Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 972. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்

Guru

Status: Offline
Posts: 7329
Date:
972. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்
Permalink  
 
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

(அதிகாரம்:பெருமை குறள் எண்:972)

பொழிப்பு: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

மணக்குடவர் உரை: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.
எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.

பரிமேலழகர் உரை: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான்.
(வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: எல்லா மனிதர்களும் பிறப்பால் ஒரே மாதிரியானவர்களே. ஆனால் அவரவர்கள் காரியம் செய்யும் திறமை வேறுபடுவதனால் சிறப்புக்கள் ஒரே மாதிரியாக அடைய முடியாது.

பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும். செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா.

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்:
பதவுரை: பிறப்பு-தோற்றம்; ஒக்கும்-நிகர்க்கும்; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிருக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை;
பரிப்பெருமாள்:எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை;
பரிதி: மனிதர் எல்லோரும் சனனத்தால் ஒப்பர்;
காலிங்கர்: மக்கள் ஆகிய அனைவர்க்கும் பிறப்பின்கண் ஒரு வேற்றுமை இல்லை;
பரிமேலழகர்: எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்;
பரிமேலழகர் குறிப்புரை: வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும் (கூறினார்).

பிறக்கு ஒக்கும் என்பதற்கு பிறப்பின்கண் வேறுபாடில்லை என்ற கருத்தில் உரையாசிரியர்கள் பொருள் கூறினர். பரிமேலழகர் 'முந்தையவினைப் பயனால் உடல் எடுத்து அதன்படிச் செயல்பட்டு அதன் விளைவுகளை அனுபவித்தல் எல்லா வருணத்தாருக்கும் சமம்' என்று மயங்க வைக்கும் பொருளில் 'பிறப்பொக்கும்' என்பதற்கு சமயக்கருத்து கலந்ததான விளக்க உரை தருகிறார். எல்லா உயிர்க்கும் என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் குறளில் கண்டபடியே எல்லா உயிர்க்கும் எனப் பொருள் கூற மற்றவர்கள் 'மக்கள் உயிர்க்கும்' எனக் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும்', 'பிறப்பால் ஒக்கும் ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும்', 'எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்திருந்தாலும்', 'எல்லா உயிர்கட்கும் பிறப்பு இயல்பு ஒக்கும்; உயிரென்றது மக்களுயிரை' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் வேறுபாடில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் :
பதவுரை: சிறப்பு-பொது அல்லாதது; ஒவ்வா-நிகர்க்கமாட்டா; செய்-செய்யும்; தொழில்-தொழில்; வேற்றுமையான்-வேறுபாட்டினால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.
மணக்குடவர் குறிப்புரை: எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
பரிப்பெருமாள்: ஆயினும் தத்தம் செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
பரிதி: ஆசாரத்தினாலே நற்குலத்தராவர் என்றவாறு.
பரிதி குறிப்புரை: நற்குலத்தவாராவர் என்றதால் இழிதொழிலாலே இழிகுலமாவார் என்பதாம்.
காலிங்கர்: அம்மக்கட்குச் சிறப்பு ஒவ்வாது என்பது என்னையோ எனில், இயல்பு நீங்கிய இழிவு தொழில் ஒருவர்க்கு உளதாயின் இவர் சாலச் சிறியர் என்றும், தமக்கு இயல்பாகிய பேரொழுக்கத்தின்கண் பிழையாது ஒழுகின் இவர் சாலப் பெரியார் என்றும், இங்ஙனம் வழங்கி வருதலால் யாவர்க்கும் சிறப்பு ஒவ்வாது என்பதனைத் தெரிந்துகொள்ளப்படும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: சிறப்பு என்பது பெருமை.
பரிமேலழகர்: பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான்.
வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.

இப்பகுதிக்கு உரை காண்பதில் பழைய உரையாசிரியர்கள் வேறுபட்டு நிற்கின்றனர். மணக்குடவர் பெருமை என்பது செய்யும் தொழிலால் மாறுபடும் என்று பொழிப்புரையில் கூறி விளக்க உரையில் 'பெருமையாவது குலத்தினால் அறியப்படாது' என்று அழுந்தத் தெரிவிக்கிறார். பரிதியார் இழிதொழில் செய்தால் இழிகுலத்தார் என்று கூறுகிறார். காலிங்கரும் இதே கருத்தினரே. பரிமேலழகர், சமயச் சார்புடன், வருணத்தையும் பிறவிச் சுழற்சியையும் காட்டி அதனாலேயே ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்கிறார். எல்லா உயிருக்கும் பிறப்பு சமானமானதே என்றாலும் செய்யும் தொழில்கள் வரையறுக்கப்பட்டிருப்பதனால் (வருணாசிரமம்) அவை சிறப்பு அடிப்படையில் சமானமல்ல என்று இக்குறள் சொல்வதாகப் பரிமேலழகர் கருத்துரைக்கிறார். மணக்குடவர் குலத்திற்கும் சிறப்புக்கும் தொடர்பில்லை என்று கூற பரிமேலழகர் அதற்கு மாறாக வருணவேறுபாடு பற்றிப் பேசுகிறார். ‘தொழில் சார்ந்த இழிவும் சிறப்பும் இருப்பதனால் மனிதருள் பெருமை வேறுபடும்’ என்று தொல்லாசிரியர்களால் இப்பகுதி விளக்கப்பட்டது தெரிகிறது. எவை இழிதொழில் என இவர்களில் ஒருவரும் குறிக்கவில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'செயல் வேற்றுமையால் சிறப்பு வேறுபடும்', 'செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் சிறப்புக்கள் ஒவ்வா', 'அவைகள் செய்கின்ற தொழில் வேறுபாட்டினால் பெருமை ஒத்திருப்பது இல்லை', 'செய்யப்படுகின்ற தொழில்களின் வேறுபாட்டால் சிறப்பு இயல்புகள் ஒவ்வா-அவரவர்கள் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. சிறப்பு ஒவ்வாமை-ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால பெருமையும், கெட்ட தொழிலினால் சிறுமையும் அடைதலாம். எல்லா மக்களும் பிறப்பினால் ஒரு தன்மையினரே. செய்யும் தொழிலுக்குத் தக்கவாறு பெரியார் சிறியார் என்னும் பெயர் பெறுகின்றனர். அவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என்பதாம். 26-ம் குறளைப் பார்க்க', என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையதே; செய்யும் தொழிலின் வேறுபாட்டால் சிறப்பு ஒத்தவையாகா.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; செய்யும் தொழிலின் வேற்றுமையால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது பாடலின் பொருள்.
'பிறப்பொக்கும்' குறிப்பது என்ன?

பிறப்பு ஒக்கும் என்ற தொடர்க்கு பிறப்பு ஒத்துள்ளது என்பது பொருள்.
எல்லா உயிர்க்கும் என்ற தொடர் அனைத்து உயிர்களுக்கும் என்ற பொருள் தரும்.
சிறப்பு ஒவ்வா என்ற தொடர்க்கு பெருமையென்பது ஒத்திருக்காது என்று பொருள்.
செய்தொழில் என்ற தொடர் செய்கின்ற தொழில்கள் என்ற பொருளது.
வேற்றுமையான் என்ற சொல் வேற்றுமைகளால் என்ற பொருள் தருவது.

பிறப்பால் சிறப்பு உண்டாவதில்லை; செய்யும் தொழிலால் பெருமை வேறுபடுவதுண்டு.

பிறப்பில் அதாவது பிறக்கும்பொழுது எல்லோரும் சமம். பிறப்பில் அனைவரும் ஒன்றும் அறியப்படாத குழந்தைகளே அதாவது இன்ன பெருமைக்குரியதாகப் போகிறது என்றோ இந்தத் தொழில் செய்யப்போகிறது என்றோ அப்பொழுது தெரிவதில்லை. நீரின்றி அமையாது உலகு என்பது போன்றதோர் இந்த அடிப்படை உயிரியல் உண்மையைத் திரிவுபடாமல் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று உரைக்கிறார் வள்ளுவர். இதை எல்லா உயிர்கட்கும் பிறப்பு இயல்பு ஒக்கும், உயிர்கள் பிறப்பிலே ஒத்த உரிமையுடையன என்று சிலர் விளக்குவர்.
பிறப்பினால் பெருமையோ இழிவோ உண்டாவதில்லை என்கிறது பாடல். அருளுடையவன் அந்தணன்; அருளற்றவன் இழிந்தோன்; ஒழுக்கமுடையவன் உயர்ந்தோன்; ஒழுக்கமற்றவன் தாழ்ந்தோன்; தொழில்திறன் கொண்டவன் மேலானவன்; தொழில்திறன் குறைபாடுடையவன் கீழானவன்; இவ்வாறு அறத்தாலும், ஒழுக்கத்தாலும், தொழில் செய்திறனாலும் பெருமை மக்களுக்கு உண்டேயன்றிப் பிறப்பால் உயர்ச்சியோ தாழ்ச்சியோ இல்லை என்ற வள்ளுவரின் உறுதியான கோட்பாட்டைக் குறள் நெடுகக் காணலாம். இங்கும் அது தெளிவுறுத்தப்படுகிறது.

குறளின் இரண்டாவது பகுதியான 'சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்றதற்கு 'அவர் அவர் செய்யும் தொழில் வேற்றுமை காரணமாகச் சிறப்புநிலைகள் வேறுபடும்' என விளக்கம் தந்தார் வ சுப மாணிக்கம். மேலும் அவர் 'ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும் செயல் வேற்றுமையால் சிறப்பு வேறுபடும்' என்று கருத்தையும் மொழிந்தார். இரா சாரங்கபாணியும் இதே நோக்குடையவரே. இவர்கள் உரை உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே; பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும், சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும் (புறநானூறு 183: பொருள்: ஓரூறுபாடு உற்றவிடத்து அதுதீர்த்தற்கு வந்து உதவியும் மிக்க பொருளைக் கொடுத்தும் வழிபாட்டுநிலைமையை வெறாது கற்றல் ஒருவற்கு அழகிது; பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும் கல்வியின் சிறப்பால் தாயும் மனம் வேறுபடும்) என்ற புறநானூற்றுப் பாடலைத் தழுவியது.
தண்டபாணி தேசிகர் 'பெருமை சிறுமைகள் பிறரால் மதிக்கப்படுவனவே அன்றித் தாமே கருதுவனவல்ல. ஆதலால் தொழிலின் உயர்வினைக் கொண்டே பெருமையும் மதிக்கப்படுகிறது எனப் பெருமையிலும் உயர்வும் தாழ்வுமுண்டு என்பதை உணர்த்துவதே இக்குறளின் நோக்கம். பெருமையை மதிப்பீடு செய்வதே பெருமை என்னும் இவ்வதிகாரத்தின் பொருணோக்கிற்கும் ஏற்றதாகும்' என்று சொல்லி 'ஆதலால், மக்களுக்கு மட்டும் என்ன? பிறப்பால் ஒத்த எல்லாவுயிர்கட்குமே செய்தொழிலால் பெருமை ஒப்பாதல் இல்லை என்பதனைப் பட்டத்துயானையையும் படையானையையும் சுமைதூக்கும்யானையையும் கொண்டே துணியலாம்' என்று எடுத்துக்காட்டுடன் விளக்கம் செய்வார்.
"நல்ல தொழில் செய்கின்றவர்கள் குற்றமான தொழில் செய்கின்றவர்களை விட மேலானவர்கள். அரிய பெரிய தொழில் செய்கின்றவர்கள் சிறு சிறு தொழில்களைச் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்கள்" என்று மு வ செய்தொழிலுக்கும் சிறப்பு நிலைகளுக்கும் உள்ள தொடர்பை விளக்குவார்.
தேவநேயப் பாவாணர் கூறும் தொழில் வேறுபாடுகளும் சிறப்புநிலை வேறுபாடுகளும்: "அதிகாரமுள்ளது, அதிகாரமில்லது ; வருமானம் மிக்கது; வருமானங் குறைந்தது; தற்சார்பானது, மற்சார்பானது; நிழலிற் செய்வது, வெயிலிற் செய்வது; மனவுழைப்புள்ளது; உடலுழைப்புள்ளது; துப்புரவானது,துப்புர வற்றது; ஒழுக்கக் கேட்டிற் கிடமுள்ளது, ஒழுக்கக் கேட்டிற் கிடமில்லது; இன்றியமையாதது. இன்றியமையாத தல்லாதது; பிறரை இன்புறுத்துவது பிறரை இன்புறுத்தாதது; நல்லது தீயது என்பன. இவற்றுள் ஒவ்வோரிணைக்கும் இடைப்பட்ட நிலைமையுமுண்டு. தொழில்வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன".
தொழிலால் சிறப்பு வேறுபடும் என்பதற்கு உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் (உழவு 1033) என்று உழவுத்தொழிலைப் பெருமைப்படுத்திய வள்ளுவரின் குறளே சான்றாகிறது.
சிலர், செய்யும் தொழிலால் பெருமை வேறுபடுகிறது என்ற உரையை வளப்படுத்தும் நோக்கில், செய்தொழில் வேற்றுமையால் என்பதை 'தொழில் செய் வேற்றுமை'யால் என வாசித்து, 'பிறப்பில் அனைவரும் சமம்; அவர்கள் செய்யும் தொழில்களிலும் ஏற்றத் தாழ்வுகள் இல்லை; அவர்கள் செய்யும் தொழில் திறமையில்தான் வேறுபாடுகள் உண்டு; அவையே ஒருவரது பெருமை-சிறுமைக்குக் காரணம்' என்று இக்குறளுக்கு உரை வரைவர். தொழில் என்ற இடத்தில் தொழில் செய்திறன் எனக் கூறி 'உயிர்கள் தொழில் செய்யும் ஆற்றலினால் சிறப்பும் சிறப்பின்மையும் சேர்கின்றன' எனச் சிலர் பொருள் உரைத்தனர். தொழில் என்பதற்குச் செயல் எனப் பொருள் கொண்டு, நல்ல செயல்கள் தீய செயல்களால் வேறுபாடுகள் அமைகின்றன என்றவகையிலும் உரைகள் உள.

மனித உரிமைகள் மனிதகுலம் தோன்றியதிலிருந்து உணரப்பட்டு வந்தன; வளர்ந்த நாகரீக நாடுகள் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிலைநாட்டப் போராடி வெற்றி கண்டன. தமிழ்நாட்டில் 'வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்' என மேற்பால் கீழ்ப்பால் எனப் பிரித்துக் காணும் போக்கு சங்க காலத்திலேயே இருந்தது என்றாலும் அதை எதிர்க்கும் குரல்களும் இருந்தன. இனம், குலம், பிறப்பென்னும் சுழிப்படாமல், உறுதியாக, மனிதர்களில் பிறப்பால் உயர்வு தாழ்வு கூறும் நூல்களை மறுத்து, எல்லா உயிர்களும் பிறப்பால் ஒக்கும் என்றும் அவரவர்களின் செயல்களாலேயே பெருமை உண்டு என்றும் இக்குறள் மூலம் அதை இன்னும் ஓங்கி உரைத்தார் வள்ளுவர். பிறப்பு ஒருவனின் சிறப்புக்கு காரணமாய் அமைவதில்லை என்று சொல்லி, வேறுவேறுமக்களிடம் நடைமுறையில் காணப்பட்ட பெருமை நிலை வேறுபாடுகளை விளக்க, 'சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்ற வாழ்வியலை உறுதிபடச் சொல்கிறார் வள்ளுவர்.
சம வாய்ப்பு (Equal opportunity), வாழ்க்கைத்தொழிலைத் தேர்வு செய்வதில் கட்டாயமின்மை, எப்பணியிலும் ஈடுபடும் உரிமை (Freedom to choose an occupation and right to engage in work) போன்ற அடிப்படை உரிமைகள் உள்ள சமுதாயத்தில் எந்தச் சிறப்பையும் யாரும் பெறமுடியும். இவை மறுக்கப்பட்ட சமூகத்தில் கோணல் கோட்பாடுகள் கோலோச்சிக் குழப்பங்களை விளைவிக்கும். அப்படிப்பட்ட சமூக அமைப்பு வள்ளுவர்க்கு ஏற்புடையது ஆகாது. இயற்கையில் அமைந்த மனித குலத்தின் உரிமைகளை அரசியல் வழியோ, சமய அமைப்புகளின் மூலமோ, புன்மையான சாதி குல அமைப்புகளின் மூலமோ பறிக்க எவர்க்கும் உரிமையில்லை. இவையும் இக்குறட்பாவில் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன.

'பிறப்பொக்கும்' குறிப்பது என்ன?

அதிகாரம் பெருமை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பிறப்பில் பெருமை அனைவருக்கும் ஒத்தது என்று சொல்கிறார் வள்ளுவர். இது அதிகார இயைபுடைய நேரான கூற்றே. ஆனால் இக்குறள் உயிர்களுக்கிடையே உள்ள பெருமை நிலை வேறுபாடுகள் ஏன் உண்டாகின்றன என்பது பற்றி ஆராய வந்தது மட்டுமல்லாமல், இப்படிச் சொன்னதற்கு வேறு காரணங்களும் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் எண்ணினர். அடிமை முறையின் பண்பு கொண்ட பிறப்பு அடிப்படையிலான சாதிப்பிரிவினை இந்தியப் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருந்தது; தொல்காப்பியத்தில் காணப்படும் நான்கு பிரிவுகளையோ, மனு வகுத்த நான்கு வருணங்களையோ, சமூகவியல் பகுப்பாகவோ-மேலிருந்து கீழாக அவை தரவரிசைப்படுத்தப்பட்டதையோ வள்ளுவர் ஒப்பவில்ல என்பதை அறிவிக்கவே இக்குறள் யாத்தார் என்றனர் இவர்கள். மணக்குடவர் 'இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று' என இக்குறட்பாவின் உட்கருத்தைத் தெளிவுபடுத்தினார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் சொல்ல வந்ததற்குத் தேவை என்ன என்பதைச் சொல்ல மற்றவர்களும் மிகுந்த சிரமம் கொள்ளத் தேவையில்லாமல் இருந்தது. அவர்கள் மனு தரும நூலில் உரைக்கப்பட்டதையும், கீதையில் சொல்லப்பட்ட உபதேசங்களயும் எடுத்துக்காட்டினர். “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணாத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்" என்ற மனுவின் கருத்துக்களையும் "நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருணதர்மம் படைத்த என்னால்கூட முடியாது' என்று பகவான் கிருஷ்ணனே கூறும் கீதையின் சுலோகங்களையும் மேற்கோள் காட்டி இவற்றை மறுப்பதற்காகவே வள்ளுவர் இவ்வாறு பாடினார் என்று கடிதில் விளக்கம் தந்தனர்.

வருணாசிரமம் என்றது மாந்தர் உரிமைகளுக்கு எதிரான மனித வரலாற்றின் மிகப் பெரிய மோசடியாகும். இது இங்குள்ள சிந்தனைப் போக்கைச் சிதறடித்து சமூக அமைப்பைச் சீர்குலைத்தது. வருணாசிரமம் என்பது பிறப்பால் உயர்வும் இழிவான தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறாது என்று சொல்லி நால்வேறு வகையில் வாழ்க்கையுரிமை வகுத்துக் கொடுத்து சாதிக்கொரு நீதி விதித்தது. கல்வி போன்றவை குலத்துக்கொரு நீதி முறையில், பெரும்பாலோர்க்கு அவற்றை விரும்பினாலும் குற்றமாகும் என்று சொல்லப்பட்டது; இவ்வாறு சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அறமற்ற முறையில், ஒரு சாரார்க்குமட்டும் தனி ஒதுக்கீடு வழங்கும் முறை செயலாக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டை மறுத்து எழுதப்பட்டதே ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் முழக்கம். பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்ட இந்தியச் சமூகச் சூழலில் வள்ளுவர் முன்வைத்த பிறப்பொக்கும் என்ற கருத்து ஒரு பெரிய புரட்சிக் கருத்தாகும். பிறப்பு ஒப்புமையைத் திருவள்ளுவர் ஓர் வாழ்வியல் விழுமியமாக மொழிந்தார்.
இக்குறட்பா வள்ளுவரை ஒரு சமுதாயப் புரட்சியாளராகவும் அடையாளம் காட்டுகிறது. வடமொழி நூல்களில் வழங்கி வந்த சாதி வேற்றுமைகளையும் ஆசாரங்களையும் மறுப்பது இது. வருணம் சார்ந்த சொல்லாட்சியோ பொருள் ஆளுமையோ குறளில் எங்கும் காணப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகப் பிளவுகளை ஏற்கமறுத்த வள்ளுவர், போராட்டக் குணம்கொண்டு, அறம் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில், பிற்போக்கான அந்த அநீதிக்கு, இக்குறள் மூலம் பதிலடி கொடுத்தார்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் வேறுபாடில்லை; செய்யும் தொழிலின் வேற்றுமையால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது இக்குறட்கருத்து.

செய்தொழில் திறனால் பெருமை கணிக்கப்படும் என்பதைச் சொல்லும் செய்யுள் இது.

பொழிப்பு

அனைத்து உயிர்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் தொழில்களால் பெருமை வேறுபாடு உணரப்படும்.

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
பிறப்பொக்கு மெல்லா வுயுர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

(இ-ரை.) எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே; செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா - ஆயின், அவரவர் செய்யுந் தொழில்கள் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் ஒரு நிகரானவல்ல.

தொழில் வேறுபாடுகள்; அதிகாரமுள்ளது, அதிகாரமில்லது ; வருமானம் மிக்கது; வருமானங் குறைந்தது; தற்சார்பானது, மற்சார்பானது; நிழலிற் செய்வது, வெயிலிற் செய்வது; மனவுழைப்புள்ளது; உடலுழைப்புள்ளது; துப்புரவானது,துப்புர வற்றது; ஒழுக்கக் கேட்டிற் கிடமுள்ளது, ஒழுக்கக் கேட்டிற் கிடமில்லது; இன்றியமையாதது. இன்றியமையாத தல்லாதது; பிறரை இன்புறுத்துவது பிறரை இன்புறுத்தாதது; நல்லது தீயது என்பன. இவற்றுள் ஒவ்வோரிணைக்கும் இடைப்பட்ட நிலைமையுமுண்டு. தொழில்வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன.

"வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கு மொத்தலிற் பிறப்பொக்கு மென்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற் பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கை தோறும் வேறுபடுதலிற் 'சிறப்பொவ்வா' வென்றும் கூறினார். " என்பது பரிமேலழகரின் ஆரியச்சார்புத் சிறப்புரை.

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
  என்ன பயனும் இல - குறள் 110:10
கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1100)

பொழிப்பு (மு வரதராசன்): கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

மணக்குடவர் உரை: கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின் வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல.
இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல.
(நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல். வாய்ச் சொற்கள்: மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின், இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.)

வ சுப மாணிக்கம் உரை: கண்ணோடு கண் இணையும் பார்வை இசையின் வாய்ப்பேச்சுக்கு என்ன பயன் உண்டு?

பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.

பதவுரை: கண்ணோடு-ஒருவர் கண்களொடு; கண்-இன்னொருவர் கண்கள்; இணை-சம அளவு; நோக்கொக்கின்-பார்வையால் ஒத்திருக்குமாயின்; வாய்ச்சொற்கள்-வாய்மொழிகள்; என்னபயனும்-எத்தகைய விளைவும்; இல-உளவாகா.

கண்ணோடு கண்இணை நோக்கொக்கின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின்;
பரிப்பெருமாள்: கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின்;
பரிதி: மனமும் கண்ணும் பொருந்திய பார்வை உண்டாகில்;.
காலிங்கர்: ஒருவனோடு ஒருத்தியிடை மற்று அவர் தம் கண்ணொடு கண் எதிர்ந்து நோக்குங்கால் நெஞ்சில் காதல் குறிப்புக் கண்ணில் புலப்படுமாறு இரண்டு நோக்கும் தம்மில் ஒக்கக் குளிர்ந்திருக்கப்பெறின்;
பரிமேலழகர்: காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்;
பரிமேலழகர் கருத்துரை: நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல்.

மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர், ஆகியோர் கண்களோடு கண்கள், காமக்குறிப்பில் நோக்கம் ஒத்த தன்மையைக் குறிப்பிடுகின்றனர். பரிமேலழகர் பதவுரையில் இவ்விதம் குறிப்பிட்டுக் கருத்துரையில் நோக்கால் ஒத்தல், 'காதல் நோக்கினவாதல்' என்பதாகும் என்று கூறுவார். பரிதியார் கண்களோடு மனமும் பொருந்திய பார்வை பற்றிப் பேசுகிறார். காலிங்கர் 'கண்ணொடு கண் எதிர்ந்து நோக்குங்கால் நெஞ்சில் காதல் குறிப்புக் கண்ணில் புலப்படுமாறு' என்று உரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தலைவன் தலைவியருடைய இருவர் கண்களும் தம்முள் நோக்கு ஒத்துவிடின்', 'கண்களும் கண்களும் பொருந்தி பார்வையில் ஒத்துக் கொண்டால்', 'காதல் மிக்க இருவருடைய இருகண்களும் ஒத்த பார்வையுடையனவாயின்', '(காதலை உடைய இருவர்களுள்) ஒருவர் கண்களோடு மற்றவர் கண்ணிரண்டும் பார்வையால் ஒக்குமாயின்', என்றபடி உரை தருவர்.

கண்ணோடு கண் பொருந்தி தம்முள் நோக்கு ஒத்துவிடின் என்பது இப்பகுதியின் பொருள்.

வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல.
மணக்குடவர் கருத்துரை: இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்:வாயினாற் கூறும் சொற்கள் ஒரு பயனுடையவல்ல.
பரிப்பெருமாள் கருத்துரை: இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிதி: வாய்ச்சொல்லினால் என்ன பயனும் இல என்றவாறு.
காலிங்கர்: மற்று வாய்ச் சொற்கொண்டு என்ன பயனும் இல.
காலிங்கர் கருத்துரை: எனவே யாம் இவள் வாய்ச்சொல் கேட்கப்பெறின் எனைத்துப் பயனும் அதன்கண்னே நிகழும் என்று அவள் சொற்கேட்டலும் காதலித்தான் தலைமகன் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல.
பரிமேலழகர் விரிவுரை: வாய்ச் சொற்கள்- மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின், இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.

இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் வாய்ச்சொல்லினால் என்ன பயனும் இல்லை என்று பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாய்விட்டுத் தம் காதலைப் புலப்படுத்தச் சொற்கள் தேவையே இல்லை', 'அதன் பிறகு பேச்சுக்கு அவசியமில்லை', 'வெளிப்படையாக அவர்கள் சொல்லும் வாய்ச்சொல்லினால் யாது பயனும் இல்லை', 'வாயிலிருந்து தோன்றும் சொற்கள் எத்தகைய பயனும் உடையன வல்ல' என்று உரை கொண்டனர்.

வாய்ப்பேச்சுக்கு எத்தகைய பயனும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கண்ணோடு கண் பொருந்தி தம்முள் நோக்கு ஒத்துவிடின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல என்பது பாடலின் பொருள்.
'வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' என்ற பகுதி குறிப்பது என்ன?

கண்களாலேயே பேசிக் காதலை வெளிப்படுத்திக் கருத்தொற்றுமை கண்டனர் தலைமக்கள் என்னும் இப்பாடல் சொல், பொருள், கவி நயம் கொண்டு மனதைக் கொள்ளை கொள்ள வைக்கிறது.

காதலர் கண்கள் பார்வையால் ஒன்றுபடுமாயின், வாயினால் பேசிக்கொள்ளும் பேச்சுக்களால் எவ்விதப் பயனும் இல்லை.
காதலில் வீழ்ந்த தலைவனும் தலைவியும் கண்களாலேயே பேசிக்கொள்கின்றனர். ஒருவர் உள்ளக் குறிப்பை மற்றவர் அறிய - ஒத்த அன்பினரா என்று அறிந்துகொள்ள, முயற்சிக்கின்றனர். அவளது மருந்துப்பார்வை, களவுச்சிறுநோக்கு, சிறக்கணித்தல், புன்முறுவல், முகமலர்ச்சி, பொதுநோக்கு, இறைஞ்சுதல், கண்வழிபேசுதல் ஆகியவற்றின் வழி தலைவன் குறிப்பு அறிகிறான் என்று இவ்வதிகாரத்து முந்தைய பாடல்கள் கூறின. இப்பாடலில், ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டபின், அவர்கள் கண்கள் சந்திப்பது காட்டப்படுகிறது. காதல் கொண்ட இருவரின் கண்களும் பேசின. இருவர் கண்களும் ஒன்றுபட்டு ஒரே நோக்காகிவிடுகிறது. நெஞ்சில் உள்ள காதல் உணர்வு அவர்கள் கண்களில் புலப்பட்டது. ஒத்த தன்மையான அந்தப் பார்வையிலே ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் முழுமையாகக் குடி புகுந்துவிட்டனர் என்பது தெளிவானது. அவ்வளவுதான், வாய்விட்டு அவர்கள் தம் காதலைப் புலப்படுத்தச் சொற்கள் தேவையே இல்லை.

இக்குறளில் கண்ட கருத்தையே கம்பர் தன் காவியத்தில் மிகப் பொருத்தமான இடத்தில் கையாண்டார். புகழ்பெற்ற அந்தப் பாடல்:
எண்ணகு நலத்தினாள் இணையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

கம்பர் காட்டும் காட்சியின் விளக்கம்: ஒரு நாள் நல்ல மாலைப் பொழுதில் மாளிகையின் மேடையிலே நின்று கொண்டிருந்த சீதையை அப்பொழுது அந்த மாளிகை வீதியின் வழியாக விசுவாமித்திரரோடும், இலக்குவனோடும் நடந்து சென்ற இராமன் தற்செயலாக நோக்கினான். அம்மங்கையும் எதிர் நோக்கினாள்; இருவர் கண் நோக்கும் ஒத்தன; இருவர் கண்ணும் கலந்தன; காதல் பிறந்தது; காதலினால் கட்டுண்ட இராமனை சீதையின் இதயத்தில் சேர்த்தது; சீதையை இராமன் உள்ளத்தில் வைத்தது. இவ்வாறு ஒருவர் உள்ளத்தில் ஒருவர் கண்வழி புகுந்ததை இக்குறளைத் தழுவிப் பாடினார் கம்பர்.

இப்பாடலைத் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பதாகவும் தோழி கூற்றாகவும் உரையாசிரியர்கள் கொள்கின்றனர் இதைக் கண்டோர் கூற்றாகவோ ஆசிரியர் கூற்றாகவோ கொள்வது பொருத்தமாகலாம்.

'வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' என்ற பகுதி குறிப்பது என்ன?

முன்பின் அறியாத ஆண், பெண் இருவரிடை பிறர் அறியாதவாறு நிகழும் களவுக்காதலைச் சொல்வது காமத்துப்பாலின் முதல் பகுதி. அப்பகுதியில் உள்ள குறிப்பறிதல் அதிகாரம், தலைவியின் மீது காதல் கொண்ட தலைவன் அவளது உடல்மொழிகள் வாயிலாக அவளும் தன்னை விரும்புகின்றாள் என்று அறிந்துகொள்வதைக் கூறுகிறது.
அதிகாரத்தின் இந்த இறுதிப்பாடல் 'கண்ணும் கண்ணும் குறிப்பால் ஒத்துப் பேசிக்கொண்ட பின் வாய்ச்சொற்களால் என்ன பயன் இருக்கப் போகிறது?' எனச் சொல்லி முடிகிறது. காதலர் இருவரின் கண்களின் நோக்கம் ஒன்றும்பொழுது அந்நோக்கமே அவர்கள் மனத்திலுள்ள காதலை உணர்த்திவிடுவதால் அங்கே வாய்ச் சொற்கள் தேவையற்றவை என்பது இதன் நேரியபொருள். இதில் சொல்லப்படும் வாய்ச்சொற்கள் என்னவாக இருக்கக்கூடும்?
உரையாசிரியர்களில் சிலர் இக்குறளுக்கு விளக்கம் தரும்போது 'உள்ளத்து நிகழ் காம வேட்கையினைக் கண்ணினால் அறியக் கிடந்தமை கூறியவாறு என்றனர். அவர்கள் கூற்றுப்படி காதலர்கள் மெய்யுறுபுணர்ச்சி வேட்கையைக் கண்களால் கூறினர் என்றும், கண்கள் வழி பேசி முடித்தபின் 'புணர்ச்சிக்கு உடன்படுகின்றேன்' என்று அவர்கள் வாய்ச்சொற்களால் கூறவேண்டிய தேவை இல்லை எனக் குறள் கூறுகிறது என்று விளக்குவர். இவர்கள் அவ்விதம் கூறுவதற்குக் காரணம் இப்பாடல் இவ்வதிகாரத்துக் கடைசிக் குறளாக உள்ளதும் (எல்லாத் தொல்லாசிரியர்களும் இதை இறுதிக் குறளாகவே கொள்கின்றனர்) அடுத்து வரும் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம் புணர்ச்சியால் உண்டான இன்பம் பற்றிக் கூறுவதாக இருப்பதுவுமே. இவர்களது முடிவு பார்வைகளால் ஒத்துக்கொண்டபின் புணர்ச்சியில் ஈடுபட்டனர் என்பது. இவ்விளக்கம் ஏற்புடையதன்று.

புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்துப் பாடல் ஒன்று 'ஊடல், உணர்தல், புணர்தல் ஆகியன 'காமம்கூடியார் பெற்ற பயன்' என்கிறது. எனவே கூடலுக்கு முன் ஊடல் நடந்து உணர்தலும் உண்டாயிற்று என்பன அறியப்படுகின்றன. அதாவது குறிப்பறிதல் அதிகார முடிவிற்கும் புணர்ச்சி நிகழ்தலுக்கும் இடையில் உள்ள நிகழ்வுகள் குறளில் சொல்லப்படவில்லை. எப்படி, 'அலர் அறிவுறுத்தலை' அடுத்து (களவியல்) 'பிரிவாற்றாமை' (கற்பியல்) அமைந்து இடையில்-காதலர் மணம் செய்து கொள்ளல் போன்றவை குறிப்பால் அறியப்படுகின்றனவோ, அதுபோல் குறிப்பறிதல் அதிகாரத்தின் முடிவில் சொல்லப்பட்ட இப்பாடலின் பொருளையும் குறிப்பால் உணரப்பட வேண்டி இருக்கிறது. அதை அறியும்போது இவ்வதிகாரத்து இறுதிப்பாடலில் புணர்ச்சி நடைபெறவில்லை என்பது தெரியவரும்.
தொல்லாசிரியர் உரைகளில் பரிதி உரை 'மனமும் கண்ணும் பொருந்திய பார்வை உண்டாகில் வாய்ச்சொல்லினால் என்ன பயனும் இல' என்றும் பழைய உரை ஒன்று 'மனமும் மனமும் கண்ணும் கண்ணும் பொருந்திய காதல் உண்டாகில் வாய்ச் சொற்கொண்டு என்ன காரியம்?' என்றும் மனத்தைத் தொடர்பு படுத்தி வாய்ச்சொற்களினால் ஒரு பயனும் இல்லை எனக் கூறின. காலிங்கர் தலைமகன் தன் நெஞ்சுக்குக் கூறியதாக 'ஒருவனோடு ஒருத்தியிடை மற்று அவர் தம் கண்ணொடு கண் எதிர்ந்து நோக்குங்கால் நெஞ்சில் காதல் குறிப்புக் கண்ணில் புலப்படுமாறு இரண்டு நோக்கும் தம்மில் ஒக்கக் குளிர்ந்திருக்கப்பெறின், மற்று வாய்ச் சொற்கொண்டு என்ன பயனும் இல. எனவே யாம் இவள் வாய்ச்சொல் கேட்கப்பெறின் எனைத்துப் பயனும் அதன்கண்னே நிகழும் என்று அவள் சொற்கேட்டலும் காதலித்தான் தலைமகன்' என விரிவாக உரை தருகிறார். இது 'கண்கள் ஒத்தன அல்லாமல் அவள் வாய்ச்சொல்லும் பெறின் எத்துணைப் பயன்களும் உளவாகாவோ என்று அவளது வாய்ச் சொற்களையும் விரும்பினான் என்ற நயம் தருகிறது. இவை போன்ற கருத்துக்களே இப்பாடலுக்கு ஏற்கத்தக்கன.
எனவே காதலர்கள் ஒருவரையொருவர் பார்த்தார்கள்; அவர்கள் கண்கள் பேசின; புணர்ச்சிக்கு உடன்பட்டனர் என்று விரைவாக நிகழ்வுகள் அரங்கேறின எனக் கொள்ள வேண்டியதில்லை. அதாவது இப்பாடலில் தலைமகனும் தலைமகளும், வாய்ச்சொற்களின்றி கண்கள்வழிப் பேசிப் புணர்ச்சிக்கு ஒப்புக்கொள்கின்றனர் என்பது சொல்லப்படவில்லை. கடைசிப் பாடலான இதில் கண்களால் காதல் குறிப்பறியப்பட்டது; இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டனர் என்பதுதான் கூறப்படுகிறது.

உரைகாரர்கள் வேறுவேறு வகையில் இப்பகுதிக்கு விளக்கம் தருகின்றனர். அவற்றிலிருந்து ஒருசில:

  • அவர்கள் பார்க்கும் பார்வைகளே அவர்கள் காதலை வெளிப்படுத்துகின்றபோது சொற்கள் எதற்கு? அவர்கள் இனி வாய் திறந்து சொல்லவா வேண்டும்? அவர்கள் வாயால் கூறுவதும் இயல்பன்றே. ஆகவே, அவர்களைக் கூட்டி வைத்தல் தான் இனி வேண்டற்பாலது எனத் தோழி எண்ணினாள். இருவரையும் ஒருவராகக் கூட்டினாள். கூடி மகிழ்ந்தனர்.
  • கண்ணும் கண்ணும் பேசிக்கொண்ட பின் வாய்ச்சொற்களால் என்ன பயன் இருக்கப் போகிறது? ஏதும் இல்லை. தலைவன் பார்வையும் தலைவியின் பார்வையும் காதலால் ஒத்துப் போனால் வாய்ச்சொற்கள் பொருளற்றவைதாம். தலைவன் வேட்டைக்கு வந்தேன் என்பான். தலைவி புனங்காவலுக்கு வந்தேன் என்பாள். அவர்கள் வந்தது சந்திப்பதற்காக. கண்கள் தாம் உண்மை பேசுகின்றன. வாய்ச் சொற்கள் கொள்ளத்தக்கன அல்ல.
  • குறிப்பறிதல் அதிகாரத்தில் காதலர் செய்கைகள் அனைத்தையும் கண்டாள் தோழி. இனித்தான் ஒதுங்கிக் கொண்டு காதலர்களை தனி விடுத்தலே தகுதியென உணர்கின்றாள் தோழி. ஒருவர் கண்ணொடு இன்னொருவர் கண்கள் பார்வையில் ஒத்துவிட்டால் பிறகு வாய்ச்சொற்கள் ஒரு பயனையும் தாரா என நினைக்கின்றாள் தோழி. கருத்தென்ன? வாயினால் தன்னிடம் மறுத்துப் பேசுகின்றாள். ஆனால் செய்கை முற்றும் மாறாக இருக்கின்றது. கண்ணொத்து விட்டது. நோக்கம் பொதுவில் வீழ்கின்றது. வீண்வாய்ச் சொற்களில் என்ன பயன் எனக்கருதி இனி நமக்கு வேலை இல்லை இங்கு இல்லை எனத் தோழி விலகிவிடுகிறாள். பிறகு சொல்லவும் வேண்டுமா? காவிலே கருத்தொத்த காதலர் சேர்க்கை! காதலுக்கு இருவரும் வயப்பட்டார்; கூடினர்; கருதிய இன்பம் கைகூடிற்று. இன்பம் துய்த்து மகிழ்ந்த உணர்ச்சி அடுத்த அதிகாரம் 'புணர்ச்சி மகிழ்தலி'ல் வெளிப்படும்.
  • இடக்கரடக்கல் உத்தியில் (பொதுவெளியில் சொல்லத்தகாத சொல்லை/பொருளை மறைத்துக் குறிப்பால் சொல்லுவது) புணர்ச்சியைக் காட்டியுள்ளார், இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்து அவள் புனங்காவல் மேலும் அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில்சொற்களாதலின் இவை கொள்ளப்படா என்பதாகும். இவை புணர்தல் நிமித்தம்.
  • மனத்தில் காதலைக் கொண்டு வாயினால் ஒருவரை ஒருவர் அறியேன் என்று சொல்கின்றனர்.

(தலைவன் தலைவி என்ற இருவர் கண்களும் தம்முள் ஒத்துவிடின்) வாய்விட்டுத் தம் காதலை ஒருவர்க்கொருவர் சொல்ல வேண்டுமென்பதில்லை' என்பது இப்பகுதியின் பொருள்.

கண்ணோடு கண் பொருந்தி தம்முள் நோக்கு ஒத்துவிடின் வாய்ப்பேச்சுக்கு எத்தகைய பயனும் இல்லை என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

கண்கள் வழி குறிப்பறிதலைச் சொல்லும் கவிதை.

பொழிப்பு

காதலர் இருவர் கண்களும் பார்வையால் பேசிவிட்டால், வாய்விட்டுத் தம் காதலை ஒருவருக்கொருவர் சொல்ல வேண்டும் என்பதில்லை.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1112)

பொழிப்பு: நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய்.
இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: (இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று - யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; மலர் காணின் மையாத்தி - தாமரை குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய், நின்அறிவு இருந்தவாறென்?
(மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: மனமே! ஒரு பூவைப் பார்த்தவுடன் பலபேர் காணப் பொதுவில் பூத்திருக்கும் அந்தப் பூ என் காதலியின் கண்ணுக்குச் சமானமாக இருக்கிறதென்று மயங்குகிறாயே!

பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று மலர்காணின் மையாத்தி.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே:
பதவுரை: மலர்-பூ; காணின்-கண்டால்; மையாத்தி-நீ மயங்குகின்றாய்; நெஞ்சே-உள்ளமே.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீ மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய்.
பரிப்பெருமாள்: நெஞ்சே! மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய்.
பரிதி: நெஞ்சே! தாமரை செங்கழுநீர் இவற்றைக் கண்டால் மயங்குகின்றாய்;
காலிங்கர்: நெஞ்சே! நீ மலர் கண்ட இடத்து மையலுறுதி;மதிப்பில்லை என்றவாறு.
பரிமேலழகர்: (இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது.) நெஞ்சே; தாமரை குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய்.
பரிமேலழகர் குறிப்புரை: மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல்.

'நெஞ்சே! மலர் கண்டால் மயங்குகின்றாய்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சமே! குவளை, நீலம் முதலிய மலர்களைக் காணின் மயங்குகிறாய்', 'மனமே! ஒரு பூவைப் பார்த்தவுடன் மயங்குகிறாயே!', 'நெஞ்சே! தாமரை, குவளை, நீலம் முதலிய மலர்களைப் பார்த்தவுடன் மயங்குகின்றாயே!', 'நெஞ்சமே! மலர்களைக் கண்டால் மயங்கின்றாய் ' என்றபடி உரை தந்தனர்.

நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய் என்பது இத்தொடரின் பொருள்.

இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று:
பதவுரை: இவள்-இவளது; கண்-விழி; பலர்-பலர்; காணும்-பார்க்கப்படும்; பூ-மலர்; ஒக்கும்-நிகர்க்கும்; என்று-என்பதாக.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று.
மணக்குடவர் கருத்துரை: இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: இவள்கண் பலரானும் காணப்படும் பூவையொக்கு மென்று.
பரிப்பெருமாள் கருத்துரை: இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறியது. இவை இரண்டினானும் தான் கிட்டுதற்கு அருமை கூறினானாம்.
பரிதி: அவைகள் நாயகி கண்ணைக்கண்டால் நாணும். 'நாயகி கண்போல் வண்ணம் பெற்றோம்; விரகப் பார்வை அறியோம்' என்று தலையிறக்கிடும் என்றவாறு.
காலிங்கர்: எம்மால் காதலிக்கப்பட்ட இவள் கண்மலர் யாவரும் காணும் பூமலர் ஒக்கும் என்று கருதி.
பரிமேலழகர்: யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; நின்அறிவு இருந்தவாறென்?
பரிமேலழகர் கருத்துரை: இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.

'இவள் கண்மலர் யாவரும் காணும் பூமலர் ஒக்கும் என்று கருதி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' யான் மட்டும் காணும் இவள் கண்களைப் பலராலும் காணப்பெறும் பூக்களை ஒக்கும் என்று கருதி. என்னே உன் அறிவு!', 'பலபேர் காணப் பொதுவில் பூத்திருக்கும் அந்தப் பூ என் காதலியின் கண்ணுக்குச் சமானமாக இருக்கிறதென்று', 'இவள் கண் எல்லாப் பூக்களிலுஞ் சிறந்தது என அறியாத உன்னுடைய அறிவு எவ்வ்ளவு இழிவானது?', 'இவள் கண்கள் பலரும் காண்கின்ற தாமரை, குவளை, நீலம் முதலிய பூக்களை ஒக்கும் என்று( நின் அறிவு இருந்தவாறு என்னே!)' என்றபடி பொருள் உரைத்தனர்.

இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
எந்த மலரைப் பார்த்தாலும் அவளது கண்ணே மனதில் தோன்றுகிறது என்று காதலன் எண்ணுவதாக அமைந்த பாடல்.

இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய் என்பது பாடலின் பொருள்.
'பலர்காணும் பூ' குறிப்பது என்ன?

மையாத்தி என்ற் சொல்லுக்கு மயங்குகின்றாய் என்று பொருள். மை-மயக்கத்தை; யாத்தி-கொள்கிறாய் என்ற இரு சொற்கள் இணைந்து மையாத்தி என்று ஆனது.

காண்போர் யாவர் மனதுக்கும் இன்பம் தருவன மலர்கள் .
பார்க்கும் மலரெல்லாம் தனது காதலியின் கண்போலவே அவனுக்குத் தோன்றுகிறது. உடன் 'அது பலர் காணும் மலராயிற்றே' என்ற என்ணமும் உண்டாகி மயக்கம் கொள்கின்றான். ஏன்? அவளது கண்கள் அவனது உரிமைப் பொருள். அவனுக்கு மட்டுமே சொந்தம்; அவன் மட்டுமே சுவைக்கக் கூடிய அழகுநலன் கொண்டவையாம் அவை!
'நெஞ்சே! மலரைப் பார்த்தவுடனே அவள் கண்கள் போல் உள்ளது என்று மயங்குகிறாயே. இந்த ஒப்புமை தவறு. அம்மலரைப் பலரும் பார்ப்பார்கள் என்று உனக்குப் புரியவில்லையா?' என்று தன் நெஞ்சை விளித்துச் செல்லமாகக் கடிந்து கொள்வதாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

பலர்காணும் பூ என்றால் என்ன?

உரையாசிரியர்கள் பலரும் பலர்காணும் பூ என்பதற்குப் 'பலரால் காணப்படும்பூ' எனப் பொருள் கொண்டனர். இப்பூவோடு தலைவியின் கண்கள் ஒப்புமை செய்யப்பட்டு 'மலர் பலராற் காணப் பெறுவது; இவளது கண் தான் ஒருவனே காண்பதற்குரியது' என்பது இவர்தம் உரை.

மற்ற உரையாசிரியர்கள் மாறுபட்ட வகையில் இத்தொடருக்கு விளக்கம் தந்து பொருள் கொண்டனர்.
'நெஞ்சமே! இவளை விலகி நின்று பார்த்து மகிழ்ந்திருந்த காலத்தில், பலரும் கண்டு இன்புறும் நற்பூக்களைக் காணும் போதெல்லாம் இவள் கண்களைப் போல் அம்மலர்கள் இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தாய். இன்று அவளை மிக அருகில் பார்த்து மகிழ்ந்த பின்னர் தானே தெரிகிறது இவள் கண்களுக்கு அம்மலர்கள் ஒப்புமை ஆகாது என்று' என்பது ஒருவகை விளக்கம்.
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது என்பது வேறோர் வகையான உரை.

இவற்றில் 'மலர் பலராற் காணப் பெறுவது; இவள்கண் தான் ஒருவனே காண்பதற்குரியது' என்ற குறிப்புப் பொருளே 'பலர் காணும் பூ' என்ற தொடரைப் பொருந்த விளக்கும்.

இக்குறளில் ஒலிநயம் சிறப்புற அமைந்து செவிக்கு இன்பம் ஊட்டுவதை உணரலாம்.
விளிச் சொல்லைப் பின்னால் கொண்டு மலர்காணின் - பலர்காணும் என்ற இணைகள்உத்தி மூலம் கவித்திறம் தோன்ற ஆக்கப்பட்ட பாடல் இது (ச அகத்தியலிங்கம்).

'இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று, நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய்' என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

மலர் கண்டேன்; காதலி கண் கண்டேன் என்று அவளது விழியின் நலம்புனைந்துரைத்தல் பாடல்.

பொழிப்பு

நெஞ்சே! பலரால் காணப்படும் பூவையொக்கும் இவளது கண் என்று கருதி மலர்களைக் கண்டால் மயங்குகிறாய்.

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
 ஒக்க (2)
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
  குத்து ஒக்க சீர்த்த இடத்து - குறள் 49:10
கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:490)

பொழிப்பு (மு வரதராசன்): பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும்.

மணக்குடவர் உரை: காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செய்க.
இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்ய வேண்டுமென்பதூஉம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க, மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க -மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க.
(மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும்துணையும் முன்அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லதுபோன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பேவிரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்குஉவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் 'குத்து ஒக்க' என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம் ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியவாறாயிற்று.)

நாமக்கல் கவிஞர் உரை: (காலத்துக்காகக் காத்திருப்பதும், வாய்ப்பு நேர்ந்தால் உடனே செய்வதும் எப்படியிருக்க வேண்டுமென்றால்) ஒரு கொக்கு தன் இரைக்காகக் காலங்கருதி சிறுதும் அசைவில்லாமல் வாடியிருப்பது போல் இருக்க வேண்டும். வாய்ப்பு வந்தவுடன் அந்தக் கொக்கு நறுக்கென்று மீனைக் கொத்திக் கொள்வதைப் போல் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க, மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க.

பதவுரை: கொக்கு-கொக்கு என்னும் பறவை; ஒக்க-ஒத்திருக்க; கூம்பும்-(வாய்ப்பு) ஒடுங்கிய; பருவத்து-காலத்தில்; மற்று-அவ்வாறன்றி (ஆனால், பின்); அதன்-அதனுடைய; குத்து=கொத்துதல்; ஒக்க-ஒத்திருக்க; சீர்த்த இடத்து-வாய்த்த காலத்தில்.

கொக்குஒக்க கூம்பும் பருவத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க,;
பரிப்பெருமாள்: காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க;
பரிதியார்: மடைவாயிற் கொக்குப்போலே தனக்குத் தாயமாகிற வேளை வருமளவும் தூங்குக; [மடை-வாய்க்காலிற் தண்ணீர் பாயும் வழி; தாயமாகிற- உரிய]
காலிங்கர்: தாம் கருதிய கருமம் முடிவதற்கு ஒரு பருவம் வாய்க்கும் அளவும் உள் ஒடுங்கி இருக்கும் குருகின் தன்மை போலேயும்;
பரிமேலழகர்: வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க;

'காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இருக்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒடுங்கிய காலத்துக் கொக்குப் போல்க', 'வினைமேற் செல்லாதிருக்கும்போது இரை நோக்கிக் காலம் பார்த்துக்காத்திருக்கும் கொக்குப் போல இருக்க', 'வினை செய்வதற்குக் காலம் ஒத்துவராமையல் ஒடுங்கி இருக்க வேண்டிய காலத்திலே கொக்குப் போல அடங்கி இருத்தல் வேண்டும்', 'தமக்கு முடியாதிருக்கும் காலத்தில் 'ஓடுமீன் ஓட, உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கு இருப்பதுபோல இருக்கவும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வாய்ப்பு ஒடுங்கிய காலத்தில் கொக்கு போல இருக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த இடத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செய்க.
மணக்குடவர் குறிப்புரை: இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்ய வேண்டுமென்பதூஉம் கூறிற்று
பரிப்பெருமாள்: வினை செய்தற்கு சீர்த்த காலம் வந்தவிடத்து கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் செய்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றி இகழ்ந்தார் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமல் விரைந்து செய்யவேண்டுமென்பதூஉம் கூறிற்று.
பரிதியார்: மீன் தனக்கு நேர் பட்டளவில் கொக்குக் குத்தின முறைமைபோலத் தாயமானால் காரியஞ் செயங்கொள்க என்றவாறு.
காலிங்கர்: முடிவதற்கு ஒரு பருவம் வாய்த்த இடத்து மற்று அக்குருகு எறியும் தன்மை போலவும் காலம்கருதி இருக்க வேண்டும் அரசர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க.
(பரிமேலழகர் குறிப்புரை மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும்துணையும் முன்அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லதுபோன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பேவிரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்குஉவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் 'குத்து ஒக்க' என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம் ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியவாறாயிற்று. [கூம்புக-அடங்கியிருக்க]

'காலம் வாய்த்த இடத்து அக்கொக்கு குத்துவதுபோலத் தப்பாமல் விரைந்து செய்க' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறந்த காலத்து அதன் குத்துப் போல்க', 'காலம் வாய்த்தவிடத்து அக்கொக்கு இரையைத் தவறாது குத்திச் செயலை முடிக்குமாறு தவறாது செயலை முடிக்க', 'இடம் செம்மையாக வாய்த்தபோது கொக்கு தப்பாது மீனைக் குத்துவது போலக் காரியத்தை விடாது செய்து முடித்தல் வேண்டும்', 'வெல்வதற்குரியனவெல்லாம் பொருந்தியவிடத்து எதிர் பாரத்த மீன் வந்தபொழுது கொக்கு குத்துதல்போல தப்பாமல் செய்க' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வாய்த்த காலத்து கொக்கு விரைந்து (மீனைக்) குத்துவது போல் செயல்படவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வாய்ப்பு ஒடுங்கிய காலத்தில் கொக்கு ஒக்க இருக்க வேண்டும்; காலம் கூடி வருகின்ற பொழுது அக்கொக்கு மீனை விரைந்து சென்று தப்பாது குத்திக் கொள்வது போல செயலாற்ற வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'கொக்குஒக்க' என்றால் என்ன?

ஓடுமீன் ஓடட்டும்; உறுமீன் வந்தவிடத்து விரைந்து குத்திக் கொண்டு போ.

வாய்ப்பு ஒடுங்கிய காலத்தில் கொக்கைப் போல அமைதியாக இருந்து, காலம் வாய்த்தவிடத்து கொக்கு மீனைக் குத்தினாற் போல விரைந்து செய்து முடிக்க வேண்டும்.
இக்குறள் செயல் முடித்தற்குத் தகுந்த காலத்திற்காக எவ்விதம் காத்திருக்க வேண்டும் என்பதையும் வாய்ப்பு நெருங்கியவுடன் எவ்வாறு விரைந்து செயலாற்ற வேண்டும் என்பதையும் நாம் அடிக்கடி நீர்நிலைகளில் காணும் காட்சியைக் கண்முன் நிறுத்தி மனதில் நன்கு பதியுமாறு காட்சிப்படுத்துகிறது. கொக்கு தன் இரைக்காக நீர்ப்பகுதிகளில் காத்திருக்கும்போது உள் ஒடுங்கி வாய்ப்பான வேளைக்காகப் பொறுமையாகவும் உள்ளே ஆயத்தநிலையுடன் விழிப்புடனும் காத்திருக்கும். அதுபோல் ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு அதற்கு உரிய காலத்திற்காகக் காத்திருக்கும்போது ஒடுங்கி இருக்க வேண்டும், தான் எண்ணிக்கொண்டிருந்த பெரியமீன் தென்பட்டவுடன் கொக்கு சிலிர்த்தெழுந்து அதைச் செங்குத்தாகக் குறி தவறாமல் குத்தி அதைத் தப்பவிடாமல் கவ்விக் கொள்ளும். வாடியிருந்த கொக்கா இவ்வாறு குத்தியது என்று வியக்கும்வண்ணம் ஓடுகிற மீனின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பாய்ந்து கவ்வும். மீன் பிடிபட்டாலும் வழுவிக் கொண்டு ஓடக்கூடிய தன்மை கொண்டது அதைத் தப்பவிடாத அளவு கொக்கு பிடித்துவைத்துப் பறந்து செல்லும். அதுபோல் காலம் கூடியதை அறிந்து கொண்டவுடன், விரைந்து தவறின்றிச் செயல்பட்டு மேற்கொண்ட முயற்சியை முடித்துக் கொள்ள வேண்டும்.
காலம் கனியும் வரைப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்; கனிந்தவுடன் விரைந்து மின்னல் வேகத்தில் செயல்பட்டு செயலாற்ற வேண்டும் என்ற செய்திகள் சொல்லப்படுகின்றன. குறிக்கோளை அடையப் பொறுமையுடன் காத்திருக்கும்போது நம் கவனம் சிதறிவிடக்கூடாது என்ற கருத்தும் பெறப்படுகிறது.

மலர்தலுக்கு எதிர்ச் சொல் கூம்புதல். கூம்பும் பருவத்து என்பதற்கு வாய்ப்புக் குறுகிய காலத்து என்று பொருள்.
காலிங்கர் கொக்கு என்பதற்கு குருகு என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். அது விரைந்து செயல்படுதலை 'அக்குருகு எறியும் தன்மை போல' எனக் குறிக்கிறார்.
இப்பாடலில் கொக்கொக்க குத்தொக்க என ஓசை நயமும் பொருள் நயமும் பொருந்துமாறு நடைப்பாங்கு அமைந்திருப்பது எண்ணியெண்ணி இன்புறுதற்குரியது என்பார் இ சுந்தரமூர்த்தி.

கொக்குஒக்க' என்றால் என்ன?

கொக்குஒக்க என்பதற்கு கொக்கைப் போல என்று பொருள். 'கொக்கொக்க' என்ற உவமை பருவம் அறிதலுக்காகச் சொல்லப் பெற்றது.
கொக்கு, மீன்கள் துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரின் உட்பகுதிகளில் கண்களை ஓட்டி, தான் குறிகொண்ட மீன் கிடைக்கும்வரை அசைவற்று அமைதியாகக் காட்சி அளித்துக் காத்திருக்கும். கொக்கு ஆரவாரமில்லாமல் இருப்பதால் மீன்களுக்கு அது உயிருள்ள பறவை என்று தோன்றாது. இதை இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் என்பார் மணக்குடவர். பரிப்பெருமாள் இன்னும் மேலே போய் இகழ்ச்சியின்றி இகழ்ந்தார் போல இருத்தல் வேண்டும் என்கிறார். 'கொக்கொக்க' என்பது இந்த இருப்பிற்கு உவமானமாகச் சொல்லப்பட்டது.
யாதொரு நோக்கமில்லாதது போல். அசையாமல் கலங்காமல் இருந்த கொக்கு வாய்ப்பான மீன் வந்தவுடன் அதைத் தப்பவிடாமல் குத்திக் கவ்விச் சென்றுவிடுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் அந்த மீன் நீருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. மீன் வருவது, அதைக் கொக்கு குத்தி எடுத்தது எல்லாம், இடைவெளி இன்றி, கண் மூடிக் கண் திறப்பதற்குள் நடந்தேறிவிட்டன. எவ்வளவு கூர்மையான பார்வை. குறிதவறாத திறன், விரைவான குத்துதல், கொக்குக்கு! அதனால்தான் 'கொக்கொக்க' எனச் சொல்லப்பட்டது.

கொக்காக இருந்ததும் குத்தாக விரைந்ததும் இரண்டும் கொக்கின் செயல்கள்தான். 'கொக்கு ஒக்க' என்பது இரண்டுக்கும்தானே இருக்க வேண்டும். ஏன் 'கொக்கு ஒக்க', 'குத்து ஒக்க' என இரண்டாக்கிச் சொல்லப்படுகிறது? இதைப் பரிமேலழகர் 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் 'குத்து ஒக்க' என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும் என்று தெளிவுபடுத்துகிறார்.

வாய்ப்பு ஒடுங்கிய காலத்தில் கொக்கு போல இருக்க வேண்டும்; காலம் கூடி வருகின்ற பொழுது அக்கொக்கு மீனை விரைந்து சென்று தப்பாது குத்திக் கொள்வது போல செயலாற்ற வேண்டும் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

செயலாற்ற வாய்ப்பான காலம் அறிதல் வேண்டும்.

பொழிப்பு

வாய்ப்பு ஒடுங்கிய காலத்தில் கொக்கைப் போல இருக்க; காலம் கூடிவரும் பொழுது அக்கொக்கு மீனைத் தப்பாமல் குத்திக் கொள்வதைப் போல் விரைந்து செயலாற்றுக.

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.                      பண்புடைமை  குறள் 993:
கலைஞர் மு.கருணாநிதி உரை:நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள்
இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர். மு.வரதராசனார் உரை:உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே
கொள்ளத்தக்க ஒப்புமையாகும். சாலமன் பாப்பையா உரை:உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும்
பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும். பரிமேலழகர் உரை:உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு
ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது
செறியத்தக்க பண்பால் ஒத்தல். (வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும்
ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று, வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான்,
அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.) . மணக்குடவர் உரை:செறியத்தகாத உடம்பாலொத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடொப்பாகாமையின் அது பொருந்துவதன்று;
இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பாலொத்தல். Translation: Men are not one because their members seem alike to outward view; Similitude of kindred quality makes likeness true. Explanation: Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.

-- Edited by admin on Friday 15th of November 2019 01:02:25 AM

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.                      சுற்றந்தழால் குறள் 528:

கலைஞர் மு.கருணாநிதி உரை:அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.

மு.வரதராசனார் உரை:அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.

பரிமேலழகர் உரை:பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.

(உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.

Translation: Where king regards not all alike, but each in his degree,

'Neath such discerning rule many dwell happily.

Explanation:Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
 ஒக்க (2)
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
  குத்து ஒக்க சீர்த்த இடத்து - குறள் 49:10

 முதல்

 ஒக்கல் (1)
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
  ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3

 முதல்

 ஒக்கின் (1)
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
  என்ன பயனும் இல - குறள் 110:10

 முதல்

 ஒக்கும் (2)
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
  பலர் காணும் பூ ஒக்கும் என்று - குறள் 112:2

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard