எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
எல்லா உயிருந் தொழும். குறள் 260
மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
வேள்வி மிக உயர்ந்தது என்பதால் ‘ அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்....’ என்றார்.
உலகின் நாகரீகத் தொட்டில் - சிந்து சரஸ்வதி நாகரீகம் அதன் உச்சத்தில் 2 லட்சம் சதுர மைல்கள் பரவி இருந்தது, தொன்மை ஹரியானாவின் குருக்ஷேத்திரம் ஆருகிலுள்ள பிர்ரானாவில் கிடைத்த தொல்லியல் பொருட்களின்படி பொமு 7500 வரை செல்கிறது.
பொமு 4000 வாக்கிலேயே வேள்வி குண்டங்கள் என பலவும் தொல்லியல் அகழ்வில் கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள மொஹஞதாரோ ஹரப்பா என நம் பாடங்களில் கிடைத்தவை தாண்டி பல இடங்களில் மிகத் தெளிவான தரவுகள் கிடைத்துள்ளன.
காளிபங்கன் (ராஜஸ்தன்) யூப சாலை
ஹரியானாவில் பிர்ரானா, ராஹிகார்ஹி, மெஹெர்கர் தோலாவிரா லோத்தல்( முக்கிய துறைமுகம்-குஜராத்)
மற்றும் காளிபங்கன் (ராஜஸ்தன்)
செம்பு செய்வதற்க்கு தாமிரத்தை எங்கிருந்து பெற்றனர்? – கேத்ரி சுரங்கம் (ராஜஸ்தன்).
சங்க இலக்கியத்தில் நால் வேதங்கள்படியான வேள்வி பற்றிய பாடல்.
நல்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி
யூபம்நட்ட வியன்களம் பலகொல் (புறம்:15)
ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் (அகம்:181)
இன்று உலகின் பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் ஆங்கிலத்திலே நடைபெறுகிறது, தாய் மொழியில் பயின்றாலும் உலகின் ஒரு முக்கிய இணைப்பு மொழியாய் ஆங்கிலம் உள்ளது போலே பண்டை பாரத நாட்டில் வடமொழி இருந்துள்ளது. வடமொழியின் பேச்சு மொழியை ப்ராகிருதம், பாலி எனவும், செய்யுள் மொழியை சம்ஸ்கிருதம் எனவும் அழைக்கப் படுகிறது.
அசோகரின் 24 கல்வெட்டு இந்தியா முழுமையும் உளது, அதில் மைசூர் கல்வெட்டு மட்டுமே தமிழில் மீதம் அனைத்தும் வடமொழி தான். அசோகர் கல்வெட்டு பிராமி எனும் எழுத்துரு கொண்டுள்ளது, முதலில் வடமொழிக்கு உருவாக்கப்பட்டது, பின் தமிழிற்கு பயன்படும்போது "ழ", "ள", "ற" & "ன" போன்ற தமிழின் தனி சிறப்பு ஒலி எழுத்துக்களுக்கு உரு தர தமிழ் பிராமி உருவானது, அது பின் வட்டெழுத்து ஆகி, பின் நகரி என மாறியது, இன்று அனைத்து வட இந்திய மொழிகளும் நகரியோடு நின்றது, தமிழ் மேலும் சில மாற்றம் பெற்று இன்றைய வடிவம் பெற்றது.
தமிழர் இறை வழிபாட்டில் உலகைப் படைத்த கடவுளை ஆதி முதல் வழிபடுபவர்கள். தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள்.
அந்தணர் என்றால் - இறுதிப் பொருளை அணவுபவர் எனப் பொருள், வேதங்கள் - இறைவனை உலகின் இறுதிப் பொருளை ஆராய்பவர்கள். தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள் என திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் காட்டுகின்றன. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணரே. வேதநெறி தமிழர்களின் மெய்யியல் ஆகும் .
பார்ப்பான்- வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.
வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச் 80
செந்நிறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து சிலப்பதிகாரம் வரந்தரு காதை
5000 வருட சிந்து சரஸ்வதி நாகரீகத்தில் சம்ஸ்கிருதப் பங்கு உள்ளது என பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேட்டி
தமிழர் சமயத்தின் ஆதி நூல் வேதங்கள், அவை ஏட்டில் எழுதாமல் குருவிடம் கேட்டு அறிதல் முறையிலே தான் கற்க இயலும், எழுதாமையால் அது மறை எனப் படும், ஒத்து கூறி ஓதுவதால் ஓத்து எனப் படும்.
வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை. அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது.
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பினின் சொலுள்ளும் குறுந்தொகை 156. 5-6
3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)
திருவள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி உரைப்பார்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நாமக்கல் கவிஞர் உரை
அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள் - அறநூல்களை மறப்பர்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – 24 பதிற்றுப் பத்து
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச் பாட்டு – 74
வையை என்ற தலைப்பில் தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
தலைவன் கூற்று
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).
ஆன்றாரோ டொப்பர் நிலத்து."
மிக உயர்ந்ததான செவியுணவுக்கு அவியுணவு உவமையாகிறது.
வள்ளுவர் வேள்வியை மறுக்கும் சமண சமயத்தவராக இருந்தால் இவ்வாறு கூறுவாரா ? வேள்விகளை வள்ளுவம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்னும் ஐயம் தேவையற்றது; வேள்வியில் தரப்படும் அவியுணவு, மறை ஓத்து, வேள்விகளை மையமாகக்கொண்ட அறுதொழில் இவற்றை வள்ளுவம் மறுக்கவில்லையே !