முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்க. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம். இதனால், இறைவன் தன் அடியார்க்குப் பரமுத்தியை நல்குவான் என்பது கூறப்பட்டது. 1. சாலோகம் – இறைவன் இடத்தில் இருக்கும் நிலை. பூவுலகம் விட்டுப்போனபின் தேவர் உலகத்தில் வாழ்வதை சாலோகம் என்பர். 2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.கடவுளின் அருகே இருப்பதை சாமீபம் என்பார்கள். 3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு. கடவுளின் உருவினைப் பெற்று வாழ்வதை சாரூபம் என்றும்; 4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.கடவுளோடு இரண்டறக்கலந்து வாழ்வதை சாயுஜ்ஜியம் என்றும் சொல்வர்.
சாலோக சாமீப சாரூபம் - சைவ நன்னெறிகள் சாலோக சாமீப சாரூபம் சாவை மிஞ்சியவர் = (மரணமேயில்லாதவர் ) என்பதால் தான் கடவுளை சாமி என அழக்கிறோம். சைவ சமயத்தில், மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாக சைவ நாற்பதங்களைச் சொல்லுவர். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் என்பன வழங்கபடுகின்றன. சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைப்பணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும். ஆலயங்களில் இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைச் சுத்தம் செய்தல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவையும் சரியையில் அடங்கும். திருநாவுக்கரசர் சரியை நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார். கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய தீட்சை, விஷேட தீட்சை மற்றும் நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல் என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும். திருஞானசம்பந்தர் கிரியை நெறியில் நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.
யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும். சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.
ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பணம் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார். மாணிக்கவாசகர் ஞான நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்.
நாம் மனிதப் பிறவி எய்தியதன் நோக்கம், இறைவன் நமக்குக் கொடுத்தருளிய உடம்பு, அறிகருவிகள், உலகம், நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு, இறைப்பணி செய்து, முத்தி அடைவதே ஆகும். முத்தியடைவதற்கு மெய்யுணர்வாகிய ஞானத்தைப் பெறுதல் வேண்டும். அந்த ஞானத்தைப் பெறுவதற்குச் சாதனமாகச் சரியை, கிரியை, யோகம் என்பவற்றைச் சைவாகமங்கள் எடுத்துக் கூறுகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டும் சரியா பாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் எனத் தனித்தனியே நான்கு பாதங்களை உடையன. நம் புற வாழ்வையும் அக வாழ்வையும் நெறிப்படுத்தி, இறுதியில் வீடுபேற்றைத் தரும் சாதனங்களே இவை. ஆகவே இவற்றிடையே ஏற்றத்தாழ்வு கூறுமுடியாது.
முத்தியில் நாட்டமுடையவர்கள் இவற்றுள் எதனைப் பின்பற்றி ஒழுகினாலும் அது முடிவிலே ஞானத்துக்கு இட்டுச் சென்று இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய பரமுத்தியை நல்கியே விடும். ஞானத்தை நாம் ஒரு கனிக்கு ஒப்பிட்டால், சரியையை அரும்பு என்றும், கிரியையை மலர் என்றும், யோகத்தைக் காய் என்றும் கூறலாம். அரும்பாகத் தோன்றியது, இடையூறு ஒன்றுமில்லாது விட்டால் அது படிப்படியாக வளர்ச்சியடைந்து கனியாக மறுவது இயல்பு. அது போலவே சரியை நெறியைக் கடைப்பிடிப்பவர்கள், அவமரணம் போன்ற இடையூறுகள் நேராவிட்டால் படிப்படியாக பக்குவம் முதிர்ந்து, ஞானத்தை அடைந்து முடிவிலே மேலான வீடுபேற்றை அடைவது உறுதி.
இவை தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நான்கு மார்க்கங்களாக அடியார்களால் அனுசரிக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நான்காய் விரிவடைந்து பதினாறுபடிகளாய் அமையும். இப்படிகள் ஒவ்வொன்றும் உபாய மார்க்கம், உண்மை மார்க்கம் என இவ்விரண்டாக நோக்க முப்பத்திரண்டாகக் கொள்ளப்படுகிறது. உபாய மார்க்கம் என்பது உலக வாழ்வில் நின்றபடி இறையருளை வேண்டி ஏதாவது வழிமுறையைப் பின்பற்றி ஒழுகுதலாகும். உண்மை மார்க்கம் என்பது உலகப்பற்றை மெல்ல மெல்ல விட்டவர்கள் அம்மார்க்கங்களிலேயே தமக்கேற்ற ஒரு வழியைப் பின்பற்றி இறையருளை நாடி நின்று வேறு பயன் கருதாது ஒழுகுதலாகும். இவ்வாறான மார்க்கங்களில் நின்று ஒழுகிய பெரியார் சரிதைகளைப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம். திருமந்திரம், ஐந்தாம் தந்திரத்தில் திருமூலர் சாலோக சாமீபங்களைப் பற்றிப் பேசுகிறார். பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் பாசம் அருளான தாகும்இச் சாமீபம் பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம் பாசங் கரைபதி சாயுச் சியமே.
சாலோகம் என்பது ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது. சாமீபம் என்பதோ ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாத்த்தின் அடியில் வாழும் பேறு பெறுவது. சாரூபம் என்பது ஈசனின் வடிவே தாமும் எய்தி வாழ்வது. சாயுச்சியம் என்பது ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவைத நிலை. சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்பர்.
எனவே நண்பர்களே தங்கள் தங்கள் வீட்டின் அருகே உள்ள ஆலயங்களுக்குச் சென்று இறை வழிபாடு செய்யுங்கள். முக்தியை அடைய இது முதற்படி.
சாலோக,சாமீப,சாரூப,சாயுஜ்யம் என்பதே சரி..---சாந்நித்யம் என்பது வேறு . சா வை மி ஞ்சியவர் = (மரணமேயில்லாதவர் ) என்பதால் தானோ அவர் சாமி ..!!? 1.சா லோகம் = இறைவனின் உலகத்தில் இருத்தல். 2.சா மீபம் = (சமீபம் = அருகே ) இறைவனின் அருகே இருத்தல் , 3.சா ரூபம் = இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல் , 4. சா யுஜ்யம் = இறைவனோடு இரண்டறக் கலத்தல்
முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்க. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம்.
வேறு சிலர் இந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்று ஆச்சர்யப்பட்டு அவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வழிபடுகின்றனர். (அப்படிப்பட்டவரை ஜின்ஞாசு என்பர்.)
மெய்ஞானம் பெற்ற ஞானியும் வழிபடுகிறான்.
இப்படிச் சொல்லிவிட்டு, கண்ணன் சொல்கிறான், இவர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் என்றாலும், இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரியமானவன். ஏனென்றால், என்னுடைய உண்மையான சொரூபம் இவனுக்குத்தான் தெரியும். “வாசுதேவம் சர்வம் இதி’ – எல்லாவற்றுக்குள்ளும் வசிப்பவன் வாசுதேவன் என்னும் நானே என்று என் சுய ரூபத்தை இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் சொல்லும் கீதை நமக்குப் பிரமாண நூல்.
Java Kumar மறக்கருணையாகும். சில உயிர்கள் சிலகாலம் திருவடிபேற்றில் திளைத்தும் தத்தம் வினைப் புசிப்பின்படி மீண்டும் வரும். மீண்டுவாரா முக்தி பரமுக்தியெனில், அவசியம் வருகையில் அப்படி மீண்டும் வரும் நிலைக்கு பதமுக்தியென்று சொல்வர். சாலோகம் - ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது சாமீபம் - ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாதமடி புனிதவதியார் போல் வாழும் பேறு சாரூபம் - ஈசனின் வடிவே தாமுமெய்தி வாழ்வது சாயுச்சியம் - ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவித நிலை. சாரூபம் வரை பேறுபெற்ற உயிர்கள் மீண்டும் இறங்கிவருவது சொல்லக் கேட்கிறோம். இரண்டறக் கலந்துவிடல் பரமுக்தி. அவ்வளவுதான். முக்திக்கேற்ப பிரிபவை மார்க்கங்கள் என்பர்: அவை முறையே: தாசமார்க்கம் - என் கடன் பணிசெய்து கிடத்தலே என்றிருத்தல். சத்புத்ரமார்க்கம் - ஆணை நமதே என்று வேல் தூக்கும் உரிமை! கவனிக்க:அவ்வழி பிறந்தோரெல்லாம் சத்புத்திரரே. சகமார்க்கம் - இது நம்ம ஆளு என்ற பாவனையிது. வன்றொண்டர் வழி.
Chandru Rajamoorthy சாலோகம் - ஒரு வீட்டில் பணியாளராக இருப்பவர் எங்கும் சென்று பணிபுரியும் உரிமை பெற்றிருப்பது போல உயிர் முக்திக்குரிய லோகாமெங்கும் சென்று சிவனுக்கு கைங்கர்யம் செய்யும் நிலை. சாமீப்யம் - சிவலோகத்தில் ஈசனுக்கு அணுக்கத் தொண்டராக இருக்கும் பாக்யம்.ஒரு தந்தையின் அருகில் இருக்கும் குழந்தையின் இன்பம் அந்த உயிருக்கு சித்திக்கும். சாரூபம் - ஈசனையொத்த உருவம் கிடைத்தல். உயிருக்கு தோழமை உரிமை மூலம் கிடைக்கும் இன்பம் சித்திக்கும். சாயுஜ்யம் - இறைவனோடு இரண்டற கலத்தல்- நீரும் உப்பும் போல- இறைவனோடு பேதமற்று இருக்கும் உணர்வு, தான் வேறு இறைவன் வேறு என்ற வேற்றுமை உணர்வு இல்லாமல், “நான்” என்ற நிலை மறந்து சிவபோகத்தில் துய்த்தல்.
Saminathan Ramanathan 1) சாலோகம் - சிவலோகத்தில் நானும் ஒரு பிரஜை என்ற அளவில் புண்ணிய ஆத்மாக்களுக்கு (பித்ருக்களுக்கு) இருக்கும் மனோநிலை. (அமெரிக்க விசா கிடைத்து விட்டது என்று மகிழ்வது போன்ற மனநிலை...இது உதாரணத்திற்காக மட்டுமே சொல்கிறேன்) 2) சாமீபம் - இறைவனுக்கு அருகில் இருந்து பணிபுரியும் அளவுக்கு கிடைக்கும் வாய்ப்பு...என்பது போன்ற மனோநிலை. ரிஷிகள், சிவகணங்கள் போன்றோருக்கு வாய்க்கும். (அமெரிக்க குடியுரிமை கிடைத்தது போன்ற மனநிலை) 3) சாரூபம்- இறை உருவமாகவே சிவலோக வாசிகளாலும் ஏனைய உலகத்தவர்களாலும் வணங்கப்படும் நிலை. சுந்தரர், நந்தியம்பெருமான் போன்றோருக்கு வாய்த்தது போன்ற நிலை. (அமெரிக்க ஹைகமிசன், நாசா வில் வேலை...டிரம்புடன் நேரடியாக பேசலாம்...என்பது போன்ற மனநிலை) 4) சாயுஜ்யம் - சிவ சாரூப நிலையில் இருந்தாலும் கூட...சிவம் வேறு...தாம் வேறு...என்ற மனோநிலை இருக்கும்.அது மறைந்து தாமும் சிவமாகவே முழுவதுமாகி அவருடன் கலந்து விடுவது. (அமெரிக்க அதிபராகவே ஆகி விடுவது...போன்ற மனநிலை) ஏதோ என் சிற்றரிவுக்கு எட்டிய வகையில் புரிந்து கொண்டது இவ்வளவு. தவறிருந்தால் திருத்துங்கள்.அடியேன் ஏற்கிறேன்.
Santhanam Pammal Ganesa Saravanan இந்த நான்கு நிலையடைய சரியை, கிரியை, ஞானம், யோகம், என்ற நான்கும் வேண்டுவதில்லை, நம்முடன் இருக்கும் சிவனை அறிய அவனின்றி நான் இல்லை என்ற துணிவும், வைராக்கிய பக்தியும் இருந்தாலே இந்த நான்கும் இல்லாது அந்த நிலை அடையலாம், இந்த சரியை முதலா எவை அவனின்றி நானில்லை என்ற ஞானம் அடைவதற்கு சாதனங்கள், இந்த ஞானத்தால் வைராக்கிய பக்தி அடைந்து அவனே சரண் என்ற மாற முடியா சிந்தனை உன்டானால், அந்த சத்தான் சத்தியம் நமக்கு வசமாகும்,
Senthil Praveen 1.சாலோகம் - இறைவனின் உலகத்தில் இருத்தல் 2.சாமீபம் சமீபம்-அருகே இறைவனின் அருகே இருத்தல் 3.சாரூபம் - இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல் 4. சாயுஜ்யம் -இறைவனோடு இரண்டறக் கலத்தல். #திருமந்திரம் #ஐந்தாம்தந்திரம் சாலோக மாதி 3 ம் பாடல். பாசம் பசுப்போல் நெகிழ்ச்சியுறுநிலை சிவ அண்மையில் சிவவுலகமாகும். அப் பாசம் அருள்போல் வருத்துவதொழிந்து பொருந்து மளவானிற்பது சிவனண்மையாகும். பாசம் தோற்றத்தளவானிற்பது சிவவுருவமாகும். பாவம் அத் தோற்றமும் ஒடுங்கி நிற்பது சிவனாதலாகும்.
Santhanam Pammal தைத் திரிய உபநிஷதம். பிரம்மா நந்தவல்லியில் முதல் அனுவாகத்தில் பிரம்மம் என்பதற்கு ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, பிரம்மம் என்பது இருதயம் என்ற குகையில் புத்தி என்கிற துவாரத்தில் இருப்பது என்று எவன் அறிகிறானோ அவன் அந்த சர்வக்ஞனான பிரம்ம ஸ்வரூப த்துடன் பிரம்மமாகவே ஆகி எல்லா போக்கியங்களையும் அனுபவிக்கிறான். பிரித்தறிய முடியாததும், நிச்சியக் கப்பட்ட உருவம் மாறுபடாததும் எவ்விதத்திலும் அளக்க முடியாததும் ஞான உருவானதும் எதுவோ அது சத்தியம் அதாவது சத் எனப்படும் அதுவே பிரம்மம் .என்று சொல்லப் பட்டுள்ளது, பிரம்மசூத்திரத்திற்கு நீலகண்ட சிவாச்சாரியார் எழுதிய சிவாத்துவித உரையை காசிவாசி செந்தில் நாத ஐயர் தமிழாக்கம் செய்தார், அதில் அவர் உபநிஷத் உபக்கிரமணிகை என்ற நூண்முகம் எழுதியுள்ளார், அதில் உபநிஷத்துகளில் எங்கெங்கு பிரம்மம் என்று சொல்லப்படுகிறதோ அதெல்லாம் பரமசிவனையே குறிக்கிறது என்று காரிய காரண எடுத்து காட்டுகளுடன் நிறுவியுள்ளார், அந்த கருத்தை முன் சென்ன பிரம்மத்தோடு ஒப்பு நோக்கினால் அந்த பிரம்மம் சிவன் என்பது புலனாகும், புலனாகவே நம் ஆத்மா இருக்கும் இடத்தில் நுழைவாயில் சிவன் இருக்கிறார் என்பது புலனாகும், எனினும் அவர் ஆன்மாவுக்கு தெரிவதில்லை, சிவஞான போதத்தின் கருத்துப் படி ஆன்மா ஐம்புலன்களையும், சிவனையும் அறியாது அவற்றுடன் உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரியும், அந்த நிலை மாறி சத், என்றும் சத்தியமான சிவனை அறியும் ஞானம் வந்தால் அப்போது சிவனாகவே மாறி ஆனந்தத்தில், திளைக்கும், மாணிக்கவாசகர் பூவல்லியில் 'ஆனந்தத் தேனி இருக்கும் பொந்தினை பாடி பரவி பூவல்லி கொய்யா மோ' என்கிறார் அதன் படி முயன்று அந்த ஆனந்த தேனை அடைவதே சிவமயமாகும், இந்த நிலை எட்ட மும்மல நீக்கம் ஏற்படும் மற்ற மலங்கள் அடியோடு தொலைந்தாலும் ஆணவ மலம் முழமையாக தொலையாது, விஞ்ஞான கலர் என்ற நிலை அடைந்தாலும் ஆணவ மல நீக்கத்தின் படி சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்ய, என்ற நிலைகளை ஆன்மா அடையும், அதாவது சிவலோக வாசம் சிவசமீபத்தில் இருப்பது, சிவன் போல உருவம் கொள்ளல், சிவனோடு ஒன்றுதல் உண்டாகும், என்று சைவ சித்தாந்தின் துணிபு, உபநிஷதம் நம்மோடு இருக்கும் பிரம்மத்தை அறிந்தால் பிரம்மமாகலாம் என்கிறது, சிந்தாந்தமோ ஆனந்த தேனை உண்ண பொந்திலிருக்கும் தேனை எடுக்க முயற்சிப்பது போல முயற்சித்தால் நான்கு வகையில் சிவனோடு ஐக்ய மேற்படும் என்கிறது, உபநிஷதம் சொல்வது பாவனை, சித்தாந்தம் சொல்வது பாவனையற்ற ஆனந்த முடிவு, அடியேனுக்கு புரிந்த வகையில் .பதிவு செய்துள்ளேன், சுருக்கமாக கூறப்பட்டது,
Gomathinayagam D அந்த நான்கு நிலைகளில் ஆன்மா நுகரும் இன்பம் ஐம்புலன்கட்கு அப்பாற்பட்ட சிவபோகமாகும். இதனை பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் “உணர்வின் நேர் பெற வரும் சிவபோகத்தை உருவின்கண் அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர அருளினை” (திருஞானசம்பந்தர் சுவாமிகளின் தில்லை தரிசனம்) என்றருளியுள்ளார். அனைத்துலகுமாய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா என்பது திருவாசகம். ஐம்புலன்களால் காண இயலாத இறைவனிடம் நுகரும் இன்பம் ஐம்புலன்கட்கு அப்பாற்பட்டது. அவ்வின்பம் இத்தன்மையது இந்நிறத்தது என எழுதி காட்டோணாதது.
Dharumai Saravanasivam சாலோக, சாமீப, சாரூப நிலைகளில் உயிரானது சகஜ மலமான ஆணவ மலத்தோடு கூடிய நிலையில் முறையே கயிலாய வாழ்வு ஆகிய ஆனந்தத்தையும், இறைவனின் அருகிருக்கும் ஆனந்தத்தையும், இறைவனின் திரு வுருவத்தைப் பெற்று அதற்குரிய அவ்வானந்தத்தையும் அனுபவிக்கும். இந்நிலைகளை அடைந்த உயிர்கள் ஒரோவழி பிறப்புக்கு வரலாம், வரும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய ஆச்சார்யர்கள் அவ்வாறு வந்தவர்களே. இவை மூன்று நிலையும் 'பத முத்தி ' ஆகும். உதாரணம் : பிரம, விஷ்ணு, ருத்ரர் ஆகியோரும் இன்ன பிற புவனாதிபதிகளும் பத முத்தியில் இருப்பவர்களே. அதனால்தான் விஷ்ணுவானவர் காரண, காரியங்களுக்காக அவதாரம் எடுக்க நேர்ந்தது. ஆனால் சாயுஜ்ய நிலையில் உயிரின் ஆணவமலம் வறுத்த விதைபோல் பக்குவப்பட்டு விறகிடை நெருப்பு போன்றும், வெந்நீரில் சூடும் போன்றும், மலரில் வாசனை போன்றும், ஆகாயமும் காற்றும் போன்றும், சூரிய ஒளியும் நமது கண்ணும் போன்றும் அதாவது மேற்சொன்ன இவைகளெல்லாம் எப்போதும் ஒன்றுள் மற்றொன்று அடங்கி அந்த ஒன்றாகவே தெரிவதுபோல் உயிரும் சிவத்துள் அடங்கி சிவானந்தத்தை அனுபவிக்கும். இந்நிலையில் உயிருக்கு மீண்டும் பிறப்பு உண்டாகாது. இதுவே சுத்தாத்துவித சைவசித்தாந்த முத்தி எனப்படும். இதுவே 'பர முத்தி ' என்றும் சொல்லப்படும். இந்நிலையை மாணிக்கவாசகர் திருக்கோத்தும்பி பதிகத்திலும், சேக்கிழார், 'ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள ' என்னும் பெரியபுராணப் பாடலிலும், தருமை ஆதீன குருமுதல்வர் இந்தனத்தின் அங்கி என்னும் சிவபோகசாரப் பாடலிலும் விளக்குகின்றனர். இந்நிலையை உணரத்தான் முடியுமேயன்றி உணர்த்த முடியாது. திருச்சிற்றம்பலம். முனைவர். தருமை சரவணசிவம்.
சாத்துக்கூடல்-நடராஜ குருக்கள். க.விருத்தகிரி. (இதற்கு நானும் எனக்கு தெரிந்தவரையில் ஒரு பதில்தரலாமென முயற்சிக்கிறேன்)...... சனாதன தர்மம் என்ற ஹிந்து மதத்தில் எல்லா தேவர்கள் தேவதைகளுக்குமே தனித்தனி உலகங்கள் உள்ளன.அதன்படி;ஒருவன் இவற்றுள் ஏதேனும் ஒரு தேவனை உபாசித்து அதனிடம் செல்லவேண்டி அவ்வழியில் துவக்கநிலையில் பிரவேசிக்கிறான் என்றால் முதலில் அதுவே "பூஜை""வழிபாடு" எனப்படும்.1)அந்த வழிபாட்டின் இறுதிப் பயனாக முதலில் அவன் அந்த தேவதையின் உலகத்தை நெருங்கி அதனை அடைவான்.அதுவே"சாலோஹம்"என்பது.2)அதன் பிறகு "ஆத்மார்த்த"பரார்த்த பூஜை"யில் ஒரு அனுமானமாக அத்தேவதைக்கு செய்த அதே உபசாரங்களை;அவன் அந்த தேவதையின் அருகிலிருந்து அதற்கே நேரிடையாக தொண்டு செய்யும் பாக்கியத்தை பெறுவான்.௮துவே "சாமீப்யம்"என்பது.3)பிறகு புழுவை குளவி கொட்டிக்கொட்டி;புழு அதையே நினைத்து நினைத்து அதுவும் குளவியாக மாறிவிடுதல் போலே;தானும் அந்த தேவதை போலவே மாறி அதன் உருவை ஒத்திருப்பான்.இதுவே "சாரூபம்"என்பது.(உதாரணம்; மஹரிஷி"புருசுண்டி"இவர் விநாயகப் பெருமான் போலவே முகத்தில் ஒரு துதிக்கையுடனிருப்பார்.) 4)இவன் உபாசித்த அந்த தேவதையானது தனது பணிக்காலத்தை நிறைவு செய்து; அடுத்த நிலைக்கு அது சென்றதும்;இவனே அப்பணியை அந்த தேவதையின் ஸ்தானத்திலிருந்து செயல்படுத்துவான்.மற்ற மற்ற தேவர்கள் தேவதைகளின் உலகங்களுக்கு இதுவே"சாயுஜ்யம்"என்ற முக்தி.*(குறிப்பு)இந்த சட்டம் சிவபெருமானுக்கு மட்டும் இல்லை.ஏனெனில் சிவபதத்துக்கு மேலே வேறு ஏதும் பதவிகள் கிடையாது.(இது மாதிரி பல காலங்களில்;பலஇந்திரர்கள்;பல பிரம்மாக்கள்;பல நாராயணர்கள் வந்து போயிருக்கிறார்கள்) இதில்"ஈறிலாதவன் ஈசன் ஒருவனே"என்ற வாக்கின்படி" "சிவம்"ஒன்றுதான் இறுதி நிலை.அதற்கு போக்கும் இல்லை; வரவும் இல்லை.எங்கும் பரவியிருந்தாளும் அதன் இடம் மட்டும் என்றும் நிரந்தரம்.நாம் சாயுஜ்யத்தில் அதனை அடைந்தால்; நாம் அந்த "சிவபெருமானை"மட்டும் ரீ ப்ளேஸ் செய்ய இயலாது.ஆறு கடலில் கலப்பது போலவே நாமும் அவருடன் கலந்து நாம ரூபங்கள் இழந்து செயலற்று இங்கு இருக்கலாம்."சிவ சாயுஜ்யம் என்பது இதுதான்.இந்த ஒரு இடத்தில் மட்டும் வரும் "சாயுஜ்ய முக்தி"என்பது செயலற்று அதனோடு ஒன்றி கலந்து இருப்பதுதான்.
Swaminatha Sivacharyar சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் (அணோரணீயான் மஹதோ மஹீயான்) கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி (விஷம் அமிர்தமாதல்) வேடமும் நீறும் விளங்க நிறுத்தி (சாமீபம்) கூடும் மெய் தொண்டர் குழாத்துடன் கூட்டி (சாலோகம்) அஞ்சகரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சகருத்தின் நிலை அறிவித்து (சாரூபம்) தத்துவநிலையை தந்தெனை ஆண்ட (சாயுஜ்யம்) வித்தக விநாயக (பரசிவ) விரைகழல் சரணே (அத்வைத அனுபூதி)
Sivaganesh Tiruvannamalai மற்ற இன்பங்கள் புறத்தால் நிகழ்வன. மேலும் அவற்றிற்கு குறிப்பிட்ட காலம் மற்றும் அளவு மட்டுமே. ஆனால் இறைவனிடம் கிட்டும் பேரின்பம் அளவற்றது. அதனை புற உடம்பால் உணரவே முடியாது. அக உணர்வால் மட்டுமே உணர முடியும். அதற்கு கலம் அளவு இல்லை. வயது இல்லை. சொல்ல முடியாத வர்ணிக்க முடியாத ஓர் இன்பம். பொய் பொறாமை உருவாக்காதது. ஏதோ அடியேன் இதனை கூற தகுதி உடையவனா என தோன்றினாலும் அடியேன் உணர்ந்ததை கூறினேன்.
Pitchumani Sattanathan உயிர் பிரிந்து செல்லும் நான்குவிதமான உலகத்தை அடைகிறது அதுவே சாவு (சா) ராஜ்ய (உ)லகு ((சா)ரூப (உ)ல கு (சா)லோக (உ)லோகு (சா)சமீப (உ)லகு ஆகும் மேலும் சரியை கிரியை,யோகம்,ஞான மார்கத்தின் வழியாக அந்த அந்த பதவியை பெறலாம்
Java Kumar திருமந்திரம் ஐந்தாம் தந்திரத்தில் (பாடல் 1443 - 1513) பதமுத்தி, பரமுத்தியான நான்கு வழிகள் நன்கு விளக்கப் பட்டுள்ளன. சார்ந்த மெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர் சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் தேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே. சாலோகம், சாமீப்யம், சாரூபம் என்பவை இட்டுச் செல்லும் பதமுக்தி கடந்த, சாயுஜ்யம் என்ற பரமுக்திக்கும் அடிப்படை 'யான் எனது' என்ற நிலை கடத்தல் மட்டுமே. சாயுச்சிய நிலையே துறவறமாவது. அதென்ன பதமுக்தி மற்றும் பரமுக்தி? பரம்பொருளானது, பிறந்திறந்தோய்ந்திருக்கும் உயிர்களின் மேல் கருணை கொண்டு அவற்றைத் தன் திருவடியுடன் ஒன்றாக்கிக் கொள்வது அறக்கருணையெனில், விட்டுவிலகி வீடுபேறு மட்டுமே குறியெனக் கொள்ளாமல் மற்றீண்டு வரும் உயிர்களின் மேல் கொள்வது மறக்கருணையாகும்.