Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Jesus Birth - Bethlehem or Nazareth ?? இயேசு- பெத்லஹேமில் பிறந்தாரா? நாசரேத்திலா?


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Jesus Birth - Bethlehem or Nazareth ?? இயேசு- பெத்லஹேமில் பிறந்தாரா? நாசரேத்திலா?
Permalink  
 


 1:5 இயேசு- பெத்லஹேமில் பிறந்தாரா? நாசரேத்திலா?

மத்தேயு சுவி கதை முன்னோர் பட்டியலில் துவங்கி யாக்கோபு மகன் ஜோசப் - மனைவி மேரியின் முதல் மகன் ஏசு என்கிறார், பிறகு அது பெத்லஹேமில் என்கிறார்.ஏசு எங்கு எந்த ஊரில் பிறந்தாலும் சரி, நாம் பார்ப்பது சுவிசேஷக் கதைகள் கூறுவது வரலாற்று முறையில் ஏற்கத் தக்கவையா எனத் தான்.

 

ஜோசப் பெத்லஹேமில் வசித்தவர் எனக் கூறாமல் இதை வெளிநாட்டு ஜோதிடர்கள் யூதர்கள் ராஜா பிறப்பு நட்சத்திரம் பார்த்து வந்தார்கள் எனும் கதையில் ஜெருசலேம் வந்து ஏரோதைக் கேட்க யூதப் பாதிரிகள் தொன்மக்கதை வசனம்படி பெத்லஹேமில் என்றிட, அவர்கள் அவ்வூர் செல்ல மீண்டும் நட்சத்திரம் வழி காட்டியதாம், இக்கதையின் முக்கியம் என்ன ஏரோது யூத ராஜா பிறப்பு அறிந்து குழந்தை கொலை செய்ய, இதற்காக எகிப்து ஓடி பின் நாசரேத் செல்கிறார் ஜோசப் குடும்பம்.. இதை ஆராயும் முன் லூக்கா சொல்வதைப் பார்ப்போம்.

 

லூக்கா கதையில் நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப். அகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரியா கவர்னர் கிரேனியு கீழ் யூதேயா இருந்த போது மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ஜோசப் பெத்லஹேம் வருகையின்[ii] போது பிறப்பு.

 

இரண்டு கதாசிரியர்களும் இரு வெவ்வேறு (90மைல் தள்ளி உள்ள) ஊரைச் சேர்ந்த தாய் தந்தையைக் கூறுகிறார்கள். யாக்கோபு மகன் ஜோசப்பும்- ஏலீ மகன் ஜோசப்பும் ஒருவரே என்றால் நடுநிலையாளர் யாரும் ஏற்க இயலாது.

 

லுக்காவின் நாசரேத் வாழும் ஏலியின் மகன் யோசேப்பு  மக்கள் தொகை கணக்கிடுக்காக பெத்லஹேம் வந்தாராம். பெரிய ஏரோது மரணத்திற்குப் பின் நாடு பிரிக்கப்பட்டு[iii] யூதேயா ஆர்கிலேயு[iv] கீழும், கலிலேயா அந்திப்பா கீழும் பிலிப்பு கீழ் மீதம் என ஆனது, ஏரோது அந்திப்பா  ஆட்சி ஏற்ற பின்  தன் தலைநகராய் கலிலேயாவின் செபோரிஸ் எனும் ஊரை ஆக்க கலிலேயர் எனும் ஆயுதம் ஏந்தியக் கூட்டம் தாக்க ஏரோது[v] சிரியா கவர்னர் குன்சிடிஸ் வருஸ் படை தர கிளர்ச்சியை அடக்கினார். 2000 பேரை கொன்று தூக்குமரத்தில் நிர்வாணமாய் சிலுவையிலிட்டார், இது நாசரேத் அருகே.

 

ஆர்கிலேயு ஜெருசலேமில் பொகா 6ல் பஸ்கா பண்டிகைபோது[vi] கலிலேயன் யூதா தலைமையில்[vii] நடந்த ஓர் கலவரத்தை சரியாக அடக்கவில்லை என ரோம் தன் நேரடி ஆட்சி கீழ் யூதேயா கொணர்ந்தது, முதலில் சிரியா கவர்னர் கிரேனியு யூதேயாவை ஆண்டார். வரிவித்திப்பை அதிகரிக்க, மக்கள் தொழில் சொத்துக்களை அறிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கிரேனியு தலைமையில், அதாவது பொ.கா. 7ல் தான் நடந்ததாம்.

 

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: Jesus Birth - Bethlehem or Nazareth ?? இயேசு- பெத்லஹேமில் பிறந்தாரா? நாசரேத்திலா?
Permalink  
 


மத்தேயுவோ ஏசு பிறப்பை பெரிய ஏரோது காலத்தில்அதாவது பொ.மு.6ல் என்கிறார். மத்தேயுவின்படி பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீடுஎனவே தான்போப்பரசர் பெனடிக்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மாட்டுத் தொழுவம்[viii] நீக்கினார்.

 

ஏசுவிற்கு ரோமன் முறையான தூக்குமரத்தில் தொங்கவிடுதலின்போது நிருபிக்கப் பட்ட குற்ற-அட்டையை ரோமன் கவர்னர்[ix] தன் கைப்பட "நச்ரேயன் ஏசு- யூதர்களின் ராஜா" என எழுதினார்.. இதில் உள்ள நசரேயன் என்பதை நாசரேத் ஊர்க்காரன் எனக் கொண்டார் மாற்குஅதாவது 30 வயது வாக்கில் ஏசு நாசரேத் ஊரிலிருந்தவர்ஆனால் மீகா வசனம் கொண்டு மேசியா பெத்லஹேமில் பிறக்கவேணும் எனவும் கதை தேவை.

 

மத்தேயு கதாசிரியர் ஜோசப்பை பெத்லஹேம் ஊர்க்காரர் ஆக்கினார். தேவை - நாசரேத் அனுப்பவேணும்- கதை ஜோசியர் - குழந்தை கொலை எனவே எகிப்து ஓடல், ஆனால் யூதேயாவை ஏரோது மகனே ஆண்டதால் நாசரேத் சென்றார்களாம். நாம் மேலே பார்த்தோம் நாசரேத் மிக அருகே செபோரிஸ் தலைநகராய் கொண்டு ஆண்டதும் ஏரோது மகன் தான்.

 

லூக்கா கதாசிரியர் ஜோசப்பை நாசரேத் ஊர்க்காரர் ஆக்கினார். தேவை - பெத்லஹேம் அனுப்பவேணும்- கதை  மக்கள் தொகை கணக்கெடுப்புஆனால் இதனால் 12 -13 வருடம் பின் செல்லுதலும் குடிமதிப்பின் காரணமும் இதன் பொய்மையை தெளிவாக்கும். பெத்லஹேமில் தங்க விடுதி கிடைக்காததால் மாட்டுத்தொழுவத்தில் தோவனத் தொட்டியில் பிறந்தார் எனக் கதை.

 

கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர்[x] J.C. கேடவுக்ஸ் கூறியது- ஏசுநாசரேத்தில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன்நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்புபெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தனஇவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை.

 

நாசரேத் என்பதை ஒரு நகரம் (ஊர்) என மத்தேயு லூக்கா  சொல்கின்றனர்லூக்கா[xi] அங்கே ஜெபக் கூடத்தில் தோரா ஏட்டைப் படிக்க வைக்கும் சம்ப்வம் ஒன்றும்அங்கே ஏசுவை மலைமேலுள்ள தள்ளிவிட முயன்றதாகவும் கதை.

நாசரேத் எனும் பெயர் 3ம் நூற்றாண்டு இறுதிக்கு முன் ரோம்கிரேக்க எபிரேய பதிவுகளில் எதிலும் இல்லை. வாடிகன் அனுப்பிய சில பாதிரிகள் தொல்லியல் அகழ்வாய்வுகள் செய்ததாய் ஏசு கால ஆதாரங்கள் என ஆரவாரமாய் பரப்பிய எந்த ஒரு தரவும் கார்பன் 14 ஆய்வுக்கு உட்படுத்தி சோதனை செய்யப்படவில்லை. நடுநிலையாளர்படிஅங்கே மனிதக் குடியேற்றம் 2ம் நூற்றாண்டு பிற்பகுதி தான் என்கின்றனர். வாடிகன் சர்ச் மழுப்பலாளர்கள் முதல் நூற்றாண்டில் அது சிறு கிராமம், 400 மக்கள் கொண்டது என கதை சொல்வதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது.

 

நாசரேத்தில் உள்ள அனைத்து முக்கிய சர்ச் எல்லாமே நாலாம் நூற்றாண்டூ அல்லது பிற்பட்டவை என ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக நூல் ஜோன் டெய்லர்[xii] எழுதிய கிறிஸ்துவர்களின் முக்கிய வழிபாட்டு தலங்களின் நூலில் ஆதாரங்களோடு மெய்பித்துள்ளார்நாசரேத் கதை முழுதும் கட்டுக் கதை. நாசரேத் அகழ்வு ஆய்வுகளை சரியானபடி விஞ்ஞான ஆய்வு பற்றிய ஒரு வலை[xiii] இணைப்பு.  

 

பைபிளியல் அறிஞர்கள் கூற்று.

ஆனால்  நடுநிலை பைபிளியல் அறிஞர் தொடர்பான மேலும் பல வசனம் சேர்ந்து ஆராய  இரண்டுமே நம்பத் தகுந்தது அல்ல என்கின்றனர்.

பெத்லஹேமில் உள்ள ஏசு பிறந்த குகை சர்ச் 4ம் நூற்றாண்டு வரை கிரெக்க கடவுள் தம்முஸ்-அடொனிஸ் கடவுள் கோவிலாய் இருந்ததை பிடுங்கி மாற்றியது என்பதை 5ம் நூற்றான்டில் ஜெரோம் எழுதியுள்ளார்அது ஏசு காலம் முன்பே தம்முஸ் அடொனிஸ்  கோவிலாய் தான் இருந்தது என ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக நூல் ஜோன் டெய்லர்[xiv] எழுதிய கிறிஸ்துவர்களின் முக்கிய வழிபாட்டு தலங்களின் நூலில் ஆதாரங்களோடு மெய்பித்துள்ளார்.

 

இயேசு சீடரோடு இயங்கிய பெரும்பாலும் கப்பர்நகூமில்[xv] தான் இருந்தார், கப்பர்நகூம் ஏரி அருகேஏரோது துரத்தினால் தப்ப எளிது என்கிறார்[xvi]பைபிளியல் அறிஞர் F.F.ப்ருஸ்.

 

பழைய ஏற்பாட்டில் நசரேய விரதம்[xvii] என ஒன்று உள்ளதுசிம்சோன்[xviii] அதை மேற்கொண்டவர்ஏசுவும்அவர் சீடர்களும் அதை கைகொண்டதை குற்ற அட்டை சொல்லி இருக்கலாம். சுவிசேஷங்கள் பல இடங்களில்  ஏசு கலிலேயாவின் கடற்கரை ஓரம் கேப்பர்நகூமில் தங்கியவர் எனக் கூறுகிறது. அதாவது பெத்லஹேமும் இல்லை நாசரேத்தும் இல்லைநசரேய விரதம் மேற்கொண்டார் என்பதை நசரேயன் எனக் கொள்ள ஒரு கற்பனை ஊர் சுவி-கதைகளுள் வந்தது.


கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசுஇந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லைஇதை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது

 “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.



 மீக்கா 5:2

[ii] லூக்கா 2:1-7

[iii] லூக்கா 3:1.

[iv] மத்தேயு 2:22

[v] The Real Jesus, F.F.Bruce, Page-39

[vi] The Real Jesus, F.F.Bruce, Page-38

[vii] அப்போஸ்தலர் நடபடி 5:37-38

[ix] யோவான் 19:19-20

[x] “Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

[xi] லூக்கா 4:16இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.     28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோதுசீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்துஅவரை ஊருக்கு வெளியே துரத்திஅவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்

[xii] .(Joan Taylor – Christain and the Holy Places Pages 221-267)

[xiii] http://www.nazarethmyth.info/

[xiv] .(Joah Taylor – Christain and the Holy Places Pages 95-112)

[xv] மாற்கு 1:21; 2:1 & 9:33

[xvi] The Real Jesus, F.F.Bruce, Page-38. But for one who lived besides the lake of Galilee, as Jesus did during the greater part of his ministry, it was easy to escap Antipas attention by taking a shop to the other side, to the territory of his brother Philip, where there were no such tensions as troubled both Galilee and Judaea.

[xvii]எண்ணாகமம் 6:1-21

[xviii] நியாயாதிபதிகள் 13:5 & சாமுவேல் 1:11



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard