Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கல்வெட்டுகளில் குற்றமும் தண்டனையும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
கல்வெட்டுகளில் குற்றமும் தண்டனையும்
Permalink  
 


கல்வெட்டுகளில் குற்றமும் தண்டனையும்
 
முன்னுரை
தமிழகத் தொல்லியல் துறையின் வெளியீடான ”சோழர் சமுதாயம்’ என்னும்நூலைப் படித்துக்கொண்டிருந்தேன்நூலில் திருஇலதியாகராசன் அவர்கள்எழுதிய கட்டுரை ஒன்று. ”சோழர் காலக் குற்றங்களும் விசாரணைகளும்”  என்னும்தலைப்புக்கொண்டதுமன்னர்களின் காலத்தில் எவ்வகைக் குற்றங்கள் நிகழ்ந்தனஎன்பதையும்குற்றவாளிகள் எவ்வகையில் தண்டிக்கப்பெற்றார்கள் என்பதையும்தெரிந்துகொள்ள அக்கட்டுரை ஓரளவு துணை செய்ததுமேலும் சிலசெய்திகளைத் தேடும் முயற்சியை உள்ளம் நாடியதுஅவ்வாறு கிடைத்தசெய்திகளையும் சேர்த்த பதிவை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
 
தொடக்கமாகமேற்குறித்த நூலில் காணப்பட்ட சில செய்திகள்அரசுக்கு வரிசெலுத்தாமல் ஏய்த்தல் இன்று பரவலாக நாம் காணும் குற்றம்அரசர்காலத்திலும் இக்குற்றம் இருந்துள்ளதுபொதுச் சொத்துகளை முறைகேடாகத்தனியார் பயன்கொள்ளுதல்அரசின் உள்ளாட்சி நிருவாகத்தில் முறையானகணக்குக் காட்டாதிருத்தல்.   கோயில்களில் ஏற்படுத்தப்பட்ட நிவந்தங்களைச்சரிவரச் செய்யாதிருத்தல்கோயில் செல்வங்களைத் திருடுதல்.  சோழஅரசர்களின் சிறந்த நிருவாகத்தையும் கடந்து இவை போன்றமுறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன என்பதைக் கல்வெட்டுகள்வாயிலாக அறிய முடிகிறது.
 
கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில்மேற்சொன்ன குற்றங்களைமிகுதியும் செய்தவர்கள் பிராமணர்களும் தேவகன்மிகளும் எனக் காண்கிறோம்.தேவகன்மிகள் என்போர் கோயில்களில் பணிபுரிவோர்பிராமணர்கள்,தேவதா ஊர்களையும்பிரமதேயச் சதுர்வேதிமங்கலங்களையும் நிருவாகம்செய்தவர்கள்அரசன் ஓர் ஊரையே கோயிலுக்குக் கொடையாக அறிவித்தல்வழக்கம்அவ்வூரின் வருவாய் கோயிலுக்கே சேரும் என்பது அக்கொடையின்நோக்கம்அவ்வகை ஊர்களின் நிருவாகப் பொறுப்பும்ஊரின் வருவாய்முறையாகக் கோயிலுக்குச் சென்றடைவதைக் கண்காணிக்கும் பொறுப்பும்ஊர்ச்சபையைச் சார்ந்ததுஅவ்வகை ஊர்ச் சபையில் பிராமணரே மிகுதியும்இருந்தனர் எனலாம்அடுத்துவேதம் வல்ல பிராமணர்க்கு ஓர் ஊர் அல்லதுஊரின் ஒரு பகுதியை அரசன் உரிமையாக்குவான்அவ்வகை ஊர்கள்சதுர்வேதி மங்கலங்கள் எனப் பெயர் பெறும்இவ்வூர்களின் நிருவாகப்பொறுப்புசபைபெருங்குறி என்னும் அமைப்பைச் சாரும்இவ்வகைச் சபையில்இருப்போர் பிராமணரேஇவ்விருவகை ஊர்களும் தன்னாட்சி பெற்றவை.மிகுந்த அதிகாரம் உடையவை.
 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard