Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: செந்தமிழில் கல்வெட்டுகள் இல்லை - ஏன்?


Guru

Status: Offline
Posts: 7471
Date:
செந்தமிழில் கல்வெட்டுகள் இல்லை - ஏன்?
Permalink  
 


செந்தமிழில் கல்வெட்டுகள் இல்லை - ஏன்?

 
E.Annamalai 
சென்னை, மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் இரா. சீனிவாசன் எழுப்பிய கேள்விகள்:
கல்வெட்டுகளில் பயின்று வரும் மொழி, இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதன் காரணம் என்ன?
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
சங்கக் கவிதைகளின் மொழியும் சமகால பிராமிக் கல்வெட்டுகளின் மொழியும் தனித்து நிற்கின்றன. கம்பராமாயணத்தின் மொழியும் சோழர் காலக் கல்வெட்டுகளின் மொழியும் வேறானவை. இதற்குக் காரண்ங்கள் பல. சில காரணங்கள் ஊகங்களே. ஒரு காரணம், எழுதப்பட்ட பொருள். கவிதையின் பொருள் கற்பனை கலந்தது. இந்தக் கற்பனைக்கு ஒரு மொழி சார்ந்த ஒரு மரபு இருந்தது. கல்வெட்டுகளின் பொருள், கொடை, போர் வெற்றி, கோயில் பராமரிப்பு முதலிய உலகியல் சார்ந்தது. இன்றும் அரசு ஆவணங்களின் மொழிக்கும் நவீன இலக்கிய மொழிக்கும் வேறுபாடு உண்டு.
இரண்டாவது காரணம், எழுத்தின் நோக்கம். இலக்கியம், மொழித் திறம் படைத்தவர்கள் படித்து இன்புற எழுதுவது.ல்வெட்டு, குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டது. இதனால் கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் கலப்பைப்பார்க்கலாம்.
மூன்றாவது காரணம் புரவலர்களின் மொழிக் கொள்கையும் நாட்டின் மொழி நிலையும். பிராமிக் கல்வெட்டுகளில் சுட்டப்படும் உறவிடங்களைத் தானமாகப் பெற்றவர்கள் பிராகிருதம் பேசிய சமணத் துறவிகள். இந்தக் கல்வெட்டுகள் தமிழும் பிரகிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கின்றன. இதே சமணர்கள் தாங்கள் தமிழில் கவிதை எழுதும்போது தமிழ்க் கவிதை சார்ந்த மொழி மரபை – பிற மொழி கலக்காத, கலந்தாலும் தமிழாக்கப்பட்ட மொழியை – பின்பற்றுகிறார்கள். சோழ அரசர்கள் தங்கள் பேரரசுத் தகுதியை நிலைநாட்ட இந்தியாவிற்கு வெளியேயும் அரசவைகளில் கோலோச்சிய சமஸ்கிருதத்தைத் தழுவி அதைக் கல்வெட்டுகளில் தங்கள் பெருமையைப் பறைசாற்றப் பயன்படுத்தினார்கள். இதனால் கல்வெட்டுகளில் அரசனின் வம்சப் பெருமையையும் போர் வெற்றிகளையும் புகழும் மெய்க்கீர்த்தி சமஸ்கிருதத்தில் அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருக்கும். ஆனால் இது போன்ற புகழ்ச்சியுரை இலக்கியத்தில் பாடாண்திணையாக வரும்போது நல்ல தமிழில் இருக்கும். மேலே சொன்ன காரணத்தால் கல்வெட்டுகளில் பிறமொழிச் சொற்கள் அதிகமாக இருக்கும். அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த பல கலைச் சொற்களும் பிராகிருதத்தில் இருக்கும்.
நான்காவது காரணம், மொழி வெளிப்பாட்டு வடிவம். இலக்கியம், கவிதை வடிவம் கொண்டது. கல்வெட்டு, உரைநடை வடிவம் கொண்டது. உரைநடையில் மொழியைப் பொறுத்தவரை அதிகச் சுதந்திரம் உண்டு. இறையனார் அகப்பொருள் உரை போன்ற இலக்கியம் தொடர்பான உரைநடை இலக்கிய மொழியின் தன்மைகளைக் கொண்டது. உலகியல் தொடர்பான உரைநடை, நாட்டு மொழிப் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
http://www.vallamai.com/?p=625
இ.அண்ணாமலை- பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார். இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில்.


__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

இது பிராகிருத மொழிக்கு வரருசியின் பிராகிருதப் பிரகசாவைத் தழுவி இலக்கணம் எழுதிய பேரறிஞர் டி சி சர்கார் தன்னுடைய முன்னுரையில் சொல்வது:
The common speech of the Vedic Aryans which apparently differed from the literary language of the Samhitas( that was gradually becoming archaic) is no doubt the origin of the so-called Prakrit language.,, The language of the common people of the Vedic age changed continually and after several centuries assumed the form which we call Prakrit. Sanskrit is the reformed, literary and elegant form of the same language at an early stage of its development.

இது பேராசிரியர் உல்னர் (லாகூர் கல்லூரியின் முதல்வராக இருந்தவர்) 1917ல் தனது பிராகிருத இலக்கணப் புத்தகத்தில் எழுதியது:
If in "Sanskrit" we include the Vedic language and all
dialects of the Old Indian period, then it is true to say that
all the Prakrits are derived from Sanskrit.

வேதத்திற்குப் பொருள் இல்லை என்று சொல்வது நகைக்கத்தக்கது. வேதத்தின் இருக்கும் சொற்கள் சிலவற்றிற்குப் பொருள் தெரியவில்லை என்று சொல்வது வேறு. வேதத்திற்குப் பொருள் தெரியவில்லை என்று சொல்வது வேறு. வேதத்திற்கு உரைகள் இருக்கின்றன. தமிழ் இலக்கியத்திற்கு இருப்பது போல. அவற்றை ஒதுக்கித் தள்ளினால் தமிழ் இலக்கியத்திற்கும் பொருள் தெரியவில்லை என்று ஒதுக்க வேண்டி வரும்.

 

rthographic irregularities, is often held up as a model of high classical literary style of the mixed prose and verse (campu) class. From this point on, all the inscriptions of the Guptas and their neighbors and feudatories in northern India were written in correct classical Sanskrit;
இதற்கு முன்னாலும் சமஸ்கிருதக் கல்வெட்டுகள் இருக்கின்றன. காலச்சுவடு அனுமதித்தால் அவை என்ன சொல்கின்றன. அவற்றின் மொழி வளம் என்ன என்பதைப் பற்றி எழுதத் தயாராக இருக்கிறேன்.
 

"தமிழ்நூற் களவிலை அவற்றுள்
ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ
அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவே நாணுவர் அறிவுடையோரே
ஆகையால் யானும் அதுவே அறிக
வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக"

இது இலக்கணக் கொத்து என்ற 17ம் நூற்றாண்டு நூலில் இருக்கிறது. "தனித்தமிழ் என்று ஒன்றும் கிடையாது. தமிழில் ஐந்து எழுத்துகள் மட்டும்தான் உண்டு. மீதி எல்லாம் வடமொழியிலிருந்து இரவல் வாங்கபப்ட்டது. தமிழை ஒரு மொழி என்று சொல்வதற்கே அறிவுடையோர் வெட்கப்பட வேண்டும். வடமொழி, தமிழ் இரண்டிற்கு இலக்கணம் ஒன்றுதான்" என்கிறது.

இந்நூலை எழுதியவர் சுவாமிநாத தேசிகர். பிராமணர் அல்லாதவர்.

நான் இதை மேற்கோள் காட்டி இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்க மாட்டேன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

பொ வேல்சாமி

“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் ?

நண்பர்களே….

செப்டம்பர் மற்றும் நவம்பர் 2019 காலச்சுவடு இதழ்களில் பி.ஏ.கிருஷ்ணன் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் மீதும் வடமொழி மீதும் கீழடி ஆய்வுகளின் அடிப்படையில் சில கருத்துகளைக் கூறுகின்றார். இந்தக் கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகள் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் மிகவும் வருந்துவதாக அதன் பொறுப்பாசிரியர் நவம்பர் 2019 இதழில் ஒரு குறிப்பு எழுதியிருக்கின்றார். இந்தக் குறிப்பு இன்னொரு செய்தியையும் சொல்லாமல் சொல்கிறது. அதாவது, பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடைய கட்டுரை அறிவுபூர்வமானது. எதிர்வினைகள் உணர்ச்சிபூர்வமானது.

இந்த இடத்தில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன….
1. செப்டம்பர் 2019 இதழில் பக்.20 இல் ஒரு இடத்தில் வேதங்கள் எழுதப்பட்டது சமஸ்கிருதத்தில் என்கிறார். அதே பக்கத்தில் வேதங்கள் வாய்வழியாக வந்தது என்கிறார். ( உலக மொழிகள் அனைத்தும் வாய்வழியாகத் தான் வந்தன என்று அறிஞர்கள் செப்புவர் ) அப்படியானால் வேதச்சொற்களுக்கு பொருள் கூறும் “யாஷ்கநிருத்தம்” முன்னுரையில் குத்சர் என்ற ரிஷியானவர் மிகப் பழங்காலத்திலேயே வேதச்சொற்களுக்கு பொருள் இல்லை என்று கூறியிருப்பதை எப்படி புரிந்துகொள்வது ? வெறுமனே இப்படி கேள்வி எழுப்புபவர்களை “அறிவிலி”கள் என்று சாடுவது அறிவுபூர்வமானதா ?,
2. பிராகிருதம் சமஸ்கிருதம் இரண்டும் வேத சமஸ்கிருதத்தின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் என்று பிரசவம் பார்த்த மருத்துவர் போல கூறுகிறாரே, அப்படியானால் தமிழில் உள்ள தண்டியலங்காரம் நூலில் “இவ்வாற்றான் தமிழ்ச்சொல்லெல்லாம் “பிராகிருத”மெனப்படும்” என்று குறிப்பிட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லுவார் ?
3. அறிவியல் கண்ணோட்டம் இன்றி உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பேசுகின்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தகையவர்களுக்கு அறிவியல்பூர்வமாகச் செய்திகளைச் சொல்லுகின்றோம் என்று வருபவரும் அதே தன்மையில் பேசுவது எந்த வகையில் நியாயமானது ? இந்தியாவின் எழுத்து வரலாறு பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள், எழுத்து வளர்ச்சியின் காலகட்டங்களை குறிப்பிடவில்லை. ( உதாரணமாக ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தென்னிந்தியாவில் சமஸ்கிருதமொழியை எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட கிரந்தத்திற்கும் பின்னர் 500, 600 ஆண்டுகள் கழித்து வடஇந்தியாவில் உருவாக்கப்பட்ட தேவநாகரி எழுத்து வடிவத்திற்கும் உள்ள காலஇடைவெளி போன்றவை ) 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டு பிராமி எழுத்தில் எழுதப்பட்ட பல தமிழ் கல்வெட்டுகளை தன்னுடைய கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார். அதேபோல சமஸ்கிருத கல்வெட்டுகளையும் காட்டியிருப்பார் என்று ஆவலுடன் நாம் பார்த்தால் ஒன்றையும் காணோம். கி.பி.150 வாக்கில் எழுதப்பட்ட ஒரு சமஸ்கிருத கல்வெட்டைக் குறிப்பிடுகின்றார். மற்ற கல்வெட்டுகள் அழகிலும் அலங்காரத்திலும் மிகப் பிரமாதம் என்று சொல்லுகின்ற இவர் அவற்றையும் எடுத்துக்காட்டலாம் அல்லவா? வருகின்ற காலச்சுவடு இதழ்களில் அய்யா அவர்கள் குறிப்பிடுகின்ற பழங்காலத்து அழகிய சமஸ்கிருத கல்வெட்டுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ( அப்படியான கல்வெட்டுகள் ஏதும் இல்லை என்று கல்வெட்டு அறிஞர்கள் கூறியுள்ள செய்தியை அய்யா பொய்யாக்க வேண்டும். )

குறிப்பு
மிக விரிவாக எழுத வேண்டிய கட்டுரை ஒன்றுக்கான செய்தியை முகநூல் நண்பர்களுக்காக மிக மிக சுருக்கமாக எழுதியுள்ளேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

வேதம் வேதபிரகாஷ் I just quote from Iravatham Mahadevan, as follows:

1. First, Early Tamil Epigraphy is the most comprehensive source for the study of the Tamil-Brahmi and Early Vatteluttu inscriptions, including inscriptions on pottery, seals, rings and other objects.


2. Second, the occurrence of the largest number of inscriptions on pottery in the Tamil region not only in well-known urban sites but also in rural areas indicates that Tamil society was in the process of transition from orality to literacy.

3. Third, this is the first work to take up the study of the orthography in addition to the palaeography of the inscriptions. This has made it possible to recognise that these inscriptions are inscribed in the Tamil language (Old Tamil). These are the earliest known lithic records in Dravidian, as rare lexical items and grammatical morphemes not found even in the earliest layer of Old Tamil occur in these records. On the other hand, no Brahmi inscriptions in Telugu or Kannada have been found so far, since Prakrit is the language of the early "Southern-Brahmi" inscriptions in Andhra Pradesh and Karnataka.

4. Fourth, present day Kerala with its Tamil-Brahmi and Early Vatteluttu records was part of a larger Dravidian-speaking south in the early historical period. It became a separate region and culture zone from the early medieval period (600-1300 CE). This fact is corroborated by the Sangam classics as well as by later Malayalam literature and inscriptions.

5. Fifth, the Tamil language with its alphabet of 26 main letters attained fixity by the 6th century CE. and resisted any new characters for the non-Tamil words introduced into the language. The origin of the Vatteluttu (cursive script of the 5th-6th centuries CE) can now be traced to the Tamil-Brahmi.

6. Sixth, although the Southern-Brahmi and the Tamil-Brahmi are derived from the Asokan Brahmi, they evolved independently of each other, despite the close cultural and commercial contacts between upper and lower south India in the early period. There is a significant influence of Jain Ardhamagadhi - and not of Asokan Prakrit - in the language of Tamil-Brahmi inscriptions.

7. Seventh, there is clear evidence of mutual influence between the Tamil-Brahmi and the Simhala-Brahmi, although the latter is used for Simhala-Prakrit, a Middle-Indo-Aryan language, and the former for Tamil, a Dravidian language. Simhala-Brahmi and Tamil-Brahmi show certain orthographic similarities and peculiarities. It is interesting that recent Sri Lankan archaeological and epigraphical studies have also recognised this interaction and influence. Simhala-Brahmi, we are told, is "unique among the Prakrit based variants of Brahmi, for a substratum of Tamil influence seems to have been present and due to the processes of assimilation and epenthesis, which were more thorough going in this language than in Indian Prakrits, the two scripts, one for a Middle-Indo-Aryan (Simhala-Brahmi) and the other for a Dravidian language (Tamil-Brahmi), were able to avoid ligatures, a prominent feature in all other regional scripts."

8. Eighth, Brahmi cannot be derived from the graffiti (symbols), as the latter occurs in the inscriptions side by side with the Brahmi characters in rock inscriptions and pottery (from Kodumanal). Also important is Mahadevan's observation that the resemblance of the cave symbols with the Indus script may show that they are likely to share similar significance, but not necessarily the same phonetic value.

9. Ninth, of great importance is the recognition that the Tolkappiyam, admittedly the earliest work on Tamil grammar, cannot be dated earlier than the 2nd century CE., as its rules regarding the phonetic needs of Tamil and the signs (medial vowel notations etc.) used for specific sounds not known to the Indo-Aryan appear in the later stages that is, in Late-Tamil-Brahmi.

10. Tenth, the revised chronology presented by the author provides a century-wise dating of the inscriptions and broadly classifies them into two: Early-Brahmi - 2nd century B.C.E to 1st century CE., and Late-`Brahmi - 2nd century CE. to 4th century CE., followed by the Early Vatteluttu - 5th to 6th centuries CE.

11. Eleventh and most important, Early Tamil Epigraphy disproves the claim by Tamil enthusiasts that there existed an earlier independent script for Tamil, which was forgotten, and that Brahmi came into use later.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard