Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 32. Bible contradictions - வேதாகமத்தின் எதிர்மறைகளும், முரண்பாடுகளும்


Guru

Status: Offline
Posts: 7409
Date:
32. Bible contradictions - வேதாகமத்தின் எதிர்மறைகளும், முரண்பாடுகளும்
Permalink  
 


 வேதாகமத்தின் எதிர்மறைகளும், முரண்பாடுகளும்

பைபிளில் எதிர்மறைகளுக்கும், முரண்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. அது கருத்துக்கள் சம்பந்தப்பட்டதாயினும் சா¢, பொருள் சம்பந்தப்பட்டதாயினும் சா¢, வரலாறு சம்பந்தப்பட்டதாயினும் சா¢, எந்த புத்தகத்தைத் திறந்தாலும் முரண்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. முதல் மூன்று ஒத்தமை சுவிசேஷங்களுக்கும் நான்காவது சுவிசேஷமான யோவானுக்கும், இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும், அவர் கூறியதாக அமைந்துள்ள கூற்றுகளிலும் அநேக முரண்பாடுகள் உள்ளன. புதிய ஏற்பாட்டில் பரலோகத்திலிருக்கிற பிதா என்று வர்ணிக்கப்படும் தேவனுக்கும், பழைய ஏற்பாட்டில் ஜெகோவா என்று அழைக்கப்படும் தேவனுக்கும் குணநலன்களிலும், மக்களை நடத்தும் விதத்திலும்  ஏகப்பட்ட எதிர்மறையான வித்தியாசங்கள் இருக்கின்றன. பழைய ஏற்பாட்டுத் தேவன் தான் தேர்ந்தெடுத்த யூதமக்களுக்கு மிகவும் கடுமையான சட்டதிட்டங்களை விதித்து அவற்றை மீறுபவர்களுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்குபவராக காட்சியளிக்கிறார். எப்போதெல்லாம் யூதமக்களின் மீது அவருக்குப் பி¡¢யம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அவர்களுடைய எதி¡¢களை, முதியோர், பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் சித்திரவதையும், கொலையும் செய்து ரசிப்பவராக இருக்கிறார். பக்குவமடையாத மனிதர்களுக்கு இருக்ககூடிய வெறுப்பு, பொறாமை, ¡¢ச்சல், கோபம், பழிவாங்கும் இயல்பு ஆகிய எல்லா தீயகுணங்களும் உடையவராகவும், இரத்தபலியில் விருப்பமுடையவராகவும் சித்தா¢க்கப்படுகிறார். ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுவால் பிதா என்று அழைக்கப்படும் பரலோகத்திலிருக்கிற தேவன் கருணையே வடிவானவர், பா¢சுத்தமானவர், இரக்கமும், சாந்தகுணமும் உடையவர், பலிகளை விரும்பாதவர் என்று வர்ணிக்கப்படுகிறார். இதில் எது உண்மை?

 

ஜலப்பிரளயம் உண்டாக்கி பூமியை அழிப்பதற்குமுன் தேவன் நோவாவை நோக்கி வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக ஒரு மிகப்பொ¢ய மரப்பேழையை (கப்பல்) தயார் செய்து அதில் அவன் குடும்பத்தாரையும், உலகிலுள்ள சகல ஜீவராசிகளிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடியையும் சேர்த்து ஏற்றிக்கொள்ளச் சொன்னார் (ஆதியாகமம் 6: 20). ஆனால் அடுத்த அதிகாரத்தில், சுத்தமில்லாத பிராணிகளில் ஒவ்வொரு ஜோடியும், பிற பிராணிகளிலும், மிருகங்களிலும், பறவைகளிலும் ஏழு ஏழு ஜோடிகளும் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறார் (ஆதியாகமம் 7: 2-3). ஏற்கனவே ஒவ்வொரு ஜோடியாகப் பிராணிகளையும், பறவைகளையும் தேடிக் கண்டுபிடித்த நோவா மேற்கொண்டு ஒவ்வொன்றிலும் ஆறு ஆறு ஜோடிகளைக் கண்டுபிடித்து சேர்த்து ஏழு ஏழு ஜோடிகளாக மாற்றிக்கொண்டாரா என்று தொ¢யவில்லை.

 

ஆதியாகமம் 1: 25-26: "தேவன் பூமியிலுள்ள ஜாதி ஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதி ஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் அனைத்தையும் உண்டாக்கினார். பின்பு தேவன் நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவங்களையும் ஆளக்கடவர்கள் என்றார்".

ஆதியாகமம் 2: 18-19 "தேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.தேவனாகிய கர்த்தர் சகலவிதமான மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணிலிருந்து உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன போ¢டுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்திலே கொண்டுவந்தார்".

ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் மிருகங்களையும், பறவைகளையும் படைத்துவிட்டு அதன் பின் மனிதனை தேவன் படைக்கிறார். இரண்டாம் அதிகாரத்தில் மனிதனை முதலில் படைத்துவிட்டு, அவன் தனியாக இருக்கிறானே என்று தேவன் அவனுக்குத் துணையாக மிருகங்களையும், பறவைகளையும் படைப்பதாக முரண்பாட்டுடன் கூறப்பட்டுள்ளது.

 

ஆதியாகமம் 1: 20: "பின்பு தேவன் நீந்தும் ஜந்துக்களையும், பூமியின்மேல வானம் என்கிற ஆகாயவி¡¢விலே பறக்கும் பறவைகளையும் ஜலமானது திரளாய் ஜனிப்பிக்கக்கடவது என்றார்".

ஆதியாகமம் 2: 19: "தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவிதமான மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கினார்".

முதல் அதிகாரத்தில்  தேவன் தண்ணீ¡¢லிருந்து பறவைகளைத் ஜனிப்பித்ததாக எழுதிவிட்டு, இரண்டாம் அதிகாரத்தில் பறவைகளை மண்ணிலிருந்து உருவாக்கினதாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதியாகமம் 30: 37-39: "பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உ¡¢த்து, தான் உ¡¢த்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்கவரும் கால்வாய்களிலும், தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான். ஆடுகள் தண்ணீர்  குடிக்க வரும்போது சினையாவதுண்டு. ஆடுகள் அந்த கொப்புகளுக்கு முன்பாக சினையுற்றதால், அவைகள்  கலப்பு நிறமுள்ளதும், புள்ளியுள்ளதும், வா¢யுள்ளதுமான குட்டிகளைப் போட்டது". இந்த நிகழ்ச்சி மனிதன் இதுவரை அறிந்திராத அறிவியல் அதிசயமாக இருக்கிறது!

கீழ்க்கண்ட எதிர்மறையான மற்றும் முரண்பாடான வசனங்களை வாசிப்பவருக்குப் பைபிளிலுள்ள புத்தகங்களின் ஆசி¡¢யர்கள் எவ்வளவு குழப்பமான நிலையில் அதே பைபிளிலுள்ள பிறபுத்தகங்களிலுள்ள கருத்துக்களைப் பொருட்படுத்தாமல் தங்கள் நூல்களை எழுதியிருக்கிறார்கள் என்பது தொ¢யவரும்.

ரோமர் 15: 33: "சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும்கூட இருப்பாராக".

யாத்திராகமம் 15: 3: "தேவன் யுத்தத்தில் வல்லவர். ஜெகோவா என்பது அவருடைய நாமம்".

யாத்திராகமம் 17: 16: " அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்திற்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தா¢ன் யுத்தம் நடக்கும்".

 

சங்கீதம் 145: 8-9: "கர்த்தர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கி¡¢யைகளின்மேலும் உள்ளது".

ஜெரேமியா 14: 14: "பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார்".

 

மத்தேயு 28: 1: "ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மா¢யாளும் மற்ற மா¢யாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.

மாற்கு 16: 1-2: வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூ¡¢யன் உதயமாகிறபோது, மகதலேனா மா¢யாளும், யாக்கோபின் தாயாகிய மா¢யாளும், சலோமி என்பவளும் அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படிக்கு அவைகளை வாங்கிக்கொண்டு கல்லறையினிடத்தில் வந்தார்கள்'. யோவான் 20: 1: "வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மா¢யாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள்".

மகதலேனா மா¢யாள் தனியாகக் கல்லறையைப் பார்க்க வந்தாளா அல்லது ஒருவர் துணையோடு வந்தாளா அல்லது  இருவர் துணையோடு வந்தாளா என்பதில் சுவிசேஷ ஆசி¡¢யர்களுக்கிடையே குழப்பம்.

 

யோவான் 10: 30: "நானும் பிதாவும் ஒருவரே".

யோவான் 14: 28: "நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புடையவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள். ஏனெனில் என் பிதா என்னிலும் பொ¢யவராயிருக்கிறார்".

 

1 இராஜாக்கள் 4: 26: "சாலமோனுக்கு நாற்பதாயிரம் இரதக்குதிரை லாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தனர்". (ஜேம்ஸ் அரசா¢ன் ஆங்கிலத் தொகுப்பிலும், மூல நூலாகிய எபிரேயமொழி பழைய ஏற்பாட்டிலும் நாற்பதாயிரம் குதிரை லாயங்கள் என்றே இருக்கிறது. தமிழ் பைபிளில் நாலாயிரம் என்று திருத்தி மொழியாக்கம் செய்துள்ளார்கள்)

2 நாளாகமம் 9: 25: "சாலமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்"

 

நீதிமொழிகள் 4: 7: "ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி, என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்".

பிரசங்கி 1: 18: "அதிக ஞானத்திலே அதிகச் சலிப்புண்டு, அறிவு பெருத்தவன் நோவுபெருத்தவன்".

 

ஏசாயா 14: 21-22: "அவர்கள் புத்திரர் எழும்பித் தேசத்தைச் சுதந்தா¢த்துக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர்களைக் (புத்திரர்களை) கொலைசெய்ய ஆயத்தம் செய்யுங்கள். நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்".

உபாகமம் 24: 16: "பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காக பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும்".

 

லேவி11: 6: "முயலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு வி¡¢குளம்பில்லை, அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்".

முயல் அசைபோடுகிற பிராணி அல்ல என்பது லேவியராகமம் எழுதிய ஆசி¡¢யருக்குத் தொ¢ந்திருக்கவில்லை.

 

லேவி 11: 6:23: "பறக்கிறவைகளில் நான்குகால்களால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக".

இங்கே  பறக்கும் பூச்சிகளைக் (flying insects) குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் பூச்சிகளுக்கு எட்டுகால்கள் உண்டு என்ற உண்மை எழுதியவருக்குத் தொ¢யவில்லை.

 

சங்கீதம் 58: 8: "கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக, ஸ்தி¡£யின் முதிராப்பிண்டத்தைப்போல் சூ¡¢யனைக் காணாதிருப்பார்களாக".

நத்தை கரைந்துபோகிறதில்லை என்பதுதான் உண்மை. இப்படி பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல செய்திகள் பைபிளில் சொல்லப்பட்டுள்ளன.

 

ஏசாயா 40: 22: " அவர் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர், அதன் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள். அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகள் குடியிருப்பதற்கான கூடாரமாக் வி¡¢க்கிறார்".

பூமி ஒரு வட்டமான தட்டு போலவும், அதன்மேல் கூடாரம் போல் வானம் வி¡¢க்கப்பட்டு கவிக்கப்பட்டிருப்பதாகவும் அக்காலத்து யூதர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். பூமி உருண்டை (sphere) வடிவானது என்று அவர்களுக்குத் தொ¢யாது. மூலமொழியான எபிரேய பைபிளிலும், ஜேம்ஸ் அரசர் ஆங்கிலமொழி பைபிளிலும் பூமி வட்டம் (circle) என்றே இருக்கிறது. ஆனால் தமிழ் பைபிளில் 'அவ்ர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறார்" என்று வட்டத்தை, உருண்டை என வேண்டுமென்றே மாற்றி மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். மேலும் மத்தேயு 4: 8 ல் 'பிசாசு இயேசுவை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. பூமி தட்டையான ஒரு வட்டமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

 

பிரசங்கி 1: 7: "எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது, தங்கள் உற்பத்தியான் இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்". எப்படி திரும்பும் என்ற அறிவியல் உண்மை எழுதியவருக்குத் தொ¢யாது.

 

எண்ணாகமம் 12: 3: "மோசேயானவன் சகல மனிதா¢லும் சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்".

எண்ணாகமம் 31: 14-18: "மோசே யுத்தத்திலிருந்து வந்த சேனாதிபதிகள்மேல் கோபங்கொண்டு, அவர்களை நோக்கி ஸ்தி¡£கள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷ சம்போகத்தை அறிந்த எல்லா ஸ்தி¡£களையும் கொன்றுபோடுங்கள். ஸ்தி¡£களில் புருஷ சம்போகத்தை அறியாத எல்லாப் பெண்களையும் உங்களுக்காக (நீங்கள் சுகிக்கும்படி) உயிரோடே வையுங்கள்" என்று சொல்லுகிறார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7409
Date:
RE: 32. Bible contradictions - வேதாகமத்தின் எதிர்மறைகளும், முரண்பாடுகளும்
Permalink  
 


மத்தேயு 27: 5-7: "யூதாஸ் ஸ்கா¡¢யோத்து அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டுபுறப்பட்டுப்போய் நாண்டுகொண்டு செத்தான். பிரதான ஆசா¡¢யர் அந்த வெள்ளிக்காசை எடுத்து இது இரத்தக்கிரயமாதலால் காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லிஆலோசனை செய்தபின்புஅந்நியரை அடக்கம் பண்ணுவதற்கு குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள்".

அப்போஸ்தலர் 1: 18: "அநீதத்தின் கூலியினால் யூதாஸ் ஸ்கா¡¢யோத்து ஒரு நிலத்தைச் சம்பாதித்து தலைகீழாக விழுந்தான்அவன் வயிறு வெடித்து குடல்களெல்லாம் சா¢ந்துபோயிற்று". சுவிசேஷங்களின் மிக முக்கியமான கதாபாத்திரமான யூதாசின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதில் பைபிள் ஆசி¡¢யர்களுக்கிடையே குழப்பம். மேலும் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததற்குத்  தனக்குக் கூலியாகக் கிடைத்த பணத்தைக்கொண்டு யூதாஸ் குயவனின் நிலத்தை வாங்கினானா அல்லது அவன்  தேவாலயத்தில் தூக்கி எறிந்துவிட்டுப்போன பணத்தைக்கொண்டு பிரதான ஆசா¡¢யர் அந்நிலத்தை வாங்கினார்களா என்பதிலும் குழப்பம்.

 

மத்தேயு 5: 1: "இயேசு திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்அவர் உட்கார்ந்தபொழுதுஅவருடைய சீடர்கள் அவா¢டத்தில் வந்தார்கள். அப்போழுது அவர் தமது வாயைத்திறந்து அவர்களுக்கு உபதேசித்தார்".

லூக்கா 6: 17: "இயேசு அவர்களுடனேகூட  இறங்கிசமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடா¢ல் அநேகம்பேரும்அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும்தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும்யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும்எருசலேம் நகரத்திலிருந்தும்தீருசீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும்வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்".

இயேசுவின் 'மலைப்பிரசங்கம்பிரசித்தி பெற்றது. மத்தேயுவின் சுவிசேஷத்தில் மலைமேல் இருந்து இயேசு பிரசங்கித்தார் என்றும்லூக்காவில் அவர் கீழே இறங்கிவந்து சமனான இடத்தில் நின்று உபதேசம் செய்தார் என்றும் முரண்பாடாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

2 சாமுவேல் 24: 13: "கர்த்தர் சொல்லியபடியேகாத் தாவீதினிடத்தில் வந்துஅவனை நோக்கி உம்முடைய தேசத்தில் ஏழு வருடங்கள் பஞ்சம் வரவேண்டுமோஅல்லது மூன்று மாதங்கள் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின் தொடரநீர் அவர்களுக்கு முன் ஓடிப்போகவேண்டுமோஅல்லது உம்முடைய தேசத்தில் மூன்று நாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோஎன்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறூத்தரவு கொண்டுபோகவேண்டுமென்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்".

1 நாளாகமம் 21: 11-12: "கர்த்தர் சொல்லியபடியேகாத் தாவீதினிடத்தில் வந்துமூன்று வருடத்துப் பஞ்சமாஅல்லது உன் பகைஞா¢ன் வாள் உன்னைப் பின் தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும்  மூன்றுமாதச் சங்காரமோஅல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்ப்டி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய வாளாகியக் கொள்ளைநோயோஇவைகளில் ஒன்றைத் தொ¢ந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார்" என்று சொன்னான்.

 

2 சாமுவேல் 24: 1: "கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரேலின்மேல் மூண்டது. இஸ்ரேல்யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்".

1 நாளாகமம் 21: 1: "சாத்தான் இஸ்ரேலுக்கு விரோதமாய் எழும்பிஇஸ்ரேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டான்".

2 சாமுவேலில் கர்த்தரும், 1 நாளாகமத்தில் சாத்தானும் ஒரே வேலையைச் செய்வதற்காகத் தாவீதை ஏவுகிறார்கள். உண்மையில் ஏவியது கர்த்தரா அல்லது சாத்தானாதேவனுடைய வசனங்கள் குழப்புகின்றன!

 

புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வம்சாவழியைப் பற்றி மத்தேயு மற்றும் லூக்கா என்ற இரண்டு சுவிசேஷப் புஸ்தகங்களில் கூறப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று முரண்பாடன இரண்டு வம்சாவழிகளை மத்தேயுவும் (1: 2-17) லூக்காவும் (3: 23-38) கொடுக்கிறார்கள். இரண்டு வம்சாவழிகளிலும் தற்காலக் கிறிஸ்தவர்களால் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகக் கருதப்படும் யோசேப்புயூதர்கள் வரலாற்றில் மிகவும் பிரபலமாகவும் கர்த்தருக்குப் பி¡¢யமானவனாகவும் இருந்த தாவீது ராஜாவின் நேரடி வா¡¢சு என்று நிறுவுவதே நோக்கமாக இருக்கிறது. இரண்டிலும் பலருடைய பெயர்களும்வருடக்கணக்குகளும் வித்தியாசமாக இருக்கின்றன. இது போக இயேசு யோசேப்பிற்கு மகனாக பிறக்கவில்லை பா¢சுத்த ஆவிக்குத்தான் மகனாகப் பிறந்தார் என்று கதை எழுதி வைத்திருக்கும்போதுயோசேப்பு இயேசுவின் தந்தைஅல்ல என்று சொல்லும் பொழுது இவர்கள் ஏன் யோசேப்புதாவீதின் வம்சத்தில் வந்தவர் என நிரூபிக்க மெனக்கெட வேண்டும்மேலும் மத்தேயுவின் சுவுசேஷத்திலுள்ள வம்சவரலாற்றில் தாவீது அரசன் முதல் யோசேப்பு வரை 28 சந்ததிகளும்லூக்காவின் சுவிசேஷத்திலுள்ள வம்சவரலாற்றில் தாவீது முதல் யோசேப்பு வரை 42 சந்ததிகளும் கூறப்பட்டுள்ளன. இரு வம்சவரலாறுகளிலும் தாவீது மற்றும் யோசேப்பு தவிர மூன்றே மூன்று பெயர்கள்தாம் பொதுவாக உள்ளன.

இயேசுவின் தந்தை என்று அறியப்படும் யோசேப்பு தாவீது மன்னனின் எந்த மகனுடைய வம்சத்தில் வந்தவர் என்பதிலேயே சுவிசேஷ ஆசி¡¢யர்களுக்கிடையே குழப்பம் நிலவுகிறது. மத்தேயு 1: 6 ல் உ¡¢யாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் தாவீது பெற்ற மகனாகிய சாலமோன் என்றும் லூக்கா 3: 31 ல் தாவீது தன் மற்றொரு மனைவியிடத்தில் பெற்ற மகனாகிய நதான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தேவனை நோ¢ல் தா¢சிக்க இயலுமாஇயலும்!

ஆதியாகமம் 26: 2: "கர்த்தர் ஆபிரகாமுக்குத் தா¢சனமாகி நீ எகிப்துக்குப் போகாமல்நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு என்றார்".

ஆதியாகமம் 32: 30: "அப்பொழுது யாக்கோபுநான் தேவனை முகத்திற்கு நேர் கண்டேன் என்று சொன்னான்".

யாத்திராகமம் 24: 9-10: "பின்பு மோசேயும்ஆரோனும்நாதாவும்அபியூவும்இஸ்ரவேலருடைய மூப்பா¢ல் எழுபதுபேரும் ஏறிப்போய்இஸ்ரேலின் தேவனைத் தா¢சித்தார்கள்".

யாத்திராகமம் 33: 11: "ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோலகர்த்தர் மோசேயோடே முகத்திற்கு நேர் பேசினார்".

தேவனை மனிதர் யாரும் நோ¢ல் தா¢சிக்க இயலாது.

யாத்திராகமம் 33: 20: "(கர்த்தர் மோசேயை நோக்கி) நீ என் சமூகத்தை காணமாட்டாய்ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது என்றார்".

யோவான் 1: 18: "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை".

1 தீமோத்தேயு 6: 16: "(தேவன்) மனுஷா¢ல் ஒருவரும் கண்டிராதவரும்காணக்கூடாதவருமாயிருக்கிறவர்".

யாக்கோபு 1: 13: "சோதிக்கப்படுகிற எவனும்நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்லஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல".

ஆதியாகமம் 22: 1: "இந்தக் கா¡¢யங்கள் நடந்தபின்புதேவன் ஆபிரகாமைச் சோதித்தார்".

யோவான் 3: 13: "பரலோகத்திலிருந்து இறங்கினவரும்பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை."

2 இராஜாக்கள் 2: 11: "எலியா சுழல்கற்றிலே பரலோகத்துக்கு ஏறிப்போனான்".

லூக்கா 23: 43: "இயேசு அவனை (தன் அருகில் சிலுவையில் அறையப்பட்டிருந்த மனம் திருந்திய கள்வனை ) நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்".

இயேசு தான் சிலுவையில் அறையப்படுவத்ற்கு சிலநாட்கள் முன்னதாகஎருசலலேம் நகரத்துக்கு கோவேறு கழுதைக்குட்டியின்மேல் ஏறி மக்கள் புடைசூழ வந்தார்.

மாற்கு 11: 7: "அவர்கள் அந்த கழுதைக்குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து அதன்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள். அவர் அதன்மேல் ஏறிப்போனார்'

லூக்கா 19: 35: "கழுதைக்குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து அதன்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டுஇயேசுவை அதன்மேல் ஏற்றினார்கள்".

மத்தேயு 21; 7: "கழுதையையும்குட்டியையும் கொண்டுவந்துஅவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப்போட்டுஅவரை ஏற்றினார்கள்".

இயேசு எப்படி இரண்டு மிருகங்களின்மேல் ஏறிச் சென்றார் என்பதை மத்தேயுவை எழுதின ஆசி¡¢யா¢டம்தான் கேட்கவேண்டும். சகா¢யா 9: 9 ல் "இதோ உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும்இரட்சிகிறவரும்தாழ்மையுள்ளவரும்கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவராயிருக்கிறார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை இயேசுவைப் பற்றிக் கூறப்பட்ட தீர்க்கத்தா¢சனம் என்று கருதிய மத்தேயுவின் ஆசி¡¢யர்தீர்க்கத்தா¢சனம் நூறு சதவிகிதம் நிறைவேறவேண்டும் என்பதில் குறியாயிருந்துஇயேசுவைக் கழுதைஅதன் குட்டி இரண்டின்மேலும் ஏற்றினார்கள் என்று எழுதிவிட்டார்!

அப்போஸ்தலர் 9: 3-7: "சவுல் பிரயாணமாய்ப் போய்தமஸ்குவுக்குச் சமீபித்தபோதுசடுதியிலே வனத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலேசவுலேநீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அவனுடனே பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள்".

அப்போஸ்தலர் 22: 9: "சவுல் சொல்கிறான்: என்னுடனே இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டுபயமடைந்தார்கள்என்னுடனே பேசினவருடைய சத்தத்தை அவர்கள் கேட்கவில்லை".

அப்போஸ்தலர் 9 ஆம் அதிகாரத்தில் சவுலுடனே பிரயாணம் பண்ணினவர்கள் பேசினவருடைய சத்தத்தைக் கேட்டார்கள்ஆனால் எதையும் காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 22 ஆம் அதிகாரத்தில் சவுலே சொல்கிறார்: அவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயந்தார்கள்ஆனால் பேசினவருடைய சத்தத்தைக் கேட்கவில்லை".

 

இப்படிப்பட்ட முரண்பாடுகளும்எதிர்மறையான செய்திகளும்அறிவியலுக்கு ஒவ்வாத விஷ்யங்களும் பைபிள் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard