அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
ஓத்து என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக்குகளாகத் தொல்காப்பியம்சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்னும் நான்கினைக் குறிப்பிடும்போது இதனைத் தெளிவுபடுத்துகிறது.[1]
நன்னூல் நூலின் படியடுக்குகளைக் குறிப்பிடும்போது வெறுமனே 'ஓத்து' எனக் குறிப்பிடுகிறது.[2]தவல்காப்பிய இலக்கண நூலில் இந்த 'ஓத்து' என்னும் சொல்லை 'இயல்' என்னும் சொல்லால் வழங்கிவருகின்றனர். நன்னூல் குறிப்பிடும் 'படலம்' என்னும் சொல்லும் 'அதிகாரம்' என்று வழங்கப்படுகிறது.
ஓத்து என்னும் சொல்லுக்கு இயல் [3] என்று பொருள் கூறியுள்ளனர்.
↑'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும், இன மொழி கிளந்த ஓத்தினானும், பொது மொழி கிளந்த படலத்தானும், மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)
நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய் நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம் என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே (நன்னூல் 4)
சங்க இலக்கியங்கள் தமிழகத்தின் பண்டை வரலாற்றை உணர்த்தும் கருத்துப் பேழை. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை மிக்க தொல்காப்பியர் இயற்றிய "தொல்காப்பியம்" சங்ககால இலக்கண நூலாகும்.
"இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் இயம்பல்" என்பதே தமிழ் மரபு.
எனவே, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே பண்பாட்டுப் பெட்டகமாக நல்லிலக்கியங்கள் மலர்ந்திருக்க வேண்டும்.
"சமய உணர்வையும் தமிழையும் பிரிக்க முடியாது" என்ற பேருண்மையை முதன்முதலாக எடுத்தியம்பும் நூல் தொல்காப்பியம். குறிப்பாக, தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழகத்தின் பண்டைய இந்து சமய வழிபாட்டு உணர்வை சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளது.
தூய ஆன்மிக நெறியோடும், பக்தி உணர்வோடும் கடவுள் வழிபாட்டு வழியை, நாட்டின் நிலப்பகுப்போடு இணைத்துக் காட்டிய பெருமை தொல்காப்பியரையே சாரும்.*"மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே''* என்பது தொல்காப்பியம்.
தொல்காப்பியர், - மாயோன் - சேயோன் - வேந்தன் - வருணன்; என்று நான்கு கடவுளரைப் பற்றி முதலில் கூறி, அக்கடவுளர் நெறியைப் போற்றி வணங்கிய நிலங்களைக் குறிப்பிடுகிறார்.
இந்த நூற்பாவின் படி,
- காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தின் கடவுளாக மாயோனாகிய திருமாலும்
- மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாக சேயோனாகிய முருகப்பெருமானும்
- வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் கடவுளாக "வேந்தன்" ஆகிய இந்திரனும்
- கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கடவுளாக வருண பகவானும் குறிக்கப்பட்டுள்ளனர்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து காணப்பெற்ற பாலைப் பகுதியில் "கொற்றவை" வழிபாடு நிகழ்ந்ததாகவும் சங்க நூல் வழியும், சங்கம் சார்ந்தசிலப்பதிகாரம் போன்ற நூல் வழியும் அறிய முடிகிறது.
நில இயற்கை அமைப்பை ஒட்டி, இயற்கையோடு இயைந்த தெய்வ வழிபாட்டு நெறியைத்தொல்காப்பியம் மூலம் அறிகிறோம். தொல்காப்பியர் காலத்திலேயே தமிழக மக்கள், பாரத தேசிய ஒருமைப்பாட்டு உணர்வைச் சமயத் துறையில் கண்டுள்ளனர் என்பது பேருண்மையாகும்.
சூரியனையும், இந்திரனையும் புகழும் "ரிக்வேதம்" போல, தொல்காப்பியமும் சூரியன், இந்திர வழிபாட்டைக் குறிப்பிடுகிறது.
சூரிய வழிபாடு தமிழக மக்களிடம் நிலவியது என்ற உண்மையை தொல்காப்பியம், புறத்திணை இயலில் "கொடிநிலை வள்ளி" என்ற நூற்பா நன்கு விளக்குகிறது.
தொல்காப்பியர் நெறியும் ரிக்வேத நெறியும் ஒன்றாக அமைந்தது சமய வழி, பாரத ஒருமைப்பாட்டுக்கு விதை தூவப்பட்ட உண்மையைப் புலப்படுத்தும்.
இறையனார் களவியல் உரை நக்கீரனார் இயற்றியது. இவ்வுரை மூலம், சிவபெருமானே தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்தார் என்பது பெறப்படும் செய்தியாகும்.
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெரிந்த முருகவேளும் தமிழ்ச்சங்கம் வளர வழிகாட்டினர்.
சங்க இலக்கிய வழி உணர்ந்த திருவிளையாடல் புராண ஆசிரியரும் கண்ணுதல் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து தமிழாய்ந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவார்.
கடவுள் உணர்வுடன் தான், கடவுள் வழிகாட்டுதல் படிதான் சங்க இலக்கியங்கள் மலர்ந்தன என்பதை இறையனார் களவியல் உரை மூலம் நாம் தெளியலாம்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத் தமிழக மக்கள், நானிலங்களிலும் தெய்வ வழிபாட்டைப் போற்றினர் என்பதையும் தொல்காப்பிய இலக்கண நூலும், அதனைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் தெளிவுறுத்தும். சங்கப் பனுவல்களுள் பத்துப்பாட்டுள் ஒன்றான "திருமுருகாற்றுப்படை" தான் முதன்முதல் முருகப்பெருமானைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும். சமய ஒருமைப்பாட்டுக்கும், சமய வளர்ச்சிக்கும் வித்திட்ட முதல் இலக்கியம் திருமுருகாற்றுப்படை என்றும் கூறலாம். முருகப்பெருமானைப் பாராட்டும் நக்கீரர், பிற தெய்வங்களை இகழாமல், அவற்றையும் போற்றுவார்.
"பாம்பு படப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புல் அணி நீள் கொடிச் செல்வன்''*
வேற்றுச் சமயக் காழ்ப்பின்றி, அனைத்துச் சமய உணர்வையும் மதிக்கும் சமய ஒருமைப்பாட்டு நெறிக்கு திருமுருகாற்றுப்படை வழிகாட்டுகிறது.
முருகப் பெருமானைப் பற்றி முதன்முதலில் எழுதப்பட்ட நூலாகிய திருமுருகாற்றுப்படை "உலகம்" என்றே தொடங்குகிறது. நிலப்பகுப்பைக் கூறும் தொல்காப்பியம்,
- காடுறை உலகம் - மைவரை உலகம் - தீம்புனல் உலகம் - பெருமணல் உலகம்
என்றே குறிப்பிடும்.
- திருக்குறளும் "ஆதி பகவன் முதற்றே உலகு" என்றே கூறும்.
- சங்கநூல் வழி, சமய வளர்ச்சி மேற்கொண்ட கம்பர் "உலகம் யாவையும்" என்றும், - சேக்கிழார் பெருமான் பெரியபுராண தொடக்கத்தில், "உலகெலாம்" என்றும் கூறியமை சமய வளர்ச்சி நிலைகளையும், அதன்வழி சமுதாய நெறிமுறை வளர்ந்த பாங்கையும் புலப்படுத்தும்.
ரிக்வேதம் கூறும் சூரிய வழிபாட்டு நெறியை,*"கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே''* என்று தொல்காப்பியம் கூறும்.
இச்சூத்திரத்தின் விளக்கம்:- கொடிநிலை - சூரியன் - கந்தழி - "அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்" - வள்ளி - தண்கதிர்.
"கீழ்த் திசையில் நிலை பெற்றுத் தோன்றும் செஞ்சுடர் மண்டிலம், பற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள், தண்கதிர் மண்டிலம் என்று கூறப்பட்ட குற்றம் தீர்ந்த சிறப்பை உடைய மூன்று தெய்வமும் தேவரோடே கருது மாற்றால் தோன்றும்" என்பது இந்நூற்பா பொருள்.
இறைவனிடம், - அன்பும் - அருளும் - அறமும் வேண்டும் என்றே கேட்க வேண்டும் என்பதே சங்க இலக்கியம் காட்டும் சமய நெறியாகும்.
மனிதனைத் தெய்வமாக மாற்றும் சிறப்புடைய சங்க இலக்கியங்களைக் கற்போம்; வாழ்வில் வளம் சேர்ப்போம்.
என்ற குறளில் செயலை மேற்கொள்வதற்குக் காலமறிய வேண்டும் என்பதற்குக் கோட்டானையும் காக்கையையும் நம் முன்னே கொண்டு வருகின்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
மேலும், அந்த அதிகாரத்தின் கீழ்வரும்
ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள். 486).
என்ற குறளில் சண்டைக் கிடா விலங்கை உவமைக்கு எடுத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.
பிறிதொரு குறளில்,
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து (குறள். 490).
என்ற குறளில் பறவையினத்தைச் சேர்ந்த கொக்கை எடுத்துக் காட்டுகின்றார் திருவள்ளுவர்.
அடுத்து, ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில்,
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள். 126).
என்ற குறளில் ஆமையை எடுத்துக் காட்டுகின்றார்கள்.
ஆமையானது எப்படித் தன் ஓட்டுக்குள், தனக்குத் தீங்கு வரும் என்பதை அறிந்த உடன் நான்கு கால்களையும் தலையையும் உள்ளடக்கிக் கொள்கிறதோ, அதுபோலத், தனக்கு இழிவு வரும் என்று அறிந்தவுடன் ஒருவன் ஐம்புல அவாவையும் அடக்கியாளப் பயிலுவானாயின் அவ்வடக்கம் அவனுக்கு ஏழு பிறவியிலும் பாதுகாவலாய் வந்து துணை செய்யும் என்று ஆமையின் இயல்பை எடுத்துக் காட்டுகின்றார்.
அன்பை வலியுறுத்த வந்த திருவள்ளுவர் ‘அன்புடைமை’ அதிகாரத்தில்,
என்பில் அதனை வெயில் போலக் காயுமே அன்பில் அதனை அறம் (குறள். 77).
என்ற குறளில் எலும்பு இல்லாத உடலையுடைய புழு வெயிலில் காய்ந்து அழிந்து விடுவதுபோல அன்பில்லாத உயிர் அறத்தின் முன் தானாகவே காய்ந்துவிடும் என்று உவமை காட்டிக் கூறுகின்றார்.
‘இடனறிதல்’ அதிகாரத்தில்,
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற (குறள். 495).
என்ற குறளில் நீர்வாழ் உயிரினமான முதலையின் இயல்பை எடுத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.
ஆழமான நீர் நிலையில் முதலையானது பிற விலங்குகளை வெல்லும். ஆனால், நீர்நிலையை நீங்கித் தரைக்கு வந்தால் பிற விலங்குகள் முதலையைக் கொன்றுவிடும்.
‘சுற்றம்தழால்’ என்ற அதிகாரத்தில்,
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள (குறள். 527).
என்கிறார் வள்ளுவர். அவர், முன் குறள்களில் சில உயிரினங்களின் இயல்புகளை, நிலைகளை, செயல்படும் தன்மைகளை நமக்கு உவமைக்காக எடுத்துக் காட்டியுள்ளார்; இக்குறளில், காகத்தின் செயலை, நல்ல பண்பை அப்படியே பின்பற்றச் செய்கின்றார்; கடைப்பிடிக்கக் கூறுகின்றார். அதாவது, காக்கைகள் தமக்கு இரை கிடைத்தவுடன் அதனை மறைக்காமல், கரைந்து கத்தித் தமது இனத்தை அழைத்து அவற்றோடு உண்ணுமாம். அது போல மனிதனும் தனக்குக் கிடைத்த பொருட்களை மறைக்காமல் மற்றவர்க்கும் பகிர்ந்து கொடுத்து இன்பப்பட வேண்டும்.
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும் நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2 தெரிந்துதெளிதல் மு.வரதராசனார் உரை:நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 681 தூது மு. வரதராசன் உரை: அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 794 நட்பாராய்தல் மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே உள் பகை உற்ற குடி - குறள் 887 உட்பகை சாலமன் பாப்பையா உரை:செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது உள் பகை உற்ற குடி - குறள் 888 உட்பகை சாலமன் பாப்பையா உரை: அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 952 குடிமை மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - குறள் 954 குடிமை மு. வரதராசன் உரை:பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின் மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 957 குடிமை மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும் பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 992 பண்புடைமை மு. கருணாநிதி உரை: அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்
நல்ல குடியில் பிறதோர் இழிவான செயலை செய்ய மாட்டார்கள்
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959 குடிமை மணக்குடவர் உரை: வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.
மு.வரதராசனார் உரை:ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 956 குடிமை மணக்குடவர் உரை: பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது. மு.வரதராசனார் உரை: மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957:குடிமை மணக்குடவர் உரை: உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 960குடிமை மணக்குடவர் உரை: ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக. இது பணிந்தொழுக வேண்டு மென்றது. சாலமன் பாப்பையா உரை:ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும் நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9 நாணுடைமை மணக்குடவர் உரை:ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது. சாலமன் பாப்பையா உரை:ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையார்-கண்ணே உள - குறள் 23:3 ஈகை மணக்குடவர் உரை:இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம். இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது. மு.வரதராசனார் உரை: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.