Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சனாதனமும் திராவிடமும்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
சனாதனமும் திராவிடமும்
Permalink  
 


சனாதனமும் திராவிடமும்

By   கோதை ஜோதிலட்சுமி  |   Published on : 25th October 2019 01:52 AM  |   அ+அ அ-   |  

 

சனாதன தர்மம் என்பது பாரத தேசத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒரு வாழ்வியல் முறை. சனாதனம் என்பதற்கு எப்போதும் இருப்பது, நிலைத்திருப்பது, அழிவற்றது என்பதே பொருள். இந்த வாழ்வியல் முறை நிலையானது என்பது அதன் முழுமையான பொருள். அறிவியல் தொடங்கி தத்துவங்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் வரை அனைத்துத் துறைகளையும் தனக்குள் கொண்டு ஒற்றை ஒளியாய் உயர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் இங்கே நிலைத்திருக்கும் தத்துவம் அல்லது வாழ்வியல் அறம்.
சனாதனத்துக்கு எதிரான போர், தமிழ்ச் சமூக மரபிற்கு முற்றிலும் மாறான எதிரி நிலையில் இருப்பது சனாதன தர்மம் என்று தற்போது தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்தத் தேசத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்தவர்கள், அதனை திராவிட நாகரிகம் என்று நிறுவுகிறார்கள். கீழடி அகழாய்வும் இன்னும் பல தமிழகத் தொல்லியல் ஆய்வுகளும் நமது தொன்மையைப் பறைசாற்றி வருகின்றன. கலாசாரம், வழிபாடு, அறம் சார்ந்த நம்பிக்கைகள் என்று பாரதம் முழுவதும் இந்த மரபின் தொடர்ச்சி இருப்ப
தாகக் கருத முடியும். 
அதேபோல வேதத்தின் காலத்தைக் கணக்கிடுவதிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற முடிவை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஒரு தேசத்தில் இரு பெரும் முதுமொழிகள் பயின்று வந்திருக்கின்றன. அந்த மொழி பேசுவோர் தங்களுக்குள் பரிவர்த்தனைகள் செய்துகொண்டு மிகச் சிறப்பு மிக்க ஒரு கலாசாரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் நீட்சி இன்றளவும் சற்றும் தொய்வின்றி தேசத்தில் நிலைபெற்றிருக்கிறது.
திராவிடம் என்ற சொல் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக அதிக அளவில் புழங்கி வருகிறது. தமிழ் என்பது மொழி, தமிழர் என்பது அம் மொழியைப் பேசுவோர், திராவிடம் என்ற கோட்பாடு எப்போது உயிர்பெற்றது? திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் சொல் என்கிறார்கள். மனுஸ்மிருதி தொடங்கி பல வடமொழி இலக்கியங்களும் திராவிடர் என்ற சொல்லை தேசத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் தென்னிந்திய மக்களை திராவிடர் என்று குமாரில பட்டர் குறித்தார். 
திராவிட சித்தாந்திகள் ஆரம்பத்தில் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி பேசும் மக்களையும் பிரதேசத்தையும் குறித்தே திராவிட நாடு என்ற கொள்கையை முன்வைத்தனர். இந்தக்  கொள்கையை தமிழர் அல்லாத பிற மொழி பேசும் தென்னிந்திய மக்கள் ஏற்கவில்லை. அதனால் திராவிடம் என்பது தமிழரை மட்டும் குறிப்பதாக சுருங்கிப் போனது. அதிலும், சில பிரிவினரைப் புறந்தள்ளி இன்னும் சுருக்கப்பட்டது. வடமொழியில் வழங்கும் இந்தச் சொல் வடவரின் ஆதிக்கத்திலிருந்து நம்மவரைப் பாதுகாப்பது என்ற சித்தாந்தத்துக்கான சொல்லாக அமைந்திருப்பதே முரண். 
திராவிடர் என்று கூறிக் கொள்வோர் இறை நம்பிக்கை அற்றவர்களாகத் தங்களை முன்னிறுத்துகிறார்கள். இறை நம்பிக்கை என்பது தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு இருந்து வருவது; யாரோ புகுத்தியது அல்ல. தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்களில் பயின்று இறை சிந்தனை இங்கே வேரூன்றியிருக்கிறது. 
சனாதனத்துக்கு எதிராக நிற்போர் இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர். ஒன்று, சனாதனம்தான் இந்த நாட்டில் ஜாதியப் பாகுபாட்டை ஏற்படுத்தி அதனை ஊக்குவித்தும் வருகிறது. மற்றொன்று, மதத்தின் பெயரால் அரசியல், அதனோடு தொடர்புடையதே ஜாதியம் என்றும் சாதிக்கிறார்கள். தமிழர்களின் வாழ்வியல் முறையில் இந்த இரு கோட்பாடுகளும் எப்போது தொடங்கின? இலக்கியங்கள் கூறும் சான்றுகளைப் பார்த்தால் ஜாதியம் என்பது அநாதி காலமாக இருந்து வந்திருக்கிறது. பிறப்பால் ஜாதியைக் கூறுவது, அதற்குள் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தது ஆகியவை அனைத்தையும் நாம் தொல்காப்பியம் தொடங்கி இன்று வரை காண்கிறோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்ற கோட்பாட்டை திருக்குறள் லட்சியமாக வைக்கிறது. அந்த லட்சியம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்னும் எட்டப்படவில்லை.
தொல்காப்பியத்தில் திருமணம் செய்து கொள்வதற்கான பொருத்தங்களைப் பற்றிக் கூறும்போது ஒத்த குடிப்பிறப்பும்என்றுதான் தொடங்குகிறது. அதேபோல் பிரிவு பற்றிக் குறிப்பிடும்போது ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன என்கிறது. உயர்ந்தோர் என்ற பாகுபாடு இருக்குமேயானால் அதன் எதிர்ப்பதமும் சமூகத்தில் இருந்துதானே தீரும். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று தமிழ் மூதாட்டி ஒளவையார்  பாடும் ஜாதி என்ற கட்டமைப்பு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்று அவர் குறிப்பிடும்போது, இந்த இரண்டுமே சமூகப் பாகுபாட்டில் இருந்தன என்பதை அறிந்து கொள்ளலாம்.
சங்க இலக்கியங்களிலும் புலவர் பெருமக்களின் பெயர் தொடங்கி ஜாதி மற்றும் அதற்கான சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றளவும் ஜாதியப் பாகுபாடு தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போன நிலையில் இருக்கிறது. இவை களையப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக நமக்குள் இருக்கும் பிணக்குகள் தீரவேண்டும். ஆனால், இதனை சனாதனம்தான் கற்றுத் தந்தது என்று சாதிப்பதும் ஜாதியம் தமிழரின் மரபு அல்ல என்று வாதிடுவதும் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழியாகாது. 
அடுத்து, சமயம் என்பது தமிழருக்கு இருந்ததில்லை என்பதாக ஒரு கருத்தைப் பரப்புகிறார்கள். முற்றிலும் தவறான வாதம். கடவுள் வாழ்த்து இல்லாமல் எந்த இலக்கியமும் காணப்படவில்லை. சனாதனம் கூறும் பல தெய்வ வழிபாட்டை தமிழர் மரபும் நிலப் பாகுபாட்டில் ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு தலைமை தெய்வத்தைக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். நிலத்துக்கான முதற்பொருள் கூறும்போது தெய்வம் எனத் தொடங்குகிறது.முதன்மையானதாக நிற்பது தெய்வம் என்பதை தொல்காப்பியம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழர் மரபை என்றைக்கும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும் தெய்வ நம்பிக்கை, ஊழ் பற்றிய கருத்தும் எதன் பாற்பட்டவை? ஊழ் பற்றிய நம்பிக்கையை சங்க இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பெருங்காப்பியங்கள் எனஎல்லாவற்றிலும் காண்கிறோம். மறுபிறப்பு நம்பிக்கை வானியல் சார்ந்த அறிவு, அது சார்ந்த நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் கடவுள் எனும் சொல் ஆகியவை அனைத்தையும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். மறுபிறப்பு மேலுலகம் துறவு ஊழ் நீத்தார் கடன் என்று சனாதன தர்மம் பேசும் பலவற்றையும் திருக்குறள் தெளிவாகப் பேசுகிறது. 
வேதநெறி என்பதும் தமிழர் நெறி என்பதும் வேறு வேறானவை என்று சாதிக்க முயற்சிக்கும்போது சங்க இலக்கியங்களில் பயின்று வரும் முனிவர்கள், தேவர்கள், வேதம் பற்றிய குறிப்புகள், யாகம், வேள்வி நடத்தும் விதம் போன்ற பல செய்திகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. சனாதனம் என்றும் தமிழர் நெறி என்றும் எதனையும் பகுத்துக் கூறுவதைக் காட்டிலும் இரண்டுக்குமான பொதுமைகளை ஏற்றுக்கொண்டு இரண்டும் நம்முடையதே என ஏற்பதே சரி.
வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் என்று வைணவமும், வேத நெறி தழைக்க சைவத் துறை விளங்க என்று சைவமும் கூறுவதையும் அதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்று இன்றுவரை போற்றுவதும் மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் அமைந்திருக்கும் ஆலயங்களும் சமய இலக்கியங்களும் இந்த மண்ணின் மக்களின் சமயப் பற்றுக்கு எடுத்துக்காட்டு. மத நம்பிக்கைகளிலும் மரபுகளிலும் பொதுமைப் பண்புகள் நிறைந்திருக்கின்றன. சனாதன தர்மம் நான்கு வகை ஜாதியப் பாகுபாடுகளை மட்டுமே சுட்டியிருக்கிறது. ஆனால், இன்றைக்கு ஆயிரக்கணக்கான ஜாதிப் பிரிவுகளும் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற புரையோடிய நிலையும் எங்கிருந்து தோன்றின? 
திராவிடர் என்போர் இந்தத் தர்மத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் என்ற கொள்கையை முன் வைத்தவர்கள் யார் என்று பார்த்தால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த, இந்தியாவைக் கண்கொண்டு பார்த்திராத ஐரோப்பியர்கள் அல்லது மதத்தைப் பரப்புவதற்காகத் தென்னகம் வந்த பாதிரியார்கள். ஏன் இத்தகைய வேறுபாடுகளை அவர்கள் கற்பித்தார்கள்?   இதற்கான விடையை நடுநிலையோடு நின்று சிந்தித்து, தரவுகளை ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டியது தமிழ்ச் சமுதாயத்தின் பொறுப்பு.  
நிலவுடைமைச் சமூகம் என்றைக்குத் தொடங்கியதோ அன்றைக்கே மனிதர்களிடையே இது என்னுடையது என்ற சுயநலம், உயர்வு-தாழ்வு கற்பித்துக் கொள்ளப்பட்டது. இதிலிருந்து மாறி சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் எனும் கருத்தை சனாதன தர்மம், தமிழர் நெறி ஆகிய இரண்டும் போதிக்கின்றன. லோகா சமஸ்தா சுகினோ பவந்து சர்வே ஜனா சுகினோ பவந்து என்கிறது வடமொழி. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் 
பராபரமே (தாயுமானவர்) என்கிறது தமிழ் நெறி. பாரதத்தில் இடத்திற்கேற்ப மொழி மாறுபடலாம்; அறம் மாறுபடுவதில்லை.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

இறக்குமதியானது இந்து சமயம்என சொல்லும் மூடர்களே?"
ஆதாரங்களை அலசுவோம்.
சிந்து சமவெளி நாகரிகத்தின்...
காலகட்டத்தை பற்றி பல தகவல்கள் இருந்தாலும் கூட...
கி.மு 3,500லிருந்து கி.மு 1,700குள் அந்த 1/22
நாகரிகம் பற்றிய காலகட்டம் அடங்கி விடுகிறது.
இந்த கால கட்டத்திற்குள் தான் கைபர், போலன் கணவாய்கள் வழியாக ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆக மொத்ததில்,
கி.மு 3500க்கு முன்னதாக 'ஆரியர்' என்ற இனம் இந்தியாவில் இல்லை.
அதற்கு பின்னால் தான் 2/22
ஆரியர்களின் வரலாறு இந்தியாவில் ஆரம்பமாகிறது.
சரி,
தமிழின் முதல் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு செல்வோம்.
தொல்காப்பியத்தில் தெய்வ வழிபாட்டை பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார்.
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் 3/22
உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"
(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)
 
இந்த பாடலில் வரும் மாயோன், சேயோன், வருணன் போன்ற வழிபாட்டு தெய்வங்கள் யார்...?
'மாயோன்' - திருமால் எனவும்,
4/22
'வருணன்' வேதங்களில் குறிப்பிடும் வருணபகவான் எனவும்,
உறுதியாக எடுத்துக்கொள்ளலாம்.
'சேயோன்' என்பது தமிழ் கடவுள் முருகன், சிவன் இருவரில் யாரை குறிக்கிறது என்பதில் தமிழறிஞர்களிடையே இன்று வரை பலத்த சர்ச்சை தான் நிலவுகிறது.
இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது...
5/22
தொல்காப்பியத்தின் காலம்.
கி.மு. 8000லிருந்து
கி.மு.20,000 வரையாக
பல காலகட்டங்களை தமிழறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.
ஆரம்பித்திலே குறிப்பிட்டபடி...
கைபர், போலன் கணவாய் வழியாக கி.மு.3500 க்கு பிறகு வந்த ஆரியர்களின் வேதங்களில் உள்ள...
6/22
திருமாளும், வருணனும் எப்படி அதை விட பழமையான தொல்காப்பியத்திற்குள் வந்தார்கள்?
மேலும்,
 


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

தொல்காப்பியத்தில் கூறப்படும் திருமண வகைகளை பார்ப்போம்.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக்கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து 7/22
மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.
- தொல். பொருளதிகாரம்-1038
தொல்காப்பியரின் இந்த சூத்திரத்துக்கு...
உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் நீண்ட விளக்க உரை எழுதி இருக்கிறார்.
மேலும்,
எட்டுவகைத் திருமணங்களின் விவரமாக...
ஆ.சிங்காரவேலு 8/22
முதலியாரின் அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் கலைக்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள்:–
 
1).பிராம்மம்,
2).தெய்வம்,
3).ஆருஷம்,
4).பிராஜாபத்யம்,
5).ஆசுரம்,
6).காந்தர்வம்,
7).இராக்ஷசம்,
8).பைசாசம்
 
பதிவின் நீளத்தை கருதி...
இந்த எட்டு வகை திருமணங்களில் நமக்கு 9/22
தேவையானது முதலாவது வகையான பிராம்மம் திருமணம் பற்றிய தகவல்கள் மட்டும் பார்ப்போம்.
'வேதம் ஓதினனாகவும்...
நல்லொழுக்கனாகவும்..
இருக்கின்ற பிரம்மச்சாரியைத் தானாகவே அழைப்பித்து
அவனை நூதன வஸ்திரத்தால் (புத்தாடைகளால்) அலங்கரித்து,
கன்னிகையையும் அப்படியே நூதன 10/22
பூஷண அலங்காரம் (பெண்ணையும் நகை, ஆடைகளால் ) செய்வித்து
அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது பிராம்மம் ஆகும்.
இதில் வேதம் ஓதுகின்ற மாப்பிள்ளை யார்....?
அவன் எந்த வேதத்தை ஓதினான்...?
ஆரியர்கள் கி.மு 3500 ல் வந்தார்கள் என்றால்...
கி.மு 8000ல் வேதம் ஓதும் மணமகன் எப்படி 11/22
தொல்காப்பியத்தில் வந்தான்....?
அடுத்ததாக...
தொல்காப்பியம் மரபியலை பார்ப்போம்.
''நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய''(தொடர் எண்- 1570)
முப்புரிநூல்,
கமண்டலம்,
முக்கோல்
எனக்கூடிய தவம் செய்யும் கைதாங்கி,
அமரும் பலகை
இவை நான்கும் 12/22
அந்தணர்க்குரியவைகள்.
(வனத்திற்கு சென்று தவம் செய்யும் வனப்பிரஸ்தன்)
''அந்தணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.''
(தொடர் எண்- 1572)
அந்தணர்க்குரிய முப்புரி நூல், கமண்டலம், முக்கோல், பலகை அரசர்க்கும் பொருந்தும்.
(அரசனும் தவம் செய்ய தகுதியானவன்)13/22
இதில் குறிப்பிட்டுள்ளபடி...
தொல்காப்பியத்தின் இந்த அந்தணன் யார்...?
கி.மு 3500 படையெடுத்து வந்த ஆரியர்கள் தான் அந்தணன் என்றால்...
அவன் எப்படி கமண்டலம், முப்புரி நூல், அமரும் பலகை உடன் எப்படி தொல்காப்பியத்திற்குள் வந்தான்...?
அவனுக்குரிய அடையாளங்களை எப்படி 14/22
தொல்காப்பியரால் சொல்ல முடிந்தது?
அந்த அந்தணன் எந்த தெய்வத்தை நோக்கி காட்டில் தவம் செய்தான்?
இப்போதாவது புரிகிறதா...
இந்து சமய பிரதான கடவுகளான சிவன், விஷ்ணுவை தமிழர்கள் வழிப்பட்டார்கள் என்று.
இந்த உண்மைக்கு மாறாக...
சிவனையும், விஷ்ணுவையும் ஆரிய கடவுள்கள் எனவும், 15/22
அது தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்கிறது.
எனவும்...
தமிழரே அல்லாத சிலர் தான்...
திராவிட போர்வையில் புகுந்து...
தமிழர்களை திசை திருப்பி...
ஏமாற்றி பிழைக்கின்றனர்.
'தமிழ் மொழியின் காவலர்கள்' மற்றுமொரு போர்வை வேறு.
தமிழர்களின் இலக்கியங்களான... 16/22
பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை,
அகநானூறு,
புற நானூறு,
சிலப்பதிகாரம்...
இப்படி எண்ணிலடங்காத நூல்கள் அனைத்திலும் சிவன், விஷணுவை போற்றி பாடல்கள் உள்ளதே....!
அதற்கு இவர்கள் என்ன பொய் சொல்லி சமாளிக்க போகிறார்கள்?
#பகுத்தறிவு' என்ற பெயரில்,
சிவன், விஷ்ணுவை பற்றிய 17/22
குறிப்புகள்...
துதிகள்,
புகழ் மாலைகள் உள்ள இந்த நூல்கள் அனைத்தையும் குப்பையில் எறிய போகிறார்களா....?
இந்த பகுத்தறிவு பகலவன்களை செருப்பால் அடிப்பான் தூயத் தமிழன்.
இந்த இலக்கிய நூல்கள் இல்லாமல்...
தமிழனின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு இவைகளை நிறுவ முடியுமா?
18/22
அல்லது
காப்பாற்றத்தான் முடியுமா?
உண்மையை சொன்னால்...
இவர்கள் தமிழை, தமிழர்களை காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு...
'பகுத்தறிவு' என்ற பெயரில் தொன்மையான தமிழனின் வரலாற்றை அழிக்க...
அந்நியர்களால் நியமிக்கப்பட்ட தமிழின துரோகிகள்.
இவர்களின் சுயரூபம் அறியாமல்... 19/22
அப்பாவி தமிழர்கள் இன்று வரை சிக்கி சீரழிந்து வருகிறார்கள்.
இந்த இன துரோகிகளை இனியும் இப்படியே விட்டு வைத்தால்...
தமிழ் நூல்கள் அனைத்தும் அழியும்.
தமிழ் நூல்கள் அழிந்தால் தமிழ் மொழியும் அழியும்.
தமிழ் மொழியே அழிந்தால் வரலாற்றில் இன்று நாம் அழிந்து போன 20/22
சிந்து சமவெளி நாகரிகத்தை படிப்பது போல,
அழிந்து போன தமிழனின் நாகரிகத்தை பிற்காலத்தில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வரும்.
ஆகவே இனியாவது, இவர்களின் வலையில் மாட்டிக் கொண்ட அப்பாவிகள் விடுபட வேண்டும்.
தமிழர்களின்..
பாரம்பரியம்,
பண்பாடு,
கலாச்சாரம்,
மற்றும் 21/22
நமது சமய நெறிகளை
முறையாக கடை பிடித்து...
மீண்டும், தமிழனாய் உலகில் தலைநிமிருவோம்...
உலக மக்கள் உயர்வடைய...
உன்னத வழியை காட்டுவோம்.
வாழ்க தமிழ்...!

 

வளர்க வையகம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 

தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்

தொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர் சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது என்பதை உணர ஆரம்பித்த நிலையில், கடவுள் கோட்பாடு உருவாகியது என்பர். தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முறையே புலப்படாத உட்படாதவற்றின் மீதான அச்சம் காரணமாக மனிதன் முதலில் இயற்கையை வழிபடத் தொடங்கி பின்னர் கடவுள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான். அவை வழிபாட்டு மரபாய் மாறியது.

                அவ்வடிப்படையில் பண்டைய தொல்காப்பிய காலத் தமிழ்ச்சமூக தெய்வக் கோட்பாடுகள் ஐநில மக்கள் வாழ்வியலுக்கேற்ப உருவாகி இருக்கின்றன. அவை இன்றைய மத நிறுவனங்கள், பெரும் சடங்குகள் அடிப்படையிலான இறைவழிபாடுகளைப் போல அன்று இருந்திருக்கவில்லை.

தெய்வம்

“மாயோன் மேய காடுறை உலகமும்

 சேயோன் மேய மைவரை உலகமும்

 வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

 வருணன் மேய பெருமணல் உலகமும்

 முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

 சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல். நூ. 951)

என்பது தொல்காப்பியம்.

                ஐந்திணைகளாகப் பகுக்கப்பட்டிருந்த பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சிக்குச் ‘சேயோன்’ என்ற முருகனும், முல்லைக்கு ‘மாயோன்’ என்ற திருமாலும், மருதத்திற்கு ‘வேந்தன்’ என்று குறிப்பிடப்படுகின்ற இந்திரனும், நெய்தலுக்கு வருணன் (வாரணன் என்று அழைப்பர்) என்ற தெய்வமுமாக நானிலக் கடவுளைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகின்றார்.

                பாலை நிலத்திற்குக் கொற்றவையும் (காளி என்றும் அழைப்பர்) தெய்வமாய் இருந்துள்ளது. வேறு கடவுளைப் பற்றியோ, மத நிறுவனத்தைப் பற்றியோ குறிப்புகள் இல்லை.

போர் மரபில் வழிபாடுகளும், நம்பிக்கைகளும்

பண்டைய காலப் போர்மரபில் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்துள்ளதைத் தொல்காப்பியம் உறுதி செய்கிறது.

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

 சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று

 இருமூன்று வகையிற் கல்லொடு புணர|| (தொல். நூ. 1006)

என்று தொல்காப்பியம், போர்க்களத்தில் இறந்துபட்ட வீரரை நினைத்து நடுகல் நட்டு வழிபட்ட முறையை குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களிலும் இத்தகு நடுகல் வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது. குறிப்பாக குறிஞ்சித் திணையில், மலையும் மலை சார்ந்த வாழ்வில் ஆநிரை கவர்தல், மீட்டலில் ஈடுபட்டு, வீரமரணம் அடைந்தவர்களுக்கே ‘நடுகல்’ நட்டு வழிவழியாக வழிபாடு நிகழ்ந்திருக்கின்றது.

                நடுகல் வழிபாட்டு முறை பல்வேறு இடங்களில் காணப்பட்டுள்ளது. “இறந்தவனது ஆன்மாவை சில சடங்குகள் மூலம் ஓர் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கலாம். அங்குள்ள ஒரு பொருளில் நுழைந்து கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கை உலகமெங்கும் பண்டைய மக்களின் பண்பாட்டில் காணப்படுகிறது” என்பர். புறநானூற்றிலும் (பா. 265, 264, 232, 329) சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்து வழிபட்ட செய்தியைக் காண முடிகிறது. சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில் விஞ்சி நிற்கும் வழிபாட்டுச் செய்திகளும் காதைகளின் பெயர்களும், நடுகல் வழிபாட்டு மரபை உணர்த்தும். மேலும்,

                “வெற்றி சிறப்பின் வெவ்வாய் வேலன்” (தொல். நூ. 1004) என்ற அடிகள் போருக்கு செல்லும் போது வெற்றி கருதி சிவந்த வாயினையுடைய வேலனை வழிபட்டதையும், “மாயோன் மேய மன்பெறு சிறப்பின்” (தொல். நூ. 1006: 9) மாயோனைத் தெய்வமாகக் கொண்ட மண்ணின் சிறப்பினை எண்ணியும் கரந்தை வீரர்கள் போருக்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, “உடல்வேந் தடுக்கிய உன்னநிலையும்” (தொல். நூ. 1006:8) போருக்குச் செல்லும் போது நல் நிமித்தம் பார்ப்பதையும் கரந்தை வீரர்கள் கொண்டிருந்தனர் என்பார் தொல்காப்பியர். “உன்னமென்பது ஒரு மரம். நல்லதாயின் தளிர்த்தும் தீயதாயின் உலறியும் அது நிமித்தங் காட்டு மெனலால், அதைக் கண்டு அதனொடு சார்த்தி நிமித்தம் பார்க்கும் குறிப்பு நுவலப்பட்டது” (தி.சு.பாலசுந்தரம் உரை. பக் 265) என்பர். மேலும், தாம் வழிபடுகின்ற தெய்வம் ஊரைக் காக்கும் என்ற நம்பிக்கை தொல்காப்பியர் கால மக்களின் நம்பிக்கையாக இருந்ததை, “வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப” (தொல். நூ. 1367) என்ற நூற்பாவின் அடிகள் உணர்த்துகின்றன.

பேய் பற்றிய நம்பிக்கை

                தொல்காப்பியர் காலத்தே மக்களிடத்தே பேய்கள் பற்றிய நம்பிக்கை இருந்திருக்கிறது. “பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்” (தொல். நூ. 1025) பேஎத்த மனைவி ஆஞ்சியானும்” (தொல். நூ. 1025) என்ற அடிகளின் வழியாக, போரில் இறந்துவிட்ட அல்லது விழுப்புண்பட்ட வீரர்களை பேய்கள் நின்று பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும், பழந்தமிழக மக்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் ஃ துறந்த ஒழுக்கங் கிழவோற் இல்லை” (தொல்.நூ.1081) என்ற நூற்பாவில் ‘ஓரை’ என்ற சொல்லிற்கு பல பொருட்களை குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, நாழிகை, விளையாட்டு, முகூர்த்தம், ராசி என்று குறிப்பிடுகின்றனர். “நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” (தொல்.1060) என்ற நூற்பாவில் ‘புள்’ என்ற சொல்லிற்கு முன்னர் பறவை யென்றும், பிற்காலத்தே சகுனம் என்றும் குறிப்பிடுவர். இதன் வழி, பொதுவாக பண்டைய மக்களிடம் ‘நிமித்தம்’ பார்க்கும் வழக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. பண்டைய காலத்தில் ‘நிலையாமை’ கருத்துக்களும், ஊழ்வினை நம்பிக்கையும் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.

கடவுள்

                “காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல். நூ. 1029) என்ற நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். மேலும்,

“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங் (தொல். நூ. 1034)

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். நூ. 1034) என்று கொடிநிலை, கந்தழி,  வள்ளி-மூன்று துறையும் கடவுள் வாழ்த்தோடே பொருந்தி வரும் என்றும், “அமரர்கண் முடியும் அறுவகை யானும்” (தொல். நூ. 1027) என்று, தேவர் நிலைமையில் வைத்து வாழ்த்துதற்குரிய அறுவகை நிலையான சான்றோர், புலவர், வேந்தர், ஆன், மழை, உலகம் என அறுவகையில் வாழ்த்துதல் மரபெனவும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். இவை கடவுளை வாழ்த்தும் வகைப் பற்றிய குறிப்பாகும். இதன் வழி கடவுளை பாடும் மரபை பண்டையோர் கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது.

                திணைத் தெய்வங்கள் வழிவழி வணங்கப்பெற்று, காலவோட்டத்தில் தமிழர் வழிபாட்டு மரபில் மாற்றங்கள் நிகழ்ந்து புறச்சமயங்கள் வந்து கலந்து கலப்பு வழிபாட்டு மரபு தோன்றிவிட்டது. ‘தெய்வம்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் ஒன்பது இடங்களில் இடம்பெற்றுள்ளன. ‘இறை’, ‘இறைவன்’ என்ற சொற்கள் பண்டைய காலத்தில் தலைவனை குறிக்கும் சொல்லாகவும் காணப்படுகிறது.

                இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிலக்கியங்களில் ‘சமயம்’ என்ற சொல்லே இல்லை. அதற்குப் பிற்பட்ட நூல்களில் தான் சமயம், மதம் என்ற சொற்கள் காணப்படுகின்றன. எனவே, சங்க காலத்தில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பினும் அவர் சிவன், திருமால் போன்ற கடவுளர்களை வழிபட்டாலும் சைவ சமயம், வைணவ சமயம் போன்ற சமயப்பற்று வேறூன்றவில்லை என்பது தெரிகின்றது.

                ‘தெய்வம்’ என்பது கருப்பொருளிலேயே கூறப்பட்டுள்ளது. கருப்பொருளானது நிலத்தில் காலத்தால் கருக்கொள்ளும் பொருளாகும். இவை தோன்றி நின்று மறைவனவே யாகும். இதன் மூலம் ‘தெய்வம்’ என்று குறிப்பிடப்படுவது இறந்த முன்னோர்களே எனக் கருதவும் இடமுண்டு. தெய்வ வழிபாடே அன்றி நிலையான ‘கடவுள்’ என்ற கொள்கைப் பற்றி தொல்காப்பியத்தில் எங்கும் சுட்டப்பெறவில்லை என்பது ஆராயத்தக்கதாகும்.

                ஐந்திணைத் தெய்வம் பற்றி பலர் விளக்கம் தந்திடினும் தேவநேயப்பாவாணர் தெளிவுறச் சுட்டுகின்றார்.

                ‘குறிஞ்சி நிலத்து மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாகக் கொண்டதால் சேந்தன் (சிவந்தவன்) சேயோன் என்று பெயரிட்டு அழைத்தனர். முல்லைநிலத்து மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக முதற்கண் மழையே இருந்ததால் முகிலையே தெய்வமாகக் கொண்டு ‘மால்’ என்று தம் தெய்வத்திற்கு பெயரிட்டு வழிபட்டனர். மருத நிலத்து மக்கள் இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழும் கொள்கை கொண்டோராக, இம்மையில் வேந்தனாக அறவாழ்க்கை நடத்தினால், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்ற கொள்கை கொண்டு தேவர்கோனைத் தேவர் ‘வேந்தன்’ என்றனர். மேலும், உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழையானது விண்ணிலிருந்து பொழிகிறது. இவ்விண்ணுலக வேந்தனே ‘இந்திரன்’ ஆயினான். நெய்தல் நிலத்து மக்கள் கடலை நம்பியே வாழ்க்கை நடத்தியதால் தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு அதற்கு ‘வாரணன்’ அல்லது ‘வருணன்’ என்று பெயரிட்டு வணங்கினர். பாலை நிலத்து மக்களின் வாழ்வு வறட்சியும், போர்க்களங்களும், பிணங்களும், பிணந்திண்ணிப் பேய்களும் கொண்டதால் பேய்களுக்குத் தலைவியாகிய ‘காளி’யை தெய்வமாகக் கொண்டனர். இத்தகைய ஐந்நிலத்து மக்களும் தம் வாழ்வியலோடு ஒன்றி வந்த இயற்கையை பொருத்தி தெய்வத்தை தோற்றுவித்தனர். மேற்கூறிய கருத்தை தேவநேயர் தமிழர் மதம் நூலில் தெளிவுற குறிப்பிடுகின்றார்.

                மேலும், பண்டைய தமிழரின் தெய்வ வழிபாட்டு முறைகளுக்குக் காரணமாக 1. அச்சம், 2. முற்காப்பு, 3. நன்றியறிவு, 4. பாராட்டு, 5. அன்பு, 6. கருதுகோள், 7. அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இறை வழிபாடு தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

                ‘தீயும், இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோராவிகட்கும், பேய்கட்கும் அஞ்சிய அச்சத்தால் தெய்வ வணக்கம் முதற்கண்ணாகத் தோன்றியது. கொள்ளை நோய், பஞ்சம், இயற்கை சீற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குமாக முற்காப்பு அடிப்படையில் அச்சம் தோன்றியது. இவை தெய்வங்களின் சீற்றத்தால் நேர்பவையென எண்ணி அச்சம் கொண்டனர். மேலும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கதிரவன், மதி, மரம், ஆ, இன்ன பிறவற்றையும் தெய்வமாக நன்றியறிவின் பொருட்டு வணங்கினான். மறவனையும், மழை வரவழைத்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரினை எரித்தும், உடன்கட்டை ஏறியும், கடுங்கற்பைக் காத்தப் பத்தினிப் பெண்டிற்கும்; கல்நட்டு விழாவெடுத்தது பாராட்டே ஆகும். இவ்வடிப்படையிலும் தெய்வம் தோற்றம் பெற்றது. அரசன் இறந்த பின்னர் அன்பு மிகுதியால் அவனை வழிபட்டதும், கண்ணால் காணும் இயற்கைக் கூறுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தெய்வங்கள் கருதுகோளின் அடிப்படையிலும் தோற்றம் பெற்றன. அதுமட்டுமன்று அறிவு வளர்ச்சி பெற்ற பின்னர் மறுமையும், கடவுள் உண்மையும் கண்டு நம்பிக்கையின் அடிப்படையிலும் ‘தெய்வம்’ தோன்றிற்று என்று தேவநேயப்பாவாணர் அவர்கள் பழந்தமிழரிடம் உருவாகிய ‘தெய்வம்’ பற்றிய சிந்தனையை பற்றி விளக்குவதைக் காண முடிகிறது. இத்தகைய வழிபாட்டு முறையே பழந்தமிழரின் வழிபாட்டு முறையாம். மேற்கூறப்பட்டவையே தொல்காப்பியம் குறிப்பிடும் வழிபாட்டு முறையாம்.

                இதன் வழியாக, தொல்காப்பிய காலப் பழந்தமிழகத்தில் நில அடிப்படையில் கடவுள் கோட்பாடுகள் தோன்றியிருப்பினும் நிலைத்த மதமோ, சமயமோ தொல்காப்பியத்தில் காணப்படவேயில்லை. இடைக்காலச் சூழலே மதங்கள் தோன்றுவதற்குரிய காலமாக இருந்துள்ளன எனலாம். இதன் வழி நிலத்திற்கு ஏற்ப உருவ வழிபாடு, இயற்கை வழிபாடு ஆகிய இரண்டும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளன என்பதும் போர் மரபில் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தோன்றியிருக்கின்றன என்பதும் தொல்காப்பியத்தில் காணும் வழிபாட்டு மரபு கோட்பாடுகளாம்.

சான்றெண் விளக்கம்

1.            தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, திசு.பாலசுந்தரம் உரை.

2.            தமிழர் மதம், தேவநேயப்பாவாணர்.

3.            நடுகற்களும் நம்பிக்கைகளும், நா. வானமாமலை (ஆராய்ச்சி மலர்)

- பா.பிரபு, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

தமிழர் வரலாற்றில் கடவுள்கள் கடவுள் வழிபாடு பற்றிய தேடலில் சில குறிப்புகள்/மதத்தை பற்றிய உங்கள் கேள்விக்கு பதிலும்
எந்த பெரும் நூல்களை(தமிழ்) எடுத்தாலும் கடவுள் வாழ்த்து இல்லாமல் தொடங்கியேதே இல்லை ஆனால் நூால்களுக்கெல்லாம் ஆதியான தொல்காப்பியம் கடவுள் வாழ்த்து இல்லாமலேயே இருக்கிறது. ஆனால் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்துப்பற்றிக் குறிப்பிடுகிறது.
"கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'
என்பது தொல்காப்பிய நூற்பா. தொல்காப்பியத்தில் சமயம் அல்லது மதம் என்ற சொல் இல்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருள் என்ற ஒரு பொருள் படியான கடவுளை தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படவில்லை.
ஆனா் தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"
விளக்கம் மாயோன் மேவுவது காடுடைய நிலம்.சேயோன் மேவுவது மேகம் சூழ்ந்த மலை உள்ள நிலம் .தேவர் குல மன்னன் மேவுவது மிகுதியான நீர் உள்ள நிலம்.வருணன் மேவுவது மணல் நிறைந்த நிலம்.இந்த நான்கு நிலங்களும் முல்லை,குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர் சொன்ன முறைப்படி சொல்லப்படும். 'மேய' என்பதின பொருள் விரும்பிய என்பதாகும்
முல்லையும் குறிஞ்சியும் திரிந்து காணக்கிடத்த பாலைப் பகுதியில் "கொற்றவை" வழிபாடு நிகழ்ந்ததாக சிலப்பதிகாரம்தான் சொல்கிறது தொல்காப்பியத்தில் எந்த குறிப்பும் இல்லை இந்த கொற்றவைத்தான் இன்றைய பெண் தெய்வ வழிபாடு முன்னர் குறிப்பிட்ட காளிக்கெல்லாம் ஆதி இறைவி...........
அது போல ஆதி என்ற வார்த்தை எடுத்தால் எல்லாம் எங்கிருந்து தொடங்கிட்டு என பார்த்தால் உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக தொல்காப்பியம் சொல்லவில்லை."நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று"அதாவது சமகால அராய்ச்சியாளர்களின் கூற்றை அன்றே தொல்காப்பியம் முன்மொழிகிறது.......
"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"
ஆதலால் தான பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை இயற்கை வழிபாடு பின் நடுகல் வழிபாடாக மாறியது சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே வேரூன்றி இருந்தது நடுகல் வணக்கமாகும் அல்லது வழிபாடு........
"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."--புறநானூறு
அதாவது நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ/பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்று இருக்கிறது.
"தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவள் எனப் படுதல்
நோதக் கன்றே தோழி..."--குறுந்தொகை
இந்த பாடல் தமிழர் கலாச்சாரம் , பண்பாடான சடங்கு ,தியாகம் , பலிகளை பற்றிி கூறுகின்றது .மேலும் இந்த பாடல்கள் மதச்சார்பின்மைக் கோட்பாடு(பாடலில் குறிக்கப்பட்ட பகுதி) அல்லது உலகியல்வாதம் அந்த காலத்தில் நிலைவியதை காட்டுகிறது..........
சங்க கால தமிழர்கள் ஆன்மீக சார்ந்த,தத்துவ ஞானம் சார்ந்த குறிப்பிட்ட உண்மைகளை அறிந்தது இருந்தார்கள் .உதாரணமாக உயர் உடம்பு பற்றிய கோட்பாடுகள் , ஊழ் , விதிகளின் முதன்மை, ஒரு புனிதமான நோக்கம் காரணத்திற்காக மரணிப்பது போன்றவைகளை.
அதுபோல நாம் சொல்லும் கோயில் எனும் சொல்் சங்க காலத்தில் ஆலயம் -நகர் ,கோயில் ,கோட்டம், புரை அல்லது தேவாலயம் என அழைக்கப்பட்டது .
கோவில் என்பது அரசன் வீடு என பொருள் படும் – கோ + இல்-.
‘வேறு பட்ட வினை ஓவத்து வெண்கோயில்’ என பட்டினப்பாலை கூறுகிறது இதன் கருத்து பல நிற பூச்சு ஓவியங்களை உடைய வெள்ளை அரச மாளிகை ஆகவே சங்க காலத்தில் இது அரச மாளிகைக்கான சொல் ஆகும் .
அரசனுக்கான இன்னும் ஒரு சொல் இறைவன். ஆகும் .
"நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசைத் தொழில் மாக்கள்" என பட்டினப்பாலயும் ,
"நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" எனபுறநானூறும் கூறுகிறது .மேலும் தொல்காப்பியர் மூவேந்தரை "புகழ் மூவர்" என அழைக்கிறார் பண்டைய தமிழர் அரசனையே கடவுளாக அல்லது கடவுளின் தூதுவராக வழி பட்டனர் என அறிய முடிகிறது ...........
இப்படி தொல்காப்பியம் முதல் பரிப்பாடல் முதலான நூல்களின் மூலம் பண்டைத்த தமிழர் வழிபாடு என்பது இயற்கையையும், சமகாலப் போர் வீரனயும் முன்னோரயும் மட்டுமே வழிபட்டு வந்தது எடுதுக்காட்டாக இன்றைய தென் மராட்டியம் தொட்டு தமிழகம் இலங்கை மலாயம் வரை உள்ள இந்துக்களை உங்கள் குலதெய்வம் யாரென கேட்டால் முருகனோ மாடனோ எல்லம்மாவோ இசக்கியே ஐயனாரோ முனீசுவரனோ என முன்னோர் வழிபாடுதான் (இந்த பதில்களை கேக்கமே்போது நான் வணங்கும் அந்தோனியாரும் ஜார்ஜியாரும் செபத்தியாரும் குழந்தை தெரசாவும் தாய் மரியும் தான் என் நினைவில் வந்து போவார்கள்) பதிலாக வரும்.இப்படி மதம்பீடிக்காமல் வாழ்ந்த நம் மண்ணில் இன்று மதங்கள் பரப்பும் அன்பும் அறமும் அன்றும் மக்களிடம் வியாபித்திருந்து தமிழரின் திருமறையாம் வள்ளுவத்தை படித்தால் அன்பை போற்றும் இடங்கள் பல இருக்கும்........
ஆக அன்பும் அறணுமாய் மதமற்ற புனித நிலையில் வாழ்ந்த தமிழ்நிலத்தில் மதம் வந்ததெல்லாம் இன்றைய ஆப்பிரிக்காவில் இருந்து அதாவது இன்றைய துருக்கி எகிப்து இஸ்ரேல் போன்ற நிலப்பரப்பில் இருந்து ஆடு மாடுமேய்த்தபடி ஈரான் பலுச்சிஸ்தான் வழி கைபரும் போலனும் திறந்திருந்ததால் சிந்து சமவெளியல் குடிகொண்ட ஆரிய படையெடுப்புடன் தொடங்கியது தான் இந்தியாவின் மதமும் மதச்சண்டைகளும் .......
முதலில் சைவம் வந்தது அதன் பின்னே வைணவமும் வந்தது இங்கே சைவமும் வைணவமும் முட்டி மோதிக்கொண்டன தசாவதாரம் திரைப்படுத்தை தொடக்ககாட்சி அதைத்தான சித்தரித்திருக்கும்(அதில் நெப்போலியனை தமிழ் மன்னனாக காட்டி பெருமாளை கடலில் துாக்கி போட வைத்தது கூட கமலின் ஆரிய மேதாவிதனத்தின் உச்சநிலல).பின்னர் பௌத்தமும் சமணமும் வந்தது சோழ மன்னர்கள் துனையுடன் பௌத்தம் வளந்தது அதுபோல சமணம் சேர நாடு வரை பரவி இருந்தது குமரியின் சிதறால் மலைக்கோவில்தான் அதன் சான்று.முகமதியர்கள் கொண்டு வந்த இஸ்லாமும் வந்தது............
கிறுத்தவம் வந்தது சமாதானத்தயும் அமைதியையும் போதித்த ஒரு மாசற்ற மார்க்கமாக திகழ்ந்து இன்று சுயநலவாதிகளிடம் சிக்கி கிறுத்துவ மதம் படும் பாட்டை பார்க்கும்போது இந்துத்வா வாதிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகும் பெரும் வாழ்வியல் முறையான இந்து மதம் தான் நியாபகம் வரும்........
இன்று பெங்களூர் வரை சாத்தானிசம் எனும் இலுமினாட்டிகள் உருவாக்கிய சர்ச் ஆப் சாத்தான் எனும் மதம் வந்திருங்கியாகிவிட்டது.அந்த இரகசிய மதக்குழுவில் இருந்து மீண்டெழுந்த நன்பர் ஒருவர் சொன்ன கதைகளை கேட்டால் நெஞ்சடைத்துவிட்டது...........
ஆக மதங்களெல்லாம் காலமாற்றத்தில் உருவானதுதான் நான் மேலேச் சொன்ன சாத்தானிசத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் பண்டைத் தமிழரின் அன்பையும் அறத்தயும் தான் போதிக்கிறது.மதங்களை தெரிந்துக்கொள்வதில் தவறில்லை மதவெறியர்களாக இருப்பதுதான் தவறு........
இஸ்லாத்தை படித்து பாருங்கள் அதன் வேதநூலான குரானை படித்தால் விவிலியம் படித்த ஒரு உணர்வு கிடைக்கும நாம் தியாகம் என வெறும் சொல்லாக சொல்வதை அவர்கள் ஈகைத்திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள் ஒரு மாத ஒறுத்தலோடு ஈகையை கடைப்பிடிப்பார்கள் ஈகைத்திருநாள் காலெங்களின் எனக்கு எம்பெருமான இயேசுநாதர் செயத தியாகம் தான் நினைவிற்கு வரும். நமது இறுதி தீர்ப்பு நாளுக்கும அவர்களது இறுதி தீர்ப்பு நாளுக்கும் பெரும் வித்தியாசம் ஒன்றுமில்லை.... ..........
அர்த்தமுள்ள இந்து மதம் படித்து பாருங்கள் இந்து மதம் புரியும் அவர்களின் கீதையை படித்து பாருங்கள் தர்மத்திறகு விளக்கும் கிடைக்கும்.....
மதத்தை மதமாக பார்க்காமல் வாழ்வியல் முறையாக பாருங்கள் எல்லாம மதமும் உரக்கச் சொல்லும் உண்மை புலப்புடும்......... அந்த உண்மை புரியாமல் தான்  மாற்று மதங்களை மத நம்பிக்கையை குறை காண முடிகிறது அவர்களது நம்பிக்கை முறையை நகையாட முடிகிறது ஆனால் கண்ணை மூடிக்கொன்டு ஏஞ்சல் டிவியில் லயித்துக்கிடக்குறீர்கள் ஒருவேளை அதன் முதலாளி சாது சுந்தர் செல்வராஜ் கடவுள் சிடி குடுத்தார் என சொல்லித்திரியும் பொய்தான் உங்களை ரசிக்க வைக்கும்போல ...............
சத்திய கிறுத்ததுவர்களாக உங்களை நீங்கள் ஏமாற்றிக்கொண்டு ஒரு வட்டத்தினுள் சிக்கி கிடக்கும்போது உலக வாழ்க்கையில் ரசிக்க முடியாமல் போகும் விடயங்கள் பல உண்டு அதில் ஒன்று தான் மாற்று மதங்களின் அழகியல்.அந்த அழகியல் என்பது ஒருவித உணர்வு அது அகக்கண் திறந்தால் மட்டுமே காணக்கிடைக்கும் கண்கொள்ளா காட்சி.உங்களை அந்த உணர்வுக்குள் இழுத்துச்செல்லவில்லை தயவு செய்து அதை கொச்சைபடுத்தாதீர்கள் அவர்களது வழிபாட்டு முறைகளை பழித்துரைக்காதீர்கள்.அந்த அழகியலை ரசித்தவாரே கிறுத்தவனாக வாழ்ந்துக்கொள்கிறேன் அது பாவம் என்றோ அது பெரும்பிழையென்றோ நீங்கள் சொல்லலாம் ஆனால் தேவமகன் சொல்லமாட்டார்..........
மதங்களை பிடித்து தொங்குங்கள் பைபிளில் மட்டும் மூழ்கி கிடங்கள் ஆனால் மதவியாபாரிகளிடம் கவனமாக இருங்கள்..........


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

கிறுத்தவத்தில் சாதி அடையாளம்

 
கிறுத்தவத்தில் சாதி அடையாளம் 
 
Catacom-Carvings-.jpg
 
 
    கிறுத்தவத்தில் சாதி அடையாளம் என்று தலைப்பு  தான் இந்த கட்டுரைக்கு சரியானதாக இருக்கும். சமீபகாலமாக தென்தமிழகத்தில் அதிலும் குறிப்பாக  குமரி,நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சில சாதிய அமைப்புகள் கத்தோலிக்க திருச்சபை ஒரு சாதி சார்பாக நடந்து கொள்கிறது. அவர்களது கொடிகளில் ஆலயங்களில் மற்றும் பாதிரியார்களின் உடைகளில் நங்கூரம் மற்றும் மீன் முக்கியமான சின்னமாக  இடம்பெறுகிறது. இந்த மூன்று மாவட்டத்தில் கத்தோலிக்க பாதிரியார்கள் அதிகமாக மீனவ சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் அதனால் தான் அவர்களது சாதிய/தொழில் அடையாளத்தை ஆலயங்களின் உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் இதேபோன்ற சமவலிமையுடன் அல்லது அவர்களுடன கூடதலாகவே இருக்கும் மற்றொரு சமுதாயத்தின் சின்னமான  பனையையும் பாதிரியாரின் அங்கிகளிலும் சேர்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக குழித்துறை கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கொடியில் பனை மரத்தை சேர்த்தேயாக வேண்டும் என்று சாதி உணர்வாளர்கள் ஒரு வாதத்தயும் முன் வைக்க தொடங்கியிருக்கிறார்கள். கிறுத்தவ மத அடையாளங்களையும் அதன் வரலாற்றயும் சரிவர புரிந்து கொள்ளாத காரணமும் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அதை வேரொறு சாதியுடன் இனைத்தே சிந்திக்கும் சாதியோபோபியோவும் தான் இதற்கு காரணம்............
 
          கிபி மூன்றாம் நூற்றாண்டுவரை கிறுத்தவ மதமானது பெரிதாக பரவியிருக்கவில்லை வரலாற்றை புரட்டி பார்த்தால் கிறுத்தவ மத நம்பிக்கையாளர்கள் பெருங்கொடுமைகளுக்கு ஆளாக்க பட்டிருந்தனர்.கிறுத்தவ மதத்தை பரப்புவபர்களோ அல்லது கிறுத்தவ நம்பிக்கையாளர்களோ  படுகொலை செய்யப்பட்டனர்.இதனால் கிறுத்தவர்களை தங்கள் அடையாளங்களை மறைத்து தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளவும் தங்களை மதநம்பிக்கையாளர் என்று ரகசியமாக அடையாளபடுத்தி கொள்ளவும் சில சங்கேத சின்னங்களை உபயோகித்தனர் அவற்றுள் மிக பிரபலமானவை ஸ்டாரோக்ராம், மயில், பெலிகான், மீன் , ஆல்பா மற்றும் ஓமேகா, CHI-RO, IH, IX மற்றும் நங்கூரம். ஒவ்வொரு சின்னங்களுக்கும் ஒவ்வொரு கிறுத்தவ வார்தைகளின் அர்த்தம் இருந்தது அதில் எந்த ஒரு சாதிய நிலைப்பாடோ இருந்திருக்கவில்லை..........
 
நங்கூரம் 
 
     “ இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்துற்கு பாதுகாப்பான உறுதியான நங்கூரம் போன்று உள்ளது” எபரியேர் 6:19 இல் உள்ள வாசகம் கூறுவது போல ஒன்றாம் நூற்றாண்டு
68402.jpg
கிறுத்தவர்கள் நங்கூரத்தை எதிர்பார்ப்பின் நம்பிக்கையின் சின்னமாக  கொண்டிருந்தனர். முதலாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டுவரையான பெரும்பாலான கிறுத்தவ கல்லறைகளில் நங்கூரம் சின்னமே பதியபட்டிருந்தது. கிறுத்தவ இறை ஏற்றவர்கள் நங்கூரத்தை நம்பிக்கையின் சின்னமாக பல கல்வெட்டுகளில் பதிந்தருந்தனர். ரோமில் ஒரு கல்லறை தோட்டத்தில் மட்டும் எழுபது கல்லறைகளிள் நங்கூரம் பதியப்பட்டிருந்தது. முதலாம் நூற்றாண்டு புனிதையான தொமிதிலம்மாள் கல்லறையில் நங்கூரம் பதியபட்டிருக்கிறது அதே போன்று ஒன்றாம் நூற்றாண்டில் கொடும் தண்டைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட புனித பிரிஸில்லா அவர்களின் கல்லறையிலும் நங்கூரமே பதிக்கபட்டிருந்தது. ஆக மறு உலக வாழ்வின் கிறுத்தவ வாழ்வின் கிறுத்து வருகையின் எதிர்பார்ப்பின் நம்பிக்கையே நங்கூரம் ஒரு சாதிக்கோ இனத்திற்கோ சொந்தமானதல்ல நங்கூரம். நான்காம் நூற்றாண்டிற்கு பின்பு கிறுத்தவம் வலிமையடைய தொடங்கியபின் கல்லறைகளில் மட்டுமே பதிக்க பட்டிருந்த நங்கூரமானது ஆலயத்தில் ஆலய பனியாளர்களின் உடைகளிலும் ஆயர்களின் கொடிகளிலும் வர தொடங்கியிருந்தது அதன் தொடர்ச்சியே இன்று வரை நாம் காணும் கிறுத்தவ மதத்தின்  நங்கூரம் சின்னம்..........
 
மீன் சின்னம் 
 
        இரண்டாம் நூற்றாண்டு காலம் தொட்டு  இயேசுவின் மீன் என்று அழைக்கப்படும் இந்த சின்னமானது இன்றுவரை எல்லா கத்தோலிக்க வழிபாட்டு தலங்களிலும் பாதிரியார்களின் உடைகளிலும் கொடிகளிலும் பதிய பட்டு வருகிறது. ரோம பேரரசு காலத்தில் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட கிறுத்துவ இறை நம்பிக்கையாளர்கள் கிரேக்க மொழியின் மீன் எனும் வாக்கியத்தை கிறுத்துவோடு பொருத்தி அது ரகசிய சின்னமாக உபையோகித்து வந்தனர். கிரேக்க மொழியில் மீனுக்கு ICHTHYS/IXNYY என்று பெயர் அதில் 
c169de44957940e5f329f7eff4c1fe2c.jpg
 
I -ஐயோட்டா இயேசுவை குறிக்கவும்
X - Chi கிறுத்துவயும்
N - Theta கடவுளயும்
Y - upsilon மகனயும்
Y - sigma இரட்சகரயும் குறிக்கும்
 
“இயேசு கிறுத்து கடவுளின் மகன் இரட்சகர்” இதுதான் இந்த இயேசுவின் மீனின் அர்த்தமே அன்றி அது எந்த சாதியின் குறியீடல்ல . அந்த காலத்தில் மறைவாக சந்திக்கவும் தங்களை தங்களுக்குள் அடையாள படுத்தவும் கிறுத்தவர்கள் இதை பயன்படுத்தி கொண்டார்கள் 
 
என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரை பிடிப்பவர்கள் ஆக்குவேன்” - மத்தேயு 4: 19 என்ற வாசகம் தொடங்கி மத்தேயு மற்றும் யோவானின் அதிகாரங்களில் பல இடத்தில் மீன் சுட்டபட்டுள்ளது. ஆக இது கிறுத்தவ நம்பிக்கையின் சின்னம் இயேசு உலக இரட்சகர் என்று நம்பவைத்த சின்னம் அதனால் தான் இன்று கிறுத்தவத்தின் பல சபைகளில் மீன் ஒரு முக்கிய குறியீடாக இடம் பெற்றிருக்கிறது..........
 
        இதுபோல ஸ்டாரோக்ராம் ஆனது கிரேக்க எழுத்துகளை அடிப்படையாக கொண்டு வார்தையை பிரதிபலிப்பதாகும். XP என்பதை கிரேக்கத்தில் Chi- Rho என வாசிக்க வேண்டும் அது கிறுத்து என்ற அர்த்தத்தில் இயேசுவை குறப்பிடுகிறது . இப்படி நாம் கத்தோலிக்க ஆலயங்களிலோ அல்லது பழைய ஆர்த்தோடக்ஸ் ஆலயங்களிலோ பார்க்கும் எல்லா  சின்னங்களுக்கும் பின்பு ஒரு அர்த்தம் உண்டு அது சாதி குறியீடு அல்ல அது கிறுத்தவ நம்பிக்கையின் குறியீடு
105328545-christian-symbols.jpg
சிலுவையை சுட்டுவதாகும் . கிரேக்கர்கள் மயிலின் உடலானது சிதையாது என்று நம்பியதால் மயில் அழிவில்லாத ஆன்மாவை குறிப்பிடுவதாகவும். ஐரோப்பியர்கள் பெலிகான் பறவை இரை கிடைக்காத நேரத்தில் தன் உடலின் இரத்தத்தை தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும் என்று நம்பியதால் இயேசு சிந்திய இரத்தத்தை குறிப்பிடுவதாகும். கிரேக்க முதல் எழுத்தான ஆல்பாவும் கடைசி எழுத்தான ஒமேகா இனைந்திருக்கும் சின்னமானது நானே முதலும் முடிவுமாய் இருக்கிறேன் என்ற விவலியத்தின்
 
கிறுத்தவத்தில் சாதி வெறியிர்கள் அல்லது பற்றாளர்கள் அல்லது உணர்வாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆட்கள் உண்டு ஆனால் கிறுத்தவத்திற்கு சாதி, இனம் , மொழி என்று எந்த பாகுபாடும் இல்லை. ஆலயத்திற்குள் வரும்போது உங்கள் உடலை அல்ல உங்கள் உள்ளத்து கழுவி விட்டு வாருங்கள் என்று சொன்ன மதத்தில் இருந்து கொண்டு சாதியை உங்கள் உள்ளத்தில் தூக்கி கொண்டு ஆலயத்திற்குள் வராதீர்கள். அன்புக்குரியவர்களே சாதி வளக்க ஆயிரம் இடங்கள் உள்ளது அது ஆலயத்திற்குள் வேண்டாம். ஆலயத்திற்குள் வரும்போது உங்கள் செருப்புகளின் கூடவே சாதியையுப் உதறிவிட்டு வாருங்கள்..............,
 
 
நன்றி
குமரிக்கிழவனார்
 
குறிப்பு: பற்பல காரணங்களால் மத ஆராய்ச்சிகளில் இருந்து தூர போயிருந்தேன் இன்று நம்ம சாதியோபோபியா ஆட்கள் கொஞ்சம் மத ரீதியாக ஆராய வைத்துவிட்டார்கள் அவர்களுக்கு சிறப்பு நன்றி........


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

தொல்காப்பியம், நம்பியகப் பொருள் கூறும் திணைப்பொருள்கள்

 
 

தமிழ் இலக்கண உலகில் அகப்பொருள் இலக்கணத்தை முழுமையாகக் கூறும் நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். இத் தொல்காப்பியத்திலும் அதன் பின்னர் வந்த அகப்பொருள் இலக்கண நூலான நம்பியகம் பொருளிலும் உள்ள அகத்திணையியலில் கூறப்பட்டுள்ள ஐந்திணைப்பொருட்களான முதல், கரு, உரி என்ற மூன்று பொருள்கள் பற்றிய செய்திகளை எடுத்துக்காட்டி ஒப்பீட்டு நிலையில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

திணைப்பொருள்கள்:

தொல்காப்பியம் ஐந்திணைகளுக்குரிய பொருள்களாக முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் (தொல் பொருள் 3) என்ற மூன்றினைக் கூறுகின்றது. இதைப் பின்பற்றியே நம்பியகப் பொருளும் ஐந்திணைப்பொருள்களாக இம்மூன்றையும் கூறுகின்றது. (நம்பி.7).

முதற்பொருள்:

மேற்கூறிய மூன்று திணைப்பொருள்களுள் முதற்பொருள் என்பது நிலம், பொழுது என்ற இருவகையினை இயல்பாகக் கொண்டுள்ளது (தொல், பொருள் 4.19) எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. நம்பியகப்பொருளும் முதற்பொருளாக இவ்விரண்டையும் கூறுகின்றது. (நம்பி.8) தொல்காப்பியமும், நம்பியகப் பொருளும் மேற்கூறியவாறு ஒன்றுபட்ட கருத்துக்களுடன் காணப்பட்டாலும் ஒரு சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன என்பதை பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்.

நிலம்:

முதற்பொருள்களுள் ஒன்றாகிய நிலம் பற்றித் தொல்காப்பியம், மாயோன் மேய காடுறை உலகமும் சேயேன் மேய மை வரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச், சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (தொல்.பொருள் – 5) எனக் கூறுகின்றது. தொல்காப்பியம் காடு, வரை, தீம்புணல், பெருமணல் என நிலம் பற்றி மட்டும் இங்கு கூறாது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற திணைகள் பற்றியும் கூறுகிறது. காரணம் முன்பு கூறப்படும் ஏழு திணைகளுள் நிலம் பெறுவன "நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய" எனக் கூறுப்பட்டுள்ளதே தவிர அத்திணைகளுக்குரிய பெயர்கள் சுட்டப்படவில்லை. எனவே இங்கு நிலங்கள் பற்றிக் கூறுகையில் அந்நிலங்களுக்குரிய திணைப்பெயர்களும் சுட்டப்பட்டன எனலாம். மேலும் பாலைத் திணைக்கு நிலமில்லை என்று முற்கூறப்பட்டதால் பெயரும் இங்கு சுட்டப்படவில்லை எனக் கருதலாம்.

தொல்காப்பியம் முதற்பொருளாகிய நிலத்தை மட்டுமல்லாது கருப்பொருள்களுள் ஒன்றாகிய தெய்வம் பற்றியும் சுட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் என்னவெனில் தொல்காப்பியம் கருப்பொருள்கள் பற்றிக் கூறுகையில் பொதுவாகக் கூறியுள்ளதே தவிர ஒவ்வொரு திணைக்குரிய கருப்பொருள்கள் பற்றிக் கூறவில்லை. எனவே கருப்பொருள்களுள் தெய்வம் முதன்மையாகக் கருதப்படுவதால் இங்கு நிலங்களைப் பற்றிக் கூறுகையில் அந்நிலங்களைக் காக்கும் தெய்வங்கள் பற்றியும் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது எனலாம். மேலும் பாலை நிலம் இன்னதென்று சுட்டப்படாமையால் தெய்வமும் சுட்டப்படவில்லை எனக் கருத இடமுண்டு.

நம்பியகப்பொருள் பற்றிக் கூறுகையில் வரை, சுரம், புறவு, பழனம், திரை அவற்றின் நிமித்தம் எனப் பத்து வகைப்படும் என்று கூறுகின்றது (நம்பி 9). இவ்வாறு நிலம் பற்றிக் கூறுவதற்கு முன்பே நம்பியகப் பொருள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி. 6) என ஐந்திணைகளுக்குரிய பெயர்களைக் கூறியுள்ளமையால் தொல்காப்பியம் போன்று இங்கு திணைப்பெயர்கள் சுட்டப்படவில்லை எனலாம்.

தொல்காப்பியர் காடு, தீம்புனல், பெருமணல் என்று கூறியுள்ளதை நாற்கவிராசர் புறவு, பழனம், திரை என்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளார். காலத்திற்கு ஏற்ப சொற்களும் மாறுபட்டுள்ளது எனலாம். ஆனால் நம்பியகப் பொருள் பாலைத் திணைக்குறிய நிலமாகச் சுரத்தைக் கூறியுள்ளது. பத்துப்பாட்டுள் "பாலை சான்ற சுரஞ் சார்ந்ததொரு சார்" (மதுரைக் காஞ்சி) எனக் கூறியுள்ளமையாலும் பிறவற்றாலும் இவ்வாறு நம்பியகப் பொருள் பாலைத்திணைக்குரிய நிலமாக சுரத்தைக் குறிப்பிட்டுள்ளது எனலாம்.

பொழுதுகள்:

தொல்காப்பியம், காரும், மாலையும் முல்லை (தொல். பொருள்.6) கூதிரும் யாமமும் முன்பனியும் குறிஞ்சி (தொல். பொருள். 7,8), வைகறை விடியல் மருதம் (தொல். பொருள். 9) ஏற்பாடு நெய்தல் (தொல். பொருள். 10), நண்பகல், வேனில் பின்பனி பாலை (தொல். பொருள். 11) என ஒவ்வொரு திணைக்குரிய பெரும்பொழுது சிறுபொழுதுகள் பற்றிக் கூறுகின்றது. நம்பியகப்பொருள் பெரும்பொழுதுகள் ஆறு (நம்பி.11) என்றும், சிறுபொழுதுகள் ஐந்து (நம்பி 12) என்றும் வகைப்படுத்திக் கூறிவிட்டுப் பின்பு தொல்காப்பியம் போன்று குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி 13-17) என ஒவ்வொரு திணைக்குரிய பெரும் பொழுது, சிறுபொழுது பற்றிக் கூறுகின்றது.

தொல்காப்பியர் சிறுபொழுது ஆறு எனக் கொண்டதை நாற்கவிராசர் ஐந்தாகக் கொள்கின்றார். வைகறை விடியல் என்று தொல்காப்பியம் தனியாகக் கூறியுள்ளதை நாற்கவிராசர் வைகறை என்பது விடியல் காலத்தைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். தொல்காப்பியம் மருதம், நெய்தல் ஆகிய இரண்டு திணைகளுக்கும் உரிய பெரும் பொழுதுகள் பற்றி நூற்பாவின் வழி சுட்டவில்லை என்றாலும் இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் அறுவகைப் பெரும்பொழுதுகளும் இவ்விரு திணைகளுக்கும் உரியன (தொல். பொருள் பக் 11) எனக் கூறியுள்ளார். இவ்வுரையாசிரியரின் கருத்துப்படி நம்பியகப்பொருள் இவ்விரு திணைகளுக்கும் ஆறு பெரும்பொழுதுகளுக்கும் உரியன (நம்பி, 18) என நூற்பாவில் கூறி விளக்குகின்றது. இவ்வாற முதற்பொருள் பற்றிய கருத்துக்களில் இரு நூல்களும் ஒரு சிலவற்றில் வேறுபடுகின்றன.

கருப்பொருள்கள்:

தொல்காப்பியம் ஐந்திணைக்குரிய கருப்பொருள்களாகத் தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, செய்தி, யாழ் போன்ற எட்டு வகைகளோடு "அவ்வகை பிறவும் கருவென மொழிப" (தொல். பொருள் 20) எனக் கூறுகின்றது. தொல்காப்பியர் கூறிய "அவ்வகை பிறவும்" என்பதற்கு, அத்தன்மைய பிறவும் கருப்பொருள் என்று கூறுவதோடு, எந்நில மருங்கிற் பூவும், புள்ளும், அந்நிலம் பொழுதோடு வாரா வாயினும் (தொல். பொருள்.21) எனக் கூறியுள்ளதால் நிலமும் காலமும் பற்றி வருவன கருப்பொருள் என்று உணர்க என்று இயம்பூணார் தம் உரையில் கூறுகின்றார்.

நச்சினார்க்கினியர், இன்னும் பிறவு மென்றதனாலே இங்கு கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. அவை பெயரும் வினையும் (தொல். பொருள்.22) என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதோடு பிறவுமென்றதனால் கொள்வன சிறுபான்மை திரிவுபடுதலின் பிறவுமென்று அடக்கினார் என்றும் கூறுகின்றார். நம்பியகப்பொருள் பிற என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறிய கருத்துக்களைத் தழுவி ஐந்திணைக்குரிய கருப்பொருள்களாக ஆரணங்கு, உயர்ந்தோர், உயர்ந்தோரல்லாதவர், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் எனப் பதினான்கினைக் கூறுகின்றது. மேலும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி 20 – 24) என ஒவ்வொரு திணைக்குரிய கருப்பொருள்களையும் தனித்தனியாக நூற்பாக்களின் மூலம் விளக்கிச் செல்கின்றது. இவ்வாறு கருப்பொருள்கள் பற்றிய கருத்து வளர்ச்சியை நம்பியகப்பொருளில் காணலாம்.

உரிப்பொருள்கள்:

தொல்காப்பியம் திணைக்குரிய உரிப்பொருள்கள் பற்றிக் கூறுகையில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங்காலைத் திணைக்குரிப்பொருளே எனக் கூறுகின்றது. இதற்கு இளம்பூரணர் ஏனைய மொழிந்த பொருளோடொன்ற வைத்தல் (மரபு.110) என்னும் தந்திர உத்தியால் புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முல்லைக்கும், இரங்கல் என்பது நெய்தலுக்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரியதாகவும் சிறுபான்மை எல்லாப் பொருளும் எல்லாத் திணைக்கும் உரியதாகவும் கொள்ளப்படும் என்று கூறுகின்றார் (தொல். பொருள், பக். 16). இக்கருத்து உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல்.பொருள். 15) என்ற தொல்காப்பியரின் கருத்திற்கு மாறுபட்டதாக உள்ளது. இந்நூற்பாவில் தேருங்காலை எனக் கூறியிருப்பதால் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்கு பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தலுக்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வவ்நிமித்தங்களுக்கும் உரியதென்று ஆராய்ந்துணர வேண்டும் என நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.

தொல்காப்பியக் கருத்தைப் பின்பற்றி நம்பியகப்பொருளும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கள் அவற்றின் நிமித்தம் என உரிப்பொருள்கள் பத்து வகைப்படும் எனறு கூறுகின்றது (நம்பி 25). உரிப்பொருள்களின் வைப்பு முறையில் மாற்றமுள்ளதே தவிர வேறு மாற்றங்கள் இல்லை எனினும், முத்திறப் பொருளும் தத்தம் திணையோடு, மரபின் வராது மயங்கலும் உரிய (நம்பி 251) என நம்பியகப் பொருள் கூறியிருப்பதன் மூலம் தொல்காப்பியரின் உரிப்பொருள் மயங்கி வராது என்ற கருத்தோடு மாறுபட்டிருந்தாலும் இளம்பூரணர் கூறிய கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

தொல்காப்பியம், நம்பியகப் பொருள் கூறியுள்ள திணைப்பொருள்களின் கருத்துக்களை ஒப்பு நோக்குகையில் முதல் நூலாகிய தொல்காப்பியத்தின் கருத்துக்களை நம்பிகப்பொருள் பின்பற்றியிருந்தாலும் ஒரு சில இடங்களில் மாறுபட்டும் காணப்படுகின்றது. மேலும் தொல்காப்பியர் கருத்துக்களை மட்டுமல்லாது தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்துக்களையும் நம்பியகப் பொருள் பின்பற்றியுள்ளது என்பதை அறியமுடிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

பண்டைய தமிழர் — ஒரு பார்வை

Amaruvi Devanathan
Dec 7, 2013 · 4 min read
 

காஞ்சி வழக்கு குறித்த பதிவுத்தொடரில் பண்டைய தமிழர் எங்ஙனம் ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

தற்காலத்திய அத்வைத மடங்களில் ஒன்றான காஞ்சி மடம், அதன் துறவியரின் சமூக ஆன்மிகப் பணி, இவர்களின் தேவை முதலியன பற்றி அறிந்து கொள்ள இந்த அத்வைத சித்தாந்தமே தோன்றியிராத போது தமிழகம் எப்படி இருந்தது என்று அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுவும் ஆரியர் படை எடுப்பு என்ற ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்து அதனால் மட்டுமே தமிழ் மக்களின் வாழ்வும் கலையும் கலாச்சாரமும் வேறாகின என்று நமக்குப் போதிக்கப்பட்டுள்ள வேளையில் சங்க காலம் முதல் தமிழரின் பழக்க வழக்கங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது தேவைப்படுகிறது.

நமக்கு அளிக்கப்பட்ட கல்வி ஆரியர் படை எடுப்பின் முன் தமிழர் நிலை மிகவும் முன்னேறிய ஒரு சமூக நிலையாக இருந்தது என்றும் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கப்பட்டது என்றும், மூட நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தன என்றும் மக்கள் அனைவரும் ஒரு நிகர் சமானமாக எவ்வித சாதிப் பிளவுகளும் இன்றி ஒன்றாக வாழ்ந்தனர் என்றும் கூறுகிறது. ஆனால் ஆரியர் படை எடுப்புக்குப்பின், வைதீக பிராம்மணர்களின் சூழ்ச்சியால் தமிழர் பிளவு பட்டனர் என்றும், பல கடவுளர் வழிபாடு புகுத்தினர் என்றும், உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தைப் புகுத்தினர் என்றும், மூட நம்பிக்கைகள் பெருகின என்றும் பெண்ணடிமைத்தனம் தோன்றியது என்றும் இதற்குக் காரணம் வட நாட்டிலிருந்து வந்த மாடு மேய்த்த ஆரியர் என்றும் நமது தமிழ்ப் பாட நூல்களும் ‘அறிஞர்களும்’ தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவை உண்மையா ? ஆதி சங்கரர் தொடங்கி வைதீக காலம் தொட்டுத்தான் மூட நம்பிக்கைகளும், பெண் அடிமைத்தனமும், சாதிப் பாகுபாடுகளும் தோன்றியனவா ? இவரும் இவர் சார்ந்த வைதீக மதமும் அவரைப் பின்பற்றிய வைதீக மதத்தின் மற்ற பரிணாமங்களும் தான் பாரத தேசத்தின் அத்தனை கேடுகளுக்கும் காரணமா?

இவற்றைப் பார்ப்பதற்கு நாம் சங்க காலத்தை ஒரு அளவு கோலாகக் கொள்வோம். சங்கத்திற்கு முன்னர் தோன்றிய நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லையாதலால் ‘தொல்காப்பியம்’, ‘அகநானூறு’, ‘புறநானூறு’, ‘நற்றிணை’ முதலிய தொல் நூல்களின் வழி நின்று அக்கால சமூகத்தை ஆராய்வோம்.

முற்போக்காளர்கள் கூறுவது : ‘பண்டைய தமிழர் ஒரே கடவுள் வழிபாட்டையே கொண்டிருந்தனர். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற கொள்கையே இருந்து வந்தது. ஆரியர்கள் வந்த பின்னரே பல தெய்வ வழிபாடும் பூசை முறைகளும் உயிர்ப்பலி முறைகளும் தமிழகத்தில் தோன்றின’ என்கின்றனர். ஆனால் உண்மை என்ன?

பண்டைத் தமிழகத்தில் ஒரே கடவுளோ அல்லது கடவுளே இல்லை என்றா இருந்ததா?

இல்லை. சங்க நூலான தொல்காப்பியத்தில் ‘தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ என்று இறைவனின் பெயருக்கு அகராதி போன்று ஒரு பகுதி உள்ளதாகத் தெரிகிறது.

தொல்காப்பியத்தில் நால்வகை நிலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கடவுள் அமைந்துள்ளதாக உள்ளது. ‘மாயோன், சேயோன், வேந்தன், வருணன்’ முதலிய கடவுளர் குறிக்கப்பட்டுள்ளனர். ‘மாயோன் மேய காடுறை உலகமும்..” என்று தொடங்கும் தொல்காப்பியப் பாடல் இதனைச் சுட்டுகிறது. இப்பாடலில் முருகனும் குப்பிடப்பட்டுள்ளார்.

ஆண் தெய்வங்கள் தவிர ‘கொற்றவை’ என்னும் பெண் தெய்வமும் பேசப்படுகிறது. இத்தெய்வத்தையே ‘துர்க்கை, காளி’ என்று வழிபட்டனர் என்று தமிழ் அறிஞர் சாமி.சிதம்பரனார் கூறுகிறார்.

தொல்காப்பியம் ‘மறம்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே ..” என்னும் இடத்தில் கொற்றவை பற்றிக் கூறுகிறது.

இவை தவிர கதிரவன், தீ, நிலவு முதலிய இயற்கைப் பொருட்களையும் தமிழர் கடவுளர்களாக வழிபட்டனர் என்பதை ‘கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்று கதிரவன், தீ, நிலவு இம்மூன்றையும் வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப்போலவே எண்ணப்பட்டு வந்தது என்று தொல்காப்பியம் பறைசாற்றுகிறது.

திருமாலை ‘ஆல் அமர் கடவுள்’ என்றும், முருகனை ‘சேயோன்’ என்றும் குறிப்பிடுகிறது தொல்காப்பியம். முருகன் ‘சூரனைக் கொன்ற ஒளி பொருந்திய வேர்ப்படையை உடைய முருகன்’ என்று போற்றப்படுகிறான். (சூர்மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் )

இத்தெய்வங்கள் தவிர இறந்தோரையும் கடவுளர்களாக வழிபட்டுள்ளனர். அவர்கள் நினைவாக கற்களை நட்டு ( நடுகல் ) அவற்றுக்குப் பூசனைகள் செய்துள்ளனர். (‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தல் ..’). இவற்றால் கூட பல தெய்வ வழிபாடுகள் தோன்றியிருக்கலாம்.

வைதீக மதங்கள் வருகையாலும் ஆதி சங்கரரது ‘அத்வைத’ சமயத்தின் தாக்கத்தாலுமே வேதங்களின் முறைப்படி உயிர்ப்பலிகள் தொடங்கின என்று ஒரு கருத்து பரப்பப்பட்டு வந்ததுள்ளது. அது உண்மையா ?

சங்க காலத்தில் முருகனுக்கு ஆட்டுக் குட்டியை அறுத்துப் பலி கொடுத்து வழிபட்டனர் என்று குறுந்தொகையில் உள்ளது. (சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி..)

‘வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து அன்னை அயரும் முருகு’ என்று நற்றிணையில் ( வெறி எடுத்தால் உன் நோய் தீரும் என்று எண்ணி ஆட்டை அறுத்து உன் அன்னையால் வணங்கப்படும் முருகன்..) வருகிறது.

ஆக பலி இட்டு வணங்குவது வேத காலத்திற்குப் பின் தமிழகத்தில் புகுத்தப்பட்டது என்பதும் புனைவே.

மூட நம்பிக்கைகள் வைதீக மதத்தால் மட்டுமே புகுத்தப்பட்டது என்று கூறுவதும் அபத்தமே.

மழை வேண்டும் என்று புறநானூற்றில் ‘மலைவான் கொள்கென உயிர்ப்பலி தூஉய் மாறி ஆன்று மழைமேக்கு உயர்க .. ‘ என்று மழை பெய்ய வேண்டி பலி கொடுத்து வணங்குவர் என்றும் வருகிறது.

கோழி, ஆடு முதலியன பலவகையான பலிகளுக்குப் பயன்பட்டன என்று பல பாடல்கள் தெரிவிக்கின்றன.

பலன்கள் வேண்டிக் குரவைக் கூத்து, பாவை நோன்பு முதலியன சங்க காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆண்டாலும் அந்தப் புராதனமான நோன்பையே நோற்றாள் என்று வைணவம் குறித்த தொடர்களில் நாம் முன்னமேயே கண்டோம்.

இம்மை, மறுமை முதலியன பல முறை சங்கப் பாடல்களில் இடம் பெறுகிறது. சங்கம் மருவிய காலத்தவரான வள்ளுவரும் வானுலகம், இம்மை, மறுமை, ஊழ்வினை முதலியன குறித்துப் பேசியுள்ளார்.

சகுனம் பார்ப்பதும், நல்ல நாள் பார்ப்பதும் சங்க காலத்திலேயே இருந்த பழக்கங்கள்.

‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை ‘ என்று தொல்காப்பியம் களவியல் சூத்திரம் ‘களவு மணம் புரியும் காலத்தில் கெட்ட நேரத்தில் காதலியுடன் சேராமல் இருக்கும் பழக்கம் தலைவனிடம் இல்லை..” என்று கற்பு மணம் புரிந்தோர் நாளும் கிழமையும் பார்ப்பார்கள் என்றும் களவு மணம் புரிந்தோர் அவ்வாறு இல்லை’ என்றும் கூறுகிறது.

பல்லி சொல்லுக்கும் பலன் பார்த்தார்கள் பண்டைத் தமிழர் என்பது கலித்தொகையில் காணக்கிடைக்கிறது.

எரி நட்சத்திரம் பற்றியும் புறநானூற்றில் செய்திகள் உள்ளன. அது தீங்கு நிகழப்போவதை உணர்த்துவதாகக் கொள்ளப்பட்டது. இரும்பொறை என்ற மன்னன் இறந்தபோது கூடலூர் கிழார் என்னும் புலவர் ‘கனை எரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி ..” என்னும் புறப் பாடலில் குறிப்பிடுகிறார்.

பால் தயிராகாமல் பாலாகவே உள்ளது; ஆட்டுக்குட்டி துள்ளி விளையாடவில்லை; உறியில் இருந்து இறக்கிய வெண்ணையை உருக்கினால் உருகவில்லை; சகுனங்கள் சரியாக இல்லை என்று ஆய்ச்சியர் குரவையில் சிலப்பதிகாரம் கூறுகிறது. இவை சங்கம் மருவிய காலம்.

இவை தவிர பெண்கள் உடன் கட்டை ஏறுதல், கைம்மை நோன்பு நோற்றல் முதலியனவும் சங்கப் பாடல்களில் பெருமையாகவே பேசப்படுகிறது. எனவே இவை வைதீக மதத்தைப் பரப்பிய ஆதி சங்கரர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழர் மரபில் இருந்துள்ளன.

அவ்வையார், நச்செள்ளையார், காக்கைப்பாடினியார் முதலான பெண் புலவர்கள் இருந்தாலும் பெண்கள் பெரும்பாலும் கல்வியிலும் உரிமைகளிலும் பின்தங்கியே இருந்தனர் என்பதும் தெரிகிறது.

தொல்காப்பியர் ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’ என்று பயமும், வெட்கமும், அறியாமையும் முற்பட்டு நிற்பது எப்போதும் பெண்களுக்கு உரிய குணம் என்று கூறுகிறார்.

வள்ளுவரும் ‘மனைவியின் கீழ்ப்படிந்து நடக்கும் முறையற்ற செயல் எந்நாளும் பெரியோர் கூட்டத்தில் வெட்கம் தரும் செயலாகும் என்பதை ‘இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்’ என்று கூறுகிறார்.

இவை தீமை என்பதில் இரு வேறு கருத்தில்லை. ஆனால் இவை வைதீக மதத்தால் மட்டுமே புகுத்தப்பட்டன என்பதும் பண்டைய தமிழர் வாழ்வில் இவை ஒன்றுமே இருந்ததில்லை என்பதும் உண்மை கலப்பிலாத பொய் என்பதும் நாம் அறிய வேண்டியது ஆகும்.

சரி. இப்பண்டைய தமிழர் வாழ்விற்கும் ஆதி சங்கரர் வழி வந்த காஞ்சி மடத்திற்கும் தொடர்பென்ன ? விரைவில் பார்ப்போம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard