Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது? - ஸ்பாட் விசிட் #Video


Guru

Status: Offline
Posts: 7329
Date:
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது? - ஸ்பாட் விசிட் #Video
Permalink  
 


மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது? - ஸ்பாட் விசிட் #Video

https://www.vikatan.com/story-feed   மு.முத்துக்குமரன்

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்

அர்ச்சகர்கள் வள்ளுவரைத் தமிழிலேயே வழிபடுகிறார்கள். வள்ளுவரின் திருநாமங்களைச் சொல்லிப் போற்றித் தமிழில் வழிபாடு செய்கிறார்கள். பக்தர்களுள் சிலர் சந்நிதியில் மாணவர்களுக்குத் திருக்குறள் பயிற்றுவித்து வருகிறார்கள்.

மயிலாப்பூர் என்றாலே கபாலீஸ்வரரும் வள்ளுவரும்தான் நினைவுக்கு வருவார்கள். ஏழு சிவாலயங்கள் கொண்ட மயிலையில் வள்ளுவர் கோயில், எட்டாவது சிவாலயமாகச் சிறப்பு பெற்றுள்ளது. மயிலை முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயிலோடு இணைப்புக் கோயிலாகத் திருவள்ளுவர் கோயில் உள்ளது.

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்

வள்ளுவர் கோயில் வாசல் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. வள்ளுவர்தான் இங்கு ஸ்தலமூர்த்தி. வள்ளுவர் தனி சந்நிதியில் இருக்கிறார். வாசுகி, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், துர்கை, முருகர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சனீஸ்வரர் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் அருள்கின்றனர். நாகர் வழிபாடும் இங்கே நடக்கிறது. ஏகாம்பரேஸ்வரருக்கு இரண்டு கால பூஜை. வள்ளுவருக்குக் காலையில் மட்டும் ஒரு கால பூஜை.

வைகாசி அனுஷத்தில் உதித்த வள்ளுவர் மாசி உத்திரத்தில் ஜீவமுக்தி அடைந்தார் என்கின்றனர். அந்த நாள்களில் சிறப்பு பூஜை அறநிலையத்துறை சார்பில் இங்கே நடைபெறுகிறது.

கோயில் வளாகத்துக்குள், இலுப்பை மரத்தடியில் வள்ளுவர் அவதரித்ததாகக் குறிப்பிடப்படுகிற அந்த இடத்திலிருந்து 30 அடி தள்ளி அவருக்கு சந்நிதி உள்ளது. மரத்தின் அடிப்பாகம் செப்புத் தகட்டால் கவசமிடப்பட்டிருப்பதாக, அங்குள்ள குறிப்பு தெரிவிக்கிறது. அந்த இடத்தில் மேடை ஒன்று 1935-ம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே வள்ளுவர் பாதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. கிணறு ஒன்றும் இங்கே உள்ளது. அதை இப்போதுதான் ஓரளவு தூர்வாரியிருப்பதாகக் கூறுகின்றனர், பக்தர்கள்.

திருவள்ளுவர் கோயில் முருகன்
திருவள்ளுவர் கோயில் முருகன்
``அந்த இரண்டு காரணங்கள்தான் திருவள்ளுவர் யாரென்று சொல்லும்!" கவிஞர் மகுடேசுவரன்

Also Read

``அந்த இரண்டு காரணங்கள்தான் திருவள்ளுவர் யாரென்று சொல்லும்!" கவிஞர் மகுடேசுவரன்

சந்நிதியில் தொள்ளக்காதுடன் வள்ளுவர் ஒரு கையில் ஜெபமணியும் மறு கையில் ஓலைச்சுவடியும் கொண்டுள்ளார். பத்மாசனத்தில் அபயமுத்திரை அருளியபடி காட்சி தருகிறவர், தமது சிரசில் லிங்கம் சூடியிருப்பதாகவும், மார்பில் அணிந்திருக்கும் யோகப்பட்டையில் 'நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரம் பொறிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் அர்ச்சகர்கள்.

 

கோயிலின் நான்காம் தலைமுறை அர்ச்சகராக இருக்கிறார் ஆறுமுகம். அவரிடம் பேசியபோது, "மாசி மகம், சிவராத்திரி, ஆவணி மூலம் உள்ளிட்ட உற்சவங்கள் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. சிவனுக்கான சகல அலங்காரங்களும் அபிஷேகங்களும் திருவள்ளுவருக்கும் நடைபெறுகின்றன. சொர்ணாபிஷேகமும் மஞ்சள், சந்தனம், மூலிகைப்பொடி, எண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சர்க்கரை, பன்னீர், அரிசிமாவு ஆகியவற்றால் நித்திய அபிஷேகமும் வள்ளுவருக்கு நடைபெறுகிறது" என்றார்.

மயிலாப்பூர் வள்ளுவர் வாசுகி கல்யாண மண்டபம்
மயிலாப்பூர் வள்ளுவர் வாசுகி கல்யாண மண்டபம்

அடுத்த தலைமுறையாக அவரின் மகன் பாலாவும் இங்குதான் திருப்பணி செய்கிறார். இளைஞரான பாலாவிடம் பேசினோம். "வள்ளுவர் வாசுகிக்குத் திருக்கல்யாண வைபவம் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியில் இங்கே நடைபெறும். அன்றைய தினம் திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கே வந்து வணங்கினால் 90 நாள்களுக்குள் அவர்களுக்குத் திருமணமாகும் என்பது ஐதிகம். அத்தி, அரசு, வேம்பு ஆகிய மூன்று தலவிருட்சங்கள் இங்குள்ளன. இதை சங்கரநாராயணர் விருட்சம் என்கின்றனர். அத்திமரம் பெருமாளைக் குறிப்பது. எனவே, மீனாட்சியம்மனைப் பெருமாள் தாரை வார்த்துத் தரும் காட்சிபோல இந்த மரங்களும் காட்சியாய் விளங்குகின்றன. ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் திருக்கல்யாணம் தை சதயத்தில் நடைபெறும். மாசிப் பௌர்ணமியில் கடலாற்றுதல் வைபவமும் இங்கு விமரிசையாக நடைபெறும்" என்றார். கோயிலுக்கு இடதுபுறம் தனிக்கட்டடமாக 'வள்ளுவர் வாசுகி திருமண மண்டபம்' ஒன்று கட்டப்பட்டுள்ளது.

வரத கஜசக்தி விநாயகர், வல்லப விநாயகர், நர்த்தன விநாயகர், பால விநாயகர், அரச மரத்தடி விநாயகர் என பஞ்ச விநாயகர்கள் அருளும் தலமாக இது இருக்கிறது. கோயிலுக்குள் ஆஞ்சநேயர் சந்நிதியும் நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளன. மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்துமூவர் உற்சவம் நடக்கும்போது, அதில் கலந்துகொள்வதற்காகத் திருவள்ளுவரும் இங்கிருந்து புறப்பாடாகிறார்.

அறுபத்துமூவர் உற்சவத்தில் திருவள்ளுவர்
அறுபத்துமூவர் உற்சவத்தில் திருவள்ளுவர்
திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை, ருத்ராட்ச மாலை! -தஞ்சையில் கைதான அர்ஜுன் சம்பத்

Also Read

திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை, ருத்ராட்ச மாலை! -தஞ்சையில் கைதான அர்ஜுன் சம்பத்

கோயிலில் உற்சவமூர்த்தியருகே விபூதி மடக்கு ஒன்று இருந்தது. அதில், இத்தலத்துக்கு 1925-ம் ஆண்டு இந்த விபூதி மடக்கு உபயமாக அளிக்கப்பட்டதாய் பொறிக்கப்பட்டிருந்தது. 1962-ம் ஆண்டுவரை குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்குப் பாத்தியப்பட்டிருந்த இந்தக் கோயில், பிறகு அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதாகக் கூறுகின்றனர்.

கோயில் புனரமைக்கப்பட்டு, 1985-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதற்கான கல்வெட்டு ஒன்று இங்கே இருக்கிறது. அடுத்த குடமுழுக்கு 2001-ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. கோயில் வளாகத்துக்குள் வலதுபுறம் ஒரு நூலகமும் உள்ளது. தரைப்பகுதி, நூலகம், விமானங்கள், சுற்றுச் சுவர்கள் எனத் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறிய செயல் அலுவலர் லட்சுமிகாந்த பாரதிதாசன், தை அல்லது மாசி மாதத்தில் ஒரு தேதி குறித்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

திருவள்ளுவர் கோயில் திருப்பணி கல்வெட்டு
திருவள்ளுவர் கோயில் திருப்பணி கல்வெட்டு
 

அர்ச்சகர்கள் வள்ளுவரைத் தமிழிலேயே வழிபடுகிறார்கள். வள்ளுவரின் திருநாமங்களைச் சொல்லிப் போற்றித் தமிழில் வழிபாடு செய்கிறார்கள். பக்தர்களுள் சிலர் சந்நிதியில் மாணவர்களுக்குத் திருக்குறள் பயிற்றுவித்து வருகிறார்கள்.

வள்ளுவர், சாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு தமிழின் பெருமையாக நின்று நிலைத்தவர். உலகப் பொதுமறையான திருக்குறள், தமிழர்களுக்கு உயிரிலக்கியமாக வாய்த்திருக்கிறது.

வள்ளுவம் வழி நடப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது? - ஸ்பாட் விசிட் #Video
Permalink  
 


மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search
 
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயில்

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கோயிலாகும்.[1][2] திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. இக்கோவில் மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்கிறது.

காலம்[தொகு]

இக்கோவில் 16 ஆம் நூற்றாண்டடில் கட்டப்பட்டதாகும். இதனை 1970 களில் புதுப்பித்துள்ளனர். [3]

கோவில் அமைப்பு[தொகு]

 
கோவிலினுள் நவகிரக சந்நிதி
 
திருவள்ளுவர் கற்சிலை. கீழே உற்வச சிலைகள்

இக்கோவில் இராயப்பேட்டை சாலையின் நேராக அமைந்துள்ளது. இதில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் சந்ததிகள் உள்ளன. திருவள்ளுவரின் மனைவி வாசுகி, திருவள்ளூர் இருவருக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது.[1] தினம் மாலையில் குழந்தைகளுக்கு திருக்குறள் சொல்லித் தரப்படுகிறது.

1897 இல் வெளிவந்த ஜெ. எம். நல்லசாமி பிள்ளை புத்தகத்தில் இக்கோவில் பற்றி குறிப்பிட்டுள்ளார். [4]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. ↑ இங்கு மேலே தாவவும்:1.0 1.1 பொலிவிழந்து வரும் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் - தினமணி
  2.  பாரதியார் கட்டுரைகள் - தமிழாய்வு
  3.  Pradeep Chakravarthy, Ramesh Ramachandran (August 16–31, 2009). "Thiruvalluvar’s shrine"Madras Musings 19 (9).
  4.  A. A. Manavalan (Ed.) (2009). Essays and Tributes on Tirukkural (1886–1986 AD) (1 ). Chennai: International Institute of Tamil Studies. பக். 22.

வெளி இணைப்புகள்[தொகு]



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

திருவள்ளுவர் காலம்

ஆச்சாரி http://siragu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/

Oct 1, 2012

Share
 
 
 
 

சிறகு முன்னுரை

திருக்குறள் காலம் குறித்து பல கருத்துகள் நிலவி வருகின்றன. மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழறிஞர்கள் திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31 என்று அறிவித்தார்கள். ஆனால் கமில் சுவலபில் போன்ற மேலைநாட்டு தமிழறிஞர்கள் உட்பட பல தமிழறிஞர்கள் திருக்குறள் சங்கம் மருவியக்காலத்தைச் (கி.பி. 4-ம் நூற்றாண்டிற்கு பின்) சேர்ந்தது என்று கூறிவருகின்றனர். சிறகு திருக்குறள் காலம் குறித்த கட்டுரையொன்று (http://siragu.com/?p=1574) வெளியிட்டிருந்தது. அதற்கு மாற்றாக செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அய்யா அவர்கள் இக்கட்டுரையை அனுப்பியிருந்தார்கள். அய்யாவின் கருத்திற்கு மதிப்பளித்து இக்கட்டுரையை வெளியிடுகிறோம்.

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் ஒரு வாழும் திருவள்ளுவர். நூற்றிற்கும் மேலான நூல்கள் எழுதியிருக்கும் இவரைச் சந்திப்பது வாழ்வின் பெரும்பேறு. திருச்சி-கரூர் சாலையில் காவிரியாற்றங்கரையில் அல்லூர் எனும் சிற்றூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்து அதில் வாழ்ந்து வரும் இவரது இல்லமே ஒரு தமிழாலயம். அரிதான நூல்களை சேர்த்து இவர் வைத்திருக்கும் நூலகம் ஆய்வாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அய்யா அவர்களிடம் இல்லா தமிழ் நூல்களே இல்லை எனலாம். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மாணவரான இளங்குமரனார் என்பது அகவைக்கும் மேலாக தமிழின் வளர்சிக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு வருகிறார். இத்தள்ளாத வயதிலும் இந்தியா முழுதும் பயணித்து தமிழ்ப் பணியாற்றி வருகிறார். 2007-ம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் (www.fetna.org) ஆண்டு விழாவில் பங்கேற்றது பேரவைக்கு அழியாத பெருமை தந்தது. எளிமைக்கும், தமிழறிவிகற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் அய்யாவின் இக்கட்டுரையை வெளியிடுவது சிற்கிற்கு பெருமை. திருவள்ளுவர் காலத்தில் மாறுபட்ட கருத்திருந்தாலும் அனைவர் மதிக்கும் பேரறிஞர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுதியனுப்பியக் கட்டுரையை வெளியிடுவது சிறகின் கடமை.

—————

திருவள்ளுவர் காலம்

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் திரு. வ. சுப்பையா அவர்களும் சென்னை அஞ்சல் ஆட்சித்துறைத் தலைமைச் செயலகத் தலைமை எழுத்தர் திரு. காழி. சிவ. கண்ணுசாமி அவர்களும் கலந்து பேசி 17.01.1935 இல், ‘திருவள்ளுவர் திருநாட்கழகம்’ என ஓர் அமைப்பைத் தோற்றுவித்தனர்.
சென்னை, பவழக்காரத் தெருவில் உள்ள சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகக் கட்டடம், திருநாட் கழகத்துப் பணிமனையாக விளங்கியது.
தமிழ்ப் பேராசிரியர் திரு. கா. நமசிவாயர் தலைவராகவும், வித்துவான் பாரிப்பாக்கம் கண்ணப்பர் செயலராகவும் திரு. வ. சுப்பையா பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றும் துணைத்தலைவர்கள் துணைச் செயலர்கள் உறுப்பினர்கள் எனவும் 21 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதலாண்டு திருவள்ளுவர் விழா 1935 மே திங்கள் 18, 19 ஆம் நாள்களில் சென்னை-1, பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைத்திரு. மறைமலையடிகளார் தலைமையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் நினைவு மலர் வெளியிடப்பட்டது.

இரண்டாம் ஆண்டு திருவள்ளுவர் விழா 1936 சூன் திங்கள் 4 ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் முதுபெரும் புலவர் உ.வே.சாமிநாதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மூன்றாம் ஆண்டு திருவள்ளுவர் திருவிழா 1937 மே 22 ஆம் நாள் இராமநாதபுர மாவட்டம் பாகனேரியில் கோவை சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியனார் தலைமையில் நடைபெற்றது.

அதன்பின்னர்த் திருவள்ளுவர் திருநாட்கழகம் அமைவுற்றது. இது, திருவள்ளுவர் திருநாள் விழாமலரில் உள்ள திருநாட்கழக வரலாறு ஆகும் (1968).

மறைமலை அடிகள் முடிபு ‘திருவள்ளுவர் காலம்’ பற்றி என்னவாக இருந்தது?

“தமிழர் என்ற பொதுமை உணர்வைத் தமிழ்மக்கள் இடையில் ஊட்ட அடிகள் விரும்பினார். அதற்கு வாய்ப்பாகவும் தம் சிவநெறிக்கும் தமிழ்நெறிக்கும் முதற்குரவராகத் தம்மால் போற்றப் பெறும் சிறப்புக்குரியவராகவும் விளங்கும் தெய்வப் புலமைத் திருவள்ளுவரையே தமிழர்க்குரிய ஆண்டுக் கணக்கீட்டின் முதல்வராகக் கொண்டார்.

“அடிகளின் கருத்துப்படி திருவள்ளுவர் கிறித்துவுக்கு முப்பத்தொரு ஆண்டுகள் முற்பட்டவர். ஆதலின், அடிகள் தமிழாண்டுக் கணக்கீட்டைக் கி.பி. (கிறித்துவுக்குப் பின்) கி.மு. (கிறித்துவுக்கு முன்) என்று கொள்ளாது தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) என்று இருபது ஆண்டுகட்கு முன்பே வரையறை செய்துவிட்டார்”

திருவள்ளுவர் திருநாள்

“திருவள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் அனுடம் (பனை) என்றே குறித்துவிட்டனர்” என்கிறார் மறை. திருநாவுக்கரசு (மறைமலையடிகள் வரலாறு பக். 773-774) திருநாவுக்கரசர் நூல் 1959 இல் வெளிவந்தது. அதற்கு 20 ஆண்டுகளின் முன்னரே திருவள்ளுவர் நாளைத் தீர்மானித்துவிட்டார் என்பது திருநாட்கழகத்தின் தலைவராகப் பொழிந்த பொழிவுக் கருத்தைக் கொண்டு உரைத்ததாகலாம்.

வைகாசித் திங்கள் அனுடம் கி.மு. 31 என்று தீர்மானித்ததை அன்றி, அடிகளார் தைத்திங்களைத் தீர்மானிக்க வில்லையாம். திருநாட்கழகம் நடத்திய மூன்று விழாக்களும் வைகாசியில் நடத்தப்பட்டதே அதற்குச் சான்றாம்.

அடிகளார், திருவள்ளுவரைப் பற்றிக் கூறிய தலைமைப் பொழிவில்,

“திருவள்ளுவ நாயனார், கிறித்து சமய முதல்வரான ஏசு முனிவர் பிறப்பதற்கு முப்பதாண்டுகள் முன்னரே பிறந்தருளினார் என்பதை, மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிலே பலநூற் சான்றுகள் கொண்டு விளக்கிக் காட்டியிருக்கின்றாம். அதன் விரிவை அங்கே கண்டு கொள்க” (செந்தமிழ்ச் செல்வி. 13:550) என்றார்.

“இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர்தம் திருநாளாய வைகாசி அனுடத்தன்று வள்ளுவர் விழாக் கொண்டாடுவதற்கான முறைகளைத் தேர்ந்து அமைப்பதற்காகவே இக்கழகம் கூட்டப்பட்டது” என்கிறது திருநாட்கழக அறிக்கை-1 (செந்தமிழ்ச் செல்வி. 13:335).

திருவள்ளுவர் திருநாள் கி.மு. 31 வைகாச அனுடம் என்றே தீர்மானித்தார் அடிகள். அதிலிருந்து தி.மு.; தி.பி. என்னும் வழக்கம் தமிழ்ப்பற்றாளரிடம் உண்டாயது. நாட்காட்டி நாட்குறிப்பு என்பனவும் ஆக்கப்பட்டன! பாவாணர் பாவலரேறு வழிஞர் திருவள்ளுவர் ஆண்டைப் பற்றினர்.

திருவள்ளுவர் காலம்: திருவள்ளுவர் சங்கக்காலப் புலவர்களால் போற்றப்பட்டவர் என்பதற்குச் சான்று உண்டு. சில குறிப்புகளை மட்டும் பார்ப்போம்.

“பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்”

என்னும் குறள் விளக்கமாக,

“உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்;பிறர் அஞ்சுவ தஞ்சிப்

புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கென முயலா நோன்றாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”

இதன் முதலடியையும் ஈற்றடியையும் நோக்கக் குறளின் விரிவாக்கமென்பது புலப்படும் (புறம். 182). இதனைப் பாடியவர் கடலுண்மாய்ந்த இளம்பெரு வழுதியார் என்னும் பாண்டிய மன்னர்.

நற்றிணையில் ஒருபாடல்;

“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்”

என்கிறது (355).

இப்பாடல் அமைப்பும் சொற்பொருள் விளக்கமும் திருக்குறள் விளக்கமாக இருத்தல் திருக்குறள் கற்றார் எவர்க்கும் வெளிப்படத் தோன்றும். அது,

“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்”

என்பது. இக்குறளின்கண் நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல்,

“முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்”

என்பதனானும் அறிக என்றார் பரிமேலழகர்.

இனி, “இப்பாடல்கள் வழியே திருவள்ளுவர் தம்குறளை யாத்திருக்கவும் கூடுமல்லவோ, அதனை எண்ணலும் வேண்டுமென்றோ” என்பார் உளராகலாம்!

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை”

என்னும் குறளை மேற்கொள்ளும் மணிமேகலைச் சாத்தனார்,

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேராய்”

என்பது போலக் குறளை மேற்கொண்டு பொய்யில் புலவர் என்று புலவர் பெயரும் பொருளுரை என அவர் நூற் பெயரும் சுட்டியிருப்பின் ஏற்கலாம் எனலாம்! அதே குறளைத்,

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்

தெய்வம் தொழுதகை திண்ணிதால்”

என்று இளங்கோ வடிகள் காட்டுகிறார். நூலாசிரியர் பெயரோ நூற் பெயரோ இல்லாமலும், சாத்தனாரும் அடிகளாரும் ஒருகாலத்து ஒன்றிய நண்பராய் இருந்து இரட்டைக் காப்பியம் இயற்றியவர்கள் என்பதால் ஏற்கிறோம் அல்லவோ! சாத்தரும் அடிகளும் திருவள்ளுவர் பெயரையோ நூற்பெயரையோ சுட்டாமல் சுட்டும் குறள்களும் உளவாதல், ஆய்வோர் அறிவர். அவ்வாறே சங்கநூல்களில் இருத்தலும் அறிவர்.

சங்க நூலாம் புறநானூற்றில் குறள்விளக்கமும் அதன் தொடரும் நூற்பெயரும் உண்டாயின் சங்கத்தார் காலத்திற்குத் திருவள்ளுவர் பிற்பட்டவர் என இயலாது அல்லவோ! என்பரேல் மேல்வரும் சான்று காண்க.

“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்

குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென

நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென

அறம்பா டிற்றே ஆயிழை கணவ!”

எனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடுகிறார் (புறம். 34).

இப்பாடல் திருக்குறளின் தலைப்பெயரான ‘அறம்’ பாடிற்று என்பதும்,

“செய்தி கொன்றார்க்கு உய்தி இல்” என்பது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்பதன் ‘செறிபிழிவு’ என்பதும் விளங்காமல் போகாது.

முந்தைச் சோழருள் ஒருவன் கிள்ளிவளவன். அவனைப் பாடிய பாடலில் குறளும் குறளின் பெயரும் உண்டாயிருக்கவும் சங்கக் காலத்திற்குப் பின்னாகத் தள்ளல் முறையாகாது!

பதினெண் கீழ்க்கணக்குள் ஒன்றாகத் திருக்குறளைச் சேர்த்தது. காலக் கருத்தால் அன்றாம். அடியளவு சிறிதாதல் கொண்டேயாம். அன்றியும் வெண்பா யாப்பை எண்ணியுமாம்!

‘குறுவெண்பாட்டு’ என்பதால் தொல்காப்பிய யாப்பும்,

‘அறமுதலாகியமும் முதற்பொருளும் என்பதால் முப்பாலும்,

பொருளொடு புணர்ந்த பக்கம் என்பதால் இல்லறவியலும்,

அருளொடு புணர்ந்த அகற்சி என்பதால் துறவறவியலும் இயற்றியமை அறிக.

“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல்” என்னும் தொல்காப்பிய உரிப்பொருள் முறைவைப்பு மாறாமல், ஒவ்வோர் உரிப்பொருளுக்கும் ஐந்தைந்து அதிகாரமாய்க் காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரம் பாடியமையும் எண்ணுவார், வள்ளுவர் காலத்தைப் பின்னுக்குத் தள்ளார். சங்கக் காலத்தவரும் சுட்டிக் கூறும் பழைமையர் என்பதைக் கொள்வார்! அவரும் சங்கம் சார்ந்தவர் என்றும் அவர்க்கு முன்னரும் பின்னரும் சங்கம் நிகழ்ந்தது என்பதும் அறிவார்.

இதனால், கி.மு. 31 என்பதை முன்னுக்குத் தள்ளி வேண்டுமோ எனின் பெருந்தக்கோரால் ஆய்ந்து முடிவெடுக்கப்பட்டு நடைப்படுத்தி வரும் காலத்தை மாற்றும் நோக்கில் இஃது எழுதப்பட்டதில்லை! வள்ளுவரையும் அவர்க்கு முந்தைத் தொல்காப்பியரையும் கி.பி. ஆறாம் நூற்றாண்டு தொட்டு எட்டாம் நூற்றாண்டு வரை சொல்வார் ஆய்வின் உள்நோக்கம் உணர்த்தி உண்மை காட்டற்கே எழுதப்பட்டதாம்.

ஏன் திருக்குறளைப் பின்னுக்குத் தள்ளுகிறார் எனின், பொருந்தா நூல்களொடு பொருத்திக் காட்டி எங்கள் மொழியே முன்மொழி எங்கள் வழியே முன்வழி எனத் துணிந்து கரவாக உலகை ஏமாற்றுதற்கே என்பது வெளிப்படை!

இனி உலகை ஏமாற்ற முடியாது என்னும் உண்மை அறிந்து கொண்டும் தொடர்ந்து கூறும் பொய்யால் மெய்யாக்கிவிடலாம் என்னும் போலிமையாலாம்.

“எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல்மிதக்கும்

என்பது பாவாணர் துணிவுரை!



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..

February 23, 2012
By பால.கௌதமன்

வரலாறு.காம் தலையங்கம்  கேட்கிறது: ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றம் ஏன்?

இதுதான் என் கேள்வியும்.

14.4.1963-இல் திருக்குறள் மாநாடு நடத்தி, ஆண்டுதோறும் திருவள்ளுவர் நினைவாக சூலைத் திங்கள் 21-ஆம் நாள் முதல் 27-ஆம் நாள் வரையில் யாதேனும் ஒரு நாளை அரசாங்கம் விடுமுறையாக விடவேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் தி.மு.க நிறுவனர் அண்ணா. இந்தக் கோரிக்கையை ஏற்று 1966-ஆம் ஆண்டு முதல், தமிழ் அறிஞர்களின் திடமான முடிவின்படி, வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுடம் (பனை) என்பதனால், சூன் திங்கள் 2-ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாட விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை வைத்த ஒருவரான அண்ணா, 1967-இல் ஆட்சிக்கு வந்தபின், திருவள்ளுவர் தினத்தை சூன் மாதத்திலிருந்து மாற்றவில்லை. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1970-இல் கருணாநிதி தை மாதத்திற்கு திருவள்ளுவர் தினத்தை மாற்றினார் என்பது வரலாறு.

1963-ல் திருவள்ளுவர் தினம் சூலையில் (ஆடி) வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. அதிலிருந்து மூன்றாவது ஆண்டு அதாவது 1966-இல், சூனில் (வைகாசி) திருவள்ளுவர் தினம் அறிவித்தவுடன், கோரிக்கை வைத்த அண்ணா உட்பட அனைவரும் வரவேற்கின்றனர். அதிலிருந்து 3 ஆண்டிற்குள் கருணாநிதி 1970-இல், தை மாதத்தை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார்! எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும்! ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றுவது தவறு தான்!

இனி வரலாறு.காம் தளத்தின் தலையங்கக் கட்டுரையைப் பார்ப்போம்!

//புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

சரி, இது கட்டுரையாளர்களின் தனிப்பட்ட விருப்பம், குறை கூற முடியாது. அடுத்த வரியை பாருங்கள்!

//அவர்களுக்காக ஏற்கனவே பல தமிழ் அறிஞர்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் ஒருமுறை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கப் போவதில்லை.//

எந்த அறிஞர் நிரூபித்தார்? எப்போது நிரூபித்தார்? ‘தை’யே தமிழ்ப் புத்தாண்டு என்று நீதிமன்றத்தில் affidavit தாக்கல் செய்தவர்களுக்கும் கருணாநிதியால் மாற்றத்திற்கு ஆலோசனை வழங்கிய அறிஞர்கள் என்று பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும், குடந்தை மூவர் முதலிகள் முற்றம் என்ற அமைப்பின் சார்பாக ஓர் ஆய்வரங்கிற்கு சான்றுகள் கேட்டுக் கடிதம் அனுப்பப்பட்டது. இன்று வரை எந்தச் சான்றும் தரப்படவில்லை. இலக்கியங்களிலிருந்தோ, கல்வெட்டுக்களிலிருந்தோ, எதாவது மரபு வழக்காட்டுதலிலோ அல்லது அறிவியல் அடிப்படையிலோ ஏதேனும் ஒரு சான்றாவது கொடுக்கப்பட்டுள்ளதா? நிரூபணம் என்றால், நான் சொல்லி விட்டேன் நான் சொல்லி விட்டேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வதா? அல்லது நான் நின்றால் சரித்திரம், நடந்தால் திக்விஜயம் என்று அடுக்கிப் பேசும் மேடைப் பேச்சா? வரலாறு தெரிந்தவர்களுக்கு அறிமுகமான ஒரு பாத்திரம் ஹிட்லர். அவன் வெற்றிக்குக் காரணமான ஒருவர் கோயாபெல்ஸ். இவரின் தத்துவம் கூர்ந்து கவனிக்கத் தக்கது– “ஒரு பொய்யைப் பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும்”

அது போலத் தான் இந்தத் ‘தமிழ் அறிஞர்களால் நிரூபிக்கப் பட்ட’ என்ற சொற்றொடர். ஹிட்லரை ஒரு ‘சைகோ’ என்று சொல்லும் வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஆட்சியாளரால் தான் கோயாபெல்ஸ் போன்றவர்களை ஊக்குவிக்க முடியம் என்பது ஒரு கருத்து. இந்த ஆண்டு மாற்ற பாசிச செயல்பாடு, நாசி பண்பாட்டின் சாயலில் உள்ளது என்பதில் ஐயமில்லை.

//அரசின் அறிவுப்புகளால் முடிவு செய்யப் படுபவைகளா பண்டிகைகளும் கொண்டாட்டங்களும்?//

இது நியாயமான வாதம்.. அப்படியென்றால் 2009-இல் கருணாநிதியிடம் இந்தக் கருத்தை வரலாறு.காம் தெரிவித்திருக்கலாமே? கருணாநிதிக்கும், அரசு என்பது நீங்கள் கூறுவது போல் விடுதலை பெற்று 62 ஆண்டுகளாகி இருக்கும் ஜனநாயக அரசு என்பது நினைவுக்கு வந்திருக்கும்! //விக்ரமன், சாலிவாகனன்// என்ற நினைப்பும் இருந்திருக்காது!

//மானமும் அறிவும் நிரம்பிய, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆபாசக் குப்பையான 60 ஆண்டு பிறப்பு பற்றிய கதையையா நம்பிக்கொண்டு இத்தனை காலமும் தமிழன் சித்திரையில் புத்தாண்டைக் கொண்டாடிவந்தான் //

இங்கு கேள்வி, “ஆண்டுத் தொடக்கம் சித்திரையா, தையா?” என்பது தான். 60 ஆண்டு சுழற்சிக்கும் முதல் மாதத்திற்கும் என்ன சம்மந்தம்?

//60 ஆண்டு முறை தமிழர் கண்டதே//

நான் சொல்லவில்லை! கருணாநிதி அரசுக்காக தமிழ் அண்ணல் இராம.பெரிய கருப்பன் அவர்கள் தாக்கல் செய்த நீதிமன்ற affidavit சொல்கிறது.

  • 60 ஆண்டுகளின் பெயர் சோழர் கல்வெட்டுகளிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளிலும் விஜயநகரப் பேரரசு தோன்றுவதற்கு முன்பே இடம் பெற்றுள்ளதே? அப்படி என்றால் அவர்களும் மானமும் அறிவும் இல்லாதவர்களா?
  • பத்தாம் நூற்றாண்டில் பிராமண, சத்திரிய, விஸ்வகர்மா மற்றும் சூத்திர வர்ணத்தைச் சார்ந்த 98 ஜாதியினர் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியதாகக் கல்வெட்டு உள்ளதே, அவர்களும் மானம் கெட்டவர்களா?
  • பங்குனியைக் கடை மாதம் என்று அகத்தியர் பன்னீராயிரம் சொல்கிறதே, அப்படியென்றால் அகத்தியரும் அறிவற்றவர், மானம் கெட்டவர்.
  • ‘திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக’ என்று சித்திரை மாதத்தை முதல் மாதம் என்று சொன்ன நக்கீரன் அறிவற்றவன்; மானம் கெட்டவன்.
  • இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு மேட ராசி என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்த முனைவர் மா.ராசமாணிக்கனார் அறிவற்றவர்; மானம் கெட்டவர்.
  • சுமார் 500 ஆண்டுகள் முன்பு புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று சொன்ன கமலை ஞானப் பிரகாசர் அறிவற்றவர்; மானம் கெட்டவர்.
  • சித்திரையை முதல் மாதம் என்று சொன்ன நாமக்கல் கவிஞர் அறிவற்றவர்; மானம் கெட்டவர்.
  • பல நூற்றாண்டு காலமாக சித்திரையை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடிய தமிழ் மன்னர்களும் புலவர்களும் சான்றோர்களும் நம் குடிமக்களும் அறிவற்றவர்கள்; மானம் கெட்டவர்கள்.

அப்படியென்றால் அந்தக் கட்டுரையின் பார்வையில், அறிவாளி யார்? மானமுள்ளவர் யார்? விடையும் அதிலேயே உள்ளது.

//பெரியாராலேயே முடியாதது நம்மாலா முடிய போகிறது?//

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவரை வெட்கம்கெட்டு தந்தை என்று சொல்லுவது அறிவுடைமை! தன்மானம்! முலையிலிருந்து தீ வைத்து எரித்தாளாம்! கற்புக்கரசியாம்! முட்டாள் பெண்பிள்ளை! இது கண்ணகிக்கு ஈ.வே.ரா கொடுத்த வெகுமதி….. இதை ஏற்றுக்கொண்டால் அறிவாளி! தன்மானச் சிங்கம்!

ஆரியம் நன்று தமிழ் தீது என்று சொன்ன குயக்கோடனை அழித்த நக்கீரன் சொன்ன சித்திரையைப் பின்பற்றுபவன் மானங்கெட்டவனா? தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாருக்குத் தந்தை உறவை கொடுத்தவர்கள் மானங்கெட்டவர்களா?

//1921-இல் மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழ் அறிஞர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் தை மாதம் தமிழ் புத்தாண்டுத் தொடக்கம் //

1921-இல் எந்த நாளில் இந்தக் கூட்டம் நடந்தது? அந்த ஆண்டு பொங்கல் விழாவை மறைமலை அடிகள் இலங்கையில் கொண்டாடியதாக அவர் மகன் மறை.திருநாவுக்கரசு எழுதுகிறார். சரி, அதற்குப் பின் பச்சையப்பன் கல்லூரியில் கூட்டம் எந்தத் தேதியில் நடந்தது? புளுகுவதற்கு ஓர் அளவு உள்ளது. சென்னையில் திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் 1935-ஆம் ஆண்டு மே திங்கள் 18 மற்றும் 19-ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மறைமலை அடிகள்,

“கிறுத்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” (திருவள்ளுவர் நினைவு மலர் பக்கம் .௧௧௭(117))

என்று சொன்னதைத் தவிர, தை மாதம் பற்றியோ, தமிழ் ஆண்டு பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. இந்தக் கூட்டத்தில் திரு.வி.க, தெ.பொ.மீ போன்ற சான்றோர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுடம் என்பதே! மறைமலை அடிகளின் வள்ளுவர் காலத்தை அவர்கள் ஆமோதிக்கவில்லை. மு.வ. அவர்கள் திருவள்ளுவர் காலம் கி.பி. முதல் நூற்றண்டிற்குப்பின் என்று குறிப்பிடுகிறார். பெரும்பாலான அறிஞர்களும் அங்ஙனமே குறிப்பிடுகிறார்கள். திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் முடிவு செய்யப்பட்ட 9 நோக்கங்களில், ‘தை’யோ, தமிழ்ப் புத்தாண்டோ இடம் பெறவில்லை. (திருவள்ளுவர் நினைவு மலர்) தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் வைகாசி அனுடம் திருவள்ளுவர் தினமாக 1935-இல் கொண்டாடப்பட்டதையும், எந்தெந்த அறிஞர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் திருவள்ளுவர் திருநாள் மலர் பக்கம் .௧௨௮(128) – ௧௩௦ (130) இல் காணலாம். 15.5.1955-இல் தமிழ்மறைக் கழகம், தமிழினத்தை ஒன்று படுத்தும் திருநாள், திருவள்ளுவர் திருநாள். அது வைகாசி அனுடம் என்று திருவள்ளுவர் திருநாள் மலர் வெளியிட்டிருக்கிறது. இதில் ‘தை’யை வள்ளுவர் தினம் என்று சொன்ன கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளார் திரு கா.போ.ரத்னம் அவர்கள். வைகாசி அனுடம் தான் திருவள்ளுவர் தினம் என்று உறுதி செய்த தமிழ் அறிஞர் பட்டியல் இம் மலரில் வெளியிடப்பட்டுள்ளது. யார் அந்த அறிஞர்கள்? சில பிரசித்தி பெற்ற அறிஞர்களைப் பார்ப்போம். பேரா.ரா.பி.சேது பிள்ளை, திரு.மா.பொ.சி, வித்துவான் பண்டிதர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், புலவரேறு அ.வரதநஞ்சைய்யன், முனைவர்.மா.இராசமாணிக்கனார், சித்தாந்த சிரோமணி ரி.எஸ்.கந்தசாமி முதலியார், கவியோகி சுத்தானந்த பாரதியார், டாக்டர் மு.வரதராசனார், புலவர் சி.இலக்குவனார், சுவாமி சித்பவானந்தர், வேதாரண்யம் சர்தார், ஆ.வேதரத்தினம், திரு.கி.வா.ஜகன்னாதன், கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன், கல்கி ரா.கிருஷ்ணமுர்த்தி..

இவர்கள் முட்டாள்களா? மானம் கெட்டவர்களா? தமிழ் அறிஞர்கள் இல்லையா? இந்த ஆதாரங்களின் அடிப்படையில், தை 2-ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகவும், தை மாதம் ஆண்டுத் தொடக்கமாகவும் அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. சூலை மாதத்தில் திருவள்ளுவர் தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற அறிஞர் அண்ணாவின் 1963 கோரிக்கையும், 1966இல் தமிழக அரசின் சூன் 2 திருவள்ளுவர் தின விடுப்பையும் பார்க்கும் போது,

//1921, 1939 தமிழனுக்கு உண்மையை உணர்த்த விழைந்த தமிழ் அறிஞர்கள்//

என்று தை வேஷம் போட, அறிஞர்களைத் துணைக்கு அழைப்பது, ஹிட்லர் ஆட்சியின் கோயாபெல்ஸ்-ஐ நினைவுப்படுத்துகிறது.

//ஒரு வேளை 1969 லோ அல்லது 1971 லோ ஆணையிட்டிருந்தால்//

இது கவனிக்கப்பட வேண்டிய வாக்கியம்.

தி.மு.க ஆட்சி பீடம் ஏறிய 1967-இல் குறிப்பிடப்படவில்லை. அப்படியென்றால் அண்ணாதுரை தை 2-ஐ திருவள்ளுவர் தினமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கட்டுரையாளருக்குத் தெரிந்திருக்கிறது. இது கருணாநிதியின் விளம்பர மோகமும் வெறுப்புணர்ச்சியின் அடையாள வேட்டையும் என்பதைக் கட்டுரையாளரே ஒத்துக்கொண்டு விட்டார். அவர் தவறை மறைக்க,

//அவர்கள் மனது மாறப்போவதில்லை//

என்று நம் மீது பிளேட்டைத் திருப்புகிறார்..

//ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சிகள் மாறலாம்.ஆனால் நம் வழக்கங்கள் மாறலாகாது.//

எது வழக்கம்? சித்திரையா? தை-யா? தை முதல்நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டதற்கு சான்று உள்ளதா?

உண்மையிலேயே சான்றுகள் இருந்தால், சான்று கேட்ட மூவர் முதலிகள் முற்றத்திற்கு அதைக் கொடுத்திருக்கலாமே? அட, அந்தக் கட்டுரையிலேயே கூட சான்றுகளைச் சுட்டியிருக்கலாமே?

அறிவுடையோர் ஆராய்ச்சிபூர்வமாக அணுகி ஒரு விசயத்தை நிறுவ முயற்சித்திருப்பார்கள். வெறுப்பையும் நஞ்சையும் மனதில் வைத்திருக்கும் சுயநலவாதிகள் தான் பொய்யுரையையும் இனவெறி பிரசாரத்தையும் முன்னிறுத்திப் பிழைப்பு நடத்துவார்கள்.

உண்மையான வரலாற்றை முன்னிறுத்தி பல சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைக் கொணர்ந்திருக்கும் ஒரு இணையத் தளத்தில் இத்தகைய பொய்ப் பிரசாரம் அனுமதிக்கப் பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு கருப்புப் புள்ளி அது இருக்கும் பரந்த வெண்மைப் பரப்பின் தோற்றத்தையே மாற்றி விடுகிறதல்லவா?



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இந்தத் தலைப்பிற்குச் சொந்தக்காரர் இலங்கைச் சேர்ந்த வித்துவான் பண்டிதர் கா. பொ. இரத்தினம். எம்.ஏ.பி.ஓ.எல். அவர்கள் ஆவர்.


23.11.1952 இல் அவரால் நிறுவப்பட்ட தமிழ்மறைக் கழகச் சார்பில் உலகத் தமிழர்கள் மத்தியில், அரும்பாடுபட்டு, வைகாசி அனுட நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என வேண்டி அதில் வெற்றியும் பெற்றார் திரு இரத்தினம் அவர்கள்.


திரு. இரத்தினம் அவர்களின் வேண்டுதலைக்கு உடன்பட்டு அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பெருமக்களில் சிலர்.

1. தவத்திரு குன்றக்குடி அடிகளார்
”தாங்கள் முடிவு செய்த குறிப்புப்படியே வைகாசி அனுடத் திருநாளில் கொண்டாடுவதற்குத் தடையில்லை” (13.2.53)

2 .நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்
”தமிழுக்கு மாட்சி தருவது குறளை ஆக்கிய புலவர் பெருநாள்” (1.4.54)

3. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
”மாசி உத்தரத்தை அடைந்த குருபூசைத் தினமாகக் கொண்டாடுவதில் தங்களுக்கும் பிறருக்கும் அபிப்பிராய பேதமில்லாத போது வைகாசி அனுடத்தை அவதரித்த தினமாகக் கொண்டாடுவதில் நிறையன்றிக் குறையொன்றுமில்லையே” (13.6.53)

4. பெங்களூர் மத்திய கல்லூரிப் பேராசிரியர் எஸ். உருத்திரபதி எம்.ஏ
”தாங்கள் முயற்சியானது மிகவும் சாலப் பொருத்தமான நன் முயற்சியாகும்” (19.7.54)

5. பாலம் கோட்டைப் புனித சவேரியார் கல்வாரிப் பேராசிரியர் திரு. ஆ, அருளப்பன் பி.ஏ.,
”1935 முதல் வைகாசி அனுடநாள் அந்நன்னாளாக அமைந்து விட்டது எனலாம். ஆதலின் அதனை நிலைத்திடச் செய்தல் நன்றே” (19.8.54)

6. பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை
”திருவள்ளுவர் திருநாள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் வைகாசி அனுடத்திலேதான் நடைபெறுகிறது” (24.2.54)

7. திரு. ம.பொ. சிவஞான கிராமணி
”வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுவதில் நானும் தமிழரசு இயக்கத்தாரும் பரிபூரணமாக ஒத்துழைப்போம்” (15.3.54)

8. வித்துவான் பண்டிதர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
”தங்கள் தொண்டு பெரிதும் பாராட்டுதற்கு உரியதாகும்”(20.3.54)

9. டாக்டர். மா. இராசமாணிக்கனார்
”திருவள்ளுவர் திருநாள் கொண்டாட்டம் மிகப் பாராட்டத்தக்கது. தங்களது பெருமுயற்சிக்கு எனது வாழ்த்தும் ஒத்துழைப்பும் உரியதாகுக” (12.3.54)

10. சித்தாந்த சிரோன்மணி சி.எஸ். கந்தசாமி முதலியார்
”தாங்கள் கழகத்தின் பெருமுயற்சியால் வள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் அனுடநாள் என்பது உறுதியாய் நிலைபெற்றுவிட்டது. “(16.3.54)

11. கவியோகி சுத்தானந்த பாரதியார்
”முயல்க முயல்க முயல்க மேன்மேலும்
பயன்களை வைத்தீசன் பதம்” (15.3.54)

12. புலவரேறு அ. வரத நஞ்சையன்
”தங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஒழுக எம் போல்வார் பெரிதும் கடப்பாடுடையவர்களேயாவர்”(12.3.54)

13. பாலகவி வயிநாகரம் வே. இராமநாதன் செட்டியார்.
”மயிலை திருக்கோயிலில் திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடத்தில் கொண்டாடப்பெற்று வருவதொன்றே தங்கள் கருத்துக்குப் போதிய சான்றாகும்” (விசய. மாசி.30)

14. டாக்டர். மு. வரதராசன்
”தங்கள் முயற்சியைப் போற்றுகிறேன்.
ஆக்கம் அதர்வினாய்ச் சேர்வதாக” (17.3.54)

15. புலவர். சி. இலக்குவனார்
”தங்கள் வேண்டுகோளின்படி மே 18இல் (வைகாசி 3இல்) திருவள்ளுவர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றோம்” (23.3.54)

16. பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தன்
”இந்நாட்டில் இயற்கையாகவே வைகாசி அனுடத்தில் இந்நாள் பலராலும் கொண்டாடப் பெறுகிறது (6.3.54)

17. சுவாமி சித்பவானந்தா
”தாங்கள் எடுத்துள்ள முயற்சி மிக மேலான முயற்சியாகும். இது நன்கு நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” (13.3.54)

18. திரு. கி.வா. ஜகந்நாதன்
”குறள்நூலை வேதமெனக் கொண்டுதிரு வள்ளுவரைக்
கொண்டாடற்குத்
திறமுறுநாள் வைகாசி அனுடமென மரபறிந்து
சிறப்ப ஏற்றே”…... (26.5.54)

19. இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்
”திருவள்ளுவர் திருநாளை மிக்க சிறப்போடு நடத்துகிறீர்கள். என் சந்தோஷத்தைத் தங்களுக்கும் மற்றத் தொண்டர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.” (28.1.53)

20. கலைவாணர் என்.எல்.கிருஷ்ணன்
”தங்கள் அருமுயற்சிக்கு எனது பாராட்டுதல்கள்”
பட்டியல் நீளச் செல்லும் ஆதலின் இதுபோதும் எனவிடுத்து மேலே செல்வோம்.


பண்டிதர் அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கருத்துரைத்த பத்திரிக்கைகள் சில:
1. கல்கி- ஏப்ரல் 12 – 1958
”மகான்களுடைய திருநாட்களை கொண்டாடவேண்டியது அவசியம்” என்றைக்குக் கொண்டாடினால் என்ன? என்னும் கேள்விக்குத் திருப்திகரமான விடையிறுப்பது கடினமான காரியம். ஆயினும் நாடெங்கும் ஒரே தினத்தில் கொண்டாடுவதில் சில அனுகூலங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அவ்விதம் ஒரு தினத்தைக் குறிப்பிடவேண்டும் என்று ஏற்ப்டும்போது, மறைமலையடிகள் போன்றவர்கள் ஒப்புக்கொண்ட வைகாசி அனுடத்தையே வைத்துக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.”

2. செந்தமிழ்ச்செல்வி – வைகாசி, 1953
“ஆண்டுகள் தோறும் தவறாது இத்திருநாளை வைகாசித் திங்களில் வரும் பனை(அனுட) நன்னாளில் சிறப்பாகக் கொண்டாடுமாறு தமிழக மாந்தர்களையும் கழகங்களையும் நூல் நிலையங்களையும், பள்ளிகளையும் பிற பொது நிலையங்களையும் வேண்டுகிறோம்”

3. ஆத்ம சோதி – வைகாசி 1953
“திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவதில் எல்லாரது கவனத்தையும் கருத்தையும் ஒரு நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது நற்பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வித விழாவிற்கும் பெரும்பாலார் ஏற்றுக்கொண்ட வைகாசி அனுடமே பொருந்தியதெனலாம். மாசி உத்தரத்தை வள்ளுவர் பரகதியடைந்த நாளாகப் பாவிப்பதில் குற்றமொன்றில்லை”

4. குமுதம் – 20.4.54
“வருகிற 18.5.54 (அனுட நட்சத்திரம் அமையும் நாள்) அன்று தமிழ்மறை தந்த தெய்வத் திருவள்ளுவரின் பெருநாள் வருகிறது. அன்றைய தினத்தை விடுமுறை நாளாக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்தவும் வேண்டும் என்று இக்கழகத்தினர் கோருவதைத் தமிழபிமானிகள் அனைவரும் ஆதரிப்பாளர்கள் என்பது திண்ணம்”

5. திருவள்ளுவர் – மே, 1953
“மறைமலையடிகளார் போன்ற பேரறிஞர்கள் பலரும் வைகாசி அனுடத்தையே துணிந்துள்ளார்கள். ஆதலின், வரும் வைகாசி அனுடமே பொருந்துமெனக் கொள்கின்றோம்.

6. தமிழோசை – ஏப்ரல் 1954 (சிங்கப்பூர்)
“வள்ளுவர் பெருந்தகையின் திருநாள் வரும் வைகாசித் திங்கள் 5 ஆம் (18.5.54) நாளாகும். இத்திருநாளைத் தமிழரனைவரும் தத்தம் இல்லங்கள், கழகங்கள், சங்கங்கள், கல்விச்சாலைகள் தோறும் கொண்டாடுக. இன உணர்ச்சி கொண்டு இணைந்து நின்று எழுச்சி கொள்க”

7. குறள் மலர் 12.3.54
“ஒரு பெரியாரை உலக அறிஞரை எப்போது எம்முறையில் கொண்டாடினால் தான் என்ன? [இந்த வினாவிற்குக் கல்கி நல்ல விடைதருகிறது]

8. தர்ம சக்கரம் – சித்திரை 1953 – சித்திரை 1954
“உலகத்தில் உள்ளவற்றுள் தலைசிறந்த இலக்கியமாகிய குறள் தமிழிலே இருப்பதும் அதனையாத்த பெரியோன் தமிழ் மகனாக இருப்பதும் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஓர் தனிப்பெருமையாகும். இப்பெருமைக்குப் பாத்திரமாகத் தம்மை ஆக்கிக் கொள்வதற்குரிய வழி தமிழர் தாம் வாழும் மூலை முடுக்குகளிலெல்லாம் வள்ளுவர் விழாக் கொண்டாடுவதாகும்.
ஆகவே, இவ்வாண்டு வைகாசித்திங்கள் ஐந்தாம்நாளாகிய (18.5.54) திருவள்ளுவர் திருநாளை எல்லா இடங்களிலும் எல்லாரும் கொண்டாடவேண்டும்”

9. கலைமகள் – வைகாசி 1952
”வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் குருபூசை நிகழ்கிறது. அந்த மரபை ஒட்டித் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடலாம். எல்லா நாளிலும் திருவள்ளுவரைக் கொண்டாடவேண்டியது தான். ஆயினும் எல்லோரும் ஒருமுகமாக் ஒருநாளில் விழாக் கொண்டாடுவதினால் நல்ல பயனுண்டாகும். இந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வள்ளுவர் திருநாள் வருகிறது. எதிலும் வரையறையோடு செய்வது அவசியம். மரபைப் பின்பற்றி விழாக் கொண்டாடலாம்”

10. சமூகத் தொண்டன் – 13.4.58
“28.5.53 திருவள்ளுவர் திருநாள். இந்த நாளை எல்லா நிலையங்களிலும் கொண்டாடித் தமிழினத்தின் வாழ்க்கை பொங்கி வழிய வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம்.”

மேலும் சுதந்திரன், தமிழ்நாடு, தினமணி கதிர் முதலிய பத்திரிகைகள் ஆசிரியருரை, குறிப்புரை எழுதியுள்ளன. காவேரி, குமரகுருபரன், சங்கப்பலகை, சித்தாந்தம், செங்கோல், செட்டிநாடு, திருப்புகழமிர்தம், திராவிடநாடு, திராவிடன், தினமணி, தொண்டன், விந்தியா, அமுதசுரபி, மாணவர் சோதி, உதயம், தமிழ்முழக்கம், ஈழகேசரி, தினகரன், தமிழ்முரசு, தமிழ்நேசன், ஆகிய பத்திரிக்கைகள் திரு. இரத்தினம் அவர்கள் கண்ட கழகத்தின் அறிக்கைகளை வெளியிட்டு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளன.

இவற்றில் ஒன்றான திராவிடநாடு அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழ் என்பது கவனத்திற்குரியது.

அடுத்து, தமிழ்மறைக் கழகத்தின் வேண்டுதலை ஏற்று வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய சங்கங்கள், சபைகள், மன்றங்கள் ஆகியவற்றில் சில

இலங்கை
1. யாழ்பாணம் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம்
2. கொழும்பு சைவ மங்கையர் கழகம்
3. கொழும்பு விவேகானந்த சபை
4. இலங்கை வானொலித் தமிழ்க் கலை மன்றம்
5. கொழும்பு, திருவள்ளுவர் நாடக சபா
6. நெல்வீதி, அரசினர் மத்தய சல்சாரித் தமிழ்மன்றம்
7. பாரதி கழகம்
8. உனுப்பிட்டி இந்து சன்மார்க்க சங்கம் – என 65 அமைப்புகள் இலங்கையில் கொண்டாடியுள்ளன.

இந்தியா
1. திருவள்ளுவர் ஆலயம், மயிலாப்பூர்
திரு. சி, இராசகோபாலாச்சாரியார், திரு ஓ.பி. இராமசாமி செட்டியார், திரு. சி.நரசிம்மன், திரு.ஆ.கசபதிநாயகர். திரு.வி.சி. பழனிச்சாமி கவுண்டர், திரு.சி. சுப்ரமணியம், திரு. எம் மாணிக்க வேலு ஆகியோர் தலைமையில் ஒவ்வோர் ஆண்டும் திரு. ரா.பி. சேதுப்பிள்ளை போன்றோர் சொற்பொழிவாற்ற வைகாசி அனுடநாளைக் கொண்டாடியுள்ளனர்.
2. தியாகராய நகர் திருவள்ளுவர் கழகம்
3. தென்காசித் திருவள்ளுவர் கழகம்
4. புதுச்சேரி மங்கள கான சபா
5. புதுக்கோட்டை திருக்கோகரண நிலையம்
6. சென்னைத் திருவள்ளுவர் மன்றம்
7. குன்னூர் பாரதி பழஞ்சிக வாலிபர் மன்றம்
8. தேவகோட்டை திருவள்ளுவர் சங்கம்
9. தியாகராய நகர் இந்திப் பிரச்சார சபை
10. மதுரை திருவள்ளுவர் கழகம் –இப்படியாக பல ஊர்களில் வைகாசி அனுடநாளில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடியுள்ளனர்.

குண்டக்கல், சித்தூர், கல்கத்தா, பம்பாய், பெங்களூர், ஆகிய இந்திய மாநிலத்தலைநகர்களில் விழாக் கொண்டாடியுள்ளனர்.

அகில பர்மாத் தமிழர் சங்கச் சார்பில் பர்மாவிலும், கோலால்ம்பூர், சமயப் பிரச்சார சபை, மலாயா தமிழ்ப் பண்ணை சிலாங்கர் கிளை, மலாயா தமிழ் இளைஞர் சங்கம், சிறம்பான் தமிழ்ப் பண்ணைக்கிளை ஆகியவற்றின் சார்பில் மலாயாவிலும் (மலேசியா)
சிங்கப்பூர் தமிழர் சங்கம், சிங்கப்பூர் தமிழர் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சிங்கப்பூரிலும் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்தில் கொண்டாடியுள்ளனர்.

யோகேனஸ்பேக் திருவள்ளுவர் மறைக்கழகம் சார்பில் தென்னாப்பிரிக்காவில் விழாக் கொண்டாடப்பட்டிருக்கிறது. மேலும், டர்பன் டிரான்ஸ்வால் முதலிய இடங்களிலும் கொண்டாடப்பட்டுள்ளது.

மிகவும் விரிவான செய்திகள் அடங்கிய ஒரு வரலாற்றை மிகச் சுருக்கி இங்கே தந்துள்ளேன். இலங்கைத் தமிழராகிய பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் உழைப்பையும், உறுதியையும் எண்ண வியக்காமல் இருக்க முடியாது. 52-இல் கழகம் கண்டு 53 மற்றும் 54 ஆம் ஆண்டுகளில் உலகத் தமிழர்கள் அனைவரையும் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்தில் கொண்டாட வைத்த அந்த மாபெரும் மனிதனை மனத்துள் வைத்தும் பூசிப்பதைத் தவிர அவருக்கு வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும்?

ஈதெல்லாம் சரி! திரு. கா. பொ. இரத்தினம் அவர்கள் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்தில் கொண்டாட வேண்டும் என்பதைத் தமது சொந்தக் கருத்தாக முன்வைத்தாரா? அல்லது அவருக்கு முன்னவர்கள் கொண்ட வழக்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என வலுயுறுத்தினாரா?

வைகாசி அனுடம் என்பது அவரது சொந்தக் கருத்தன்று. அவருக்கு முன்னவர்கள் கொண்ட கருத்து, கடைப்பிடித்த ஒழுக்கம். அப்படியாயின் அதனை எங்கிருந்து கொண்டார்? அதனைத் தெரிந்து கொள்வோம்.

சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயில் ஒன்று இருப்பதை யாவரும் அறிவர். அந்தக் கோயிலைப் பற்றி மறைமலை அடிகள் பின்வருமாறு கூறியுள்ளார்.
“இன்றும் அவ்விருப்பை மரமும், அவர் தோன்றிய குடிலின் அடையாளமாக அம்மரத்தின் அருகே அவரது திருவுருவம் நிறுத்திய திருக்கோயில் ஒன்றும் திருமயிலையில் இருக்கின்றன”

1837 ஆம் ஆண்டிலே திருத்தணிகைச் சரவணப்பெருமாள் ஐயர் பதிப்பித்த திருக்குறள் பதிப்பிலும் இக்கோயிலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.

ஏறக்குறைய 230 ஆண்டுகட்கு முன்பு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த “எல்லீஸ்துரை” அவர்களும் இந்தக் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 600 ஆண்டுகட்கு முன்பு இத்திருகோயில் தோன்றியிருக்கலாம். என்பதும், மறைமலை அடிகள் குறிப்பிடும் சடாமுடியுடன் கூடிய சிதைந்த திருவுருவம் திருவள்ளுவருடையதே என்பதும் தொல்லியல் ஆய்வறிஞரான திரு. இராமச்சந்திரன் அவர்களது கருத்தாகும்.

இந்தத் திருவள்ளுவர் கோயில், திருவள்ளுவர் அவதார நாளாக வைகாசி அனுடமும் அவர் அடைந்து போன நாளாக மாசி உத்தரமும் கடைப்பிடிக்கின்றன. அதற்கான பூசைகள் நடைப்பெற்று வருகின்றன. தற்போது இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் பார்வையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் 80ஆண்டுகட்கு முன்பு திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த கழகத்தின் சென்னைப் பொறுப்பாளாராக இருந்த “பத்மஸ்ரீ. திரு. வ. சுப்பையாபிள்ளை” அவர்கட்கு ஓர் எண்ணம் உருவானது. அந்த எண்ணத்தை அவர் நண்பர் திரு. காழி. சிவகண்ணுசாமி பிள்ளையுடன் பகிர்ந்து கொண்டதின் பயனாக அவ்விருவரும் சேர்ந்து 17.01.35 அன்று ஒரு முடிவு செய்தனர்.

அந்த முடிவு எது?
உலகம் முழுவதும் போற்றிக் கொண்டாடும் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கென குறிப்பிட்ட நாளில் விழா எடுத்துச் சிறப்பிக்க வேண்டி “திருவள்ளுவர் திருநாட் கழகம்” என்னும் பெயரில் ஓர் அமைப்பினை உருவாக்கவேண்டும் என்பதே அந்த முடிவாகும்.

அந்த முடிவின்படி வித்துவான் பாரிப்பாக்கம் உண்ணப்ப முதலியார், தமிழ்ப்புலவர் சிவ. முத்துக்குமாரசாமி முதலியார், திரு. காழி சிவ கண்ணுசாமிபிள்ளை, பி.ஏ; திரு. எம். பாலசுப்பிரமணியம் எம்.ஏ, திரு.T.செங்கல்வராய பிள்ளை பி.ஏ.எல்.டி; திரு.வ.சுப்பையா பிள்ளை, திரு.C.M. கோவிந்தராஜ முதலியார் ஆகிய எழுவரையும் கொண்ட ஓர் இயக்குநர் கழக்ம் முதலில் தொடங்கப்பட்டது.

இந்த இயக்குநர்களும், இவர்களால் தெரிவு செய்யப்பட்ட செயலுறுப்பினர்களும் சேர்ந்து சென்று, பெரும்புலவர் பேராசிரியர் திரு. கா. நமச்சிவாய முதலியார் அவர்களைச் சந்தித்துத் திருநாட் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டினர். அவர்களும் இவர்கள் வேண்டுதலை ஏற்றுத் தலைவராக இருக்க இசைவு தெரிவித்தனர். இவ்வாறு திருவள்ளுவர் திருநாட்கழகம்” முழுமையாக உருப்பெற்றது.

திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் திருவள்ளுவர் திருநாளை 1935 ஆம் ஆண்டு மேத்திங்கள் 18,19 ஆம் நாட்களில் சென்னையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவது என்றும், தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும், இவ்விழாவினைக் கொண்டாட ஏற்பாடு செய்வது என்றும் முடிவெடுத்து அதற்கென மூன்று மாதங்கள் கடுமையாக உழைத்தனர்.

1935 மேத்திங்கள் 18 ஆம் நாள் அனுடநட்சத்திர நாள் அந்த நாளில் திருநாட்கழகத்தினர் வள்ளுவர் உருவப்படத்துடனும், திருக்குறள் சுவடியுடனும் ஊர்வலமாகச் சென்று மயிலைத் திருவள்ளுவர் கோயிலைச் சேர்ந்து திருவள்ளுவர் திருமேனிக்கு நீராட்டி பூச்சூட்டி பூசைகள் செய்து வழிபாடாற்றினர்.

விழாப் பொதுக்கூட்டம் மே,18, 19 ஆகிய இரண்டு நாட்களிலும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூடியது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருநாட் கூட்டத்தில் பங்கு பற்றியோர், கலந்து கொண்டோரில் முக்கியமான பெரியோர்கள்.

பொதுக்கூட்டத் தலைவர் மறைமலை அடிகள், திருநாட்கழகத் தலைவர் கா. நமச்சிவாய முதலியார், ச.சச்சிதானந்தம்பிள்ளை, B.தாவூத்ஷா, E.T. இராஜேஸ்வரி அம்மாள், பா.கண்ணப்ப முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், T.செங்கல்வராயன், சிவ. அருணகிரி முதலியார், மா. பாலசுப்பிரமணிய முதலியார், சிவ. முத்துக்குமாரசாமி முதலியார், மணி. கோட்டீச்சுர முதலியார், தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, T.செங்கல்வராய பிள்ளை, காழி.சிவ. கண்ணுசாமி பிள்ளை, R.S. சாம்பசிவ சர்மா, வ. சுப்பையா பிள்ளை, நின்றை தங்கவேலு முதலியார்.

சென்னை அரசாங்க மந்திரியாயிருந்த உயர்திரு. எல். முத்தைய முதலியார், திவான் பகதூர், தெய்வசிகாமணி முதலியார், செ. தெய்வநாயகம் பிள்ளை முதலியோர் உள்ளிட்ட பல பெரியவர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த இருநாட் பொதுக்கூட்டம் திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடும் முகத்தான் கூடிய கூட்டமே தவிர, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பற்றியது அன்று என்பதை வாசகர்கள் அன்பு கூர்ந்து நெஞ்சில் நிறுத்த வேண்டுகிறேன். பிறந்த நாளையும், பிறந்த ஆண்டையும் சேர்த்துப் பின்னை குழப்பில் போட்டார்கள். அந்தக் குழப்பம் இங்கே வேண்டாம்.

1935 மேத் திங்கள் 18,19 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல இடங்களில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றன. அவற்றில் இன்றியமையாச் சில இடங்கள்

1. சென்னை திருமயிலாப்பூர் திருவள்ளுவர் திருநாட் கோயில் தருமகர்த்தர் திரு. சிவஞானம் பிள்ளை அவர்கள் தலைமையில் கொண்டாட்டம்

2. சென்னை இராயபுரம் திவான்பகதூர் A.இராமசாமி முதலியார் தலைமை

3. சென்னை, ஏழுகிணறு வாலிப சங்க ஆதரவில் 24, ஏழுகிணறு தெருவில் சி.என் அண்ணாதுரை தலைமை

4. கோயம்புத்தூர், கோவைத் தமிழ்ச் சங்க ஆதரவில் சி.எம். இராமச்சந்திர செட்டியார் தலைமை.


பெங்களூர், பெல்லாரி, புதுச்சேரி, தஞ்சை, திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, எனப்பல ஊர்களில் விழா நடைபெற்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 1935 ஆண்டிற் போலவே 1936 ஆண்டில் வைகாசி அனுடநாளைச் சென்னை திருநாட்கழகம் நடத்தியது. அந்நாள் விழாவிற்குத் தலைமையேற்றவர் டாக்டர். உ.வே. சாமிநாதையர். தென்காசித் திருவள்ளுவர் கழகம் நடத்திய விழாவிற்குத் தலைமை தாங்கியவர் அக்காலம் சென்னைத் திருநாட்கழகத் தலைவராக இருந்த திரு.வி.க அவர்கள். கோவையில் துடிசைக்கிழார் அ.சிதம்பரனார் தலைமையேற்றனர். 1937இல் திருவள்ளுவர், திருநாட்கழகத்தின் விழா பாசனேரியில் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்தது.

இவ்வாறு வைகாசி அனுடநாளில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் காலப்போக்கில் தமிழ்நாட்டு வழக்கப்படி வலிமை குன்றி வழக்கொழிந்தது. இந்தப்படிக்கு வழக்கு ஒழிந்துப் போன அந்த நாள் விழாவினைத்தான் 17 ஆண்டுகள் கழித்து 1952இல் மீண்டும் புதுப்பித்து உலகம் முழுவதும் கொண்டாட வகைச் செய்தார் பண்டிதர் கா.பொ. இரத்தினம்.

1935இல் தொடங்கி 1940 முடிய திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடத்தில் கொண்டாடியதை எவரும் மறுக்கவில்லை. ஈ.வே.ரா. பெரியார், சி.என். அண்ணாதுரை, சர்.பி.டி.இராசன், ஆ.கசபதி நாயகர் முதலிய பெரியோர்களும் சேர்ந்து அந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

வைகாசி அனுடநாளைப் பண்டிதர் மீளக்கொண்ட காலத்தில் 1953இல் திருச்சி வானொலி நிலையத்தார் ஏற்படுத்திய அனுடநாள் விழாவில் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் தலைமையில் பண்டிதருடன் சேர்ந்து கலந்து கொண்ட திருச்சி. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், 1954 இல் தை முதல் நாளில் திருவள்ளுவர் விழாக் கொண்டாடலாம், அவ்வாறு சிலர் கொண்டாடுகின்றனர் எனப் பண்டிதருக்கும் பகிரங்கக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

திரு. கி. ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் கடிதத்திற்குப் பண்டிதர் எழுதிய பதில் கடிதத்திலிருந்து திருச்சி சென்னை வானொலி நிலையத்தாருக்கு கி.ஆ.பெ அவர்கள் தை முதல் நாளில் திருவள்ளுவர் பற்றி விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என எழுதியதை வானொலி நிலையத்தார் ஏற்காமல் பண்டிதர் வேண்டுதலை ஏற்று 1954இல் வைகாசி அனுடத்தில் விழாவிற்கு மறுதலைக் கொள்கைக்கு காரணம் என்பது தெரியவருகிறது.

“அன்பர் விசுவநாதம் கேட்க மறுத்துவிட்டு யாம் கேட்க அவை (சென்னை திருச்சி வானொலி நிலையங்கள்) உடன்பட்டன என்றால் அதற்குரிய காரணத்தை ஆராய்ந்து அதை நீக்க முயற்சித்தல் அவர்கடன். இதைவிடுத்துத் தோல்வி மனப்பான்மையைக் காட்டுதலும், பிறர் மேல் சந்தேகப்படுதலும் பொருத்தமற்றன. அரசியற் கட்சி வேறுபாடுகளைத் திருவள்ளுவர் திருநாளுடன் மோதச் செய்யாதிருக்குமாறு தமிழ்மக்கள் யாவரையும் வேண்டிக்கொள்கிறோம்” – கடிதத்தின் ஒரு பகுதி இது,

பண்டிதர் அவர்கள் மேலும் தமது கடிதத்தில் “தமிழகத்திலே தை முதல் நாளைச் சிலர் கொண்டாடுகிறார்கள் என்பதை அன்பர் விசுவநாதம் இப்பொழுது தான் கூறுகிறார் என்றும்; வைதிகக் கொள்கை, தனித்தமிழ்க் கொள்கை, திராவிடக் கொள்கை முதலிய பல கொள்கைகளையுடைய பத்திரிகைகளின் ஆதரவு கிடைத்தமை எமக்கு பேரூக்கத்தை தந்தது என்றும்; ஒருவரேனும் வைகாசி அனுடத்தை விட்டுவிட்டுத் தைமாதம் முதல் நாளைக் கொண்டாடவேண்டும் என்று எமக்கு எழுதவும் இல்லை.” என்றும் எழுதியுள்ளார்.

இதற்கு மேலும், அக்காலத்தில் 1935இல் தமிழ்நாட்டிலிருந்த தமிழ்ப் பேரறிஞர்கள் யாவரும் சாதி, மத அரசியற் கட்சி வேறுபாடுகளின்றி ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். தமிழ்நாட்டிலுள்ள பல கட்சித் தலைவர்களும் பெரியார். ஈ.வே இராமசாமிநாயக்கர், அறிஞர்.சி,என். அண்ணாத்துரை முதலியோரும் கூட அவ்வாண்டில் நடைபெற்ற கொண்டாட்டங்களிலே கலந்து கொண்டனர்.

அன்பர் விசுவநாதம் அப்பொழுது அந்த விழா நாளை வேண்டாம் என்று கூறியதாகவோ தை முதல் நாளைத்தான் கொண்டாடுவோம் என்று கூறியதாகவோ அறிய முடியவில்லை. அவர் கூறியிருக்க மாட்டார் என்றே நாம் கருதுகிறோம் எனப் பண்டிதர் எழுதியுள்ளார்.

அப்பொழுது தை முதல் நாளிலே தான் வள்ளுவர் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்னும் புதுக்கருத்து மரபு வழிவந்த வைகாசி அனுடநாளுக்கு மாறாக தோன்றவில்லை.

தமிழினத்துக்குத் தொண்டு செய்கிறோம் என்று கூறுகிறவர்கள் ஒற்றுமைக்கு வழிகாட்ட வேண்டுமேயன்றி, வேற்றுமையை உண்டாக்கும் முறையில் வேசுதலோ, எழுதுதலோ கூடாதென்பதை அன்பர் விசுவநாதம் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

நம் முன்னோர்கள் பெருந்செயலைப் பின்பற்றாமலும், சிறந்த மரபதைத் தழுவாமலும், நம்மினத்தின் ஒற்றுமையைச் சிதைத்துப் பழியையும், அழிவையும் தேடிக்கொள்ளும் நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். இந்த நிலைமையை மாற்ற இனியாவது யாம் எல்லோரும் முயலல் வேண்டும்” எனப் பண்டிதர் எழுதியுள்ள கடிதம் திரு. கி.ஆ.பெ. போன்று “பகல் விரும்பா பறவைகளாகச்” சிலர் இன்றும் இருந்து கொண்டு நல்ல காரியங்களுக்கு இடையூறாக இருத்தலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

தை முதல் நாளில் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்பது மரபுக்கு மாறானது. திருவள்ளுவர் ஆண்டை நிலைநாட்டிய மறைமலையடிகள் போன்றோர் கருத்துக்கும் மாறானது என்பது வெள்ளிடைமலை.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன்பு திருவள்ளுவர் தோன்றினார் என்பது எனது ஆராய்ச்சி முடிவு எனச்சொல்லி திருவள்ளுவர் ஆண்டினை நிலைநாட்டிய மறைமலையடிகளின் கருத்தினை ஏற்றுக்கொண்ட கி.ஆ.பெ.விசுவநாதம், கலைஞர். கருணாநிதி போன்றோர், அதே மறைமலையடிகள் திருவள்ளுவர் பிறந்தநாளாக ஏற்றுப்போற்றிக் கொண்டாடிய வைகாசி அனுட நாளை மறுக்கிறார்கள் என்றால் அதில் ஏதோ சுயநலம் கலந்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

பெரும்பாலும் தை முதல் நாள் பொங்கல் திருநாள் என்பது தான் தமிழ் மக்கள் கொண்டுள்ள வழக்கம். பல காரணங்களுக்காக கொண்டாடப்படும் தைத் திங்கள் முதல் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடச் சரிப்பட்டு வராது எனக்கருதிய தமிழ்நாடு அரசு 70களில் தை இரண்டாம் நாளைத் [அதாவது மாட்டுப் பொங்கல் நாளை] திருவள்ளுவர் தினமாக அறிவித்து இன்றுவரைக் கடைப்பிடித்து வருகின்றது.

அரசு தான் அந்த நாளைத் திருவள்ளுவருக்குரியது எனக் கொண்டாடுகிறதே தவிர தமிழ்மக்கள் ஒட்டு மொத்தமாகக் கொண்டாடுகிறார்கள் எனச் சொல்ல முடியாது. திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவர் சிறப்பிக்கப்படுவதில்லை. ஆளும் அரசினர் பல பெரியவர்களின் பெயர்களில் பல விருதுகளையும் பரிசுத் தொகையையும் அறிவித்து அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு அரசு பணத்தை அன்று வழங்குவதைக் கடனாகக் கொண்டுள்ளார்களே தவிர ஒன்றும் அங்கே நடைபெறுவதில்லை.

தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் தினத்தில் பல தமிழ்க்குடும்பங்களில் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்தல் வழக்கத்தில் இருந்து வருகின்றது. வீட்டுத் தெய்வ வழிபாட்டிற்கென படைக்கப்படும் படையலில் ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி, மீன், கருவாடு முதலிய அசைவ பொருட்கள் படைக்கப்படுகின்றன. சில வீடுகளில் கள், சாராயம், சுருட்டு முதலியனவும் வைக்கப்படுகின்றன. இவையெல்லாம் எந்த அளவிற்கு திருவள்ளுவருக்கு ஏற்புடையன என்பதை தை இரண்டாம் நாளைத் ”திருவள்ளுவர் தினம்” என அறிவித்தவர்கட்கே வெளிச்சம்!

தனித் தமிழ்க் கொள்கையுடையவர் அனுடத்தைப் பனைநாள் எனக் கொண்டு கொண்டாடலாம். நாற்களும், கோள்களும் நமக்காகா எனக்கூறும் பகுத்தறிவாளர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை மறுக்க முடியாது. பழந்தமிழ் மக்களின் கொள்கைகளையும் வரலாறுகளையும் நன்கு அறிந்தவர்கள் சங்ககாலத் தமிழர் நட்சத்திரங்களிலேயே விழாக் கொண்டியுள்ளனர் என்பது உணர்வர்.
பண்டைத் தலைவர்கள் தாம் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டாடி வந்தனர் என்பதற்குத் தொல்காப்பியமே சான்று பகிர்கிறது. முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களின் பாடல்களில் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களுக்கும் உரிய சில நட்சத்திரங்கள் கூறப்படுகின்றன. இவற்றை தொல்காப்பிய புறத்தினையியல் 36ஆம் சூத்திர உரையில் காணலாம். நட்சத்திரத்தைக் கொண்டாடுவது தான் தமிழ்மரபு என்பதை உணரவேண்டும். நாளைக் கொண்டாடுவது பிறநாட்டார் மரபு.

நாள்களையும், கோள்களையும் ஆதாரமாகக் கொண்டு காலத்தைக் கணிப்பதில் நமது முன்னோர் சிறந்து விளங்கினார். அவர்களையே அக்காலத்தில் கணியர்கள் என்றனர். அவர்கள் கண்டுபிடிப்யே “பஞ்சாங்கம்” என இன்று வழங்குகிறது. பஞ்சாங்கத்தை “ஐந்து கேள்வி” எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது.

தை மாதம் முதல் நாளை மாத்திரமின்றி ஏனைய தமிழ் மாதங்களின் முதல் நாளையும் பஞ்சாங்கம் உதவியின்றி அறிந்து கொள்ள முடியாது என்பதை உள்ளத்தில் கொள்ள வேண்டும்.
தை முதல் நாள், இரண்டாம் நாள் ஆகிய பொங்கல் நாள்கள் வெவ்வேறு காரணங்களால் போற்றப்படுவதால், வள்ளுவருக்கு மட்டுமே உரியதாகக் கொண்டாடுவதற்கு எனத் தனியே ஒரு நாள் வேண்டும். புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள்நாயகம் போன்றோர்க்கெனத் தனிநாட்கள் அவர்கள் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.

அந்த வரிசையில் நமது வள்ளுவரையும் வைத்து அவரின் அவதார நாளாக தனிநாள் ஒன்றைக் கடைப்பிடிக்கவேண்டும். பொங்கல் நாட்களோடு சேர்த்துக் குழப்பக் கூடாது. அந்த வகையிலேதான் வைகாசி அனுட நட்சத்திரத்தைத் திருவள்ளுவருக்குரியது எனக் குறைந்தது 300 வருடங்களாக மயிலைத் திருவள்ளுவர் கோயிலில் கொண்டாடி வருகிறார்கள். இதனை உணர்ந்து தான் மறைமலையடிகள், திரு.வி.க. பெரியார், அண்ணா போன்றோர் நட்சத்திர நாளை உடன்பட்டுக் கொண்டாடியுள்ள்னர். நட்சத்திரத்தைக் கொண்டாடுவது பழந்தமிழர் கொள்கை என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர்.

ஆகவே தமிழ்மக்கள் அனைவரும் எவ்வித மாறுபாடுமின்றி வைகாசி அனுட நாளைத் திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வோம்.

மாண்புமிகு. கலைஞர் அவர்கட்குப் பணிவான வேண்டுதல்:
ஐயா! தாங்கள் தான் மறைமலையடிகள் கண்டு காட்டிய திருவள்ளுவராண்டைத் தமிழ் மக்களிடையே கொண்டுவந்து காட்டினீர்கள். இன்று அது நிலைத்து விட்டது. ஆனால், அதேபோது மறைமலை அடிகள் மட்டும் அல்லாமல் பெரியாரும், அண்ணாவும் உடன்பட்டுக் கொண்டாடிய திருவள்ளுவரின் அவதாரநாளாகிய அனுடநாளை உடன்படாமல் பொங்கல் நாளைக் கொண்டீர்கள். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்பது புதிராகவே உள்ளது. அது பற்றி ஆய்வில் நான் இறங்க விரும்பவில்லை. தாங்கள் அதற்கும் ஒரு விளக்கம் வைத்திருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். தங்கள் பொதுவாழ்க்கையில் தாங்கள் தவறு செய்துள்ளீர்கள் என ஒரு நிகழ்வை தக்க ஆதாரங்களுடன் ஒருவர் எடுத்துக்காட்டினால் அதனை உடன்படாது அதற்கும் ஒரு விளக்கம் தருவது என்பது தங்கள் வழக்கம் என்பதைத் தமிழகம் நன்கறியும். அந்த வகையில் இதற்கும் ஒரு விளக்கம் தராமல் அன்புகூர்ந்து பெரியார், அண்ணா, மறைமலையடிகள், திரு.வி.க. நாவலர் பாரதியார், குன்றக்குடி அடிகளார், கா.நமச்சிவாய முதலியார், டாக்டர்.மு.வ. டாக்டர்.உ.வே.சா., A.இராமசாமி முதலியார் எனத் தங்களுக்குப் பிடித்தமான பெருமக்கள் கண்டு கொண்டு காட்டிய வழியைப் பின்பற்றி இனிவரும் காலங்களில் வைகாசி அனுடநாளில் திருவள்ளுவர் திருநாளைத் தமிழர்கள் கொண்டாடவேண்டும் என ஓர் அறிக்கையைத் தாங்கள் வெளியிடவேண்டும் எனத் தங்களை வணங்கி வேண்டுகின்றேன். இவ்வாறு ஓர் அறிக்கையைத் தாங்கள் தந்தால் தங்கள் பெருமை பனையளவு உயருமே தவிர திணையளவு கூடக்குறையாது என்பது திண்ணம்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கட்குப் பணிவான வேண்டுதல்:
அம்மையீர்! இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத் தன்மையை உணர்ந்து, இனித் தைத்திங்கள் இரண்டாம் நாளில் (மாட்டுப் பொங்கல் நாள்) திருவள்ளுவர் தினம் தமிழ்நாடு அரசால் கடைப்பிடிக்கபடாது அதற்கு மாறாக வைகாசி அனுட நாளிலேயே திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படும் என ஓர் அரசாணையை பிறப்பித்து, சென்ற காலத்தின் பழுதிலாதிறத்தை எதிர்காலம் ஏற்கச் செய்யவேண்டும் எனத் தங்களை வணங்கி வேண்டுகின்றேன். இந்த வகையில் தாங்கள் ஓர் அரசாணையைப் பிறப்பித்தால் ஒரு வராலாற்றுப் பிழையைத் திருத்திய புண்ணியம் தங்களைச் சாரும் என்பதுடன் தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றில் தாங்கள் ஓர் அழுத்தமான இடம் பெறுவீர்கள் என்பது உறுதி.

http://tinyurl.com/qxlullb

--
Thanks and Regards
Karthik L



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

450px-Inside_Thiruvalluvar_Temple.JPG 800px-Thiruvalluvar_Temple.JPG  DSCN4071.jpgDSCN4069.jpgDSCN4068.jpg   IMG_20170521_105323.jpgIMG_20170521_105407.jpg

IMG_20170521_105153.jpg Mylapore_TiruvalluvarTemple%2B%25282%252 Mylapore_TiruvalluvarTemple%2B%252810%25 Mylapore_TiruvalluvarTemple%2B%252813%25  Mylapore_TiruvalluvarTemple%2B%252826%25 Mylapore_TiruvalluvarTemple%2B%252830%25 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

18 ஆண்டுகள் கழித்து நடக்கிறது மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் ஜனவரியில் கும்பாபிஷேகம்: அறநிலையத்துறை திடீர் முடிவு

 
2019-11-10@ 02:00:05

Dkn_Tamil_News_2019_Nov_3__2124292254447

சென்னை: மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. மயிலாப்பூரில் திருவள்ளுவர் கி.பி 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 8ம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாக அறியப்படுகிறது. இதனால், அங்கு கிபி. 16ம் ஆண்டு திருவள்ளுவர் கோயில் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கற்சிலையாக வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் மூலவராகவும், அவரது மனைவி வாசுகி, ஏகாம்பரேஸ்வரர், துர்கை, முருகர், தட்சணாமூர்த்தி, விநாயகர் ஆகியாருக்கு தனியாக அங்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோயில் கடந்த 1985ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்த திருவள்ளுவர் கோயில் கடந்த 2001ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இந்த நிலையில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது திடீரென திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, இணை ஆணையர் ஹரிப்பிரியா திருவள்ளுவர் கோயிலில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தற்போது அந்த கோயில்களில் நடந்து வரும் பணிகள் குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து அந்த கோயில்களில் மேற்கொள்ள வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்து அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த கோயில்களில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கும்பாபிஷகம் நடத்தப்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறும் போது, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் காலை திருவள்ளுவருக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கு காலை, மாலை பூஜை நடக்கிறது. திருவள்ளுவருக்கு அர்ச்சகர்கள் தமிழில் வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோயிலில் கடந்த 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு 18 ஆண்டுகள் கழித்து நடத்தப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடக்கிறது‘ என்றார். இந்த கோயிலில் கடந்த 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு 18 ஆண்டுகள் கழித்து நடத்தப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Thiruvalluvar Temple, Mylapore

From Wikipedia, the free encyclopedia

Thiruvalluvar Temple is a Hindu temple in the neighborhood of Mylapore in ChennaiIndia. The shrine is dedicated to the poet-saint Valluvar. Believed to have been constructed in the early 16th century, the temple was extensively renovated in the 1970s.[1] The temple is under the control of the Hindu Religious and Charity Endowment Department.[2] The temple also serves as the venue for meetings of Tamil lovers.[2]

History[edit]

Close to the time of Valluvar's death, Elelasingan, a merchant at Mylapore and the disciple of Valluvar, expressed his desire to place Valluvar's body in a golden coffin and erect a monumental grave.[3] Politely refusing his request, Valluvar requested him to tie his corpse with cords and leave it among the woods outside the town in order for the wild animals to feed on it.[3][4] Elelasingan reluctantly obliged to his mentor's wishes and, upon doing so, observed that the crows and other animals that fed on his corpse "became beautiful as gold."[3] He then built a small temple on the spot where he left Valluvar's corpse and instituted worship, where it remained for centuries.[3] In the early 16th century, the present temple was built on the ruins of the old temple.[1]

The temple[edit]

 
Statue of Valluvar inside the sanctum sanctorum
 
Inside the temple

The temple is situated on a 25-ground plot.[2] The temple is located in a narrow lane adjacent to the Valluvar statue on Royapettah High Road. The temple is located on a sprawling ground with exclusive sanctums for various deities, namely, Lord GaneshaSubramanyaShiva (Ekambaranathar) and Parvathi (Kamakshi), and separate sanctums for Thiruvalluvar and his consort Vasuki.[1]

The temple's sthala vriksham (sanctum tree) is the punnai or mastwood (Calophyllum inophyllum), the very species under which Valluvar was found as a baby by his foster parents.[5] A pedestal was built around the tree in 1935, and the sacred tree was braced up with copper sheets.[5] Renovation of the temple began in 27 April 1973. Holy consecration (Kumbabishekam) of the temple took place on 23 January 2001.[5] The temple comes under the purview of the nearby Mundakakanniamman temple and is under the ambit of the Hindu religious charity department of the Government of Tamil Nadu.[5] There is also a library within the temple campus.[5] A community centre named “Valluvar–Vasuki Community Hall” has been built near the temple.[5] Classes on the Tirukkural are also held in the evenings for children.[citation needed]

In the introduction to his 1897 book The Ethics of Kural, J. M. Nallaswamy Pillai, describes the statue at the temple thus:

Those of you, who wish to have our idea of the personal appearance of the sage, may proceed to his shrine at Mylapore, a minute's walk from the Barber's Bridge, and witness the statue of the canonized saint. The folded knot of his lock, the bushy moustache and beard sweeping over his breast, the gravity of the forehead, the broad eyes revealing his noble heart, and the grace of his majestic frame are such a s remind one of Plato and Socrates. Add to these, the beads in his right and the moral code in the left hand, the saint in a sitting posture on a raised seat, seeming to impart instruction to his disciples, you will verily believe that he is a Tamil Rishi next to Agasthya. He is in fact said to be the great grandson of Agasthya. At least the genealogy framed by the pandits states so.[6]

Rituals and Festivals[edit]

Like any other Hindu temple, the idols witness full Hindu temple rituals on a daily basis. Abhishekam (bathing the idol) is performed twice a day, along with alankaram (decoration). In the morning, rice is offered as neivedhyam (offering). Draped in a white dhoti, the idol of Valluvar sports a dash of vibhuthi (holy ash), kumkum (holy crimson), and sandalwood paste on the forehead.[2]

Besides these daily services, special pujas are performed during the Arubathi Moovar festival, the second day of the Chitrai month (April), Thiruvalluvar day (January), Chitra Pournami (full moon in the Tamil month of Chitrai, when the wedding of Valluvar and Vasuki is believed to have taken place) (April), and during the monthly Anusha star (the birth star of Valluvar).[2] The annual Vaikasi Anusham (Anusha star falling in the month of Vaikasi, around the month of early June) is celebrated as the birth day of the poet saint at the temple.

According to legend, Valluvar gave some mud to Vasuki and asked her to cook it into food in order to marry her, which she did obligingly. To commemorate this, Pongal pots are kept in front of the sanctum sanctorum and on the Chitra Pournami day (April), some mud is sprinkled into these pots before boiling rice into the dish of pongal.[2]

Funds[edit]

Being a small temple, the Valluvar temple cannot sustain itself and uses the funds from other temples. The temple's primary income comes from the wedding hall, a paid parking space and a few shops. The temple is part of temples that are under the Sri Mundagakanniamman Temple at Mylapore



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard