Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை


Guru

Status: Offline
Posts: 7467
Date:
தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை
Permalink  
 


 தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை 

தமிழ் இலக்கியங்களில் அறம் - நீதி - முறைமை

(ஆசிரியரின் சிவதத்க்ல்வநினைவர் சென்னைப் பல்கலைக்கழகம்

டாக்டர் (திருமதி) கிருட்டிணா சஞ்சீவி திருமதி கண்ணம்மாள் நடேசன் சொற்பொழிவுகள் (1986-1987

'அருங்கலைக்கோன்', 'பூரீசடகோபன் பொன்னடி, பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் எம். ஏ., பி. எஸ். சி., எல்.டி.வித்துவான் பிஎச். டி., முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் - பேராசிரியர் திருவேங்கடவன் பல்கலைக் கழகம், திருப்பதி விற்பனை உரிமை: ஐந்திணைப் பதிப்பகம் 279, பாரதி சாலை திருவல்லிக்கேணி சென்னை - 600 005

முதற்பதிப்பு : டிசம்பர் 1988 தேன்.மழை-22 (C) Dr. S. Ramalingam, M.Sc., D.Litt., Author's first son ᎪD - 13 (Plot No 3354) Anna Nagar, MADRAS - 600 040 பக்கம் , ri + 352=310 விலை : 37.50 TAMIZH I LAKIYANGALIL ARAM - NEETH! - MURAIMAI வெளியீடு : தேன்.மழைப் பதிப்பகம், 34, கொத்தவால் தெரு, ஆலந்துரர், சென்னை-600 016. Printed at : JAYASREE PRINTERs, 162, Chowdry Nagar, Valasaravakkam, Aoadras - 600 087

 

அணிந்துரை

(ஜஸ்டிஸ் எஸ். நடராசன், உச்சநீதிமன்றம், தில்லி)

தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை” என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு, நூலாக மலர்ந்தது கண்டு மகிழ்கிறேன். . - . . . . . . 'அறம்' என்ற தலைப்பில் கூறப்பட்ட பொருள்கள் மிகவும் சிறப்பானவை. தொல்காப்பியம், நன்னூல், சங்க இலக்கியம், ஐம்பெரும் காப்பியங்கள் முதலான இலக்கண இலக்கியநூல்களினின்றுமேற்கோள்கள் எடுத்துக் காட்டிய பாங்கு சிறப்பான ஒன்று. உறுதிப் பொருள்களில் அறம், பொருள் என்னும் இரண்டன் விளக்கம் அருமையானது. இன்பத்தைப்பற்றிக் கூறுங்கால் இன்பம் என்பது வெறும் பொருளை மட்டும் நுகரும் இன்பமாக இருப்பின் அதுவும் புறப்பொருள் என்றே வழங்கும். ஆனால் அகப்பொருள் என்று கூறப் பெதும் இன்பமாவது உயரறிவின் அன்பை துகரும் இன்ப மாதலின் அது தனியாக அகம்' என வழங்கலாயிற்று' து. 10, 11) என்ற விளக்கம் நன்று. - முழுமுதற் கடவுளைச் 'சிவம்’ என்று கூறி, அதனக் இயக்கத்தை, செயலை, செயலாற்றலை, அருளை 'அறம்' என்று கூறியிருப்பது (பக். 13) புதிய ஒன்று. சங்க இலக்கியங்கள் பண்டைய தமிழரது வாழ்க்கை யைப் படம்பிடித்துக் காட்டுவன என்று சில காலமாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவதை ஆசிரியர் நன்றாக மறுத்துள்ளார் (பக். 17, 18).

இன்றைய வாழ்க்கை நிலையைப் பொருளாதார அடிப்படையில் ஆய்ந்து அக்கால இலக்கியங்கள் இன்றைய சூழ்நிலையில் எங்ங்னம் பொருந்தும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். அகப்பொருளில் அறத்தைப்பற்றி பேசுங்கால் பால தாணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப' (தொல். கள. 5) என்னும் நூற்பாவில் கிழவனும் கிழத் தியும் என்று இருவரையும் எழுவாயாக வைத்துக் காட்டும் பாங்கில் முன்னதாகக் காதலித்தவர் யார் என்ற வினாவுக்கு இடம்வைக்கவில்லை என்பது சிந்திக்கத் தக்கது (பக்.28) என வரைந்திருப்பது ஆசிரியர் ஆய்வுத் திறனுக்கு ஒர் காட்டு. - - 'அறத்தொடுநிற்றலையைப் பக்தி இலக்கியத்தோடு புணர்த்திப் பேசுங்க்ால் ஆசிரியரது சமய இலக்கிய அறிவு நன்கு வெளிப்படுகிறது. குறிப்பாக வைணவ இலக்கியத் திலும், அந்த மரபுகளிலும் உள்ள ஆழ்ந்த பயிற்சி ஆய்வுக்குத் துணை செய்கிறது(பக்.-30). வெளிநாட்டைப்பற்றிக்கூறிவருங்கால் சமுதாயச்சடங் கிற்கும், கற்பொழுக்கத்திற்கும் நடக்கும் போராட்டமாக வரைந்திருப்பது அழகான ஒன்று. - இல்லற இயல், துறவறவியல் என்னும் இரண்டிற்கும் பொதுவானவையாக அழுக்க்ாறு, இன்னாச் சொல், அவா, வெகுளி என்னும் நான்கினையும் நீத்தல் என்றுகூறப்படுதல் வேண்டும் என்ற உரைத்த ஆசிரியர் (பக்-64) இக்காலத்துச் சில போலித் துறவிகள் செல்வம் சேர்ப்பதையே குறிக் கோளாகக் கொண்டு இயங்குவதைச் சுட்டிக்காட்டு கின்றார். » கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்' என்னும் கம்பன் சொற்றொடரில் வரும் க்ண்களால் என்ற சொல்லுக்குப் புத்துரை வழங்கிய ஆசிரியர் (பக்.73) பாராட்டுக்குரியவர்.

'அன்பின் சிறப்பையும் தன்னலத்தினால் ஏற்படும் தீமைகளையும் ஆசிரியர் நன்கு விளக்குகின்றார் (பக்-82) விருந்தோம்பலைச் சொல்லுங்கால் இக்காலத்தில் விருந்து என்ற பெயரில் நடக்கும் ஆடம்பரங்களையும், உண்மையான விருந்து வழங்க இயலாத நிலையையும் குறித்து ஆசிரியர் கூறியிருப்பது அவரது துணித்த பார்வைக்கு ஓர் எடுத்துக் காட்டு (பக்-88). செய்ந்நன்றி அறிதல்' என்னும் தலைப்பின் கீழ், 'செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல்அரிது’ என்ற குறளுக்குக் கணித வாய்பட்டில் விளக்கம் தந்திருப்பது (பக்-98; 99) புதுமையான, ஆசிரிய ரின் சிந்தனைக்கு ஒர் உரைகல்லான எடுத்துக்காட்டு. பொறையுடைமையைப் பற்றிக் கூறுங்கால், தருமனது பொறுமையை விளக்கும் முகத்தான் வில்லிபாரதப் பாடல்களையும், பாஞ்சாலி சபதப் பாக்களையும் எடுத்துக் காட்டியிருப்பது (பக் 132-135) சிறப்பான ஒன்று. அவாவறுத்தல், வெஃகாமை, கள்ளாமை என்னும் மூன்று சொற்களும் ஒருபொருளுடையன போலத் தோன்றி லும் அவை தம்முள் துணுகிய வேறுபாடுடையன என அழகாகக் குறித்துள்ளார். துறவறவியலில், செவிச் செல்வத்தைப் பற்றிக் குறிப் பிடும்பொழுது, அந்தச் செல்வம் பொருட்டாவின காயினும் அருட்செல்வத்தினும் ஒருபடி உயர்ந்தது என்பதை விளக்கும் பாங்கு அழகியதாகும் (பக். 1 56-57). புலால் மறுத்தல் பற்றி நீதிபதி ஒருவர் கூறிய கருத்து வள்ளுவத்திற்கு முரணானது என நிலைநாட்டியிருப்பது ஆசிரியரின் Qāstāranāāgarsaság (Courage of conviction). எடுத்துக்காட்டு (பக். 163-64) 3. 'தவம்’ அனைவர்க்கும் பொதுவானதென்றும், இல்லறத்தினரும் இதனை முயலுதலே சிறப்பான தென்றும் கூறிய ஆசிரியர் அதற்குத் தக வள்ளுவரது வாய்மொழியை விளக்கியிருப்பது சாலப் பொருந்தும்(பக். 165). மழித்தலும் நீட்டலும் என்பதைப்பற்றிக் குறிப் பிடும்போது தமக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறி யிருக்கும் பாங்கு ஆசிரியரின் நகைச்சுவையுணர்வையும், இத்தகைய வழக்கங்களில் அவருக்கு நம்பிக்கையின்மை யையும் புலப்படுத்துவன(பக். 168-69). ಕು 'நீதி' என்ற பகுதியில் தொடக்கத்திலேயே அறத் திற்கும் நீதிக்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தி விடுகின்றார்(பக். 218). புறநானூற்றுக் காலத்தில் மன்னனை உயிராகவும் மக்களை உடம்பாகவும் காட்டப்பெற்ற கருத்து, கம்பன் காலத்தில் தலைகீழாகமாறி மக்களாட்சிக்கு வித்து நடப்பெற்றது. அத்தகைய நிலையிலிருந்து ஆட்சி செய்யும் மன்னனின் செங்கோன்மையைப்பற்றி இக்கால நடைமுறையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் ஆசிரியர் (பக். 224-225). "நீதி நெறி வழுவாது ஆட்சிபுரிந்த மூவேந்தரது வரலாறுகளின்று தக்க நிகழ்ச்சிகளை ஆசிரியர் கூறுகிறார் (பக். 232, 235, 248). - தமிழக வேந்தர் நீதி வழங்கிய முறையையும், அதன் பால் அவர்கள் கொண்டிருந்த ஊற்றத்தையும் ஆசிரியர் தக்க மேற்கோள்களுடன் புலப்படுத்துகிறார். - கொலைத்தண்டனை கூடாது' என்றும், சிற்சில இடங்களில் அது தேவை என்றும் இருவேறு கருத்துகள் நிலவும் சூழ்நிலையில் மேனாட்டு அறிஞர் வாய்மொழிப் படி திருந்தத் தக்கவர், திருந்தாதவர் என இரு பகுப் புடைய கொலைஞருள் பிற்பகுதியினருக்குக் கொலைத் தண்டனை சாலும் என்று கூறும் ஆசிரியர், அண்மைக் காலத்தில் நிகழ்ந்த இருபெருங் கொலைக் குற்றங்களைச் கட்டிக்காட்டுவது அவரது யதார்த்த நோக்கைப் (பக். 255) புலப்படுத்துவதாகும். இறை, புரவு, கடமை என்னும் சொற்கள் பிறந்த வகையைக் கூறும் ஆசிரியர் பிசிராந்தையாரது பாடலை எடுத்துக்காட்டி மன்னனது (இக்காலத்து அமைச்சரது) கடமை இன்னதென்று நிறுவுகின்றார் (பக்.258). அறிகரி பொய்க்கரி போன்ற சொற்கள் பயிலும் அகப்பாடல்களை மேற்கோள் காட்டி அம்முகத்தான் நீதிபற்றிக் கூறுவது சுவையான இடம் (பக். 266, 267). உடல் ஊனமுற்றோருக்குச் சிறப்பாக அரசன் செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கூறிவரும்போது சாதி யொழிப்பு என்ற பெயரில் நடக்கும் முறையற்ற செயல் களை ஆசிரியர் வெளிப்படையாகச் சாடுவது அவரது துணிவுக்கு ஒர் அளவுகோலாகும் (பக். 271, 275), மூன்றாவது பகுதியாகிய முறைமை' யில் ஆசிரியர் பொதுவாக அச்சொல் பயின்றுவரும் இலக்கிய மேற்கோள் களையே எடுத்துக்காட்கிடுன்றார். முறைமை என்ற சொல் பெரும்பாலும் அறம், நீதி என்ற பொருளிலேயே ஆளப் படுதலானும், அவ்விரண்டையும் பற்றி முன்னரே நிறையக் கூறியிருத்தலானும், இந்தப்பகுதி சுருங்கவே. அமைந்துள்ளது. ,ஆயினும், முறைமை என்பது அரசநீதி, மரபு முறை *مہ மாயாதைமுறை என்ற பொருள்களிலும் பயின்றுவரு வதைக் காணும் ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத் தக்கது. முறைமை என்ற சொல்லை நெறிமுறை தவறாது ಆಟ ಸ್ತ್ರೀ. ஞாலத்திகிரி, முதுநீர்த்திகிரி, காலத்திகிரி, கோலத்திகிரி போன்ற பொருள்களுடன் புணர்த்தி  வைணவ இலக்கியங்களின் மேற்கோள்களுடனும் இக்கால அறிவியல் வளர்ச்சியுடனும் ஒப்பிட்டுப் பேசும் பாங்கு மிகவும் சுவையான பகுதியாகும் (பக். 308-309). பொதுவாக நூல்முழுதும், ஆசிரியரின் இலக்கண இலக்கிய அறிவையும், குறிப்பாக வைணவ சமயத்திலும் அதன் இலக்கியங்கள், தத்துவங்கள் ஆகியவற்றில் அவருக் குள்ள ஆழ்ந்த பயிற்சியையும் வெளிப்படுத்துகின்றன. இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த ஒர் மாமணி. தமிழின்பால் காதல் கொண்ட ஒவ்வொரு வரும் பன்முறை படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இஃது என்பதில் ஐயமில்லை. -எஸ். நடராசன்

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

நூல் முகம்

நோற்றேன் பல்பிறவி 

துன்னைக்காண்பதோர் ஆசையினால்

ஏற்றேன். இப்பிறப்பை

இடருற்றனன் எம்பெருமான்!

கோற்றேன் பாய்ந்தொழுகும் கு

ளிர்சோலைசூழ் வேங்கடவா!

ஆற்றேன் வந்தடைந்தேன்;

அடியேனை யாட் கொண்டருளே.' -திருமங்கையாழ்வார் பணிவாழ்க்கையின் இறுதிக்காலமாகிய பதினேழு ஆண்டுகள் திருப்பதியில் வாழ வழி வகுத்து அவன் திருவடி வாரத்தில் நிறுவப் பெற்றுள்ள பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவவும் அதில் துறைத்தலைவனாக வும் பேராசிரியனாகவும் பணியாற்றும் வாய்ப்புகளை நல்கினான் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலாகிய திருவேங்கடமுடையான்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;

தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே?

என்ற திருமூலர் திருவாக்கை நினைவு கூரச்செய்து தமிழ்ப்பணியும் சமயப்பணியும் வளர்க்கத் துணைபுரிந்து 1. பெரி. திரு. 1-9 :8 2. திருமந்திரம்-91

ஒய்வுபெற்ற பின் (அக்டோபர்-1977) சென்னையில் அவன் இருப்பிட மாகிய வேங்கடம் என்ற இல்லத்தில் வாழவைத்துள் ளான். இடைஇடையே பல்வேறு அதிர்ச்சி வைத்தியம் கந்தருளினாலும், வருகின்றான்; ஒல்லும் வகையெல்லாம் என்தகுதிக்கேற்ப உதவியும் வருகின்றான். இந்த நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தைத் துரண்டி அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் மூன்று நிகழ்த்துமாறு ஆணையையும் பிறப்பிக்கச் செய்தான். கரும்பு தின்னக் கூலிகொடுக்கும் பல்கலைக் கழகம் டாக்டர். (திருமதி) கிருட்டினா சஞ்சீவிதிருமதி கண்ணம்மாள் நடேசன் அறக்கட்டளைச்சொற்பொழிவுகளை (1986-87க்குரியவை) நிகழ்த்துமாறு 14.5.1987ல் அழைப்புவிடுத்தது. அறக் கட்டளை நிறுவிய டாக்டர் ந. சஞ்சீவியைக் கலந்து யோசித்த போது தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதிமுறைமை' என்ற தலைப்பில் மூன்று நாள் மூன்று சொற் பொழிவுகளை நிகழ்த்த முடிவு ஆயிற்று. அங்கினமே மார்ச்சு 28, 29, 30 (1988) நாட்களில் முறையே அறம், நீதி, முறைமை பற்றி மூன்று சொற்பொழிவுகளை நிகழ்த்தி னேன். இச்சொற்பொழிவுகளை என்பொறுப்பில் வெளி யிட்டுக் கொள்ள இசைவும் வழங்கியது பல்கலைக் கழகம். இசைவுவழங்கியமைக்கு என் நன்றி. ஐந்தினைப் பதிப்பக உரிமையாளர் திரு குழ.கதிரேசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் என் அருமைத்தம்பி திரு. வெள்ளையப்பன் (உரிமையாளர், தேன்.மழைப் ப தி ப் ப க ம் ஆ ல ந் து ர், .ெ ச ன் ைன - 16) இப் .ெ பா ழி வு க ைள மனமுவந்து ஏற்று வெளியிடுகின் றார். இவர்கள் இருவருக்கும் என் உளங் கனிந்த நன்றி என்றும் உரியது. இப்பொழிவுகளைக் கவினுற அச்சிட்டுக் கற்போர் கைகளில் தவழச்செய்த ஜெய்பூரீஅச்சகத்தாருக்கு, குறிப்பாக அதன் அதிபர் திரு. கே. பி. பிரசாத்துக்கு, என் நன்றியைப் புலப்படுத்துகின்றேன்.

ஜஸ்டிஸ் S. நடராசன் அவர்கள் நாடறிந்த நல்ல. மனிதர்; அடக்கமான பண்புடையவர். இவருடைய நட் பினைப் பெற்றது இறைவனது திருவருளாலா கும் பல்லாண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றி நேர்மை யையும் திறமையையும் நிலை நாட்டிய இப்பெருமகனா ரைத் தமிழக அரசு உயர்நீதி மன்றத்து நீதிபதியாக்கியது. பல ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்துப் பணியாற்றி "சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல அமைந்து ஒரு பால் கோடாமையாலும் தமது நேர்மையை யாவரும் கண்டதாலும் நடுவண் அரசு இவரை உச்சநீதி மன்றத்து நீதிபதியாக்கியது. இங்கு இவர் பல பொறுப்புகளில் அரும் பணியாற்றி நற்பெயர் எடுத்ததை இந்திய துண்ைக் கண்டம் நன்கு அறியும். இவருடைய அமைதி, அடக்கம் சீலம், பரிவு முதலிய அருங்குனங்கள் குலத்தளவே ஆகும் குணம்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப அமைந்தன. நல்ல சூழ்நிலைகளில் பெற்ற கல்வியும் இவற்றிற்கு மெரு. கூட்டியது. இவருக்குப்பெருமதிப்பையும்நல்கின. இறையன் பிலும் மெய்ப்பொருள் கருத்துகளிலும் ஆழங்கால் பட்டு நிற்பவரும் இலக்கிய இன்பத்தில் ஈடுபாடு கொண்டவரும் "உயர் திணை என்மனார் மக்கட்சுட்டே, பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்ற ஆன்றோர் பொன்மொழிகட்கு இலக்கியமாகத் திகழ்பவருமான இந்த அருங்குணச் செல் வரின் அணிந்துரை பெற்றது இந்நூலின் பேறாகும்: அடியேனது பேறுமாகும். அணிந்துரை அருளிய பெரியா ருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்றும் உரியது. இந்த அரிய நூலைச் சட்டக்கலை வல்லார் பரமபத் வாசி திரு மாடபூசி அனந்தசயனம் அய்யங்கார் அவர்கட்கு அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன். திரு அய்யங்கார் பீகார் மாநில ஆளுநராகப் பணியாற்றித் திருப்பதியில், சொந்த ஊரில், சொந்த இல்லத்தில் குடியேறிய நாள் முதல் (1962) அவர் பரமபதித்த நாள் வரை (1978) அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைத்த்ன்ம்

திருவேங்கடமுடையானின் திருவருளாகும். முதன் முதலில் சந்தித்தபோது நீங்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்! வாழும் இடத்தையொட்டித் தமிழும், பிழைப்பின் நிமித்தத்தை யொட்டி ஆங்கிலத் தையும் படித்தீர்கள். அப்படியே நானும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன்; வாழ்ந்த இடத்தையொட்டித் தெலுங்கையும் பிழைப்பின் நிமித்தம் ஆங்கிலத்தையும் படித்தேன். இப்பொழுது நாம் இருவரும் தமிழர்களே, சரிதானே' என்றார். ஏழுமலையான் திருவருள்படி நம் வாழ்க்கையும் பணியும் அமைந்தன’’ என்று அடக்கமாக மறு மொழி பகர்ந்தேன். அவரும் என் பணிவைப் பாராட்டி மகிழ்ந்தார். திருப்பதியில் நான் இருந்தவரை இவருடன் மிக நெருங்கிப் பழகினேன். தமிழ்த்துறை என் மணி 'விழாவை மலர் ஒன்றை வெளியிட்டுக்கொண்டாடியபோது (24-9-1977) அந்த விழாவுக்குத் தலைமை தாங்கிச் சிறப் பித்த பெருமகனார். என்வீட்டில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் தவறுவதில்லை.

  • என்னுடைய டாக்டர் பட்டத்துக்குரிய ஆய்வுக் கட்டுரை (ஆங்கிலத்தில் அண்மந்தது) அச்சுவடிவத்தில் பல்கலைக் கழகம் வெளியிட்டபோது அதற்கு அரியதோர் ஆங்கில அணிந்துரை நல்கி ஆசிகூறி நூலுக்குப் பெருமை யும், பொலிவும் தந்த பெருமகனார் இவர்.

இந்த வைணவ மாமணியைப் பார்க்கும்போதெல்லாம் கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன (திருவாய் 10-2: 1) என்ற நம்மாழ்வாரின் பாசுரமும் நினைவுக்கு வரும். என் இதயத்தாமரையில் நிரந்தரமாக எழுந்தருளி யிருக்கும் திருவேங்கடத்தப்பனும் அனந்த சயனத்து அண்ணல் பதுமநாபனாகவே காட்சி அளிப்பான். இத்த கைய எழுச்சியை உண்டு பண்ணும் இப்பெருமகனாருக்கு அறம்-நீதி-முறைமை பற்றிய இந்த அரிய நூலைப் பொருத் தமாக அன்புப்படையலாக்கிய பெருமையுடன் அகமகிழ் கின்றேன்.

இந்தப் பொழிவுகளை நிகழ்த்துவதற்கும், அவை எழுத்து வடிவம் பெறுவதற்கும் அச்சேறி வெளியிடப் பெறுவதற்கும் மூலகாரணமாக இருப்பவன் எம்பெருமான் ஏழுமலையப்பன். என்கண்பாசம் வைத்து’ நிரந்தரமாக் என் இதயகமலத்தில் எழுந்தருளியிருக்கும் அந்த வேங் கடத்து எழில்கொள் சோதிக்கு' என் மனம் மொழி மெய் களால் வணங்கி வாழ்த்துகின்றேன்.

உளன்கண்டாய் நல்நெஞ்சே

! உத்தமன்; என்றும்

உளன்கண்டாய் உள்ளுவார்

உள்ளத்து உள்ன்கண்டாப்:

வெள்ளத்தின் உள்ளானும்,

வேங்கடத்து மேயானும்

உள்ளத்தின் உள்ளான் என்று ஒர். -பொய்கையாழ்வார் வேங்கடம்" ந. சுப்புரெட்டியார் AD-13 (பிளாட் 3354) தொ.பே. 615583 அண்ணாநகர் சென்னை-600 04 0 திசம்பர் 15, 1988 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

உள்ளுறை

அன்புப்படையல் (iii)

அணிந்துரை (iv)

நூல் முகம் (x)

தமிழ் இலக்கியங்களில்-அறம் (4-24)

முன்னுரை - உறுதிப் பொருள்கள் (7)

- மும்முதற் பொருள் - மூன்றன் பகுதி (8) -

அகம், புறம் என்ற பாகு பாடு (10) -

அறம் விரிந்த பொருள் (12) - 'அறனில் கொள்கை, (1.5) -

மனத்துாய்மை (18) -

இன்றைய நிலை (19) - பாரதியார் (21) - (1) அகப் பொருளில் அறம் (22)அகப்பொருள் மாந்தர்கள் (2.5) - 'அறத்தொடு நிலை" விளக்கம் (2.5) - இலக்கியக்காட்டுகள் (27) - பக்தி இலக் கியங்களில் (ஆழ்வார் பாசுரங்களில்) இந்நிலை-திருப் புலியூர் மாயப் பிரான் (30); அறத்தொடு நிற்கும் சந்தர்ப் பங்கள் (40) - வெறியாட்டு (44) - விளக்கம் - சிலப்பதி காரத்தில் (46) - திருவிருத்தத்தில் (47) - திருக்கோவை யாரில் (49)-வெறிபாடிய காமக்கண்ணியார் (50)-மணந்து கொள்வதில் இருமுறைகள் (51) - இல்லறம் புகுவதில் இருநெறிகள் (58) - முருகன் திருமணம் (54) - வழக்கில் இரண்டும் இருத்தல் (56)-(2) புறப்பொருளில் வள்ளுவரின் அறம் (57) - நிலையாமையைக் காட்டல் (58) சிலம்பில் அறம் பற்றி (60) - அறம் : வகையும் தொகையும் (61)அறத்தின் செய்வகைகள் (58) மனம் மாசுஇல்லாமல் செய் யும் அறம் (64) - (அ) இல்லற இயலில் நான்கு பகுதிகளில் (6.5) - முதற் பகுதியில் இல்வாழ்வான் (66) - இல் வாழ்க்கை (68)-வாழ்க்கைத் துணை நலம் (69)மக்கட்பேறு (78) குடும்பத்தின் உறுப்பினர் பற்றி (66) - பல்வேறு கருத் துகள் (72) - இரண்டாவது பகுதியில் - அடிப்படைப் பண்பு அன்புடைமை (80) - மூன்றாவது பகுதியில் விருந் தோம்பல் முதல் (87) - பல்வேறு கருத்துகள் - இனியவை கூறல் (96) - செய்ந்நன்றி அறிதல் (97) - பல்வேறு கருத்து கள் - ஒப்புரவு அறிதல் (110) - ஈகை (112 ) - பல்வேறு கருத்துகள் - நான்காவது பகுதியில் இல்வாழ்வானிடம் அமைந்திருக்க வேண்டிய பண்புகள் (121) -நடுவுநிலைமை (121) - அடக்கமுடைமை (124) - ஒழுக்கமுடைமை (12.5)பிறனில் விழையாமை (128) - பொறையுடைமை (130)அழுக்காறாமை (13.5) - வெஃகாமை (140) - புறங் கூறாமை (142) - பயனில் சொல்லாமை (144) - தவினை யச்சம் (145) - புகழ் (148) - (ஆ) துறவற இயல் (152) +நோன்புப் பகுதி ஞானப் பகுதி (154). நோன்புப் பகுதி - அருளுடைமை (154) - புலால் மறுத்தல் (15.9) - தவம் {153) - கூடாவொழுக்கம் (156) - கள்ளாமை (170) - வாய்மை (171) வெகுளாமை (174) - இன்னா செய் யாமை (177) .கொல்லாமை (180) - ஞானப்பகுதி (184)நிலையாமை (185) - அகத்துறவு, புறத்துறவுகள் (188) " மெய்யுணர்தல் (192) - அவாவறுத்தல் (195) - போரில் அறம் (196) - சான்றோர் (209) இறுவாய் - பாரதக் கதையில் ஒரு நிகழ்ச்சி (211) - 2. தமிழ் இலக்கியங்களில் திே (217-275) முன்னுரை - அரசனின் இன்றியமையாமை (318-9)முறை-பரிமேலழகரின் விளக்கம் (219) பலருடைய கருத்து (224) - செங்கோன்மை (225) - நாட்டின் பொருள் வளம் {227) - மூவேந்தர் ஆட்சி முற்ை (231) சோழன் ஆட்சி {232) - பானடியனின் முறை (234) - சேரவேந்தனின் நீதி உணர்வு (241) - நீதிவழங்கல் (245)-வள்ளுவர் கருத்து (258) - இறைபெறும் நெறி (556) - அறங்கூறு அவைமூலம் நீதி (294) - பொய்க்கரி புகல்வோர் (265) - பூத சதுக்கம் (263) உடல் ஊனமுற்றோர் (270)-மது தர்மமும் வள்ளுவர் அறமும் (273) - சாதி ஒழிப்பு (274)  தமிழ் இலக்கியங்களில் முறைமை (279 -336) முன்னுரை - முறை, முறை (மை) ப்ற்றிய பல்வேறு காட்டுகள் - சிலம்பில் (281)-மணிமேகலையில் (282)-கம்ப ராமாயணத்தில் (283) மாறுபட்ட கருத்துக்கள் (291) - நீதி என்ற சொல் முறைமை என்ற பொருளில் (29.5) - ஆட்சி முறை (2.98) - ஈட்டாசிரியர் குறிப்பிடும் நிகழ்ச்சி (299)ஊழ்செயற்படுதல் (308) - அண்டங்களின் ஒழுங்குமுறை {304) பிள்ளைப் பெருமாள் அய்யங்கர் இதைவிளக்கும் முறை (306)-வள்ளுவரின் ஊழ் (முறைமை) பற்றிய விளக்கம் (309) இலக்கிய எடுத்துக்காட்டுகள் (310)-மேலும் வள்ளுவரின் விளக்கம் (313) - காவியங்களில் ஊழ் (319) - விளக்கம்-கண்ணிரின் ஆற்றல் (326) பின்னிணைப்பு-1 : பயன்பட்ட நூல்கள்-334 பின்னிணைப்பு-2 பொருட் குறிப்பு - 341



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard