பொழிப்பு (மு வரதராசன்):கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.
அதுபோல், கால் சுளுக்கு, முட்டி பிடிப்பு என ஆண், பெண் பலர் வருவார்கள்.
மந்திரிக்க.
மாந்திரீகம் என்பது வேறு, மந்திரித்தல் என்பது வேறு.
என் தந்தை மந்திரிப்பார்.
எவராவது கால் சுளுக்கு, தசை பிடிப்பு என காலை நேரத்திலேயே வருவார்கள்.
வாசலில் தென்னை ஈற்றங்குச்சியை வைத்து அவர் உடம்பை தடவுவதுபோல் மந்திரீப்பார்.
சிலசமயம் தோளில் உள்ள துண்டை கொண்டு சுழற்றி, சுழற்றி மந்திரிப்பார்.
ஒரு பத்து நிமிடம் ஆகும். அப்புறம் கால், கை உதறி போ என்பார்.
பலரும் நல்லாகிவிட்டது என்று கூறியே பார்த்துள்ளேன்.
மேற்கண்ட பலதும் செய்தாலும், காணிக்கை என்பது ஜோசியத்தில் மட்டுமே ரூ 2 / ரூ 5 வரும்.
ஆனால் புகழ் அபரிமிதமாக இருக்கும்.
நல்ல சாமி, நல்ல சாமி என்பார்கள். ஆனால் வறுமையும் ,கஷ்டமும்மாகவே அவர் வாழ்வு இருந்தது.
மக்களின் கவனம் #உபசரிப்பிலும் இருக்கவேண்டும். உயர்வாக பேசுவதிலும் இருக்கவேண்டும், வெறும் புகழை வைத்துக்கொண்டு வயிற்றில் ஈரதுணி போட்டுக்கொள்ளவேண்டியதுதான்.
இங்கு முகநூலில் கூட, சில அர்ச்சகர்கள் எங்கள் அப்பாவுக்கு கிராமத்தில் அவ்வளவு மரியாதை என பெருமைப்படுவார்கள். ஆனால் அவருடைய வாழ்வாதார நிலை அடிப்படைகளை பூர்த்தி செய்யவே படாதபாடு படுவதாகவே இருந்து இருக்கும். ஆனால் இது மறைக்கப்பட்டு விடும்.
இப்ப எதற்க்கு இச்செய்தி என்றால்,
சில பழைய நோட்டுகளை இன்று தேடியபொழுது, என் தந்தை எழுதிவைத்திருந்த, திருஷ்டி மந்திரம், ரத்தம் கட்ட மந்திரம் ,சுளுக்கு மந்திரம்,கட்டிபோடும் மந்திரம் போன்ற ஏடுகள் அப்பளம் போல் கிடைத்தன.
இதை பார்த்த உடனே எனக்கு மேற்கூறிய நினைவுகள் வந்துவிட்டது.
சிறுவயதில் அடிப்படை பாடம் அப்பாதான். அப்பொழுது இதையெல்லாம் சொல்லிக்கொடுத்து உரு போட கூறியிருக்கிறார்.
பூஜையை தவிர்த்து, சோதிடம்,மந்திரித்தல் தேவை. எதிர்காலத்துக்கு நல்லது என்பார்.
பார்ப்பனனும் பூணூலும் வேள்வியும் சிவ வழிபாடும் சங்ககாலத்திலே இந்த மண்ணில் உன்டு.
பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்பவரைப் பற்றி ஏற்கனவே இங்கே எழுதியிருக்கிறேன். அந்தணர் குலத்தைச் சேர்ந்த விண்ணந்தாயன் கடைச்சங்க காலத்தவன். கவுண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் காலத்தில் வாழ்ந்தவன். (பொயுமு 1ம் நூற்றாண்டு).
குடந்தைக்கு அருகில், முடிகொண்டான் ஆற்றின் கரையிலுள்ள பூஞ்சாற்றூரைச் சேர்ந்தவன். கிள்ளிவளவனைப் பாடிய ஆவூர் மூலங்கிழார் ஒரு சமயம் விண்ணந்தாயன் செய்த வேள்வி ஒன்றிற்குச் சென்றிருந்தார். அதைப் பற்றி அவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறுப் பாடலாக உள்ளது. அந்த வேள்வி எப்படிப்பட்டது
சிவபெருமானின் வாக்கிலிருந்து வந்த நால்வகையும் (ரிக், யஜுர், சாம, அதர்வண), ஆறு அங்கங்களும் (சிட்சை,நிருத்தம்,சந்தஸ், சோதிடம்,கற்பம்,வியாகர்ணம்) கொண்ட வேதத்தின் அடிப்படையில் நடைபெற்றது.
காட்டுப்பசு ஏழிலும் நாட்டுப்பசு ஏழிலும் இருந்த பெறப்பட்ட நெய்யை நீர் போலச் செரிந்து அந்த யாகம் நடைபெற்றதாம். இது வாஜபேயம் எனும் யாக வகையைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கூறுவர்.
இப்பாடலிலிருந்து சிவபெருமான் வழிபாடும், வேத நெறியும், அது தொடர்பான யாகங்களும் தமிழகத்தில் சங்ககாலத்திலிருந்தே இருந்தது என்று தெளிவாக விளங்குகிறது அல்லவா.
என்ன சார் நீங்க.. இப்படி "பார்ப்பான்/வேள்வி/நாலுவேதம்/பௌத்த எதிர்ப்பு" எல்லாம் புறநானூற்றிலேயே இருப்பதாக ஆதாரத்துடன் எழுதிட்டீங்களே!
இதைப் படிக்க நேர்கின்ற இந்துமதவிரோதிகள்/போராளிகளின் மனது என்ன பாடு படும்; இதை எவ்விதத்தில் அவர்களால் ஜீரணிக்க இயலும்?!