Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பராந்தக வீரநாராயணன் (859-907) தளவாய்புரச் செப்பேடு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பராந்தக வீரநாராயணன் (859-907) தளவாய்புரச் செப்பேடு
Permalink  
 


பராந்தக வீரநாராயணன் (859-907) 
தளவாய்புரச் செப்பேட்டுப் பகுதி

1.2.1 (04)

ஸ்வஸ்தி ஸரீ
ஓங்குதிரை வியன்பரப்பில் உததிஆ லயமாகத்
தேங்கமழ் மலர்நெடுங்கட் டிசைமகளிர் மெய்க்காப்ப
விண்ணென் பெயரெய்திய மேகஞாலி விதானத்தின்
தண்ணிழற்கீழ் சகஸ்ரபண மணிகிரணம் விளக்கிமைப்ப
புஜங்கம புரஸ்ஸர போகிஎன்னும் பொங்கனை
5
மீமிசைப் பயந்தரு தும்புரு நாரதர்
பனுவ னரப்பிசை செவியுறப் பூதல
மகளொடு பூமகள் பாதஸ்பரி சனைசெய்யக்
கண்படுத்த கார்வண்ணன் திண்படைமால் ஸரீபூபதி
ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநாபி மண்டலத்துச்
10
சோதிமரகத துளைத்தாட் சுடர்பொற் றாமரைமலர்மிசை
விளைவுறு களம கணிசமென மிளிர்ந்திலங்கு
சடைமுடியோ டளவியன்ற கமண்டலுவோ டக்ஷமாலையோடு தோன்றின
சதுர்புஜன் சதுர்வக்த்ரன் சதுர்வேதி சதுர்த்வயாக்ஷன்
மதுகமழ்மலர்க் கமலயோனி மனந்தந்த மாமுனிஅத்ரி
15
அருமரபிற் பலகாலந் தவஞ்செய்வுழி அவன்கண்ணில்
இருள்பருகும் பெருஞ்சோதி இந்துகிரணன் வௌிப்பட்டனன்
மற்றவர்க்கு மகனாகிய மணிநீள்முடிப் புதனுக்குக்
கற்றைச்செங் கதிர்க்கடவுள் வழிவந்த கழல்வேந்தன்
ஏந்தெழிற்றோள் இளனொருநா ளீசனது சாபமெய்திப்
20
பூந்தளவ மணிமுறுவுற் பொன்னாகிய பொன்வயிற்றுள்
போர்வேந்தர் தலைபனிப்ப வந்துதோன்றிய புரூரவற்பின்
பார்வேந்த ரேனைப்பலரும் பார்காவல் பூண்டுய்த்தபின்
திசையானையின் கும்பகூடத் துலவியசெழு மகரக்குலம்
விசையொடு விண்மீனொடு போர்மிக்கெழுந்த கடற்றிரைகள்
25
சென்றுதன் சேவடிபணிய அன்றுநின்ற ஒருவன்பின்
விஞ்சத்தின் விஜம்பணையும் பெறல்நகுக்ஷன் மதவிலாசமும்
வஞ்சத்தொழில் வாதாவி சீராவியும் மகோததிகளின்
சுருங்காத பெருந்தன்மையும் சுகேதுசுதை சுந்தரதையும்
ஒருங்குமுன்னாள் மடிவித்த சிறுமேனி உயர்தவத்தோன்
30
மடலவிழ்பூ மலயத்து மாமுனி புரோசிதனாகக்
கடல்கடைந்து அமிர்துகொண்டுங் கயிலிணைவட வரைபொறித்தும்
ஹரிஅயன தாரம்பூண்டு மவன்முடியொடு வளைஉடைத்தும்
விரிகடலை வேலின்மீட்டும் தேவாசுரஞ் செருவென்றும்
அகத்தியனொடு தமிழாய்ந்தும் மிகத்திறனுடை வேந்தழித்தும்
35
தசவதனன் சார்பாகச் சந்துசெய்தும் தார்த்தராஷ்டிரர்
படைமுழுதும் களத்தவியப் பாரதத்துப் பகடோட்டியும்
மடைமிகுவேல் வானரத்வஜன் வசுசாப மகல்வித்தும்
அரிச்சந்திர னகரழித்தவன் பரிச்சந்தம் பலகவர்ந்தும்
நாற்கடலொரு பகலாடி நாற்கோடிபொன் னியதிநல்கி
40
நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடா யிரம்வழங்கியும்
உரம்போந்த திண்டோளரைசுக சுரம்போகித் துறக்கமெய்தியும்
பொன்னிமையப் பொருப்பதனில் கன்னிமையிற் கயலெழுதியும்
பாயல்மீ மிசைநிமிர்ந்து பல்லுண்டி விருப்புற்றும்
காயல்பாய் கடல்போலக் குளம்பலவின் கரையுயரியும்
45
மன்னெதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செயதும்
அங்கதனி அருந்தமிழ்நற் சங்கம்இரீஇத் தமிழ்வளர்த்தும்
ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும்
கடிஞாயிறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும்
முடிசுடிய முரண்மன்னர் ஏனைப்பலரு முன்னிகந்தபின்
50
இடையாறையும் எழில்வெண்பைக் குடியிலும்வெல் கொடிஎடுத்த
குடைவேந்தன் றிருக்குலத்துக் கோமன்னர் பலர்கழிந்தபின்
காடவனைக் கருவூரில் கால்கலங்க களிறுகைத்த
கூடலர்கோன் ஸரீபராந்தகன் குரைகடற்கோச் சடையற்குச்
சேயாகி வௌிப்பட்ட செங்கண்மால் ஸரீவல்லபன்
55
வேய்போலும் தோளியர்கேள் வித்யாதர ணிரண்யகர்பன்
குண்ணுரில மர்வென்றுங் குரைகடலீ ழங்கொண்டும்
விண்ணாள வில்லவற்கு வழிஞத்து விடைகொடுத்தும்
காடவனைக் கடலாணுர்ப் பீடழியப் பின்னின்றும்
குடகுட்டுவர் குணசோழர் தென்கூபகர் வடபுலவர்
60
அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன்
களிறொன்று வண்குடந்தைக் கதிகாட்டி யம்புரசீலன்
ஒளிறிலைவேல் உபாய பஹுலன் உம்பர்வான் உலகணைந்தபின்
மற்றவர்க்கு மகனாகிய கொற்றவனெங் கோவரகுணன்
பிள்ளைப்பிறைச் சடைக்கணிந்த பினாகபாணிஎம் பெருமானை
65
உள்ளத்தி லினிதிருவி உலகங்காக் கின்றநாளில்
அரவரைசன் பல்லுழி ஆயிமா யிருந்தலையால்
பெரிதரிதின் பொறுக்கின்ற பொரும்பொறைமண் மகளைத்தன்
தொடித்தோளி லௌிதுதாங்கிய தொண்டியர்கோன் துளக்கில்லி
வடிப்படைமா னாபரணன் திருமருகன் மயிலையர்கோன்
70
பெத்தப்பிக் குலச்சோழன் புகழ்தரு சிரீகண்டராசன் 
மத்தமா மலைவலவன் மணிமகள்அக் களநிம்மடி
திருவயிறு கருவுயிர்த்த ஸரீபராந்தக மகாராசன்
விரைபரித்தேர் வீரநாரணன் முன்பிறந்த வேல்வேந்தனைச்
செந்தாமரை மலர்பழனச் செந்நிலந்தைச் செருவென்றும்
75
கொந்தார்பூம் பொழிற்குன்றையும் குடகொங்கிலும் பொக்கரணியும்
தென்மாயலுஞ் செழுவெண்கையமுf பராந்தகத்துஞ் சிலைச்செதிர்ந்த
மன்மாய மாமிகுத்தவர் வஸ்துவா கனங்கொண்டும்
ஆறுபல தலைகண்டும் அமராலயம் பலசெய்தும்
சேறுபடு வியன்கழனித் தென்விழிஞ நகர்கொண்டும்
80
கொங்கினின் தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய
வெங்கதிர்வேல் வலங்கோண்டும் வீரதுங்கனைக் குசைகொண்டும்
எண்ணிறந்த பிரம்மதேயமும் எண்ணிறந்த தேவதானமும்
எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்த லியற்றுவித்தும்
நின்ற பெரும் புகழாலும் நிதிவழங்கு கொடையாலும்
85
>வென்றிபொர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட 
கதிரார் கடுஞ் சுடரிலைவேல் கலிப்பகை கண்டருள்கண்டன்
மதுராபுர பரமேச்வரன் மாநிதி மகரகேதனன்தன்
செங்கோல்யாண்டு நாற்பதின்மேல் மூன்றோடீர்யாண்டில் 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard