அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால் மு.வரதராசனார் உரை: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். குறள் 582: ஒற்றாடல் மு.வரதராசனார் உரை: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும். சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். குறள் 674: வினைசெயல்வகை கலைஞர் மு.கருணாநிதி உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும். மு.வரதராசனார் உரை: செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும். சாலமன் பாப்பையா உரை: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். குறள் 880: பகைத்திறந்தெரிதல் மு.வ உரை:பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
நற்குடியில் பிறந்து தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை எது கொடுத்தும் நட்புக் கொள்க என்பது இக்குறட்கருத்து.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மை உடைத்தாவது போல, மக்கட்கு அறிவு தாம் சேர்ந்த இனத்தின் தன்மையதாய் வேறுபடும் என்பது இக்குறட்கருத்து.
ஒருவர்க்கு அறிவு மனத்திலே உள்ளது போலத் தோற்றுவித்தாலும் அது அவன் பழகும் கூட்டத்திற்கேற்பவே உண்டாகும். ஒருவர்க்கு அறிவு மனத்திலே உள்ளது போலத் தோற்றுவித்தாலும் அது அவன் பழகும் கூட்டத்திற்கேற்பவே உண்டாகும்.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். (அதிகாரம்:குடிமை குறள் எண்:959)
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும் (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:455)
ஒருவர்க்கு அறிவு மனத்திலே உள்ளது போலத் தோற்றுவித்தாலும் அது அவன் பழகும் கூட்டத்திற்கேற்பவே உண்டாகும்.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:457)
நல்ல மனம் நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லவர் கூட்டு எல்லாப் புகழையும் கொடுக்கும்
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை பரிமேலழகர் உரை:மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409: கலைஞர் மு.கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது. Translation:Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's grace. Explanation:The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும் நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9
ஸ்ரீ மஹாபாரதம்-வர்ணங்கள் பற்றி மஹரிஷி ப்ருகு கூறுவது:
ஸ்ரீ மஹாபாரதத்தின்,ஶாந்திபர்வத்தின் 188ஆவது அத்யாயத்தில் மஹரிஷி ப்ருகு வர்ணங்கள் பற்றி மஹரிஷி பரத்வாஜருக்குக் கூறுகிறார். நால்வர்ணத்தவர்களுக்கும் தர்மகார்யங்களைச் செய்யவும்,யஜ்ஞங்களைச் செய்யவும் உரிமை உண்டு என்று அவர் கூறுவது கவனிக்கத்தக்கது.
ப்ருகு கூறினார்,
வர்ணங்களுக்கு இடையில் உண்மையில் எந்தவிதமான பேதங்களும் இல்லை. இந்த முழு உலகமும் முதலில் ப்ராஹ்மணர்களையே கொண்டிருந்தது.ப்ரஹ்மாவால் சமமானவர்களாகப் படைக்கப்பட்டவர்களான மனிதர்கள் தங்களுடைய செயல்களின் விளைவாக பல்வேறு வர்ணத்தவர்களாக ஆனார்கள். ஆசைகள் கொள்வதிலும்,இன்பங்களை அனுபவிப்பதிலும் விருப்பமுள்ளவர்களாக,கடுமையும்,கோபமும் கொண்டவர்களாக,தைரியம் உடையவர்களாக,பக்தி மற்றும் வழிபாடு முதலியவற்றில் சிரத்தை இல்லாதவர்களாக,உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவர்களாக இருந்த ப்ராஹ்மணர்கள் க்ஷத்ரியர்கள் ஆயினர். தங்களுக்கு உரிய கடமைகளைச் செய்யாமல்,நல்ல குணங்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு ஆட்படுதல் முதலானவற்றை உடையவர்களாக,ஆநிரை மேய்த்தல்,விவசாயம் முதலான தொழில்களைச் செய்பவர்களாக இருந்த ப்ராஹ்மணர்கள் வைஶ்யர்கள் ஆயினர்.பொய்மை,மற்றவர்களுக்குத் தீங்கு செய்தல் ஆகியவற்றை விரும்பியவர்களாக,காமத்தை உடையவர்களாக,வாழ்வதற்காக எந்தவிதமான செயல்களையும் செய்பவர்களாக,நல்ல நடத்தையிலிருந்து நழுவியவர்களாக,தாமஸ குணத்தை உடையவர்களாக இருந்த ப்ராஹ்மணர்கள் ஶூத்ரர்கள் ஆயினர்.இவ்வாறு தொழில்களால் பிரிவுபட்ட ப்ராஹ்மணர்கள்,தங்கள் நிலையிலிருந்து நழுவி,ஏனைய மூன்று வர்ணத்தவர்களாக ஆயினர். எனவே நான்கு வர்ணத்தவர்களுக்கும் அனைத்து தர்ம கார்யங்களையும்,யஜ்ஞங்களையும் செய்வதற்கான உரிமைகள் உண்டு.