Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வரலாற்று இயேசு கிறிஸ்து யார்?


Guru

Status: Offline
Posts: 7467
Date:
வரலாற்று இயேசு கிறிஸ்து யார்?
Permalink  
 


வரலாற்று இயேசு கிறிஸ்து யார்?

புதிய ஏற்பாடு கதைகளின் நாயகன் ஏசு பற்றி முதலில் புனையப்பட்ட மாற்கு சுவி 70- 75 வாக்கிலானது, கதைப்படியான ஏசு மரணம் 30 வாக்கிலானது. மாற்கு சுவியில் கலிலேயர் ஏசு யூதேயாவின் வனாந்திரத்தில் வாழ்ந்த யோவான் ஸ்நானனைத் தேடி சென்று அவரிடம் பாவமன்னிப்பு அறிக்கை செய்து ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கும்.
jesusspectrum.jpg

 

மாற்கு1:4திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
 
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 – 17; லூக் 3:21 – 22)

9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

மாற்கு சுவியில் ஏசு ஒரு தச்சர் என்றும், 3 சகோதரர்கள், சில சகோதரிகள் கொண்டவர் எனவும் உள்ளது.

 மாற்கு6:1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.


மாற்கு சுவியில் ஏசு வீட்டினருடன் அவருக்கு மேன்மையான உறவு இல்லை எனக் காட்டும் வசனங்களும் உண்டு.

மாற்கு3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
 
இயேசுவின் உண்மையான உறவினர்
(மத் 12:45 – 50; லூக் 8:19 – 21)

31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ‘ அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ‘ என்று அவரிடம் சொன்னார்கள்.33 அவர் அவர்களைப் பார்த்து, ‘ என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ‘ இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ‘ என்றார்.





__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

ஏசு பிறப்பு பற்றி மாற்கு சுவியில் கதை கிடையாது.

லூக்கா  சுவிசேஷம்
மத்தேயு சுவிசேஷம்
ஆபிரகாம்
1. ஆபிரகாம்
ஈசாக்கு
2. ஈசாக்கு
யாக்கோப்பு
3. யாக்கோப்பு
யூதா
4. யூதா
பெரேட்சு
5. பெரேட்சு (தாமாருக்கு)
எட்சரோன்
6. எட்சரோன்
ஆர்னி
7. ஆராம்
அத்மின்
8. அம்மினதாபு
அம்மினதாப
9. நகசோன்
10 நகசோன்
10. சல்மோன்(ஆராகாபுக்கு)
11 சாலா
11. போவாசு
12 போவாசு
12. ஓபேது (ருத்துக்கு)
13 ஓபேது
13. ஈசாய்
14 ஈசாய்
14. தாவீது
15 தாவீது
15. சாலமோன். (உரியாவின் மனைவியிடம் )
16 நாத்தான்
16. ரெகபயாம்
17 மத்தத்தா
17 அபியாம்.
18 மென்னா
18 ஆசா.
19 மெலேயா
19 யோசபாத்து.
20 எலியாக்கிம்
20 யோராம்
21 யோனாம்
21 உசியா
22 யோசேப்பு
22 யோத்தாம்
23 யூதா
23 ஆகாசு.
24 சிமியோன்
24 எசேக்கியா.
25 லேவி
25 மனாசே
26 மாத்தாத்து
26 ஆமொன்
27 யோரிம்
27 யோசியா.
28 எலியேசர்
28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை)
29 ஏசு
29 செயல்தியேல்
30 ஏர்
30 செருபாபேல்
 
 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

31 எல்மதாம்
31 அபியூது
32 கோசாம்
32 எலியாக்கிம்
33 அத்தி
33 அசோர்.
34 மெல்கி
34 சாதோக்கு.
35 நேரி
35 ஆக்கிம்
36 செயல்தியேல்
36 எலியூது
37 செருபாபேல்
37 எலயாசர்.
38 ரேசா
38 மாத்தான்.
39 யோவனான்
39 யாக்கோபு.
40 யோதா
40 யோசேப்பு. (மரியாவின் கணவர்)
41 யோசேக்கு
41 யேசு
42 செமேய்
 
43 மத்தத்தியா
 
44 மாத்து
 
45 நாகாய்
 
46 எஸ்லி
 
47 நாகூம்
 
48 ஆமோசு
 
49 மத்தத்தியா
 
50 யோசேப்பு
 
51 யன்னாய்
 
52 மெல்கி
 
53 லேவி
 
54 மாத்தாத்து
 
55 ஏலி
 
56 யோசேப்பு
 
57 யேசு
 


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

80- 90 களில் புனையப்பட்ட மத்தேயு சுவி கதையின் சாரம்

மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்
1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன்ஜோசப்
தந்தை முன்னோர் ஆபிரஹாம்யாக்கோபுயூதா– தாவீது பரம்பரை
தாவீது உறவு முறை தாவீது– மற்றும் படைவீரன் உரியாவின் மனைவிபெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் மன்னர் பெரிய ஏரோதுஇவர் இறந்தது .கா.மு.4 இல்.
சூழ்நிலை சோகம்
வரலாற்று சம்பவம் ஏரோது மன்னர் இரண்டு வயதுக்கு கீழானகுழந்தைகளைக் கொலை செய்தல்
10 கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபுமகன் ஜோசப் கனவில் வந்ததான தேவதூதன் சொன்னதாக
11 அதிசயக் கதைகள் கிழக்கிலிருந்த நாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம்பார்த்துயூதர்களின் ராஜா பிறப்பைக் கணித்துகுழந்தை காணஜெருசலேம் வந்து ஏரோது மன்னரைப் பார்த்துபின் பெத்லஹேம்செல்ல– மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு வீடி சென்றுபின் நேராக தன் நாடு சென்றனர்.
12 ஏசு பிறந்த பின்னர் கனவில் எச்சரிக்கப்பட ஏரோது மன்னர்குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்துஓடல்.
13 
வாழ்வு –ஆரம்பம்பின் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்தயாக்கோபு மகன் ஜோசப் ஏரோது மன்னருக்கு பயந்து எகிப்து நாட்டில் ஏசுவாழ்வு ஆரம்பம்.ஏரோது மரணத்திற்குப் பின் யூதேயா வராமல்கலிலேயா சென்று நாசரேத்தில் வாழ்ந்தனர்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 85 -95 களில் புனையப்பட்ட லூக்கா சுவி கதையின் சாரம்.

 
 
லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி
தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.3 தந்தைமுன்னோர் ஆபிரஹாம்யாக்கோபுயூதாதாவீதுபரம்பரை
தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்றமகன் நாத்தன் வரிசையில் ஏசு
தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை
பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்
ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் சிரிய நாட்டின் கவர்னர்குரேனியு என்பவர்– இவர் பதவி ஏற்றது .கா.6 இல்.
சூழ்நிலை மகிழ்ச்சி
வரலாற்று சம்பவம் ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரியநாட்டின் கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (.கா.8)
10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்பிற்குநிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன்
11 
அதிசயக் கதைகள் அறுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும்சிறுவர்நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்துகிரேக்க மொழியில் பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.
12 ஏசு பிறந்த பின்னர் குடும்பத்தில் முதல் மகன் ஆண் மகன்என்பதற்காக ஜெருசலேம் யூதக் கடவுள் ஆலயத்தில் யூதப் புராணசட்டப்படி மிருகபலி கொலை செய்ய தம்பதிகள் சென்றனர்
13 
வாழ்வு –ஆரம்பம்பின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்,மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வந்து பின் மிருகக்கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர்நாசரேத்தில் வாழ்ந்தனர்

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

இந்த இரண்டு கதைகளும், இறந்த மனிதன் ஏசு, தாவீது பரம்பரையினர் எனக் காட்ட, தாவீது வரிசை ஜோசப் குமாரன் எனப் பட்டியல் வரைந்துள்ளனர். 

ஏசுவின் ரோம் ஆட்சியின் நிருபிக்கப்பட்ட குற்ற அட்டை நசரேயன் ஏசு- யூதர்களின் ராஜா என்றிட- அதை லூக்கா-ஜோசப் நாசரேத்தில் வாழ்ந்தவர் பெத்லஹேமில் ஏசு பிறக்க வைக்க கதை உருவாக்கினார்.
மத்தேயு பெத்லஹேமில் வாழ்ந்த ஜோசப் அங்கே பிரசவம் பார்த்து பின்னர் நாசரேத் வர  கதை உருவாக்கினார். 
பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica. 

“The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.”  – Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary New York 
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார். 
images?q=tbn:ANd9GcQtzDJNnJKw4LmnuEEqlZ9  images?q=tbn:ANd9GcSGRZICOb7VdQMujINljtK

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
 
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இதை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது
 “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.

http://pagadhu.blogspot.com/2012/10/100.html



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 

மாற்கு சுவிசேஷமும் வரலாற்று(?) இயேசு கிறித்துவும்

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் இயேசு என்பவர் வாழ்ந்தார்  என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்று ஏதும்  கிடையாது.  30 வாக்கில் மரணமடைந்த   இயேசு பற்றி முதலில் புனையப்பட்டது மாற்கு சுவிசேஷம். 70-75 வாக்கில். ஏசு இறந்து 40 வருடம் பின்பு தான் முதல் சுவிசேஷத்தின் பழைய வடிவம் புனையல் ஆரம்பித்தது.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேதாகமவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.
images?q=tbn:ANd9GcQtzDJNnJKw4LmnuEEqlZ9images?q=tbn:ANd9GcSGRZICOb7VdQMujINljtK
பெரும்பாலன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி) மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் (Q) ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன.

 

நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேணடும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு,பவுல் போனற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

மாற்கு சுவியில் ஏசு பிறப்பில் அதிசயம் பற்றி ஏதும் கிடையாது. ஏசுவின் மலைப் பிரசங்கம் கிடையாது.

கலிலேயாவில் வாழ்ந்த ஏசு, 100 மைல்கள் நடந்து யோவான் ஸ்நானகனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்குகிறது

(மத் 3:13 – 17; லூக் 3:21 – 22)

மாற்கு1:.4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்;தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ‘ என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ‘ எனப் பறைசாற்றினார். 9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 பிறகு ஏசு 40 நாள் உபவாசமிருந்து வர சாத்தான் வந்து சோதிக்க யோவான் கைதாகிட கலிலேயா வந்து சீடர் சேர்க்கிறார்.

இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மத் 4:12 – 17; லூக் 4:14 – 15) முதல் சீடர்களை அழைத்தல் (மத் 4:18 – 22; லூக் 5:1 – 11)

மாற்கு1:14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ‘ காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ‘ என்று அவர் கூறினார். 16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள்.17 இயேசு அவர்களைப் பார்த்து, ‘ என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ‘ என்றார்.18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

பிறகு ஏசு 40 நாள் உபவாசமிருந்து வர சாத்தான் வந்து சோதிக்க யோவான் கைதாகிட கலிலேயா வந்து சீடர் சேர்க்கிறார். பின்னர் மேலுமாக 12 சீடர் சேர்த்து முழுமையாக கலிலேயாவில் இயக்கம் நடத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்கு கர்த்தர் என்னும் சிறு எல்லை தெய்வம் இருக்கும் ஒரே ஒரு இடமான ஜெருசலேம் யூதாலயத்தில், எகிப்தின் சிறு குழந்தைகளை கொலை செய்தார் என்பதற்கு நன்றியாக வருடாவருடம் ஒவ்வொரு யூதரும் ஆடு கொலை செய்து பலி தர ஜெருசலேம் செல்ல வேண்டும். மாற்கு சுவியில் ஏசு யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபின் வந்த முதல் பஸ்கா ஆடு கொலை செய்து பலி தர செல்கையில் போது கைதாகி மரணம், அதாவது ஏசு சிடரிடம் இருந்து இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு.
The Real Jesus நூலில் பேராசிரியர் F F புரூஸ்
Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.
பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
 
மாற்கு15: 16 சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.44 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ‘ நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ‘ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.45 அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ‘ ரபி ‘ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.

ஆனால் நான்காவது சுவியான யோவான் சுவியின்படி, ஏசு கைதான மறுநாள் தான் பஸ்கா பண்டிகை. கைது செய்தது ரோமன் படைவீரர்கள், ஆயிரம் வீரர் தலைவர்.

யோவான்18:  3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.   
12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
28 அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை.

ஆயிரம் படைவீரர் தலைவர் ஏசுவை கைது செய்யவந்தார் எனில் முழுமையாக ரோமன் கவர்னர் ஆணையில் தான்.
images?q=tbn:ANd9GcTuUROVOwPX2uQ8_pTUOb5 images?q=tbn:ANd9GcQ8X2LPGXF-hPUDxhgoArX

 யூதேயா ரோமன் கவர்னர் கீழ் நேர் ஆட்சியின் கீழ் இருந்தது, இங்கே ஏசு இல்லை, கைது செய்தது யூதர் என மாற்கு ஏன் பொய்யாய் மோசடியாய் புனைந்தார்.
ஏசு யோவான் ஸ்நானகன் கைதிற்குபின் தான் இயக்கம் தொடங்குவதாகவும், அடுத்து வந்த பஸ்காவில் மரணம் எனவும் மாற்கு சொல்ல, ஏசு இயக்கம் தொடங்கியபின் ஸ்நானகன் வருவதாகவும் 4ம் சுவியில் உள்ளது. ஏசு 3 பஸ்கா பண்டிகைகளுக்கு யூதேயா வருவதாகவும் கதை தருகிறார்.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்–
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடுஇயங்கிய துகலிலேயாவி ல்என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாகமரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் –ஞானஸ்நானர்யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில்யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்–பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும்யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//
 
நாம் புரிந்து கொள்வது – மாற்கு சுவிசேஷக் கதாசிரியர் இயேசுசீடர்களோடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை. 

இது வேண்டுமென்ற மோசடியா, மாற்கு கதாசிரியருக்கு உண்மை தெரியவில்லையா?


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

அப்போஸ்தலர்4:13 பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்: அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர். பைபிளில் உள்ளதை அறிந்தும், முதல் நூற்றாண்டின் நிலைமையை ஆராய்ந்த அறிஞர்கள் கூறியது வைத்து தான் இது சொல்லப்பட்டது



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
இயேசு – மனிதன் கடவுளான புனையல்களே சுவிசேஷங்கள்
Permalink  
 


இயேசு – மனிதன் கடவுளான புனையல்களே சுவிசேஷங்கள்

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் இயேசு என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்று ஏதும்  கிடையாது.  30 வாக்கில் மரணமடைந்த இயேசு பற்றி முதலில் புனையப்பட்டது மாற்கு சுவிசேஷம். 70-75 வாக்கில். 
பவுலால் ஆரம்பிக்கப்பட்டது மதம்

 ஏசு சீடர்களால் அல்ல
  images?q=tbn:ANd9GcS_P0F8P9bzXoYc52wEZcf images?q=tbn:ANd9GcTQ1fzO0A_doXB7eFMsptY

அதில் சொன்னதை மற்ற கதாசிரியர் மாற்றிப் புனைதல் காண்போம்

images?q=tbn:ANd9GcReHbBsnc61wqFjtQo-v1V    images?q=tbn:ANd9GcRsbD2BLtax9l4Qja1yGXj

 

மாற்கு8: 27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ‘ நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ‘ என்று கேட்டார்.28 அதற்கு அவர்கள் அவரிடம், ‘ சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ‘ என்றார்கள்.29 ‘ ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ‘ என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ‘ நீர் மெசியா ‘ என்று உரைத்தார்.30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
 
லூக்கா 9:20 ‘ ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? ‘என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ‘ நீர் கடவுளின் மெசியா ‘ என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
 
. 

 

 
மேசியா- கிறிஸ்து எனில் யூதர்களின் அரசன்(ராஜா) மட்டுமே- அப்படித்தான் இரு கதாசிரியர் சொல்ல மத்தேயு மட்டும் மாற்றிப் புனைவதைப் பார்ப்போம்.

 

13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ‘ மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ‘ என்று கேட்டார்.14 அதற்கு அவர்கள், ‘ சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ‘ என்றார்கள்.15 ‘ ‘ ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ‘ என்று அவர் கேட்டார்.16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ‘ நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ‘ என்று உரைத்தார்,அதற்கு இயேசு, ‘ யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா..
 

 

 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
RE: வரலாற்று இயேசு கிறிஸ்து யார்?
Permalink  
 


மாற்கு சுவிசேஷம் ஒரு இடத்தில் கூட சீடர்கள் ஏசுவை கடவுள் மகன் என அழைப்பதில்லை. யுதரல்லாத ரோமன் படையின் நூற்றுவர் தலைவர்  இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்- கடவுள் மகன் என்றதாக மாற்கு புனைகிறார்
லூக்கா சுவி ரோமன் ஆட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு எழுதப் பட்டது அதில் கடவுள் மகன் இல்லை, ரோமன் படையின் நூற்றுவர் தலைவர், ‘ இவர் உண்மையாகவே நேர்மையாளர்.  ‘ என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் என மாற்றப் பட்டது.
 
images?q=tbn:ANd9GcQrcGNcY9t-5LfhaooVZUH    images?q=tbn:ANd9GcRHubBJwH4XZk3qmOKVmCO  images?q=tbn:ANd9GcQfyqto8D0I2rkMNXYrFEzimages?q=tbn:ANd9GcTuQucSjDxWTJ-FSMMljTy
 
 மாற்கு 15: .34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ‘என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘என்பது அதற்குப் பொருள்.

39 அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த ரோமன் படையின் நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ‘ இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார். 

 
 லூக்கா 23:46 ‘ தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ‘ என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.47 இதைக்கண்ட ரோமன் படையின் நூற்றுவர் தலைவர், ‘ இவர்உண்மையாகவே நேர்மையாளர்.  ‘ என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
 

மத்தேயு சுவி கதாசிரியரோ ஒரு பூகம்பம்அதில் இறந்த இறைமக்கள்பலரின்  ஜெருசலேம் கல்லறைகளிலிருந்து வெளியே வந்துஜெருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்,4நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும்நிலநடுக்கத்தையும் நிகழ்ந்த யாவற்றையும் கண்டுமிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் என்றார்கள்..

images?q=tbn:ANd9GcSlsLkKT0Xn1z2GJew4IkX   images?q=tbn:ANd9GcThsRBwaDP2I96hLLoZ2-5 

 

 மத்தேயு 27: 45 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.46 மூன்று மணியளவில்இயேசு, ‘ ஏலி, ஏலி லெமா சபக்தானி? ‘ அதாவது, ‘ என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘ என்று உரத்த குரலில் கத்தினார்.  50 இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.  ர்.51 அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன.52 கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.53 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.54 ரோமன் படையின் நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்கள் .

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது.எனவேஇவர்தேவனுடைய ராஜ்ஜியம்” என எழுதாமல்பரலோகராஜ்ஜியம்” என்றே இயேசு சொன்னதாகச் சொல்வார். 10கட்டளையில் என் பெயரை வீணாக சொல்ல வேண்டாம்என்பதை மனதில் கொண்டு.அப்படி இருக்க பேதுரு மத்தேயுவில்உள்ளபடி சொல்லியிருக்கவே முடியாது.
 
 
மாற்கு14:61 61 ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு, ‘ போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ? ‘ என்று   அவரைக் கேட்டார்.62அதற்கு இயேசு, ‘ நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘ என்றார்.
யோவான் 20:28 28 தோமா அவரைப் பார்த்து, ‘ நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ‘ என்றார்.29 இயேசு அவரிடம், ‘ நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ‘ என்றார்.

 

 
மேசியா என்றால் யூதர்களின் ராஜா– அவ்வளவே,அப்படியிருக்க  தேவனுடைய ராஜ்ஜியம் என்பதே தவறுஎன்கையில் தோமோவோயூத மதப் பாதிரி சங்கத்தலைவரும் தேவகுமாரன் எனக் கேட்டிருக்கவேமுடியாது.
 
அப்படி பேசியிருந்தால் ஏசுவை நாம் ஆராய்ந்தால்உபாகமம்13:1-18  கூறும்படி தீர்க்கராகத் தான்பார்க்கலாம்.
 
இவை எல்லாம் கிரேக்க சர்ச் உளறும் புனையல்கள்எனநடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.


நிலநடுக்கத்தையும் இறந்த இறைமக்கள் பலரின் ஜெருசலேம் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து மற்ற எந்த புதிய ஏற்பாடு புத்தகத்திலும்கிடையாதுஅனைத்தும் வெற்றுப் புனையல்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

நான்கு சுவிசேஷங்களும், நான்கு வகையான பிரிவினருக்காக எழுதப்பட்டது என்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள்.

1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.

2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.

3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.

4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 Richard-//1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.//

ரிச்சர்ட்- கிழுள்ள பைபிள் இணைய தளம் பக்கம் சொல்வது- மத்தேயு கிரேக்கத்தில் தான் புனையப்பட்டது.
http://arulvakku.com/biblecontent.php?book=Mat&Cn=1

தங்கள் பதிவு ஒரு விஷயத்தை சேர்க்கச் செய்தது.மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக, எனவே இவர் “தேவனுடைய ராஜ்ஜியம்” என எழுதாமல் “பரலோக ராஜ்ஜியம்” என்றே இயேசு சொன்னதாகச் சொல்வார். 10 கட்டளையில் என் பெயரை வீணாக சொல்ல வேண்டாம் என்பதை மனதில் கொண்டு.

அப்படி இருக்க பேதுரு மத்தேயுவில் உள்ளபடி சொல்லியிருக்கவே முடியாது.
அதே போல யூத மதப் பாதிரி சங்கத் தலைவரும் மாற்கு14:61 உள்ளபடி கேட்க முடியாது. ஏனெனில் கிறிஸ்து என்றால் யூதர்களின் ராஜா மட்டுமே.
யோவான்20:28 தோமாவும் சொல்லொவே முடியாது, இவை எல்லாம் கிரேக்க சர்ச் உளறும் புனையல்கள், என நடுநிலை பைபிளியல் அறி-ஞர்கள் ஏற்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

கிறிஸ்துவ சமயத் தொன்ம நாயகர் எபிரேயர் ஏசு பற்றி நம்மிடம் பரவியுள்ள கதைகள் அனைத்திற்கும் ஒரே மூலம் மதம் பரப்ப கிரேக்க மொழியில் வரையப்பட்ட சுவிசேஷக் கதைகள் மட்டுமே. இந்த சுவிசேஷக் கதைகளை இயற்றியவர்கள் யாரும் ஏசுவைப் பார்த்தவர்களோ, ஏன் ஏசுவோடு நேரடியாக அறிந்தவர்களோ இல்லை. எல்லாமே ஏழுவின் மரணத்திறுகு 3ம் தலமுறைக்கு பின்னர் புனையப் பட்டவை என அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஏசுவின் வாழ்க்கை சம்பவக் கதைகள் என நான்கு கதாசிரியர்கள் பெயரில் சுவிசேஷங்கள் (நல்ல கதை) என உள்ளன. இவற்றினை ஆராய்ந்து எப்படி இக்கதைகள் உருவாக்கப் பட்டன என மிகவும் பெரும்பான்மையான பைபிளியல் அறிஞர்களும் பன்னாட்டு பல்கலைக் கழகங்களும் ஏற்பதின் அடிப்ப்டையில் நாம் ஆராய்வோம் ஓர் ஏற்பது 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard