சுவிசேஷக் கதைப்படி ஏசு யூதனாய் பிறந்த உடனே பெற்றோர் பலி கொலைக்கு (லூக்கா 2:24) ஜெருசலேம் சென்றனர் எனக் கதை, கடைசியில் யூத மதத் தொன்மக் கட்டளைபடி இஸ்ரேலின் தெய்வம் யாவே இருக்கும் ஒரே இடமான[F.F.Bruce The Real Jesus Page- 81) ஜெருசலேம் ஆலயம் வந்து ஆடு கொலைபலி தரும் பஸ்கா பண்டிகை போது ரோமன் கவர்னரின் படைத் தலைவரால் கைது செய்யப்பட்டு, ரோமன் மரணதண்டனை தூக்குமரத்தில் தொங்கும் மரண தண்டனையில் கொல்லப்பட்டார். பைபிள் கதைகள் இஸ்ரேல் எனும் சிறு நாட்டை சுற்றியே முக்கியத்துவம் பெற்றதோ, அதனுள் ஜெருசலேம் (சீயோன் மலை) மட்டுமே, அதுவே யாவே கடவுள் வீடு* எனவும் கூறுகிறது.
*சங்கீத: 48 :1 நம் கடவுளுடைய நகரத்திலும் பரிசுத்த மலையிலும் யெகோவா மகத்தானவராக இருக்கிறார், எல்லா புகழையும் பெறத் தகுதியானவராக இருக்கிறார். 2 வடகோடியில் சீயோன் மலை அழகாக உயர்ந்து நிற்கிறது. அது உலகத்துக்கே சந்தோஷம் தருகிறது. அதுதான் மகா ராஜாவின் நகரம். 3 அதன் கோட்டைகளில் கடவுள் தன்னையே பாதுகாப்பான* அடைக்கலமாகக் காட்டியிருக்கிறார். 4 ராஜாக்கள் ஒன்றுகூடி வந்தார்கள். எல்லாரும் அணிவகுத்து வந்தார்கள்.
ஏசாயா 52:1 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள். 2 எருசலேமே, நீ எழுந்து, மண்ணை உதறிவிட்டு, சிம்மாசனத்தில் உட்காரு. சிறைபிடிக்கப்பட்ட சீயோன் மகளே, உன் கழுத்திலுள்ள கயிறுகளைக் கழற்றிவிடு..
யூதருக்காக மட்டுமே என் பணி என்ற ஏசுவை நேரில் பார்க்காது ஆனால் யூதர் அல்லாதவர்களிடம் கிறிஸ்துவத்தை பரப்பி அதை தொழிலாய் காசு சம்பாதித்தவர். பவுல் பழைய ஏற்பாடு வசனம் வழியே கிறிஸ்து சீயோனிலிருந்து வருபவர் யாக்கோபின் வாரிசுகளினுள் உள்ள கெட்டவைகளை நீக்குவார் என்றார்.
“ரோமர் 11:26 இவ்வாறு இஸ்ரவேலர்கள் அனைவரும் காப்பாற்றப்படுவர்.26..“மீட்பர் சீயோனிலிருந்து வருவார்.யாக்கோபின் குடும்பத்திலிருந்து தீமைகளை அகற்றுவார்.27 நான் அவர்களது பாவங்களை விலக்கும் போது நான் இந்த உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்” என்று எழுதப்பட்டிருக்கிறது.
யூதேயாவின் தலைநகரமும் இஸ்ரேலின் தெய்வ ஆலயம் இருந்த ஜெருசலேம் யூதர்கள் வசம் எப்படி வந்தது என பைபிள் கதைகளிலேயே தேடுவோம்
பழைய ஏற்பாடுபடி எபிரேயர்கள் இஸ்ரேல் எனும் கானான் மண்ணிற்கு அன்னிய வந்தேறிகள், கல்தேயர் தேச ஆபிரகாம் வாரிசுகள், எகிப்திலிருந்து வந்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை - இன அழிப்பு செய்து இஸ்ரேலில் குடியேறியவர்கள்[ii].
உபாகமம் 6:11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.
[ii] 7: 1 “உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாழப்போகின்ற இந்த தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். உங்களுக்காக உங்களைவிடப் பெரியவர்களும், பலசாலிகளுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டினர்களையும் உங்களுக்கு முன்பாகவே துரத்துவார். 2 உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த ஏழு நாட்டினரையும் உங்களுக்குக் கீழே கட்டுப்பட வைப்பார். அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள். அவர்களை முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அவர்களிடம் எவ்வித ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவர்களிடம் இரக்கம் காட்டாதீர்கள். 3 அவர்களில் எவரையும் மணந்துகொள்ளாதீர்கள். நீங்கள் மட்டுமின்றி உங்கள் மகன்களையோ மகள்களையோ அந்த ஜனங்களைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது….
16 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உதவியோடு தோற்கடித்த எல்லா எதிரிகளையும் அழித்துவிட வேண்டும். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். 17 “‘நம்மைவிட நம் எதிரிகள் பெரியவர்கள். நாம் எப்படி அவர்களைத் துரத்திவிடுவது’ என்று உங்கள் மனதிற்குள் நீங்களே சொல்லிக்கொள்ளாதீர்கள். 18 நீங்கள் அவர்களைக் கண்டு சிறிதும் பயப்படத் தேவையில்லை.
உபாகமம் 9: “இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! நீங்கள் இன்று யோர்தான் நதியைக் கடந்து செல்லப் போகிறீர்கள். அந்த நிலத்தில் உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்த உங்களின் எதிரிகளை வெளியே துரத்துவீர்கள். அவர்களது நகரங்கள் வானத்தைத் தொடும் உயர்ந்த மதில்களைக் கொண்ட பெரிய நகரங்களாகும்! 2 அங்குள்ள ஜனங்கள் உயரமாகவும் பருமனாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஏனாக்கின் வம்சத்தினர். நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள். ‘ஏனாக்கியர்களை எவராலும் எதிர்த்து வெல்லமுடியாது’ என்று நம் ஒற்றர்கள் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
யாத்திராகமம் 34: 11 நான் இன்றைக்கு உங்களுக்கு இடும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் நாட்டிலிருந்து உங்கள் பகைவர்கள் போகும்படி செய்வேன். எமோரியரையும், கானானியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும் வெளியேற்றுவேன்.
அந்தப் இனப் படுகொலைகளை சொல்வது யோசுவா நூல், அவர் காலத்திலேயே ஜெருசலேமும் எபிரேயர் கீழ் வந்ததாம்.
யூதர்களின் மிக முக்கியமான ஜெருசலேம் சீயோன் எப்படி எப்போது யூதர் கீழ் வந்தது?
ஜெருசலேமில் வாழ்ந்தவர்கள் எமோரியர்கள்
வென்றது யோசுவா
வாழ்ந்தவர்கள் கானானியர்கள்
200 வருடம் பின்புவென்றது யூதா கோத்திர மனிதர்கள்.[ii]
வாழ்ந்தவர்கள் எபூசியர்கள்
மேலும்200 வருடம் பின்பு எபூசியர்கள் வென்றது தாவீது ராஜா[iii].
யோசுவா 10 :1அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் அரசனாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த அரசன் அறிந்தான். எரிகோவிற்கும் அதன் அரசனுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர்.2 எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள்.3 எருசலேமின் அரசனாகிய, அதோனிசேதேக், எபிரோனின் அரசனாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் அரசனாகிய பீராமுடனும், லாகீசின் அரசனாகிய யப்பியாவுடனும், எக்லோனின் அரசனாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் அரசன் இவர்களிடம்,4 “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.5 இந்த ஐந்து எமோரிய அரசர்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.)அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன.6 கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய அரசர்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது.7 எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர்.8 கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார்.9 யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர்.11 அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம்.
[ii]நியாயாதிபதிகள் 1 :5பேசேக்கில் யூதா ஜனங்கள் பேசேக்கின் அரசனைக் கண்டு, அவனோடு போரிட்டார்கள். யூதா ஜனங்கள் கானானியரையும் பெரிசியரையும் வென்றார்கள்.6 பேசேக்கின் அரசன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் யூதா ஜனங்கள் அவனைத் துரத்திப் பிடித்தனர். அவனைப் பிடித்தபின் அவனது கை, கால் பெருவிரல்களைத் துண்டித்தனர்.7 அப்போது பெசேக்கின் அரசன், “70 அரசர்களின் கை, கால் பெருவிரல்களை நான் துண்டித்தேன். எனது மேசையிலிருந்து விழுந்த உணவுத் துணிக்கைகளை அந்த அரசர்கள் புசித்தார்கள். நான் அந்த அரசர்களுக்குச் செய்தவற்றிற்கான தண்டனையை தேவன் எனக்குத் தந்தார்” என்றான். யூதா மனிதர்கள் பேசேக்கின் அரசனை எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். அவன் அங்கு மரித்தான்.8 யூதா மனிதர்கள் எருசேலேமுக்கு எதிராகப் போரிட்டு அதனைப் பிடித்தார்கள். எருசலேம் ஜனங்களைக் கொல்ல யூதா மனிதர்கள் தங்கள் வாள்களைப் பயன்படுத்தினார்கள். பின்பு நகரை எரித்தார்கள்.9 பின்னர் யூதா மனிதர்கள் கானானியர் சிலரை எதிர்த்துப் போரிடச் சென்றார்கள். அந்தக் கானானியர்கள் பாலைவனப்பகுதியிலும், மலை நாட்டிலும், மேற்கு மலையடிவாரங்களிலும் வசித்தார்கள்.10 பின்பு யூதா மனிதர்கள் எபிரோன் நகரில் வாழ்ந்த கானானியரோடு போரிடச் சென்றார்கள் (எபிரோன், ”கீரியாத்அர்பா” என்றும் அழைக்கப்பட்டது.) சேசாய், அகிமான், தல்மாய் ஆகிய மனிதர்களையும் யூதாவின் ஜனங்கள் தோற்கடித்தனர்.
[iii]2 2 சாமுவேல் 5:6தாவீதுஅரசனும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது.எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள்.7 ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)
ஜெருசலேமில் வாழ்ந்தவர்கள் யார்? எப்போது வெல்லப் பட்டது என்பதிலுள்ள குழப்பம் பற்றி விரியாய் காணுமுன் தாவீது அரசன் கால இஸ்ரேல் பற்றி விவிலியக் கதை சொல்வதைக் காண்போம்.
தாவீது ராஜா காலத்தில் மக்கள் தொகை
தாவீது ராஜா ஒரு சென்சஸ் எடுக்க யூதேயாவில் 5 லட்சம், இஸ்ரேலில் 14 லட்சம் போர் வீரர்கள் இருந்தார்களாம், இதிலும் 2 கோத்திரம் கணக்கில் எடுக்காமல், அதாவது 14+ 2 கோத்திரம் + போரிட முடியாத மற்ற ஆண்கள் (ஊனமுற்றோர் போலே) அதாவது நாம் 20 லட்சம் எனக் கொண்டால் (ஒரு குடும்பம் 5 பேர் மனைவி, 2 குழந்தை பெற்றோர்) எனில்யூதேயா -இஸ்ரேலில் தாவீது காலத்தில் மக்கள் தொகை கிட்டத் தட்ட ஒரு கோடி என்கிறது கதை.
1 நாளாகமம் 21: 5 அவன் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர்.6 யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. ஏனென்றால் அவன் தாவீது அரசனின் கட்டளையை விரும்பவில்லை.
2 சாமுவேல் 24 :9 யோவாப் அரசனுக்குரிய ஜனங்களின் பட்டியலைக் கொடுத்தான். இஸ்ரவேலில் 8,00,000 ஆண்கள் வாளைப் பயன்படுத்தக் கூடியவர்கள். யூதாவிலும் 5,00,000 ஆண்கள் இருந்தனர்.
தாவீது ராஜாஅவர் மகன் சாலமோன் ஜெருசலேமில் செல்வ செழிப்பு செய்திகள்:
தாவீது ராஜா இஸ்ரேலின் கடவுளுக்கு ஆலயம் கட்ட 3,750 டன் தங்கம், 37,500 டன் வெள்ளி, நிறுத்துv பார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும், மரமும் கற்களும் என எல்லாம் சேர்த்து தன் மகன் சாலமோன் கட்ட கொடுத்தாராம். இவரைவிடவும் சாலமோன் மேலும் பல வெற்றி பெற தங்கம் வெள்ளி[ii] கொட்டியதாம், வெள்ளி தெருவில் உள்ள கல் போலேவாம் எனக் கதை சொல்கிறது.
இந்த நாட்டில் சாலமோன் ராஜா இஸ்ரேஇலின் கடவுள் சொன்னபடி வடிவத்தில் ஆலயம் கட்டினார்
1 நாளாகமம் 22:14 “சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்டதிட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். 15 உன்னிடம் ஏராளமான கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் உள்ளனர். எல்லா வேலைகளையும் செய்யும் திறமை உடையவர்களும் உனக்கு இருக்கின்றனர். 16 அவர்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலை செய்வதில் வல்லவர்கள். எண்ணிபார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளனர். இப்போதே வேலையைத் தொடங்கு. கர்த்தர் உன்னோடு இருக்கட்டும்” என்றான்.
[ii] 1 இராஜாக்கள் 10:21அரசனின் பானபாத்திரங்கள் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. “லீபனோனின் காடு” எனும் மாளிகை பொருட்கள் எல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. எதுவும் வெள்ளியால் செய்யப்படவில்லை. காரணம் அவனது காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை!
27சாலொமோன் இஸ்ரவேலைச் செல்வம் செழிக்கச் செய்தான். அவன் நாட்டில் வெள்ளியானது பாறைகளைப்போல பொதுவாகக்
சுவிசேஷக் கதைப்படி ஏசு ஜெருசலேம் ஆலயம் மற்றொரு பண்டிகை போது இருந்தார் என்கிறது.
யோவான் 10:22 22 அப்போது, ஜெருசலேமில் ஆலய மறு அர்ப்பணப்பு பண்டிகை நடந்தது. அது குளிர் காலமாக இருந்தது. 23 இயேசு ஆலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார். (2 மக்கபேயர் 6:2)
ஹனுக்காஹ் எனும் இந்த யூதப் பண்டிகையின் பின்னணி பார்ப்போம்.
கிரேக்க மன்னன் அந்தியாச்சஸ் பொமு167ல் இஸ்ரேல் யூதேயாவைக் கைப்பற்றி யகோவா கர்த்தரின் ஜெருசலேம் ஆலயத்தில் கிரெக்க ஒலிம்பஸ் கடவுள் சிலையும், சமாரியா கெர்சிம் மலை யகோவா ஆலயத்தில் ஜூபிடர் கடவுள் சிலையும் வைத்தனர் என்கிறது, 3 வருடம் பின்பு மக்கபேயர் வென்று ஆலயத்தை யகோவா தெய்வ ஆலயமாய் மறு அர்ப்பணிப்பு செய்தமையைக் கொண்டாடும் பண்டிகை, இது டிசம்பரில் வரும்.
இஸ்ரேல் யூதேயாவிற்கும் இடைப்பட்ட பகுதி, பைபிள் கதைப்படி 12 கோத்திரங்களின் எபிரேயர் தான். கிரேக்க இஸ்ரேல் போரில் சமாரியர் வேறு பிரிவிடம் சேர்ந்தமை பழிவாங்க யூத- ஹிர்கானஸ் எனும் மன்னன் போரில் சமாரியர் யாவே கர்த்தர் ஆலயம் அழிக்கப்பட்டது பொமு110ல். அதன் பின் எபிரேயர்கள் சமாரியா செல்லக் கூடாது, சமாரியர் ஜெருசலேம் வரக்க் கூடாது. யூதர்கள் சமாரியர்களை தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கினர்.
சமாரிய விவிலியம் என்பது நியாயப் பிரமாணங்கள் எனப்படும் முதல் 5 நூல்கள் மட்டுமே; பொமு110 வாக்கில் சமாரியர் யூதரிடமிருந்து பிரிந்தபோது, பழைய ஏற்பாட்டில் நியாயப் பிரமாணங்கள் (தௌராத்) மட்டுமே இயற்றப்பட்டு இருந்தது.
மத்தேயு 10:5 இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம், “யூதர்கள் அல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள்.6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.7 நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள்.
23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
கலிலேயரான ஏசு ஜெருசலேம் செல்லும் வழியில் சமாரிய கெர்சிம் மலையருகே ஒரு சமாரியப் பெண்ணோடான உரையாடலில், அப்பெண் நம் முன்னோர்கள் வழக்கப்படி இந்த கெர்சிம் மலையில் சமாரியர் கர்த்தரை வணங்குகிறோம், யூதர்கள் ஜெருசலேமில் வணங்க வேண்டும் என்கிறீரார்கள் என்றிட ஏசு சமாரியர்கள் அறியாததை வணங்குவதாய் இழிவாய் பேசினார்.
யோவான் 4:20-22 முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்” என்றாள் அந்தப் பெண். 21 “பெண்ணே! என்னை நம்பு. இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பிதாவை (தேவனை) வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. 22 சமாரியர்களாகிய நீங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள்.