Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள்-ஜாதி-வேதம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருக்குறள்-ஜாதி-வேதம்
Permalink  
 


திருக்குறள்-ஜாதி-வேதம்

 
வள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குறள்கள் மூலம் வலியுறுத்துகிறார். அதோடு நற்குடியிலும் அரிதாக குடி ஒழுக்கத்துக்கு கேடாக நடப்பவரும் பிறப்பது இயல்பேன்பதையும் சுட்டுகிறார். 

10917420_872765636077696_230519033944633


குணமும் குடிமையும் குற்றமும் குன்றா 
இனனும் அறிந்தியாக்க நட்பு.
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.சாலமன் பாப்பையா
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.கலைஞர்
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.மு.வரதராசன்
 
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.சாலமன் பாப்பையா
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.கலைஞர்
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.மு.வரதராசன்
 
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.சாலமன் பாப்பையா
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.கலைஞர்
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.மு.வரதராசன்
 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.சாலமன் பாப்பையா
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.கலைஞர்
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.மு.வரதராசன்
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னான் எனப்படுஞ் சொல்
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.சாலமன் பாப்பையா
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.கலைஞர்
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.மு.வரதராசன்
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு.
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.சாலமன் பாப்பையா
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.கலைஞர்
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நேக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.மு.வரதராசன் 
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசம் சொல் காட்டும்.சாலமன் பாப்பையா
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.கலைஞர்
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.மு.வரதராசன்

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
இனந்தூய்மை தூவா வரும்
மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.சாலமன் பாப்பையா
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.கலைஞர்
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.மு.வரதராசன்
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.சாலமன் பாப்பையா
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.கலைஞர்
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்க்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.மு.வரதராசன்

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.சாலமன் பாப்பையா
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.கலைஞர்
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.மு.வரதராசன் 
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்ததைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.சாலமன் பாப்பையா
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.கலைஞர்
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.மு.வரதராசன்

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.சாலமன் பாப்பையா
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.கலைஞர்
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.மு.வரதராசன்
thiruvalluvar-statue.jpg


இதைப்போன்ற ஏராளமான குறள்களைக் காட்டலாம். மேலே சொன்னவை உதாரணங்களுக்கு மட்டும். இதன்மூலம் சொல்லவருவது, பண்டைய பாரதம் ஜாதிகளை சமூக அமைப்பாக அங்கீகரித்தது என்பதையும், அந்த ஜாதிகள் அனைவருக்கும் ஒழுக்கத்தையும், நன்மையையும் ஏற்படுத்தியது என்பதையுமே. மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்லொழுக்கங்களையும் எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு உரைத்து தமிழ் வேதம் என்ற பெயர் பெற்ற வள்ளுவர் ஜாதிகள், குடி, குலம் போன்றவற்றை அங்கீகரித்துள்ளார் என்றால் அதில் நன்மை இல்லாமலா, என்பது சிந்திக்க வேண்டியதாகும். ஜாதி அமைப்பால் பாரதம் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக, இயற்கை பாதுகாப்பு ரீதியாக ஏராளமான நன்மைகளை அடைந்துள்ளது. அன்நன்மைகளை ஒழித்து பாரதத்தை சுரண்டிக் கொழுக்க நினைக்கும் அந்நிய மதமாற்ற மற்றும் சூழ்ச்சிக்கார சக்திகள் கடந்த நூற்றாண்டு முழுக்கவே பல்வேறு துரோகிகளை வளர்த்து விட்டு அவர்கள் மூலம் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து சிந்தனா ரீதியாக தேசத்தை தவறான பாதைக்கு திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு விசிமுங்க, வள்ளுவரு வேதத்த எதுத்தவரு... அவரு சமண மதத்துக்காரரு னு நெறையா பேரு புளுகுரானுங்க.. திருக்குறளு ல இருக்கற வேத-வேதாந்த செய்திகள இந்த லிங்க் ல இருக்கற கட்டுரைகள் ல படிச்சிக்கோங்க மாப்ளைகளா...


இறுதியாக, ஜாதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் திருவள்ளுரின் குறள்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

"யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உன் புத்திக்கும், பொது அறிவிற்கும் பொருந்தாத எதையும் நம்பாதே" - தந்தை பெரியார்....

அதனால் தான் அவர் பெரியார்.

thirukuralum aariyakurale bookமதங்கள் மனித அறிவின் மீது நிகழ்த்தும் ஆகச் சிறந்த வன்முறை என்பது 'நான் சொல்வதை ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே கேள்' என்பது ...

எந்த கருத்தையும் அது சொல்லப்பட்ட காலம், அப்போதைய அறிவியல் மற்றும் ஆய்வு சூழல், சமூக அமைப்பு கொண்டே கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆரியம் முழுதாய் இந்தியாவை விழுங்கக் காத்திருக்கும் இந்தப் பொழுதில் திராவிட சிந்தனைகளை இந்தியா முழுக்க கடத்த வேண்டிய தேவையை பேசி வருகிறோம்...

பெரியாரின் கருத்துக்களை எந்த இடத்தில் அழுத்தமாகவும், எந்த இடத்தில் மெதுவாகவும் சொல்ல வேண்டும் என்ற தெளிவு பெரியாரியவாதிகளுக்குத் தேவை.... அப்படியே, பெரியாரை தீர்க்கதரிசியாக சித்தரிக்கும் சூழல் நீண்டால் அது மதவாதத்திற்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு மதமாகவே மாறக் கூடும்...

பெரியாரின் தெளிந்த அறிவை உள்வாங்கும் அறிவு, கேட்கும் எத்தனை பேருக்கு இங்கு உள்ளது? புரிதல் திறன் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது...

ஏற்கனவே, அவர்மீது சுமத்தப்படும் தவறான புரிதலுக்கு பதிலளித்து, பதிலளித்து சோர்வு ஏற்படுகிறது... இந்தப் புத்தகம் மேலும் அந்த சுமையை கூட்டும் என்பது திண்ணம்.

நூலின் தொகுப்பு ஆசிரியர் வேண்டுமென்றே பரபரப்பிற்காக மட்டுமே இந்தத் தலைப்பை வைத்துள்ளார் என நான் குற்றம் சாட்டுகிறேன்.... திருக்குறளில் மதக் கருத்துக்கள் என்றால் அது சரியான தலைப்பே. இப்படி ஒரு தலைப்பு திட்டமிட்டே வைக்கப்பட்டுள்ளது...

இந்த திட்டம் திருக்குறள் அர்த்த சாஸ்திரம் போன்ற வடமொழி நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்று நூல் வெளியிட்ட இந்துத்துவ வாதி நாகசாமியின் திட்டத்திற்கும்....

திருக்குறளின் மருத்துவக் கருத்துகள் ஆயுர்வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்ற கருத்திற்கும்,

இன்னும் RSS தமிழ்நாட்டில் திருக்குறள் சங்கம் நடத்தவும், அதை ஆரிய நூலாகக் கொண்டாடவும் சிறப்பாகவும் வழி வகுக்கும்.

இங்கு அரசியல்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகள், அரசியல்படுத்தப்பட்ட தேர்தல் வழி திராவிடக் கட்சிகள் இரண்டிற்கும் தொடர் கருத்து மோதல்கள் அரசியல் காரணங்களுக்காக நிகழ்ந்து கொண்டே வருகின்றன....

நான் கண்ட மிகச் சிறந்த தமிழ்த் தேசியவாதி பெரியார்.... ஆனால், இந்த அரசியல் மோதல்களுக்காக தனது சித்தாந்தங்களை திராவிடக் கொள்கையாளர்கள் காவு கொடுக்கத் துணிகிறார்களா????

தமிழ்த் தேசியத்திற்கு பயந்து கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதை தான் உங்கள் வீரம் என்பீர்களா???

எச்.ராசா திருக்குறள் மாநாட்டை எதிர்க்கிறாரே ஏன்???? அவருக்குத் தெரிந்து இருக்கிறது... அது ஆரிய மதத்திற்கு எதிரான ஒரு போராளியின் அறைகூவல் தான் திருக்குறள் என்று...

உண்மையில் திருக்குறள் என்னவாக இருக்க முடியும்?

1. .திருவள்ளுவர் நிச்சயம் பார்ப்பனியப் பண்பாட்டின் எதிர்நிலைப் பண்பாடான பவுத்தம், சமண மதம் தமிழ்நாட்டில் தழைத்த காலத்தில் வாழ்ந்தவராக இருக்க வேண்டும்

2.. பூர்வ பவுத்த தமிழ்க்குடியான கந்தப்பன் வீட்டில் இருந்து பெறப்பட்டதால் பவுத்த மதம் சார்ந்தவராக அவர் இருந்து இருக்கலாம் (என் கூற்று)

3. இன்னும் சமணம் சார்ந்தவாராக சொல்வாரும் உண்டு.

ஏன் ஆரியமதம் மட்டும் இல்லவே இல்லை:

1. தமிழர் பண்பாட்டு அறநூலான திருக்குறள் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோர் தொழுதுண்டு பின் செல்பவர்" என்கிறது.

ஆரியப் பண்பாடு உழவுத் தொழிலை இழிவுபடுத்தியும், அது சூத்திரன் தொழில் என்றும் சொல்கிறது.

2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமூக நீதிப் பாடம் சொல்கிறது வள்ளுவம்...

ஆரியம் பிறப்பின் அடிப்படையில் மக்களை கூறு போடுகிறது.

3. "இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்" என்கிறது வள்ளுவம்...

பார்ப்பனர்கள் பிச்சை எடுத்து உண்பதை தர்மமாகவே எழுதி வைத்து, மற்ற வர்ணத்தவர்கள் உணவளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

4. "உயிர் நீப்பர் மானம் வரின்" என உயிரை விட மானம் பெரிது என்றார் வள்ளுவர்.

மானமா, உயிரா என்றால் உயிரை காப்பாற்றிக் கொள் என்பது பார்ப்பனியம்...

இப்படி இருக்கையில் வள்ளுவர் கருத்தும், ஆரியமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

பெரியார் வாழ்ந்த காலத்தில் இந்தியத் தத்துவங்கள் ஆய்வுக்கு உட்படாதவை... இன்றைக்கு மீள் ஆய்வுக்கு அனைத்தும் உட்படுகின்றன... அவர் வாழ்ந்ததும் 50 ஆண்டுகளுக்கு முன்னர்... இதையெல்லாம் கணக்கில் கொள்ளுங்கள்!

'கலியாணம் என்பதே ஒரு ஏற்பாடு தானுங்களே' என்று marriage is just an agreement என்றவர் பெரியார்... பெரியாரிஸ்ட் எல்லாம் குடும்பத்தை விட்டுப் போய் விட்டார்களா??

யாருக்கு சொன்னார்? குடும்பம் என்பது நரகமாகும்போதும் விட்டுத் தொலைக்காத பெண்களுக்கு சொன்னார். அது போன்றுதான் அவர் சொன்னவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வள்ளுவத்தில் உள்ள பெண்ணடிமை :

நில உடைமை சமூக அமைப்பு எப்படி குடும்பம் என்ற அமைப்பை உண்டாக்கியது. அதன் விளைவுகளில் ஒன்று பெண்ணடிமைத்தனம்... அந்த அமைப்பைக் காப்பாற்ற வேண்டிய சூழல் அந்த கால வள்ளுவருக்கு ஏற்பட்டு இருக்கலாம்....

தீ(யாகம் மட்டும் செய்து) வளர்த்து, வயிறு வளர்க்கும் நாடோடி ஆரியக் கூட்டத்தில் விவசாயம், அது சார்ந்த பொருள் உற்பத்தி, அதன் விளைவாக குடும்ப அமைப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை....

முற்றாக, தமிழ் மண்ணின் மரபின் வேர்களில் இன்னும் மிச்சமிருக்கும் உயிரிலும் இது போன்று வெந்நீர் ஊற்றாதீர்கள்!

- கவுதமி தமிழரசன்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

நாட்டார் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும் -குறள் 826

நண்பரைப் போல பகைவர் நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும், அவை தீயனவென்று விரைவில் அறிந்து கொள்ளலாம்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.                 குறள் 972: பெருமை

 

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்                                                                                                                                                                                                                                                   கீழல்லார் கீழல் லவர்.                     குறள் 973: பெருமை

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.              குறள் 993:     பண்புடைமை

கலைஞர் மு.கருணாநிதி உரை:நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.

குடிமை

குறள் 958:

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.

குறள் 959:

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

குறள் 956:

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குலம்பற்றி வாழ்தும்என் பார்.

குறள் 954:

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.

குறள் 953:

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு.

குறள் 952:

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

  கயமை

குறள் 1071:

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்.

குறள் 1075:

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது

குறள் 1076:

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

குறள் 1078:

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

1800 களில் தானம் தவம் ஆன்மிகம் மெய்ப்பொருள் என்று ஓடிக்கொண்டிருந்த மக்களை

1900 களில் சினிமா அரசியல் (போராட்டம் என்னும் பொறுக்கித்தனம்) சாராயம் என்று ஓட வைத்தது திராவிட அரசியல்

1950, 60, 70 களில் கூட மெய்ப்பொருள் தேடும் அற சாலைகள் ஆன்மீக மடங்கள் தமிழகம் முழுக்க இருந்தது

நாட்டை நாசமாக்கும் சாராய கம்பெனிகள் நடத்துபவன் திராவிடன்
நாட்டை நாசமாக்கும் சினிமா கம்பெனிகள் நடத்துபவன் திராவிடன்
நாட்டை நாசமாக்கும் டிவி கம்பெனிகள் நடத்துபவன் திராவிடன்
நாட்டை நாசமாக்கும் பத்திரிக்கைகள் நடத்துபவன் திராவிடன்

ஆனால் இவன் எதிர்க்க சொல்வது பார்ப்பனியம் மற்றும் பிராமணியம்,
ஏன்னா பார்ப்பனீயமும் பிராமணியமும்
சாராயம் குடித்து நாசமா போகாதே
சினிமா பார்த்து நாசமா போகாதே
டிவி சேனல்ல குறும்படம் பார்த்து நாசமா போகாதே
கண்ட கண்ட பத்திரிகைகள் படித்து நாசமா போகாதே
அரசியல்வாதி பின்னால போயி நாசமா போகாதே
சினிமாக்காரனுக்கு ரசிகர் மன்றம் வைத்து நாசமா போகாதே

தியானம் செய்து மனதை சுத்தப்படுத்த
யோகா செய்து உடலை பலப்படுத்து
பணம் சம்பாதித்து குடுமபத்தை காப்பாத்து
அறம் பயில் அன்பு காட்டு
கல்வி மருத்துவம் என்று சேவை செய் என்று போதிக்கிறது

பார்ப்பனியம் சொல்லும் அறவாழ்க்கை வாழ்ந்தால்
இவன் எப்படி சாராய கம்பெனி நடத்தி பணம் சம்பாதிப்பான்
இவன் எப்படி சினிமா கம்பெனி நடத்தி பணம் சம்பாதிப்பான்
இவன் எப்படி டிவி கம்பெனி நடத்தி பணம் சம்பாதிப்பான்
இவன் எப்படி கட்ட பஞ்சாயத்து கம்பெனி (திராவிட காட்சிகள்) நடத்தி பணம் சம்பாதிப்பான்

 

பார்ப்பனியத்தில் இடமில்லை என்று புத்தரே சொன்னாரா?
புத்தர் படத்தை போட்டு அவர் சொல்லாத்தை அவர் சொன்னமாதிரி எதற்கு பரப்புகிறீர்கள்

புத்தர் போதனைகளில் அசல சுத்தா என்று ஒரு போதனை உள்ளது அதில் பிராமணியம் (பார்ப்பனியம்) என்றால்என்ன? பிராமணீயத்தின் சிறப்பென்ன? யார் பிராமணர்கள் என்றும் விளக்கமாக எழுதியுள்ளார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 குறள் 1228:   பொழுதுகண்டிரங்கல்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.

மு.வரதராசனார் உரை: ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

குறள் 274:  கூடாவொழுக்கம்

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று  

மு.வரதராசனார் உரை: தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

குறள் 329: கொல்லாமை

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து.

மு.வரதராசனார் உரை: கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

மணக்குடவர் உரை: கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர். இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 குலத்தில் (1)
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

  குலத்தின்-கண் (1)
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
  குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 96:8
 
 குலம் (3)
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
  குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
  வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
  நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9

  குலன் (1)
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
  குலன் உடையார்-கண்ணே உள - குறள் 23:3


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

நிலை (7)
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
  கொல்லாமை சூழ்வான் தலை - குறள் 33:5
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
  சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 45:9
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
  ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள் 72:6
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
  தலைமக்கள் இல்வழி இல் - குறள் 77:10
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
  விட்டேம் என்பார்க்கு நிலை - குறள் 104:6

  நிலைக்கு (2)
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
  உண்மை நிலைக்கு பொறை - குறள் 58:2
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
  நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் - குறள் 75:5

 
 நிலைமையான் (1)
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
  புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று - குறள் 28:3

 நிலையர் (1)
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
  நன் நிலையர் ஆவர் எனின் - குறள் 119:9

 நிலையாமை (1)
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
  நிலையாமை காணப்படும் - குறள் 35:9

 நிலையின் (2)
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
  மலையினும் மாண பெரிது - குறள் 13:4
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
  நிலையின் இழிந்த-கடை - குறள் 97:4


 நிலையின (1)
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
  புல்லறிவு ஆண்மை கடை - குறள் 34:1

  நிலையே (3)
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
  பேரா இயற்கை தரும் - குறள் 37:10
எய்தற்கு அரியது இயைந்த-கால் அ நிலையே
  செய்தற்கு அரிய செயல் - குறள் 49:9
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
  கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

இன (5)
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
  இன தூய்மை தூவா வரும் - குறள் 46:5
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
  எல்லா புகழும் தரும் - குறள் 46:7
மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
  இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள் 46:8
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
  இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 46:9
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
  ஒளியொடு ஒழுகப்படும் - குறள் 70:8

 இனத்தனாய் (1)
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
  செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6
 
 இனத்தான் (1)
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
  இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3

 
 இனத்தின் (2)
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
  அல்லற்படுப்பதூஉம் இல் - குறள் 46:10

 இனத்து (3)
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
  இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
  இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
  சீறின் சிறுகும் திரு - குறள் 57:8

 இனத்தொடு (1)
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
  அரும் பொருள் யாது ஒன்றும் இல் - குறள் 47:2
 
 இனம் (5)
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
  ஏம புணையை சுடும் - குறள் 31:6
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
  இல்லை நன்று ஆகா வினை - குறள் 46:6
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
  மனம் போல வேறுபடும் - குறள் 83:2
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
  ஏதம் பலவும் தரும் - குறள் 89:4

  இனன் (2)
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
  இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து - குறள் 87:8
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
  இன்னாது இனியார் பிரிவு - குறள் 116:8


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கீழ் (11)

செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
  கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா
  மன்னவன் கோல் கீழ் படின் - குறள் 56:8
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
  குளித்தானை தீ துரீஇ அற்று - குறள் 93:9
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
  கீழ் அல்லார் கீழ் அல்லவர் - குறள் 98:3
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
  அலகு உடை நீழலவர் - குறள் 104:4
அக பட்டி ஆவாரை காணின் அவரின்
  மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் - குறள் 108:4
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
  கொல்ல பயன்படும் கீழ் - குறள் 108:8
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
  வடு காண வற்று ஆகும் கீழ் - குறள் 108:9

  கீழ்களது (1)
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
  அவா உண்டேல் உண்டாம் சிறிது - குறள் 108:5

 
 கீழ்ந்திடா (1)
பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
  கிழமையை கீழ்ந்திடா நட்பு - குறள் 81:1


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

திருக்குறள்-ஜாதி-வேதம்

வள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குறள்கள் மூலம் வலியுறுத்துகிறார். அதோடு நற்குடியிலும் அரிதாக குடி ஒழுக்கத்துக்கு கேடாக நடப்பவரும் பிறப்பது இயல்பேன்பதையும் சுட்டுகிறார்.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
சாலமன் பாப்பையா : ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.
கலைஞர்: குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
மு.வரதராசன்: ருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
சாலமன் பாப்பையா நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
கலைஞர்  பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.
மு.வரதராசன்   உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
சாலமன் பாப்பையா  தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
கலைஞர்   சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.
மு.வரதராசன்  சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
சாலமன் பாப்பையா  குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர்  மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.
மு.வரதராசன்  மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்
சாலமன் பாப்பையா  மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.
கலைஞர்  ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.
மு.வரதராசன்  மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
சாலமன் பாப்பையா  அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.
கலைஞர்  ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.
மு.வரதராசன்   ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நேக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
சாலமன் பாப்பையா  நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசம் சொல் காட்டும்.
கலைஞர்  விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மு.வரதராசன்  இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
சாலமன் பாப்பையா  மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.
கலைஞர்   ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.
மு.வரதராசன்  மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
சாலமன் பாப்பையா நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
கலைஞர்  மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.
மு.வரதராசன்மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்க்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
சாலமன் பாப்பையா  நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.
கலைஞர்  என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மு.வரதராசன் ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
சாலமன் பாப்பையா ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்ததைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
கலைஞர்  நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.
வரதராசன்  நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
சாலமன் பாப்பையா  கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர்   பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.
மு.வரதராசன்  பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

இதைப்போன்ற ஏராளமான குறள்களைக் காட்டலாம். மேலே சொன்னவை உதாரணங்களுக்கு மட்டும். இதன்மூலம் சொல்லவருவது, பண்டைய பாரதம் ஜாதிகளை சமூக அமைப்பாக அங்கீகரித்தது என்பதையும், அந்த ஜாதிகள் அனைவருக்கும் ஒழுக்கத்தையும், நன்மையையும் ஏற்படுத்தியது என்பதையுமே. மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்லொழுக்கங்களையும் எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு உரைத்து தமிழ் வேதம் என்ற பெயர் பெற்ற வள்ளுவர் ஜாதிகள், குடி, குலம் போன்றவற்றை அங்கீகரித்துள்ளார் என்றால் அதில் நன்மை இல்லாமலா, என்பது சிந்திக்க வேண்டியதாகும். ஜாதி அமைப்பால் பாரதம் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக, இயற்கை பாதுகாப்பு ரீதியாக ஏராளமான நன்மைகளை அடைந்துள்ளது. அன்நன்மைகளை ஒழித்து பாரதத்தை சுரண்டிக் கொழுக்க நினைக்கும் அந்நிய மதமாற்ற மற்றும் சூழ்ச்சிக்கார சக்திகள் கடந்த நூற்றாண்டு முழுக்கவே பல்வேறு துரோகிகளை வளர்த்து விட்டு அவர்கள் மூலம் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து சிந்தனா ரீதியாக தேசத்தை தவறான பாதைக்கு திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு விசிமுங்க, வள்ளுவரு வேதத்த எதுத்தவரு... அவரு சமண மதத்துக்காரரு னு நெறையா பேரு புளுகுரானுங்க.. திருக்குறளு ல இருக்கற வேத-வேதாந்த செய்திகள இந்த லிங்க் ல இருக்கற கட்டுரைகள் ல படிச்சிக்கோங்க மாப்ளைகளா...

இறுதியாக, ஜாதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் திருவள்ளுரின் குறள்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard