பதிற்றுப்பத்துபாடல் 74 சேர மன்னனைப் புகழ்ந்து பாடும் ஒரு பாடல்.
கேள்வி கேட்டுப் படிவம் ஓடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப
அந்த இன்னொரு பெயரால் வேதம் இங்கு குறிப்பிடப்படுகிறது. படிவம் ஒடியாதுஎன்பதன் மூலம் எந்த வித விதிமுறைகளையும் விடாது என்பது சொல்லப்படுகிறது.வேள்வி வேட்டனைஎன்பதால் விதி முறையின் படி வேள்விகளை இயற்றியவன் சேர மன்னன் என்பது கூறப்படுகிறதுஉயர்ந்தோர் உவப்பஎன்பதால் மேல் உலகில் உள்ளோர் அதனால் உவந்தனர் என்கிறார் புலவர். அதாவது வேள்வியினால் தேவர்கள் மனம் மகிழ்ந்தனர் என்பதை புலவர் வலியுறுத்துகிறார்.
ஆக சங்க இலக்கியத்தில் அறம் கூறும் வேத வழியில் நிற்பவன் மன்னன் என்பதும் வேள்விகளை முறைப்படி நடத்துபவன் என்பதும் அப்படிப்பட்ட மன்னனைப் புலவர் புகழ்ந்து போற்றுவதையும் பல இடங்களில் காண்கிறோம்.
பைஞ்சேறு மெழுகிய – பசுஞ்சாணத்தினால் மெழுகிடப்பட்டபடிவ நல்நகர் – பலவித சடங்குகள் நடக்கும் வீடு
உறி கோழியொடு ஞமலி துன்னாது – கோழி, நாய் அங்கு அண்டாதுவளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் – வளைந்த மூக்குகள் கொண்ட கிளிகள் வேத பாராயணம் செய்யும்மறை காப்பாளர் – வேதங்களைக் காத்து வரும் அந்தணர் உறைபதி சேப்பின் – (அவர்கள்) உறையும் இல்லம் சென்றால்வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின் – வானத்தின் வடக்கே திகழும் அழகிய சிறு நட்சத்திரமான அருந்ததி போல
நறுநுதல் வளைக்கை மகடூஉ – நல்ல நெற்றியை உடைய வளையல்களை அணிந்த பெண்கள் இருப்பர்வயின் அறிந்து அட்ட – மிக நன்றாக சமைக்கப்பட்ட
சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம் – சூரியாஸ்தமனத்தில் உள்ள பறவையின் பெயர் கொண்ட பிரமாதமான உணவு (அரிசிச் சோறு)
கஞ்சக நறுமுறி அளை இ – நறுமணமுடைய கறிவேப்பிலை கலந்த
பைந்துணர் நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த – புதிய பெரிய மாமரத்தினின்று எடுக்கப்பட்ட மாவடுவிதிர்த்த – கலக்கப்பட்ட
தகைமாண் காடியின் – அருமையான ஊறுகாயுடன் கூட
வகைபடப் பெறுகுவீர் – பல வித வகை உணவைப் பெறுவீர்!
காழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லாத ஒரு சமுதாயம். அந்தணரும் இசைக் குடும்பமும் இணைந்து உண்ணும் ஒரு அருமையான விருந்துச் சாப்பாடு!
அடுத்து 315, 316 அடிகளில் அந்தணரும் வேள்வியும் உரைக்கப்படுகிறது.
நீர்ப்பெயற்று என்று ஒரு ஊர். அந்த ஊரின் சிறப்போ சொல்லிமாளாது. அங்குள்ள பெண்டிர் தங்களுக்குத் தெரிந்த நட்புடன் அதிகாலை நேரத்தில் நீரில் விளையாடுகின்றனர். அவர்கள் தங்களது தங்கக் காதணிகளை கரையிலே கழட்டி வைக்க அவ்ற்றை மீனொன்று தன் உணவென எடுத்து தனியே பறவைகள் நிறைந்துள்ள் பனைமரம் அருகே செல்லாது வேதம் சொல்லும் அந்தணர்கள் யாகம் இயற்றும் வேள்வித் தூணத்து அருகில் கொண்டு வைக்கிறது.
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ (வரிகள் 315-316)
எத்தகைய அற்புதமான நடைமுறை வாழ்க்கைச் சித்திரம்.
-- Edited by admin on Saturday 14th of September 2019 07:41:45 AM
அடுத்து சிறுபாணாற்றுப்படையில் வரும் வரிகளைக் காண்போம்:
இது தொண்டை நாட்டு ஓவியர் குடியில் பிறந்த (ஒய்மான் நாட்டு) நல்லியக் கோடன் மேல் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய பாடல்.
அருமறை நாவின் அந்தணர்க்காயினும்
கடவுள் மால்வரை கண் விடுத்தன்ன
அடையா வாயில் (வரிகள் 204,205,206)
நல்லியக்கோடனின் அரண்மனை வாயில் பொருநர்க்கும் புலவர்க்கும் மூடப்படாத வாயில். அருமறையை நாவிலே கொண்டிருக்கும் அந்தணர்க்கும் கடவுளின் உயர் மலை கண் திறந்து இருத்தாற்போல மூடப்படாத வாயிலாகும்
வேதத்தை நான்மறை, மறை, வேதம், சுருதி,கேள்வி, வாய்மொழி, முதுமொழி, புலம் என்றெல்லாம் பரிபாடல் கூறி அதன் பெருமையை எடுத்துரைக்கிறது.பரிபாடலின் முதல் பாடல் திருமாலின் பெருமையை விளக்குகிறது.
(தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்தபோது தலைவன் பாங்கனை நோக்கி, "நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை" என்று கூறியது.)
பார்ப்பன மகனே! செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது நல்ல பட்டையை நீக்கி விட்டு அதன் தண்டோடு ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும் விரதவுணவையுமுடைய வேதத்தையறிந்த நின்னுடைய அறிவுரைகளுள் பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும் தன்மையையுடைய பரிகாரமும் இருக்கின்றதோ? இங்ஙனம் நீ கழறுதல் மயக்கத்தால் வந்ததாகும்.
முடிபு: பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, நின் சொல்லுள்ளும் மருந்துமுண்டோ? இது மயல். கருத்து: நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.
ஐங்குறுநூறுபாடல்எண். 202
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர்
பார்ப்பன குறு_மக போல தாமும்
குடுமி தலைய மன்ற
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே
" கிழத்தி=" " கூற்றுப்பத்து
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள
பார்ப்பனச் சிறுவர்களைப் போன்று, தாமும்
குடுமி பொருந்திய தலையினையுடையதாய் இருக்கின்றதே!
நெடுமலை நாட்டவனான தலைவன் ஓட்டி வந்த குதிரை.
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை 150
புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் 155
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்
நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய 160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம்தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவர் சுட்டி காண்வர 165
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை 170
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் 175
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை 180
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து 185
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி
விரையுறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் 190
அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேம் கள் தேறல் 195
பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய 150
கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும் - வெள்ளிய ஆனேற்றை
வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களையும்,
இறைவி பொருந்தி விளங்குகின்ற, இமையாத மூன்று கண்களையும் உடைய,
முப்புரத்தை எரித்த, மாறுபாடு மிக்க உருத்திரனும் -
நூற்றைப் பத்தாக அடுக்கிய(ஆயிரம்) கண்களையும், நூற்றுக்கணக்கான பல 155
வேள்விகளை வேட்டு முடித்ததனால் வென்று கொல்கின்ற வெற்றியினையும் உடையனாய்,
நான்கு ஏந்திய கொம்புகளையும், அழகிய நடையினையும்,
(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
புறக்கழுத்தில் ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும் -
நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள 160
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய
பலராலும் புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி,
பாதுகாவலுறுகின்ற (இம்)மண்ணுலகில் (வந்து)தோன்றி,
தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய
நான்முகன் ஒருவனை(ப் பழைய நிலையிலே நிறுத்தலை)க் கருதி, அழகுண்டாக, 165
பகுத்துக் காணுங்கால் (வேறுபடத்)தோன்றியும், தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய
நான்காகிய வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்து மூவரும்,
பதினெண்வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும் -
விண்மீன்கள் மலர்ந்ததைப் போன்ற தோற்றத்தையுடையவராய், மீன்களின்(இடத்தைச்)சேர்ந்து
காற்று எழுந்ததைப் போன்ற செலவினையுடையராய், காற்றிடத்தே 170
நெருப்பு எழுந்ததைப் போன்ற வலிமையினையுடையராய், நெருப்புப் பிறக்க
உருமேறு இடித்ததைப் போன்ற குரலினை உடையராய், இடும்பையாயுள்ள
தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,
வானத்தே சுழற்சியினையுடையராய், வந்து ஒருசேரக் காண -
குற்றமற்ற அறக்கற்பினையுடைய மடந்தையுடன், சில நாள் 175
திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் - அவ்வூரேயல்லாமல்,
ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,(பெற்றோர்)இருவர் குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த,
இருபத்துநான்கின் இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை
(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும், 180
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடையஇருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி,
தலைமேல் கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து, 185
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,
திருவேரகம் என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் - அதுவேயன்றி
பச்சிலைக்கொடியால் நறு நாற்றத்தையுடைய காயை நடுவே இட்டு, வேலன், 190
அழகினையுடைய தக்கோலக் காயைக் கலந்து, காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின கண்ணியினை உடைய;
நறிய சந்தனத்தைப் பூசின நிறம் விளங்கும் மார்பினையுடைய;
கொடிய தொழிலையுடைய வலிய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர்
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை