Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 7. தீயினும் அஞ்சப்படும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
7. தீயினும் அஞ்சப்படும்
Permalink  
 


7. தீயினும் அஞ்சப்படும்


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். (திருக்குறள் 202)

தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்-

தீயைவிடத் தீவினைகள் கொடிது. தீ சார்ந்ததை மட்டும் எரித்து அழிக்கும். தீவினைகள் தோன்றும் இடத்தையும் அழிக்கும். சேரும் இடத்தையும் அழிக்கும்.

செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து ஓரே பொருளைத் தருவது, சொற்பொருள் பின்வருநிலை அணி. இப்பாடலில், தீய என்னும் சொல் தீமை என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, இது சொற்பொருள் பின்வருநிலை யணி

எனவே தீயைப் போலவே தீவினைகளும் அறியாமல் செய்திருந்தாலும் அதற்கு¡¢ய பலனைக் கொடுக்கும் என்பது தொ¢கிறது.

தீ தொட்டால்தான் சுடும். ஆனால் தீமை என்பது நினைத்தாலே தீங்கு விளைவிக்கும்.
எனவே திருவள்ளுவர் தீயை ஒரு நிலைப்பேறாக (standard) வைத்துக் கொண்டு தீய செயல்களைப் பார்க்கிறார்.

தொ¢ந்து தொட்டாலும் தீ சுடும், நம்மை அறியாமல் தீயின் மீது நம் கை பட்டாலும் சுடும்.

விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் இலேவியராகமம் 5 ஆம் அதிகாரம் 17 ஆம் வசனத்தில், " ஒருவன் செய்யத்தகாதது என்று கடவுளின் கட்டளைகளினால் விலக்கபட்ட தீவினைகளில் ஒன்றைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் , அதை அவன் அறியாமையினால் செய்திருந்தாலும் அவன் குற்றமுள்ளவனே, அதற்கு¡¢ய தண்டனையைப் பெறுவான்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தீயின் கொடிய தன்மையை ஒரு புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது.

.நீர் மிகின் சிறையும் இல்லை;
தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளி மிகின் வலியும் இல்லை;
ஒளிமிக்கு அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி. (புறம். 51/1-4 )
பாண்டிய மன்னன் போர்க்களம் புகுந்தால் யாரும் அவனை எதிர்க்க முடியாது என்பது சொல்ல வந்த கருத்தாகும். அதற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தரப்படு கின்றன. நீர் அளவுக்கு மீறி மிகுந்தால் அதனைத் தடுத்து நிறுத்த அணைகள் அமைக்க இயலாது. காற்று மிகுதியாக வீசினால் அதனை யாரும் தடுக்க இயலாது. தீ மிகுந்தால் அதனின்று உயிர்களைக் காக்கும் வழியே இல்லை. (கும்பகோணம் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தும், சமீபத்தில் தேனி பகுதியில் குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தும் இதற்கு எடுத்துக்க்காட்டுகள்.)

இம்மூன்று செய்திகளைக் கூறி அவற்றிற்கு நிகராக அரசன் சினம் கொண்டு சீறி எழும் இயல்பு சிறப்பிக்கப்படுகின்றது

கம்பர் கைகேயியைப் பற்றி சொல்லுங்கால்
ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது எனப் புகன்று, நின்றாள் -
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்- என்று கூறுகிறார்.

கொடியவை என்று கூறப்பட்ட அனைத்திலும் கொடியவளான கைகேயியை வருணிக்க கம்பர் கூறிய சொற்கள் இவை.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (129)

என்ற குறள் இங்கே நினைவில் கொள்ளற்பாலது எனெனில்
தனக்கும் தன் மகனாகிய பரதனுக்கும் நன்மை பயக்கும் என்று கருதி கைகேயி சொன்ன வார்த்தைகள், செய்த கா¡¢யம் பின்னர் தீ போல் அவளையே எ¡¢த்தது. கணவனாகிய தசரதனும், மைந்தனாகிய பரதனும், நாட்டு மக்கள் அனைவரும் அவளை வெறுத்து ஒதுக்கினர்.

தீவினைகள் நமக்கு நன்மை பயக்கும் ஆயினும், அவற்றால் பிறர்க்குத் துன்பம் விளையுமானால், அவை தீ போல நம்மை எ¡¢க்கும் என்பதே நியதி.

தீ என்னும் ஒரெழுத்துச் சொல்லில் இருந்துதான் தீமை, தீங்கு, தீயவை, தீது, தீட்டு போன்ற சொற்கள் தோன்றியிருக்க வேண்டும். தீ என்பது கத்தியைப் போல் இரண்டு பக்கமும் கூர்மையானது. கத்தி எப்படி ஓர் உயிரைக் கொல்லப் பயன்படுகிறதோ அதேபோல் அறுவை சிகிச்சை செய்து ஓர் உயிரைக் காப்பாற்றவும் பயன்படுகிறது.
தீயும் எப்படி ஓர் உயிரைத் துன்புறுத்துகிறதோ அதேபோல் உயிரைக் காப்பாற்றவும் பயன்படுகிறது.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன்போல மாயத்தால்
மீளாத் துயர்தா¢னும் வித்துவக்கோட் டம்மாநீ
ஆளா உனதருளை பார்ப்பன் யானே. (குலசேகர ஆழ்வார்)

தீ க்கு இரண்டு குணங்கள் உண்டு. ஒன்று ஜோதியாகப் பிரகாசித்து ஒளி தருகிறது. மற்றொன்று சுட்டொ¢க்கும் வெப்பம். இரண்டுமே அளவோடு இருந்தால் நற்பயன்களையும் அளவுக்கு மிஞ்சினால் தீங்கயும் விளைவிப்பனை.

தீயில்லாமல் உலகில் வாழ்க்கை இல்லை என்பதனையும் எண்ணிப் பார்க்க வேண்டும்..

யஜுர் வேதத்தில் வேள்வித் தீயை மூன்று வகையாகப் பி¡¢த்து வைத்திருக்கிறார்கள்.
தமிழ் இலக்கியங்களில் அவை முத்தீ என்று பெயா¢ட்டு அழைக்கப் படுகின்றன.

அவை ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷ்ணாக்கினி. பொது நன்மைகளுக்காகச் செய்யப்படும் வேள்விகள், அதாவது மழை வேண்டி, பயிர் செழிப்பு வேண்டி செய்யப்படும் வேள்விகள், அரசன் செய்யும் இராஜசூயம், அச்வமேதம் போன்ற வேள்விகள் இவற்றில் வளர்க்கும் தீயை ஆகவனீயம் என்பர். இந்த வேள்விகள் முனிவர்களால் காட்டுப் பகுதியில் வெட்ட வெளிகளில் செய்யப்ப்டும். வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகள், அதாவது புதுமனை புகுவிழா, குழ்ந்தையின் பெயர் சூட்டும் விழா, திருமணம், அறுபதாம் அகவை நிறைவு விழா போன்றவற்றில் செய்ய்யும் வேள்விகளில் வளர்க்கும் தீயை கார்கபத்யம் என்பர். ஒருவர் மரணமடைந்து விட்டால் அவருடைய சிதைக்கு மூட்டும் தீயும், பின்பு பித்ரு கடன் செய்யும்காலை வேள்விகளில் வளர்க்கும் தேஏயும் தக்ஷ்ணாக்கினி என்று சொல்லப்படுகிறது.


இவற்றைத் தமிழில் முறையே காட்டுத் தீ, வீட்டுத் தீ, ஏட்டுத் தீ என்பர்.

வஞ்சிக் காண்டம், சிலப்பதிகாரம்
புன்மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை
முந்நூல் மார்பின், முத்தீ செல்வத்து
இருபிறப் பாளரொடு பெருமலையரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவுள் எழுதவோர் கல்தா ராரெனின் 130 சேரன் செங்குட்டுவன் (சிலப்பதிகாரம்)

மெல்லிய மயிரால் ஆன சிவந்த சடைமுடியும், ஈரம் காயாத உடையும், முப்பு¡¢ நூல் அணிந்த மார்பும் , முத்தீ எனப்படும் மூன்று வகையான நெருப்புச் செல்வத்தை உடையவரும், இரு பிறப்புக்களை உடைய அந்தணர்களுடன், பொ¢ய மலையான இமயமலையில் இருக்கும் அரசனாகிய சிவபெருமான். இளம் வயதிலேயே இறந்துபோன மாபெரும் பத்தினியைக் கடவுளாக வழிபடுதற்கான சிலையை வடிக்க ஒரு கல் தருவானோ?

என்று சேரன் செங்குட்டுவன் கேட்பதாகச் சிலப்பதிகார ஆசி¡¢யர் கூறுகிறார்.

ஒருகால், சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், இராசசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தனர். அதைக் கண்ட ஒளவையார் பெருமகிழ்ச்சியோடு இப்பாடலை இயற்றியுள்ளார்.
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
யான்அறி அளவையோ இதுவே; ஸ

நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீ எழுப்பும் வேண்புகை போன்ற அழகுடன் விளங்கும் வெண்கொற்றக் குடையையும், கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்.

திருமுருகாற்றுப்படையிலும் முத்தீ பற்றிய குறிப்பு உள்ளது.

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்”
முத்துப் போன்றவனே, மூன்று வகையான தீயினாலும் வளர்க்கப்படும் வேள்விகளுக்கும் தலைவனே, முக்தனே, முத்தி அளிக்கும் பெருமானே என்று அருணகி¡¢நாதர் முருகப்பெருமானை வேண்டுகிறார்.
முத்தா முத்தீ அத்தா
சுத்தா முத்தா முத்திப் பெருமாளே (திருப்புகழ்)
முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅர னாவது அறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயி னுள் ளெழுந் தன்று கொலையே
(திருமந்திரம் – 344)
இப்பாடலின் அடிப்படை? ‘நல்லது செய்தால் நல்லது வரும்; கெட்டது செய்தால் கெட்டது வரும். இதில் கடவுள் எதற்கு?’ என்ற கொள்கை உடைய முனிவர்கள் சிலர் இருந்தார்கள். அதாவது, நாம் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறோம். செய்யும் வேலைக்கு ஊதியம் வருகிறது. வேலை செய்ய வில்லையென்றால், ஊதியம் வராது. இதில் முதலாளி என்பவர் எதற்காக என்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் அந்த முனிவர்களும்! அவர்களைக் கர்ம மார்க்கக்காரர்கள் என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட அவர்கள் மிகுந்த செருக்கோடு, ஒரு யாகம் செய்யத் தொடங்கினார்கள்.

அவர்கள் ஆகவனீயம், காருக பத்தியம், தட்சிணாக்கினீயம் என்று சொல்லக்கூடிய மூன்று விதமான ‘தீ’ வளர்த்து யாகம் செய்யக் கூடியவர்கள். அவர்களின் ஆணவத்தை ஒழித்து, அவர்களுக்கு அறிவு புகட்டுவதற்காக, சிவபெருமான் வந்தார். அப்போது, முனிவர்கள் நடத்திய யாகத்தில் இருந்து, அவர்களின் ஆணவமெல்லாம் உருண்டு திரண்டு வந்ததைப்போல, ஒரு யானை வெளிவந்தது.

அந்த யானையை சிவபெருமான் மீது ஏவினார்கள். தன்னைக் கொல்ல வந்த யானையை, சிவபெருமான் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த் துக் கொண்டார். ஆணவமும் சினமும் கொண்ட முனிவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. அவர்கள் செய்யும் யாகத்தில், ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானே வெளிப்பட்டு, ஒளிவெள்ளமாய் அருள்புரிகின்றார் என்பதை, அந்த முனிவர்கள் அறியவில்லையே என்கிறார் திருமூலர்.
அதுதான் உண்மை! செருக்கு உள்ளவர்களுக்குத் தன்னையே தெரியாது. ‘‘ஏய்! நான் யார் தெரியுமா?’’ என அடிக்கடி கேட்பார்கள்!

இக்கதையில் வரும் ‘யானை’ என்பதை, யான்+ஐ எனப் பிரிக்க வேண்டும். தமிழில் ‘ஐ’ என்று சொல்லக்கூடிய ஒற்றை எழுத்திற்குத் ‘தலைவன்’ என்பது பொருள்.
நானே தலைவன். நான்தான் எல்லாம் என்ற ஆணவம் பெரிதாக (யானை போல) வெளிப்பட்டு, அழிவைத் தேடிக் கொள்கிறது என்பது ஒரு பொருள்.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது (1049)

நெருப்புக்கு நடுவிலே தூங்குவது ஒருவேளை சாத்தியமானால் கூட, வறுமைகொண்டவன் கண்மூடுவது சாத்தியமே இல்லை என்கிறார் வள்ளுவர்.
இக்குறளிலும் திருவள்ளுவர் நெருப்பை ஒரு நிலைப்பேறாக வைத்து வறுமையின் கொடுமை தீயைவிடக் கொடிது என்கிறார்.
இதுபோல் இயலாத செயலைச் சொல்லி மற்றொரு இயலும் பொருளை விளக்குவது மகான் களின் வழக்கம். விவிலியத்தில் இயேசு கிறிஸ்து கூட இப்படி ஒரு கூற்றைச் சொல்லுகிறார்.
'ஊசியின் காதுக்குள் ஒட்டகம் புகுந்தாலும் புகும், ஆனால் செல்வந்தர்கள் தேவனுடைய ராஜியத்துக்குள் வரயியலாது' என்கிறார்.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். 947

என்ற குறளில் திருவள்ளுவர் பசியைத் தீ என்று குறிப்பிடுகிறார்.

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

தொட்டால் சுடக்கூடியது புறத்தீ, தொடாமலே சுடக்கூடியது அகத்தீக்களில் ஒன்றான
காமத்த £ என்று கலித்தொகையில் கூறப்படுகிறது.

தீயானால் சுடுதலோ இலர்மன்;ஆயிழை
தீயினும் கடிது,அவர் சாயலின் கனலும்நோய் (கலித்தொகை,137)

கம்பர் ஆரண்யகாண்டத்தில் சீதையின் காமத்தீயை வர்ணிக்கிறார்.

அன்ன மென் நடையவட்கு அமைந்த காமத் தீ,
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என,
நல் நெடுங் கரங்களை நடுக்கி, ஓடிப் போய்,-
முன்னை வெங் கதிரவன் - கடலில் மூழ்கினான்.
சீதையின் காமத்தீ தன்னையும் சுட்டது தாங்கமாட்டாமல் கதிரவன் கடலுக்குள் மூழ்கினான்

சீதையின் காமத்தைத் தீயென்ற அதே கம்பர்தான் சீதையின் கற்பையும் தீயென்கிறார். எனவே தீவினைகள் மட்டுமல்ல, எது எது சுடுகிறதோ அதெல்லாம் தீதான்.

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும்பெயர் உலகின் தம்மனை
ஆனவள் கற்பினால் வெந்தது அல்லதுஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ.

சானகி என்னும் பெயர் கொண்ட இவ்வுலகின் தாயானவளின் கற்புத்தீயால் இலங்கை நகரம் முழுவதுமன்றி உன் வெற்றியும் வெந்தனவே அன்றி ஒரு குரங்கு சுட்டது என்று எண்ணுவது மாட்சிமையுடையதோ? என்று வீடணன் கேட்கிறான் இராவணனைப் பார்த்து.
சங்க இலக்கியம் தமிழின், தமிழனின் தாய் இலக்கியம்; உலகத்தாரின் வாழ்க்கை முறைகள் பற்றிப் பேசுவது.
அம்பலும் அலரும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவை சங்க காலந்தொட்டே நிகழ்ந்து வந்திருக்கின்றன என்பதை பல இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அன்று நிகழ்ந்த ஊர்வம்பு பேசுதலை, "அம்பல்' என்றும் "அலர்' என்றும் அக்கால மக்கள் வழங்கி வந்தனர். அம்பல் என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக் காதலை பலரும் அறிந்து, பழித்துக் கூறல் என்றும், அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் பேரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அன்றைய அம்பலும் அலரும் இன்று பேசப்படும் கிசுகிசுக்களைப் போலன்றி, நன்மையின் நிமித்தமாகவே பேசப்பட்டிருக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது.
ஊர்வம்பு என்றாலே ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நாட்டம் உண்டு என்று சொல்வர். காலையில் ஒரு பெண்ணிடம் ஒரு செய்தியைச் சொன்னால் போதும், மதியத்துக்குள் அச்செய்தி ஊருக்குள் பரவிவிடும். இதை இலக்கியங்களும் உறுதி செய்கின்றன. நற்றிணையில் கபிலர் தமது குறிஞ்சித்திணைப் பாடலில்,
"தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்''
என்கிறார்.. அலர் தூற்றும் பெண்கள், கவலைப்படாமல் தூற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் வாயில் தீ வைத்திருப்பவர்கள் என்கிறார்.
இன்பத்துப் பாலில், திருவள்ளுவரும் பேசுகின்றார்.
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்'' (1148)
தலைவன், தலைவி காதல் பற்றிய செய்தி தீ பரவியது போல, ஊர் முழுவதும் பேசப்படுகிறது. ஆயினும் தலைவி தன் காதலில் உறுதியாக இருக்கிறாள். யார் என்ன பேசினால் என்ன? எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றி அணைக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது. பதிலாக இன்னும் என் காதல் தீவிரமடையும் என்று கூறுவதாக இக்குறள் அமைகிறது.. எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றினால் அது மேலும் கொழுந்துவிட்டு எரியும் அல்லவா?
அது மட்டுமல்ல
இறைவனை தீயாக உருவகம் செய்து பார்த்தல் எல்லா சமயங்களிலும் உள்ளது. சிவன் நெருப்புத் தூணாக நின்ற வரலாறு புராணத்தில் உள்ளது.

ராமலிங்க அடிகள் இறைவனை 'அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' என்று விளிக்கிறார்.
நெருப்பிலே ஜோதியை மட்டுமல்ல, கருணையையும் காண்கிறார்.

'அலகில் சோதியன் அமபலத்தாடுவன்' என்கிறார் சேக்கிழார் பெருமான்.

'விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்
விளங்கொளியாய்
எண் இறந்து எல்லை இலாதோனே' என்கிறார் மாணிக்கவாசகர்.

ந தத்ர சூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோஅய மக்னி
தமேவ பாந்தம் அனுபாதி சர்வம்
தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி

என்று முண்டக உபநிடதத்தில் ஒரு சுலோகம் பரம்பொருளின் ஒளியைப் பாடுகிறது.
இதன் பொருள்: சூர்யன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்னல் ஆகியா யாவும் தானாக் ஒளிர்வதில்லை. எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளாகிய உன்னுடைய ஒளியையே அவை பிரதிபலிக்கின்றன என்பதாகும்.

விவிலியத்திலே பழைய ஏற்பாடு யாத்திராகமம் என்ற புத்தகத்தில் முதல் அதிகாரத்தில் மோசெஸ் என்ற தீர்க்கத்தா¢சிக்கு இறைவன் ஒரு முள்செடியில் தீயாக எ¡¢ந்து ஜோதியாகக் காட்சி தருகிறார்.

குரானில் அந்நூர் என்ற 24 வது சுராவில் 35 ஆம் வசனத்தில்

" வானத்துக்கும் பூமிக்கும் அல்லாஹ் ஒளியாக இருக்கிறான்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் சாதாரண மனிதனுக்கு, தீ என்றவுடன் தீயின் எ¡¢க்கும் தன்மை மட்டுமே நினைவில் வரும். சிறு குழந்தைகளை தீயோடு விளையாடாதே என்று பொ¢யவர்கள் கண்டிப்பார்கள். தீயின் பயன்களை யாரும் பொ¢தாக எடுத்துக் கொள்வதில்லை. தீயைச் சா¢யாகக் கையாளாவிடில் அதனால் ஏற்படும் தீங்கை மட்டுமே நினைத்துப் பார்க்கிறோம். எனவே நமக்கு வரும் அனைத்துத் துன்பங்களையும் தீயோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.
உலகப் பற்று எல்லாம் துறந்த பட்டினத்தார் தன் தாயின் இறப்பின் போது கதறி அழுகின்றார்..தாயின் இறுதிச் சடங்கைச் செய்யும் போது
முன்னையிட்ட தீ முப்புரத்தில் பின்னையிட்ட தீ தென்னிலங்கையில் அன்னையிட்ட தீ அடி வயிற்றில் என்று பாடுகிறார்.
எல்லாம் துறந்த ஒருவரால் கூட தாயின் இறப்பைத் தாங்க முடியாது என்பதுதான் பட்டினத்தாரின் வாழ்வும் நமக்குச் சுட்டி நிற்கிறது.
இறந்து போன தன் தாயின் சிதைக்குத் தீ மூட்டிய பட்டினத்தார் அன்னையிட்ட தீ அடி வயிற்றில் என்றார். தீயிட்டது பட்டினத்தார் எனினும் தன் தாயின் இழப்பால் ஏற்பட்ட துன்பம் எனும் தீ பட்டினத்தாரின் அடி வயிற்றில் மூழ்கிறது.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்நயம் செய்து விடல். (314)

என்ற குறளில் நமக்கு தீங்கு செய்தவருக்கு நாம் நன்மை செய்தால் அது அவரைத் தண்டித்தல் போலாகும் என்ற கருத்து வெளிப்படுகிறது. அது எப்படி நன்மை ஒருவரைத் தண்டிக்கும் என்றால், அந்த நன்மை அவரை தீ போல் எ¡¢க்கும் என்பதே கருத்து.
விவிலியத்தில் இந்த கருத்து நேரடியாகவே கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் நீதிமொழிகள் என்ற புத்தகத்தில் 25 ஆம் அதிகாரம் 21 ஆம் வசனத்தில்

" உன் சத்துரு பசியாக இருந்தால் அவனுக்கு உணவு கொடு, அவன் தாகமாயிருந்தால் தண்ணீர் கொடு; இப்படிச் செய்வதினால் நீ அவன் மேல் எ¡¢கின்ற தழலை விழப்பண்ணலாம்.' என்று சொல்லப்படுகிறது.

இதே கருத்தை விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள, பவுல் அப்போஸ்தலர் ரோமாபு¡¢யின் கிறித்தவ சபையாருக்கு எழுதிய கடிதத்தில் 12 ஆம் அதிகாரத்தில் 20 ஆம் வசனத்தில் எடுத்தாண்டுள்ளார். ஆக நல்வினைகளும் சில நேரங்களில் பிறரை தீ போலச் சுடும் என்பதே உண்மை.
.
எனவே தீ என்பது நெருப்புக்கு மட்டும் உரிய பெயரன்று. எதெல்லாம் நம்மைச் சுட்டு எரித்துக் கொண்டிருக்கிறதோ அதெல்லாம் தீயின் வகைப்பட்டவை.

பரிமேலழகர் உரை:
(தீவினையைப்போல் பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.).

ஆகாம்ய கர்மம், சஞ்சீத கர்மம்
தீவினைகள் பத்து என்று பௌத்தநெறி குறிப்பிடுகிறது. மணிமேகலை நூலில், இவை என்னென்ன என்று அறவண அடிகள் மணிமேகலைக்கு விளக்குகிறார்.. அவை:
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல்
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்,
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்
பத்து வகையால் பயன்தெரி புலவர் (மணிமேகலை, 24, 125-131 )
இந்த தீவினைகள் எல்லாம் மனம், வாக்கு, காயம் என்று மூன்றினாலும் செய்ய்யப்படுகின்றன.
தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா -நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்று பாடினார் பாரதியார்.

தீயே நீயே எமது உயிரின் தோழன். நின்னைப்போல எமது உள்ளம் சுடர்விடுக. நின்னைப்போல் எமதறிவு கனலுக என்ற வசன கவிதை வரிகளில் பாரதி உணர்த்துவது என்ன? உயிருக்கும் உணர்வுக்கும் உந்து சக்தியாக உள்ளதனைப் பாரதி ‘தீ’ என்றார். தீ எரிக. அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ, விரதத்தீ, வேள்வித்தீ, சினத்தீ, பகைமைத்தீ, கொடுமைத்தீ ! என்கிறார். இந்த அடிப்படையில் தான் நெருப்பைத் தீண்டி நந்தலாலாவைத் தொடுகின்றார். நெஞ்சிலே அன்பு கொண்டால்
நெருப்பில் கூட இறை தீண்டும் இன்பம்.

நாம் படித்த தமிழ்க்காவியங்களைத்தான் பாரதியும் படித்திருக்கிறார் அவருக்கு அவை தந்த அனுபவம்.

கள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்”

காவியத்தின் சேர்மானமாக இவற்றை யாராவது சொல்லியிருக்கிறார்களா? இளங்கோவிடமும் கம்பனிடமும் தீயை, காற்றை, வானவெளியைக் தேடி எடுக்கும் ரசனையை இந்தக் கவிதை நமக்குக் கற்பிக்கிறது. இது மிக நவீனமான கவித்துவ அனுபவம்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இலக்கியத்தில், சொல் என்பது சொல்லன்று: சொல்லிக் கொடுத்ததை ஒப்பிக்கும் கிளியன்று: புலவனின் வரம்பற்ற உணர்வு ஆழத்திலிருந்து எட்டியவரை எடுத்து, நாம் வாங்கிக் கொள்ளும் தகுதியின் அளவுக்கு நமக்குக் கொடுக்கும் பாத்திரம் அது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard