Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வியை அழித்த கிறிஸ்துவம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வியை அழித்த கிறிஸ்துவம்
Permalink  
 


 பண்டைய காலம் தொடங்கி இந்தியா கல்வி, விவசாயம், தொழில்கள், வியாபாரம்  அனைத்த்லும் முன்னைலையில் இருந்தது.  உலகின் மிகப் பெரிய நாடான இந்தியாவும், சீனாவும் உலகின் பொருளாதாரத்தில் பாதிக்கும் மேலான பங்கை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் வகித்தது.

இந்தியாவின் கல்வி முறை என்பது உலகின் எந்த ஒரு நாட்டைவிடவும் பரவலாகவும், பல்வேறு பிரிவினரிடமும் பரந்தே காணப்பட்டது. திண்ணைக் கல்வி என்ற முறையில் இவை  அந்தாந்த கிராமம் - ஊரின் மக்கள் தேவைக்கு ஏற்ப அமைந்திருந்தன. திண்ணைப் பள்ளிக்கு அரசிடம் பணத் தேவைக்கு நிற்காமல் இருக்க வரியில்லாத்க நிலங்கள் (வெள்ளான், பிரம்மதேயம)  என்பனவாக.

1931 ஆம் ஆண்டு வட்ட மேஜை மகாநாட்டில் மஹாத்மா காந்தி சொன்னது“பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது , இங்கு நிலவிய அமைப்புகளை (கல்வி அமைப்புகளை) புரிந்துகொண்டு அதை வளர்தெடுப்பதற்க்கு பதிலாக அவற்றை அப்புறபடுத்த தொடங்கினார்கள் . மண்ணை தோண்டி வேரை எடுத்து ஆராய்ந்தார்கள் . அதன் பிறகு அந்த வேரை அப்படியே மக்கி வாடும்படி விட்டுவிட்டார்கள் .அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது”.

மஹாத்மா காந்தி  அப்படி சொல்வதற்கு ஓராண்டு முன் அமெரிக்கவை சேர்ந்த பாதிரி மறைதிரு. ஜேபஸ் P சுண்டர்லேண்ட் என்பவர் எழுதிய India in Bondage(PDF Here) நூலில் இங்கிலாந்து ஆட்சியின் அரசு ஆவணங்கள் கொண்டே இந்தியா உலகின்  கல்வி, தொழில் நுட்பத்தில், தொழிலில் உச்சத்தில் இருந்தது, கிறிஸ்துவ ஆங்கிலேயரால் சூரையாடப் பட்டதை சொன்ன நூல் இந்தியாவில் தடை செய்யப் பட்டது.

21430544_10214106687327423_215146599292351kk56g76WL._SX322_BO1%252C204%252C203%2

 

 உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் வில் டுரான்டு - The Case for India அவரும் உலக நாகரீகத்தின் தாய் இந்தியா என்பதை எழுதி உள்ளார்


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வியை அழித்த கிறிஸ்துவம்
Permalink  
 


ஸ்ரீ தரம்பால் (1922 – 2006) ஒரு காந்திய செயல்பாட்டாளர். அவர் பல ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்தார். 1960 ஆம் ஆண்டு வாக்கில் அவர் சில ஆய்வுகளுக்காக லண்டனில் உள்ள ‘இந்தியா ஹௌசிலும் ‘ ( INDIA HOUSE ) அங்குள்ள பல அருங்காட்சியக நூல்நிலையங்களிலும் 18 – 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் – இந்தியா தொடர்புகள் பற்றி ஆவணங்களை ஆராய்ந்தார் .

முதல் பாகம் 18ம் நூற்றாண்டில் இந்தியாவில் பல துறைகளில் நிலவிய உன்னத விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியை விளக்குகிறது. இதை   கிறிஸ்துவ ஆங்கிலேயர்கள் எப்படி திட்டமிட்டு அழித்தார்கள் 
இரண்டாவது பகுதி, 18ம் நூற்றாண்டுவரை, இந்தியர்கள் மேற்கொண்ட ஒத்துழையாமை போன்ற கிறிஸ்துவ அரசினர் எதிர்ப்பு முயற்சிகளையும் அவற்றின் விளைவுகளையும் விளக்குகிறது,
மூன்றாவது பாகம்.  “அழகிய மரம்”
நான்காவது பாகம் இந்திய சமுதாய அமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளின் நிலையை விவரிக்கிறது.சுயேச்சையாக, சர்வ பொருளாதார, அரசியல் சுதந்திரங்களுடன் விளங்கிய நமது கிராம சமுதாயங்கள் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன. 

ஐந்தாம் பாகத்தில், நமது இந்திய அரசியல்-சமுதாய பாரம்பர்யத்தின் தனித்தன்மை என்ன, அவற்றின் முக்கிய அம்சங்கள் எவை. அவற்றை எவ்வாறு காலத்திகேற்றவகையிலும், நமது தற்கால லட்சியங்களுக்கு இசைந்தவாறும் மாற்றிக் கொள்வது போன்ற பல விஷயங்களை அலசியிருக்கிறார்.

1822 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம்  (Madras Presidency) ஆளுனர்  சர். தாமஸ் மன்றோ (Sir Thomas Manroe) இந்தியக் கல்வி பற்றிய ஓர் அளவீடு ( Survey ) எடுக்கும்படி வருவாய்த் துறைக்கு (Revenue Board) ஓர் ஆணைப் பிறபித்தார் . வருவாய்தத்துறையின் செயலர் (Revenue Board Secertary) இந்த ஆணையை அவர்கீழ் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் (District Collector) அனுப்பினார் . அன்றைய மதராஸ் ப்ர்சடேன்சி என்பது ஒரிசாவின் சில பகுதிகள், ஆந்திரா , தெலங்கான பகுதிகள் , தமிழ்நாடு , கேரளாவின் சில பகுதிகள் என பரந்து விரிந்த பகுதி சுமார் 25 மாவட்ட ஆட்சியர்கள் கீழ் உள்ள பகுதி . இதேபோன்ற உத்தரவு கொல்கத்தா மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கும் சென்றது. எப்படி தகவல்கள் ஒரே மாதிரியாக சேகரித்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு போலி மாதிரிப் படிவம் கூட அனுப்பப் பட்டது (Template – Filled in Format). இந்த அளவீடு செய்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அனுப்பிய அந்த ஆய்வு அறிக்கையை முழுமையான கோணத்தில் ஆங்கிலேய அரசு பரிசீலனை செய்து பார்த்ததில் ஆட்சியாளர்களே வியந்து போனார்கள் . இந்த ஆய்வு அறிக்கையை படித்த ஸ்ரீ தரம் பாலும் , ஆச்சரியத்தில் உறைந்து போனார் !

azhagiya-maram_FrontImage_469.jpg 46995944_10217714212673302_8766425406761 51hQY3C5k9L._SX336_BO1%252C204%252C203%2

 மேலே குறிப்பிட்ட ஸ்ரீ தரம்பாலின் நூலில் அந்த ஆய்வு அறிக்கையில் ஏராளமான தகவல்கள் இருப்பினும் , இந்தப் பதிவுக்கு சம்பந்தமாக முக்கியமான சில விஷயங்களை கிழே பார்க்கலாம் :

– அடிப்படைக் கல்வி மற்றும் உயர் கல்விக்கான கல்லூரிகள் இருந்தன

– சரசரியாக அடிப்படைக் கல்வி புகட்டும் பள்ளிகள் கிராமம் தோறும் இருந்தன
– அடிப்படைக் கல்வி சராசரியாக 1௦ ஆண்டுகள்
– இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை .
– இந்தக் கல்வி முறை ‘ எண்ணும் எழுத்தும்கண்எனத்தகும் ‘ என்றும் , ‘ ஆச்சாரிய தேவோ பவ ‘ என்றும் , நமது நீண்ட பாரம்பரியமான அணுகுமுறையில் தான் , கல்வியை – ஒரு வழிபாட்டு மனோ நிலையில்தான் உருவகித்து , மொத்த சமூகமும் இயங்கியது .

மிக முக்கியமான இந்த ஆய்வு அறிக்கையில் ஒரு தகவல் , அது கல்வி கற்கும் மாணவர்களின் சாதி பற்றிய விவரங்கள். மாணவர்களின் சாதி – பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர், பிற சாதியினர் (பட்டியல் சாதி). 


ஆம், ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம்.


 உலகில் எல்லா நாடுகளிலுமே, 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கான கல்வி என்ற லட்சியம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் புரட்சிக்குப் பிறகு. உலகில் பொதுவாக, கல்வியானது மத நிறுவனங்களின் பொறுப்பிலேயே விடப்பட்டிருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் இருந்ததைவிட இந்தியாவில் அடிப்படைக் கல்வியானது அனைத்து சாதியினருக்கும் தரப்பட்டிருக்கிறது. தொழில்கல்வி, எல்லா நாடுகளையும்போலவே தொழில் குழுமங்களுக்குள்ளாகவே கைமாற்றித் தரப்பட்டு வந்திருக்கிறது. ஆசிரியர்கள், மன்னர்கள், வணிகர்கள், நில உடமையாளர்கள், எளிய மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்துகொடுத்து, பாரம்பரியக் கல்வி மரத்தை நீரூற்றி, உரமிட்டு, வேலியிட்டுப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். 

பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்ததும், வரி வசூலை அதிகரிக்க என்ன வழி என்று ஆராய்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த நிலங்களில் கணிசமான பங்கு இந்துப் பள்ளிகள், மதரஸாக்கள் போன்றவற்றின் பராமரிப்புக்காக மானியமாகத் தரப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அந்த நிலத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு வரி கிடைக்க என்ன வழி என்று பார்த்து, அதற்கான சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். அப்படியாக, அரசுக்கு வரி தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும், அதுவரை பள்ளிக்குச் செலவிடப்பட்ட தொகை குறைந்தது. கூடவே பிரிட்டிஷார் பெரிய கட்டடங்கள், முறையான அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள், திறமையான ஆசிரியர்கள், தேர்வுகள் என நவீன கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்கள். (பிரிட்டனிலும் அது அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது). அவையெல்லாம் இல்லாத பள்ளிகளை, தயவு தாட்சணியமின்றி மூடினார்கள். அதற்கு முன்பு வரை, பெரிதும் இலவசமாகத் தரப்பட்ட கல்வியானது, பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு கட்டணம் கட்டிப் படிக்கவேண்டி ஒன்றாக ஆனது. இதனால், கடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள், கல்வியில் இருந்து அந்நியப்படவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அம்பேத்கர் போன்ற பல கடைநிலைச் சாதியினர், உயர் கல்வி பெறக் காரணமாக இருந்த அதே பிரிட்டிஷ் நிர்வாகம்தான், பெரும்பாலான எளிய கடைநிலைச் சாதியினர் கல்வியில் இருந்து அந்நியப்படவும் காரணமாக இருந்தது, வரலாற்றின் முரண்நகையே. 

அழகிய மரம் – 18-ம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி
ஆசிரியர்:  தரம்பால், தமிழில்: B.R.மகாதேவன்
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தமிழ் ஹிந்து மற்றும் தினமணி கட்டுரைகளை மாற்றியே இவ்வலைப் பக்கம் எழுதப் பட்டது ந்னறி.
 Dharampal Published works
1. Dharampal, Panchayat Raj as the Basis of Indian Polity: An Exploration into the Proceedings of the Constituent Assembly (with a foreword by Jayaprakash Narayan), AVARD, New Delhi, 1962.
2. Dharampal, Indian Science and Technology in the Eighteenth Century: Some Contemporary European Accounts (with a foreword by Dr. D.S..Kothari and Introduction by Dr. William A.Blanpeid), Impex India, Delhi, 1971; reprinted by Academy of Gandhian Studies, Hyderabad 1983.
3. Dharampal, Civil Disobedience and Indian Tradition: with Some Early Nineteenth Century Documents (with a foreword by Sri Jayaprakash Narayan), Sarva Seva Sangh Prakashan, Varanasi, 1971.
4. Dharampal, The Madras Panchayat System, Vol II: A General Assessment, Impex India, Delhi 1972.
5. Dharampal, The Beautiful Tree: Indigenous Indian Education in the Eighteenth Century, Biblia Impex Private Limited, New Delhi 1983; reprinted by Keerthi Publishing House Pvt Ltd., Coimbatore 1995.
6. Dharampal, Some Aspects of Early Indian Society and Polity and their Relevance to the Present, Indian Association for Cultural Freedom, Pune 1988; Hindi translation published as Angrazon se Pehale ka Bharat Shatabdi Prakashan, Vidisha 1988; Tamil Translation, by K.Ramasubramanian, published as Mundeya India Samudayam, Arasamaippu, Sila Amsanga: Avattrin Inreya Poruttam, Cre-A, Chennai 1992.
7. Dharampal, Bharatiya Chitta, Manas va Kala (Hindi), Pushpa Prakashan, Patna and Centre for Policy Studies, Chennai 1991; English translation (with a Preface and Glossary) by Jitendra Bajaj, published as Bharatiya Chitta, Manas and Kala, Centre for Policy Studies, Madras 1993; Kannada translation, by S. R. Ramaswamy, published as Bharatiya Chitta, Manasikate, Kala, Rashtrotthana Sahitya, Bangalore 1996.
8. Dharampal, Bharat ka Svadharma (Hindi), Vagdevi Prakashan, Bikaner 1994.
9. Dharampal, Despoliation and Defaming of India: The Early Nineteenth Century British Crusade, Bharat Peetham, Wardha, 1999.
10. Dharampal and T.M.Mukundan, The British Origin of Cow-Slaughter in India: with some British Documents on the Anti-Kine-Killing movement 1880–1894, Society for Integrated Development of Himalayas, Mussoorie 2002.
11. Dharampal, Understanding Gandhi, Other India Press, Mapusa 2003; Tamil translation, by Janakipriyan, published as Gandhiyai aridal, Kalachuvadu Pathippagam, Nagercoil 2010.
12. Dharampal, Rediscovering India: Collection of Essays and Speeches (1956–1998), Society for Integrated Development of Himalayas, Mussoorie 2003.
 
13. Dharampal, India Before British Rule and the Basis for India's Resurgence: An Introduction: Some Explorations and Writings , Gandhi Seva Sangh, 1998.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அழகிய மரம் - 18ஆம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி, தரம்பால், தமிழில் பி.ஆர். மகாதேவன்.

 
திரு. தரம்பால், இந்த நூலின் ஆசிரியர், அனைவரும் அறிந்துக் கொள்ளவேண்டிய காந்திய சிந்தனையாளர், மிக முக்கியமான ஆய்வுகள் செய்து படைப்புகள் வெளியிட்டவர். இந்தியாவின் கிராமபுற ஆய்வு பணி கழகங்களிலே பணியாற்றினார், ஆசோஷியேஷன் ஆஃப் வாலிண்டரி ஏஜென்சீஸ் ஃபார் ரூரல் டெவலப்மெண்ட் (AVARD), இந்திய பஞ்சாய்த் பரிஷதின் ஆய்வுத்துறை அதே வேளையில் காந்தி சேவா சங்கம் உடனும் (வார்தா, மஹாராஷ்டரா) கடைசி வரை தொடர்பிலிருந்தார் மற்றும் சென்னையில் இருந்த சென்டர் ஃபார் பாளிசி ஸ்டேடிஸ் உடனும் தொடர்பிலிருந்தார்.
Image result for dharampal
 
18-19ஆம் நூற்றாண்டுகளில் இந்திய-பிரிட்டிஷார் தொடர்புகள்பற்றித் தீவர ஈடுபாடு கொண்டு லண்டனில் இந்தியன் ஆபீஸ், பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கு சென்றுவந்து தன் ஆய்வை மேற்க்கொண்டு இடையே இந்தியா வந்து சேவா கிராமத்தில் தங்கி ஆவணக்காப்பகங்களில் இருந்து தகவல்களை சேகரித்தார். அந்த உழைப்பின் அற்புதம் ‘அழகிய மரம்’. காந்தியின் மேல் உள்ள ஈடுபாடினால் காந்தியின் உரையொன்றில் மேற்கொள் காட்டிய வாசகத்தையே புத்தகத் தலைப்பாக்கியிருக்கிறார். ஆசிரியரின் முன்னூரை இந்நூலின் சாராம்சத்தின் இரத்தினச் சுருக்கம் என்று சொல்லலாம். 
 
‘அழகிய மரம்’ 18-19ஆம் நூற்றாண்டுகளில் பாரம்பரிய கல்வி பற்றிய பிரிட்டிஷாரார்கள் ஆய்வுகளில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட பம்பாய் பிரஸிடன்சி (1820), மதராஸ் பிரஸிடன்சி (1822-25), வில்லியம் ஆடம் (1835-38) மற்றும் பஞ்சாப் மாகாணம் பற்றிய லெயிட்னர் (1882), ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட வாதங்களிலிருந்து தொடங்குகிறது, சுதேச சிந்தனையாளர்கள் முக்கியமாக மகாத்மா காந்தி அவர்கள் 1931 ஆம் ஆண்டு முதலாம் வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டனிலிருக்கையில் ஒரு உரைக்காக அழைக்கப்படுகிறார் அங்கு காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதியான ‘இந்திய கல்வி கடந்த 50-100 வருடங்களில் அழிவதற்கு பிரிட்டிஷ் அரசு காரணம்’ என்பதை மறுத்து விவாதம் தொடங்கும் சர் பிலீப் ஹெர்டாக், இவர் பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வி தொடர்பான குழுக்களில் உறுப்பினராகயிருந்திருக்கிறார். பின் 1932 ஆம் ஆண்டு வரை தொடர்ந்த இந்த விவாதங்கள் வரை நீண்டு நிறைவு பெறுகிறது. ஒற்றை வரியில் சொல்லிவிடக்கூடிய கருத்தை அதன் வீரியம் குன்றாமல் இருக்க இத்தனை அறிக்கைகள், தரவுகள் மூலம் தொய்வில்லாமல் தந்திருப்பது சிறப்பு. அனைத்தும் புள்ளிவிவரங்கள், அதன் அடிப்படையிலான ஆய்வுகள், ஆய்வுகளின் சாரமாக அறிக்கை அந்த அறிக்கையில் சாமர்த்தியமாக கையாளப்படும் ‘ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் மறுக்கப்படும் விசயங்கள்’ இதன் படி பிரிட்டிஷ் அரசுக்கு இந்திய கல்வி மேம்பாட்டிற்க்கான பரிந்துரைகள். அந்த அறிக்கை சர் தாமஸ் மன்ரோ அவர்களால் 1826 ஆம் ஆண்டு சென்னை மாகாண கவர்னரின் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு.
 
ஆசிரியரின் மேம்பட்ட ஆய்வுதிறன், இந்த புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வு அறிக்கை தரவுகளிலிருந்து எப்படி கருத்துக்களை வடித்து படிப்பவர்களுக்கு அத்தனை லாவகமாக படிக்கும் விதமாக தந்துருக்கிறார் என்பது தான். இதை ஆசிரியிர் இந்தியாவின் கல்வியை பிரட்டனுடன் ஒப்பிட்டு அரம்பித்ததின் மூலம் அடைகிறார் என்று தொன்றுகிறது. பிரட்டனில் 13, 14 ஆம் நூற்றாண்டுகளிலேயே ஆக்ஸ்ஃபோர்டு, ஏடின்பர்க் பல்கலைக்கழங்கள் தோன்றியிருந்தாலும் அது மேட்டுக்குடி மக்களால் மட்டுமே பயணபடுத்தப்பட்டது, பின் வளர்ச்சியடைந்து பள்ளிகள் தோன்றினாலும் 18-19ஆம் நூற்றாண்டில் தான் அது கடைநிலை மக்களுக்காக என்ற முறையில் பரவலாக இயங்கியது அதுவும் தொழில்முறையின் அவசியத்துக்காக அதாவது, தினசரி பள்ளி என்ற சட்டம் குழந்தை தொழிலாளர்கள் பயண்படுத்துபவர்கள் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கல்வி அளிக்க வேண்டும், மதம் சார்ந்த கடமைளில் (ஞாயறு கூட்டங்களில்) பங்குபெறவேண்டும் என்ற விதிகளோடு. சுவாரசியம் என்னவென்றால் இந்தியாவில் கடைநிலை மக்கள் வரை பரவியிருந்த பாரம்பரிய கல்வி இதே 18ஆம் நூற்றாண்டு முதல் வீழ்ச்சியடைந்து வருகிறது. கவனிக்க, இந்த காலகட்டம் இந்தியா முழுவதும் பிரிட்டிஷார் நிர்வாகத்துக்குள் வந்துவிட்டது.
Image result for அழகிய மரம்
பிரிட்டிஷார்களின் நோக்கம் பிரதானமாக வருவாய் பேராசை, இந்தியர்களுக்கு மீட்சி மற்றும் முன்பொருகாலத்தில் இந்தியாவை பற்றிய அறிவு இருந்ததால் அந்த தேடல் (நலந்தா, தக்ட்தசீலம், பனாரஸ் பல்கழைக்கலகம்) இவைகள் குறித்தும் தங்கள் நிர்வாகத்தின் தேவைகளுக்காக அவர்கள் செயல்படுத்திய மூன்று முறைமைகள் பற்றிய தெளிவை கொடுத்தவிட்டு முன் நகருகிறார். இதனால் வாசகர்கள் பின் விவரங்களை சுலபமாக இணைத்து புரிந்துக்கொள்ள முடியம். இவை மிக மிக முக்கியமானவை என்றே சொல்லவேண்டும். 
 
அ) பிரிட்டிஷ் நிர்வாக தேவைகளுக்காக இந்திய சாயலிலான செயல்பாடுகள்
ஆ) எடின்பர்க் பேராசிரியர்களின் பரிந்துரைகள், ஒரு நாகரிகத்தை பதிவு செய்தல் அதன் சிறப்புகளை உள்வாங்குதல் குறிப்பாக இந்தியாவில் பனாரஸ் இந்து கல்வி பற்றிய ஆர்வம் 
இ) பிரட்டனில் நடைமுறைபடுத்தப்பட்ட, மக்கள் நிறுவனமயமாக்கப்பட்டு, எளிய சட்டங்கள் வழியாக நெறிபடுத்தப்படும் கிறிஸ்தவ சமூகமாக்குவது.
 
அரசு சார்பின்றி தன்னிச்சையாக இயங்கிய இந்திய பாரம்பரிய கல்வியின் வீழ்ச்சியை தொடரவிட்டு இணையாக மிஷனரி பள்ளிகள் மற்றும் பொது பள்ளிகள் (அரசு சார்ந்த) தொடங்கி கடைநிலை மக்களை பொருளாதாரரீதியில் ஓரம்கட்டிவிட்டு கட்டணம் கட்டக்கூடியவர்களுக்கு மட்டுமேயான கல்வி தலமாக உருவாகிவருகிறது அதே வேளையில் இந்திய மரபுத் தன்மையை குறைத்து மேற்க்கத்தியத் தன்மைகள் புகுத்தப்படுகிறது. இதில் அரசியல் இராஜதந்திரம் இருக்காலாம் அதாவது நிர்வாகத்தில் முடிந்தவரை பிரிட்டிஷார்களை பணியில் அமர்த்திக்கொள்ளுதல் இன்று இது முக்கியமில்லை, அதே போல் மற்றொன்றும் உள்ளது அது இன்றைய நிலைமையும் அதே தான் என்பதால் ஒன்றும் சொல்லதேவையில்லை தானே? இதில்லாமல் ஒரு எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை, பேசப்படும் காலம் முதல் இன்று வரை மையமாக்கப்பட்ட அதிகாரம், அதன் தோரனை மற்றும் செயல்பாடுகளில் மாற்றமேதுமில்லை, கல்வியின் தோரனையிலும் (மேற்க்கத்திய) அதே நிலைமைதான் என்றே சொல்லவேண்டும். மாறியது என்றால் அது பாரம்பரிய கல்வி முற்றிலும் அழிந்துவிடாமல் உயிரை தாக்குப்பிடித்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லும் அளவிற்க்கு கீழ் இறங்கிவிட்டது.
 
பல கலெக்டர்கள் அறிக்கை மத்தியில் பெல்லாரி கலெக்டர் அறிக்கை முக்கியமானது தனது ஆர்வத்தினால் முடிந்த வரை விவரங்களை சேகரித்திருக்கறார். இதனை இணைத்திருப்பதின் மூலம் இன்றைக்கு நாம் அவசியம் தெரிந்துக்கொள்ளவேண்டியவை வரலாறாக அல்ல மரபின் அம்சமாக அதே போல் இந்திய பாரம்பரியத்தில் கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்வதும் தான். அக்காலகட்டத்தில் உயர் கல்விக்காக தெற்கு வடக்கு பயணங்கள் செய்தது, என்ன பொருட்செலவில் கல்வி தரப்பட்டது, எந்த வயது வரை கல்வி, எத்தனை ஆண்டுகள் கல்வி என்று அடுக்கிகொண்டே போகலாம்.
 
தொடர்ந்து, 1826 ஆம் ஆண்டு தாமஸ் மன்ரோ அவர்களின் பரிந்துரைகளுக்கு பின், வில்லியம் ஆடம் (1835-38) மற்றும் லெட்னர் (1882) அறிக்கையும் பதிவு செய்வதன் மூலம் காந்தி அவர்களின் கருத்துக்களை மெய்ப்பிக்கிறார். எப்படியோ அன்று பிரிட்டிஷ் அரசாங்கமோ, சர் பிலீப் ஹெர்டாக் அவர்களோ இந்த கருத்தை ஏற்கவில்லை நிர்வாகத்துக்கான சாமர்த்தியம் என்று சொல்லதக்க விதத்தில் புகழ் பெற்ற பெல்லாரி கலெக்டர் அறிக்கை மற்றும் வில்லயம் ஆடம் அறிக்கையின் கருத்தை காட்டியே இந்திய பாரம்பரிய கல்வி அழியவேண்டியது காலத்தின் கட்டாயம் என்று பதிவுசெய்துள்ளனர். அந்த சூட்சமங்களுக்கு இடமலித்த ஆய்வுகள் அதை செய்தவர்களின் தவறோ, உள்நோக்கமோ அல்ல அது அன்றைய நிலையை குறித்த தகவல் மட்டுமே. இன்றைக்கும் மேற்க்கத்திய கல்வியில் ஊறியவர்களும், இந்த கல்வியினால் தான் இன்று நாம் நல்ல நிலைமையில் இருக்கின்றோம் என்பவர்களும் ‘அழகிய மரம்’ கருத்தை ஏற்பார்களா என்பது சந்தேகமே. ‘அழகிய மர்ம’ அனைவரும் ஏற்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டதுமில்லை அதே சமயம் அனைவரும் அறியவேண்டும் என்று அவசியத்தை உணர்த்துவது.
 
வில்லியம் ஆடம் அறிக்கை, அவர் பதிவு செய்த கல்வி பரவியிருந்த விகிதங்களையும் அதன் பிரம்மாண்டங்களையும், இந்தியா இந்தியர்கள் பற்றிய முன்முடிவுகளுடன் அனுகிய கிறிஸ்தவ பிரிட்டிஷார்களால் ஏற்க முடியிவில்லை இதில் விந்தை அதே வகையை சேர்ந்தவர் தான் ஆடமும். மதபோதகராகயிருந்து ஆட்சி நிர்வாகத்துக்கு வந்தவர் என்பதை பதிவு செய்கிறார் ஆசிரியர். இந்த முன்முடிவுகள் பற்றிய சிறு குறிப்பு புத்தகத்தில் இருக்கிறது, அதாவது, ஐரோப்பியர்களுக்கு அவர்களது கடவுளால் தரப்பட்ட கடமை இந்தியர்களை மேம்படுத்துவது (மீட்சி) அதற்கு இவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றவேண்டும். பின்னது லெய்ட்னர் அறிக்கை, இவர் பஞ்சாப் மாகாணத்தில் கல்லூரிக்கு தலைமை ஆசிரியாராக இருந்திருக்கிறார், தனது அறம் சார்ந்து, அவரது ஒரு அறிக்கையில் பிகிரங்கமாகவே பாரம்பரிய கல்வி அழிந்தது என்றும் அதற்கு பிரிட்ஷாரே காரணமென்றும் குற்றம் சாட்டுகிறார்.
 
இன்றைய கல்வி நிலை குறித்த விமர்சனங்கள் உடையவர்களுக்கு, கல்வி சிந்தனைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, அவர்களது நிலைக்கு முதல் பக்கங்களிலேயே ஆதரவு கடைத்துவிடும் என்றாலும் அந்நிலைக்கு பொதுமான தரவுகள் ஆதாரங்கள் அளிக்கிறது இந்த புத்தகம். இதை கடந்து இரண்டு பத்திகளுக்கு முன் பத்தியில் சொல்லியிருக்கம் புள்ளிவிவரங்கள் தேவையான சிந்தனைகளை கூர்மைபடுத்த அடுத்த கட்ட நகர்வை திட்டமிடுபவர்களுக்கும் உதவும் வகையில் முக்கியமானது கவனிக்கவேண்டியது. இதே வேளையில் இன்றைய கல்வி நிலைக்கு ஆதரவாக காலத்தொடு ஒத்து போவதே நல்லது, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற அடிப்படையில் ஆதரவளிப்பவர்களுக்கும், தங்களை சுயவிமர்சனம் செய்ய நல்லதொரு வாய்ப்பு, தங்களது நியாயங்களுக்காக ஆதரவளிக்கும் இன்றைய நிலை எதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்ற திறப்புகளை தரலாம். இன்றைய நிலையிலிருந்து கடந்த காலத்தை, குறிப்பாக சுதந்திர போராட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பின்தங்கியவர்கள் அவர்கள் கல்வி புலமை இல்லாதவர்கள் அல்லது குறைவானவர்கள் என்றும் அதற்காக சலுகைகள் வேண்டும், சற்று காலம் முன்பு வரை எழுதபடிக்க தெரியாது என்று சொல்வர்கள் இருந்தார்கள் என்பதையும் ஏற்க்கும் அதே நேரத்தில் அதற்கான காரணங்களை பரிசீலிக்க உதவும் இந்த புத்தகம்.
 
மானியம், நல்கை, உதவி, பரோபகாரம், நன்கொடை, வரியில்லாத போன்ற வார்த்தைகளில் ஏதேனும் ஒரு வார்த்தையில்லாத பக்கமே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு கலெக்டர் அறிக்கைகள், அவைகளை தவிர்க்கவே முடியாதபடி ஆசிரியரின் கருத்துகள் இருக்கிறது. இது இந்தியாவில் கல்வி என்பது அறம் சார்ந்தது என்பதை தீர்க்கமாகவே நிலைநிறுத்துகிறது. சிலவற்றை பகிர்ந்துக்கொள்கிறேன், 
 
பெல்லாரி கலெக்டர்: கல்வி புனிதமானது; காசுக்காக கல்வியளிப்பது தரக்குறைவானது என்று எண்ணுகிறார்.
 
மலபார் கலெக்டர்: இணைத்திருக்கும் மலபார் சாமுத்திரி ராஜா அனுப்பிய அறிக்கை அதாவது அவரது முன்னொர்கள் வாய்வழி செய்தியாக சொன்னது மலபார் அரசால் மானியம் வழங்கப்பட்ட கல்வி மையம், பிராமணர்கள் வேதம் படிப்பு அவர்களது அறம், படையடுப்பால் மானியங்கள் பறிக்கப்பட மலபாரில் அதற்கான வாய்ப்பு இல்லாததால் அருகாமை நாட்டிற்கு குடிபெயருகிறார்கள் பின் நிலைமை சீரானதும் மிண்டும் மலபார் வருகிறார்கள். ஒரு சமூகம் குழுவாக கல்விக்காக நாடு மாறுகிறார்கள்.
 
கடப்பா கலெக்டர்: கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை பல மையில் தூரம் வரை அனுப்புகிறார்கள் மாணவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்றாலும் அனைவருக்கும் சாத்தியமில்லை அப்படி நிலையில் மாணவர்கள் ஊரில் யாசகம் பெறுகிறார்கள், ஊர் மக்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இதை செய்கிறார்கள், இதில் ஆடம்பரமற்றதன்மை அதை மேலும் மதிப்புக்குறியதாக்குகிறது என்ற பதிவு.
 
தனிப்பட்டமுறையில் மிகவும் என்னை சிந்தனையில் ஆழ்த்திய விஷயம் பாரம்பரிய ஆரம்ப கல்வியின் நாடோடி தன்மை. அடிப்படை தேவைகள் பெரும்பாலும் மானியங்கள் நன்கொடைகள் மூலம் கிடைக்கும்படிப் பார்த்துக்கொள்ளப்படுகிறது. இங்கே தான் பிரிட்டிஷாரின் வருவாய் பேராசை நேரடியாகவே பாரம்பரிய கல்வியை சாய்க்க வழிவகை செய்திருக்கிறது. நாடோடி தன்மைகள், ஆரம்ப கல்வி கற்க தேவை, ஆசிரியர் கற்கும் ஆர்வமுடைய மாணவர்கள் அவ்வளவே! தங்கும் இடம், படிக்கும் இடம், செலவு, பாடபுத்தகங்கள் என்று வேறு எந்த தேவைகளும் அவசியம் என்ற நிலையில்லை. எப்படியேல்லாம் இருந்திருக்கிறது என்றால்,
 
பொது இடம். 
கிராமத்தினரே அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்கிறார்கள்
நன்கொடை பெற்று தொடங்கப்பட்டிருக்கும்
கிராம பொது அரங்கங்களில்
பொது வெளியில், மரத்தடியில்
கோயில்கள்
வீடுகளில்.
செல்வந்தர் வீடுகளில் ஆசிரியர் வரவழைக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்படுகிறது
ஓரளவு வசதியுள்ளவர்கள் சேர்ந்து தங்களுது வீட்டில் நடத்துகிறார்கள். முறை வைத்தோ அல்லது ஒரே வீட்டிலோ
ஆசிரியர் அவரது வருமானத்துக்காக அவரது வீட்டில் கல்வி கற்பிப்பார்
பொருளாதார வசதியில்லாதவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்களே கற்பிக்கிறார்கள்.
 
பாடங்கள் என்று பார்த்தால் பிரதானமாக இராமாயணம் (பால இராமாயணம்), மகாபாரதம், பகவத் கீதை, குரான். உயர் கல்வியில் பிரதானமாக வேதம், தர்க்கம்/சட்டம் (ஸ்ருமிதி), வானசாஸ்திரம். மருத்துவும் ஒப்பிட்டளவு குறைவுதான் என்றாலும் அனேக இடங்களிலும் கற்றதரப்பட்டுள்ளது நாவிதர்கள் இத்துறையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். மேலும் சில குறிப்புகளை பார்க்கையில் அடிப்படையில் மருத்துவும் குறிப்புகளிலிருந்தும் பழக்கத்தினாலும் அனுசரிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் இந்த பழக்க தொடர்ச்சியை பார்க்கலாம் தான், தலைவலியா அந்த மாத்திரை, தும்மலா இந்த மாத்திரை என்று ;). எந்த கல்விக்கும் பாகுபாடு இருக்கவில்லை கற்கும் ஆர்வமிருந்தால் கற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் பல பக்க அம்சங்கள், தனி விவாதத்திற்க்கும் ஆய்வுக்குமே எடுத்துக்கொள்ளலாம், அப்படியான பல தலைப்புகள் மற்றும் தரவுகள் அடங்கியது. இதை அவரவர் ஆர்வத்தின் அடிப்படையில் கண்டடையளாம். 
 
காந்தி முதல் வட்டமேஜை மாநாடு விவாத நெருக்கடிக்கு மத்தியிலும் ஹெர்டாக் உடன் கடித்திலும் நேராகவும் உரையாட நேரம் ஒதுக்கியிருந்தார். தொடர்ந்து கடித பறிமாற்றம் இருந்திருக்கிறது குறிப்பாக இந்தியா வந்த பிறகு சட்ட மறுப்பு இயக்கம் பின் சிறை சென்ற பின்னரும் கூட. இந்த ஆண்டுகளில் தான் புகழ் பெற்ற பூனா ஒப்பந்தம் முடிவாகிறது. இந்த கடிதங்களின் சாராம்சத்தையும் காந்தியின் தன்நம்பிக்கையையும் மிக நேர்த்தியாக கையாண்டு நூலின் முன் பகுதியில் இணைத்து நிறைவுக்கு கொண்டுவந்திருக்கிறார். காந்தியின் மேல் நன்மதிப்பை உயர்த்துகிறது.
 
ஆசிரியர் கடைசிவரை கருத்துகளை அடிக்கிகொண்டே சென்று சான்றோருக்கான சிறப்பம்சத்தொடு நிறைவு செய்கிறார். ‘இந்திய பாரம்பரியம் எனும் பூதக்கண்ணாடி கொண்டு இன்றைய முறையில் பொருந்தாதவைகள் கண்டுக்கொண்டால் நமக்கு என்ன தேவை என்பது புரிந்துவிடும் அதற்கேற்ப செயல்பட உதவியாகயிருக்கும்.’
 
கூடுதலாக, இந்த புத்தகத்தை படிக்க ஆர்வமுடையவர்களுக்கு, சாரத்தில் மட்டும் ஆர்வமெனில் முதல் 120 பக்கங்கள் பொதுமானது. முன்முடிவுகளொடு படிப்பவர்களுக்கு பின்னிணைப்புகள் அவசியம் கருத்தை ஏற்கவோ, மறுக்கவோ. பிறகு காந்தி இந்த விவாத்தில் பங்டுகெத்த பிறகு இதன் வீச்சு எந்த அளவிற்க்கு சென்றிருக்கிறது என்பதை படிக்கையில் அவர் அந்த காலகட்டதின் எந்த அளவு தவிர்க்கமுடியாதவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. கூறிப்பாக காந்தி ஹெர்டாக் அவர்களுக்கு பதில் அனுப்புகையில் ‘பிரிட்டிஷ் அரசை காரணம் சொல்கையில் எந்த அளவு உலக கவனம் இருந்ததோ அதை காட்டிலும் அதிக கவனம் இருக்கும் வகையில் தனது கருத்துகள் தவறு என்றால் அதை பின்வாங்குவேன்’ என்பதை வாசிக்கையில் அவரது ஆத்மார்த்தமான ஈடுபாடு தெரிகிறது. ‘அழகிய மரம்’த்திலிருந்து காந்தி பிரிக்கமுடியாதவராகிறார். காந்திக்கு பதில் அளிக்க ஹெர்டாக் கலந்து விவாதித்த பிற பிரிட்டிஷார்களின் கருத்துகள் என்ன என்பதும் முக்கியம்.
 
நிறைவாக, பி.ஆர்.மகாதேவன் அவர்களை கூறிப்பிட வேண்டும் ஓரு நேர்த்தியான மொழிக்காக. தனது முன்னுரையாக இவர் இன்றைய கல்வி குறித்த வெற்று அரசியல் பற்றியும் கூறிப்பிடுகிறார். அத்தோடு வாசகர்கள் படிக்க தொடங்கியதுமே தங்களது நிலைப்பாட்டில் ஒரு சிறு வேறுபாட்டை அடையாளம், பாரம்பரிய கல்வி அனைவருக்குமானதா அல்ல உயர் வர்ன வகுப்பினர்களுக்கானதா என்று, அதை தொடர்ந்து மீண்டும் சில கேள்விகள் எழலாம் அது அவரவர் தேடுலுக்காக விட்டுவிடலாம்.
- கண்டனூர் நாராயணன் 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அழகிய மரம்

 ஆரியப் படையெடுப்பு தொடர்பான பொய்யுரைகளுக்கு அடுத்ததாக இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், அதிக செல்வாக்குடன் திகழும் இன்னொரு கட்டுக்கதை என்னவென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களைப் (பிராமணர் அல்லாதவர்களை) படிக்கவே விடவில்லை என்பதுதான். திராவிடக் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு, பல்வேறு அரசியல் குழுவினர் இன்றும் நம்பும் அல்லது நம்ப விரும்பும் கற்பிதம் அது. காந்தியவாதியும் வரலாற்று ஆய்வாளருமான தரம்பால், இந்தியக் கல்வி பற்றி ‘அழகிய மரம்’ இந்தப் புத்தகத்தில் முன்வைக்கும் ஆதாரங்களைப் படிப்பவர்கள், ஒன்று தங்களுடைய அந்தப் பிழையான தீர்மானத்தை மாற்றிக்கொள்வார்கள். அல்லது கைவந்த கலையைப் பயன்படுத்தி, புதிய வெறுப்புரைகளைக் கண்டடைவார்கள். (பிழையான அரசியல் கருதுகோளை மாற்றிக்கொள்ளும் நேர்மையெல்லாம் எல்லோருக்கும் எளிதில் வாய்த்துவிடுவதில்லையே). 

1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். அப்படியாக, பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில், இந்தியக் கல்வியின் வரலாற்றை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.

உலகில் எல்லா நாடுகளிலுமே, 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கான கல்வி என்ற லட்சியம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் புரட்சிக்குப் பிறகு. உலகில் பொதுவாக, கல்வியானது மத நிறுவனங்களின் பொறுப்பிலேயே விடப்பட்டிருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் இருந்ததைவிட இந்தியாவில் அடிப்படைக் கல்வியானது அனைத்து சாதியினருக்கும் தரப்பட்டிருக்கிறது. தொழில்கல்வி, எல்லா நாடுகளையும்போலவே தொழில் குழுமங்களுக்குள்ளாகவே கைமாற்றித் தரப்பட்டு வந்திருக்கிறது. ஆசிரியர்கள், மன்னர்கள், வணிகர்கள், நில உடமையாளர்கள், எளிய மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்துகொடுத்து, பாரம்பரியக் கல்வி மரத்தை நீரூற்றி, உரமிட்டு, வேலியிட்டுப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். 

பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்ததும், வரி வசூலை அதிகரிக்க என்ன வழி என்று ஆராய்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த நிலங்களில் கணிசமான பங்கு இந்துப் பள்ளிகள், மதரஸாக்கள் போன்றவற்றின் பராமரிப்புக்காக மானியமாகத் தரப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அந்த நிலத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு வரி கிடைக்க என்ன வழி என்று பார்த்து, அதற்கான சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். அப்படியாக, அரசுக்கு வரி தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும், அதுவரை பள்ளிக்குச் செலவிடப்பட்ட தொகை குறைந்தது. கூடவே பிரிட்டிஷார் பெரிய கட்டடங்கள், முறையான அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள், திறமையான ஆசிரியர்கள், தேர்வுகள் என நவீன கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்கள். (பிரிட்டனிலும் அது அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது). அவையெல்லாம் இல்லாத பள்ளிகளை, தயவு தாட்சணியமின்றி மூடினார்கள். அதற்கு முன்பு வரை, பெரிதும் இலவசமாகத் தரப்பட்ட கல்வியானது, பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு கட்டணம் கட்டிப் படிக்கவேண்டி ஒன்றாக ஆனது. இதனால், கடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள், கல்வியில் இருந்து அந்நியப்படவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அம்பேத்கர் போன்ற பல கடைநிலைச் சாதியினர், உயர் கல்வி பெறக் காரணமாக இருந்த அதே பிரிட்டிஷ் நிர்வாகம்தான், பெரும்பாலான எளிய கடைநிலைச் சாதியினர் கல்வியில் இருந்து அந்நியப்படவும் காரணமாக இருந்தது, வரலாற்றின் முரண்நகையே. 

இதுபோன்ற பல உண்மைகளை ஆதாரபூர்வமாக முன்வைக்கும் இந்த நூல், ஆங்கிலத்தில் அதர் இந்தியா பிரஸ் (Other India Press, Goa) சார்பில், தி ப்யூட்டிஃபுல் ட்ரீ (The Beautiful Tree) என்ற தலைப்பில் வெளியானது. அதன் அதிகாரபூர்வ மொழியாக்கம் இது. ‘‘இந்தப் புத்தகத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள், பெருமளவுக்கு ‘மதராஸ் பிரஸிடென்ஸி இண்டிஜினஸ் எஜுகேஷன் சர்வே’யில் இருந்து எடுக்கப்பட்டவையே. 1966-ல்தான் இதை முதலில் பார்த்தேன். 1831-32-லேயே, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஆவணங்களில் இந்த ஆய்வறிக்கைகளின் சுருக்கம் இடம்பெற்றிருக்கிறது. ஏராளமான ஆய்வாளர்கள், மதராஸ் பிரஸிடென்ஸி மாவட்ட ஆவணங்களிலும், பிரஸிடென்ஸி வருவாய்த் துறை ஆவணங்களிலும் (பிந்தைய அறிக்கைகள் மதராஸிலும் இருக்கின்றன; லண்டனிலும் இருக்கின்றன) இருக்கும் இந்த விரிவான ஆய்வறிக்கைகளைப் பார்த்திருக்கக்கூடும். எனினும், இனம்புரியாத காரணங்களினால் அவை அறிவுப்புலப் பார்வையில் இருந்து தப்பிவிட்டிருக்கின்றன’’ என்று முன்னுரையில் தரப்பால் தெரிவித்திருக்கிறார். இனம் புரியாத காரணங்கள் என்று அவர் நாசூக்காகச் சொல்லியிருக்கிறார். உண்மையில், கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனமே அதற்கான காரணம் என்பதை இந்தத் தொடரைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். 

சுமார் 430 பக்கங்கள் கொண்ட ஆங்கில நூலின் சாராம்சத்தை, தரம்பால் அதே நூலில் அறிமுக உரையாக சுமார் 80 பக்கங்களில் சுருக்கித் தந்திருக்கிறார். இந்தத் தொடரில், அந்த அறிமுக உரை மட்டுமே இடம்பெற இருக்கிறது. மூல நூலில், அது ஒரே தொடர்ச்சியான உரையாகவே வெளியாகியிருக்கிறது. வாசகர்களின் வசதிக்கு ஏற்ப பல அத்தியாயங்களாக இங்கு பிரித்துத் தரப்படுகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 ஏசியாடிக் சொசைட்டி என்ற பெயரில், இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து ஆட்சியாளருக்கும் பிரிவினை வளர்க்கும் கல்வியை திணித்த பின்பே பதவியில் இயங்கலாம். 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard