மா¢யாளிடத்தில் பிறந்தவரும்பொந்தி பிலாத்துவினால் பாடுகள் பட்டுசிலுவையில் அறையப்பட்டுமா¢த்துஅடக்கம் பண்ணப்பட்டுபாதாளத்தில் இறங்கிமூன்றாம் நாள் உயிர்த்தெழுந்துபரலோகம் ஏறி பிதாவின் வலது பக்கத்திலே அமர்ந்திருப்பவரும்மீண்டும் வருகை தந்து மா¢த்தோரையும் உயிரோடிப்பவர்களையும் நியாயம் தீர்க்கப்போகிறவருமாகிய பிதாவின் ஒரேபேறான குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நான் விசுவாசிக்கிறேன். பா¢சுத்த ஆவியையும்பா¢சுத்த கத்தோலிக்கத் திருச்சபையையும்புனிதர்கள் கூட்டத்தையும்பாவமன்னிப்பையும்சா£ரத்தின் உயிர்த்தெழுதலையும்நித்திய ஜீவனையும் விசுவாசிக்கிறேன். ஆமென்".

 

புரொடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் மேற்கூறிய வாசகங்களில் இறுதி வாக்கியத்திலுள்ள கத்தோலிக்கத் திருச்சபையையும்புனிதர்களையும் நீக்கிவிட்டனர். இந்த நம்பிக்கை உறுதிமொழியை உன்னிப்பாகக் கவனித்தால் அதில் இயேசுவின் வாழ்க்கைக்கும்அவருடைய போதனைகளுக்கும் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்பது புலப்படும்.  இயேசு கன்னிமா¢யாளிடதில் பா¢சுத்த ஆவிக்கு மகனாய்ப் பிறந்தார்சிலுவையில் மா¢த்தார்உயிர்த்தெழுந்தார்பின்பு பரம் ஏறினார் என்ற நான்கு விஷயங்கள்தாம் கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கை வேர்களாக இருக்கின்றன. பவுலும் இந்த விஷயங்களில் இறுதி மூன்றைப்பற்றி மட்டுமே பிரசங்கித்துவந்தார். மா¢த்து மீண்டும் உயிர்த்தெழும் கடவுள் என்பது கிரேக்க ஆதிக்கம் (Hellenistic) மிக்க மதங்களில் இருந்த பரவலான கருத்து. இந்த பேகன் மதக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுதான் கிறிஸ்தவமதம் எழுப்பபட்டுள்ளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard