Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சீவரமங்கலச் செப்பேடு 768-815


Guru

Status: Offline
Posts: 7467
Date:
சீவரமங்கலச் செப்பேடு 768-815
Permalink  
 


 பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 

2. சீவரமங்கலச் செப்பேட்டுப் பகுதி

1.1.2 (02)

அன்ன னாகிய அலர்கதிர் நெடுவேற்
றென்னன் வானவன் செம்பியன் வடவரை
யிருங்கய லாணை ஒருங்குட னடாஅய்
ஒலிகெழு முந்நீ ருலகமுழு தளிக்கும்
வலிகெழு திணிதோண் மன்னவர் பெருமான்
5
றென்னல ராடி தேம்புனற் குறட்டிப்
பொன்மலர் புறவில் வெள்ளூர் விண்ணஞ்
செழியக் குடியென் றிவற்றுட் டெவ்வ
ரழியக் கொடுஞ்சிலை அன்றுகால் வளைத்தும்
மாயிரும் பெரும்புனற் காவிரி வடகரை
10
ஆயிர வேலி அயிரூர் தன்னிலும்
புகழி யூரிலுந் திகழ்வே லதியனை
ஓடுபுரங் கண்டவ னொலியுடை மணித்தே
ராடல் வெம்மா அவைஉடன் கவர்ந்தும்
பல்லவனுங் கேரளனு மாங்கவற்குப் பாங்காகிப்
15
பல்படையொடு பார்ஞௌியப் பவ்வம்மெனப் பரந்தெழுந்து
குடபாலும் குணபாலும் மணுகவந்து விட்டிருப்ப
வெல்படையொடு மேற்சென்றங்
கிருவரையும் இருபாலும் இடரெய்தப் படைவிடுத்துக்
குடகொங்கத் தடன்மன்னனைக் கொல்களிற்றொடுங் கொண்டுபோந்து
20
கொடியணிமணி நெடுமாடக் கூடன்மதி லகத்துவைத்துக்
கங்கபூமி யதனளவுங் கடிமுரைசுதன் பெயரறையக்
கொங்கபூமி யடிப்படுத்துக் கொடுஞ்சிலைபூட் டிழிவித்துக்
பூஞ்சோலை அணிபுறவிற் காஞ்சிவாய்ப்பே ரூர்புக்குத்
திருமாலுக் கமர்ந்துறையக் குன்றமன்னதோர் கோயிலாக்கியும்
25
ஆழிமுந்நீ ரகழாக அகல்வானத் தகடுரிஞ்சும்
பாழிநீண்மதில் பரந்தோங்கிப் பகலவனு மகலவோடும்
அணியிலங்கையி லரணிதாகி
மணியிலங்கும் நெடுமாட மதில்விழிஞ மதுஅழியக்
கொற்றவேலை உறைநீக்கி வெற்றத்தானை வேண்மன்னனை
30
வென்றழித்தவன் விழுநிதியொடு குன்றமன்ன கொலைக்களிரிங்
கூந்தன்மாவுங் குலதனமும் நன்னாடுங் அவைகொண்டும்
அரவிந்த முகத்திளையவ ரறிநெடுங்கண் ணம்புகளாற்
பொரமைந்தர் புறம்பெய்தும் பொன்மாட நெடுவீதிக்
கரவந்தபுரம் பொலிவெய்தக் கண்ணகன்றதோர் கல்லகழொடு
35
விசும்புதோய்ந்து முகிறுஞ்சலில் அசும்பறாத வகன்சென்னி
நெடுமதிலை வடிவமைத்தும்
ஏவமாதி விக்ரமங்க ளெத்துணையோ பலசெய்து
மணிமாடக் கூடல்புக்கு மலர்மகளொடு வீற்றிருந்து
மநுதர்சித மார்கத்தினால் குருசரிதம் கொண்டாடிக்
40
கண்டக சோதனை தான்செய்து கடன்ஞாலம் முழுதளிக்கும்
பாண்டிய நாதன் பண்டித வத்சலன்
வீர புரோகன் விக்ரம பாரகன்
பராந்தகன் பரம வைஷ்ணவன் றானாகி
நின்றிலங்கும் மணிநீண்முடி நிலமன்னவனெடுஞ் சடையற்கு
45
ராஜ்யவர்ஷம் பதினேழாவது பாற்பட்டு செல்லாநிற்க . . . . . .



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard