பைபிள் நாயகர் ஏசு மரணம் பொகா-30ல் என்கின்றனர், அவர் மரணத்திற்கு பின்னர் தொடங்கிய சர்ச் இன்று உலகின் 3 பெரும் மதங்களுள் ஒன்று, ஆனால் அதன் வளர்ச்சி வேகம் என்ன என்பதை அறிவது அவசியம்.
சர்ச் ஆரம்பம் பற்றிய கதைகள் NTயில் அப்போஸ்தலர் நடபடிகள் (பணிகள்) எனும் நூலில் உள்ளது. ஏசு மரணத்திற்கு 40நாள் பின்பாக ஏசு சீடர்கள் கூடிய போது 120 பேர்என ஒரு செய்தி உள்ளது. அதற்குப் பின் ஏசு இறந்த 50ம் நாள் யூத பெந்தகோஸ்தே பண்டிகை அன்று பெரும் அதிசயம் நடந்ததாம், படிப்பறிவில்லா ஏசு சீடர்கள் எபிரேய மொழியில் பேசியதை அங்கு கூடி இருந்க மக்கள் அரெபி, கிரேக்கம், பாரசீக என அவரவர் மொழிகளில் கேடனராம், அதன் பின்பு அன்றே 3000[ii] மக்கள் சர்ச்சில் இணைந்கனராம். சில நாட்கள் பின்னராக 5000[iii] மக்கள் எனவும் சொல்கிறது. ஏசுவின் மரணத்திற்கு 15 - 18 வருடம் பின்பு ஜெருசலேமில் மட்டும்[iv] ஆயிரக் கணக்கான யூதர்கள் கிறிஸ்துவர்களாக உள்ளனர் எனவும் ஒரு சம்பவத்தில் சொல்லப் படுகிறது.
ஏசு சீடர்கள் யூதர்களிடம் மட்டுமே பரப்பினர், ஆனால் பவுல் என்பவர் ஏசு போதனைகளை யூதர் அல்லாதவர்களுக்கு பரப்பி பல ஊர் சர்ச்சுகளுக்கு எழுதிய கடிதங்கள் என 14 ல் உண்டு , இவரால் ஒரு கிறிஸ்து கூட்டம் இருக்க வேண்டும்.
டேவிட் பெர்ரட் என்பவரின் உலக கிறிஸ்துவ கலை களஞ்சியம்[v] பொகா௱ல் கிறிஸ்துவர் எண்ணிக்கை 10 லட்சம் எனக் செய்தி காட்டுகிறது.
முதல் நூற்றாண்டில் ரோம் ஆட்சிக்குக் கீழான மக்கள் தொகை 5.5 கோடி என அறிஞர்கள் ஆய்வு கணக்குகள் கூறுகின்றன. இது 4ம் நூற்றாண்டில் 6 கோடி என ஆனதாம்.
ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்கள் தொகை 6 கோடி, பெரும் மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை மதம் என இருந்தது. 250 வாக்கில் பாதிரி ஓரிகன் எழுதுகையில் நாங்கள் எண்ணிக்கையில் பெறும் கூட்டமல்ல எனவும் தெளிவாய் சொல்லி உள்ளார். பல அறிஞர்கள் வரலாற்று- அறிவியல் ரீதியாக கணக்கிட்டு 1 -7%மக்கள் கிறிஸ்துவர்கள் என விவாதிக்கின்றனர்.5% எனக் கொண்டால் அதாவது 30 லட்சம். இது கிறிஸ்துவம் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு. அடுத்த 50-60 ஆண்டுகளில் இது 5.5 கோடியைத் தொட்டது.
பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து அறிஞர்கள் நூல்கள்
1] Rodney Stark, [vi]The Rise of Christianity (1996)
2] W.V. Harris, ed., [vii]The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).
3] Ramsey MacMullen, Christianizing the Roman Empire[viii]
.