நாம் தமிழர் “தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடைய மொழியாகும் அன்பே அவனுடைய வழியாகும் (நாமக்கல் கவிஞர்)
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி” (ஐயனாரிதனார்)
“தமிழுக்கு அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு மண மென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்” (பாரதிதாசன்)
நாம் தமிழர், எமது மொழி தமிழ், தமிழ் என்ற சொல்லுக்கு “இனிமை”, “தூய்மை”, “அன்பு” என்பவை பொருளாகும். எமது மொழி அமிழ்தம் போன்று இனிமையுடையது. மொழிகள் யாவற்றுக்கும் மூலமும் முதலுமானது. இன்றும் தனது சீரிளமை குன்றாது விளங்குகிறது. பண்டைக்காலத்தில் நாம் உலகாண்டோம். எமது மொழியும் பண்பாடும் நாகரிகமும் சமயமும் உலகம் முழுவதும் பரவியிருந்தன. எங்கும் நாடு நகரங்கள் அமைத்து நல்வாழ்வு நடத்தினோம். பாலிங் குளித்தோம், பட்டாடை உடுத்தினோம். எமது பிள்ளைகள் தேரோடி விளையாடினர். இவற்றையெல்லாம் மக்கள் மறந்தனர். ஏன் நாமே மறந்தோம்! தன்னையுமறியாது தனது துணைவனையுமறியாது துயருறும் உயிர்போல வாழுகின்றோம். இன்று அடிமைப்பட்டோம். சிறுமையுற்றோம், அல்லற்படுகிறோம்.
நாம் தமிழர். எமது நாகரிகம் உலகம் முழுவதும் பரந்திருந்த நாகரிகமாகும். பசுபிக் கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் மேற்கே அமெரிக்கா வரையும் மத்திய இரேகைக்கு இருமருங்கிலும் தொடர்ச்சியாகப் பரந்துகிடந்த நாடுகளிற் பண்டைக்காலத்திலே நிலவிய நாகரிகம் இதுவாகும். இதனை மேனாட்டவர் பண்டை நடுநிலக் கடலக நாகரிகம் எனவும் இம்மக்களை நடுநிலக் கடலக மக்கள் எனவுங் குறிப்பிடுவர். இந்நாடுகளிற் சில உதாரணமாக அத்திலாந்திகம் இலேமூரியாவும் - கடற்கோள்களினால் அழிந்துவிட்டன. பல நாடுகளில் வடபுல மக்களின் படையெழுச்சியினால் இந் நாகரிகம் அழிக்கப்பட்டு விட்டது.
மக்களின் தொட்டில் - அதாவது மனிதன் முதன் முதலில் தோன்றிய இடம் இலேமூரியா எனவும் அக்காலத்தில் அவர்கள் பேசிய மொழி தமிழ் அல்லது திராவிடம் எனவும் இலேமூரியாவிலிருந்து மக்கள் சென்று பல நாடுகளிற் குடியேறினர். எனவும், குடியேறிய நிலத்திற்கு ஏற்றவாறு நிறம், மொழி, நடையுடை, நாகரிகம் வேற்றுமை யடைந்தனர் எனவும் கர்ணாமிர்த சாகரங் கூறுகிறது.
பண்டை எகிப்தியரும் திராவிடரும் ஓரின மக்கள் எனவும் மிகப் பழைய காலத்திலே இப்பழுப்புநிற மக்கள் இந்தியாவிலிருந்து ஸபெயின் வரையும் பரவியிருந்தனர் எனவும் பேராசிரியர் கச்சிலி கூறுகிறார். உலகவரலாற்றுச் சுருக்கத்தில் ர்.பு. வெல்சு கூறுவதாவது:-
“இக்கரிய பழுப்புநிற மக்கள் இந்தியாவிற்கு அப்பாலும் பசுபிக் சமுத்திரம் வரையும் பரவினர். இவர்களே ஆதியில் நாகரிகம் அடைந்தவராவர். புதுக்கற்கால நாகரிகம் இவர்களுடையதாகும். உலகில் தற்காலத்திலுள்ள எல்லா மக்களும் அடிப்படையில் இவ்வினத்தவரே”
“இந்தியாவில் நீண்டகாலமிருந்து நாகரிகம் வளர்த்த பின்பு, திராவிடர் மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்தனர். மெசொப்பொற்றாமியா முதலிய பல நாடுகளில் தங்கிப் பிரிட்டிஷ் தீவுகள் வரையும் தமது நாகரிகத்தைப் பரப்பினர்” என வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார் கூறுகிறார். இத்துறையிற் சமீப காலத்தில் ஆராய்ச்சி செய்த உரூசியர் வடதுருவப் பகுதிகளில் வாழும் எஸ்கிமோ மக்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என ஊகிக்கின்றனர். பண்டைக்காலத்தில் உலகம் முழுவதும் கடலாட்சியும், நிலவாட்சியும் செய்த மக்கள் திராவிட இனத்தவராவர்.
மக்களின் தொட்டிலைப்பற்றிய கதை பல நாடுகளில் உண்டு. மனித இனம் ஓரிடத்தில் தோன்றியதா அல்லது பலவிடங்களில் தோன்றியதா? ஓரிடத்திலாயின் அவ்விடம் யாது? இவ்வாதங்கள் பயனற்றவையாகும். ஓரின மக்களின் குலத்துக்கும் இனத்துக்கும் பண்பாட்டிற்கும் நாகரிகத்துக்கும் அம்மக்களின் நடத்தையே சான்றாகும்.
பழைய கற்காலந் தொட்டுத் தமிழர் நாகரிகத்துடனும் பண்பாட்டுடனும் சுதந்திர மக்களாக வாழ்ந்தனர் என்பதைக் காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும். இது வரலாற்று நூலன்று. எனினும் இந்நூலில் தமிழரின் சீரையுஞ் சிறப்பையும் நாம் குமரி நாட்டில் வாழ்ந்த காலத்திலிருந்து (கி.மு. 16,000) சுருக்கமாகக் கூற எத்தனிக்கிறேன். மேலும், இந்நூல் எழுதமுன், ஆங்கிலத்திலும், தமிழிலும் பல நூல்களை வாசித்தேன். வாசிக்கும்போது குறிப்புக்கள் எழுதி வைத்திருந்தேன். இக் குறிப்புக்களிலிருந்தே இந்நூலை எழுதுகிறேன்.
எமது முன்னோர் தமது வரலாற்றை எழுதிவைக்கவில்லை. இந்திய மக்களுக்கு வரலாற்றுணர்ச்சி இல்லையென்பர். ஒருவேளை எழுதியிருந்தாலும் அவை எமக்குக் கிடையாது அழிந்துவிட்டன. அல்லது அழிக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான தமிழ் நூல்கள் காலத்தினாலும் பற்பல கடற்கோள்களினாலும் மறைந்துவிட்டன. இந்நூல்களிற் சில இரண்டாம் அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பல நூல்கள் இன்று எமக்குக் கிடைக்கவில்லை யென்றால், பழைய நூல்களின் மறைவு வியப்பன்று.
பண்டைத் தமிழகமாகிய குமரிநாடு இந்துமகா சமுத்திரத்திற் குள்ளே ஆழ்ந்து கிடப்பதினாற் புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு இடமில்லை. எனினும் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற புதை பொருள் ஆராய்ச்சிகளையும் எமது இலக்கியங்களையும் நோக்கி எமது பழைய வரலாற்றை ஓரளவுக்கு அறியலாம். புராணங்கள் புளுகு மூட்டைகளாயினும் அவற்றிலிருந்தும் சில உண்மைகளைப் பெறலாம்.
மேலும் சம்பவங்கள் நடைபெற்ற காலங்கள் சிற்சில யுகங்களின் கணக்கில் எமது நூல்களிற் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பண்டுதொட்டு இன்றுவரையும் இந்த யுகங்களின் ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கணிக்கப்பட்டு வருகின்றன. இந்த யுகங்களை மறுப்பது, மேனாட்டு வரலாற்றில் கிறித்துவ வருடக் கணக்கை மறுப்பதற்குச் சமனாகும். ஆராய்ச்சியாளர் இந்த யுக வருடக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த யுகங்களின் தொடக்கங்களாவன:-
கலியுகம் - கி.மு. 3102 – பெப்றுவரி 17ஃ18
உதிட்டிர யுகம் - கி.மு. 3076
சாகர் யுகம் - கி.மு. 550
சாலிவாகன யுகம் - கி.மு. 76
விக்கிரமாதித்த யுகம் - கி.மு. 56
வள்ளுவர் ஆண்டு – கி.மு. 31
வடமொழிகளிலோ தென் மொழிகளிலொ சாசனங்களிலோ நூல்களிலோ இந்த யுகங்களின் ஆண்டுகள் கொடுக்கப்பட்டிருப்பின் சம்பவம் நடைபெற்ற காலத்தைப் பற்றிச் சந்தேகத்திற்கு இடமில்லை. கலாநிதிகளின் பகுத்தறிவுடன் இஃது இணக்கமில்லாதிருப்பின் அவர்களுடைய பகுத்தறிவு தவறானதாக இருக்கவேண்டும்.
இந்திய வரலாறெழுதிய ஆங்கிலேயர் எமது புராணங்களையும் இதிகாசங்களையும் முற்றாகப் புறக்கணித்தனர். இவை பௌராணிக மதமும், பிராமணஞ் செல்வாக்கடைந்த பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். புத்த சமண சமயத்தவர் பௌராணிக மதக் கொள்கைகளை எதிர்த்தபோதிலும் பிராமணரைப் போன்று தமது சமய புராணங்களையும் எழுதினர். புராணங்கள் அண்டப்புளுகுகளும், கட்டுக்கதைகளும், நிறைந்தவையென வில்லியம்லோகுஸ் என்பவர் குறிப்பிடுகிறார். “உண்மைக்கு மாறாக பொய் நிறைந்த கதைகளை இப்பிராமணர் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காகவும் பிழைப்பிற்காகவும் எழுதினர். இவையாவும் வெறிதே புனைந்துரைகள், புழுகு மூட்டைகள்.”
பிற்காலத்திற் சிற்றரசர்களும் செல்வர்களும் தமது குலத்துக்குங் குடும்பத்துக்கும் புகழ்நாடிக் கூலிகொடுத்துப் புராணங்கள் எழுதுவித்தனர். இப்புராணங்கள் மரபு முறைப்படி எழுதப்பட்டவையாகும்.
(4)எதிரிகளைத் தூற்றுவது சமய நூல்களாயின். பிறமதக்கண்டனம்.
இக்காலத்திற் செத்தவர் மேற்பாடப்படும் கல்வெட்டுக்களிற் போல, இப்புராணங்களிற் பெருமளவு புளுகும் ஓரளவு உண்மையும் இருக்கும். எனினும் அப்புராணங்களை முற்றாகப் புறக்கணிக்க முடியாது. இப்புளுகு பெட்டிகளுக்குள்ளிருந்தும் சில உண்மைகளைப் பிரித்தெடுக்கலாம்.
இந்திய வரலாறு இந்தியாவிற்கு வேலைக்கு வந்த சில ஆங்கிலேயரினாற் பதினெட்டம்பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது. ஏதோ பொழுது போக்கிற்காக இவர்கள் ஒரு செத்த மொழியிலுள்ள சில நூல்களை அரைகுறையாகக் கற்றவுடன் இந்திய வரலாற்றை எழுதத் துணிந்தனர். தொடர்ச்சியற்ற சில சம்பவங்களை எடுத்து வரலாற்றாக்கினர். கால வரையறைகள் ஆதாரமற்ற ஊகங்களாகும். இந்தியாவின் பழைய மக்கள், மொழிகள், பண்பாடு சமயம் முதலியனபற்றி இவர்களுக்கு அறிவில்லை. இந்தியாவிற்குட் புகுந்த பல குழுக்களுள் ஒரு நாகரிகமற்ற நாடோடிக் குழுவின் பாட்டுக்களிலிருந்து பண்டை இந்திய வரலாறெழுதினர். இக்குழு இந்தியாவிற்குட் புகமுன் இந்தியாவிற் பல மக்கள் வாழ்ந்ததையும் பல நாகரிகங்கள் தோன்றி மறைந்ததையும் புறக்கணித்தனர். இந்து சமயத் தத்துவங்களை இக்குழுவின் நாடோடிப் பாடல்களிற் காண எத்தனித்தனர். இந்தியாவின் மிகப்பழைய மொழியாகிய தமிழை இவர் கற்றிலர், பண்டை இந்திய நாகரிகங்களுக்கும் சமயங்களுக்கும், கலைகளுக்கும் இருப்பிடம் இந்தியாவின் தெற்கும் வடகிழக்கும் மத்திய பகுதிகளும் என்பதை இவர்கள் உணரவில்லை.
இன்று இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. அடிமை மனப்பான்மையும் ஓரளவு குறைந்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சிகளிலிருந்து பல உண்மைகளை அறிகிறோம். இந்திய வரலாறு புதிதாக எழுதப்படுகிறது. தமிழ் இனத்தின் வரலாற்றை இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாது. ஏனென்றால் முன்னொரு காலத்தில் இந்தியாவில் இமயந் தொடக்கம் ஒளிநாடு வரையும் வாழ்ந்தவரும், ஆண்டவரும் தமிழர் அல்லது திராவிடராவர். பிற்காலத்திலெ மங்கோலிய, சித்திய, காக்கேசியக் குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தபோதிலும், இன்றும் இந்திய மக்கள் அடிப்படையிற் பெரும்பாலும் நடுநிலக் கடலக இனத்தைச் சேர்ந்த திராவிடராவர்.
மேனாட்டு வரலாற்றாசிரியர்களின் முடிபுகளுக்கும் கருத்துக்களுக்கும் சில தவறான வைத்துக் கோடல்களும் எடுகோள்களுங் காரணங்களாகும். இவற்றிற் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1.இந்திய வரலாறெழுதிய ஆங்கிலேயர் பெரும்பாலுங் கிறிஸ்தவர்களாவர். பழைய உவில்லியவேதத்தை வரலாற்றுண்மையாக எடுத்துக்கொண்டனர். ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர். உலகிலுள்ள எல்லா மக்களும் இவர்களுடைய சந்ததிகள். ஆதாம் ஏவாள் தோன்றிய இடம் மத்திய ஆசியா அல்லது மேற்காசியா அல்லது கிழக்காபிரிக்காவாகும். அவர்களுடைய காலம் கி.மு. 8000 அளவிலாகும். இவ்வெடுகோள்கள் உண்மைகளாயின் பின்வரும் இரு முடிபுகளும் இயல்பாகவும் தர்க்க ரீதியாகவும் பெறப்படும்.
(அ)மனிதவினம் உலகிலே தோன்றிய காலம் பத்தாயிரம் வருடங்களுக்குட்பட்டதாகும்.
(ஆ)மேற்கு அல்லது மாத்திய ஆசியா அல்லது கிழக்காபிரிக்காவிலிருந்தே மக்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கவேண்டும். இந்தியாவிற்குள்ளும் புகுந்திருக்கவேண்டும். இக்கருத்தை – வளிப்படையாகவோ மறைமுகமாகவோ மேனாட்டவர் நூல்கள் பலவற்றிற் காணலாம். எனவே, மேனாட்டவர் எகிப்திய மெசொப்பற்றாமிய நாகரிகங்களை இந்திய நாகரிகத்துக்கு முற்பட்டவையாகவும் மூலமாகவும் எடுத்துக்கொண்டது வியப்பன்று.
இந்திய நாகரிகத்தை ஆராயமுன் அவர்கள் புதை பொருளாராய்ச்சிகளிலிருந்து பண்டை எகிப்திய சுமேரிய நாகரிகங்களைப்பற்றி நன்கறிந்திருந்தனர். எனவே இந்திய நாகரிகத்தைச் சுமேரிய நாகரிகத்துடன் தொடர்புறுத்தினர். இந்தியாவிலிருந்து எகிப்திய சுமேரிய நாகரிகங்கள் பரவியிருக்கலாம் என்பதையோ ஒத்த நாகரிகங்கள் பல விடங்களில் ஒரே காலத்திலே தோன்றலாம் என்பதையோ இவர்கள் சற்றேனுஞ் சிந்தித்துப் பார்க்கவில்லை.
இந்தியாவில் வழங்கிய ஆரிய என்ற சொல்லையும் மேனாடுகளில் வழங்கிய ஆரிய என்ற சொல்லையும் ஒரே இன அடிப்படைக் கருத்துடையவையாக எடுத்துக்கொண்டனர். இதனால், வடஇந்தியச் சேர்மனி கொக்கேசியாவிலிருந்து வந்தவர் என ஊகித்தினர். வந்த காலத்தையும் வரையறைசெய்தனர். இதற்கியையச் சம்பவங்களை வியாக்கியானஞ் செய்தனர். இக்காரணத்தினால் இந்திய மரபுக் கதைகளையும் புராணங்களையும் இலக்கியங்களையும் இவர்கள் புறக்கணிக்க வேண்டியதாயிற்று,
இவர்களுடைய எடுகோள்களும் முடிபுகளும் உண்மைக்கு ஒவ்வாதவையென்பதில் ஐயமில்லை. உலகம் தோன்றிய காலத்தையும் மக்கள் உலகிலே தோன்றிய காலத்தையும் பற்றிப் பல அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும் இருப்பினும், இவற்றைத் திடமாக அறுதிசெய்ய முடியாது. ஆனால், உவில்லிய வேதங் குறிப்பிடுங் காலத்துக்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குப் பல சான்றுகளுண்டு. மேலும், இந்து சமுத்திரத்திலிருந்து ஒரு கண்டத்திலிருந்தே மக்கள் சென்று பல நாடுகளிற் குடியேறினர் எனத் தற்கால ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
(அ)“பண்ட்” எனும் ஒரு நாட்டையும் அதிலுள்ள ஓவீர் எனுந் துறைமுகத்தையும் அதனருகே கிடைக்கப்பட்ட தங்கம், தேக்கு, மண்வகைகள் முதலியவற்றையும் பற்றிப் பண்டை எகிப்திய கதைகள் குறிப்பிடுகின்றன. இந்நாடே பண்டை எகிப்திய மக்களின் தாயகம் எனவுங் கூறுகின்றன. இந்நாடு தமிழராகிய எமது பண்டைத் தாயகமாகிய குமரி நாடாகும்.
(ஆ)மேற்கு ஆபிரிக்காவிற் சீரியா இலியோன் எனும் நாடொன்றுண்டு. இன்று, இந்நாட்டவர் பிரெஞ்சு மொழி பேசுகின்றனர். எனினும், இவர்கள் தம்மைத் தமிழ் நாட்டிலிருந்து வந்து குடியேறிய தமிழராகக் கருதுகின்றனர். தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் ஆர்வங் காட்டுகின்றனர்.
(இ)மேற்கு ஆசியா, சின்ன ஆசியா நாட்டுப் பழைய மக்கள் தாம் கிழக்கேயுள்ள ‘எல்லாம்’ எனும் நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றனர். இது குமரி கண்டத்தில் இருந்து ‘ஏழ்’ நாடாகும்.
(ஈ)பண்டைக் காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த “குறுயீட்” மக்களின் பழக்க வழக்கங்களையுஞ் சமயத்தையும் ஆராய்ந்த அறிஞர் இவர்கள் நடுநிலக் கடலக மக்கள் எனவும் இந்து சமுத்திரத்திலிருந்து ஒரு கண்டத்திலிருந்து வந்து குடியேறியவர் எனவுங் கூறுகின்றனர்.
(உ)ஸ்பெயின் தேசத்திலுள்ள சுற்றிலோனியா மக்களும் பாஸ்க் மக்களும் நடுநிலக்கடலகத் திராவிடரெனக் கெறஸ் பாதிரியார் கூறுகிறார்.
(ஊ)“பிரளயத்திற்குப் பிறகு முதன் முதலாக இந்தியாவிலே தான் மனிதவினம் தோன்றியது.”
(எ)“தென்னாசியாவிலே மிகவும் பழமையா பகுதி தென்னிந்தியாவாகும். (டோப்பினார்ட்)
(ஏ)“மனிதனின் பிறப்புத் தோற்றம் எல்லாமே தென்னிந்தியாவில்தான்.” (சேர். யோன் எட்பான்ஸ்)
(ஐ)”மனிதனின் மிகப் புராதனமான நாகரிகம் தென்னிந்தியாவிலேதான் இருந்தது. இவற்றைத் தென்னிந்திய மக்களின் வரலாறு கூறுகிறது. இம்மலைப் பகுதிகள் இமயமலையை விடத் தொன்மையானவை. இமயமலை இந்தியாவின் கடற் பகுதிகளிலிருந்து வெளிவந்தது. (ஸ்கொற் எலியட்)
(ஒ)இரையிலர் எனும் ஆராய்ச்சியாளர் இந்தியாவிற் கற்காலங்களையும் உலோக காலங்களையும் வரையறை செய்திருக்கிறார்.
பழைய கற்காலம் (நுழடiவாiஉ யுபந) – கி.மு. 400,000 – கி.மு. 35,000.
கற்காலம் (Pயடநழடiவாiஉ) – கி.மு. 35,000 – கி.மு. 10,000.
புதுக் கற்காலம் (நேழடiவாiஉ) – கி.மு. 10,000 – கி.மு. 5000.
சிந்துவெளி நாகரிகத் தொடக்கக் காலம் - கி.மு. 10,000.
சிந்துவெளி நாகரிகம் இறுதிக்காலம் - கி.மு. 3000 – கி.மு. 2000.
இரும்புக் காலத் தொடக்கம் - கி.மு. 4000.
பழைய கற்காலத்திலேயே திராவிட மக்கள் இந்தியாவில் வாழ்ந்தனர். இம்மக்கள் வாழ்ந்த கற்குகைகளும் இவர்கள் பயன்படுத்திய கற்கோடரிகளும் தென்னிந்தியாவிலுள்ள மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சை, வடஆற்காடு, செங்கற்பட்டு, பெல்லாரி, கடப்பை, குர்நூர், நெல்லூர், கோதாவரிவெளி, மைசூர், ஐந்தராபாத் முதலிய இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. புதுக் கற்கால மக்களின் வாழ்க்கைச் சின்னங்கள் தென்னிந்தியாவிற் பலவிடங்களிற் கிடைத்துள்ளன. புதுக் கற்கால மக்கள் நிலையான வாழ்க்கை நடத்தினர். நிலத்தை உழுது பயிர் செய்தனர். நூல் நூற்’று நெசவு செய்தனர். மண் சட்டி பானைகள் வனைந்தனர். இறையுணர்ச்சியுடையவராக இருந்தனர். தலைச்சங்க காலமும், இடைச்சங்க காலத்தின் முதற் பகுதியும் புதுக்கற்காலமாகும். இக்காலத் தனிப்பட்ட நானில் வாழ்க்கையைத் தொல்காப்பியங் கூறுகிறது.
இந்திய கால வாய்ப்பாட்டை எல்லாப் பஞ்சாங்கங்களிலுங் காணலாம்.
யுகம் ஆண்டுகள் கிருதயுகம் 1,728,000 திரேதாயுகம் 1,296,000 துவாபரயுகம் 864,000 கலியுகம் 432,000
ஒவ்வொரு கற்பத்தின் முடிவிலும் பூமி அழியும், இப்போது நடப்பது சுவேதவராக கற்பமாகும். இதில் ஏழாவதாகிய வைவஸ்வத மனுவந்தரம் நடக்கிறது. இதில் 27 சதுர்யுகங்கள் சென்றுவிட்டன. 28வது சதுர்யுகத்தில் கிருதா திரேதா துவாபரயுகங்கள் கழிந்து இப்போது கலியுகத்தில் 5078வது ஆண்டு நடக்கிறது. எனவே, இக்கற்பகத்திலே பூமி தோன்றி ஏறக்குறைய 1961 மில்லியன் வருடங்கள் சென்றுவிட்டன. மறுபடியும் பிரளயத்திற்கும் பூமி அழிவதற்கும் 2359 மில்லியன் வருடங்கள் இருக்கின்றன. இக்கால வாய்ப்பாட்டை மேனாட்டு விஞ்ஞானிகளின் மதிப்பீடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.
ஆரம்பத்திலே இவ்வுலகம் அனற்பிளம்பாகக் கிடந்தது என்கின்றனர். வெப்பந்தணிந்து உயிரினங்கள் தோன்றிப் பல நூறு மில்லியன் வருடங்கள் சென்றிருக்கவேண்டும். மனிதவினந் தோன்ற மேலும் பல மில்லியன் வருடங்கள் சென்றன. கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைய மனித எழும்புகள் 500,000 வருடங்களுக்குச் சற்று முற்பட்டவையாகும். இவை இந்தியாவிலும், சீனாவிலும், கிழக்கிந்திய தீவுகளிலும் கிழக்காபிரிக்காவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இம்மனிதருக்கு “இராமப்பிதிக்கஸ்” எனப் பெயரிடப்பட்டிருக்கின்றனர். இவர்களிலிருந்தே நாம் தோன்றினோம். சமீப காலத்தில் பர்மாவில் 40 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மனிதரின் எழும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இராமாவதாரம் திரேதாயுகத்தின் இறுதியிலெனவும், இரணியன் காலம் கிருதயுகத்தின் இறுதியிலெனவுங் கூறப்படுகிறது. கிருத யுகமே வேதகாலம் எனவும் பலர் நம்புகின்றனர். மேலே மூறப்பட்ட கால வாய்;பாட்டின்படி இவை நம்பமுடியாத கற்பனைகளாகும். ஆனால், மேலே கூறப்பட்டது தேவ வருட வாய்ப்பாடாகும். மனித வரலாற்றுக் கால வாய்ப்பாடு வேறொன்று இருந்தது. இதை மக்கள் மறந்துவிட்டனர்@ வருடங்களைச் சூரிய வருடங்களாக (அதாவது நாட்களாக) எடுத்துக்கொள்ளவேண்டும். இவ்வாய்ப்பாட்டின்படி:-
யுகம் வருடங்கள் கிருதயுகம் 12000 திரேதாயுகம் 2400 துவாபரயுகம் 3600 கலியுகம் 4800
சதுர்யுகம் 12,000
இப்போது நடப்பது கலியுகம் 5078வது வருடமாகவும். கலியுகந் தொடங்கியவுடன் பகவான் கிருட்டினர் உயிர் நீத்தார். மகாபாரதப் போர் 36 வருடங்களுக்கு நடந்தது – கி.மு. 3138 இல் என்க. மேலும் கபாடபுரத்தை அயோத்திக் கிருட்டினர் கி.மு. 3105 இல் அழித்தனர் என்ற கதையுமுண்டு. இடைச்சங்க காலம் கலியுகந் தொடக்கத்துக்கு முற்பட்டதாகும். இராமாவதாரம் திரேதாயுகத்தின் இறுதியிலாகும் - கி.மு. 6702 இற்கு முன் என்க. இதற்குமுன்பே இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்திருக்கலாம். இரணியன் காலம் கிருதயுகத்தின் இறுதியிலாகும். – கி.மு. 9102 இற்கு முன் என்க. கி.மு. 9000 தொடக்கம் கி.மு. 3000 வரையிலுமான சம்பவங்களைக் கி;.மு. 2000 அளவில் இந்தியாவிற்குட் புகுந்த ஒரு துருக்கிய - ஈரானியக் குழுவுடன் தொடர்புறுத்த எத்தனித்த மேனாட்டு வரலாற்றாசிரியர்களின் பேதமையை என்னென்றுரைப்போம். பண்டை இந்திய மக்களிடையில் இராமாயண மகாபாரதக் கதைகள் வழக்கமாக இருந்தன. நூல்களும் இருந்திருக்கலாம். இந்நூல்களிலிருந்து இக்கதைகள் பிற்காலத்திலே சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காலங்களை ஆங்கிலேய வரலாற்றாசிரியர் வரையறை செய்தனரன்றி மகாபாரத இராமாயண காலங்களையல்ல.
பாண்டவரில் ஒருவனாகிய அர்ச்சுன் பாரதநாடு முழுவதும் தீர்த்த யாத்திரை செய்தான் எனவும், நகுலமலையைக் கொண்ட மணிபுரத்திற்கு வந்தான் எனவும் அங்கு சித்திராங்கனை எனும் நாக கன்னியைக் கண்டு காதல் கொண்டு அவளை மணந்தான் எனவும் பின்பு இவர்களுடைய புத்திரனாகிய சித்திரவாகனன் என்பவன் அசுவமேத யாகத்திற்காகத் திக்கு விஜயஞ்செய்த தனது தந்தையை வென்றான் எனவும் சித்தரவாகனின் கொடிகள் சிங்கக் கொடியும் பனைக்கொடியும் எனவும் மகாபாரதங் கூறுகிறது. சித்தராங்கனை நாகர்குலத் தமிழ்ப் பெண். அருச்சுனன் அவளுடன் எம்மொழியிற் பேசினான்? அவனுக்கு எவ்வித மொழிப் பிரச்சினையாவது இருந்ததாகவோ அல்லது அவன் தன்னுடன் மொழிபெயர்ப்பாளரைக் கொண்டு சென்றதாகவோ எவ்விடத்திலாவது கூறப்படவில்லை. தென்னாட்டரசரும் பாரதப் போரிற் கலந்துகொண்டதாக மகாபாரதங் கூறுகிறது. கிருட்டினரைத் தாசர் அரசர்களில் ஒருவனாக இறிக் வேதங் குறிப்பிடுகிறது. அக்காலத்தில் வடக்கில் ஓரினமும் தெற்கில் வேறோரினமும் இருக்கவில்லை. எனவே மகாபாரத காலத்திலே இமயந் தொடக்கம் குமரிவரையும் (ஈழமும் உட்பட) வாழ்ந்த மக்கள் ஓரினத்தவர் என்பதும் ஒரே மொழியையோ கிளை மொழிகளையோ பேசினா என்பதும் தென்படை.
இராமாயண காலம் கி.மு. 6702 இற்கு முற்பட்டதெனக் கூறினோம். இராமாயணப் போர் கங்கைச் சமவெளியிலாண்ட இராமன் எனும் திராவிட அரசனுக்கும் இலங்கையிலாண்ட இயக்கர் குலத்தவனான இராவணன் எனும் திராவிட மன்னனுக்கும் இடையில் நடைபெற்ற போராகும். இராமன் நிறத்திற் கறுத்தவன், இராவணன் செந்நிறத்தவன். அனுமான் சீதையுடன் தேவமொழியிற் பேசாது. மதுரமொழியாகிய மனுஷ மொழியிற் பேசினானென வால்மீகி கூறுகிறார். இம்மொழி பண்டைத் திராவிடமொழி அல்லது பண்டைத் தமிழாகும். அனுமான், சுக்கிரவன் என்போர் மனிதர்களேயன்றி குரங்குகளல்லர். இவர்கள் முண்டர் சாதியினர். இவர்களுடைய கொடி குரங்குகளாக வருணித்தனர். வால்மீகி பழைய கதையை எடுத்து அதற்குள் தமது பௌராணிகக் கொள்கைகளை புகுத்தினர். இதனாலுண்டான முரண்பாடுகளை மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பல விடங்களிற் காணலாம். இராமனும், இராவணனும் இந்துக்களானபடியினால் கம்பர் இருவரையும் மத அடிப்படையில் “ஆரியர்” என்கின்றனர். வால்மீகி, விசுவாமித்திரர், அகத்தியர், மனு என்பவை பண்டைத் திராவிடப் பெயர்களாகும். இராமாயண காலத்தில் இந்தியா முழுவதிலும் வாழ்ந்த மக்கள் திராவிடராவர். பேசப்பட்ட மொழி பண்டைத் திராவிடம் அல்லது பண்டைத் தமிழாகும்.
“திராவிடரே இப்போது இலங்கை முதல் இமயம் வரை பரவியிருக்கும் மக்கட் கூட்டத்தாரிற் பெரும் பகுதியினராகக் காணப்படுகின்றனர்.” (பேராசிரியர் ரிசிலி)
“இந்திய மக்களின் பண்டைத் தொகுதியில் மிகப் பெரும்பாலானவர் திராவிடராவர். இவர்கள் பிற்காலத்தில் வந்த ஆரியருடனும் சிதியருடனும் ஓரளவு கலப்புற்றனர். (பேராசிரியர் றாட்சன்)இந்திய வரலாறு இந்தியாவிற்கு வேலைக்கு வந்த சில ஆங்கிலேயரினாற் பதினெட்டம்பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது. ஏதோ பொழுது போக்கிற்காக இவர்கள் ஒரு செத்த மொழியிலுள்ள சில நூல்களை அரைகுறையாகக் கற்றவுடன் இந்திய வரலாற்றை எழுதத் துணிந்தனர். தொடர்ச்சியற்ற சில சம்பவங்களை எடுத்து வரலாற்றாக்கினர். கால வரையறைகள் ஆதாரமற்ற ஊகங்களாகும். இந்தியாவின் பழைய மக்கள், மொழிகள், பண்பாடு சமயம் முதலியனபற்றி இவர்களுக்கு அறிவில்லை. இந்தியாவிற்குட் புகுந்த பல குழுக்களுள் ஒரு நாகரிகமற்ற நாடோடிக் குழுவின் பாட்டுக்களிலிருந்து பண்டை இந்திய வரலாறெழுதினர். இக்குழு இந்தியாவிற்குட் புகமுன் இந்தியாவிற் பல மக்கள் வாழ்ந்ததையும் பல நாகரிகங்கள் தோன்றி மறைந்ததையும் புறக்கணித்தனர். இந்து சமயத் தத்துவங்களை இக்குழுவின் நாடோடிப் பாடல்களிற் காண எத்தனித்தனர். இந்தியாவின் மிகப்பழைய மொழியாகிய தமிழை இவர் கற்றிலர், பண்டை இந்திய நாகரிகங்களுக்கும் சமயங்களுக்கும், கலைகளுக்கும் இருப்பிடம் இந்தியாவின் தெற்கும் வடகிழக்கும் மத்திய பகுதிகளும் என்பதை இவர்கள் உணரவில்லை.
இன்று இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. அடிமை மனப்பான்மையும் ஓரளவு குறைந்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சிகளிலிருந்து பல உண்மைகளை அறிகிறோம். இந்திய வரலாறு புதிதாக எழுதப்படுகிறது. தமிழ் இனத்தின் வரலாற்றை இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாது. ஏனென்றால் முன்னொரு காலத்தில் இந்தியாவில் இமயந் தொடக்கம் ஒளிநாடு வரையும் வாழ்ந்தவரும், ஆண்டவரும் தமிழர் அல்லது திராவிடராவர். பிற்காலத்திலெ மங்கோலிய, சித்திய, காக்கேசியக் குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தபோதிலும், இன்றும் இந்திய மக்கள் அடிப்படையிற் பெரும்பாலும் நடுநிலக் கடலக இனத்தைச் சேர்ந்த திராவிடராவர்.
மேனாட்டு வரலாற்றாசிரியர்களின் முடிபுகளுக்கும் கருத்துக்களுக்கும் சில தவறான வைத்துக் கோடல்களும் எடுகோள்களுங் காரணங்களாகும். இவற்றிற் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1.இந்திய வரலாறெழுதிய ஆங்கிலேயர் பெரும்பாலுங் கிறிஸ்தவர்களாவர். பழைய உவில்லியவேதத்தை வரலாற்றுண்மையாக எடுத்துக்கொண்டனர். ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர். உலகிலுள்ள எல்லா மக்களும் இவர்களுடைய சந்ததிகள். ஆதாம் ஏவாள் தோன்றிய இடம் மத்திய ஆசியா அல்லது மேற்காசியா அல்லது கிழக்காபிரிக்காவாகும். அவர்களுடைய காலம் கி.மு. 8000 அளவிலாகும். இவ்வெடுகோள்கள் உண்மைகளாயின் பின்வரும் இரு முடிபுகளும் இயல்பாகவும் தர்க்க ரீதியாகவும் பெறப்படும்.
(அ)மனிதவினம் உலகிலே தோன்றிய காலம் பத்தாயிரம் வருடங்களுக்குட்பட்டதாகும்.
(ஆ)மேற்கு அல்லது மாத்திய ஆசியா அல்லது கிழக்காபிரிக்காவிலிருந்தே மக்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கவேண்டும். இந்தியாவிற்குள்ளும் புகுந்திருக்கவேண்டும். இக்கருத்தை – வளிப்படையாகவோ மறைமுகமாகவோ மேனாட்டவர் நூல்கள் பலவற்றிற் காணலாம். எனவே, மேனாட்டவர் எகிப்திய மெசொப்பற்றாமிய நாகரிகங்களை இந்திய நாகரிகத்துக்கு முற்பட்டவையாகவும் மூலமாகவும் எடுத்துக்கொண்டது வியப்பன்று.
இந்திய நாகரிகத்தை ஆராயமுன் அவர்கள் புதை பொருளாராய்ச்சிகளிலிருந்து பண்டை எகிப்திய சுமேரிய நாகரிகங்களைப்பற்றி நன்கறிந்திருந்தனர். எனவே இந்திய நாகரிகத்தைச் சுமேரிய நாகரிகத்துடன் தொடர்புறுத்தினர். இந்தியாவிலிருந்து எகிப்திய சுமேரிய நாகரிகங்கள் பரவியிருக்கலாம் என்பதையோ ஒத்த நாகரிகங்கள் பல விடங்களில் ஒரே காலத்திலே தோன்றலாம் என்பதையோ இவர்கள் சற்றேனுஞ் சிந்தித்துப் பார்க்கவில்லை.
இந்தியாவில் வழங்கிய ஆரிய என்ற சொல்லையும் மேனாடுகளில் வழங்கிய ஆரிய என்ற சொல்லையும் ஒரே இன அடிப்படைக் கருத்துடையவையாக எடுத்துக்கொண்டனர். இதனால், வடஇந்தியச் சேர்மனி கொக்கேசியாவிலிருந்து வந்தவர் என ஊகித்தினர். வந்த காலத்தையும் வரையறைசெய்தனர். இதற்கியையச் சம்பவங்களை வியாக்கியானஞ் செய்தனர். இக்காரணத்தினால் இந்திய மரபுக் கதைகளையும் புராணங்களையும் இலக்கியங்களையும் இவர்கள் புறக்கணிக்க வேண்டியதாயிற்று,
இவர்களுடைய எடுகோள்களும் முடிபுகளும் உண்மைக்கு ஒவ்வாதவையென்பதில் ஐயமில்லை. உலகம் தோன்றிய காலத்தையும் மக்கள் உலகிலே தோன்றிய காலத்தையும் பற்றிப் பல அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும் இருப்பினும், இவற்றைத் திடமாக அறுதிசெய்ய முடியாது. ஆனால், உவில்லிய வேதங் குறிப்பிடுங் காலத்துக்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குப் பல சான்றுகளுண்டு. மேலும், இந்து சமுத்திரத்திலிருந்து ஒரு கண்டத்திலிருந்தே மக்கள் சென்று பல நாடுகளிற் குடியேறினர் எனத் தற்கால ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
(அ)“பண்ட்” எனும் ஒரு நாட்டையும் அதிலுள்ள ஓவீர் எனுந் துறைமுகத்தையும் அதனருகே கிடைக்கப்பட்ட தங்கம், தேக்கு, மண்வகைகள் முதலியவற்றையும் பற்றிப் பண்டை எகிப்திய கதைகள் குறிப்பிடுகின்றன. இந்நாடே பண்டை எகிப்திய மக்களின் தாயகம் எனவுங் கூறுகின்றன. இந்நாடு தமிழராகிய எமது பண்டைத் தாயகமாகிய குமரி நாடாகும்.
(ஆ)மேற்கு ஆபிரிக்காவிற் சீரியா இலியோன் எனும் நாடொன்றுண்டு. இன்று, இந்நாட்டவர் பிரெஞ்சு மொழி பேசுகின்றனர். எனினும், இவர்கள் தம்மைத் தமிழ் நாட்டிலிருந்து வந்து குடியேறிய தமிழராகக் கருதுகின்றனர். தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் ஆர்வங் காட்டுகின்றனர்.
(இ)மேற்கு ஆசியா, சின்ன ஆசியா நாட்டுப் பழைய மக்கள் தாம் கிழக்கேயுள்ள ‘எல்லாம்’ எனும் நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றனர். இது குமரி கண்டத்தில் இருந்து ‘ஏழ்’ நாடாகும்.
(ஈ)பண்டைக் காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த “குறுயீட்” மக்களின் பழக்க வழக்கங்களையுஞ் சமயத்தையும் ஆராய்ந்த அறிஞர் இவர்கள் நடுநிலக் கடலக மக்கள் எனவும் இந்து சமுத்திரத்திலிருந்து ஒரு கண்டத்திலிருந்து வந்து குடியேறியவர் எனவுங் கூறுகின்றனர்.
(உ)ஸ்பெயின் தேசத்திலுள்ள சுற்றிலோனியா மக்களும் பாஸ்க் மக்களும் நடுநிலக்கடலகத் திராவிடரெனக் கெறஸ் பாதிரியார் கூறுகிறார்.
(ஊ)“பிரளயத்திற்குப் பிறகு முதன் முதலாக இந்தியாவிலே தான் மனிதவினம் தோன்றியது.”
(எ)“தென்னாசியாவிலே மிகவும் பழமையா பகுதி தென்னிந்தியாவாகும். (டோப்பினார்ட்)
(ஏ)“மனிதனின் பிறப்புத் தோற்றம் எல்லாமே தென்னிந்தியாவில்தான்.” (சேர். யோன் எட்பான்ஸ்)
(ஐ)”மனிதனின் மிகப் புராதனமான நாகரிகம் தென்னிந்தியாவிலேதான் இருந்தது. இவற்றைத் தென்னிந்திய மக்களின் வரலாறு கூறுகிறது. இம்மலைப் பகுதிகள் இமயமலையை விடத் தொன்மையானவை. இமயமலை இந்தியாவின் கடற் பகுதிகளிலிருந்து வெளிவந்தது. (ஸ்கொற் எலியட்)
(ஒ)இரையிலர் எனும் ஆராய்ச்சியாளர் இந்தியாவிற் கற்காலங்களையும் உலோக காலங்களையும் வரையறை செய்திருக்கிறார்.
பழைய கற்காலம் (நுழடiவாiஉ யுபந) – கி.மு. 400,000 – கி.மு. 35,000.
கற்காலம் (Pயடநழடiவாiஉ) – கி.மு. 35,000 – கி.மு. 10,000.
புதுக் கற்காலம் (நேழடiவாiஉ) – கி.மு. 10,000 – கி.மு. 5000.
சிந்துவெளி நாகரிகத் தொடக்கக் காலம் - கி.மு. 10,000.
சிந்துவெளி நாகரிகம் இறுதிக்காலம் - கி.மு. 3000 – கி.மு. 2000.
இரும்புக் காலத் தொடக்கம் - கி.மு. 4000.
பழைய கற்காலத்திலேயே திராவிட மக்கள் இந்தியாவில் வாழ்ந்தனர். இம்மக்கள் வாழ்ந்த கற்குகைகளும் இவர்கள் பயன்படுத்திய கற்கோடரிகளும் தென்னிந்தியாவிலுள்ள மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சை, வடஆற்காடு, செங்கற்பட்டு, பெல்லாரி, கடப்பை, குர்நூர், நெல்லூர், கோதாவரிவெளி, மைசூர், ஐந்தராபாத் முதலிய இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. புதுக் கற்கால மக்களின் வாழ்க்கைச் சின்னங்கள் தென்னிந்தியாவிற் பலவிடங்களிற் கிடைத்துள்ளன. புதுக் கற்கால மக்கள் நிலையான வாழ்க்கை நடத்தினர். நிலத்தை உழுது பயிர் செய்தனர். நூல் நூற்’று நெசவு செய்தனர். மண் சட்டி பானைகள் வனைந்தனர். இறையுணர்ச்சியுடையவராக இருந்தனர். தலைச்சங்க காலமும், இடைச்சங்க காலத்தின் முதற் பகுதியும் புதுக்கற்காலமாகும். இக்காலத் தனிப்பட்ட நானில் வாழ்க்கையைத் தொல்காப்பியங் கூறுகிறது.
இந்திய கால வாய்ப்பாட்டை எல்லாப் பஞ்சாங்கங்களிலுங் காணலாம்.
யுகம் ஆண்டுகள் கிருதயுகம் 1,728,000 திரேதாயுகம் 1,296,000 துவாபரயுகம் 864,000 கலியுகம் 432,000
ஒவ்வொரு கற்பத்தின் முடிவிலும் பூமி அழியும், இப்போது நடப்பது சுவேதவராக கற்பமாகும். இதில் ஏழாவதாகிய வைவஸ்வத மனுவந்தரம் நடக்கிறது. இதில் 27 சதுர்யுகங்கள் சென்றுவிட்டன. 28வது சதுர்யுகத்தில் கிருதா திரேதா துவாபரயுகங்கள் கழிந்து இப்போது கலியுகத்தில் 5078வது ஆண்டு நடக்கிறது. எனவே, இக்கற்பகத்திலே பூமி தோன்றி ஏறக்குறைய 1961 மில்லியன் வருடங்கள் சென்றுவிட்டன. மறுபடியும் பிரளயத்திற்கும் பூமி அழிவதற்கும் 2359 மில்லியன் வருடங்கள் இருக்கின்றன. இக்கால வாய்ப்பாட்டை மேனாட்டு விஞ்ஞானிகளின் மதிப்பீடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.
ஆரம்பத்திலே இவ்வுலகம் அனற்பிளம்பாகக் கிடந்தது என்கின்றனர். வெப்பந்தணிந்து உயிரினங்கள் தோன்றிப் பல நூறு மில்லியன் வருடங்கள் சென்றிருக்கவேண்டும். மனிதவினந் தோன்ற மேலும் பல மில்லியன் வருடங்கள் சென்றன. கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைய மனித எழும்புகள் 500,000 வருடங்களுக்குச் சற்று முற்பட்டவையாகும். இவை இந்தியாவிலும், சீனாவிலும், கிழக்கிந்திய தீவுகளிலும் கிழக்காபிரிக்காவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இம்மனிதருக்கு “இராமப்பிதிக்கஸ்” எனப் பெயரிடப்பட்டிருக்கின்றனர். இவர்களிலிருந்தே நாம் தோன்றினோம். சமீப காலத்தில் பர்மாவில் 40 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மனிதரின் எழும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இராமாவதாரம் திரேதாயுகத்தின் இறுதியிலெனவும், இரணியன் காலம் கிருதயுகத்தின் இறுதியிலெனவுங் கூறப்படுகிறது. கிருத யுகமே வேதகாலம் எனவும் பலர் நம்புகின்றனர். மேலே மூறப்பட்ட கால வாய்;பாட்டின்படி இவை நம்பமுடியாத கற்பனைகளாகும். ஆனால், மேலே கூறப்பட்டது தேவ வருட வாய்ப்பாடாகும். மனித வரலாற்றுக் கால வாய்ப்பாடு வேறொன்று இருந்தது. இதை மக்கள் மறந்துவிட்டனர்@ வருடங்களைச் சூரிய வருடங்களாக (அதாவது நாட்களாக) எடுத்துக்கொள்ளவேண்டும். இவ்வாய்ப்பாட்டின்படி:-
யுகம் வருடங்கள் கிருதயுகம் 12000 திரேதாயுகம் 2400 துவாபரயுகம் 3600 கலியுகம் 4800
சதுர்யுகம் 12,000
இப்போது நடப்பது கலியுகம் 5078வது வருடமாகவும். கலியுகந் தொடங்கியவுடன் பகவான் கிருட்டினர் உயிர் நீத்தார். மகாபாரதப் போர் 36 வருடங்களுக்கு நடந்தது – கி.மு. 3138 இல் என்க. மேலும் கபாடபுரத்தை அயோத்திக் கிருட்டினர் கி.மு. 3105 இல் அழித்தனர் என்ற கதையுமுண்டு. இடைச்சங்க காலம் கலியுகந் தொடக்கத்துக்கு முற்பட்டதாகும். இராமாவதாரம் திரேதாயுகத்தின் இறுதியிலாகும் - கி.மு. 6702 இற்கு முன் என்க. இதற்குமுன்பே இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்திருக்கலாம். இரணியன் காலம் கிருதயுகத்தின் இறுதியிலாகும். – கி.மு. 9102 இற்கு முன் என்க. கி.மு. 9000 தொடக்கம் கி.மு. 3000 வரையிலுமான சம்பவங்களைக் கி;.மு. 2000 அளவில் இந்தியாவிற்குட் புகுந்த ஒரு துருக்கிய - ஈரானியக் குழுவுடன் தொடர்புறுத்த எத்தனித்த மேனாட்டு வரலாற்றாசிரியர்களின் பேதமையை என்னென்றுரைப்போம். பண்டை இந்திய மக்களிடையில் இராமாயண மகாபாரதக் கதைகள் வழக்கமாக இருந்தன. நூல்களும் இருந்திருக்கலாம். இந்நூல்களிலிருந்து இக்கதைகள் பிற்காலத்திலே சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காலங்களை ஆங்கிலேய வரலாற்றாசிரியர் வரையறை செய்தனரன்றி மகாபாரத இராமாயண காலங்களையல்ல.
பாண்டவரில் ஒருவனாகிய அர்ச்சுன் பாரதநாடு முழுவதும் தீர்த்த யாத்திரை செய்தான் எனவும், நகுலமலையைக் கொண்ட மணிபுரத்திற்கு வந்தான் எனவும் அங்கு சித்திராங்கனை எனும் நாக கன்னியைக் கண்டு காதல் கொண்டு அவளை மணந்தான் எனவும் பின்பு இவர்களுடைய புத்திரனாகிய சித்திரவாகனன் என்பவன் அசுவமேத யாகத்திற்காகத் திக்கு விஜயஞ்செய்த தனது தந்தையை வென்றான் எனவும் சித்தரவாகனின் கொடிகள் சிங்கக் கொடியும் பனைக்கொடியும் எனவும் மகாபாரதங் கூறுகிறது. சித்தராங்கனை நாகர்குலத் தமிழ்ப் பெண். அருச்சுனன் அவளுடன் எம்மொழியிற் பேசினான்? அவனுக்கு எவ்வித மொழிப் பிரச்சினையாவது இருந்ததாகவோ அல்லது அவன் தன்னுடன் மொழிபெயர்ப்பாளரைக் கொண்டு சென்றதாகவோ எவ்விடத்திலாவது கூறப்படவில்லை. தென்னாட்டரசரும் பாரதப் போரிற் கலந்துகொண்டதாக மகாபாரதங் கூறுகிறது. கிருட்டினரைத் தாசர் அரசர்களில் ஒருவனாக இறிக் வேதங் குறிப்பிடுகிறது. அக்காலத்தில் வடக்கில் ஓரினமும் தெற்கில் வேறோரினமும் இருக்கவில்லை. எனவே மகாபாரத காலத்திலே இமயந் தொடக்கம் குமரிவரையும் (ஈழமும் உட்பட) வாழ்ந்த மக்கள் ஓரினத்தவர் என்பதும் ஒரே மொழியையோ கிளை மொழிகளையோ பேசினா என்பதும் தென்படை.
இராமாயண காலம் கி.மு. 6702 இற்கு முற்பட்டதெனக் கூறினோம். இராமாயணப் போர் கங்கைச் சமவெளியிலாண்ட இராமன் எனும் திராவிட அரசனுக்கும் இலங்கையிலாண்ட இயக்கர் குலத்தவனான இராவணன் எனும் திராவிட மன்னனுக்கும் இடையில் நடைபெற்ற போராகும். இராமன் நிறத்திற் கறுத்தவன், இராவணன் செந்நிறத்தவன். அனுமான் சீதையுடன் தேவமொழியிற் பேசாது. மதுரமொழியாகிய மனுஷ மொழியிற் பேசினானென வால்மீகி கூறுகிறார். இம்மொழி பண்டைத் திராவிடமொழி அல்லது பண்டைத் தமிழாகும். அனுமான், சுக்கிரவன் என்போர் மனிதர்களேயன்றி குரங்குகளல்லர். இவர்கள் முண்டர் சாதியினர். இவர்களுடைய கொடி குரங்குகளாக வருணித்தனர். வால்மீகி பழைய கதையை எடுத்து அதற்குள் தமது பௌராணிகக் கொள்கைகளை புகுத்தினர். இதனாலுண்டான முரண்பாடுகளை மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பல விடங்களிற் காணலாம். இராமனும், இராவணனும் இந்துக்களானபடியினால் கம்பர் இருவரையும் மத அடிப்படையில் “ஆரியர்” என்கின்றனர். வால்மீகி, விசுவாமித்திரர், அகத்தியர், மனு என்பவை பண்டைத் திராவிடப் பெயர்களாகும். இராமாயண காலத்தில் இந்தியா முழுவதிலும் வாழ்ந்த மக்கள் திராவிடராவர். பேசப்பட்ட மொழி பண்டைத் திராவிடம் அல்லது பண்டைத் தமிழாகும்.
“திராவிடரே இப்போது இலங்கை முதல் இமயம் வரை பரவியிருக்கும் மக்கட் கூட்டத்தாரிற் பெரும் பகுதியினராகக் காணப்படுகின்றனர்.” (பேராசிரியர் ரிசிலி)
“இந்திய மக்களின் பண்டைத் தொகுதியில் மிகப் பெரும்பாலானவர் திராவிடராவர். இவர்கள் பிற்காலத்தில் வந்த ஆரியருடனும் சிதியருடனும் ஓரளவு கலப்புற்றனர். (பேராசிரியர் றாட்சன்)மேனாட்டு வரலாற்றாசிரியர்களின் முடிபுகளுக்கும் கருத்துக்களுக்கும் சில தவறான வைத்துக் கோடல்களும் எடுகோள்களுங் காரணங்களாகும். இவற்றிற் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

“இந்திய மக்களின் பண்டைத் தொகுதியில் மிகப் பெரும்பாலானவர் திராவிடராவர். இவர்கள் பிற்காலத்தில் வந்த ஆரியருடனும் சிதியருடனும் ஓரளவு கலப்புற்றனர். (பேராசிரியர் றாட்சன்)