Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் அதிகாரம் - இயல் பிரிப்பு


Guru

Status: Offline
Posts: 7387
Date:
திருக்குறள் அதிகாரம் - இயல் பிரிப்பு
Permalink  
 


மாமூலனார்.
8. அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்.

விளக்கவுரை : அறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை, மறந்தேனும் மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவுடையோர் கொள்ளார்.

சிறுமேதாவியார்
20. வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றென்றூழ்-கூடுபொரு
ளெள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம்
வள்ளுவர் சொன்னவகை.
விளக்கவுரை : திருக்குறள் அதிகாரத்தொகை:பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று; ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து.

தொடித்தலை விழுத்தண்டினார்
22. அறநான் கறிபொரு ளேழொன்று காமத்
திறமூன் றெனப்பகுதி செய்து-பெறலரிய
நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலு மொழிந்த பொருள்.
விளக்கவுரை :அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்! நாடு அரணுள் அடக்கப்பட்டது.

25. பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே
தூய துறவறமொன் றூழாக - வாய
வறத்துப்பா னால்வகையா வாய்ந்துரைத்தார் நூலின்
றிறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.
விளக்கவுரை : திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.

போக்கியார்
 26. அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்
றெண்பொரு ளேழா மிவை.
 விளக்கவுரை :திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம்
 
மோசிகீரனார்
 27.ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு
பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.
விளக்கவுரை :திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார்.
 
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
 28. ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கிப் - பொய்யாது.
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.
விளக்கவுரை :நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.
 
நரிவெரூஉத் தலையார்
 33. இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு
முன்பறியச் சொன்ன முதுமொழிநூன்- மன்பதைகட்
குள்ள வரிதென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்.
 விளக்கவுரை : நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப்பட்ட நால் வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால், அவற்றை யெளிதா யுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
 
மதுரைப் பெருமருதனார்
37. அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா
ரோதவழுக் கற்ற துலகு.
விளக்கவுரை :திருவள்ளுவர், அறத்தை முப்பத்தெட் டதிகாரங்களாகவும் பொருளை எழுபததிகாரங்களாகவும் இன்பத்தை இருபத்தைந் ததிகாரங்களாகவும் வகுத்து, வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

ஆதி பகவன் முதற்றே உலகு, இந்த உலகம் இறைவனிடமிருந்தே தொடங்கியது எனவே வள்ளுவம் தொடங்குகிறது, இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டால் மட்டுமே பிறவிப் பெருங்க் கடலைக் கடக்க் இயலும் என அவ்வதிகாரத்தை முடிக்கிறார்.

தமிழர் மரபில் மனித உயிர் என்பது ஆன்மா எனப் படும், மீண்டும் மீண்டும் பிறந்து வாழ்ந்து மறைந்து பிறந்து என வாழ்வதால் தான் தமிழர் மெய்யியல் மரபில் வள்ளுவர் பிறவிப் பெருங்கடல் என்றார். நாம் இவற்றை வள்ளுவர் வாய்மொழியாலேயே காண்போம்.

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர் (அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:330)
மணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். குறள் 1315: புலவி நுணுக்கம். 

மணக்குடவர் உரை:இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.
சாலமன் பாப்பையா உரை: காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

திருவள்ளுவர் உடலையும் உயிதையும் வேறு எனத் தெளிவாகக் காட்டுகிறார்.

உயிருக்கு இந்த உடல் ஒரு கூடு மட்டுமே, எப்படி முட்டைக்கும் பறவைக்கும் உள்ள தொடர்பே, எலும்பு தோல் போர்த்த உடம்பு, ஊன் உடம்பு என வள்ளுவர் பலமுறை காட்டியவர், ஆனால் உயிர் நிலையானது, மீண்டும் மீண்டும் பிறக்கும் என்கிறார்

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338:நிலையாமை
மணக்குடவர் உரை: கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை
மணக்குடவர் உரை:உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. குறள் 340:
மணக்குடவர் உரை:தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. குறள் 336: நிலையாமை

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255: புலான்மறுத்தல்

மனித வாழ்க்கை என்பது சராசரி 65 வருடம் எனக் கொள்வோம், ஆனால் இதை வள்ளுவர் உறஙுவது போலும் சாக்காடு, உறங்கி விழித்தல் போலும் பிறப்பு என்கிறார். யுஇர் நிலையானது எனக் காட்ட மன்னுயிர், மாயா உயிர் என்ற பதங்களையும் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார்.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை: பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை:இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை:பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. குறள் 247: அருளுடைமை
மணக்குடவர் உரை: அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.       
குறள் 80: அன்புடைமை

மு. வரதராசன் உரை: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்
மணக்குடவர் உரை:உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 
குறள் 79:அன்புடைமை

சாலமன் பாப்பையா உரை: குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?
மணக்குடவர் உரை:உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. 
குறள் 73:அன்புடைமை

சாலமன் பாப்பையா உரை: பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.
மணக்குடவர் உரை:முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். குறள் 334:நிலையாமை
மு. வரதராசன் உரை: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.
மணக்குடவர் உரை:நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின். இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். குறள் 335: நிலையாமை

சாலமன் பாப்பையா உரை: நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. குறள் 336: நிலையாமை
சாலமன் பாப்பையா உரை: நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
மணக்குடவர் உரை:ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்  
(அதிகாரம்:இன்னாசெய்யாமை குறள் எண்:319)

பொழிப்பு (மு வரதராசன்): முற்பகலில் மற்றவர்க்குத் துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்.

மணக்குடவர் உரை: பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும் மற்றொருவன் செய்யாமல்.
இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.              குறள் 345: துறவு

மணக்குடவர் உரை:பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?

சாலமன் பாப்பையா உரை:இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.                குறள் 346: துறவு

மணக்குடவர் உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

சாலமன் பாப்பையா உரை: உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்      குறள் 349: துறவு

மணக்குடவர் உரை:ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.

சாலமன் பாப்பையா உரை: ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.                      குறள் 361: அவாவறுத்தல்

மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.

சாலமன் பாப்பையா உரை: எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.              குறள் 362: அவாவறுத்தல்

மணக்குடவர் உரை: வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

மு. வரதராசன் உரை: ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.


இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். குறள் 369:

மணக்குடவர் உரை:அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும். இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.

சாலமன் பாப்பையா உரை: ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.      குறள் 370:

மணக்குடவர் உரை:நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.

மு. வரதராசன் உரை:ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.             குறள் 351:  மெய்யுணர்தல்

மணக்குடவர் உரை: பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.

சாலமன் பாப்பையா உரை: பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.        குறள் 352: மெய்யுணர்தல்

மணக்குடவர் உரை: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.           குறள் 353: மெய்யுணர்தல்

மணக்குடவர் உரை: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.


கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.                 குறள் 356:

மணக்குடவர் உரை: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.

சாலமன் பாப்பையா உரை: பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.


ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.      குறள் 357:

மணக்குடவர் உரை: உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.

சாலமன் பாப்பையா உரை: பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358:

மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

மு. வரதராசன் உரை: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.   



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

திரு.மு.வை.அரவிந்தன் தன் “உரையாசிரியர்கள்” என்ற நூலில், பின்வருமாறு எழுதுகிறார்.

”குறட்பாக்கள் அதிகாரம் விட்டு அதிகாரம் மாறிய தோடு, அதிகாரங்களும் இயல் விட்டு இயல் மாறி அமைந்துள்ளன. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பதிப்பித்த மணக்குடவர் உரையில் அறத்துப்பாலில்

இத்தகைய மாற்றம் உள்ளது. தமக்குக் கிடைத்த ஒரே ஒரு ஏட்டுச் சுவடியில் மட்டும் இத்தகைய மாற்றம் இருந்ததாய் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மணக்குடவர் உரையில் இல்லற இயலில் பின்வரும் அதிகாரங்கள்  உள்ளன.

5. இல்வாழ்க்கை, 6.வாழ்க்கைத் துணைநலம், 7.மக்கட்பேறு, 8.அன்புடைமை, 9.விருந்தோம்பல், 10.வாய்மையுடைமை, 11.செய்ந்நன்றியறிதல், 12.நடுவுநிலைமை, 13.பொறையுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15.பிறனில் விழையாமை, 16.வெகுளாமை, 17.இன்னா செய்யாமை, 18. கொல்லாமை, 19.புலால் மறுத்தல், 20.கள்ளாமை, 21.தீவினையச்சம், 22.ஒப்புரவறிதல், 23.ஈகையுடைமை, 24.புகழுடைமை

துறவற இயலில் பின்வரும் அதிகாரங்கள் உள்ளன:

25.அருளுடைமை, 26.இனியவை கூறல், 27.அடக்கமுடைமை, 28.தவமுடைமை, 29.கூடாவொழுக்கம், 30.அழுக்காறாமை, 31.வெஃகாமை, 32.புறங்கூறாமை, 33.பயினில சொல்லாமை, 34.நிலையாமை, 35.துறவுடைமை, 36.மெய்யுணர்தல், 37.அவாவறுத்தல்

பரிமேலழகர் உரையில் உள்ள இயல்களில் அதிகார அமைப்பு, பின்வருமாறு உள்ளது.

இல்லற இயல் – 5.இல்வாழ்க்கை, 6.வாழ்க்கைத் துணைநலம், 7.புதல்வரைப் பெறுதல், 8.அன்புடைமை, 9.விருந்தோம்பல், 10.இனியவை கூறல், 11.செய்நன்றியறிதல், 12.நடுவுநிலைமை, 13.அடக்கமுடைமை, 14.ஒழுக்கமுடைமை, 15.பிறனில் விழையாமை, 16.பொறையுடைமை, 17.அழுக்காறாமை, 18.வெஃகாமை, 19.புறங்கூறாமை, 20.பயனில சொல்லாமை, 21.தீவினையச்சம், 22.ஒப்புரவறிதல், 23.ஈகை, 24.புகழ்

துறவற இயல் – 25.அருளுடைமை, 26.புலான் மறுத்தல், 27.தவம், 28.கூடாவொழுக்கம், 29.கள்ளாமை, 30. வாய்மை, 31.வெகுளாமை, 32.இன்னா செய்யாமை, 33.கொல்லாமை, 34.நிலையாமை, 35.துறவு, 36.மெய்யுணர்தல், 37.அவா அறுத்தல்.

அதிகார வரிசை, அதிகார பெயர் மாற்றம் குறித்து மேலும் அறியக் கீழ்க் காணும் சுட்டியைச் சொடுக்குக!



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

மணக்குடவர் அமைப்புப்படி இயலுக்குள் வரும் அதிகார வைப்பு முறை

திருக்குறளின் இயல்களில் வரும் அதிகார வைப்புகளிலும், அதிகார முறை வைப்புகளிலும் மணக்குடவர் போக்குக்கும் பிற பழைய உரையாசிரியர்களின் போக்குக்கும் வேறுபாடுகள் உள்ளன.

 

இனியவை கூறல்

அடக்கமுடைமை

அழுக்காறாமை

வெஃகாமை

புறங்கூறாமை

ஆகிய ஐந்து அதிகாரங்களைத் துறவறவியலுள் முறையே 26, 27, 30, 31, 32 -ஆவது அதிகாரங்களாக மணக்குடவர் அமைத்துள்ளார்.

 

ஆனால், ஏனைய உரையாசிரியர்கள் இந்த அமைப்பு முறையை மாற்றி, இவற்றை இல்லறவியலில் முறையே 10, 13, 17, 18, 19 - ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

 

அதேபோல், மணக்குடவர் இல்லறவியலில் வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளாமை என்னும் அதிகாரங்களை முறையே 10, 16, 17, 18, 19, 20 ஆம் அதிகாரங்களாக அமைத்திருக்க, ஏனைய உரையாசிரியர்கள் அவற்றை மாற்றி, துறவறவியலில் முறையே 30, 31, 32, 33, 26, 29 -ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard