உத்தமசோழன் கொலைப்பழியும் மிஷனரி திராவிட புரட்டுவாதமும்:
ஆதித்த கரிகால சோழன் கொலையோடு 'பார்ப்பன சதி' என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் அபத்தமாக எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது.அதில் செம்பியன் மாதேவி,உத்தமசோழன் போன்றவர்களை இணைத்துக் கொண்டே போவதில் உச்சபட்ச கற்பனை இருக்கிறதே தவிர அதற்கான சாத்தியக்கூறுகள் தரவு பூர்வமாக எதுவும் இல்லை.
செம்பியன் மாதேவி மீதெல்லாம் சந்தேகிப்பது,அவரை பிராமணர்கள் சூழ்ச்சியால் கைப்பற்றிவிட்டார்கள் என்று மிஷனரி கொள்கையினர் பேசுவதற்கு ஒரே காரணம்தான் உண்டு.பெண்டிமைத்தனம் ஹிந்து மதத்தில் உண்டு,பெண்களுக்கு வழிபாட்டு உரிமை கிடையாது என்றெல்லாம் இவர்கள் கட்டும் பொய்களை கழுவேற்றுவது போல செம்பியன் மாதேவியாரின் பெரும் பிம்பம் இருப்பதே ஆகப்பெரிய காரணம்.
முதலாம் பராந்தக சோழன்,கணவர் கண்டராதித்த சோழன்,அரிஞ்சய சோழன்,சுந்தர சோழன்,ஆதித்த கரிகாலன், தமது மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன், ராஜ ராஜ சோழன் எனச் சோழ பெருவேந்தர்களின் அரசாட்சியில் வீற்றிருந்த முதுபெரும் தேவியவர்.அவருடைய கணவர் கண்டராதித்தர் திருமுறைபாடிய பாடிய சோழன்.பின்னால் சோழர்களின் வேத சைவநெறி பற்றிற்கே செம்பியன் மாதேவியின் தாக்கம்தான் பெரிதாக இருந்திருக்க வேண்டும்.
செம்பியன் மாதேவியின் மகன் உத்தம சோழனை 'திருவயிற்றுதித்த' என்று சொல்வார்கள்.உத்தமசோழனை அவர் பெற்றதால் அவரை 'திருவயிறுவாய்த்த' என்று அழைத்தார்கள்.அப்படியானால் எப்படிப்பட்ட மேன்மை இருந்திருக்கிறது இவர்களுக்கு சோழராட்சியில்?
செம்பியன் மாதேவி சோழர்களின் பெருங்கிழத்தி. அவருடைய மாதேவடிகள் என்ற பெயரை தன் மகளுக்கு சூடுகிறான் ராஜராஜன்.செம்பியன் மாதேவியார் படிமத்தை செய்து நிறுவியது ராஜேந்திர சோழன்.செம்பியன் மாதேவி திருப்பணி செய்த கோவில்களுக்கு நிவந்தத்தை எப்படி வாரிக் கொடுத்துள்ளனர் என்று பார்த்தாலே தெரியும் அவர் மேல் அவர்கள் வைத்த மரியாதை.நிற்க.
அடுத்தது,காட்டுமன்னார் கோவில் அனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டினை வைத்துக் கொண்டு ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரணமான ரவிதாஸன்,சோமன்,பரமேஸ்வரன் போன்றவர்களை ஆதித்த கரிகாலன் கொலையில் துரோகி என்று சொல்வதால் உடனே 'பார்ப்பன சதி' என இன்று வரை உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
மிஷனரி,திராவிட வரலாற்றாய்வாளர்கள் சொல்வது போல அது உத்தமசோழனால் கண்டுகொள்ளப்படாமல் ராஜராஜனால் அந்த துரோகி முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆவணம் அல்ல அது.அது ஒரு நில ஆவணமாகும்.
|| இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர ||
ரேவதாச கிரமவித்தன் மற்றும் துரோகிகளின் குடும்பத்திற்கே கொடுத்த நிலங்களின் பதிவு ஆவணங்களை ரத்து செய்து,அந்த நிலங்களுக்கு கண்காணியாக கொட்டையூர் பிரம்மாதிராஜனும் சந்திரசேகர பட்டனும் நியமிக்கப்படுகிறார்கள்.இந்த அரசாணையை குருகாடி கிழான் என்பவன் நிறைவேற்றுகிறான்.
பிராமணர்கள் சதி செய்தார்கள் என்று மீண்டும் பிராமணனையே அந்த நிலங்களுக்கு தலைமையாக வைப்பார்களா?அந்த நிலங்களின் ஆவணங்களை ரத்து செய்து அதை பிரித்து விற்கிறார்கள் "வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவனையானான பல்லவ முத்தரையன் மகன் பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையனேன்" என்ற அதிகாரியிடம்.
அவன் அந்த நிலங்களை வாங்கி வீரநாராயண சதுர்வேதி மங்கலத்தில் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலுக்கு தானமாக தருவதுதான் அதனுடைய முழு செய்தி.தண்ணீர் பந்தலுக்காகவும் பதினைந்து பேர் சிவயோகிகள் உட்பட்ட சிவபிராமணர் உண்பதற்காகவும் 2 1/4 வேலி 2 மா நிலத்தையும் ஆறு மனைகளையும் 112 கழஞ்சு பொன் குடுத்து வாங்கி அறக்கொடையாக அளிக்கிறான்.ஆக பிராமண அதிகாரிகளிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலங்கள் மீண்டும் கோவிலுக்குத்தான் செல்கிறது.
இதில் கவனிக்கத்தக்கது எந்த இடத்திலும் இந்த சாஸனங்களில் நேரடியாக ராஜராஜன் ஆணை என்ற ஒன்றும் இல்லவே இல்லை.அதோடு இந்த நிலங்கள் எப்பொழுது கைப்பற்றப்பட்டு ஊர் சபையின் கீழ் வந்தது என்றும் தெரியவில்லை.ஒருவேளை அதை சுந்தர சோழனோ,ஏன் உத்தமசோழனோ கூட அதை செய்திருக்கலாம்.
எனவே கொலையாளிகள் அல்லது துரோகிகள் சுந்தர சோழன் அல்லது உத்தமசோழன் காலத்தில் தண்டிக்கப்படவில்லை என்றெல்லாம் அடித்துக் கூறவே முடியாது.மேலே சொல்லும் ஆவணங்களே தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை இன்னொரு நிவந்தத்திற்கு பயன்படுத்தும் நிகழ்வாகத்தான் குறிப்பிடப்படுகிறது.
2008 ல் மயிலாடுதுறை திருவிந்தளூர் செப்பேடுகள் கிடைத்தது.சோழர் செப்பேடுகளிலேயே மிகப்பெரியது அது.கொப்பம் போரில் இராஜாதி இராஜன் களத்தில் இறந்து அதன் பின் இரண்டாம் ராஜேந்திரன் தலைமை தாங்கி வென்றான்.வெற்றிக்கு பின் இராஜாதி ராஜன் கொடுப்பதாக அறிவித்த நிவந்தத்தை நிறைவேற்றினான்.அதையே இந்த சாஸனம் சொன்னது.எனவே இதே போல உத்தம சோழன் காலத்து உள்ள ஒரு ஆவணம் கூட கிடைக்கலாம்.
மற்றபடி உத்தமசோழன் என்பதை விருதுப் பெயராக ராஜன் ராஜனும் கொடுத்தான்.ராஜேந்திரனின் இயற்பெயரே மதுராந்தகன்தான் அதுவும் உத்தமசோழனின் பெயர்தான்.எனவே,செம்பியன் மாதேவி,உத்தமசோழனை பிராமண சதிக்கு ஆட்பட்டவர்கள் ஆனால் ராஜாராஜன் தனித்தமிழ் கோஷ்டி போல பேசும் மிஷனரி வாதங்களை வலிமையாக எதிர்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.
Suresh Venkatadriசெம்பியன்மாதேவி மீது ராஜராஜனும் ராஜேந்திரனும் வைத்திருந்த மரியாதை குறித்து நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் ,செம்பியன் மாதேவி மீது குற்றம் சுமத்துவது மிஷனரி வாதம் என்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆதித்த கரிகாலனின் கொலையில் செம்பியன்மாதேவிக்கும்,மதுராந்தக உத்தம சோழருக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்பது நீலகண்ட சாஸ்திரி அவர்களே கூறியதுதான். சதாசிவ பண்டாரத்தாரும் அதைச் சொல்கிறார். அனால் அவர்கள் பிராமண சதியென்று சொல்லவில்லை. இந்த சந்தேகம் பொன்னியின் செல்வன் நாவலினால் வரவைளை. கல்கியைப்பொறுத்தவரை அப்படி எழுதவில்லை. செம்பியன்மாதேவியை இக உயர்ந்த இதத்தில் வைத்துத்தான் எழுதியிருக்கிறார். 'திருவயிற்றுதித்த தேவர்' என்பதையும் அவர் சொல்கிறார்.மேலு அவர் ரவிதாசனி பிராமணர் என்று அந்த நாவலில் சொல்வதேயில்லை. இந்த ஆதித்த கரிகாலன் கொலையில், மேற்சொன்ன இருர்க்கும் தொடர்பிருக்கிறது என்று கருத்து, பாலகுமாரன் ஒரு கட்டுரையில் எழுதி பின்னர் தனது உடையார் நாவலிலும் அதைத் தொடர்ந்ததால்.மீண்டு வந்தது.நீங்கள் சொல்லும் அதே காட்டு மன்னார் கோவில் கல்வெட்டைத்தான் ஆதாரம் காட்டினார்.அதற்கு சில அடிப்படைகள் என்னவென்றால்,ரவிதாசன், உதகம சோழரின், பிரம்மராயராக 15 ஆண்டுகள் இருப்பது. ராஜராஜன் அந்தக்காலகட்டத்தில் தஞ்சையில் இல்லாமல், உடையாளூரிலும், பழையாறையிலுமே இருந்தது.பின்னர் பதவிக்கு வந்தபோது,இந்த அந்தணர்களை வெளியேற்றியது (சுமார் 100 குடும்பங்கள்)ஆகியவை என்கிறார் பாலகுமாரன்.இவர்களை சேர நாட்டு முன்குடுமி அந்தணர்கள் என்கிறார் அவர்.'கடிகை' என்ற ஒரு நாவலிலும் இதை எழுதியிருக்கிறார்.காந்தளூர்ச் சாலை என்பதே ஒரு கடிகை, அதில் சேரநாட்டு அந்தணர்கள்,போர்க்கலை பயிற்சி கற்பித்தார்கள்,அது சோழநாட்டுக்கெதிராக பயன்படுத்தப்பட்டது.அதனாலேயே அதை ராஜராஜன் அழித்தார் நேபாதும் அவர் பார்வை.பாலகுமாரனும் பிராமனச் சாதி என்று சொல்வதில்லை, வீரபாண்டியனைக்கொன்றதற்கு பழி வாங்கத் துடிக்கும்,பாண்டிய நாட்டு ஆபத்துத்தவிகளுக்கு ஆதரவாக சேர நாட்டு அந்தணர்கள் செய்தது என்று கூறுகிறார்.சேர நாட்டு அந்தணர்கள் ஒரு Mercenary போல் செயல்பட்டதாகக் கூறுகிறார்.
Sundar Raja CholanSuresh Venkatadri இடதுசாரி மற்றும் திராவிட ஆய்வாளர்கள் மட்டுமே முன் வைக்கும் முகாந்திரமற்ற அரசியல் வதந்தி உத்தமசோழருக்கும்,செம்பியன் மாதேவிக்கும் தொடர்பு இருக்கும் என்று பேசுவது.
அதற்கான தரவுகளாக அவர்கள் முன் வைப்பது என்ன? சந்கேகம் மட்டும்தானே😄 மிஷனரி வாதம் என்று இதை ஏன் சொல்கிறேன் என்று இதை யார் விடாமல் கடந்த இருபது வருடமாக பேசி எழுதி வருகிறார்கள் என்று பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
ஜெகத்கஸ்பரோடு தொடர்புடைய நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சோழர் வரலாற்றில் இந்த பகுதியை கேட்டுப்பாருங்கள்.எனக்கு அப்படி ஒருவர் இருக்கிறார்😄
Saravana KumarSuresh Venkatadri கே.ஏ.என் , சதாசிவ பண்டாரத்தார் இருவருமே இந்த வதந்தியை மறுத்து , அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்... பாலகுமாரன் மட்டுமே இப்படி எழுதியுள்ளார்...எந்த அடிப்படையில் இப்படியொரு முடிவுக்கு வந்தேன் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை..
Sundar Raja CholanSuresh Venkatadri சேர நாடு வீரர்களை உருவாக்கிக் கொடுத்தது அவர்கள் கூலிப்படை போல எல்லா நாட்டின் அதிகாரத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மை..
காந்தளூர் சாலையை விடாமல் நூற்றாண்டாக ஒழிக்க காரணமே கூட அது போலத்தான் தெரிகிறது.இன்று JNU வை முற்றுகையிட்டால் பலர் கோபிக்கிறார்கள்.நிற்க😊
ஆதித்த கரிகாலன் ஷத்திரிய தர்மத்தை மீறி வீரபாண்டியனின் தலையை வெட்டி ஏதோ பெருத்த அவமானப்படுத்திவிட்டான்.
பாண்டியன் தலைகொண்ட என்பதை ரொம்ப விசேஷமாக குறித்துக் கொண்டான்.
அவனுடைய போர்வெறியும் மூர்க்கமாக இருந்ததாகவே தெரிகிறது.எனவே அவன் பழிவாங்கப்பட்டுவிட்டான்.
Ramachandranகடிகை என்ற புதினம் எழுதுவதற்குமுன்னரே, காந்தளூர்ச்சாலை குறித்த பாலகுமாரன் அவர்களின் புரிதல் பிழையானது என்று அவரிடம்நெடுநேரம் வாதிட்டேன். (1989ஆம் ஆண்டு தஞ்சாவூர் ராஜா சத்திரம் ஓய்வுவிடுதியில் நள்ளிரவு தாண்டிய பின்னரும்வாதிட்டது நினைவிலுள் ளது) காந்தளூர்ச்சாலை கேரளர் சாலை.சத்திரியப் பயிற்சிக் கல்லூரி.கேரளம் பரசுராம க்ஷேத்தி ரமாக மாறுமுன்னர் சேர மன்னர் தலைமையில் திகழ்ந்த கல்விக்கூடம் அது என்று வாதிட்டேன். சிகரெட் பாக்கெட்டுகள் இரண்டு காலி செய்தார் என நினைக்கிறேன். என் வாதம் அவரால் ஏற்கப்படவில்லை.