சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்களும், உரை எழுதியவர்களும் பரத்தையரைப் பலவகையாகப் பிரிக்கின்றனர் - இல்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை.கணிகையர், காமக்கிழத்தி,....
இவர்களில், இல்பரத்தை, காமக்கிழத்தி போன்றோர் கற்பு நெறி கொண்டவர்கள். ஒரு தலைவனைத் தவிர மறு ஆணிடம் இன்பம் துய்க்காதவர்கள்.
இல்பரத்தை ஒருவனைத் திருமணம் செய்யாவிட்டாலும் அவனைத் தவிர வேறுயாரிடமும் இன்பம் துய்ப்பவள் அல்ல. இக்காலத்து ‘வைப்பாட்டி’ போல.
காமக்கிழத்தி என்பவள் இரண்டாம் மனைவியாகவோ, மற்றவர்களால் பரிசாகத் தரப்பட்ட பெண்களாகவோ இருக்கலாம். இவர்களும் அந்த ஒரு தலைவனைத் தவிர வேறு ஆண்களை நாடாதவர்களே.
காதற்பரத்தை பல ஆண்களிடம் இன்பம் துய்த்தாலும், ஒரு ஆணிடம் மனதைப் பறிகொடுத்தவள்.
மற்ற பரத்தையர் கற்பு நெறி கொண்டவர் அல்ல. பல ஆண்களிடம் இன்பம் துய்ப்பவர்கள்.
இவர்களிடமும் வேறுபாடு உண்டு. இந்தப் பரத்தையரும் பொருளின் வரைவு மகளிர் அல்ல. அதாவது, காசுக்காக மட்டுமே இன்பம் தருகிறவர் அல்ல.
சேரிப் பரத்தையர் மட்டுமே காசுக்காக இன்பம் தருகிறவர்கள். (சங்க காலத்திய பரத்தையரில் கடையானவர்களாகக் கருதப்பட்டு இருக்கலாம். இக்காலத்தில், இவர்கள் புனிதமானவர்களாக ஒப்பிடப்படுகையில் தெரிவார்கள். பரத்தைரிக்கையாளரினும் இழிந்த கடையான பரத்தர்கள் என்றும் இருந்ததில்லையே.)
மற்றவகைப் பரத்தையர் பல ஆண்களிடம் இன்பம் துய்ப்பவர்கள். இவர்களின் நோக்கம் காசாக பெரும்பாலும் இருப்பதில்லை.
இவர்களில் கலைகளிலும் அறிவியலிலும் கணிதத்திலும் அறிவுடையவளாக விளங்குகிற பெண்கள் பல ஆண்களோடு இன்பம் துய்ப்பவர்கள். இவர்களே கணிகையர்.
நயப்புப் பரத்தையர் என்போர் ஆண்களை மயக்கி தன் காமவிழைவுகளைத் தீர்த்துக்கொள்ள எப்போதும் சிந்திப்பவர்கள். அவர்கள் திருமணமான பெண்டிராகவும் இருக்கலாம்.
ஒரு விஷயம் மறுக்க முடியாதது.
முதல் மனைவி மட்டுமே கற்புடைய பெண்.
சமூகம் அறிய முதல் மனைவியாக ஆனவளிடம் இருந்து வேறுபட்ட உறவு கொண்ட பெண்களை அடையாளம் காட்டுபவர்களாகவே “பரத்தைகள்” இருக்கிறார்கள். அஃதாவது, சங்கத் தமிழகத்தில் கற்புடைய முதல் மனைவியாகிறவரே இயல்பானதாகவும், பெரும்பான்மையாக ஆகவும் இருந்திருக்கிறது.
இந்த இயல்பான பெரும்பான்மையில் இருந்து மாறுபடும் பெண்கள் அனைவரும் “பரத்தை” எனும் ஒற்றை அடைப்புக்குள் வந்துவிடுகிறார்கள்.
அஃதாவது, கற்புடைய பெண்டிர் போல, கற்பு நிலை வாழாப் பெண்டிரும் சங்க காலத்தில் இருந்துள்ளனர். அவர்கள் சமூகத்தினால் இழிவாகப் பார்க்கப்படவில்லை. ஆனால், கற்புடைப் பெண்கள் நிச்சயம் போற்றப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும்.
மொத்தத்தில், கற்புடையோர் கற்புநிலையற்றோர் என இரு பெரும் பெண்களுக்கான பிரிவுகளை சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
ஆண்களுக்கு இது போன்ற ஒரு வேறுபாட்டு அடையாளத்தை உரையாசிரியர்கள் சங்கப் பாடல்களில் காணவில்லை. காணாததால், தரவும் இல்லை.
தன் தலைவனை “பரத்தன்” என அவன் மனைவி திட்டுவது இருந்தாலும் (மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி - அகம்: 334), அதன் பொருள் பெண்களை மயக்கு மொழி பேசி, ஆசைகாட்டி, இன்பம் தந்து, பின் பிரிந்துவிடுகிறவன் என்கிற பொருளில்தான் இருக்கிறது.
சுருக்கமாக, கற்புடைய ஆண் என ஒருவன்கூட சங்க இலக்கியங்களில் இல்லை போல் தெரிகிறது.
இந்த மரபுடைய மருத நிலத்தில், வால்மீகியின் ராமன் ஒரு சமூகப் பிறழ்வு.
தமிழகத்துத் திகக்காரன் ராமனை திட்றான்னா, அந்தக் கோவம் அவன் ஜீன்ல இருக்குங்குறேன்.