பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்கத்தா¢சிகள் (prophets) என்போர் அரசர்களிடமும், மக்களிடமும் மிகவும் செல்வாக்கு பெற்றவர்களாக விளங்கினர். தாவீது, சாலமோன் போன்ற சில அரசர்களின் உரைகளும் தீர்க்கத்தா¢சனங்களாக மதிக்கப்பட்டன. தீர்க்கத்தா¢சிகளின்மேல் கடவுளின் அருள் வந்து அவர்கள் அருள்வாக்கு உரைப்பதாக அரசர்களும், மக்களும் கருதினார்கள். பீட்டர்சென் (L. Petersen) என்ற ஆராய்ச்சியாளர் பைபிளில் வருகின்ற தீர்க்கதா¢சிகள் கூறும் உரைகளை இரண்டுவகையாகப் பி¡¢த்திருக்கிறார். ஒன்று, அவர்கள் தங்கள்மேல் ஜெகோவா இறங்கியதுபோல் கற்பனை செய்துகொண்டு தாங்களே தன்மையில் (முதலாம் நபராக) ஜெகோவா பேசுவதுபோல் அருள்வாக்கு உரைத்தல் (ஓசியா 11: 1-7), மற்றொன்று, தீர்க்கத்தா¢சி தன்னைத் தன்மையிலும் (முதல் நபர்) ஜெகோவாவைப் படர்க்கையிலும் (மூன்றாம் நபர்) வைத்து 'கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்' என்று அருள்வாக்கு உரைத்தல் (மீகா 3: 5-8)
எல்லா மதங்களிலும் தாங்கள் வணங்கும் தெய்வங்கள் தங்கள்மேல் இறங்குவதால் அருள்வாக்கு சொல்லுகின்ற சக்தி தங்களுக்கு இருப்பதாக நம்புகிறவர்கள் அல்லது ஏமாற்றுபவர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவர்களின் நடைமுறை வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தோமானால் சாதாரண மனிதர்களிலிருந்து அவர்கள் வேறுபட்டிருப்பதைக் காணலாம்.
பழைய ஏற்பாட்டுக்காலத்திலும் விசித்திரமாக நடந்துகொள்ளும் தீர்கத்தா¢சிகளுக்குப் பஞ்சமில்லை. எரேமியா தீர்க்கத்தா¢ச கர்த்தர் சொன்னார் என்பதற்காக தன் கழுத்தில் கயிறுகளையும், நுகங்களையும் பூட்டிக்கொண்டுத் தீர்க்கத்தா¢சனம் சொல்லுகிறார் (எரேமியா 27:2). ஏசாயா தீர்க்கத்தா¢சி கர்த்தர் சொன்னார் என்பதற்காக நிர்வாணமாக வெறுங்காலுடன் மூன்று வருடங்கள் நடக்கிறார் (ஏசாயா 20: 2-3). எசேக்கியேல் என்ற தீர்க்கத்தா¢சி கர்த்தர் சொன்னார் என்பதற்காகத் தன் தலைமயிரையும், தாடியையும் சிரைத்துக்கொண்டு, தராசை எடுத்து அந்த மயிரை மூன்று பங்கு வைத்து ஒருபங்கை நகரத்தின் நடுவில் வைத்து அக்கினியால் சுட்டொ¢த்து, இன்னொருபங்கு மயிரைக் காற்றில் தூற்றி, மற்றொருபங்கை வஸ்திரத்தின் ஓரங்களில் முடிந்துவைத்தார் (எசேக்கியேல் 5: 1-4). இப்படிபட்ட மனிதர்களைத் தற்காலத்தில் சந்திக்கநேர்ந்தால் என்ன சொல்லுவோம்? இவ்வாறு அவர்களைச் செய்யத்தூண்டும் கடவுளைப் பற்றி என்ன நினைப்போம்?
ஓசியா என்ற தீர்க்கத்தா¢சியைக் கர்த்தர் ஒரு விபச்சாரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள உத்தரவிடுகிறார். "கர்த்தர் ஓசியாவை நோக்கி: தேசம் என்னைவிட்டு விலகிப்போய் சோரம் போனதால், நீ போய் ஒரு விபச்சாரஸ்தி¡£யை திருமணம் செய்து அவளால் குழந்தைகளைப் பெற்றுக்கொள் என்றார். அவன் போய் திப்லாயிமின் மகளாகிய கோமெரைச் சேர்த்துக்கொண்டான். அவள் கர்ப்பம் தா¢த்து அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்" (ஓசியா 1: 2-3). யூதர்கள் தன்னை வணங்காது பிற தெய்வங்களை வணங்கத் தொடங்கியதால் ஜெகோவா தன்னுடைய தீர்க்கத்தா¢சியைப் பார்த்து நீ போய் விபச்சா¡¢யை மணந்துகொள் என்று கட்டளையிடுகிறார். என்ன விசித்திரம் பாருங்கள்!
இயேசுவுக்கு முன்பே பௌதீக உடலோடு (physical body) பரலோகம் ஏறிச்சென்ற ஒரு மனிதர் பைபிளில் இருக்கிறார். அவர்தான் எலியா தீர்க்கத்தா¢சி. ஒருநாள் எலியாவும், அவர் சீடரான எலிசா தீர்க்கததா¢சியும் பேசிகொண்டு நடந்துபோகையில், ஒரு அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவே வந்து இருவரையும் பி¡¢த்தது. எலியா சுழல்காற்றிலே பரலோகத்துக்கு ஏறிபோனான் (2 இராஜாக்கள் 2: 11). புராணக்கதை போல இருக்கிறதல்லவா? சூறாவளிச் சுழல்காற்று (tornado) திடீரென உருவாகி அதில் எலியா தூக்கப்பட்டு வெகுதூரத்தில் கொண்டுபோய் எறியப்பட்டு மாண்டுபோயிருக்கலாம். மழைத்துளிகளோடுகூடிய சூறாவளிக்காற்று பயங்கரவேகத்தில் சுழன்று சுழன்று ஒரு மேகஸ்தம்பம் போல் உயரமாகத் தொ¢யும். அகப்பட்ட பொருட்களையெல்லாம், வாகனங்கள், குடிசைகள், வீட்டுக்கூரைகள், மிருகங்கள், மனிதர்கள், மின் கம்பங்கள் என்று ஒன்றுவிடாமல் தூக்கியடிக்கும். மின்னல் வீசும்போது அக்கினிப்பிழம்பாகவும் சிலவேளைகளில் தோன்றும். இப்படிப்பட்ட மேகஸ்தம்பங்களை கர்த்தருடைய பிரசன்னம் என்று பைபிளில் பல இடங்களில் தீர்க்கத்தா¢சிகள் சொல்லிவைத்திருக்கிறார்கள். உதாரணம்: யாத்திராகமம் 14: 19,24; எண்ணாகமம் 14: 14; உபாகமம் 31: 15.
உலகத்தின் எந்த மூலையில் சென்று ஒளித்துக்கொண்டாலும் இறைவனுடைய பார்வைக்குத் தப்பமுடியாது என்ற சிறிய விஷயம் கூட கர்த்தா¢ன் மக்கள் தொடர்பாளராகிய ஒரு தீர்க்கத்தா¢சிக்குத் தொ¢யவில்லை என்றால் ஆச்சா¢யமயிருக்கிறதா? உண்மையில் அப்படி ஒருவர் இருந்தார், அவர் பெயர் யோனா. நினிவே என்ற பட்டணத்திலுள்ள மக்கள் அக்கிரமக்காரர்களாக இருந்ததனால் கர்த்தர் யோனாவை அழைத்து அவர்களை எச்சா¢த்துவரக் கட்டளையிடுகிறார். யோனாவுக்கு அது விருப்பமில்லாததால் கர்த்தா¢ன் பார்வைக்குத் தப்பியோடுவதற்காக ஒரு கப்பலிலேறி தர்ஷீஷ் என்ற நகரத்துக்குச் செல்கிறார் (யோனா 1: 1-15).
பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கத்தா¢சனங்களை நம்பும் கிறிஸ்தவர்களை, அவை நிறைவேறும் காலத்தைப்பற்றி அவர்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வைத்து நான்கு வகையினராகப் பி¡¢க்கலாம் என்று தாமஸ் ஐஸ் (Thomas Ice) என்ற மறையியலாளர் கூறுகிறார். முதல் வகையினர் 'முடிந்ததென்பவர்' (Preterists), இவர்கள் அநேக தீர்க்கத்தா¢சனங்கள் கி.பி.70 ல் எருசலேம் நகரம் இடிக்கப்பட்டதோடு நடந்து முடிந்துவிட்டதாக நம்புகின்றனர். இவர்களது கருத்துக்குக் காரணம் மத்தேயு 24: 34 ல் "இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி (அதாவது தன்னோடு இருப்பவர்கள்) ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று இயேசு கூறியிருப்பதுதான். மேலும் மத்தேயு 16: 27-28 ல் 'மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமையோடு, தம்முடைய தூதர்களோடு வந்து, அவனவன் கி¡¢யைக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலன் அளிப்பார்’. ‘இங்கே நிற்கிறவர்களீல் (சீடர்கள்) சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்று இயேசு கூறுவதாக எழுதப்பட்டுள்ளதும் முடிந்ததென்பவர்க்கு (preterists) ஆதாரமாய் உள்ளது. ஏனெனில் இவற்றை கூறியபின் நாற்பது வருடங்கள் கழித்து எருசலேம் இடிக்கப்பட்டபோது இயேசுவின் சீடர்களில் சிலர் உயிரோடிருந்தனர். இரண்டாவது வகையினர் 'வரலாற்றாளர்' (Historicists), இவர்கள் தீர்க்கத்தா¢சனங்கள் வா¢சைக்கிரமமாக நடந்துவருவதாகவும், அதன்படியே கிறிஸ்தவசபைக்கு தற்காலத்தில் நெருக்கடிகள் மிகுந்துவருவதாகக் கருதுகின்றனர். மூன்றாவது வகையினர் 'எதிர்பார்ப்பாளர்' (Futurists), இவர்கள் தீர்க்கத்தா¢சனங்கள் எவையும் இன்னும் நிறைவேறவில்லை, கிறிஸ்தவசபைக்கு ஏற்படும் ஏழுவருட நெருக்கடிக்காலம், இயேசுவின் இரண்டாம் வருகை, ஆயிரம் ஆண்டுகள் கர்த்தா¢ன் ஆட்சி, நித்திய வாழ்க்கை முதலியன எதிர்காலத்தில் வரும் என்று காத்திருக்கின்றனர். இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்கு ஆதாரம் மத்தேயு 24: 27, 37, 39-44 வசனங்களில் உள்ளதாக நம்புகிறார்கள். இவர்கள்தாம் 'பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது, இயேசு வருகிறார், மனம் திருந்துங்கள்' என்று வீதிக்கு வீதி பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவர்கள். நான்காம் வகையினர் கருத்தியலாளர் (Idealists), என்பவர்கள், இவர்கள் தீர்க்கத்தா¢சனங்கள் நிறைவேறுவதற்கு காலவரையறை கிடையாது என்று நம்புகிறவர்கள். இவர்கள் கிறிஸ்தவ மறைநூற்களை மெத்தப் படித்தவர்கள். தீர்க்கதா¢சனங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை மட்டும் ஏற்று நம் வாழ்க்கையில் கைக்கொள்ளவேண்டுமே தவிர அவை எப்போது நிறைவேறும் என்று எதிர்பார்த்திருப்பது தேவையற்றது என்பது இவர்கள் கொள்கை.
இயேசுவும் தீர்க்கத்தா¢சனம் சொல்லியிருக்கிறார். மத்தேயு 24 மற்றும் மாற்கு 13 ஆம் அதிகாரங்களில் இயேசு ஒலிவமலையில் இருந்து தன் சீடர்களுக்கு வருவதை உரைத்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. இயேசுவின் இந்த உரை 'ஒலிவமலை உரை' (Olivet Discourse) என்று கிறிஸ்தவ மறைநூற்களில் என்று அழைக்கப்படுகிறது. புதிய ஏற்பாட்டிலுள்ள இயேசுவின் இந்தத் தீர்க்கத்தா¢சன உரையிலுள்ள வாசகங்கள் போன்ற வசனங்களும், கருத்துக்களும் பழைய ஏற்பாட்டில் தானியேல் 7: 13-14; 9: 27, மற்றும் ஏசாயா 66: 7-24 ல் உள்ள வசனங்களில் இருக்கின்றன. கி.பி. 70 ல் ரோமானியர் எருசலேம் நகரத்தை அழித்து அதிலிருந்த தேவாலயத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்த செய்தியையும் இஸ்ரேல் மக்களுக்கு வரவிருக்கும் அழிவையும் முன் கூட்டியே இயேசு தன் சீடர்களுக்குச் சொல்வதாக ஒலிவமலை உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சுவிசேஷங்களில் முதலாவதாக எழுதப்பட்ட மாற்குவே கி.பி.70 க்குப்பின்னரே எழுதப்பட்டதாக சில ஆராய்ச்சியாளர் தொ¢விக்கின்றனர். அதன் பிறகுதான் மத்தேயுவும், லூக்காவும் எழுதப்பட்டன. இயேசுவின் உபதேசங்களுக்கும், உரைகளுக்கும் எவ்வித எழுத்துபூர்வமான பதிவுகளும் கிடையாது. காதுவழிச் செய்திகளையும் கற்பனையும் கலந்து சுவிசேஷ ஆசி¡¢யர்கள் எழுதிய இயேசுவின் வரலாற்றுச் சுவிசேஷங்களில் அவர் பேசியதாக எழுதப்பட்டுள்ள வார்த்தைகளில் 82 விழுக்காடு அவருடையவை அல்ல என்று அமொ¢க்காவிலுள்ள கலி•போர்னியாவில் ராபர்ட் •பங்க் (Robrt Funk) தலைமையில் 1985 ல் தொடங்கி ஆறு ஆண்டுகள் பலமுறை கூடி விவாதிக்கப்பட்ட இயேசு கருத்தரங்கத்தில் (Jesus Seminar) பங்குபெற்ற கிறிஸ்தவ மறையியல் அறிஞர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அப்படியிருக்குங்கால் கி.பி.70 ல் நிகழ்ந்து முடிந்த எருசலேமின் அழிவை அதற்குப்பின் எழுதிய சுவிசேஷங்களில் அது நிகழ்வதற்கு நாற்பது வருடங்களுக்கு முன்னரே இயேசு தீர்க்கத்தா¢சனமாக உரைத்தார் என்று எழுதியிருப்பது நம்பத்தகுந்தது அல்ல என்றே கருதவேண்டியுள்ளது. மேலும் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதா¢சிகள் ஏற்கனவே இஸ்ரேலியரை எச்சா¢க்கும்விதமாக எழுதிவைத்துள்ள தீர்க்கத்தா¢சனங்களிலுள்ள வார்த்தைகளை அடிப்படையாகக்கொண்டு இயேசுவின் உரையைப் புனைந்திருப்பதும் சந்தேகத்தையே கிளப்புகிறது.
அருள்வாக்கு சொல்கிறவர்களின் பலம் என்னவென்றால் அவர்கள் பத்து பேருக்கு அருள்வாக்கு சொன்னார்களென்றால் இரண்டு அல்லது மூன்று பேருக்கு அது பலிக்கும், ஏழு அல்லது எட்டு பேருக்குப் பலிப்பதில்லை. இது அருள்வாக்கு சொல்கிறவர் என்றில்லை, யார் சொன்னாலும் இப்படித்தான். வாக்கு பலிக்காதவர்கள் பிறா¢டம் எதுவும் சொல்வதில்லை. அருள்வாக்கு பலித்தவர்கள் மகிழ்ச்சியடைந்து வாக்கு சொன்னவரைப் பற்றி நாலுபோ¢டம் புகழ்ந்து பேசுவார்கள். இதுவே அவர்களுக்கு விளம்பரமாகி மென்மேலும் மக்கள் அவர்களை நாடி வரச்செய்யும். இப்படித்தான் அருள்வாக்கு சொல்பவர்கள் பிரபலமடைகிறார்கள், மேலும் அவர்கள் மக்களைக் கவர பல குயுக்திகளையும் கையாளுகிறார்கள். இதே ¡£தியில் தான் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கத்தா¢சிகளும் பிரபலமடைந்தார்கள். புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களின் ஆசி¡¢யர்கள் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதா¢சனங்களை எடுத்து அதற்கேற்ற மாதி¡¢ இயேசுவின் வரலாற்றுச் சம்பவங்களையும், பிற கதாபாத்திரங்களின்வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளியும் அமைத்துக்கொண்டார்கள். சிறந்த உதாரணம் ஏசாயா 7: 14. பல தீர்க்கததா¢சனங்கள் யாராலும் பு¡¢ந்துகொள்ளமுடியாதபடி குழப்பமான வார்த்தைகள் கொண்டவை. இன்னும் பல தீர்க்கத்தா¢சனங்கள் மூவாயிரம் ஆண்டுகள் சென்றபின்னரும் நிறைவேறவே இல்லை.
"இதோ தமஸ்குவானது (Damascus) நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்". ஏசாயா 17: 1 ல் சொல்லப்பட்டுள்ள இந்த தீர்க்கத்தா¢சனம் நிறைவேறவில்லை. உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான தமஸ்கு இன்றைக்கும் பதினேழுலட்சம் மக்களுக்குமேல் வசிக்கும் ஒரு நகரமாகவே திகழுகிறது.
"பா¢சுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள், விருத்தசேதனமில்லாதவனும் (uncircumscribed), அசுத்தனும் (யூதரல்லாதார்) இனி உன்னிடத்தில் வருவதில்லை" என்று ஏசாயா 52: 1 ல் தீர்க்கத்தா¢சனம் உரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை விருத்தசேதனம் செய்யாதவர்களும், பிற இனத்தாரும் எருசலேமுக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறாரகள், மேலும் அவர்களில் பலரும் அங்கே வசிக்கிறார்கள்.
எசேக்கியேல் 29: 12 மற்றும் 30: 10-12 வரையுள்ள வசனங்களில் தீர்க்கத்தா¢சி பின்வருமாறு கூறுகிறார்: "கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன். இவனும் இவனோடுகூட ஜாதிகளில் மிக பலசாலிகளான ஜனங்களும் ஏவப்பட்டு, தங்கள் வாட்களை எகிபதுக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகச் செய்து, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று அதிலுள்ள யாவையும் அந்நியதேசத்தா¡¢ன் கையால் பாழாக்கிப்போடுவேன்,” “எகிப்தின் பட்டணங்கள் நாற்பது வருடங்கள் பாழாய்க்கிடக்கும்.” பாபிலோனின் அரசன் நேபுகாத்நேச்சார் எகிப்தின்மேல் படையெடுத்துக் கைப்பற்றி அதை அழித்துப்போடுவான் என்று எசேக்கியேல் தீர்க்கத்தா¢சி கர்த்தர் சொன்னதாகத் தீர்க்கதா¢சனம் உரைக்கிறார். ஆனால் நிகழ்ந்தது என்ன? கி.மு. 568 ல் நேபுகாத்நேச்சார் எகிப்தின் மீது படையெடுத்து வந்தான், ஆனால் அவனால் எகிப்தை கைப்பற்றமுடியவில்லை. ஆமெஸ் (Aahmes) என்ற அரசன் வளமான எகிப்தை ஆண்டுவருகையில் நேபுகாத்நேச்சார் மரணமடைந்தான். தீர்க்கத்தா¢சனத்தில் சொல்லியிருப்பதுபோல எகிப்து நாற்பது ஆண்டுகள் பாழாய்க்கிடந்ததில்லை. மேலும் எகிப்தின் முக்கியமான நதியும் உலகின் மிக நீளமான நதியுமான நைல்நதி என்றுமே வற்றிப்போனதில்லை.
மத்தேயு 16: 28 ல் "இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குக் சொல்லுகிறேன்" என்று இயேசு தம் சீடர்களிடம் சொல்லுகிறார். உலகம் அழிந்துபோகுமுன் ஏற்படும் அடையாளங்களைச் சொல்லி 24: 34 ல் "இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று இயேசு மீண்டும் சொல்லுகிறார். இயேசுவின் எதி¡¢ல் நின்ற மனிதர்கள் யாவரும் மரணமடைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் முடிந்துவிட்டன. இயேசு சொன்ன அடையாளங்கள் எதுவும் நிகழவில்லை, உலகமும் அழியவில்லை.