Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியம்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
சங்க இலக்கியம்
Permalink  
 


சங்க இலக்கியம்    

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.     16.11.2019
 
 
Jump to navigationJump to search
சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-கணியன் பூங்குன்றனார்
(புறநானூறு - 192)

சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல்போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளைஉ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்கள்[தொகு]

நூல்காலம்இயற்றியவர்
 
எட்டுத்தொகை நூல்கள்
   
நற்றிணை  
குறுந்தொகை  
ஐங்குறுநூறு கபிலர்
பதிற்றுப்பத்து  
பரிபாடல்  
கலித்தொகை நல்லந்துவனார் முதலிய பலர்
அகநானூறு பலர்
புறநானூறு பலர்

பத்துப்பாட்டு நூல்கள்[தொகு]

பத்துப்பாட்டு நூல்கள்
   
திருமுருகாற்றுப்படைஎட்டாம் நூ.ஆ.நக்கீரர்
பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை4 - 6ஆம் நூ.ஆ.நற்றாத்தனார்
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை2 - 4ஆம் நூ.ஆ.நக்கீரர்
குறிஞ்சிப் பாட்டு கபிலர்
முல்லைப்பாட்டு நப்பூதனார்
மதுரைக் காஞ்சிஇரண்டாவுது,நான்காவது நூ.ஆ.மாங்குடி மருதனார்
பட்டினப் பாலைமூன்றாம் நூ.ஆ. 
மலைபடுகடாம்இரண்டாவது,நான்காவது நூ.ஆ.பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்[தொகு]

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
   
திருக்குறள் திருவள்ளுவர்
நான்மணிக்கடிகைஆறாம் நூ.ஆ.விளம்பி நாகனார்
இன்னா நாற்பது5ஆம் நூ.ஆ.கபிலதேவர்
இனியவை நாற்பதுஐந்தாம் நூ.ஆ.பூதஞ்சேந்தனார்
களவழி நாற்பதுஐந்தாம் நூ.ஆ.பொய்கையார்
திரிகடுகம்நான்கவது நூ.ஆ.நல்லாதனார்
ஆசாரக்கோவை7ஆம் நூ.ஆ.பெருவாயின் முள்ளியார்
பழமொழி நானூறு6ஆம் நூ.ஆ.மூன்றுரை அரையனார்
சிறுபஞ்சமூலம்6ஆம் நூ.ஆ.காரியாசான்
முதுமொழிக்காஞ்சி4ஆம் நூ.ஆ.கூடலூர் கிழார்
ஏலாதி6ஆம் நூ.ஆ.கணிமேதாவியார்
கார் நாற்பது6ஆம் நூ.ஆ.கண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது6ஆம் நூ.ஆ.மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது6ஆம் நூ.ஆ.கண்ணன் பூதனார்
ஐந்திணை எழுபது6ஆம் நூ.ஆ.மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது6ஆம் நூ.ஆ.கணிமேதாவியார்
கைந்நிலை6ஆம் நூ.ஆ.புல்லங்காடனார்
நாலடியார்7ஆம் நூ.ஆ.சமணமுனிவர்கள் பலர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்[தொகு]



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

தமிழ் இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகைபத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி
நெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலைமலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்நான்மணிக்கடிகை
இன்னா நாற்பதுஇனியவை நாற்பது
களவழி நாற்பதுகார் நாற்பது
ஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்திரிகடுகம்
ஆசாரக்கோவைபழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சி
ஏலாதிகைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம்சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள்சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள்சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள்சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள்சங்ககால மலர்கள்

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பாகுறள்புதுக்கவிதைகட்டுரைபழமொழிதொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.

வரலாறு[தொகு]

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.

  • பழங்காலம்
  • இடைக்காலம்
  • இக்காலம்
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு
  • இருபதாம் நூற்றாண்டு
  • இருபத்தோராம் நூற்றாண்டு

முதற்சங்கம், இடைச்சங்கம்[தொகு]

தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச் சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களில் கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாகக் கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ உறுதியான ஆதாரங்கள் இல்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 

சங்க இலக்கியம்[தொகு]

தமிழர்
Tamil distribution.png

முதன்மைக் கட்டுரை: சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் பொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்ச் சங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத் தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன.

பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகைபத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.

சங்கம் மருவிய காலம் / நீதி நூற்காலம்[தொகு]

சங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. எனவே இக்காலம் நீதிநூற்காலம் எனப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதி, பெரும்பாலும் சமயச் சார்பற்றவையாகக் கருதப்படுகிறது.[1] நாலடியார் முதற்கொண்டு இந்நிலை / கைநிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம்.

சிலப்பதிகாரம்மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான்.

== பக்தி இலக்கிய காலம் ==

மத்திய காலம்[தொகு]

தற்கால இலக்கியம்[தொகு]

18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடிதிருவாவடுதுறைதிருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலகட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:

  • சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
  • உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)
  • புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)
  • மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)

அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர்,ஆறுமுக நாவலர்சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 Eighteen Greater Texts

From Wikipedia, the free encyclopedia
 
 
Jump to navigationJump to search
Topics in Sangam literature
Sangam literature
AkattiyamTholkāppiyam
Eighteen Greater Texts
Eight Anthologies
AiṅkurunūṟuAkanāṉūṟu
PuṟanāṉūṟuKalittokai
KuṟuntokaiNatṟiṇai
ParipāṭalPatiṟṟuppattu
Ten Idylls
TirumurukāṟṟuppaṭaiKuṟiñcippāṭṭu
MalaipaṭukaṭāmMaturaikkāñci
MullaippāṭṭuNeṭunalvāṭai
PaṭṭiṉappālaiPerumpāṇāṟṟuppaṭai
PoruṇarāṟṟuppaṭaiCiṟupāṇāṟṟuppaṭai
Related topics
SangamSangam landscape
Tamil history from Sangam literatureAncient Tamil music
Eighteen Lesser Texts
NālaṭiyārNāṉmaṇikkaṭikai
Iṉṉā NāṟpatuIṉiyavai Nāṟpatu
Kār NāṟpatuKaḷavaḻi Nāṟpatu
Aintiṇai AimpatuTiṉaimoḻi Aimpatu
Aintinai EḻupatuTiṉaimalai Nūṟṟu Aimpatu
TirukkuṛaḷTirikaṭukam
ĀcārakkōvaiPaḻamoḻi Nāṉūṟu
CiṟupañcamūlamMutumoḻikkānci
ElātiKainnilai
edit

The Eighteen Greater Texts, known as Patiṉeṇmēlkaṇakku (Tamilபதினெண்மேல்கணக்கு) in the literature, is the collection of the oldest surviving Tamil poetry. This collection is considered part of the Sangam Literature and dated approximately between 100 BCE and 200 CE. A series of eighteen major anthologies, it contains the Eight Anthologies (Ettuthokai) and the Ten Idylls (Pattupattu). The songs in the Eighteen Greater Texts anthology are set in the Akaval style.

The Eighteen Greater Texts anthology contains 2,381 poems including the ten larger works belonging to the Ten Idylls collection. These poems are attributed to 473 poets. Sixteen of the 473 poets are responsible for 1,177 of the 2,279 poems for which the name of the author is known. In all, 102 of the poems are anonymous. Notably, the pathirruppathu collection exclusively collects poetry from the Cheral kings (from Kerala), whereas the other collections contain a mix of poetry patronized by diverse Tamil kings.

Anthology[edit]

There is no information available on when these poems were collected or on the identity of the anthologist. These poems have passed through four stages of evolution. The poems were created by the bardic authors between 100 BCE and 200 CE. The poems were collected into the various anthologies. colophons

See also[edit]

References[edit]

  • Zvelebil, K. V. Abschnitt. Tamil literature (1975) Brill Academic Publishers ISBN 90-04-04190-7


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard