பிராமி கல்வெட்டு எழ்த்துக்களும் கீழடி பானைக் கீறல்களும் தொல்காப்பியமும்
தமிழ் பிராமி
இந்தியா, இலங்கை மற்றும் சில ஆசிய மொழிகளினை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்து உரு பிராமி ஆகும்.
அசோகர் கல்வெட்டுகளே(பொமு268 - பொமு232) பிராமி கல்வெட்டுகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செதுக்கினார். அசோகர் கல்வெட்டுகள் வடமொழியில் (பிராகிருதம்) உள்ளவை, இரண்டு மட்டுமே தமிழில். அசோகர் இது தவிர கிரேக்கம் மற்றும் இஸ்ரேலின் அரேமிக் மொழியிலும் கல்வெட்டுகளை செய்தார். இதே பிராமி எழுத்தில் இலங்கையில் பொமு2ம் நூற்றாண்டிலிருந்து சிங்கள மொழியிலும் உள்ளது.
மாங்குளம் கல்வெட்டு -இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு எனப் படுகிறது, ஆனால் பல்வேறு அறிஞர்கள்படி பொமு300 - பொஆ 200 என பல்வேறு கருத்துக்க்கள்.
ராஜஸ்தானின் சித்தோர்கருக்கு வடக்கே சுமார் 8 மைல் (13 கி.மீ) தொலைவில் உள்ள நாகரி கிராமத்திற்கு அருகில் - ஹதிபாதா கல்வெட்டு கோசுண்டி கல்வெட்டு அல்லது ஹதிபாதா கல்வெட்டு
ஜான் கோண்டா போன்ற சில அறிஞர்கள் இவற்றை கிமு 2 ஆம் நூற்றாண்டு வரை தேதியிட்டுள்ளனர்.
பொ.மு. 1 ஆம் நூற்றாண்டில் தேதியிடப்பட்ட பிராமி எழுத்துக்களில் அறியப்பட்ட மிகப் பழமையான சமஸ்கிருத கல்வெட்டுகளில் ஒன்றாகும்