தமிழ் வேதமுடைத்து: மந்திரம் உடைத்து என்று: கண்டோம். இங்ங்ணம் தமிழ் மந்திரங்களை உடையதாய் இருந்ததனுல்தான் வழிபாடுகள் (அதாவது அர்ச்சனை) தமிழ் மொழியிலும் நடந்துள்ளன. இதனைத் திருஞானசம்பந்தர் தெள்ளத் தெளிய, “தம்மலர் அடி ஒன்றடியவர் பரவத் தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழல் சேர, அம்மலர்க் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே' என்று அருளிச் செய்துள்ளார். இங்குத் தமிழ்ச்சொலும் வட சொலும்தாள் நிழல்சேர” என்பது தமிழாலும் வடமொழி யாலும் மந்திரங்களைச் சொல்லி மலரைத் திருவடிகளில் சூட்டிய குறிப்பை உணர்த்துவதாகும். இதனுல்தான் அப்பரும் இறைவரை "ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்' என்று போற்றித் துதித்தனர்.
தமிழ் மொழியின் அர்ச்சனேயே இறைவனுக்கும் பிடித்தம் என்பதைச் சுந்தரர் வாழ்க்கை வாலாற்றில் இறைவர் உணர்த்துவார் ஆயினர். இவ்வுண்மையினைச் சேக்கிழார்,
மற்றும் வன்மைபேசி வன்தொண்டன் என்னும் காமம்
பெற்றன. நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பில்மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மை
சொற்றமிழ் பாடுகென்ருர் தூமறை பாடும் வாயார்.
என்று அறிவித்துள்ளனர்.
வடமொழியில் 'ஏகதந்தாயநம என்பதை ஒற்றைக் கொம்பனே போற்றி என்று கூறினும் விநாயகப் பெருமான் ஏற்பான் அல்லனே? திருநாவுக்கரசரது போற்றித் திருத்தாண் டகங்களும் மணிமொழியாரது போற்றித் திரு அகவலும் தமிழால் அர்ச்சனை நடத்தலாம் என்பதையே உணர்த்துவன வாகும்.