Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பதிற்றுப்பத்து 21, *அடு நெய் ஆவுதி*, பாடியவர்: பாலைக் கெளதமனார்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பதிற்றுப்பத்து 21, *அடு நெய் ஆவுதி*, பாடியவர்: பாலைக் கெளதமனார்
Permalink  
 


பதிற்றுப்பத்து 21, *அடு நெய் ஆவுதி*, பாடியவர்: பாலைக் கெளதமனார்பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டுதூக்கு: செந்தூக்குவண்ணம்: ஒழுகு வண்ணம்

சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக,
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக்,
காலை அன்ன சீர் சால் வாய்மொழி,
உருகெழு மரபின் கடவுள் பேணியர்,  5
கொண்ட தீயின் சுடர் எழுதோறும்
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி,
வருநர் வரையார் வார வேண்டி
விருந்து கண் மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிணக் கொழும் குறை  10
குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்பக்,
கடல் ஒலி கொண்டு, செழு நகர் நடுவண்
அடுமை எழுந்த *அடு நெய் ஆவுதி*,
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு, வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி,  15
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்,
மாரி அம் கள்ளின் போர் வல் யானைப்
போர்ப்புறு முரசம் கறங்க ஆர்ப்புச் சிறந்து,
நன்கலந் தரூஉம் மண்படு மார்ப!
முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்  20
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பிக்,
கல் உயர் கடத்து இடைக் கதிர் மணி பெறூஉம்,
மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை!
பல் பயன் தழீஇய பயங் கெழு நெடுங்கோட்டு,  25
நீர் அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச்,
சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந!
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து  30
நோயின் மாந்தர்க்கு ஊழி ஆக!
மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு,
கார் மலர் கமழும் தாழ் இருங் கூந்தல்
ஒரீஇயின போல விரவு மலர் நின்று,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,  35
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணைத்தோள், இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே.

Pathitruppathu 21, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkelu Kuttuvan, Smoke from Cooking with Ghee

Words, interpretations, astrology, Vedas and a contained
heart that learned, are what holy men honor.  These five
give them principles to live by, without hurting others, and
to be virtuous.

These esteemed sages are noble, truthful and dependable
like the morning sun.  They worship gods and perform rituals
according to their strong traditions.  The bright flames they
light for oblations that yield benefits, are like reflections of
their inner desires.  Beneficial smoke rises from their ritual
fires.

Smoke also rises from the huge palace courtyard where
chopped goat meat with white fat that is sold by goat sellers,
is roasted in ghee with sizzling sounds, roaring endlessly like
the ocean, to feed those who come, so that they do not have
to go elsewhere to eat.

Fragrant smoke from both fires rises to the skies and the gods
in the upper world are happy.

Oh victorious king of a fertile country where beneficial rains
never fail!  Where fine toddy is poured like rainwater!  You
led your troops in battles with trained war elephants, as battle
drums covered with leather resounded and warriors clamored,
staining your chest with enemy soil.  You brought back spoils
of wars and gifted fine ornaments to those around you.

Oh king of Pūliyars!  Oh lord of Seruppu Mountain with the
same name as that which is worn on feet, where cattle herders
wearing jasmine garlands let their cattle herds graze on grass
in the vast land, and pick sparkling gems from the forests with
lofty mountains!  You are a body shield to your warriors wearing
many kinds of garlands!

Oh king of the lofty Ayirai Mountain with the same name as the
fish that does not fear hunting storks that look from afar, with
blocking vertical peaks that yield benefits, and streams running
down its sides!  Your citizens live happily without diseases since
rains fall every year without ceasing.

May you live for thousands of years with your beautiful queen,
her flowing dark hair with natural fragrance without any added
scents, resembling that of rainy season’s jasmine, her pretty
eyes like night-blooming flowers that are removed from ponds,
wide, darting and moist, and her wide arms like bamboo that
grows on splendid stream beds where swaying glory lilies
blossom.

Notes:  கேள்வி (1) – ஒளவை துரைசாமி உரை – வேதம்; வேதம் எழுதப்படாது வழிவழியாகக் கேட்கப்படும் முறைமையுடையதாகலின், கேள்வி எனப்பட்டது.  நெஞ்சம் (1) – பழைய உரை, அருள் அம்பலவாணர் உரை – இந்திரியங்களின் வழியோடாது உள்ளடங்கிய தூய நெஞ்சம், ஒளவை துரைசாமி உரை – ஆகமம்; சொல் முதலிய நான்கையும் முற்றும் கற்றுணர்வதால் உளதாகும் பயன் இறைவன் தாளை வணங்குதவென்பதாலும், அந்நெறிக்கண் நெஞ்சினை நிறுத்திப் பெறுவதற்குரிய ஞானமும் வீடுபேறும் சிறப்புடைய அருநூலாதல் பற்றி ஆகமத்தை நெஞ்சம் என்றார்.

Meanings:  சொல் – books on words, பெயர் – books on interpretations/meanings, நாட்டம் – books on astrology, desire to find out, கேள்வி – Vedas, நெஞ்சம் – a controlled heart, holy books, என்று ஐந்து உடன் போற்றி – thus praise these five, அவை துணை ஆக – with the help of those, எவ்வம் – sorrow, சூழாது – not considering, விளங்கிய கொள்கை – bright principles, great principles, காலை அன்ன சீர் சால் வாய்மொழி – great noble truthful words like the dependable morning sun, உருகெழு மரபின் – with fierce traditions, கடவுள் பேணியர் – to worship god, கொண்ட தீயின் சுடர் எழுதோறும் – whenever ritualistic fires are lit and flames rise up, விரும்பு மெய் பரந்த – desire in the mind spread on the body, பெரும் பெயர் – very famous, very beneficial, ஆவுதி – ritualistic smoke, வருநர் வரையார் வார வேண்டி – for those who come to him to eat without limit, விருந்து கண் மாறாது – those who do not go away to other donors, உணீஇய – eat (சொல்லிசை அளபெடை), பாசவர் – meat sellers, ஊனத்து அழித்த – cut meat, வால் நிணக் கொழும் – white colored fat, குறை – chopped meat, குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப – it is noisy when the meat is roasted (in a hot pot with oil), கடல் ஒலி கொண்டு – like ocean sounds, செழு நகர் நடுவண் – in the middle of the rich mansion, அடுமை – cooking, எழுந்த – rose, அடு நெய் – heated ghee, ஆவுதி – smoke, இரண்டு உடன் கமழும் நாற்றமொடு – with the smells from both smokes (from the palace and from the sages), வானத்து – in the sky, நிலைபெறு கடவுளும் – eternal/stable gods in the upper world, விழைதக – to desire, பேணி – protecting, ஆர் வளம் – very fertile, பழுனிய – abundant, ஐயம் தீர் சிறப்பின் – with splendor without doubt, மாரி அம் கள்ளின் – with fine toddy poured like rain, போர் வல் யானை – elephants trained in fighting battles, போர்ப்பு உறு முரசம் கறங்க – battle drums covered with leather roar, ஆர்ப்புச் சிறந்து – with loud noises, நன்கலம் தரூஉம் – give fine ornaments (தரூஉம் – இன்னிசை அளபெடை), மண்படு மார்ப – oh lord with a chest that has touched the sand, முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் – herdsmen with many cows wearing jasmine flower strands, புல் உடை வியன் புலம் – wide lands with grass, பல் ஆ பரப்பி – cattle herds are spread, கல் உயர் கடத்து இடை – in the forests where the mountains are lofty, கதிர் மணி பெறூஉம் – they obtain sparkling gems (பெறூஉம் – இன்னிசை அளபெடை), மிதி அல் செருப்பின் – with not the walking slippers but with  the Seruppu Mountain, பூழியர் கோவே – oh king of Pūliyars, குவியல் கண்ணி – wearing heaps of garlands, மழவர் மெய்ம்மறை – body shield to warriors, பல் பயன் – many benefits, தழீஇய – surrounded, embraced (சொல்லிசை அளபெடை), பயம் கெழு – with benefits, நெடுங்கோட்டு – tall peaks, நீர் அறல் மருங்கு – water flowing side, வழிப்படா – not going up, பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு – stork with a the ability to look from afar desiring to hunt for fish, அஞ்சா – does not fear, சீர் உடைத் தேஎத்த – in a famous country (தேஎத்த – இன்னிசை அளபெடை), முனை கெட – ruining enemies in wars, விலங்கிய – blocking, நேர் – perfect, straight, உயர் – lofty, நெடுவரை – tall peaks, அயிரைப் பொருந – oh king who owns Ayirai mountains, யாண்டு பிழைப்பறியாது பய மழை சுரந்து – since the beneficial rains fell every year without stopping, நோயின் மாந்தர்க்கு ஊழி ஆக – people lived without diseases for a long time, மண்ணா வாயின் – even without adornment, even without fragrant oils, மணம் கமழ் கொண்டு – with fragrance spreading, கார் மலர் கமழும் – rainy season flowers aroma, தாழ் இருங் கூந்தல் – hanging dark hair, ஒரீஇயின போல – like removed from the hair (ஒரீஇயின – சொல்லிசை அளபெடை), இரவு மலர் நின்று – flowers that bloom at night, திருமுகத்து – on her beautiful face, அலமரும் பெருமதர் மழைக்கண் – moving big beautiful moist eyes, அலங்கிய காந்தள் – moving glory lilies, இலங்கு நீர் அழுவத்து – on the splendid stream shores, வேய் உறழ் பணைத்தோள் – bamboo like wide arms, இவளோடு – with her, ஆயிர வெள்ளம் வாழிய பலவே – may you live for many thousand years (பலவே – ஏகாரம் அசை நிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: பதிற்றுப்பத்து 21, *அடு நெய் ஆவுதி*, பாடியவர்: பாலைக் கெளதமனார்
Permalink  
 


பாலைக்கௌதமனார்

# 21 பாட்டு 21
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக,
எவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன்,
ஞாயிற்றைப் போன்ற சிறப்புப் பொருந்திய, வாய்மை உரையால்,
அச்சம் பொருந்திய முறைமையினையுடைய கடவுளைப் போற்றுவதற்காக
மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடர் மேலெழும்போதெல்லாம்,
உள்ளத்து விருப்பம் உடலிலும் பரவும் பெரும் புகழ் கொண்ட ஆவுதிப்புகையும்;
பரிசில் பெற வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்,
விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர்
இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை
தாளிக்கும்போதெல்லாம் இடைவிடாமல் ஒலிக்க -
கடல் ஒலியைப் போல, செழுமையான இல்லங்களின் மதில்களின்
நடுவில் எழுந்த சமைக்கும் நெய்யால் எழுந்த ஆவுதிப்புகையும்;
இரண்டும் சேர்ந்து கமழும் மணத்தோடு, வானுலகத்தில்
நிலைபெற்ற கடவுளும் விரும்புமாறு வழிபட்டு,
குறையாத வளம் நிறைந்த, குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய -
மழையாய்ச் சொரியும் கள்ளினையுடைய - போரில் வல்ல யானையின் மேலிருக்கும்
தோலினால் போர்த்தப்பட்ட போர்முரசம் முழங்க, ஆரவாரம் மிகுந்து
பகைவர் திறையாகத் தரும் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவருகின்ற - சாந்து அணிந்த மார்பினனே!
முல்லைப்பூவால் கட்டப்பட்ட தலைமாலையையுடைய பல பசுக்களையுடைய கோவலர்
புல் நிறைய உடைய அகன்ற வெளியில் அந்தப் பசுக்களை மேயவிட்டு,
கற்கள் உயர்ந்த காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!
குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!
பலவகைப் பயன்களைத் தரும் காடுகளைக் கொண்ட, தானும் பயன்களை அளிக்கும் நெடிய உச்சியையுடைய,
நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,
புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
ஆண்டுதோறும் பொய்க்காமல் பயனைத் தரும் மழை நிறையப்பெய்து,
நோய் இல்லாமல், மக்களுக்கு, நல்ல காலமாகக் கழிய,
நறுநெய் பூசப்படாவிட்டாலும் கமழ்கின்ற மணத்தைக் கொண்டு,
கார்காலத்து மலரின் மணம் கமழும் தாழ இறங்கிய கரிய கூந்தலையும்,
குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,
அசைகின்ற காந்தள் ஒளிவிடும் நீர்ப்பரப்பின் கரையில் நிற்கும்
மூங்கிலைப் போன்ற பெரிய தோள்களையும் உடைய இவளோடு
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்க!

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard