Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரும் அந்தணர்களும் வேதங்களும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருவள்ளுவரும் அந்தணர்களும் வேதங்களும்
Permalink  
 


திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்

 
தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு.
 

thiruvalluvar.png
                                   திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை
தமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து  சிலம்பு 7. வரந்தரு காதை

திருக்குறளில் வள்ளுவர் வேதங்களையும், பார்ப்பனர்களையும் போற்றியே குறளில் கூறி உள்ளார்.
                                              download.jpg

திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.

நாம் அறுதொழிலோர் எனில் சங்க இலக்கிய நடைமுறையில் காண்போம்.
 
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.


 ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”                      – பதிற்றுப்பத்து 24)
 கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்   (பதிற்றுப்பத்து  பாட்டு - 74
 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம்  -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.

வள்ளுவர் பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் குடி பிறப்பால் உள்ள ஒழுக்கம் பேண வேண்டும் என்கிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

 ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21

வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)
இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை   துறவி எனும் பொருளில் வள்ளுவர்  ஆண்டுள்ளதை,  அந்தணர் குல மரபை  ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லைகடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், 
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

                ..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்  - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
 திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து  அதிகாரத்திலும், நீத்தார் பெருமை  துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்

திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.

 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                  (28-நீத்தார் பெருமை)

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும்.
வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப.   தொல்காப்பியம்-செய் 480

 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,  திருமுருகாற்றுப்படை2.

 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.    தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல்  பொருள். கற்:5/29

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆயுர்வேதத்திற்கு வ்யாகரணம்

ஆடுதுறையிலுள்ள விக்ரமசோழனின் கல்வெட்டொன்று அங்கிருந்த பாடசாலையைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. அங்கிருந்த வைத்யசாஸ்த்ரம் படித்த மாணவர்கள் கற்க வேண்டிய நூல்களாக அது குறிப்பிடுவது.

1. வாகடம் - வாக்படம்
2. சரக ஸம்ஹிதை மற்றும்
3. வ்யாகரணம் குறிப்பாக ரூபாவதாரம்

இதில் ஆயுர்வேதம் படிக்கும் மாணவர்கள் வ்யாகரணத்தையம் படிக்க வேண்டுமென்று குறிப்பு தெளிவாகிறது.
மேலும் பல்வேறு தமிழக சாலைகளிலும் 10-11ஆம் நூற்றாண்டுகளில் வ்யாகரணத்தைப் போதிக்க இருந்த நூல் ரூபாவதாரமேயாம். இது தர்மகீர்த்தியென்னும் பௌத்தரால் இயற்றப்பெற்றதாகும். இவர் புகழ்பெற்ற பௌத்த ஆசிரியரான தர்மகீர்த்தியிலிருந்து வேறானவராகக் கருதப்பெறுகிறார். இவரது காலத்தை 11-12ஆகக் கருதுகிறார்கள். ஆனால் தமிழக - கர்ணாட கல்வெட்டுக்களைக் கொண்டு அதற்கு சில நூற்றாண்டுகள் முன்பு கொள்ளப்பட வேண்டியதிருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 4. திருவேரகம் (சுவாமிமலை) 

இரு பிறப்பாளர்

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி
அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை . . .180
மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல (177 – 182)

4. Thiru Ērakam (Swamimalai)

 

The Twice Born

The twice-born, who perform the six duties

without fail, respected, born to ancient, traditional

families on both sides, who spend forty eight years of

their young age on the righteous path with

principles of uttering truths, who tend three

sacred fires which is their wealth, chant.

 

Meanings:    இரு மூன்று எய்திய – perform the 6 duties, இயல்பினின் வழாஅது – not faulting, இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி – born to ancient traditional families on both sides and respected, அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு ஆறினில் கழிப்பிய – spend 48 years and their youth on the path, அறன் நவில் கொள்கை – principle of uttering virtue/truth, மூன்று வகைக் குறித்த – three kinds indicated, முத்தீச் செல்வத்து – wealth is tending three fires, இரு பிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – the twice-born know the time and chant

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரை உறு நறுமலர் ஏற்றி பெரிது உவந்து

ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று (183 – 189)

They wear three strands with three fine threads

in each and wet clothing that dry when

worn.  They worship holding their palms above,

praising him, uttering the six-syllabled secret

name, and scatter fragrant flowers happily to the

one who resides in Ērakam.  He is not just there.

Meanings:  ஒன்பது கொண்ட – having nine, மூன்று புரி நுண் ஞாண் – three strands with three fine threads twisted together, புலராக் காழகம் – not dried clothing,  புலர உடீஇ – wear it to dry, உச்சிக் கூப்பிய கையினர் – those worshipping with their hands above,  தற்புகழ்ந்து – praising him, ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி – Vedic rituals with six letters, நா இயல் மருங்கில் நவிலப் பாடி – sing with their tongues learning well, விரைஉறு நறுமலர் ஏற்றி – throw many kinds of fragrant flowers, பெரிது உவந்து – greatly happy, ஏரகத்து உறைதலும் உரியன் – the one who resides in Ērakam, அதாஅன்று – not only there



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

95598908_10222261667076820_1435632358156



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

94960295_10222261653356477_6852729464476



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

94991145_10222262591379927_3778300425556



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருவள்ளுவர் போற்றும் இறைவனும் அறமும்

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
  காவலன் காவான் எனின் - குறள் 56:10

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - குறள் 3:1
ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்ட முனிவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே வேத நூல்களின் துணிவாகும்.
நற்பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பல கொல்
யாபல கொல்லோ பெரும!”
(புறம் 15)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  மறைமொழி காட்டிவிடும் - குறள் 3:8
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                  (28-நீத்தார் பெருமை)


தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
  நல் ஆற்றின் நின்ற துணை - குறள் 5:1

அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
  பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை - குறள் 4:7
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
  போஒய் பெறுவது எவன் - குறள் 5:6

புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
  அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3


நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
  உண்மை அறிவே மிகும் - குறள் 38:3
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
  பண்பு உடையாளர் தொடர்பு - குறள் 79:3


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில் தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
தலைவன் கூற்று
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு.
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு. -பரிபாடல்-திரட்டு 2:50-63
அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்கியே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப்புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.

 

திருவள்ளுவரின் மெய்யியல் - இறை வணக்க - வீடுபேறு வாழ்க்கை கோட்பாடு

 

நற்றாள் தொழாஅர் எனின்.(குறள்2)

மாணடி சேர்ந்தார்(குறள் 3)

இலானடி சேர்ந்தார்க்கு(குறள்4)

தாள்சேர்ந்தார்க் கல்லால்(குறள் 5)

தாள்சேர்ந்தார்க் கல்லால்(குறள் 8)

தாளை வணங்காத் தலை.(குறள் 9)

இறைவன் அடிசேரா தார். (குறள் 10)



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்

 
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. நாம் இக்குறளின் பல்வேறு உரைகளைப் பார்ப்போம்.மு.வ உரை:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர் உரை:அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் – தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று – ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).
மணக்குடவர் உரை:நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
Translation: Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.
Explanation: Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்வதைவிட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்லது. இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260
மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
ஒருவன் கடவுள் அடைய வேளிவிகளை செய்ய வேண்டும், அது உயர்ந்த மேன்மையான ஒன்று, அதிலும் மேன்மையானது கொல்லாமை- புலால் மறுத்தல் என்பதை தெளிவாக சொல்ல இவ்வழியில் சொல்கிறார்.
மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).
வேள்வியை உயர்த்தி தான் இங்கு சொல்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கணம் காட்டும் வழி. தொல்காப்பிய உவமயியலின் நூற்பா ஒன்று- "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை"
தொல்காப்பிய நூற்பா குறிப்பது -
உவமைக்கு வைப்பது உயர்ந்த பொருளாக வேண்டும் என்பதே. கரிய நிறத்திற்கு உவமையாக ஓர் பூவினையோ, மேகத்தினையோ, யானையையோ காட்டலாம்; ஆனால் கரிய கழிவுநீரைக் காட்டலாகாது.
உயர்ந்த பொருளையே ஒப்புமைப்படுத்த வேண்டும் -
அரிமா அன்ன அணங்குடைத் துப்பு – வினை உவமம் (வலிமையில் அரிமா உயர்ந்தது)
மாரி அம்பின் மழைத்தோல் சோழர் – பயன் உவமம் (மாரி அம்பினும் உயர்ந்தது)
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பு – வடிவு (கடல்பரப்பு உயர்ந்தது)
பொன்மேனி – வண்ணம் (பொன்னின் வண்ணம் மேனி வண்ணத்தினும் உயர்ந்தது)
உயர்ந்தவற்றின் மதிப்பைச் சொல்கையில் மிக உயர்வானவற்றை இணைத்துப்பேசுவது வள்ளுவம் பேணும் மரபும்கூட; இழிவான செயல்களைக் கூறுகையில் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தையும் அதில் காண்கிறோம்.
ஆ காத்து ஓம்புதல் பேரறம் என்பதால் அதைச் சொல்கிறார்-
ஆவிற்கு நீர்என் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்.
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு,
அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;
இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை.
(ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு நீரளித்தல்' என்று உவமை காட்டினார்)
வேள்வி மிக உயர்ந்தது என்பதால் ‘ அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்....’ என்றார்.
வள்ளுவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உவமைகள் .
நுட்பமான உண்மைகளை விளக்கப் பொருத்தமான உவமை , எ. கா -
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"
"ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று"
உயர்வானவற்றுக்கு , ஏற்கத்தக்கனவற்றுக்கு உயர்ந்த உவமை; தாழ்ந்தவற்றைக் குறிக்க மிகவும் தாழ்ந்த பொருள்களோடு உவமை. இதுவே வள்ளுவம் பின்பற்றும் முறை. கைம்மாறு கருதாமல் உதவும் பண்பாளர்களுக்கு மழை உவமையாகிறது.
காமத்துப்பாலில் இன்பத்துக்கு மாலவனின் உலகு தரும் பேரின்பம் உவமையாகிறது.
சில பாக்களில் மலர் கண்களுக்கு உவமையாகிறது.
(குறள் 112,119,1231, 1142)
பொருட்பெண்டிருக்குப் பிணமும், மக்கட் பண்பற்றவருக்கு மரமும், உலோபியின் செல்வத்துக்கு நச்சு மரமும் உவமைகளாயின -
"பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று"
"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்."
"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று"
உயிர்க்கொலை மறுக்கும் பேரறத்துக்கு உயர்ந்ததான வேள்வி எடுத்துக்காட்டப்படுகிறது 'கங்கையிற் புனிதமாய காவிரி' என்பதுபோல -
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
'எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ' எனக் கம்ப ராமாயணம் பரதாழ்வானின் உயர் தகைமைகளைக் கோடி காட்டுவதற்குக் காப்பிய நாயகனான இராமபிரானையே எடுத்துக் கழிக்கிறது.
"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து."
மிக உயர்ந்ததான செவியுணவுக்கு அவியுணவு உவமையாகிறது.
வள்ளுவர் வேள்வியை மறுக்கும் சமண சமயத்தவராக இருந்தால் இவ்வாறு கூறுவாரா ?
வேள்விகளை வள்ளுவம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்னும் ஐயம் தேவையற்றது; வேள்வியில் தரப்படும் அவியுணவு, மறை ஓத்து, வேள்விகளை மையமாகக்கொண்ட அறுதொழில் இவற்றை வள்ளுவம் மறுக்கவில்லையே !



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

 

 குறள் 560:

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.

மு.வ உரை:

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

சாலமன் பாப்பையா உரை:

காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

Translation:

Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans’ sacred lore will all forgotten lie.

Explanation:

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.
பதிற்றுப்பத்து பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – 24)
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்    பாட்டு - 74
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு 
இரவின் இளிவந்த தில்.
மு.வ உரை: பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை
விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.
“பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத் தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன். புலவர் நெட்டிமையார்,முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல்நோக்கத் தக்கது.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன்
இறுக்கும் பொன்போற் புதல்வர்ப்
பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும்
நும்மரண் சேர்மின்…… என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.
இப்புறநானுறு பாடல்படியான மரபில் தானே வள்ளுவர் இகுறளும் கூறுகின்றது.
பசுக்கள் தரும் பால்- அதன் உப பொருட்கள் தயிர், வெண்ணெய் நெய்- இவை அனைத்துமே கர்ப்பிணி பெண்கட்கும், சிறு குழந்தைகட்கும் அவசியம். வேள்விகளிலும் அவசியம். நாட்டின் பலத்திற்கு வருங்காலத் தலைமுறையும் கடவுள் ஆசியும் அவசியம் என்பதையே கூறியுள்ளார். திருவள்ளுவர் சங்ககாலத் தமிழர் மரபுப்படிதான் திருக்குறளைத் தந்துள்ளார். அதில் அந்தணர் என்பது தொழில் வழியில் அந்தணர்களைத் தான்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் வேதங்களை குறிப்பிடுவது சங்கத் தமிழர் வழிமுறையே

குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
மணக்குடவர் உரை:

ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்பு தலைக்கொண்மார்
நசைதர வந்தோர் பலகொல்? புரையில்
ற்பனுவல் நால் வேதத்[து]
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கல் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொல
புறநானூறு 15— நெட்டிமையார்
நெட்டிமையாரால் இப்பாடலில் பாராட்டப்பட்ட மன்னன் பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி என்னும் பாண்டிய மன்னன் 

குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
மணக்குடவர் உரை:

நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.
வருங் குற்றங் கூறிற்று.

குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
மணக்குடவர் உரை:

அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

குறள் 560:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
மணக்குடவர் உரை:

பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் 

95598908_10222261667076820_1435632358156 

 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

95598908_10222261667076820_1435632358156 94991145_10222262591379927_3778300425556

94991145_10222262591379927_3778300425556 94960295_10222261653356477_6852729464476



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சங்க இலக்கியத்தின் நான்மறை- தமிழ் வேதங்கள் மார்க்சீய அறிஞர் விளக்கம் 

tham%2Bveda%2B01.jpg tham%2Bveda%2B02.jpg tham%2Bveda%2B03.jpg tham%2Bveda%2B04.jpg tham%2Bveda%2B05.jpg tham%2Bveda%2B06.jpg tham%2Bveda%2B07.jpg tham%2Bveda%2B08.jpg tham%2Bveda%2B09.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் - மது 474
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/5
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் - கலி 99/2
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் - கலி 126/4
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு/அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை - புறம் 361/4,5
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ - பரி 5/22
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் - பரி 11/7
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்/உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக - கலி 38/1,2
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ - கலி 72/18
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்/தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே - அகம் 0/15,16
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே - புறம் 200/13
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே - புறம் 201/7
 ஆ குரல் காண்பின் அந்தணாளர்/நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/8,9
 புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்/இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி - புறம் 126/11,12
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்/வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை - கலி 9/4,5
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அந்தணர்(பெ)

  • அறநெறியில் வாழ்பவர், துறவி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • sanyasi
விளக்கம்
  • அந்தணர் = அந்தம் + அணவு + அர் (வேதாந்தத்தை அணவுபவர்கள்
  • அறம் என்று முன்னோர்களால் வகுக்கப்பட்ட நீதிகளை முறைப்படி பின்பற்றுகின்றவர்கள் அந்தணர் என்று அழைக்கப்பட்டார்கள்.
பயன்பாடு
  • அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். (திருக்குறள்)


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அந்தணர் (2)
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே - எழுத். பிறப்:20/5
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் - பொருள். கற்:5/15


    அந்தணர்க்கு (1)
ஆயும்-காலை அந்தணர்க்கு உரிய - பொருள். மரபி:70/2

    அந்தணாளர்க்கு (2)
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு - பொருள். மரபி:72/1
அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே - பொருள். மரபி:82/1


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அந்தம்(பெ)

  1. முடிவு
  2. மரணம்
  3. நாசம்
  4. விகுதி
  5. வரைக்கும். சேவப்ப நாயக்கர்முதல் விசயராகவ நாயக்கரந்தம் (தஞ். சரசு. i, 319)
  6. அழகு
  7. இருட்டு
  8. குருடு
  9. அஞ்ஞானம்
  10. நிச்சயம்
  11. அவயவம்
  12. சமீபம்
  13. சுபாவம்


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அணவுதல்

 
 
Jump to navigationJump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அணவுதல்பெயர்ச்சொல்.
  1. அணுகுதல்(சூடாமணி நிகண்டு)
  2. புல்லுதல் (சூடாமணி நிகண்டு)
  3. ஒட்டுதல் (பிங்கல நிகண்டு .)
  4. மேல் நோக்கிச் செல்லுதல்
    அந்தர வகடுதொட் டணவு நீள் புகழ் (சீவக சிந்தாமணி1239)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to go near, approach, come close to
  2. to embrace
  3. to stick to, adhere to
  4. to go upward, ascend


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

  அறத்தொடு (4)

அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய - நற் 42/2

கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை - பரி 13/56

ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/18

அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட - கலி 39/21

அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள் - நற் 202/9

அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1

அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் - பதி 22/4

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8

ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின் - பதி 31/24

ஆறு முட்டு_உறாஅது அறம் புரிந்து ஒழுகும் - பதி 59/16

அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய - பதி 64/3

அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய - பதி 85/9

அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் - கலி 141/3

அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர் - அகம் 338/3

அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7

அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560: கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

Translation:Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans' sacred lore will all forgotten lie.
Explanation:If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.  குறள் 543:செங்கோன்மை
மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

Translation:
Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.
Explanation:The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். குறள் 134: ஒழுக்கமுடைமை 

மணக்குடவர் உரை:பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

Translation:
Though he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in 'decorum due,' birthright's gone for evermore.
Explanation: A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. நீத்தார் பெருமை.  குறள் 21:
மணக்குடவர் உரை:ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.

Translation:The settled rule of every code requires, as highest good, Their greatness who, renouncing all, true to their rule have stood.
Explanation:The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். குறள் 28:
மணக்குடவர் உரை:நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.

Translation: The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.
Explanation:The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். குறள் 30:
மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

Translation:Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,
Explanation:The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.  குறள் 1: கடவுள் வாழ்த்து
மணக்குடவர் உரை:எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

Translation:A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.
Explanation: As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 
குறள் 2:

மணக்குடவர் உரை:மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.

Translation: No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.
Explanation:What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 
குறள் 5:

மணக்குடவர் உரை:மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.

Translation:The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well.
Explanation:The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 
குறள் 6: கடவுள் வாழ்த்து

மணக்குடவர் உரை:மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்? இது சாவில்லையென்றது.

Translation:
Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.
Explanation: Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 
குறள் 7:

மணக்குடவர் உரை:பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்

Translation:Unless His foot, 'to Whom none can compare,gain, 'This hard for mind to find relief from anxious pain.
Explanation: Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 
குறள் 4:

மணக்குடவர் உரை:இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர். பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.

Translation:
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.
Explanation:To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 
குறள் 8:

மணக்குடவர் உரை:அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.

Translation:
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard
the further bank of being's changeful sea to attain.
Explanation: None can swim the sea of vice, but those who are united to the feet of that
gracious Being who is a sea of virtue.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 
குறள் 9:

மணக்குடவர் உரை:அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்

Translation:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.
Explanation:The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.  
குறள் 10:

மணக்குடவர் உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்

Translation:
They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach
the shore of being's mighty main.
Explanation:None can swim the great sea of births but those who are united to the
feet of God.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருக்குறள் போற்றும் தர்ம சாஸ்திரங்கள்

 
 தமிழில் எழுந்த பல்வேறு  நூல்களில் திருக்குறள் மிகவும் உன்னதமானது உலகம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இந்திய தத்துவ ஞான மரபின் உள்ள அறிவு அறிவு அறக்கருத்துக்களை எளிய தமிழில் வழங்கியதே திருக்குறள்.
திருக்குறள் முழுவதும் குறள் வெண்பா என்னும் யாப்பில் அமைந்துள்ளது இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்பது அறிஞர்கள் ஏற்க்கும் கருத்து.
திருக்குறள் இருக்கும் முதலில் எழுதப்பட்ட மிகவும் பழமையான உரை மணக்குடவர் உரை (10நூற்றாண், சமணரான மணக்குடவர் திருக்குறளை வேத தர்ம சாஸ்திர ஞானமரபில் வந்ததாகத்தான் பொருள் செய்துள்ளார்.
வள்ளுவர் பல்வேறு திருக்குறளில் முந்து நூல்களை சுட்டிக் காட்டுகிறார்.
அவை முறையே
vallvars.jpg

வேத தர்ம சாஸ்திரங்களைக் குறிப்பவை 543,560, 21, 28, 134, 183, 322,37 & 46
அரசியல் நூல்களை  636, 693, 743, 581, 727
பொதுவாக   நூல்களை 533, 401, 726, 783, 373
மருத்துவம் சம்பந்தமானவை 941..

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.                  குறள் 183:   புறங்கூறாமை


Manakudavar%2B1.jpg
மணக்குடவர் உரை:
காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

அறநூல் எனும் தமிழ் சொல் வடமொழியின் தர்ம சாஸ்திரங்களைக் குறிக்கும், இவற்றை அந்தணர்கள் எழுதியவை.
சிலப்பதிகாரம்-15.அடைக்கலக் காதை
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல 55
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் 60…
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி 65
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் 70
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ 75
பார்ப்பனன் ஒருவன் தன் மனைவி செய்த பிழைக்கு பாவ நிவர்த்தி என வடமொழியில் கொடுத்த வாசகத்தைப் படித்து தர்ம சாஸ்திரபடி தானங்கள் செய்ய கோவலன் உதவியது உள்ளது.
 வள்ளுவரும் இதைத் தெளிவாக உரைப்பார்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.             குறள் 543:  செங்கோன்மை
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.Manakudavar%2B1%2Banthanar%2Bwuul%2Baramஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.              குறள் 560:        கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
Manakudavar%2B1%2BAruthozilaar%2Bwuul.jpமறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்       குறள் 134:      ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
Manakudavar%2B1%2BPaarppan.jpg
திருக்குறளை இழிவு செய்யும்  தமிழர் மெய்யியல் விரோத அராஜக உரைகள்
திருக்குறள் வேதங்களை - பிராமணர்களை குறிக்கும் சொற்களுக்கு அதன் நேரடி பொருள் உரையில் தராமல் மதச் சார்பற்ற முறையில்  பொருள் செய்யும் தமிழ் கயமை
மறை குறள் 27
பார்ப்பான், ஓத்து குறள் 134
அந்தணர் நூல் அறம் - குறள் 543
அறுதொழிலார் நூல்  - குறள் 560
Manakkudavar.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள்

 
திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள் - வேத தர்ம சாஸ்திரங்களே

1. ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
  காவலன் காவான் எனின் -                 குறள் 56:10

 
 
2. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை             - குறள் 322  கொல்லாமை
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
மணக்குடவர் உரை: பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.
 
3. விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
  கற்றாரொடு ஏனையவர்                        - குறள் 410 கல்லாமை
அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

4. நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
 உண்மை அறிவே மிகும்                           -  குறள் 373  ஊழ்                                ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
 
5. நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு                   - குறள் 69:3 தூது
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
 
6. பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
  அஞ்சுமவன் கற்ற நூல்                     - குறள் 727 அவையஞ்சாமை
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.

7. உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
  அமைவு அரண் என்று உரைக்கும் நூல்                - குறள் 743 அரண்
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
 
8. நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
  பண்பு உடையாளர் தொடர்பு                              - குறள் 783 நட்பு
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

9. நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு                            - குறள் 683  தூது
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.
 
10. ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
  தெற்று என்க மன்னவன் கண்                          குறள் 581  ஒற்றாடல்
 
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.
மணக்குடவர் உரை: ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக.
அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.
11.மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
  யா உள முன் நிற்பவை                          - குறள் 636 அமைச்சு
இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.
மணக்குடவர் உரை: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.
 
12. வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
  நுண் அவை அஞ்சுபவர்க்கு                       - குறள் 726 அவையஞ்சாமை
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?
.
13. அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
  நூல் இன்றி கோட்டி கொளல்                            குறள் எண்:401 கல்லாமை
 
அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.

14.மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
 வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1  மருந்து
 
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
 
15.பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எபால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3  பொச்சாவாமை
 
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. குறள் 297: வாய்மை
மணக்குடவர் உரை:பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின் பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.       குறள் 300: வாய்மை
மணக்குடவர் உரை:யாம் மெய்யாக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை. இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.


ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.  குறள் 323:கொல்லாமை 
மணக்குடவர் உரை:இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.


அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.  குறள் 181: புறங்கூறாமை.
மணக்குடவர் உரை:ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம், இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. குறள் 984: சான்றாண்மை 
மணக்குடவர் உரை:
தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டாயினும் கொல்லாத நலத்தையுடையது தவம். அதுபோலச் சாண்றாண்மைக்கு உறுப்பான நற்குணங்கள் பல உண்டாயினும் பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு.

சாலமன் பாப்பையா உரை: பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். குறள் 1033: உழவு 
மணக்குடவர் உரை:உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.

மு. கருணாநிதி உரை:உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard