உலகிலுள்ள எல்ல மதங்களிலும் கிறிஸ்தவமதத்தில்தான் மிகுந்த குழப்பங்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வாழ்க்கை வரலாறு ஆயினும் சா¢ பழையஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இவை கூறும் வழிபாட்டுக் கொள்கைகள் என்றாலும் சா¢
குழப்பங்கள்தாம் மிஞ்சும். இயேசு கிறிஸ்து ஒரு வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறையப்பட்டு (அதிலும் காலை 9.00 மணிக்கா அல்லது மதியம் 12.00 மணிக்கா என்ற குழப்பம் இருக்கிறது) சில மணிநேரங்களில் அன்று மாலை மா¢த்தார். இதையே ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் சிலுவையில் அறையப்பட்ட ஒருவர் மா¢ப்பதற்கு சுமார் 12 மணி நேரத்திலிருந்து இரண்டு நாட்கள் வரை ஆகலாம். மிகுதியான இரத்த சேதமும், உடலின் பெரும்பகுதி பாரமும் இரு கைகளிலும் தொங்குவதால் ஏற்படும் மூச்சுத்திணறலும் சாவை வரவழைக்கும். இதற்கு கால அவகாசம் தேவை. ஆனால் இயேசுவோ நண்பகலில் அல்லது பிற்பகலில் சிலுவையில் அறையப்பட்டு பொழுது சாயுமுன் அவரது மரணம் அறிவிக்கபடுகிறது. அவருடைய சா£ரத்தை அ¡¢மத்தியா ஊரானாகிய யோசேப்பு என்பவர் உ¡¢ய அனுமதி பெற்று எடுத்துச் சென்று தம்முடைய குடும்பத்தாருக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த ஒரு கல்லறையில் அடக்கம் செய்தார். அவர் எருசலேம் தேவாலயத்தின் நிர்வாகக்குழுவில் (Sanhedrin) அதாவது இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்ய்ய வேண்டும் என்று துடித்த யூதர்களின் சபையில் ஒரு உறுப்பினராக இருந்தார் என்பது ஆச்சா¢யமான தகவல். இயேசுவின் கல்லறைக்கு பிரதான ஆசா¡¢யனுடைய காவலர்கள் பாதுகாவல் இருந்தார்கள் (மத்தேயு 27: 64 - 67) என்று பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இயேசுவுக்குப் பி¡¢யமான சிஷ்யை மகதலேனா மா¢யாளும் மற்றொரு மா¢யாளும் கல்லறைக்கு வந்து பார்த்தபோது கல்லறை திறந்திருந்தது, உள்ளே இயேசுவின் சா£ரம் காணாமல் போயிருந்தது. அவர்கள் அதிர்ச்சியடைந்து நின்றபோது அங்கே அவர்கள் பக்கத்தில் இயேசு நின்று கொண்டிருந்தார். இது தான் உயிர்த்தெழுதலின் கதை. சம்பவத்தின் கருத்து ஒன்றாயினும் நான்கு சுவிஷேங்களிலும் சொல்லப்பட்ட விவரங்களில் வேற்றுமை உள்ளது.
முதன்முதலாக எழுதப்பட்ட மாற்குவின் சுவிசேஷத்தில் இறுதி அதிகாரமான 16 ல் முதல் 8 வசனங்கள்தாம் அசலானவை, 9 முதல் 20 ஆம் வசனம் வரையுள்ள சங்கதிகள் பின்பு சேர்க்கப்பட்டவை என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இது கிறிஸ்தவமதத் தலைவர்களாலேயே ஒப்புகொள்ளப்பட்ட ஒன்று.
மாற்குவின்படி மூன்று பெண்கள், மகதலேனா மா¢யாள், யாக்கோபின் (ஜேம்ஸ்) தாயாகிய மா¢யாள் மற்றும் சலோமி என்ற பெண்ணும், இயேசுவை அடக்கம் செய்தபின் மூன்றாம் நாள் அதாவது ஞாயிறு அதிகாலையில் சடலத்திற்கு சுகந்தவர்க்கமிடும்படி கல்லறைக்கு வருகிறார்கள். கல்லறையை மூடியிருக்கும் கல்லை யார் நமக்காக புரட்டித்தள்ளுவார்கள் என்று தங்களுக்குள் பேசிகொண்டு வரும்போது அங்கே கல் புரட்டப்பட்டு கல்லறை திறந்திருக்கக் கணடார்கள். கல்லறையின் உள்ளே அமர்ந்திருந்த வெள்ளுடை தா¢த்த தேவதூதன் ஒருவன் அவர்களிடம் இயேசு உயிர்த்தெழுந்து இங்கிருந்து உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குச் சென்றுவிட்டார், அவர் இங்கேயில்லை என்று சொல்ல அவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டர்கள். இத்துடன் அசல் (original) மாற்குவின் புத்தகம் முடிகிறது. அதன் பின்னர் சேர்க்கப்பட்ட வா¢களில், இயேசு உயித்தெழுந்தபின் முதலில் மகதலேனா மா¢யாளுக்குத் தா¢சனமானார் என்று சொல்லப்படுகிறது. அவளிடத்திலிருந்து இயேசு ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டுப்போய் அவருடைய சீடர்களுக்கு நடந்ததை அறிவித்தாள் என்றும் சொல்லப்படுகிறது.
மத்தேயுவின் சுவிசேஷத்தின்படி மகதலேனா மா¢யாள், யாக்கோபின் (ஜேம்ஸ்) தாயாகிய மா¢யாள் ஆகிய இரண்டு பெண்கள்தாம் கல்லறைக்குச் செல்கிறார்கள். கல்லறையில் இயேசுவின் உடல் இல்லையென்று தொ¢ந்ததும், அவர்கள் திரும்பிச் செல்லும்போது இயேசு அவர்களுக்கு எதிர்ப்பட்டு தா¢சனமாகிறார், அவர்கள் அவரைபணிந்துகொள்கிறார்கள். அவர் அவ்ர்களிடத்தில் நீங்கள் போய் என் சீடர்களிடம் அவ்ரகளைக் கலிலேயாவுக்குப் போகும்படிச் சொல்லுங்கள், அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்கிறார் (மத்தேயு 28: 9 &10). மேலும் சிலுவையில் அறையப்பட்டு மா¢த்து உயிர்த்தெழுந்த மூன்றம் நாள் இயேசு தன் சீடர்களுக்கு தா¢சனம் தரவில்லை. மத்தேயுவின்படி பேதுருவும் மற்ற சீடர்களும் இயேசுவைப் பார்க்கும்போது அவ்ர் குருசில் அறையப்பட்டு குறைந்தது ஒருவாரமாவது ஆகியிருக்கும்.
லூக்காவின் சுவிசேஷத்தில் பல பெண்கள் ஞாயிறு அதிகாலையில் இயேசுவின் கல்லறைக்குப் போகிறார்கள். அவர்களில் மூன்றுபேரை மட்டும் லூக்கா பெயா¢ட்டுச் சொல்லுகிறார், அவர்கள் மகதலேனா மா¢யாள், யோவன்னா, யாக்கோபுவின் தாய் மா¢யாள் என்பவர்கள். ஆனால் இன்னும் சில பெண்களும் அவர்களுடன் சென்றார்கள். அங்கே இரண்டு தேவதூதர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததை அவர்களிடம் கூறுகிறார்கள். மேலும் அன்றையதினமே சீடர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரத்திலுள்ள எம்மாவு என்ற ஊருக்குச் செல்லும்போது இயேசு அவர்களுக்குத் தா¢சனமாகி, அவர்களுடன் பேசி , அவர்களுடன் உணவருந்திவிட்டு மறைந்துபோனார். உடனே அவ்விரு சீடர்களும் திரும்பி எருசலேமுக்கு வந்து மற்ற சீடர்களைச் சந்தித்தபோது பேதுருவுக்கும் இயேசு தா¢சனமானார் என்று அறிந்தார்கள். நடந்த கா¡¢யங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இயேசு திடீரென்று அவர்கள் முன்னால் தோன்றுகிறார். சீடர்கள் அவர் தோன்றியதைப் பார்த்து ஆவி என்று நினைத்துப் பயந்தார்கள். ஆனால் அவர் அவர்களிடம் தன் காயங்களைக் காட்டி பயத்தைப் போக்கி அவர்களுடன் உணவருந்துகிறார். பின் அவர்களை பெத்தானியாவுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அவர்களை ஆசீர்வதிக்கும்பொழுது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டார் என்று லூக்கா சொல்கிறார். இது எல்லாமே அவர் உயிர்த்தெழுந்த ஞயிற்றுக்கிழமை அதே நாளில் நடைபெறுகிறது (லூக்கா 24: 13-51).
ஆனால் சுவிசேஷத்தில் இயேசு உயிர்த்தெழுந்த அன்றே பரலோகத்துக்குச் சென்றார் என்று எழுதிய இதே லூக்கா அவரால் எழுதப்பட்ட அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற மற்றொரு
புத்தகத்தில் இயேசு உயிர்த்தெழுந்தபின் நாற்பது நாட்கள் சீடர்களுக்கு பல இடங்களில் தா¢சனம் கொடுத்து பின் எருசலேமுக்கு அருகிலுள்ள ஒலிவ மலையில் வைத்து சீடர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டார் என்று முரண்பாடாக எழுதுகிறார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1: 3 முத்ல் 12 வரை).
நான்காவது சுவிசேஷமான யோவானில் இயேசு குருசில் அறையப்பட்டு மூன்றாம் நாள் காலையில் மகதலேனா மா¢யாள் மட்டும் கல்லறைக்குச் செல்கிறாள். அங்கே கல்லறை திறந்திருக்க இயேசுவைக் காணாமல் திகைத்தபோது இரண்டு தேவதூதர்கள் அவளிடம் அவர் உயிர்த்தெழுந்ததைப் பற்றிச் சொல்லுகிறார்கள். பின் இயேசுவே அவள்முன் தோன்றுகிறார். அவள் அவரைத் தொட்டுப் பணியப்போகும் பொழுது அவர் தன்னைத் தொடாதே என்று அவளைத் தடுக்கிறார். (யோவான் 20: 17) ஆனால் மாற்கு 28: 9 ல் மகதலேனா மா¢யாளும் மற்றொரு மா¢யாளும் இயேசுவின் பாதங்களைத்தழுவி அவரைப் பணிந்துகொண்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் அன்று மாலையே அவர் பதினொரு சீடர்களுக்கும் தா¢சனமாகிறார். ஒரு வாரம் சென்றபின் அவர் மீண்டும் அவர்களுக்கு தா¢சனமாகும்போது தோமாவைத் தன்னைத் தொட்டுப்பார்க்கச் சொல்லுகிறார். மீண்டும் மீண்டும் முரண்பாடுகள். பின்னர் ஒரு நாள் திபோ¢யா கடற்கரையில் மீண்டும் சீடர்களை இயேசு சந்தித்து அவர்களுடன் உணவருந்தினார். முதலில் அவர் யார் என்று அறியாமலிருந்தசீடர்கள் பின் அவரைத்தொ¢ந்துகொண்டார்கள்.
இயேசுவின் வரலாற்றைக் கூறும் நான்கு சுவிசேஷங்களிலும் உயிர்த்தெழுதலை விவா¢க்கும்
சம்பவங்களில் முரண்பாடுகளுக்குக் குறைவில்லை. இவற்றிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தொ¢கின்றன. ஒன்று; உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுடன் தொடர்ந்து வெகுநேரம் எங்குமே தங்கியிருக்கவில்லை. வருகிறார் போகிறார், அவ்வளவுதான். மேலும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் சீடர்களால் முதலில் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இரண்டாவது; உயிர்த்தெழுந்த இயேசுவால் ஒரு இடத்திலிருந்து மற்றோ¡¢டத்திற்கு நொடிப்பொழுதில் பயணிக்க முடிகிறது. திடீரென்று தோன்றுகிறார் திடீரென்று மறைகிறார். சீடர்கள் அவரைப் பார்க்கும்போது ஆவியென்றே முதலில் நினைக்கிறார்கள். கல்லறையிலிருந்த அவரது சா£ரத்தோடு அவர் தோன்றியிருப்பின் அவர்களுக்குச் சந்தேகம் வந்திராது. அப்படியானால் உயிர்த்தெழுந்தபின் இயேசு சூக்ஷ்மசா£ரத்தோடுதான் உலாவினாரா என்றால் அதற்கும் சா¢யான பதில் இல்லை. ஏனெனில் அவர் தோமாவிடம் தன் காயங்களைக் காட்டி தொட்டுப்பார் என்கிறார். சீடர்களுடன் அமர்ந்து உணவருந்துகிறார். அநேகமாக, இயேசு அவரது சீடர்கள் உணவருந்தத் தயாராகும்போது அல்லது உணவருந்தும்போது பிரசன்னமாகிறர். ஆனால் அவர் யாரென்று அவர்களுக்குத் தொ¢யாமலிருக்கிறது அல்லது ஆவியென்று நினைத்துப் பயப்படுகிறார்கள். பின் அவர் அவர்களோடு உணவருந்துகிறார். அப்பொழுது அவர் திடீரென மறைந்துவிடுகிறார். மனித சா£ரத்தோடுதான் அவர் பரலோகம் சென்றாரா என்பதற்கும் சா¢யான பதில் இல்லை.
ஐந்நூறு பேருக்கும் அதிகமான சகோதரருக்கும் இயேசு ஒரேவேளையில் தா¢சனமானார் என்று பவுல் சொல்லுகிறார்(1 கொ¡¢ந்தியர் 15: 6). உயிர்த்தெழுந்தபின் இயேசு நாற்பது நாட்கள் பலருக்கும் தா¢சனமாகியிருக்கிறார். ஆனால் புதிய ஏற்பாட்டில் எவ்விடத்திலும் இயேசு அவருடைய எதி¡¢களான ஆசா¡¢யர்கள், பா¢சேயர் மற்றும் சதுசேயர் என ஒருவருக்குக் கூட காட்சியளித்ததாக செய்தி இல்லை.
முதல் மூன்று 'ஒத்துப்போகின்ற, சுவிசேஷங்களில் (synoptic gospels) மகதலேனா மா¢யாளும், மற்ற பெண்களும் இயேசுவின் சடலத்திற்கு சுகந்தவர்க்கங்கள் இடுவதற்காக வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் கல்லறைக்குவந்தபோது அது திறக்கப்பட்டு காலியாக இருந்ததைக் கண்டார்கள், பின் இயேசு மகதலேனா மா¢யாளுக்கு மட்டும் அல்லது எல்லா பெண்களுக்கும் தா¢சனமாகி அவர்களோடு பேசினார் என்று தொ¢விக்கும் நிலையில், யோவானின் சுவிசேஷம் மட்டும் வேறுவிதமாகக் கூறுகிறது. மகதலேனா மா¢யாள் மட்டும் கல்லறைக்கு வருகிறாள், வந்து திறக்கப்பட்டு காலியாக இருந்த கல்லறையைக் கண்டு திகைத்து, சீமோன் பேதுரு மற்றும் யோவான் இருவா¢டத்தும் சென்று இயேசுவை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்கிறாள் (யோவான் 20: 1&2). இயேசுவுக்கு மிக நெருக்கமான சிஷ்யையான மகதலேனா மா¢யாளுக்குக்கூட இயேசு உயிர்த்தெழுவார் என்பது தொ¢ந்திருக்கவில்லை அல்லது அவள் எதிர்பார்க்கவில்லை. எதிபார்த்திருந்தால் கல்லறை காலியாக இருந்ததைப் பார்த்து இயேசு உயிர்த்தெழுந்து சென்றுவிட்டார் என்று அறிந்து மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டுமல்லவா? அதற்குப் பதிலாக இயேசுவின் உடலை யாரோ களவாடிச் சென்றுவிட்டார்கள் என்று மற்ற சீடர்களிடம் தொ¢விப்பது ஏன்? ஏனென்றால் இயேசுவுடன் இருந்த எந்த சீடரும் இயேசு உயிர்த்தெழுவார் என்பதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏற்கனவே இயேசு தாம் பிரதான ஆசா¡¢யராலும், மூப்பராலும், வேதபாரகராலும் கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருப்பேன் என்பதைப் பலமுறை தன் சீடர்களுக்கு சொல்லியிருக்கிறார் என்று மத்தேயு 16: 21; 20:17-19 ல் கூறப்பட்டுள்ளது. இதில் எது உண்மையில்லை? இயேசு உயிர்த்தெழுந்தது உண்மையில்லையா அல்லது அவர் ஏற்கனவே தன் உயிர்த்தெழுதலைக் குறித்து சொல்லியிருப்பது உண்மையில்லையா அல்லது இரண்டுமே உண்மையில்லையா?
இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு மூன்று சாட்சியங்கள் பைபிளில் சொல்லப்படுகின்றன.
ஒன்று, அவரது உடலை வைத்த கல்லறை மூன்றாம் நாள் காலையில் காலியாக இருந்தது.
இயேசுவின் கல்லறையை அவரை அதில் வைத்தது முதல் பிரதான ஆசா¡¢யா¢ன் காவலர்கள் பாதுகாத்து வந்தனர். கல்லறை இருந்த அந்த மலை அடிவாரத்தில் ஒரு பழத்தோட்டம் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் யோவான் 20: 15 ல் மகதலேனா மா¢யாள் தா¢சனம் தந்த இயேசுவை அவர் யார் என்று அறியாமல் "தோட்டக்காரரே, நீர் இயேசுவை எடுத்துக்கொண்டு போனதுண்டோ" என்று வினவுகிறாள். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் இனி இயேசுவின் கல்லறைக்கு அடிககடி வந்துபோய் அதை ஒரு தெய்வீகஸ்தலமாக்கிவிடுவார்கள் என்று நினைத்து அதை தடுப்பதற்காக பிரதான ஆசா¡¢யரும் அவரைச் சார்ந்தவர்களும் காவலரைக் கொண்டு இயேசுவின் உடலைஅங்கிருந்து எடுத்து வேறு இடத்திற்கு மாற்றியிருக்கலாம் அல்லது அதே காரணத்தால் தோட்டம் பாழாகிவிடும் என்று தோட்டக்காரர் மாற்றியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இரண்டு: உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இயேசு நாற்பது நாட்கள் வரை பூமியில் உலாவி சுமார் ஆறுமுறையாவது சீடர்களுக்குத் தா¢சனமானது.
ஆனால் அவர் காட்சியளிக்கும் போதெல்லாம் முதலில் சீடர்களால் அவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. அமானுஷ்யமான முறையில் அந்த சந்திப்புகள் நடைபெறுகின்றன. சில சந்திப்புகளில் அவர் அவர்களுடனே உணவருந்துவதாகச் சொல்லப்படுகிறது. ஜான்சன் ஜே. ஜான்சன் (Johnson J. Johnson) என்ற ஆராய்ச்சியாளர் மனப்பிரமையுடன் சம்பந்தப்படுத்திவிளக்குகிறார். உயிர்த்தெழுந்த இயேசுவை முதன்முதலாகக் கண்டுபேசியது மகதலேனா மா¢யாள். அவளிடமிருந்து இயேசு ஏழு பிசாசுகளை விரட்டியுள்ளதாக பைபிள் சொல்லுகிறது. சித்தபிரமையுள்ள பெண்களுக்குப் பிசாசு பிடித்திருப்பதாகச் சொல்வது அந்த காலத்திலிருந்து இக்காலம் வரை வழக்கத்திலுள்ளது. ஏற்கனவே சித்தபிரமையிருந்து குணமாகி, இயேசுவின்மீது மிகுந்த பக்தியும், மதிப்பும் கொண்ட மகதலேனா மா¢யாளுக்கு அப்படி ஒரு காட்சி தோன்றியதில் வியப்பில்லை. இப்படி ஒருவருக்குஏற்படும் பிரமைக்காட்சிகள் (Hallucinations) அதே மன நிலையிலுள்ள அவருடைய கூட்டாளிகளுக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதைக் கூட்டு மனப்பிரமை (Mass Hysteria) என்று மனோதத்துவம் கூறுகிறது.
மூன்று: உயிர்த்தெழுந்து நாற்பதாம் நாள் இயேசு சீடர்கள் முன்னிலையில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்தது.
முதன்முதலில் எழுதப்பட்ட மாற்குவின் சுவிசேஷத்தில் இது இறுதி அதிகாரமான 16 ல் 19 ஆம் வசனமாக வருகிறது. மாற்கு 16 ஆம் அதிகாரத்தில் 1 முத்ல் 8 வசனங்களே அசலானவை. முதலில் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகளில் 9 முதல் 20 வரையுள்ள வசனங்கள் இல்லை, அவை பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டவை என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு, மேலும் கிறிஸ்தவ மதத்தலைவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. யாருமே தேவனைப் பார்த்ததில்லை என்று பைபிள் சொல்லுகிறது. இயேசு பரலோகமேறி தேவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்ததை யார் பார்த்தார்கள் என்று தொ¢யவில்லை. மாற்குவின் சுவிசேஷத்தை அடிபடையாகக்கொண்டுதான் மத்தேயு மற்றும் லூக்காவின் சுவிசேஷங்கள் எழுதப்பட்டன. நான்கு சுவிசேஷங்களில் மாற்கு தவிற லூக்கா மட்டுமே இயேசு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைச் சொல்கிறார். ஆனால் தேவனுடைய வலது பக்கத்தில் இயேசு அமர்ந்தததை மாற்குவும் கண்டதாக எழுதவில்லை.
புதிய ஏற்பாட்டிலுள்ள அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற புத்தகத்தில் 26: 23 ஆம் வசனத்தில் பவுல், "கிறிஸ்துதான் உயிர்த்தெழுந்தவர்களிலேயே முதல்வராக இருக்கிறார்" என்று கூறுகிறார். இதிலிருந்து என்ன தொ¢கிறது என்றால், மரணமடைந்த ஒரு சிறு பெண்ணை இயேசு உயிரோடு எழுப்பினது, லாசரு என்பவனை அவன் இறந்து அடக்கம் செய்ய்யப்பட்டு ஐந்து நாள் சென்றபின் உயிருடன் எழுந்துவரச் செய்தது, அவர் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தபோது பல புனிதர்களுடைய கல்லறைகள் திறந்து அவர்கள் உயிர்த்தெழுந்து எருசலேம் நகரத் தெருக்களில் நடமாடினார்கள் என்ற தகவல்கள் எதுவும் பவுலுக்குத் தொ¢ந்திருக்கவில்லை. தொ¢ந்திருந்தால் பவுலும் இந்த சம்பவங்களைப்பற்றி ஏதாவது ஓ¡¢டத்தில் சொல்லியிருப்பார். அவர் இயேசுதான் உலகிலேயே முதன்முதலாக மரணித்து உயிர்த்தெழுந்ததாக நம்பினார். ஏனெனில் இயற்கைக்கு மாறான இந்த
அற்புதச்செயல்கள் எதுவுமே முன்பு நடைபெற்றிருக்கவில்லை. இயேசு மரணமடைந்த யாரையும் உயிரோடு எழுப்பியிருக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் மக்கள் அதைப்பற்றிப் பேசியிருப்பார்கள், பவுலுக்கு நெருக்கமான பேதுரு, யோவான் மற்றும் ஜேம்ஸ் (யாக்கோபு) போன்ற இயேசுவின் சீடர்களும் இந்த சம்பவங்களை பவுலிடம் விவா¢த்திருப்பார்கள். புதிய ஏற்பாட்டிலுள்ள தங்கள் கடிதங்களிலும் அவர்கள் இந்த விஷயங்களைப் பதிவு செய்யவில்லை. எனவே இவை யாவும் சுவிசேஷ எழுத்தாளர்களின் கற்பனையில் உதித்தவை என்பதில் சந்தேகமேயில்லை. இன்னொன்று, பவுல் ஒருவர் மரணித்தபின் மீண்டும் அதே சா£ரத்தோடு உயிர்த்தெழுவார் எனபதை நம்பவில்லை. "ஜென்மசா£ரம் விதைக்கப்படும். ஆவிக்கு¡¢ய சா£ரம் எழுந்திருக்கும்" என்று பவுல்சொல்வதால் (1 கொ¡¢ந்தியர் 15: 44) அவர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தன் மனித சா£ரத்துடனல்ல, ஆவிக்கு¡¢ய சூக்ஷ்ம சா£ரத்துடன்தான் உயிர்த்தெழுந்தார் என்று நம்புகிறார் என்பது தொ¢கிறது.
பவுல் தனக்கும் இயேசு தா¢சனமானார் என்று கூறுகிறார் (1 கொ¡¢ந்தியர் 15: 8). இது நடந்தது இயேசு மறைந்து பலவருடங்கள் கழித்து. உத்தேசமாக கி.பி. 57 ல் அவர் தமஸ்குவுக்குச் செல்லும் சாலையில் போகும்பொழுது திடீரென இடிமுழக்கத்துடன் மின்னலடித்ததுபோல் கண்ணைப் பறிக்கும் பிரகாசமான ஒரு ஒளி தோன்றியதுடன் இயேசு அவரோடு பேசிய குரலும் கேட்டது என்று பவுல் விவா¢க்கிறார். என்ன இருந்தாலும் இயேசுவின் சீடர்கள் கண்ட காட்சிகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. ஏனெனில் பவுல் இயேசுவை நோ¢ல் கண்டதேயில்லை, அதனால் இந்தக்காட்சியிலும் அவர் வடிவத்தைக் காணவில்லை. ஆனால் பவுல் தனக்குக் கிடைத்த தா¢சனத்தைப் பதிவுசெய்து சில ஆண்டுகளுக்குப் பின்னரே சுவிசேஷங்கள் எழுதப்பட்டன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் நான்கு சுவிசேஷங்களிலும் மகதலேனா மா¢யாள் மற்றும் பதினொரு சீடர்களும் இயேசு உயிர்த்தெழுந்தபின் அவரது தா¢சனத்தைக் கண்டார்கள் என்று பதிவு செய்யப்பட்டிருந்தாலும் பேதுரு, யோவான், ஜேம்ஸ் ஆகியோர் தனிப்பட்ட முறையில் அவர்கள் எழுதிய கடிதங்களில் 'எனக்கு இயேசு தா¢சனமானார், நான் பார்த்தேன்' என்று எங்குமே சொல்லவில்லை. அப்படிச் சொன்னவர் பவுல் மாத்திரமே. ஆனால் பவுல் கண்ட தா¢சனத்தை சீடர்களின் தா¢சனத்தோடு ஒப்பிட இயலாது. அவர் கண்டது கண்கள் கூசும்படியான வெளிச்சம் மட்டுமே. அந்த வெளிச்சத்தால் அவ்ர் மூன்று நாட்கள் பார்வையை இழந்திருந்தார்.
"மாம்சமும் இரத்தமும் தேவனுடைய இராஜ்ஜியத்தைச் சுதந்தி¡¢க்கமாட்டாது. அழிவுள்ளது (மனித உடல்) அழியாமையைச் (தேவனுடைய ராஜ்யம்) சுதந்தி¡¢ப்பதில்லை" என்று பவுல் கூறுகிறார் (1கொ¡¢ந்தியர் 15: 50). இதிலிருந்து பவுல், இயேசு கிறிஸ்து மாம்சமும் இரத்தமுமான சா£ரத்தோடு எழுந்திருக்கவில்லை, ஆவியாகவே (அல்லது ஆத்மா: பைபிளில் விளக்கமில்லை) எழுந்திருந்தார் என்று நம்பினார் என அறிகிறோம். இயேசு உயிர்த்தெழுந்து வந்து சீடர்களுடன் சிலமுறை உணவருந்தினார் என்ற விவரம் பவுலுக்குத் தொ¢யாது. சிலுவையில் மா¢த்த கிறிஸ்துவைப் பற்றி "இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்" என்று பவுல் மேலும் கூறுகிறார் (2 கொ¡¢ந்தியர் 5: 16). "மா¢த்தோ¡¢லிருந்து எழுந்த கிறிஸ்து இனி மா¢ப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்" என்று மேலும் கூறுகிறார் (ரோமர் 6: 9). ஏனெனில் இயேசு மாம்சமும் இரத்தமுமான மனித சா£ரத்தோடு உயிர்த்தெழவில்லை என்பதும், மனித சா£ரமாக இருந்தால்தான் மீண்டும் மரணம் ஏற்படும் என்பதும் பவுலுக்குத் தொ¢ந்திருக்கிறது. ஆனல் சுவிசேஷ ஆசி¡¢யர்கள் கல்லறை காலியாக இருந்தபடியால், இயேசு மனித சா£ரத்தோடு எழுந்தார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அவரை சீடர்களோடு சிலமுறை அமர்ந்து கற்பனையாக உணவருந்த வைத்தார்கள். யோவான் ஒருபடி மேலே சென்று சீடரான தோமா இயேசுவின் காயங்களில் விரலை நுழைத்துப் பார்த்தாலொழிய அவர் உயிர்த்தெழுந்து வந்தார் என்பதை நம்பமாட்டேன்
என்று சொன்னதாகவும், இயேசு கதவுகள் பூட்டப்பட்ட அறையில் சீடர்களுக்குத் தா¢சனமாகி தோமாவே, என் காயங்களில் உன் விரல்களை விட்டுப்பார் என்று சொன்னதாகவும் (யோவான் 20: 27) கூறியிருக்கிறார்.
இயேசு உயிரோடிருந்தவரை அவரை அந்நியர்களின் ஆட்சியில் அடிமைப்பட்டுக்கிடந்த யூதர்களுக்கு விடுதலை பெற்றுத்தரவந்த மேசியா (Messiah) என்று அவரை நினத்திருந்தார்களே தவிற அவரைக் 'கடவுளின் குமாரன்' என்றும், அவர் தெய்வீகசக்தியுள்ளவர் என்றும் எந்த சீடனும் கருதவில்லை. கருதியிருந்தால் பிலாத்துவின் விசாரணைக் கூடத்தில் இயேசுவை விசா¡¢த்துக் கொண்டிருந்தபோது பேதுருவைத் தவிற அனத்து சீடர்களும் தலைமறைவாகியிருக்க மாட்டார்கள். வெளியே நின்ற பேதுருவும் 'இயேசுவோடு இருந்தவன் தானே நீ' என்று அவனை மூன்று முறை விசா¡¢த்தவர்களிடமும் "இல்லை, எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று மூன்று முறையும் மறுதலித்திருக்க மாட்டான். இயேசுவைச் சிலுவையில் அறைந்த சமயத்திலும் யோவானைத் தவிற மற்ற சீடர்கள் அனைவரும் தலைமறைவாகவே இருந்தனர்.
பிரதான ஆசா¡¢யரும், பா¢சேயரும் பிலாத்துவிடம் சென்று , “இயேசு தான் உயிரோடு இருந்த காலத்தில் மூன்று நாளைக்குப்பின் நான் எழுந்திருப்பேன் என்று சொல்லியிருக்கிறார், அவரது சீடர்கள் உடலை எடுத்துச் சென்றுவிட்டு அவர் உயிர்தெழுந்துவிட்டர் என்று தில்லுமுல்லு செய்தாலும் செய்வார்கள். ஆகவே கல்லறைக்குக் காவல் போடவேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள் (மத்தேயு 27: 62 -64). எனவே, தாம் உயிரோடிருந்த காலத்தில் மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று இயேசு சொன்னது எல்லாருக்கும் தொ¢ந்திருக்கிறது, ஆனால் தோமாவுக்கும், மகதலேனா மா¢யாளுக்கும் மற்ற சீடர்களுக்கும் ஏன் தொ¢யவில்லை. அவர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவைப் பார்த்து மகிழ்ச்சியடையாமல் அதிர்ச்சியடைகிறார்கள், அடையாளம் தொ¢யாமல் திகைக்கிறார்கள், உயிர்த்தெழுந்திருக்கிறார் என்று நம்ப மறுக்கிறார்கள், ஏன் என்று பு¡¢யவில்லை. இயேசு உயிர்த்தெழுந்து வருவார் என்பதை எந்த ஒரு சீடரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இயேசு தான் உயிர்த்தெழுவேன் என்று தம் சீடர்களிடமும் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார் என்பதற்குப் பைபிளில் ஆதாரம் இருக்கிறது. "இயேசு, தாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும், வேதபாரகராலும் கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம் சீடர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்" என்று மத்தேயு 16: 21 ல் பதிவு செய்ய்யப்பட்டுள்ளது! மத்தேயு 20: 19 ல் மீண்டும் அவர் தம் சீடர்கள் முன்னிலையில் இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்.
"கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால் எங்கள் பிரசங்கமும் வீண், உங்கள் விசுவாசமும் வீண்" என்று பவுல் 1 கொ¡¢ந்தியர் 15: 14 ல் சொல்லியிருக்கிறார். கிறிஸ்துவ மதத்தின் உயிர்நாடியே கிறிஸ்துவின் போதனைகளை விட அவர் உயிர்த்தெழுந்ததில்தான் இருக்கிறது என்பதை கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வர்.. எனவே பவுலின் காலத்திற்குப்பின் சுவிசேஷங்களை எழுதிய சுவிசேஷ ஆசி¡¢யர்கள் இயேசுவின் கதையில் அவர் உயிர்த்தெழுந்ததைக் குறிப்பிடவேண்டியக் கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் அவர் மாம்ச சா£ரத்தோடு எழுந்தாரா அல்லது சூக்ஷ்ம சா£ரத்தோடு எழுந்தாரா என்பதில் அவர்களுக்குள்ள குழப்பம் இறுதிவரை நீடித்தது என்பதுதான் உண்மை. ஆனால் பவுல் மட்டும் இயேசு ஆவிக்கு¡¢ய (சூக்ஷ்ம) சா£ரத்தோடுதான் உயிர்த்தெழுந்தார் என்பதில் உறுதியாக இருந்தார் என்பது அவரது கடிதங்கள் மூலம் தொ¢கிறது.