Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்
Permalink  
 


மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134)

பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.
(மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)

வ சுப மாணிக்கம் உரை: கற்பவன் மறந்தாலும் படித்துக் கொள்ளலாம்; மானிட ஒழுக்கம் குறைந்தாலோ கெடுவான்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.

பதவுரை: மறப்பினும்-மறந்து விட்டாலும்; ஓத்து-ஓதுதல், கற்றல், வாசித்தல்; சொல்லுதல், வேதம்; கொளல்ஆகும்-பெற்றுக் கொள்ள முடியும்; பார்ப்பான்-நூல் ஆய்வான்; பிறப்பு-மனிதப்பிறவி, மனித வாழ்க்கை; ஒழுக்கம்-நன்னடத்தை; குன்ற-தவற; கெடும்-அழியும்.


மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்:
பரிதி: வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம்; [சந்தம்-சந்தஸ் என்னும் வேதஇசை]
காலிங்கர்: தனது குலமரபுக்கு முதற்காரணமாகிய தான் ஓதிய வேதத்தை மறந்தானாயினும் பின்னும் அஃது ஓதிக்கொளலாயிருக்கும்;
பரிமேலழகர்: கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம்;
பரிமேலழகர் குறிப்புரை: மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார்.

'வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பார்ப்பான் மறந்தாலும் வேதத்தை மீண்டும் ஓதிப் பெறலாம்', 'நூலாய்பவன் தான் கற்ற கல்வியை மறந்து போனாலும் திரும்பவும் கற்றுக் கொள்ளலாம்', 'நூல்கற்பான் கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும். (அதனால் இழுக்கொன்றும் இல்லை.)', 'நூலை ஆராய்கின்றவன் தாம் கற்ற நூலை மறந்தாலும் மீண்டும் கற்றுக் கொள்ளலாம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும் என்பது இப்பகுதியின் பொருள்.

பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
பரிதி: ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அனுபவிக்க வேண்டும் என்றவாறு. [பிராயச்சித்தம் - பாவக்கழிவு; தோஷம் - குறை அல்லது பாவம்]
காலிங்கர்: மற்று அந்தணனது குலப்பண்பு தனது ஆசாரம் குறைபடவே கெடும் என்றவாறு.
பரிமேலழகர்: அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.
பரிமேலழகர்: சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.

'பிராமணன் ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்' என்று மணக்குடவரும் 'ஒழுக்கம் கெட்டால் பாவக்கழிவு இல்லை' என்று பரிதியும் 'அந்தணது குலப்பண்பு ஒழுக்கம் குறைவுபடவே கெடும்' என்று காலிங்கரும் 'ஒழுக்கம் குன்ற அந்தணது வருணம் கெடும்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் அவன் குடிப்பிறப்பு ஒழுக்கம் குறையக் கெட்டுவிடும்', 'ஆனால் ஒழுக்கம் குறைதலால், சிறந்த அவன் குடிப்பிறப்பு அழிந்து போகும்', 'அவன் ஒழுக்கத்திற் குறைவுபட்டானாயின் அவனது குடியின் சிறப்பு அழிந்து படும்', 'ஆனால் மக்கட் பிறப்புக்குரிய நல்லொழுக்கம் நீங்குமேல் அவன் அழிவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒழுக்கம் தவறினால் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும் என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்ட பார்ப்பான் யார்?

மறந்தும் ஒழுக்கம் தவறக்கூடாது. ஒழுக்கம் குன்றினால் மனித வாழ்வே சீர்மை கெட்டுப்போய்விடும்.

தான் கற்ற நூலை மறந்தாலும் நூல்ஆராய்கின்றவன் மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நல்லொழுக்கம் நீங்குமேல் அவன் பிறவியே பொருளற்றதாகிவிடுகிறது.
ஓத்து என்ற சொல் ஆரியர்களின் வேதத்தைக் குறிப்பது என்று பல உரையாளர்கள் கூறினர். தொன்றுதொட்டு ஒருவர்க்கு ஒருவரால் ஓதப்பட்டு வருவதாலும் ஓதி ஓதி உணரும் காரணத்தாலும் வேதத்திற்கு ஒத்து என்னும் பெயர் வழங்கப்படுகின்றது என்பர். பார்ப்பான் என்ற ஒருவகை இனத்தார்க்கு வேதம் ஓதுதல் மிக இன்றியமையாதது; வேதம் ஓதுதலை தமக்கே உரியதென்று அவர்கள் சொல்வர். அது அவர்களுக்கு என்று அவர்களாகவே விதித்துக்கொண்ட அறுவகை தொழில்களில் முதன்மையான ஒன்று (மற்றவை ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன). அதனால்தான் அவர்கள் வேதியர், மறையவர் எனப் பெயர் கொண்டனர்.
வேதம் ஓதுவதைக் கைவிட்ட பார்ப்பனர்களைச் சிலப்பதிகாரக் காட்சி ஒன்று காட்டுகிறது. கண்ணகியும் கோவலனும் மதுரையை நோக்கிச் செல்லும்போது, மறைநூல்களை ஓதுவதைக் கைவிட்டு வரிப்பாடல்களைப் பாடுவதை மேற்கொண்ட அந்தணர் வாழும் ஊர் ஒன்றைக் கண்டனர் எனக் கூறப்படுகிறது.
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து
 (சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதை 38-39: பொருள்: வரிப் பாட்டைப் பயிலும் கொள்கையோடு பொருந்தி வேதநூற் கொள்கையினின்றும் வழுவுதலையுடைய முப்புரிநூல் அணிந்த மார்பினையுடை யோர் வதியும் பதியைச் சேர்ந்து (வரி - காமம் கண்ணிய இசைப் பாட்டு)). அக்கால மக்கள் வரிப்பாடல்களையே பெரிதும் விரும்பியதனால் பொருள் வருவாய் கருதி அவற்றைப் பாடினர் போலும் (காமாட்சி சீனிவாசன்).
பார்ப்பானை எடுத்துக்காட்டாக்கி 'பார்ப்பனர் ஒருவர் தாம் கற்றுக்கொண்ட கல்வியை மறந்தாலும் அதை அவர் மீண்டும் கற்றுக்கொண்டுவிடலாம் ஆனால் அவருக்கென்று விதிக்கப்பட்ட ஒழுக்கநெறிகளை மறந்தால், அவருடைய நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்குப்போவர்' என்ற கருத்தை சொல்கிறது என்று ஒருசாரார் இக்குறட்பொருளை விளக்குவர். இன்னும் சிலர் பார்ப்பனராவார் வேதம் ஓதுதல், ஓதுவித்தல் என்ற தொழிலையே மேற்கொள்ள வேண்டும். பார்ப்பனக்குரிய பிறப்பொழுக்கம் குன்றியவர்களை பார்ப்பனர் என்று மதிக்கக் கூடாது. பார்ப்பனக்குரியன அல்லாத மற்றத் தொழில்கள் செய்வாராயின் அந்தந்த இனத்திலேயே அவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதாகக் கூறுவர்.

மற்றொரு சாரார், இங்கு சொல்லப்பட்ட ஓத்து என்ற சொல் வேதத்தைக் குறிக்காது என்றும் அச்சொல்லுக்கு கற்று என்ற நேர்பொருளே கொள்ளவேண்டும் என்பர். 'ஓத்து மறப்பினும்' என்பதற்கு படித்ததை யெல்லாம் மறந்து போனாலும் என்றும். தினந்தினம் தவறாமல் ஓதவேண்டிய நேரங்களில் ஓத மறந்து விட்டாலும் என்றும் இவர்கள் பொருளுரைப்பர்.
பார்ப்பான் என்ற சொல்லுக்கு நூலை ஆராய்பவன் என்றும் ஒரு பொருள் உண்டு. அப்பொருளிலேயே அச்சொல் இப்பாடலில் ஆளப்பட்டது என்பவர்கள் ஓத்து என்பதற்கு கற்று என்றும் பார்ப்பான் என்பதற்கு நூலை ஆராய்பவன் என்று பொருள் கொண்டு நூலை ஆராய்ந்து பார்ப்பான் மறப்பினும் மீட்டும் கற்றுக் கொள்ளலாம்; ஆனால் 'பார்ப்பானது பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும்' என விளக்கம் செய்வர். ஒழுக்கம் குன்றின் அவனது பிறப்பு -மனிதப் பிறப்பே கெடும் அதாவது வாழ்க்கையே கெடும் என்று இவர்கள் பொருள் உரைப்பர்.
இரா சாரங்கபாணி "வள்ளுவனார் பார்ப்பான் வேதம் ஓதுதலை மறக்கலாகாது என்னும் கருத்துக்குச் சிறப்பளிக்கவில்லை. அதனை மறந்தாலும் மீண்டும் கற்கலாம்; ஆனால் அதனினும் ஒழுக்கமே சிறப்புடையது; அது கெட்டால் மக்கட்பிறப்பே கெடும் என ஒழுக்கத்தின் விழுப்பத்தை இக்குறளில் வலியுறுத்திக் காட்டுவர். வேதம் ஓதுதலினும் ஒழுக்க நெறி நிற்றல் விழுமிது என்பதனை வலியுறுத்துதலால் ஒருவகை இனத்தாரின் கொள்கையை மறுத்துத் தமிழர்க்குரிய ஒழுக்க நெறியை நாட்டியது தெரிகிறது. ‘நல்லா றெரினும் கொளல் தீது’ என்ற குறளும் ஆரியக் கொள்கையைக் குறிப்பான் மறுத்தல் காணலாம். ஒவ்வாத பிறர்தம் கொள்கைகளை மறுத்தல் வள்ளுவர் இயல்பு என்பதனை ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ (280) என்னும் குறளானும் அறியலாம். ‘பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்பதற்குப் பார்ப்பானது பிறப்புக்குரிய ஒழுக்கம் என வருணாசிரம தன்ம முறையில் பொருள் கொள்ளாமல் பார்ப்பான் பிறப்பு மக்கட்குரிய ஒழுக்கம் குன்றக் கெடும் எனக் கொள்வதே குறள் நெறிக்கு இயல்பாகும்" என்று இக்குறள் பற்றிக் கருத்துரைப்பார். இவ்விளக்கம் சிறப்பாக உள்ளது.

மணக்குடவர் தனது சிறப்புரையில் 'இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று' என்கிறார். இதன் பொருள் 'ஓதிக் கற்கின்ற கல்வியைக் காட்டிலும், ஒழுக்கமே சாலச் சிறந்தது' என்பது. இதுவே இக்குறள் கூறும் செய்தி. ஓதியதை யாரும் மறக்கவே கூடாது; மறந்தால் அதுவும் ஓர் ஒழுக்கக் குறைவாம் என்பதையும் இப்பாடல் உணர்த்துவதாக உள்ளது.

இங்கு சொல்லப்பட்டுள்ள பார்ப்பான் யார்?

வள்ளுவர் இந்த ஒரு குறளில் மட்டும்தான் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
நச்சினார்க்கினியர் கலித்தொகை உரையில் 'வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார்' என்று சொல்விளக்கம் கூறுகிறார்.
'பார்ப்பார் என்பது ஆரியப்பார்ப்பனரையும் குறித்தல் இயல்பானது' என்பார் இரா சாரங்கபாணி.
'பார்ப்பான்: பார்த்தான், பார்க்கிறான், பார்ப்பான் எனப் பார்த்தல் தொழிலின், கால அடைவு வழி வந்த சொல்லே பார்ப்பான் என்னும் சொல். அது இந்நாள் கூறுவதுபோல் ஒரு குலப்பெயரன்று; நூல் கற்பார்க்கு வாய்ந்த பெயர் 'ஓதுவார்' என்பது போலப் பொதுமை சுட்டும் பெயரே; 'பொச்சாப்புப் பார்ப்பார் (285) என்பதில் வந்துள்ள 'பார்ப்பார்' என்ன பொருளைத் தருமோ, அதே பொருளையே 'பார்ப்பான்' என்பதும் (134) தரும். நூல் (பொத்தகம்) படிப்பவன், கணியம் பார்ப்பவன், ஏடு பார்ப்பவன், தொடுகுறி பார்ப்பவன் என்பன போல ஆசிரியத் தொழில் பார்ப்பவனைக் குறித்தது' என்பது இளங்குமரன் தரும் விளக்கம்.
ரா பி சேதுப்பிள்ளை 'இக்குறளில் அமைந்திருக்கின்ற பார்ப்பான் என்னும் சொல்லிற்கு வேதியன் என்று உரையாசிரியர் பொருள் கொண்டுள்ளளர். ஆனால் வள்ளுவர் காலத்தில் அந்தணன், பார்ப்பான் என்ற சொற்களெல்லாம், சாதிப் பெயரை உணர்த்தாமல், காரணப் பெயர்களாகவே விளங்கின என்பது மொழிநூல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அழகிய செந்தண்மை பூண்டு ஒழுகிய அறவோன் அந்தணன் என்று அழைக்கப்பட்டாற்போல, நூல்களைப் பார்த்து பரிசீலனை செய்பவர் 'பார்ப்பார்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இவ்விரு சொற்களும் ஒரு சாதியைக் குறிக்கும் பெயர்களாய் அமைந்தன. இவ்வுண்மையை மனத்தில் கொண்டு மேற்கூறிய குறளின் பொருளை ஆராய்தல் இன்றியமையாததாகும்' எனக் குறித்துள்ளார்.
'பார்ப்பான்' என்ற சொல்லுக்குக் கற்பவன் என்று வ சுப மாணிக்கமும், நூல்கற்பான் என்று கா சுப்பிரமணியம் பிள்ளையும் நூலை ஆராய்கின்றவன் என்று சி இலக்குவனாரும் நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் என்று குழந்தையும் தலைமை வேளாண் மரபுவழி நின்று தமிழ் மந்திரம் ஓதுபவர் எனக் கா அப்பாத்துரையும் பொருள் உரைத்தனர்.
ஆரிய பிராமணர் தம்மைப் பார்ப்பான் என அழைக்கப்படுவதை விரும்புவதில்லை; அதை இழிவு என வெறுக்கின்றனர் என்ற பார்வையும் உள்ளது.

இங்குள்ள 'பார்ப்பான்' என்ற சொல்லுக்கு நூலை ஆராய்கின்றவன் என்பது பொருள்.

கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் கற்பவன் வாழ்வு கெட்டுவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கற்றலினும் ஒழுக்கமுடைமை மேம்பாடானது.

பொழிப்பு

கற்றதை மறந்தாலும் மீண்டும் படித்துக் கொள்ளலாம்; பார்ப்பான் ஒழுக்கம் தவறினால் பிறப்பு கெட்டுவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

4. திருவேரகம் (சுவாமிமலை) 
இரு பிறப்பாளர்

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி
அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை . . .180
மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல (177 – 182)

4. Thiru Ērakam (Swamimalai)

 

The Twice Born

The twice-born, who perform the six duties

without fail, respected, born to ancient, traditional

families on both sides, who spend forty eight years of

their young age on the righteous path with

principles of uttering truths, who tend three

sacred fires which is their wealth, chant.

 

Meanings:    இரு மூன்று எய்திய – perform the 6 duties, இயல்பினின் வழாஅது – not faulting, இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி – born to ancient traditional families on both sides and respected, அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு ஆறினில் கழிப்பிய – spend 48 years and their youth on the path, அறன் நவில் கொள்கை – principle of uttering virtue/truth, மூன்று வகைக் குறித்த – three kinds indicated, முத்தீச் செல்வத்து – wealth is tending three fires, இரு பிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – the twice-born know the time and chant

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரை உறு நறுமலர் ஏற்றி பெரிது உவந்து

ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று (183 – 189)

They wear three strands with three fine threads

in each and wet clothing that dry when

worn.  They worship holding their palms above,

praising him, uttering the six-syllabled secret

name, and scatter fragrant flowers happily to the

one who resides in Ērakam.  He is not just there.

Meanings:  ஒன்பது கொண்ட – having nine, மூன்று புரி நுண் ஞாண் – three strands with three fine threads twisted together, புலராக் காழகம் – not dried clothing,  புலர உடீஇ – wear it to dry, உச்சிக் கூப்பிய கையினர் – those worshipping with their hands above,  தற்புகழ்ந்து – praising him, ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி – Vedic rituals with six letters, நா இயல் மருங்கில் நவிலப் பாடி – sing with their tongues learning well, விரைஉறு நறுமலர் ஏற்றி – throw many kinds of fragrant flowers, பெரிது உவந்து – greatly happy, ஏரகத்து உறைதலும் உரியன் – the one who resides in Ērakam, அதாஅன்று – not only there



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

குறள் 395:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

மு.வரதராசனார் உரை:செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

 

பரிமேலழகர் உரை:உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான் , செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.(உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்.இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:செல்வர்கள் முன்னே வறியவர்கள் நிற்றல் போல, தம்முடைய ஆசிரியர் முன்னே நின்று கல்வி கற்றவர்களே உயர்ந்தோராவர். அவ்வாறு கற்பதற்கு நாணமுற்றுக் கல்லாதவர்கள் இழிந்தோரேயாவார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 பதிற்றுப்பத்து PatitrupPattu 21

குட்டிவனின் நல்லாட்சியை விளக்கிக் காட்டி, புலவர், குட்டுவனை வாழ்த்துகிறார்.

1

சொல் தவறாமை, நற்பெயருக்குக் கேடு வராமல் நடந்துகொள்ளல், இளகிய கண்ணோட்டம், பிறர் சொல்வதைக் கேட்கும் பண்பு, வழங்கும் நெஞ்சம் – ஆகிய 5 பண்புகளைத் துணையாகக் கொண்டு குட்டுவன் நாடாண்டுவந்தான். அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் பொழுது முளைக்கும் காலைநேரம் போன்று எழுச்சி பெறச் செய்தது.

2

கடவுள் என்னும் சொல் நம் ஆற்றலைக் கடந்து நிற்கும் தெய்வங்களையும், முனிவர்களையும் குறிக்கும். கடவுள் அச்சம் தரும் பொருள். கடவுளைப் பேணுவதற்காக, குட்டுவன் தீ மூட்டும் வேள்வி (யாகம்) செய்தான். அதற்குப் பெரும்பெயர் ஆவுதி என்று பெயர்

3

அவனது அரண்மனைக்கு நடுவில் விருந்துணவு சமைக்கப்பட்டது. நெய் ஊற்றிச் சமைக்கப்பட்டது. அதனால் அதற்கு அடுநெய் ஆவுதி என்று பெயராயிற்று. கறி வெட்டும் பாசவர் ஊன்கறியை வெட்டிக் கொழுப்பை எடுத்தெறிந்துவிட்டுத் தந்தனர். அது நெய்யில் போட்டுக் ‘குய்’ என்னும் ஓசையுடன் பொறிக்கப்பட்டது. அதனை உண்ட மக்களின் ஆரவாரம் கடல் ஒலி போல் இருந்தது. விருந்து வேண்டியவர் வேண்டாதவர் என்னும் கண்ணோட்டம் இல்லாமல் படைக்கப்பட்டது. வருபவர்களும் வரையறை இல்லாமல் எல்லாரும் வந்தனர். இப்படி வரவேண்டும் என்பதற்காகவே குட்டுவன் அடுநெய் ஆவுதி செய்தான்.

4

பெரும்பெயர் ஆவுதி, அடுநெய் ஆவுதி இரண்டும் மணம் கமழ, வானத்தில் நிலைபெற்றிருக்கும் கடவுளரும் அதனை விரும்ப, குட்டுவன் படையல் செய்து பேணினான். பின் மழை போல் கள்ளும் படைக்கப்பட்டது. நிறைந்த வளம் மிக்கதும், தீதோ என்று ஐயம் தோன்றாததுமான கள் அது. பின்னர் போர்த்தி வைக்கப்பட்டிருந்த முரசு திறந்து முழக்கப்பட்டது. அந்த முழக்கத்துடன் நல்ல அணிகலன்களைக் கொடையாக வந்தவர்களுக்கு வழங்கினான். அப்போது அவன் தன் மார்பில் சந்தனக் குழம்பு-மண் பூசப்பட்டிருந்தது.    

5

இவன் செருப்பு-மலைப் பகுதி மக்கள் பூழியர்களின் அரசனாகவும் விளங்கினான். பூழியர் முல்லைப் பூவைக் குடிப்பூவாகக் கொண்டு சூடிக்கொள்ளும் குடிமக்கள். ஆடுமாடு மேய்ப்பவர்கள். ஆடுமாடுகளை மேய்ச்சல் தரையில் விட்டுவிட்டுக் கற்கள் மண்டிக்கிடக்கும் வழியில் ஒளி மிக்க மணிக்கற்களைப் பொறுக்கி எடுத்துவருவர்.

6

குவியல் என்னும் பூவைக் குடிப்பூவாகக் கொண்ட மக்கள் மழவர் குடியினர். குட்டுவன் இவர்களுக்குப் பாதுகாவலனாக அரசோச்சிவந்தான். 

7

குட்டுவன் பரிவேள்வி (பரிவேட்ப்பு, அஸ்வமேத யாகம்) செய்தான். அப்போது வலம்வந்த குதிரையை (பார்வல் கொக்கு) அயிரை மலை (ஐயப்பன் மலை) அரசன் அஞ்சாமல் கட்டி வைத்தான். அவனைப் போர்முனையில் தாக்கிக் குட்டுவன் வென்றான். அயிரை மலை பல்வகைப் பயன்களைத் தரும் மலை. உயர்ந்த மலை. நீரோடும் அருவி கொண்டது (பம்பை-ஆறு). பாகுடி அதன் தலைநகர். வென்ற பின்னர் குட்டுவன் அயிரை மலைத் தெய்வத்தை வழிபட்டான்.

 

சங்ககால அயிரை மலை

இக்காலத்து ஐயப்பன் மலை

படம் விளம்பரப் பலகை

 

8

இவன் நாட்டில் ஆண்டுதோறும் பொய்க்காமல் மழை பொழிந்தது. மக்கள் நோய்நொடி இல்லாமல் மகிழ்வுடன் ஊழூழி காலம் வாழ்ந்தனர்.

9

மனைவியோடு ஆயிரம் வெள்ளம் ஆண்டுகள் நலமுடன் வாழவேண்டும் என்று புலவர் குட்டுவனை வாழ்த்துகிறார். குட்டுவன் மனைவியின் சிறப்பு இங்குக் கூறப்பட்டுள்ளது. கழுவாவிட்டாலும் மணக்கும் வாய் கொண்டவள், அவள். அவளது கூந்தல் கார்மலர் (கார்த்திகை மலர், காந்தள் மலர்) போல் மணக்கும். இரவில் பூக்கும் மலர் குவளை வேண்டாம் என்பது போல் அவள் முகம் ஒளிரும். அதில் மதமதக்கும் ஈரக்கண் கொண்டவள். நீர்வளம் மிக்க சோலையில் வளர்ந்திருக்கும் மூங்கில் போன்ற தோளை உடையவள்.

வெள்ளம் என்னும் எண்.

 

பாடல் சொல்-பிரிப்புப் பதிவு

பாடல் 21

1

சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம், என்று

ஐந்துடன் போற்றி அவை துணையாக,

காலை அன்ன சீர் சால் வாய்மொழி,

2

உரு கெழு மரபின் கடவுள் பேணியர், 5

கொண்ட தீயின் சுடர் எழுதோறும்

விரும்பு மெய் பரந்த பெரு பெயர் ஆவுதி;

3

வருநர் வரையார் வார வேண்டி,

விருந்து கண்மாறாது உணீஇய, பாசவர்

ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங் குறை           10

குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப,

கடல் ஒலி கொண்டு, செழு நகர் வரைப்பின்

நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி;

4

இரண்டுடன் கமழும் நாற்றமொடு, வானத்து

நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி,     15

ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்,

மாரிஅம் கள்ளின், போர் வல் யானை,

போர்ப்பு உறு முரசம் கறங்க, ஆர்ப்புச் சிறந்து,

நன் கலம் தரூஉம் மண் படு மார்ப!

5

முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்        20

புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,

கல் உயர் கடத்திடைக் கதிர் மணி பெறூஉம்,

மிதி அல் செருப்பின் பூழியர் கோவே!

6

குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை!

7

பல் பயம் தழீஇய, பயம் கெழு நெடுங் கோட்டு,          25

நீர் அறல் மருங்கு வழிப்படா, பாகுடிப்

பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா,

சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய,

நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந!

8

யாண்டு பிழைப்பு அறியாது, பய மழை சுரந்து             30

நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக!

9

மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு,

கார் மலர் கமழும் தாழ் இருங் கூந்தல்,

ஒரீஇயின போல இரவு மலர் நின்று

திருமுகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண்,       35

அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து

வேய் உறழ் பணைத் தோள், இவளோடு

ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே!      

 

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு

வண்ணம்:ஒழுகு வண்ணம்

தூக்கு:செந்தூக்கு

பெயர்:அடு நெய் ஆவுதி   

 

பல் யானைச் செல்கெழு குட்டுவனைப்

பாலைக் கௌதமனார் பாடய பாடல்கள் 10. அவற்றில் ஒன்று இது.           

கி.மு. காலத்துப் பாடல்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை         குறள் எண்:134)

 

பொருள்கோள் வரிஅமைப்பு:

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்

பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

 

மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.

இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

 

பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கொள்ளலாம்: தன் பிராமண பிறப்பு ஒழுக்கங் குறையுமாயின் குலம் கெடும்.

 

வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார்

வேதாங்கம் ஆறு ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் என்பன

 

பிராமணன் -பார்ப்பான் என்போரின் மற்ற பெயர்கள் என வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.                        குறள் 543:  செங்கோன்மை

மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.                 குறள் 56:   கொடுங்கோன்மை

மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

 

ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.

ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5

ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70

ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25

ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21


வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.

 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)

இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்

நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை   துறவி எனும் பொருளில் வள்ளுவர்  ஆண்டுள்ளதை,  அந்தணர் குல மரபை  ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லைகடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், 

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

 

                ..............அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்  - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்

 திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து  அதிகாரத்திலும், நீத்தார் பெருமை  துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்

 

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.                                          குறள் 395: கல்வி

 

 

புறநானூறு 166, பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்திணை: வாகை. துறை: பார்ப்பன வாகை

நன்று ஆராய்ந்த நீள் நிமிர் சடை

முது முதல்வன் வாய் போகாது,

ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,

ஆறுணர்ந்த ஒரு முதுநூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார், 5

மெய் அன்ன பொய் உணர்ந்து,

பொய் ஓராது மெய் கொளீஇ,

மூவேழ் துறைபும் முட்டின்று போகிய

உரை சால் சிறப்பின் உரவோர் மருக!

வினைக்கு வேண்டி நீ பூண்ட  10

 

வேதத்தை ஒரு புருஷனாக (மனிதனாக) கொண்டால்,

சந்தஸ் வேதத்தின் பாதமாகும்,

கல்பம் கைகளாகும்,

ஜோதிஷம் வேதத்தின் கண்களாகும்,

நிருக்தம் வேதத்தின் செவிகளாகும்,

சிக்ஷை வேதத்தின் மூக்காகும்,

வியாகரணம் வேதத்தின் முகமாகும்.

"கற்பம் கை சந்தம்கால் எண் கண்

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு

உற்றவியாக ரணமுகம் பெற்றுச்

சார்பிற் றோன்றா ஆரண வாக்கு "

என்று மணிமேகலை நூல் கூறுகின்றது.

 குறள் 395:


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.

மு.வரதராசனார் உரை:செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

 

பரிமேலழகர் உரை:உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான் , செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.(உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.).


மணக்குடவர் உரை:பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்.இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.


திருக்குறளார் வீ. முனிசாமி உரை:செல்வர்கள் முன்னே வறியவர்கள் நிற்றல் போல, தம்முடைய ஆசிரியர் முன்னே நின்று கல்வி கற்றவர்களே உயர்ந்தோராவர். அவ்வாறு கற்பதற்கு நாணமுற்றுக் கல்லாதவர்கள் இழிந்தோரேயாவார்.

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

வேதாங்கம்ஆறு; அவை:சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம்என்பன ஆறு அங்கங்களாவன: சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி. சிட்சை - வேதத்தை ஓதும் ஒலிவகையை விளக்கும். வியாகரணம் - இலக்கணம், நிருத்தம்,மொழிநூல், சோதிடம்,பஞ்சாங்கம் பற்றிக் காலநிலை கூறுவது. கற்பம் - சடங்கு முறை வகுப்பது, சந்தோவிசிதி - இசையமைப்பைக் கூறுவது. அளவு - எல்லை.

மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே!



Puranānūru 166, Poet Avūr Mūlankilār sang to Chōnāttu Poonchātrūr Pārpān Kouniyan Vinnanthāyan, Thinai: Vākai, Thurai: Pārpana Vākai

You who is an heir of learned men who performed

the twenty-one rituals without fault, who understood

those who disrespected and spoke truth-like lies,

defeating those who would contend with the ancient

work of four divisions and six sections, focused on

righteousness, never swerving from the well chosen

words of the ancient Being with long matted hair!

 

Notes:  This poet wrote Puranānūru 38, 40, 166, 177, 178, 196, 261 and 301.  This is the only song written for this man.  பதிற்றுப்பத்து 74 –  புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் பருதி போகிய புடை கிளை கட்டி எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன் சூடு நிலை உற்றுச் சுடர்விடு தோற்றம் விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப நலம் பெறு திருமணி கூட்டு நல் தோள்.  புறநானூறு 374 – நீர் நாண நெய் வழங்கி.

 

Meanings: நன்று ஆராய்ந்த – analyzed carefully, நீள் நிமிர் சடை – very long hair, முது முதல்வன் – ancient god, வாய் போகாது – never swerving from truth, ஒன்று புரிந்த – desired just one thing (righteousness), ஈர் இரண்டின் – two times two, four divisions, ஆறு உணர்ந்த – understood by six sections, ஒரு முதுநூல் – an ancient book, the Vedas, இகல் கண்டோர் – those who disrespected, மிகல் – greatly, சாய்மார் – to ruin, மெய் அன்ன பொய் உணர்ந்து – understanding their truth-like lies, பொய் ஓராது மெய் கொளீஇ – not taking their lies as truths (கொளீஇ – சொல்லிசை அளபெடை), மூ ஏழ் துறைபும் முட்டின்று போகிய – performed the twenty one rituals without limits, உரை சால் சிறப்பின் – with great fame,  உரவோர் மருக – O heir of learned men, வினைக்கு வேண்டி – desiring for your rituals, நீ பூண்ட – what you are wearing, புலப் புல்வாய்க் கலைப் பச்சை – the leather of a male deer/antelope of the forest, சுவல் பூண் ஞாண் – worn over the thread on your shoulders, மிசைப் பொலிய – glowing above, மறம் கடிந்த – without harshness, அரும் கற்பின் – precious and chaste, அறம் புகழ்ந்த வலை சூடி – wearing sacred jewels, சிறு நுதல் – tiny forehead, பேர் அகல் அல்குல் – big wide loins, சில சொல்லின் – of few words, பல கூந்தல் – thick hair, நின் நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர் – your wives fitting your status, தமக்கு அமைந்த தொழில் கேட்ப – perform the requested duties, காடு என்றா நாடு என்று – whether it is the jungle or the land, ஆங்கு – there, ஈரேழின் இடம் – the 14 sites, முட்டாது – not reducing, நீர் நாண நெய் வழங்கியும் – you pour ghee more than water (water is embarrassed), எண் நாணப் பல வேட்டும் – do many rituals that embarrass numbers, மண் நாணப் புகழ் பரப்பியும் – spread fame that the earth embarrassing the earth, அருங்கடிப் பெருங்காலை – at a time when a difficult ritual is performed, விருந்து உற்ற – being hospitable to guests, நின் திருந்து ஏந்து நிலை – your perfect situation, என்றும் – always, காண்க – we will see, தில் – விழைவின்கண் வந்த இடைச்சொல், a particle which implies desire, அம்ம – அசை நிலை, an expletive, யாமே – me, குடாஅது – in the west, மேற்கில் (இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), பொன்படு நெடுவரை – tall mountains with gold, புயல் ஏறு சிலைப்பின் – if there are sounds of thunder from clouds (புயல் – ஆகுபெயர் முகிலுக்கு), பூ விரி – spread with flowers, புது நீர்க் காவிரி புரக்கும் – Kāviri with fresh water protects, தண் புனல் படப்பை – cool streams and fields, எம் ஊர் – my town, ஆங்கண் – there, உண்டும் – eating, தின்றும் – devouring, ஊர்ந்தும் – riding, ஆடுகம் செல்வல் – I will celebrate and leave, அத்தை – அசை நிலை, an expletive, யானே – me (ஏகாரம் அசை நிலை, an expletive), செல்லாது – not going, மழை அண்ணாப்ப – clouds look up, நீடிய நெடுவரை – very tall mountains, கழை வளர் இமயம் – Imayam where bamboo grows, போல – like, நிலீஇயர் அத்தை நீ – may you last (நிலீஇயர் – சொல்லிசை அளபெடை, இயர் வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, அத்தை – அசை நிலை, an expletive) நில மிசையானே – on this earth (மிசையானே – ஏகாரம் அசை நிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

4. திருவேரகம் (சுவாமிமலை)   இரு பிறப்பாளர்

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி

அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை . . .180

மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல (177 – 182)

4. Thiru Ērakam (Swamimalai)  The Twice Born

The twice-born, who perform the six duties

without fail, respected, born to ancient, traditional

families on both sides, who spend forty eight years of

their young age on the righteous path with

principles of uttering truths, who tend three

sacred fires which is their wealth, chant.

 Meanings:    இரு மூன்று எய்திய – perform the 6 duties, இயல்பினின் வழாஅது – not faulting, இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி – born to ancient traditional families on both sides and respected, அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு ஆறினில் கழிப்பிய – spend 48 years and their youth on the path, அறன் நவில் கொள்கை – principle of uttering virtue/truth, மூன்று வகைக் குறித்த – three kinds indicated, முத்தீச் செல்வத்து – wealth is tending three fires, இரு பிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – the twice-born know the time and chant

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்

புலராக் காழகம் புலர உடீஇ

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து

ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி

நாஇயல் மருங்கில் நவிலப் பாடி

விரை உறு நறுமலர் ஏற்றி பெரிது உவந்து

ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று (183 – 189)

They wear three strands with three fine threads

in each and wet clothing that dry when

worn.  They worship holding their palms above,

praising him, uttering the six-syllabled secret

name, and scatter fragrant flowers happily to the

one who resides in Ērakam.  He is not just there.

Meanings:  ஒன்பது கொண்ட – having nine, மூன்று புரி நுண் ஞாண் – three strands with three fine threads twisted together, புலராக் காழகம் – not dried clothing,  புலர உடீஇ – wear it to dry, உச்சிக் கூப்பிய கையினர் – those worshipping with their hands above,  தற்புகழ்ந்து – praising him, ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி – Vedic rituals with six letters, நா இயல் மருங்கில் நவிலப் பாடி – sing with their tongues learning well, விரைஉறு நறுமலர் ஏற்றி – throw many kinds of fragrant flowers, பெரிது உவந்து – greatly happy, ஏரகத்து உறைதலும் உரியன் – the one who resides in Ērakam, அதாஅன்று – not only there



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Parppan%2BPirappozukkam%2B01.pngParppan%2BPirappozukkam%2B02.png

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Parppan%2BPirappozukkam%2B03.png

Parppan%2BPirappozukkam%2B04.png



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Parppan%2BPirappozukkam%2B05.png

Parppan%2BPirappozukkam%2B06.png



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 Parppan%2BPirappozukkam%2B07.png

Parppan%2BPirappozukkam%2B08.png



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 Parppan%2BPirappozukkam%2B09.png

Parppan%2BPirappozukkam%2B10.png



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Parppan%2BPirappozukkam%2B12.png

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

q%2BKural%2Bvarnam%2B01.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

q%2BKural%2Bvarnam%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 q%2BKural%2Bvarnam%2B03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

q%2BKural%2Bvarnam%2B04.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

q%2BKural%2Bvarnam%2B05.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 q%2BKural%2Bvarnam%2B06.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

q%2BKural%2Bvarnam%2B07.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:133)

பொழிப்பு: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

இதே ஒழுக்கமுடைமையின் முந்தைய குறள்- எனவே வள்ளுவர் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் என சொன்னமைக்கு விளக்கம் இதே வரிசையில் அதாவது அந்தணர்-வேதம் தொடர்பிட்டே கூறியும் உள்ளார்.

ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு அடிப்படையாய் (காரணமாய்-முன்னோடியாய்) அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
 
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
 
 
 
 புறநானூறு 9, பாடியவர்: நெட்டிமையார்பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிதிணை: பாடாண்துறை: இயன் மொழி

“ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்” என  5
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்,
கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய, குடுமி, தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின் நெடியோன்  10
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!

Puranānūru 9, Poet Nettimaiyār sang for Pāndiyan Palyākasālai Muthukudumi Peruvaluthi, Thinai: Pādān, Thurai: Iyan Moli
He announces in a righteous manner, “Cows,
Brahmins with the nature of cows, women, those
who are sick, and those living in the southern
land with no gold-like sons to perform precious
last rites, take refuge!   We are ready to shoot
volleys of arrows!”

May he with martial courage, whose banners flying
on his murderous elephants throwing shadows on the
sky, our king Kudumi, live for long, more days
than the number of sands on the banks of Pakruli River
with fine water,
where his ancestor Nediyōn celebrated ocean festivals,
and gave musicians fresh, reddish gold gifts!

Notes:  Puranānūru poems 6, 9, 12, 15 and 64 were written for this king.   This poet wrote Puranānūru poems 9, 12 and 15 for this king.  ஒளவை துரைசாமி உரை – பிணியுடையீரும், புதல்வர்ப் பெறாஅதீரும் என்னும் முன்னிலைப் பெயரோடு, ஆவும், பார்ப்பன மாக்களும், பெண்டிரும் என்னும் படர்க்கைப் பெயர்கள் விராய் வந்து, ‘நும் அரண் சேர்மினே’, என்னும் முன்னிலை வினையான் முடிதல், ‘செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்’ (தோல். சொல். எச்ச 67) என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளப்படும்.  முந்நீர் (10) – ஒளவை துரைசாமி உரை – ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் என்று பெயராயிற்று.  நச்சினார்க்கினியர் உரை பெரும்பாணாற்றுப்படை 441 – நிலத்திற்கு முன்னே உண்டாக்கிய நீர், மண்ணை படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர்.

Meanings:  ஆவும் – and cows, ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – and Brahmins who have the nature of cows, பெண்டிரும் – and women, பிணியுடையீரும் – and those with disease, பேணி – protecting, தென்புலம் வாழ்நர்க்கு – to those who live in the south, அருங்கடன் இறுக்கும் –  performing final rites, பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும் – and those who have not given birth to gold-like sons (பெறாஅதீரும் – இசை நிறை அளபெடை), எம் அம்பு கடி விடுதும் – we are going to shoot our arrows rapidly (கடி – விரைவுப்பொருள் தரும் இடைச்சொல்), நும் அரண் சேர்மின் – you reach a safe place (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), என அறத்து ஆறு நுவலும் – he utters words with righteous path, பூட்கை மறத்தின் – with martial courage, கொல் களிற்று மீமிசைக் கொடி – banners on murderous male elephants (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), விசும்பு நிழற்றும் – shades the skies, எங்கோ – my king, வாழிய குடுமி – O Kudumi! may you live long, தங் கோ – our king, செந்நீர்ப் பசும் பொன் – fresh reddish gold, வயிரியர்க்கு ஈத்த – gave to artists, முந்நீர் விழவின் – at the ocean festivals, நெடியோன் – your ancestor Nediyōn, நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே – many more days than the number of sands on the banks of Pahruli river with good water (பலவே – ஏகாரம் அசை நிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/5
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/5
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13

அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு/அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை - புறம் 361/4,5

யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்/தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே - அகம் 0/15,16
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே - புறம் 200/13
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே - புறம் 201/7




ஆதித்த கரிகாலனைக் கொன்ற குற்றவாளிகளின் தம்பி பரமேஷ்வரன்.
இவன் வாழ்ந்த இடம் "பார்ப்பன சேரி" ஆகும்.
இவனது நிலத்தை அரசு கையகப்படுத்தி ஒருவரிடம் கொடுத்து அவர் வேறொருவருக்கு விற்றபோது பொறித்த கல்வெட்டில் இந்த செய்தி உள்ளது.
[உடையார்குடி கல்வெட்டு]

அதாவது பூசை செய்யும் உயர்நிலை மக்களும் சேரியில் வாழ்ந்துள்ளனர்.
இது போலவே கம்மாளச்சேரி, பறைச்சேரி, இடைச்சேரி ஆகியனவும் இருந்துள்ளன.

(பார்ப்பனருக்கு தானம் தரப்பட்ட சதுர்வேதி மங்கலங்கள் பகுதியளவு வரிச்சலுகையும்
பறைச்சேரியும் கம்மாளச்சேரியும் முழு வரிவிலக்கு பெற்றிருந்தன என்பதை இராசேந்திர சோழனின்
கரந்தை செப்பேடுகள் மூலம் அறிகிறோம்)
[கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி -  சி.கோவிந்தராசன், சி.கோ.தெய்வநாயகம்]

சிலப்பதிகாரத்திலும் இத்தகைய சான்று உள்ளது.
அதில் "புறஞ்சேரி" எனுமிடத்தை 'புரிநூல் மார்பர் உறைபதி' என்று குறிப்பிடுகிறது.
அதாவது பூணூல் போட்டவர்கள் வாழ்ந்த இடம்.
யார் அந்த பூணூல் போட்டவர்கள்?
பார்ப்பனர் மற்றும் பாணர்
[சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை]



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

இந்திய அரசியல் சட்டத்தில் மாநிலங்களுக்கு ஏன் அதிக அதிகாரங்கள் வழங்கப் படவில்லை?

காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் ஜின்னா விதைத்த பிரிவினை விஷச் செடி இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் பரவியதைப் பார்த்து இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் நிலைமை மோசமாகி விடக்கூடாது என்ற முடிவிற்கு நமது அரசியல் சட்ட நிர்ணய சபை வந்தது. பெரியாரின் தேசத்துரோகக் அறிக்கைகளை அன்று தமிழர்களும், இந்திய நாடும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனாலும் அவரைப் போன்ற விஷத்தை விதைப்பவர்கள் இந்தியாவில் பெருகி விடக்கூடாது என்பதில் நம் தலைவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

முக்கியமாக, அம்பேத்கர், நேரு, படேல் போன்ற தலைவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

திராவிட அரையணா அறிஞர்கள் இன்று சந்தடிச் சாக்கில் பிரிவினை விஷ வித்துகளை மீண்டும் தூவ முயன்று கொண்டிருக்கிறார்கள். அவற்றை முற்றிலும் கிள்ளி எறிய வேண்டும்.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடுதான். அது இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்டு, பிரிவினை என்ற பேச்சே இருக்காது என்ற உறுதிமொழிக்குப் பிறகுதான் அவை அமல்படுத்தப் பட வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.       குறள் 681: தூது
மு.வரதராசனார் உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
சாலமன் பாப்பையா உரை:நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.
 
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. குறள் 502: தெரிந்துதெளிதல்
 மு.வரதராசனார் உரை: நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
 
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.         குறள் 462:  தெரிந்துசெயல்வகை
மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை. குறள் 469:  தெரிந்துசெயல்வகை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
மு.வரதராசனார் உரை:அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.  குறள் 466:  தெரிந்துசெயல்வகை
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கிராமங்களில் கோயில் குருக்கள் என்பவர் பூஜை செய்பவர் மட்டுமல்ல.

கவுன்சிலிங் நிபுணர், மருத்துவர், சோதிடர் என பல முகங்களோடு இருக்கவேண்டும்.

குடும்ப பிரச்சனை, சொத்து பிரச்சனை என்றால் வந்து சொல்வார்கள். குருக்கள் ஐயா அதை கவுன்சிலிங் செய்து எந்த பிரச்சனையும் வராமல் அறிவுரை வழங்கவேண்டும்.

குழந்தை பயந்துவிட்டது என விபூதி போட அழைத்துவருவார்கள். இதற்க்கு முருகர் உபாசனையே முதல்.

அறுகோணம் வரைந்து விபூதி மந்திரித்து தருவார் குருக்கள்.

ஆரூடம் கூறவேண்டும்.

ஜோதிடம் பார்க்கவேண்டும்.

என் தந்தை இதையெல்லாம் செய்வார்.

அதுபோல், கால் சுளுக்கு, முட்டி பிடிப்பு என ஆண், பெண் பலர் வருவார்கள்.

மந்திரிக்க.

மாந்திரீகம் என்பது வேறு, மந்திரித்தல் என்பது வேறு.

என் தந்தை மந்திரிப்பார்.

எவராவது கால் சுளுக்கு, தசை பிடிப்பு என காலை நேரத்திலேயே வருவார்கள்.

வாசலில் தென்னை ஈற்றங்குச்சியை வைத்து அவர் உடம்பை தடவுவதுபோல் மந்திரீப்பார்.

சிலசமயம் தோளில் உள்ள துண்டை கொண்டு சுழற்றி, சுழற்றி மந்திரிப்பார்.

ஒரு பத்து நிமிடம் ஆகும். அப்புறம் கால், கை உதறி போ என்பார்.

பலரும் நல்லாகிவிட்டது என்று கூறியே பார்த்துள்ளேன்.

மேற்கண்ட பலதும் செய்தாலும், காணிக்கை என்பது ஜோசியத்தில் மட்டுமே ரூ 2 / ரூ 5 வரும்.

ஆனால் புகழ் அபரிமிதமாக இருக்கும்.

நல்ல சாமி, நல்ல சாமி என்பார்கள். ஆனால் வறுமையும் ,கஷ்டமும்மாகவே அவர் வாழ்வு இருந்தது.

மக்களின் கவனம் #உபசரிப்பிலும் இருக்கவேண்டும். உயர்வாக பேசுவதிலும் இருக்கவேண்டும், வெறும் புகழை வைத்துக்கொண்டு வயிற்றில் ஈரதுணி போட்டுக்கொள்ளவேண்டியதுதான்.

இங்கு முகநூலில் கூட, சில அர்ச்சகர்கள் எங்கள் அப்பாவுக்கு கிராமத்தில் அவ்வளவு மரியாதை என பெருமைப்படுவார்கள். ஆனால் அவருடைய வாழ்வாதார நிலை அடிப்படைகளை பூர்த்தி செய்யவே படாதபாடு படுவதாகவே இருந்து இருக்கும். ஆனால் இது மறைக்கப்பட்டு விடும்.

இப்ப எதற்க்கு இச்செய்தி என்றால்,

சில பழைய நோட்டுகளை இன்று தேடியபொழுது, என் தந்தை எழுதிவைத்திருந்த, திருஷ்டி மந்திரம், ரத்தம் கட்ட மந்திரம் ,சுளுக்கு மந்திரம்,கட்டிபோடும் மந்திரம் போன்ற ஏடுகள் அப்பளம் போல் கிடைத்தன.

இதை பார்த்த உடனே எனக்கு மேற்கூறிய நினைவுகள் வந்துவிட்டது.

சிறுவயதில் அடிப்படை பாடம் அப்பாதான். அப்பொழுது இதையெல்லாம் சொல்லிக்கொடுத்து உரு போட கூறியிருக்கிறார்.

பூஜையை தவிர்த்து, சோதிடம்,மந்திரித்தல் தேவை. எதிர்காலத்துக்கு நல்லது என்பார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard