Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளின் தத்துவத்தளம் குறித்த விசாரணையில் அறிவாராய்ச்சியியலின் பயில்நிலை


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருக்குறளின் தத்துவத்தளம் குறித்த விசாரணையில் அறிவாராய்ச்சியியலின் பயில்நிலை
Permalink  
 


 திருக்குறளின் தத்துவத்தளம் குறித்த விசாரணையில் அறிவாராய்ச்சியியலின் பயில்நிலை -ச. முகுந்தன்

முதுநிலை விரிவுரையாளர  இந்துக்கற்கைகள் பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்  

அறிவென உரிமைகோரப்படும் விடயங்களின் ஏற்புடைமை பற்றிய ஆய்வே அறிவாராய்ச்சியியல் ஆகும். ஞானத்தின் மீது நாட்டமுள்ள புலமாகிய மெய்யியலின் அடித்தளமாக விளங்குவது அறிவாராய்ச்சியியலே எனில் அது மிகையில்லை. 

அறிவாராய்ச்சியியல் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் “நுpளைவநஅழடழபல” என வழங்குகிறது. இது நுpளைவநஅந + டுழபழள என்ற இரு கிரேக்கச் சொற்களின் இணைப்பால் உருவானதாகும். அறிவு தொடர்பான முறைமை பற்றிய அல்லது முறைமைக்குட்படுத்தப்பட்ட ஆராய்ச்சி என்பதே இதன் கருத்தாகும்.

அந்தவகையில் அறிவின் தோற்றம், இயல்பு, உண்மை, வரம்பு ஆகியவை குறித்து இப்புலமானது கவனம் செலுத்துகிறது. மேலைத்தேய மெய்யியல் மரபுகளில் அறிவின் ஊற்றுப் பற்றிய ஆய்வுகள் அறிவாராய்ச்சியியலிலும் அதன் நியாயித்தல் முறைமைகள் அளவையியலிலும் உள்ளடக்கப்படுகின்றன. இந்திய மெய்யியல் மரபிலோ இவ்விரு கிளைகளும் ஒருங்கிசைவுற்றே வளர்ச்சி பெற்று வந்துள்ளன. மேலும், அறிவு அறிவுக்காகவே என்ற போக்கில் இந்தியமெய்யியல் மரபு ஆய்வு செய்வதில்லை. ஆன்ம விசாரணையை முதன்மைப்படுத்தியதாகவே இந்திய அறிவாராய்ச்சியியல் திகழ்கிற

திருக்குறளுக்கும் அறிவாராய்ச்சியியலும்;:

திருக்குறள் அடிப்படையில் தத்துவப் பனுவல் அன்று@ தர்க்க சாஸ்திரமும் அன்று. இலக்கணமும் இலக்கிய ஞானமும் கைவரப்பெற்ற திருவள்ளுவர் தத்துவ ஞானத்தின் வேராகிய அறிவாராய்ச்சியியலை உணர்ந்தவராய் இருப்பாரா? திருக்குறளை இலக்கியம் என்ற நோக்குகைக்கு அப்பால் வௌ;வேறு ஆய்வுக் கோணங்களில் கட்டுடைத்து நோக்குதல் விபரீதமானதா? என்ற ஆசங்கைகளும் எழாமலில்லை. 

திருவள்ளுவர் தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளுக்கு அப்பாலும் அகன்றாழ்ந்தவர். சமஸ்கிருத காவிய மரபுகளையும், ஸ்மிருதிகளையும், அர்த்த சாஸ்திரத்தையும் குறுகத்தறித்தவர். வாத்சாயனரையும் கரைகண்டவர். தான் பெற்றிருந்த பல்துறைப் புலமையினைப் பொருத்தமான சந்தர்ப்பங்களில் தனது பனுவலில் இழையோடவிட்டவர். இவ்வகையில் தர்க்கசாஸ்திர அறிவு இவருக்கு அந்நியமானதாய் இருக்க இயலாது.. 

அறிவாராய்ச்சியியல் தொடர்பாக குறட்பாக்களுள்ளே ஆழ்ந்து செல்ல வசதியாக  இரண்டு விவாதப் புள்ளிகள் முன்வைக்கப்படுகின்றன.  

விவாதப்புள்ளி- 1  உண்மை பற்றிய அறிவு தொடர்பாக இந்திய அறிவாராய்ச்சியியல் மரபில் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு அறிவுத் தளங்கள் ஆராயப்பட்டுள்ளன.

திருவள்ளுவரும் இதுபற்றிக் கவனம் செலுத்தியுள்ளார்.

ஆதாரம்        அறத்துப்பாலின் 36வது அதிகாரம் ‘மெய் உணர்த்தல்’ என்பதாகும்.

பொருட்பாலின் 43வது அதிகாரம் ‘அறிவுடமை’ என்பதாகும்.

விளக்கம் : இவ்விரண்டு அதிகாரங்களும் அறிவு பற்றியே ஆராய்ந்துள்ளன. ‘அறிவு’ என்ற சொல்லுடன் நிறைவுறுகின்ற குறட்பாக்களும் இவ்வதிகாரங்களில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறாயின் இது ‘கூறியது கூறல்’ என்ற குற்றத்தின் பாற்பட்டதா? எனில் இல்லையென்றே கூறவேண்டும். ஏனெனில் அறிவுடைமை என்ற அதிகாரம் பொருட்பாலில் அமைவது, இதில் பேசப்பட்ட  அறிவு கருவிநிலைப்பட்டது. அஃது உலகியலறிவாகிய – அபரஞானம் ஆகும். 

அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள ‘மெய்யுணர்தல்’ என்ற அதிகாரம் பரஞானத்தினை நோக்கிய பயணிப்பாகும். இவ்வதிகாரம் ‘துறவு’ என்ற அதிகாரத்திற்கு அடுத்ததாக வைக்கப்பட்டிருப்பதும் நோக்கற்பாலது. ‘பரஞானம்’ கருவி நிலைப்பட்டதன்று. எமது அறிகருவிகள் மூலம் அறியக்கூடியதுமன்று. அது உணரப்படவேண்டியது. அபரஞானத்திற்குரிய அறிவுப்புலங்கள் யாவும் மாற்றத்திற்குட்படக்கூடியவை. பொய்ப்பிக்கப்படக்கூடியவை. ஆகவே அவற்றை ‘மெய்’ என்றழைத்தல் தவறாகும். ஏனெனில் ‘உண்மை’ என்றைக்கும் மாற்றத்திற்குட்படாதது. இதனைக் கருத்தில் இருத்தியே ‘மெய்யுணர்தல்’ என்ற அதிகாரம் வள்ளுவரால் அமைக்கப்பட்டதெனலாம். 

விவாதப்புள்ளி -2

பிரமாணங்கள் பற்றிய விளக்கமும், பயில்நிலையும் திருக்குறளின் பொருட்புலப்பாட்டு நுட்பங்களில் நன்கு இழையோடியுள்ளன.

இதனை, பரிமேலழகரும் பல சந்தர்ப்பங்களில் தனது உரை விளக்கத்தில் உறுதி செய்யுள்ளார். 

ஆதாரம்-அமைச்சர்களுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத தகுதிப்பாடாக பிரமாணங்கள் பற்றிய அறிவு அமைவதாகத் திருவள்ளுவர் கருதியுள்ளமை, - பொருட்பால் ‘அமைச்சு’ (அதிகாரம்) குறள். 725, இது பற்றிய பரிமேலழகர் நிலைப்பாடு.

விளக்கம் “The commentator Parimelalakar while interpreting the contents at the first three Sources of knowledge viz. perception, inference verbal testimony to highlight the master mind of Tiruvalluvar according to him Tiruvalluvar anticipated the cabinet ministers to be equipped with epistemological knowledge.”என்ற பேராசிரியர் சோ. ந. கந்தசாமியின் கருத்தும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது. இனிச் சற்று ஆழ்ந்தகன்று செல்ல முற்படலாம். 

பொருட்பால்

பிரபஞ்ச இயற்கையின் இயல்புகளைப் புறவயமாக ஆய்ந்துணர முற்படுவனவும், இயற்கையில் ஒரு உயிர்ச்சுவடாய் மனிதன் வாழ்வதற்கு உதவுகின்ற கருவிநிலைப்பட்ட அறிவுப்புலங்களும் இந்து மெய்யியற்புலத்தில் அபரஞானமாகக் கருதப்படுகின்றன. இயற்கை விஞ்ஞானங்களும் இன்னபிற சாஸ்திரஞானங்களும் இதில் உள்ளடக்கம். 

பிரபஞ்ச இயற்கை பஞ்சபூதக் கலப்பாலுருவானதாகும். இதனை அறிந்து கொள்ள ஞானேந்திரியங்களும், அந்தக்கரணங்களும் எமக்குத் தரப்பட்டுள்ளன. இக்கருவிக் கூட்டங்களின் துணைகொண்டு ஒருவனால் அறியப்படக்கூடிய அபரஞானத்தின் அதி உச்ச எல்லை என்பது பஞ்சபூதங்களின் சூக்கும நிலையாகிய தன்மாத்திரைகள் தொடர்பானதாகவே இருக்க முடியும். 

தன்மாத்திரைகளானவை : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

இந்நிலைப்பாட்டையே சாங்கியம் முதற்கொண்டு சைவசித்தாந்தம் வரையிலான பெரும்பான்மையான ஆஸ்தீக தத்துவ மரபுகள் கொண்டுள்ளன.  

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றைந்தின்

வகை தெரிவான் கட்கே உலகு (குறள் 27)    என்ற திருக்குறளும் இதே நிலைப்பாட்டையே எடுத்துரைத்துள்ளது. 

“இத்தன்மாத்திரைகள் ஐந்தினதும் கூறுபாட்டையும் ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம். அவற்றின் கூறுபாடாவன…………… இவையல்லது உலகெனப் பிறிதொன்றில்லையென உலகின் துண்மையறிதலின் அவனறிவின் கண்ணதாயிற்று” 

என்ற பரிமேலழகரின் விளக்கமும் இக்கருத்தை மேலும் அரண்செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. 

உலகியல் ஞானம்

அபரஞானத்துள் இதுவும் அடக்கம். சிந்திக்கும் விலங்காகிய மனிதன் ஒரு சமூகப்பிராணியாவான். சமூகவாழ்வில் செவ்வனே ஊடாடி இடைவினை புரிவதற்கான நுட்பமே உலகியல் ஞானம் ஆகும். 

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய மனத்திலிருந்து அறிவதாகக் கருதுகின்ற விடயங்கள் பலவற்றில் அவன் சார்ந்த சமூக பண்பாட்டுக் குழுக்கள் (குடும்பம், சகபாடிகள், இனம்) கற்பித்துத் தருகின்ற முன்னறிவுப் பிரதிமைகளின் பங்கு காத்திரமானதாகும். 

மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு

இனத்துளதாகும் அறிவு (குறள் 454) 

நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும் மாந்தற்கு

இனத்தியல்பதாகும் அறிவு (குறள் 452) 

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது அறைவது அறிவு (குறள் 426)  ஆகிய குறட்பாக்களில்  வள்ளுவராற் சுட்டப்பட்ட அறிவு என்பது மேற்கூறிய உலக ஞானத்தையே ஆகும்.  

அறிவின் முடிவற்ற பயணம்

அபரஞானத்தில் அடங்குகின்ற அத்தனை அறிவுப்புலங்களும் குறைபாடுடைய அறிவையே கொண்டுள்ளன. அவ்வறிவு பொய்ப்பிக்கப்படக்கூடியதும் மாற்றத்திற்கு உட்படக்கூடியதுமாகும். 

உ+ம் : “பூமி தட்டையானது”

இன்று இக்கருத்துப் பொய்பிக்கப்பட்டுவிட்டது. “உயிரினங்கள் வாழ ஏதுவான ஒரே கோள் பூமியே” ; இக்கருத்து நாளை பொய்ப்பிக்கப்படலாம். 

அந்தவகையில் அபரஞானப் புலங்களில் அறிவும் அறியாமையும் ஒன்றையொன்று சார்ந்திருப்பது புலனாகிறது. 

அறிவறியாமை கடந்தவறிவானால்

அறிவறியாமை அழகியவாறே.     எனத் திருமூலர் குறிப்பால் உணர்த்தியதும் இக்கருத்தையேயாகும். 

அபரஞானத்தில் நிகழும் அறிவின் முடிவற்ற பயணத்தினைக் காமத்துப்பாலின் குறளொன்றில் வைத்து வள்ளுவர் காட்சிப்படுத்தியுள்ளார். 

அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு (குறள் 1110) 

ஒவ்வொருமுறை தலைவன் தலைவியை நெருங்குகின்ற பொழுதும் அவள் பற்றி அவனிடமிருந்த ‘முன்னறிவு’ (பட்டறிவு) பொய்ப்பிக்கப்படுகின்றதாம். 

இவ்வாறாக அறிவு பற்றிய ஆழமானதொரு கருத்தியலைக் கூடற்சுவையின் குறியீடாக அநாயாசமாகக் கையாள்வது திருவள்ளுவருக்கேயுரிய தனித்திறமையாகும்.

பிரமாணங்களின் பிரயோகமும் நியாயித்தல் உத்திகளும்

அறிவைப் பெறுவதற்கான சாதனங்களாக – வாயில்களாக பிரமாணங்களும் அதனைப் பிறருக்கு விளக்கியுரைப்பதற்கான பொறிமுறையாக நியாயித்தல் உத்திகளும் தர்க்கவியலில் இடம்பெற்றுள்ளன. 

திருக்குறள் ஒரு தர்க்கசாஸ்திரம் அன்று. அது ஒரு வாழ்வியல் நூலேயாகும். எனினும் வாழ்வியற் சிந்தனைகளை எடுத்துரைப்பதற்கு திருவள்ளுவர் கையாண்ட வழிமுறைகளில் தர்க்கவியலின் தீட்சணியத்தைத் தரிசிக்க முடிகிறது. 

புலக்காட்சி அல்லது பிரத்தியட்சப்பிரமாணம்:

புலக்காட்சி என்பது புலனனுபவத்தின் வழி பெறப்படும் அறிவாகும். 

“இந்திய மெய்யியலில் பிரத்தியக்ஷம் பற்றிய ஆய்வானது ஐந்து புறப்புலன்களுடன் மனம் ஆகிய அகப்புலனையும் இணைத்ததாகவே கொள்ளப்படுகிறது

இவ்வாறு புலக்காட்சியின் பயில்நிலையில் மனம் சம்பந்தமுறுகின்ற காரணத்தாலேயே புலன்வழி பெறப்படும் விடயங்கள் உணர்வூட்டப்படுகின்றன. 

ஐந்து புலன்க@டாகவும் பெறுகின்ற அறிவை மனத்துடன் தொடர்புபடுத்தி ‘ஐயவுணர்வு’ எனச் சுட்டுகின்ற வள்ளுவரின் பாங்கு இங்கே கவனிக்கப்பட வேண்டியதாகும். 

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயனின்றே

மெய் உணர்வு இல்லாதவர்க்கு (குறள் 354) 

புலக்காட்சியில் மனதின் வகிபங்கு

புலக்காட்சியில் ஐந்து புலன் உறுப்புக்கள் நேரடியாகப் பங்கெடுப்பனபோல் தோன்றினாலும் அறிவைப் பெறுவதில் - உணர்வதில் அவற்றின் வகிபங்கு முற்றிலும் புறவயமானதாகும். கண்ணாடியைப் போலக் கருவிநிலைப்பட்டதேயாகும். ஆனால் மனமோ நேரடியாகப் பங்கெடுப்பதுபோல் தோன்றுவதில்லை. ஆனால், புலக்காட்சி மூலம் பெறப்படும் அறிவில் மனதின் வகிபங்கே காத்திரமானதாகும். 

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான் கண்டவாறு (குறள் 849)  இக்குறளில் இழையோடுகின்ற சிந்தனாமுறைமையில் மேற்கூறிய நுட்பத்தின் சாயலை உணர முடிகிறது. 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: திருக்குறளின் தத்துவத்தளம் குறித்த விசாரணையில் அறிவாராய்ச்சியியலின் பயில்நிலை
Permalink  
 


அனுமானம் ஃ பின்வருமறிவு

புலக்காட்சி முதலிய அளவைகளால் கண்டறியப்பட்ட விடயங்களினைத் துணைகொண்டு புதிய விடயங்களை உய்த்துணர்தலே அனுமான அளவையின் பயில் நிலையாகும். 

“உண்மையென அறியப்பட்ட நேர்வுகளைத் தொடர்புபடுத்தி நியாயித்தல் மூலமாகப் புதிய தகவல்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் பிரமாணமே அனுமானமாகும்” . 

யான் நோக்கும் காலை நிலம் நோக்கும், நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகும். (குறள் 1094) 

இக்குறளின் பொருளமைதியை யாவரும் அறிவர். ஆனால் தர்க்கநுட்பத்தில் தவறொன்றுள்ளது போலில்லையா? 

தலைவியைத் தான் நோக்காதபோது குறித்த தலைவி தன்னை நோக்குவதையும், இளநகை பூப்பதையும் தலைவன் எவ்வாறு அறிந்து கொண்டான் என்பதே இவ்விடத்திலெழுகின்ற ஆசங்கையாகும். ‘இது காமத்துப்பாலின் கவிநயம்’ என்று கண்டுபிடித்துச் சொல்வதற்கு ஆய்வாளர்கள் அவசியமில்லை. 

காமத்துப்பாலின் கட்டமைப்பில் தமிழ் இலக்கண இலக்கிய வரம்புகளை மீறாத வள்ளுவர் தர்க்கவியலில் மட்டும் தவறிழைத்திருப்பாரா? 

ஒரு குறளிற்கு பொருள் விரிந்துரைப்பதற்கு இரண்டு வழிமுறைகளைப் பரிமேலழகர் முதற்கொண்டு உரையாசிரியர்கள் பலர் பின்பற்றியுள்ளனர். 

1.      குறித்த குறளிற்கு முன்னைய அல்லது அடுத்துவரும் குறள்களின் பொருளமைதியுடன் கொண்டு கூட்டிப் பொருள் விரிப்பது.

2.      குறிப்பிட்ட குறள் இடம்பெற்றுள்ள அதிகாரத்தினை அவதானித்துப் பொருள் கொள்வது.

இங்கு இந்நடைமுறை பயனளிக்கவல்லதாயுள்ளது. அந்தவகையில் ‘யான் நோக்கும் காலை’……………….. என்ற குறித்த குறளிற்கு முன்னைய குறளையும் அதன் பொருளமைதியையும் புரிந்து கொண்டு அதன் தொடர்ச்சியாக இக்குறளை விளங்கிக் கொள்ள முயல்வது முதலாவது வழிமுறை.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டியநீர் (குறள் 1093)

என்பது ‘யான் நோக்கும் காலை’ க்கு முன்னைய குறளாகும். இதன் பொருளமைதியை நோக்கும்பொழுது தலைவி ஏலவே இவனை நோக்கியிருந்தாள் என்பதும் இவன் அவளை நோக்கியபொழுது தலைகுனிந்தாள் என்பது வெளிப்படுத்தப்-பட்டுள்ளது.

எனவே அனுமானப் பிரமாணத்திற்கு அவசியான ‘முன்னறிவு’ இங்கே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது வழிமுறையில் பொருள்கொள்ள முயலும்போது (அதிகாரத்தால்) குறித்த குறள் இடம்பெறுவது காமத்துப் பாலின் ‘குறிப்பறிதல்’ என்ற அதிகாரத்திலேயாகும்.

குறித்த குறளின் (‘யான் நோக்கும் காலை………’) பொருண்மையில் உய்த்துணரப்படவேண்டிய – குறிப்பால் உணரப்பட வேண்டிய விடயமொன்றை வள்ளுவர் இழையோடவிட்டிருப்பதும் பொருத்தமானதேயாகும்.

எனவே

01.     அவள் அவனை நோக்கியபடியிருந்தாள். (முன்னைய குறள்)

02.     எப்பொழுதெல்லாம் அவன் அவளை நோக்குகின்றானோ அப்பொழுதெல்லாம் விழிகளை அவள் தாழ்த்திக் கொள்கிறாள்.

03.     இப்பொழுது அவன் அவளை நோக்கவில்லை.

04.     எனவே, முன்னறிவின் பிரகாரம் அவன் அவளை நோக்குவான்……….

இதனைத் தலைவன் ஊகிப்பது அனுமான அளவையின் வழியே ஏற்புடையதேயாகும்.

உவமானப் பிரமாணம்

துறத்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக் கொண்டற்று (குறள் 22)

என்ற குறளில் குறத்தாரின் ‘பெருமை’ ஆகிய எண்ணிலிப் பெறுமதியை விளக்குவதற்கு ‘இறந்தவர்களின் எண்ணிக்கை’ என்ற பரிச்சயமான முடிவிலிப் பெறுமதியை உவமானமாகக் கையாண்டிருப்பது நயப்புக்குரியது.

ஆப்தவாக்கியம் ஃ உரையளவை

‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு’ என்ற வகையில் சான்றோர் உரையினைச் சான்றுரையாகக் கொள்வதால் இவ்வளவையினை ஆப்த வாக்கியம்இ  உரையளவை எனவும் வழங்குவர்.

அந்த வகையில் உலகத்தவரால் உண்டு என ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயத்தினை இல்லை என்று மறுப்பவனை ‘அலகை’ (பேய்) என வள்ளுவர் விமர்சித்துள்ள பாங்கு கவனத்திற்குரியது.  

உலகத்தார் உண்டென்பதில்லென்பால் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

லௌகீகம் - அலௌகீகம் என நியாயதரிசன வாதிகளும் வேதவாக்கியம், உலகவாக்கியம் எனச் சைவசித்தாந்த வாதிகளும் ஆப்தவாக்கியப் பிரமாணத்தை வகைப்படுத்தியுரைப்பதும் கவனிக்கத்தக்கது. (விரிவஞ்சி விவரிக்கவில்லை)

இவ்வாறாக சுபாவம், ஒழிபு, ஐதீகம் உள்ளிட்ட அனைத்துப் (10) பிரமாணங்களின் பயில் நிலைகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருக்குறளில் அடையாளங்காட்ட முடியும். அறிவாராய்ச்சியியலில் அளவையியல் ஒரு பகுதியே-யாதலின் விரிவஞ்சி அவை பற்றி விளக்க முற்படவில்லை.

பிரமாணங்களின் கையாட்சி மட்டுமன்றி தர்க்கவியலில் பயன்படுகின்ற தூல அருந்ததி நியாயம் முதலிய நியாயித்தல் உத்திகளும் வள்ளுவரால் ஆங்காங்கே பிரயோகிக்கப்பட்டுள்ளன.

தூல அருந்ததி நியாயம்

ஒருவருக்குத் தெரியாத விடயமொன்றைத் தெரிந்து கொள்ள வைப்பதற்கான உத்திமுறை இதுவாகும். தெரியாத விடயமொன்றை அதிகம் துலாம்பரமாக அறியப்பட்ட விடயமொன்றுடன் தொடர்புபடுத்திச் சுட்டுவதனூடாக அறிந்ததிலிருந்து அறியப்படாத விடயத்தினைப் புரிய வைத்தலே தூல அருந்ததி நியாயத்தின் பயில் நிலையாகும்.

விண்ணிலுள்ள நட்சத்திரக்கூட்டத்தில் அருந்ததியை ஒருவனுக்குக் காட்டவேண்டுமெனில்,

01.     பிரசித்தமாகத் தெரிகின்ற சப்தரிஷிமண்டலத்தைச் சுட்டிக் காட்டுதல்.

02.     சப்தரிஷிமண்டலத்தினுள் அதிக பிரகாசமுடைய வசிட்டர் விண்மீனைச் சுட்டிக்காட்டுதல்.

03.     வசிட்டர் விண்மீனுக்கு அருகில் உள்ள பிரகாசம் குறைந்த விண்மீனே அருந்ததி எனக் காட்டுதல்.

இவ்வகை நியாயித்தல் உத்தியினை வள்ளுவரும் கையாண்டுள்ளார். எடுத்துக்காட்டு:

ஈன்றாள் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை (குறள் 656)

சான்றோர் பழிக்கும் செயலைப் புரிவதால் எத்தகைய பாதகம் விளையும் என்பதை உணர்த்துவதே இக்குறளின் நோக்கம். பெற்ற தாயானவள் பசியினால் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்நிலை எவ்வளவு கொடுமையானது என்பதனை ஒவ்வொருவரும் அறிவர். சப்தரிஷி மண்டலத்தைக் காட்டுவதுபோல இதனை முதலில் குறிப்பிட்டு, பின்னர் அதனை விடவும் பாதகமானது சான்றோர் பழிக்கும் செயலைப் புரிவது என தூல அருந்ததி நியாயம் பேசுகிறார் திருவள்ளுவர்.

சுந்தோப சுந்த நியாயம்

(சுந்தன் - உபசுந்தன் என இரு சமபலங்கொண்ட சகோதரர்கள் ஊர்வசியின் பொருட்டு தம்முள் சண்டையிட்டு மாய்ந்தமைபற்றி வழங்கும் பௌராணிகப் பெயரீடு இதுவாகும்) சமவலிமையுள்ள இரண்டு காரணங்கள் ஒன்றையொன்று தாக்கி வெறுமையாகின்ற நிலைமையினை விளக்குவதற்கு இந்தியத் தர்க்கவியலில் சுந்தோப சுந்த நியாய உத்திமுறை கையாளப்படுகிறது.

திருக்குறளில் சுந்தோப சுந்த நியாயத்தின் பயில்நிலைக்கு மேல்வரும் குறளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

இருநோக்கு இவள் உன்கண் உள்ளது ஒரு நோக்கு

நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து (குறள் 1091)

அஃதாவது தலைவியின் ஒரு நோக்கு (பொது நோக்கு) இவனுக்கு ஏக்கத்தை உண்டுபண்ணும் நோயாகிறது. அவளின் ஒரு நோக்கு (தனி நோக்கு) இவனின் நோயைத் தீர்க்கவல்ல மருந்தாகிறது. இவையிரண்டும் கணத்துக்குக்கணம் மாறி மாறி நிகழ்வதால் சுந்தனும், உபசுந்தனும் தம்முள் போரிடுவதுபோல தலைவனின் உள்ளம் ஸ்தம்பித்துப் போகிறது.

இவ்வாறாகத் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கருத்து வெளிப்பாட்டு முறையியலுக்குத் துணை செய்பவையாக அளவைப் பிரமாணங்களையும், நியாயித்தல் உத்திகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளமை அவதானிக்கப்பாலது.

அப்பிரமாணம் - ஏற்கப்பட முடியாத அறிவு

இது ஏற்புடை அறிவிற்கு நேர்முரணானது.

இதனை ஐயம் (சம்சயம்), பிழை (விபர்பாயம்) போன்றவற்றினூடாக தத்துவாதிகள் இனங்காட்டியுள்ளனர்.

உண்மை பற்றிய தேடலே ஐயத்தை மனிதர்களிடத்தில் உண்டாக்குகிறது. நிச்சயமற்ற அல்லது ஐயத்திற்கு இடமளிப்பதாயுள்ள பிரச்சினைகளே அறிவாராய்ச்சிக்கு அடிப்படையாகவும் அமைந்து விடுகின்றன. திருக்குறளில் இடம்பெறும்,

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு (குறள் 353)

ஐயப்படாது அகத்தது உணர்வானை (குறள் 702)

மாசறு காட்சியர் (குறள் 352)

புன்மையில் காட்சியர்.

ஆகிய சொற்பிரயோகங்களும் இவைபற்றிய பரிமேலழகரின் உரை விளக்கங்களும் திருவள்ளுவரின் அறிவாராய்ச்சியியற் புலமையினைத் தெளிவுபடுத்து-வனவாய் அமைந்துள்ளன.

பரஞானம்

அபரஞானத்தைப் போலன்றி பரஞானம் பூரணமானது@ மாறுதலுக்கு உட்படாதது@ குறைபாடற்றது. இதுவே பிரம்மஞானம் அல்லது பரம்பொருள் பற்றிய அறிவு ஆகும். அறிவுத்துறைகளுக்கெல்லாம் ஊற்றான - மூலமான அறிவு என்பதனால் ‘அடிநிலை அறிவு’ என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறளில் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பத்துக் குறள்களும் பரஞானத்துடன் தொடர்புடைய விடயங்களைப் பேசியுள்ளன. அந்தவகையில் இவ்வதிகாரத்தின் முதல் நான்கு குறட்பாக்களும் அபரஞானத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. (பார்க்க – மெய்யுணர்தல் 1 –4) இவ்வதிகாரத்தின் ஐந்தாவது குறள் மெய்யுணர்வின் இலக்கணம் பற்றிக் குறிப்பிடுகிறது.

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள் 355)

இக்குறளிற்குப் பரிமேலழகர் உரை பின்வருமாறு அமைகிறது.

“இந்தப் பிரபஞ்சத்தினை நிலம்முதல் உயிரீறாகிய தத்துவங்களின்  தொகுதியென உணர்ந்து அவற்றை நிலமுதலாகத் தத்தங் காரணங்களுள் ஒடுக்கிக்கொண்டு சென்றால் காரண காரியங்கள் இரண்டுமின்றி முடிவாய் (ஒரு பொருள்) நிற்பதனையுணர்த்தலாம். இதனால் மெய்யுணர்தலின் இலக்கணம் கூறப்பட்டது”

இதுவே பரஞானமாகிய அடிநிலையறிவாகும். பரஞானம் பற்றிய டாக்டர் எஸ் இராதாகிருஷ்ணனின் மேல்வரும் கூற்று இவ்விடத்தில் பொருத்தங்கருதித் தரப்படுகிறது.

“உயரிய ஞானம் அல்லது பரஞானம்  அறியாதனவெல்லாம் அறியச் செய்வது. இது அடிநிலை அறிவு என்று விளக்கம் பெறுகிறது. மண்ணால் செய்த ஒரு பொருளை அறிந்தால் களிமண்ணால் செய்யப்பெற்ற பொருட்கள் அனைத்தையும் நாம் அறிய முடியும். களிமண் பெறும் மாறுபட்ட உருவங்கள் பெயர்களினால் பிரித்தறியப் பெறுகின்றன. ஆனால் மூலப்பொருளால் (களிமண்) ஒன்றேயாகும். இதனைப் போன்றதே அடிநிலை அறிவு பற்றிய போதனையும், அனைத்தையும் அறிவிக்கும். இது அந்த முழுமுதலான பரமான்மாவை அறிவதாகும்”

இவ்வாறாக எல்லா அறிவுப்புலங்களின் விரிவுக்கும் அடிநிலைக்காரணமாகிய அந்த மூலப்பொருளை – பரம்பொருளை – மெய்ப்பொருளை மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வைத்துச் - செம்பொருள் எனத் திருவள்ளுவர் சிறப்பித்துப் பேசுகிறார்.

செம்பொருள் காண்பதறிவு (குறள் 358) “ The meta physical intellectuals are celebrated as ‘cemporul kantar, meypporul kantar’………. etc Thirukkural. They respectively denote the mystics who envisioned the perfect and absolute reality.”[ii]

  திருக்குறளுக்கும் அறிவாராய்ச்சியியலும்;:

ஆன்மாக்கள் தமக்குள்ள இயல்பான அறிவினால் பரஞானத்தை அறிவது நேரடியாகச் சாத்தியமற்றதாகும். ஏனெனில் அவை கொண்டுள்ள அறிவைப் பெறுவதற்கான கருவிகள் குறைபாடுடையவை@ வரையறைக்குட்பட்டவை.

எனவே, பரஞானத்தை நோக்கிய பயணிப்புக்கு ஞானகுருவின் வழிகாட்டல் அவசியமாகிறது. உலக ஞானத்தை உபதேசிக்கும் உபாத்தியாயனைப் போலன்றி பரஞானத்திற்கான பாதைகாட்டியாக விளங்கும் ஞானகுருவை பரப்பிரம்மமாகவே இந்துப் பனுவல்கள் கருதுவதற்கான காரணமும் இதுவேயாகும். 

குரு ஷாட்ஷாத் பரப்பிரம்மம் (குருகீதை)

இவ்வாறாக ஞானகுருவின் துணையுடன் மெய்ப்பொருளை உணர்வதற்கு

கேட்டல் சிந்தித்தல் தெளிதல்   நிட்டை கூடல் (சிரவணம்), (மனனம்), (நிருத்தியாசனம்) ஆகிய படிநிலைகளை இந்து தத்துவ சாஸ்திரங்கள் அறிமுகஞ் செய்துள்ளன.

மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் செம்பொருளை எய்துவதற்கான படிநிலைகளாக திருவள்ளுவரும் இவற்றையே வலியுறுத்தியுள்ளார்.

பரிமேலழகரும் இவற்றை மிகவும் வெளிப்படையாகத் தனது உரையில் விளக்கியுள்ளார்.

“செம்பொருள் காண்பதறிவு” என்று நிறைவெய்தும் குறளிற்கு முன்னுள்ள இரண்டு குறள்களிலும் முற்குறிப்பிட்ட சிரவணம் முதலிய படிநிலைகள் வள்ளுவரால் எடுத்தாளப்பட்டுள்ளமையும் நயக்கத்தக்கது. அக்குறள்கள் பின்வருமாறு :

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி (குறள் 356)

ஓர்த்துள்ளம் உள்ளதுணரின் ஒருதலையாய்

பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு (குறள் 357)

இவ்விரண்டுள் முதலாவது குறள் (கற்றீண்டு………) ஞானகுருவின் துணையுடன் நிகழும் கேட்டல், சிந்தித்தல் ஆகிய படிநிலைகளைக் குறிப்பால் உணர்த்தியுள்ளது.

இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவமுடைய தேசிகர்பாற் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர்…………11

எனக் குறித்த அக்குறளிற்கு பரிமேலழகர் வழங்கிய உரையும் இக்கருத்தை மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

இரண்டாவது குறளின் முதலாவது அடியில் திருவள்ளுவர் “தெளிதல்” என்ற பரஞானத்திற்கான மூன்றாவது படிநிலையை வெளிப்படுத்தியுள்ளார். தெளிதல் நிகழ்ந்த மாத்திரத்தே நிட்டைகூடல் நிகழ்ந்துவிடும். பரஞானம் உணரப்படுகின்றபோது பிறப்பு முதலிய லோக விகாரங்கள் அற்றுப்போய் விடுகின்றன. இதனையே குறித்த குறளின் இரண்டாவது அடி புலப்படுத்தி நிற்கிறது.

“      அங்ஙனம் கேட்ட உபதேசப் பொருளை ஒருவனுள்ளம் அளவைகளாலும் பொருந்து மாற்றானுந் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின்……..”

என இக்குறளிற்கான பரிமேலழகரின் உரையும் முதற்குறளின் பொருளமைதியுடனான தொடர்ச்சியாகவே அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. 

எனவே செம்பொருளாகிய பரஞானத்தினை உணர்வதற்கான படிநிலைகள் தொடர்பாகத் திருக்குறள் முன்வைத்துள்ள சிந்தனைகள் இந்து மெய்யியல் மரபின் வழிவந்தவையாகவே அமைந்து கிடக்கின்றமை நோக்கற்பாலது.

 குறிப்பு :“ஓர்த்துள்ளம் உள்ளத்துணரின்…….” என்ற முற்கூறிய குறளிற்கு தரப்பட்ட பரிமேலழகரின் உரைப்பகுதியில் ‘அளவைகள்’ பற்றி வலியுறுத்தப்பட்டிருப்பதனைக் கவனிக்கவும். பரஞானத்திற்கான படிநிலையிற்கூட அளவைகளின் பிரயோகத்தினைப் பரிமேலழகர் புறந்தள்ளவில்லை. அவ்வாறாயின் அபரஞானப் புலங்களில் ‘அளவைகள்’ பெறவல்ல முக்கியத்துவம் பற்றிக் கூறவேண்டியதில்லை. எனவே திருக்குறளின் பொருட்புலப்பாட்டு நுட்பத்தில் அளவையியலும் அதன்வழி அறிவாராய்ச்சியியலும் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதனை ஊகிக்க முடியும்.

திரிபுடி – நிலை

அறிவாராய்ச்சியியலில் ‘திரிபுடி’ பற்றிக் குறிப்பிடாத இந்து தத்துவப் பள்ளிகளே இல்லை எனலாம். எந்தவொரு  அறிவைப் பெறுகின்ற செயன்முறையிலும்,

அறிபவன் (ஞாதுரு)

அறியப்படுபொருள் (ஞேயம்)

அறிவு (ஞானம்)

ஆகிய மூன்று கூறுகள் சம்பந்தமுறுகின்றன.

அபரஞானநிலையில் ஒத்திசைவாகத் தொழிற்படுகின்ற இம்மூன்று கூறுகளும் பரஞானத்தையுணர்கின்றபோது ஸ்தம்பிக்கின்றன. ஒரு நிலைப்படுகின்றன. பரஞானத்தை உணர்கின்ற நிலை ஏற்படுகின்றபொழுது அறிபவன் என்றும் அறியப்படுபொருள் என்றும் அறிவு என்றும் வேறுபாடுகள் இருக்க முடியாது.

ஏனெனில், பரஞானம் பரிபூரணமானது. அதனைப் புறவயமாக உணர முடியாது. இந்நிலையில் முற்கூறிய மூன்று கூறுகளும் ஒருநிலைப்படுகின்றன. இதுவே திரிபுடி நிலையாகும்.

பிரக்ஞானம் பிரம்மம் (ஐதரேய உபநிடதம்)

உய்வல்லார் அறிவுள் அறிவாமே (தி. மந். 2822)

ஞேயத்தை நின்றார்க்கு ஞானாதி நின்றிடும்

ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும். (தி. மந். 1606)

மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் ‘திரிபுடிநிலை’ பற்றித் திருவள்ளுவரும் கருத்துரைத்தள்ளார். செம்பொருளாகிய பரஞானத்தினை உணர்ந்தநிலையில் பிறப்பு நீங்கி விடுகிறது – அதாவது அறிபவன் இல்லாது போகின்றான் என்ற கருத்தினையே,

பிறப்பென்னும் பேதமை நீங்கிச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பதறிவு (குறள் 358)

என்னும் குறள் வெளிப்படுத்தி நிற்கிறது. இக்குறளிற்கு முன்னள்ள இரண்டு குறட்பாக்களும் இதே கருத்தை அரண்செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

இவ்வாறாகத் திருக்குறளில் இழையோடியுள்ள அறிவாராய்ச்சியியலுடன் தொடர்புடைய கருத்தாடல்களின் மூலமாக இக்கட்டுரை திருக்குறளின் தத்துவத்தளம் குறித்த சில முக்கிய விவாதப்புள்ளிகளை அடையாளப்படுத்த  முற்படுகின்றது.

•      திருக்குறள் அபரஞானம் பரஞானம் ஆகிய இருவகை அறிவுத் தளங்களையும் ஏற்றுக்கொள்கிறது.

•      திருக்குறள் செம்பொருள் பற்றிய நாட்டத்தை வலியுறுத்தியுள்ளது.

•      பிரபஞ்ச இயற்கையின் தோற்றம் குறித்த ஆய்வில் சாங்கியம் முதலிய இந்துதரிசனங்களின் நிலைப்பாட்டுடன் ஒத்திசைவுற்றுள்ளது.

•      பிரமாணங்கள் பற்றிய நிலைப்பாட்டில் ஆப்தவாக்கியத்தை நிராகரிக்கவில்லை மாறாக ஆப்தவாக்கியத்தை மறுப்பவரை பேய்- அலகை எனக் கடுமையாக விமர்சிக்கிறது.

•      பரஞானத்தை நோக்கிய பயணிப்பில் உபநிடதங்களின் வழிவந்த சிரவணம் முதலிய படிநிலைகளை அடையாளப்படுத்தியுள்ளது.



Kandasamy, S.N., (2000),Indian Epistolomogy, As Expounded in the Tamil Classics,

   International Institute of Tamil Studies, Chennai, P. 04.

[ii]Kandasamy, S.N.,(2000), op. cit, P.4.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

[1].fpU\;zuh[h> Nrh.>(1995),

irtrpj;jhe;j mwpthuha;r;rpapay; XH mwpKfk;>  ,e;J rka fyhrhu mYty;fs; jpizf;fsk;> nfhOk;G>g. 02.

[1]Kandasamy, S.N., (2000),Indian Epistolomogy, As Expounded in the Tamil Classics,

   International Institute of Tamil Studies, Chennai, P. 04.

[1].jpUf;Fws; ghpNkyofH ciu>(1962)>godpag;gh gpujH];> nrd;id> g. 12.

[1] fpU\;zuh[h> Nrh.>(1995),K.F.Eh. g. 16.

[1] NkyJ,g.25.

[1] jpUf;Fws; ghpNkyofH ciu>(1962)>K.F.E}.>g.147.

[1] ,uhjhfpU\;zd;>v];.>(1982),fPio NkiyehLfspd; nka;g;nghUspapay; tuyhW>g.82.

[1]Kandasamy, S.N.,(2000), op. cit, P.4.

[1]jpUf;Fws; ghpNkyofH ciu>(1962)>K. F. E}.>g.148.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பரஞானம் என்றால் என்ன - ஐயம் தெளிதல் தத்துவ விசாரம்

பரஞானம், அபரஞானம் என ஞானம் இரு வகைப்படும். பிரபஞ்சம் அல்லது இயற்கையைப் பற்றிய ஞானத்திற்கு அபரஞானம் என்று பெயர். மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்திற்குப் பரஞானம் என்று பெயர். வேதங்கள், ஆகமங்கள், பௌதிக விஞ்ஞானம் ஆகிய அனைத்தும் அபரஞானத்தைச் சேரும்.

ஐம்பொறிகளின் மூலம் மனதைப் புறவுலகில் செலுத்திப் பெறுகிற ஞானம் அபரஞானம் ஆகும். ஐம்பொறிகளுக்கும் அப்பால் உள்ளதைத் தெரிவிக்கின்ற ஞானம் பரஞானம் ஆகும். அபரம் என்றால் கீழானது. பரம் என்றால் மேலானது.

பல ஜன்மங்களில் மனதைப் புறவுலகில் செலுத்திப் பெற்ற ஞானம் உள்ளத்தில் புதைந்து கிடக்கிறது. மனதை ஐம்பொறிகளின் மூலம் உலகில் செலுத்தி உலகில் உள்ள பொருள்களின்மீது ஒருமுகப்படுத்தும்போது அப்பொருளைப் பற்றிய இரகசியம் எல்லாம் நமக்கு விளங்குகிறது. பௌதிக விஞ்ஞான அறிவு இவ்வாறுதான் நமக்கு வந்துள்ளது. எதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றோமோ அதைப் பற்றிய அறிவு நமக்கு ஏற்படும். “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்பது இவ்வுண்மையை விளக்கும். உலக சம்பந்தமான யாவும் கீழானவையாகின்றன. அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பெறுகின்ற ஞானமும் கீழானது ஆகின்றது. எனவே அதை அபரஞானம் என்று பகர்கின்றோம்.

உலக சம்பந்தமான பதிவுகளையெல்லாம் உள்ளத்திலிருந்து அகற்ற வேண்டும். அப்பொழுதுதான் மனதிலுள்ள உலகவாசனை அகலும். “சித்தமலம் அறுவித்து” எனத் திருவாசகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சித்தமலம் என்பது சித்தத்திலுள்ள உலக வாசனை நீங்க நீங்க ஆத்ம சொரூபத்தைப் பற்றிய உணர்வு உண்டாகிறது. அந்த உணர்வுக்குத்தான் பரஞானம் என்று பெயர். உலக விஷயங்கள் அடங்கியுள்ள நூல்களைக் கற்கும்போது உலகவாசனை உள்ளத்திலிருந்து ஒருபோதும் போகாது.

எனவே உலகச் சிந்தனையை உணர்த்தும் நூல்களைக் கற்று உலகப் பொருள்களில் பற்றுதலை மிகுதிப்படுத்துகின்ற கல்விமான்களைவிட உலகப்பற்றை ஒழிக்கும் வைராக்கிய புருஷர்கள் உத்தமர்களாகிறார்கள். இதனைத் தாயுமானவர், “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்” என்று பகர்கின்றார். உலகப்பற்றை வளர்த்துக் கொண்டிருக்கும் கல்விமான்கள் ஒருக்காலும் பரஞானத்தைப் பெற முடியாது. உலகப் பற்றை ஒழிக்கும் ஒழுக்கம் நிறைந்த உத்தமர்களே பரஞானத்தைப் பெற முடியும். பரஞானம் மெய்ப்பொருளைப்பற்றிய உணர்வு ஆகும். இதனை வள்ளுவர்,

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”

எனக் கூறியுள்ளார். பரஞானம் ஏற்படுகின்ற அளவு அதைப் பற்றிய சிந்தனையும், துன்பமும் அடியோடு அகலுகின்றன. உலகஞானம் அல்லது அபரஞானம் உலக இன்ப துன்பத்தை வளர்த்துக்கொண்டே இருக்கும். மெய்ப்பொருளைப் பற்றிய பரஞானம் உண்டாகும்பொழுது உலக இன்பமும் துன்பமும் நமக்கு இல்லை.

“ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்” என்னும் கோட்பாடு இதனை விளக்குகிறது. பரஞானம் நம் பாரதத்துக்குரிய சொத்தாகும். நம் பாரதத்திலிருந்துதான் பரஞானம் மற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறது. சுவாமி விவேகானந்தர் பரஞானத்தைத்தான் மேல்நாட்டினருக்கு எடுத்து வழங்கினார். பரஞானம் ஒற்றுமையை வளர்க்கிறது. உலக உயிர்கள் யாவும் ஒன்றின் தோற்றமே என்பதைப் பரஞானத்தின் மூலம்தான் அறிய முடியும். உலகியல் ஞானம் வேற்றுமையை வளர்த்துக்கொண்டே போகும். பரஞானத்தை ஒதுக்கிவிட்டு அபரஞானம் என்னும் உலகியல் அறிவை வளர்ப்பவர் உள்ளத்தில் புதைந்துள்ள சிறுமைகள் யாவும் தலையெடுக்கின்றன. அதன்மூலம் காமமும், குரோதமும், பொறாமையும் வளர்ந்து மனித சமுதாயம் அல்லல்படுகிறது. பரஞானத்தை உண்டாக்கும் ஒழுக்கம் நிறைந்த உயர் கல்வியே நமக்கு வேண்டப்படுவது ஆகின்றது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

#பரஞானம், #அபரஞானம் என ஞானம் இரு வகைப்படும். பிரபஞ்சம் அல்லது இயற்கையைப் பற்றிய ஞானத்திற்கு அபரஞானம் என்று பெயர். மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்திற்குப் பரஞானம் என்று பெயர். வேதங்கள், ஆகமங்கள், பௌதிக விஞ்ஞானம் ஆகிய அனைத்தும் அபரஞானத்தைச் சேரும்.

ஐம்பொறிகளின் மூலம் மனதைப் புறவுலகில் செலுத்திப் பெறுகிற ஞானம் அபரஞானம் ஆகும். ஐம்பொறிகளுக்கும் அப்பால் உள்ளதைத் தெரிவிக்கின்ற ஞானம் பரஞானம் ஆகும். #அபரம் என்றால் #கீழானது. #பரம் என்றால் #மேலானது.

பல ஜன்மங்களில் மனதைப் புறவுலகில் செலுத்திப் பெற்ற ஞானம் உள்ளத்தில் புதைந்து கிடக்கிறது. மனதை ஐம்பொறிகளின் மூலம் உலகில் செலுத்தி உலகில் உள்ள பொருள்களின்மீது ஒருமுகப்படுத்தும்போது அப்பொருளைப் பற்றிய இரகசியம் எல்லாம் நமக்கு விளங்குகிறது. பௌதிக விஞ்ஞான அறிவு இவ்வாறுதான் நமக்கு வந்துள்ளது. எதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றோமோ அதைப் பற்றிய அறிவு நமக்கு ஏற்படும். “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்பது இவ்வுண்மையை விளக்கும். உலக சம்பந்தமான யாவும் கீழானவையாகின்றன. அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பெறுகின்ற ஞானமும் கீழானது ஆகின்றது. எனவே அதை அபரஞானம் என்று பகர்கின்றோம்.

உலக சம்பந்தமான பதிவுகளையெல்லாம் உள்ளத்திலிருந்து அகற்ற வேண்டும். அப்பொழுதுதான் மனதிலுள்ள உலகவாசனை அகலும். “சித்தமலம் அறுவித்து” எனத் திருவாசகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சித்தமலம் என்பது சித்தத்திலுள்ள உலக வாசனை நீங்க நீங்க ஆத்ம சொரூபத்தைப் பற்றிய உணர்வு உண்டாகிறது. அந்த உணர்வுக்குத்தான் பரஞானம் என்று பெயர். உலக விஷயங்கள் அடங்கியுள்ள நூல்களைக் கற்கும்போது உலகவாசனை உள்ளத்திலிருந்து ஒருபோதும் போகாது.

எனவே உலகச் சிந்தனையை உணர்த்தும் நூல்களைக் கற்று உலகப் பொருள்களில் பற்றுதலை மிகுதிப்படுத்துகின்ற கல்விமான்களைவிட உலகப்பற்றை ஒழிக்கும் வைராக்கிய புருஷர்கள் உத்தமர்களாகிறார்கள். இதனைத் தாயுமானவர், “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்” என்று பகர்கின்றார். உலகப்பற்றை வளர்த்துக் கொண்டிருக்கும் கல்விமான்கள் ஒருக்காலும் பரஞானத்தைப் பெற முடியாது. உலகப் பற்றை ஒழிக்கும் ஒழுக்கம் நிறைந்த உத்தமர்களே பரஞானத்தைப் பெற முடியும். பரஞானம் மெய்ப்பொருளைப்பற்றிய உணர்வு ஆகும். இதனை வள்ளுவர்,

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”

எனக் கூறியுள்ளார். பரஞானம் ஏற்படுகின்ற அளவு அதைப் பற்றிய சிந்தனையும், துன்பமும் அடியோடு அகலுகின்றன. உலகஞானம் அல்லது அபரஞானம் உலக இன்ப துன்பத்தை வளர்த்துக்கொண்டே இருக்கும். மெய்ப்பொருளைப் பற்றிய பரஞானம் உண்டாகும்பொழுது உலக இன்பமும் துன்பமும் நமக்கு இல்லை.

“ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்” என்னும் கோட்பாடு இதனை விளக்குகிறது. பரஞானம் நம் பாரதத்துக்குரிய சொத்தாகும். நம் பாரதத்திலிருந்துதான் பரஞானம் மற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறது. சுவாமி விவேகானந்தர் பரஞானத்தைத்தான் மேல்நாட்டினருக்கு எடுத்து வழங்கினார். பரஞானம் ஒற்றுமையை வளர்க்கிறது. உலக உயிர்கள் யாவும் ஒன்றின் தோற்றமே என்பதைப் பரஞானத்தின் மூலம்தான் அறிய முடியும். உலகியல் ஞானம் வேற்றுமையை வளர்த்துக்கொண்டே போகும். பரஞானத்தை ஒதுக்கிவிட்டு அபரஞானம் என்னும் உலகியல் அறிவை வளர்ப்பவர் உள்ளத்தில் புதைந்துள்ள சிறுமைகள் யாவும் தலையெடுக்கின்றன. அதன்மூலம் காமமும், குரோதமும், பொறாமையும் வளர்ந்து மனித சமுதாயம் அல்லல்படுகிறது. பரஞானத்தை உண்டாக்கும் ஒழுக்கம் நிறைந்த உயர் கல்வியே நமக்கு வேண்டப்படுவது ஆகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Munnor%2Bmozi%2B01.jpg Munnor%2Bmozi%2B02.jpgMunnor%2Bmozi%2B03.jpg

Munnor%2Bmozi%2B04.jpg Munnor%2Bmozi%2B05.jpg Munnor%2Bmozi%2B06.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Munnor%2Bmozi%2B07.jpg Munnor%2Bmozi%2B08.jpg Munnor%2Bmozi%2B09.jpg 

Munnor%2Bmozi%2B09.jpg Munnor%2Bmozi%2B10.jpg Munnor%2Bmozi%2B11.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Munnor%2Bmozi%2B12.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

1. முன்னோர்‌ மொழி போற்றுதல்‌

[எல்லாம்‌ பொருளும்‌ இதன்பால்‌உள இதன்பால்‌
'இல்லாத எப்பொருளூம்‌ இல்லையால்‌: (திருவள்ளூவமாலே, 28)

என்று வள்ளுவர்‌ தந்த திருமறையைப்‌ போற்றுகிறார்‌ மதுரைத்‌ தமிழ்‌ நாகனார்‌. ' பலவகை நூல்களாலும்‌ சொல்லப்பட்ட எல்லாப்‌ பொருளும்‌ இந்‌ நூலகத்து அடங்கியிருக்கின்றன. இதனிடத்தில்‌ இல்லாத யாதொரு பொருளும்‌ எக்‌ நூலகத்தும்‌ இல்லை '' என்பது இப்‌ போற்று, ரையின்‌ ௧( இதனால்‌ வள்ளுவரின்‌ பொதுமறையுள்‌ முன்னோர்‌. செய்த நூல்களில்‌ உள்ள சாரங்கள்‌ எல்லாம்‌ பொதிர்துள்ளன. என்பது தெளிவாம்‌. அறம்‌ பொருள்‌ இன்பம்‌ வீடு என்னும்‌ நாற்பொருள்‌ பயக்கும்‌ நூல்களையும்‌ நன்கு ஒதித்‌ தம்‌ உலகியல்‌ அறிவோடு ஒட்டித்‌ தெளிந்து எல்லார்க்கும்‌ ஏற்ற பொது ஈல்லறங்களை மட்டும்‌ சிறப்பாக எடுத்துக்‌ கூறுதலே இவர்தம்‌ நூலின்‌ தனிச்சிறப்பு.

குறிப்பிட்ட ஒரு சமயத்தாருக்கு மட்டும்‌ உரிய தனியறங்களை வள்ளுவர்‌ தம்‌ நூலுள்‌ எடுத்து ஒதவில்லை. எல்லார்க்கும்‌ உரிய பொதுக்‌ கடமைகளையே எங்கும்‌ வகுத்துரைக்கின்றார்‌.

சமயக்‌ கணக்கர்‌ மதிவழி கூடாது.
உலகியல்‌ கூறிப்‌ பொருள்‌ இது என்ற.
வள்ளுவன்‌. (கல்லாடம்‌, 14) என்று கல்லாடர்‌, இவர்தம்‌ உலகியல்‌ பொது நோக்கினைப்‌ பாராட்டுகின்றார்‌.),

உரைகாரர்‌ பரிமேலழகரோ வள்ளுவப்‌ பெருந்தகை லடநூற்‌ கடலையும்‌ நிலைகண்டு உணர்ந்து, அல்மொழி நூல்களில்‌ கண்ட சாரங்களையும்‌ தம்‌ நூலுள்‌ பயன்படுத்தியுள்ளார்‌. என்னும்‌ கருத்துகளை ஒரு சில இடங்களில்‌ சுட்டியுள்ளார்‌. வடநூற்‌ கருத்துகளுக்கும்‌ இவர்தம்‌ வாய்மொழிக்கும்‌ உள்ள ஒப்புமை கருதி இல்வகை முடிவிற்கு இவர்‌ வருகின்றார்‌. இதில்‌ ஒரளவு உண்டை யிருப்பது போல்‌ தோன்றினாலும்‌ முற்றும்‌ அவ்‌ வடநூல்‌ வழிகளையே மேற்கொண்டார்‌ என்று கூறுவதற்கு இல்லை. தமிழிலும்‌ எத்தனையோ துறைகளில்‌ அருமையான பல நூல்கள்‌ முன்னர்‌ வழங்கிப்‌ பின்னாளில்‌: போற்றுவாரின்றிக்‌ காலவெள்ளத்தில்‌ மாய்ந்து போன குறிப்புகள்‌ நமக்குக்‌ கிடைக்கின்றன. ஆதலால்‌, இவர்‌ வடநூலாரை நோக்கியே உரைத்தார்‌ என்று ஒருதலையாகத்‌ துணிய இடமில்லை.

வள்ளுவர்‌ தமது நூலுள்‌ சிற்சில இடங்களில்‌, ' நூல்‌ உரைக்கும்‌," (749), “பனுவல்‌ துணிவு ' (21), * நூலோர்‌” (822; 583) என்று பொதுப்படக்‌ கூறுகின்றாரேயின்றி இன்ன நூல்‌ என்று சுட்டிப்‌ பேச வில்லை. ' இங்ஙனமாக, முந்திய நூலோர்‌ கருத்து இது என்றும்‌, நூலோர்‌ இவ்வாறு சொல்லுவர்‌ என்றும்‌ கூறிய இடங்கள்‌ சில வற்றைத்‌ திருக்குறளில காணலாம்‌. என்றாலும்‌, இவர்‌ எவ்வகைப்‌ பொருளைச்‌ சுட்டி, எப்பகுதியில்‌ கூறுகின்றாரோ அதைக்‌ கொண்டு: அக்‌ கருத்துகள்‌ அவ்வத்துறை பற்றிய நூல்களைக்‌ குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌.

ஒழுக்கத்து த்தார்‌ பெருமை விழுப்பத்து:
வேண்டும்‌ பனுவல்‌ துணிவு (குறள்‌ 27).

என்னும்‌ இக்‌ குறளில்‌ நூல்கள்‌ என்னும்‌ பொருளில்‌ “பனுவல்‌! என்று கூறியுள்ளார்‌. உரைகாரர்‌ பரிமேலழகர்‌, “பனுவல்‌ எனப்‌ பொதுப்படக்‌ கூறியவதனான்‌, ஒன்றையொன்று ஒவ்வாத சமய எல்லா “வற்றிற்கும்‌ த்த துணி என்று தக்கது. : இது கொண்டு * நூல்‌” அல்லது * நூலோர்‌” என வள்ளுவர்‌ ஆளூமிடங்கள்‌ வெவ்வேறு கொள்கையுடையார்‌ கூறும்‌ நூல்களை எல்லாம்‌ குறிக்கும்‌ என்று கொள்வது பொருத்தமாகும்‌, மேலும்‌, இக்‌ குறட்பாப்‌ பாயிரம்‌ பகுதியைச்‌ சார்க்ததாதலின்‌ எல்லா நூல்க£ையும்‌ குறித்துப்‌ பொதுப்‌படக்‌ கூறினார்‌ என்றும்‌ கொள்ளலாம்‌, அன்றியும்‌, இஃது அறத்துப்‌ பாலின்‌ பகுதியாதலின்‌ அறநூல்களைக்‌ குறித்துக்‌ கூறிஞர்‌ என்றும்‌ கருதலாம்‌.

புறங்கூறிப்‌ பொய்த்துயிர்‌ வாழ்தலின்‌ சாதல்‌.
அறங்கூறும்‌ ஆக்கம்‌ தரும்‌. (குறள்‌ 189)

பகுத்துண்டு பல்லுயிர்‌ ஒம்புதல்‌ நூலோர்‌.
தொகுத்தவற்றுள்‌ எல்லாம்‌ தலை. (குறன்‌ 929).

இவ்விரண்டும்‌ அறநூல்களைச்‌ சட்டி உரைத்தனவே. “அறம்‌ கூறும்‌" என்பதற்கு ' அற நூல்கள்‌ சொல்லும்‌ ' என்றும்‌: “நூலோர்‌” என்பதற்கு ' அற நூலுடையார்‌ ' என்றும்‌ பரிமமலழகா உரை வரைதலும்‌ இக்‌ கருத்தினை அரண்செய்வதாக உள்ளது.

பிறன்பொருளாள்‌ பெட்டொழுரும்‌ பேதைமை ஞாலத்து!
அதம்பொருள்‌ கண்டார்கண்‌. இல்‌. (குறள்‌ 747)

எனவரும்‌ இக்‌ குறளில்‌ * அறம்‌ பொருள்‌ கண்டார்‌" என்பது * அற நூலையும்‌ பொருள்‌ நூலையும்‌ ஆராய்ந்தார்‌” என்று, கரஸ்பம்‌.* இன்பம்‌ ஒன்றையே நோக்கும்‌ இன்ப நூலுடையார்‌ இத்‌தீயொழுக்கத்தையும்‌ *பரகீயம்‌ ' என்று கூறுவாராகலின்‌, * அறம்‌ பொருள்‌ கண்டார்கண்‌ இல்‌” என்றார்‌?” எனப்‌ பரிமேலழகர்‌ இக்‌ குறளுக்கு எழுதியுள்ள விளக்கவுரையானும்‌ இது தெளிவுறும்‌. 1

ட்பாலுள்‌ நூல்‌ குறித்து எடுத்துக்‌ பெரும்பாலும்‌ அரசுமுறை நூல்களிலிருந்து ஆசிரியர்‌ கண்டு கூறியவை என்று கொள்ளலாம்‌. ,

ஒற்றும்‌ உரைசான்‌ற. நூலும்‌ இவைஇரண்டும்‌.
'தெற்றென்ச மன்னவன்‌. கண்‌. (குறள்‌ 582)

மதிநுட்பம்‌ நாலோடு உடையார்க்கு அதிதுட்பம்‌
யாஉள முண்டிழ்‌ பவை, (குறள்‌ 688)

நூலாருள்‌ நூல்வல்லன்‌ ஆகுதல்‌ வேலாருள்‌.
வென்றி வினையுரைப்பான்‌ பண்பு: (குறள்‌ 682),

உயர்வகலம்‌ திண்மை அருமைஇக்‌ நான்கின்‌. ்‌
அமைவரண்‌ என்றுரைக்கும்‌ நூல்‌. (குறள்‌ 748)

இவ்வாறு அறம்‌, பொருள்‌ முதலியவை உரைக்கும்‌ நூல்களின்‌ கொள்கைகளைக்‌ காட்டித்‌ தாம்‌ கூறும்‌ பொருள்கள்‌ முன்னோர்‌ மொழி பொருள்களே என உறுதிப்படுத்தி உரைப்பதும்‌ வள்ளுவர்‌: பொருஞணர்த்தும்‌ முறையில்‌ ஒரு நிறஞகும்‌.) பின்வரும்‌ பாடல்கள்‌ பல துறை நூல்களையும்‌ சுட்டிக்‌ கூறுவனவாக அமைந்துள்ளன ;

நுண்ணிய நூல்பல கற்பினும்‌ மற்தும்கள்‌
உண்மை அறிவே மயிரும்‌. (குறள்‌ 878)

அரங்கின்றி வட்டாடி யற்றே கிரம்பிய
நூலின்றிக்‌ கோட்டி கொளல்‌. (குறள்‌ 403)

விலங்கொடு மக்கள்‌ அனையர்‌ இலங்குதூல்‌
குற்றாரோடு ஏனை யல்‌. (குறள்‌ 410)

பொச்சாப்‌ , பார்க்குஇல்லை. புகழ்மை அதுவுலகத்து!
எப்பால்‌ நூலோர்க்கும்‌ துணிவு. (குறள்‌ 588).

வாளொடென்‌ வன்கண்ணார்‌ அல்லார்க்கு நாலொடென்‌
துண்ணவை அஞ்சு பவர்க்கு. (குறள்‌ 726)

பகையகத்துப்‌ பேடிகை ஒள்வாள்‌. அவையகத்து,
அஞ்ச. மவன்கற்ற தூல்‌. (குறள்‌ 727),

கவில்தொறும்‌ 'நரல்கயம்‌ போலும்‌ பயில்தொறும்‌
பண்புடை யாளர்‌ தொடர்பு, (குறள்‌ 788),

மிகினும்‌ குஜையினும்‌ கோய்செய்யும்‌ நாலோர்‌.
வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள்‌ 947)
மேலே சுட்டியது போன்ற நுண்ணிய பொருள்‌ உரைக்கும்‌. இலங்கு நூல்கள்‌ பலவற்றையும்‌ வள்ளுவர்‌ ஐயம்‌ திரிபு அற ஈன்கு உணர்ந்து தெனிர்தவர்‌. ஆகவே, விழுமிய நூலோர்‌ பலர்‌ தத்தம்‌ நூல்களில்‌ உரைத்த கருத்துகளுள்‌ சிலவற்றை அந்‌ நூலோர்‌.
கூற்றாகவே கொண்டு உரைக்கின்றார்‌. 'என்ப', 'என்பர்‌” என்று வள்ளுவர்‌ தம்‌ பாடல்களில்‌ கூறும்‌ பொருளுரைகள்‌ எல்லாம்‌ முன்னூலாரும்‌ அதிஞர்‌ பெருமக்களும்‌ உரைத்தனவாம்‌, இல்‌ வகையில்‌ வள்ளுவர்‌ உரைத்த குறட்பாக்கள்‌ பின்வருவன :

*மங்கலம்‌ என்ப மனைமாட்சி மற்றுஅதன்‌.
கன்கலம்‌ ஈன்மக்கட்‌ பேறு.. (குறள்‌ 60)

கும்பொருள்‌ என்பதம்‌ மக்கள்‌ அவர்பொருள்‌
தம்தம்‌ வினையான்‌. வரும்‌. (குறள்‌ 69)

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. (குறள்‌ 78)

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார்‌ எவ்குஸ்‌ சிறப்பு. (குறள்‌ 76)

அறிவினுள்‌ எல்லாம்‌ தலையென்ப தீய
செறுவார்க்கும்‌ செய்யா விடல்‌. (குறள்‌ 808)

வசையென்ப வையத்தார்க்‌ கெல்லாம்‌ இசையென்னும்‌.
எச்சம்‌ பெறாஅ விடின்‌, (குறள்‌ 288)

மன்னுயிர்‌ ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப.
தன்னுயிர்‌ அஞ்சும்‌ வினை. “(குறள்‌ 244)

உயிர்உடம்பின்‌ நீக்கியார்‌ என்ப செயிர்உடம்பின்‌
செல்லாத்தி வாழ்க்கை யவ (குறள்‌ 880)

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்‌எஞு ஞான்றும்‌
தவாஅப்‌ பிறப்பினும்‌ வித்து. . (குறள்‌ 281)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்‌.
கண்ணென்ப வாழும்‌ உயிர்க்கு, (குறள்‌ 992)

மடியுளான்‌. மாமுகடி. என்ப மடியிலாண்‌.
'தாளுளாள்‌. தாமரையி னாள்‌. (திறன்‌ 617)
கல்லா தவரின்‌ கடையென்ப கற்துறிநீதும்‌.
கல்லார்‌ அவையஞ்சு வார்‌. (குறள்‌ 729)
கேடறியாக்‌ கெட்ட விடத்தும்‌ வளங்குன்றா.
நாடென்ப நாட்டின்‌ தலை. (குறள்‌ 796)
பிணியின்மை செல்வம்‌ விளைவின்பம்‌ ஏமம்‌
அணியென்ப காட்டிற்கிவ்‌ வைந்து. ப. (குறள்‌ 789)

நாடென்ப காடா வளத்தன நாடல்ல.
காட வளந்தரு நாடு. (குறள்‌ 789)
பேராண்மை என்ப தறுகண்டன்‌ இுற்றக்கால்‌
ஊராண்மை மற்றதன்‌ எஃகு, , (குறள்‌ 778),
இகலென்ப எல்லா உயிர்க்கும்‌ பகலென்னும்‌.
பண்பின்மை பாரிக்கும்‌ மோய்‌- (குறள்‌ 850)
ஆயும்‌ அறிவினர்‌ அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர்‌ முயக்கு. 1. (குறள்‌ 918)
ககைகை இன்சொல்‌ இகழாமை கான்கும்‌
வலைஎண்ப வாய்மைக்‌ குடிக்கு. (குறள்‌ 959)
கடன்‌என்ப நல்லவை எல்லாம்‌ குடன்‌அறிந்து
சான்றாண்மை மேற்கொள்‌ பவர்க்கு. (குறள்‌ 981).
எண்பதத்தால்‌ எய்தல்‌ எனிதென்ப யார்மாட்டும்‌. ட்‌
பண்புடைமை என்னும்‌ வழக்கு. (குறள்‌: 991)
பொருள்கீங்கிப்‌ பொச்சாக்தார்‌ என்பர்‌ அருள்நீங்கி,
அல்லவை செய்தொழுகு வார்‌. (குறள்‌ 246)
ஊாறொரால்‌ உற்றபின்‌ முல்காமை இவ்விரண்டின்‌
ஆறென்பர்‌ ஆய்ந்தவர்‌ கோள்‌; (குறள்‌ 082)

இங்கு எடுத்துக்காட்டிய குறள்களில்‌ வரும்‌ 'என்ப', 'என்பர்‌' என்பன அறிவுடைய நல்லாரையும்‌ சிறந்த நூல்களை ஆக்கிய நூலாசிரியர்களையும்‌ குறிப்பனவாம்‌ என்பது அவ்வப்‌ பாடல்களைப்‌ படித்தவுடனேயே விளங்கும்‌. இவைதவிர ஏனைய பாடல்களில்‌ வரும்‌ கருத்துகளுள்‌ பலவும்‌ ஆசிரியர்‌ தம்‌ நுண்ணுணர்வால்‌ அனுபவ வாயிலாக அறிந்து கூறியதோடு பிற பேரறிஞர்களுமைய கருத்துகளையும்‌, அவர்தம்‌ நூலுரைகளையும்‌ தழுவியனவாகவும்‌ இருந்தல்‌ இயல்பே என்பதை ஊகித்து அறியலாம்‌. என்றாலும்‌, திட்டவட்டமாக ஆசிரியர்‌ பிறர்‌ கருத்துகள்‌ என எடுத்தாண்டவை இட்‌ பகுதியில்‌ காட்டிய குறட்பாக்களில்‌ வருவனவே. இங்ஙனமாக முன்ஜேர்‌ மொழி பொருள்களை வள்சூவர்‌ தம்‌ நூலுள்கொண்டு கூறுதலும்‌ பொருஞுணர்த்தும்‌ முறையில்‌ ஒரு சீரிய முறையே யாகும்‌.

குறிப்புகள்‌
1. அ... "இவர்‌ யொகுட்‌ பாகுபாட்டினே அதம்‌ பொருள்‌ இன்பம்‌ என வடதால்‌ வழக்குப்பற்றி ஓதுதலான்‌:?' (காமத்துப்பால்‌ முகவுரை],
ஆ... *௮றுமாவது மனு முதலிய நூல்களில்‌ விதித்தன செய்தலும்‌ விலக்கியன ஒழிதலுமாம்‌..! (உரைப்பாலிரம்‌)
இ. “தேவர்க்கும்‌ அசுரர்க்ஞும்‌. அமைச்சுப்‌. பூண்ட வியாழ. வெள்ளிகள்‌ துணிபு தொகுத்துப்பின்‌ ரீதி நூலுடையார்‌ கூறியவாறு.கூறுகின்‌ றமையின்‌ .* (குறன்‌ 862 உரை),
௩...“ ஈண்டுப்‌ பிரிவினை வடநால்‌ மதம்‌ புல்ஜிச்‌ செலவு, ஆல்றுமை, விதுப்பு, புலவி என கால்வகைத்தரக்கிக்‌ கூடறி, (கற. 1880 உரை),
௨... இவ்‌ வட நூற்‌ பொருண்மையை உட்கொண்டு இவர்‌ ஒதிய அறியாது பிறரெல்லாம்‌ இதனை உமீரெச்சம்‌ எனப்‌ பாடந்திர்‌, தமக்குத்‌ தோன்றியவாறே உரைத்தார்‌.” (குறள்‌ 501 ௨௯7),
2. என்ப" என்பதற்குப்‌ பரிமேலழகர்‌ தரும்‌ உரைக்‌ குறிப்பும்‌ இக்‌கருத்தினை ஈன்கு விளக்குகின்றது.
“என்ப *-* என்று சொல்லுவர்‌ * (020).
என்ப". என்று சொல்லுவர்‌ அறிந்தோர்‌ *(60, 69, 78, 75, 244, 930, 399, 617)
*என்ப*-* எண்று சொல்லுவர்‌ கல்லோர்‌ ? (208, 299)
"என்ப?-*என்று சொல்லுவர்‌ நூலோர்‌!(997, 796, 739, 799, 779, 857, 919, 959, 981, 991)

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

உலகின்மேலிட்டு உரைத்தல்‌

உலகு அல்லது உலகம்‌ என்பது இடத்தைக்‌ குறிக்கும்‌ பெயராய்ப்‌ பொதுவகையால்‌ மண்ணுலகம்‌, விண்ணுலகம்‌ முதலிய எல்லா உலைங்களையும்‌ உணர்த்தும்‌ ஒரு சொல்‌. என்றாலும்‌, சிறப்பு வகையால்‌ இச்சொல்நில்‌ உலகத்தையும்‌ அதன்கண்‌ லாழும்‌ உயிர்த்‌ தொகுதிகளையும்‌, குறிப்பாக ஈண்மக்களையும்‌, உலகியல்‌ நடைமுறை. களையும்‌ தெரிவிக்கப்‌ பயன்படும்‌. இவ்வகைப்‌ பொருள்களில்‌ நிலம்‌, ஞாலம்‌, எவயகம்‌ என்னும்‌ சொற்களும்‌ வருவது உண்டு. எனிலும்‌, உலமு எனக்‌ குறிப்பிட்டு, “உலக வழக்கம்‌ இது! என எடுத்துக்‌ 'ஜீட்டுதலே பெருவழக்கு.

(வள்ளுவரின்‌ திருக்குறள்‌ பாடல்களிலும்‌ கிலம்‌, ஞாலம்‌, ருவள்ளூ ஞாலம்‌, வையம்‌, உலகம்‌ என்பன அங்கங்கே எடுத்தாளப்பட்ட போதிலும்‌ உலகம்‌ * என்பதே அதிகமாகப்‌ பயன்படுத்தப்பட்டிருத்தல்‌ காணலாம்‌. ல
ஆதிபகவன்‌ மூதற்றே உலகு. (கூறன்‌ 1)
வானின்‌ நுலகம்‌ வழங்கி வருதலான்‌. குறள்‌ 17)
மாரிமாட்டு என்ளுற்றும்‌ கொல்லோ உலகு. (கூறன்‌ 511)

என்ருற்போல பல இடங்களில்‌ உலகு என்பது உலகத்து வாழும்‌ உமிர்த்தொகுதிகளைப்‌ பொதுவகையாகச்‌ சுட்டும்‌ முறையில்‌ வந்துள்ளது.
உலகம்‌ தழிஇயது ஒட்பம்‌ மலர்தலும்‌.
கூம்பலும்‌ இல்லது அறிவு. (குறள்‌ 428)
எவ்வ துறைவது உலகம்‌ உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு. (குறள்‌ 526,
மழித்தலும்‌ நீட்டலும்‌ வேண்டா உலகம்‌
பழித்தது ஒழித்தது விடின்‌. (குறள்‌ 280.
'கெடுவாக வையாது உலகம்‌ ஈடுவாக:
கன்றிக்கண்‌ தங்கியான்‌ தாழ்வு. (குறள்‌ 117)
எள்ளாத எண்ணிச்‌ செயல்வேண்டும்‌. தம்மொடு
கொள்ளாத கொள்ளாது. உலஞ. (குறள்‌ ௭0)
எனைத்திட்பம்‌ எய்தியக்‌ கண்ணும்‌ விரோத்திட்பம்‌.
வேண்டாரை வேண்டாது. உலகு, (குறள்‌ 670),
செடாஅ வழிவந்த கேண்மையார்‌ கேண்மை.

விடாஅர்‌ விழையும்‌ உலகு. (கூறன்‌ 809)
அறிவின்மை இன்மையுள்‌ இன்மை பிறிதின்மை:
இன்மையா வையாது உலகு. (குறள்‌ 841),

இப்‌ பாடல்களில்‌ உலகம்‌, உலகு என வள்ளுவர்‌ காட்டும்‌ சொற்‌ பொருள்‌ ஊன்றிக்‌ கவனிக்கத்தகும்‌. இங்கெல்லாம்‌ உலகில்‌ வாழும்‌ உயர்ந்தாராகிய சான்றோர்‌ கருத்து இதுவாகும்‌ என்றும்‌, அவர்கள்‌ வழிநின்று ஒழுகுதலே அறிவுடைமையாகும்‌ என்றும்‌ எடுத்துக்‌ காட்டப்பட்டுள்ள. உரைகாரர்களும்‌ ஆசிரியர்‌ கருத்தறிந்து,
*உலகம்‌ என்பது உயர்ந்தோரை* (117, 280, 425 உரை)
* உயர்க்தோராகிய நல்லினத்தார்‌” (470, காளிங்‌. உறை) என்று சுட்டிக்காட்டி விளக்கம்‌ தருகின்றனர்‌. உலகத்து உயர்ந்தோராகிய சான்றோரால்‌ மதிக்கப்படும்‌ நல்லறங்களே ஒருவன்‌ போற்றிச்‌ செய்யத்‌ தக்கது என்பதும்‌, அறவழிபிலிருந்து தவறி நடப்போரை ஆன்றோர்‌ பழிப்பர்‌ என்பதும்‌ எடுத்துச்‌ சொல்லி ஈல்வழி நடக்க அறிவுறுத்துகிறார்‌ ஆசிரியர்‌ திருவள்ளூவர்‌. ஒழுக்கத்தின்‌ மேன்‌ மையை வற்புறுத்தி உரைத்த வள்ளுவர்‌ முடிந்த முடிபாக,
உலகத்தோடு ஓட்ட ஐழுகல்‌ பலகற்றும்‌.
கல்லார்‌ அறிவிலா தார்‌. (குறன்‌ 140)
என்று “ ஒழுக்கமுடைமை £ அதிகாரத்தின்‌ இறுதிக்‌ குறளில்‌ எடுத்துக்‌ காட்டுகின்றார்‌. எவ்வளவு கற்றவரானாலும்‌ உலகத்தோடு பொருந்தி நடக்கத்‌ தெரியாதவர்‌ கல்லாதவரே என்பது கருத்தாம்‌.இக்‌ குறளின்‌ உரையில்‌ பரிமேலழகர்‌, “உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது. உயர்ந்தோர்‌ பலரும்‌. ஒழுகியவாற்ளுன்‌. ஒழுகுதல்‌, அறதூல்‌ சொல்லியவற்றுள்‌. இக்காலத்திற்கு ஏலாதனவொழிந்து சொல்லாதனவற்றுள்‌. ஏற்பன கொண்டு வருதலான்‌. அவையுமடங்க * உலகத்தோடு, ஒட்ட! என்றும்‌, கல்விக்குப்‌ பயன்‌ அறிவும்‌ ஒழுக்கமும்‌. ஆதலின்‌ அவ்வொழுருதலலைக்‌ கல்லார்‌ பலகற்றும்‌ அறிவிலாதார்‌ என்றும்‌ கூறினர்‌?! என்று தரும்‌ விளக்கப்‌ பகுதியும்‌ படித்து இன்புறத்தக்கது, உயாந்‌ தோர்‌ பலரும்‌ ஒழுகும்‌ ஒழுக்கமே “ உலகியல்‌ ' என்றும்‌ “உலகஈடை' என்றும்‌ போற்றும்‌ பெருண்க்குரியதாகும்‌.

ஒத்த தறிவான்‌ உயிர்வாழ்வான்‌. மற்றையான்‌.
செத்தாருள்‌ வைக்கப்‌ படும்‌. (குறள்‌ 214)
ஊருணி ரிர்நிறைம்‌ தற்றே உலசுவாம்‌
பேரறி வாளன்‌ திரு: (குறள்‌ 215)
கண்ணொட்டத்‌ துள்ளது. உலகியல்‌ அஃதிலார்‌
உண்மை நிலக்குப்‌ பொனை, (குநள்‌ 572)
பகைஈட்பாக்‌ கொண்டொழுகும்‌ பண்புடை யாளன்‌.
தகைமைக்கண்‌ தங்கிற்று உலகு. (குறள்‌ 874)
பண்புடையார்ப்‌ பட்டுண்டு உலகம்‌ அஃதின்றேல்‌.
மண்புக்கு மாய்வது மன்‌. (குறள்‌ 996)
செய்கை அறிந்தக்‌ கடைத்தும்‌ உலகத்து
இயற்கை அறுக்து செயல்‌. (குமன்‌ 697)
இக்‌ குறள்களில்‌ வள்ளுவர்‌ உலக௩டை பண்புடைய ஆன்றோர்‌ வழிப்பட்டது என்றும்‌ அவ்வுல கடையினை மேற்கொண்டு ஒழுகுதலே பேரறம்‌ என்‌ஜம்‌ எடுத்துக்காட்டுதல்‌ காணலாம்‌.
உள்ளத்தால்‌ பெரய்யாது ஒழுகின்‌ உலகத்தார்‌.
உள்ளத்துள்‌ எல்லாம்‌ உளன்‌. (குறள்‌ 294)
உலகத்தார்‌ உண்டென்பது இல்லென்பான்‌ வையத்து, ்‌
அலசையா வைக்கப்‌ படும்‌. (குறள்‌ 850)
இங்கெல்லாம்‌ வள்ளுவர்‌ * உலகத்தார்‌ ' என்று கூறுவது உயர்ந்‌ தோர்களையே குறிப்பதாகும்‌.
உயர்ந்தோர்‌ கினனி வழக்கொடு புணர்தலின்‌.
வழக்கு. வழிப்படுதல்‌ செய்யுட்குக்‌ கடனே. (தொல்‌. பொருள்‌, பொருளி, 27)
வழக்கு எனப்படுவது உயர்ந்தோர்‌ மேற்றே.
நிகழ்ச்சி அவர்கட்ரு ஆகலான. (தொல்‌. பொருள்‌. மரபு 94)
'இத்‌ தொல்காப்பியச்‌ சூத்திரங்கள்‌ உயர்ந்தோர்‌ கூற்றே கொள்ளத்‌ தக்கது என்று அறிவுறுத்துகின்றன. இப்‌ பழமையான கருத்தினை விளக்குவது போல,
உலகம்‌ என்பது உயர்ந்தோர்‌ மாட்டே. (திவா. மக்கட்பெயர்‌)

என்னும்‌ திவாகர சூத்திரம்‌ அமைந்துள்ளது. மேலும்‌, ' உலகம்‌” என்னும்‌ சொல்லிற்கு இத்திவாகர நிகண்டு தரும்‌ பொருளும்‌ நாம்‌ இங்குக்‌ கருதத்‌ தகம்‌. அறிவுடையோர்‌ பெயர்களுள்‌ ஒன்றாக * உலகம்‌ * என்பதனையும்‌ இந்நிகண்டு குறிப்பிடுகிறது.

சான்றோர்‌ மிக்கோர்‌. ஈல்லவர்‌. மேலவர்‌ ஆய்க்தோர்‌. உயர்ந்தோர்‌ ஆரியர்‌ உலகு என வாய்ந்த ஆன்னோர்‌. அறிவுடையோரே.. (திவா. மக்கட்‌ பெயர்‌).
இதில்‌ தரப்பட்டுள்ள ஒன்பது பெயர்களும்‌ அறிவுடை ,மார்தராம்‌ உலகத்து உயர்ந்த பண்பாளரைக்‌ குறிக்க வழங்கப்படுவன வாகும்‌. "ஆகவே, வள்ளுவர்‌ அறிவுடையார்‌, காட்சியவர்‌, காட்சியார்‌, சான்றோர்‌ முதலிய பெயர்களால்‌ எடுத்துக்‌ கூறுவனவும்‌ உலகின்‌: லிட்டுக்‌ கூறிய கருத்துகளாகவே கொள்ளத்தகும்‌. காட்சியவர்‌, காட்சியார்‌ என்றால்‌ அறிவுடையவர்‌ என்பது பொருளாம்‌.

'இடனில்‌ பருவத்தும்‌ ஒப்புரவிற்கு ஒல்கார்‌.
கடனறி காட்சி யவர்‌, (குறள்‌ 218)
செயிரின்‌ தலைப்பிரிர்த காட்சியார்‌ உண்ணார்‌
உயிரின்‌ தலைப்பிரிந்த ஊன்‌.. (குறள்‌ 899)
கொளப்பட்டோம்‌ என்றெண்ணிக்‌ கொள்ளாத செய்யார்‌
துளக்கற்று காட்சி யவர்‌, (குறள்‌ 699),
(இடுக்கட்‌ படினும்‌ இனிவந்த செய்யார்‌.

மடுக்கற்று காட்சி யவர்‌. (குறள்‌ 084)
இலமென்று வெஃகுதல்‌ செய்யார்‌ புலம்வென்ற.
புன்மையில்‌ காட்சி யவர்‌. ப்குதன்‌ 174)
பொருள்தீர்க்த பொச்சாக்துஞ்‌ சொல்லார்‌. மருள்தீர்ந்த.
மாசறு காட்சி யவர்‌. (குறன்‌ 199)
இருள்ரிங்கி இன்பம்‌ பயக்கும்‌ மருள்கீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. (குறள்‌, 868)

இப்‌ பாடல்களில்‌ அறிவுடையாரைக்‌ குறிப்பிடும்‌ காட்சியவர்‌ என்‌பதற்கு வரும்‌ அடைமொழித்‌ தொடர்களால்‌ அவர்‌ உலகிற்கு வழி காட்டியாய்‌ விளங்கும்‌ தகுதியையும்‌ பான்மையையும்‌ மேன்மை
யையும்‌ உணரலாகும்‌. ' கடனநி காட்சி யவர்‌ ' (218) என்பது, அவர்‌ உலகிற்கு ஆற்றி வரும்‌ தொண்டுக்‌ கடப்பாட்டைக்‌ குறிப்பதாகும்‌. * துளக்கற்ற காட்சியவர்‌ ' (999), ' நடுக்கற்ற காட்சியவர்‌"
(௫56) என்பன அவர்‌ அச்சம்‌ இன்றிக்‌ கருத்துரைக்கும்‌ பான்மைமையும்‌, “செயிரின்‌ தலைப்பிரிந்த காட்சியார்‌ * (288) என்பது எடுத்துரைக்கின்றன.
எல்லாவற்றிற்கும்‌ மேலாக வள்ளுவர்‌ ! சான்றோர்‌ * என்னும்‌ பெயரைச்‌ சுட்டி உரைத்த பொருள்களும்‌ உலகின்மேலிட்டுக்‌. கூறிய பொருள்களாகவே கொள்ளத்தக்கன, ஆன்ரோர்க்குக்‌ கூறிய அறநெறி உலகினர்‌ அளைவர்க்கும்‌ உரியனவாம்‌ அன்றோ ?
கெடும்‌ பெருக்கமும்‌ இல்லல்ல நெஞ்சத்துக்‌.
கோடாமை சான்றோர்க்‌. கணி, (குறள்‌ 176).
சமன்செய்து சீர்தூரக்கும்‌ கோல்பேரல்‌ அமைக்தொருபால்‌
கோடாமை சான்றோர்க்‌ கணி (குறள்‌ 178).
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு.
அறஜென்றோ ஆன்ற ஒழுக்கு. (குறள்‌ 149).
ஈயனில சொல்லினுஞ்‌ சொல்லுக சான்ஜோர்‌.
பயனில சொல்லாமை ஈன்று. (குறள்‌ 797)
எல்லா வினக்கும்‌ விளாக்கல்ல சான்ஜோர்க்குப்‌
பொய்யா விளக்கே விளக்கு. “(குறள்‌ 299).
நன்றாகும்‌ ஆக்கம்‌ பெரிதெனினும்‌ சாண்ோர்க்குக்‌.
கொன்றுகும்‌ ஆக்கம்‌ கடை, (குறள்‌ 829).
மனாலம்‌ நன்குடைய ராயினும்‌ சான்றோர்க்கு.
இனாலம்‌ ஏமர்ப்‌ புடைத்து. *.. (குறள்‌ 48).
பழிமலைந்‌ தெய்திய ஆக்கத்தின்‌ சான்றோர்‌.
குழிகல்‌ குரவே தலை. (குறள்‌ 627).
கட்பிற்‌ குறுப்புக்‌ கெழுதகைமை மற்றதற்கு.
உப்பரதல்‌ சான்றோர்‌ கடன்‌.. (குறள்‌ 809).
குணாுலம்‌. சான்றோர்‌. ஈலனே பிறலம்‌.
எக்நலத்து உள்ளதூஉம்‌, அன்று. (குறள்‌ 999)
ஆற்றுவார்‌ ஆற்றல்‌ பணிதல்‌ அதுசான்றோர்‌.
மாற்ளுரை மாற்றும்‌ படை. (குறள்‌ 985)
ணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்‌.
1ிணியன்றோ பீடு நடை. (குறள்‌ 1074)
சொல்லப்‌ பயன்படுவர்‌ சான்றோர்‌ கரும்புபோல்‌.
கொல்லப்‌ பயன்படும்‌ கீழ்‌... (குறள்‌ 1078). இக்‌ குறள்களில்‌ சான்றோரை முன்னிட்டுக்‌ கூறியனவெல்லாம்‌.

உலகம்‌ எனப்படும்‌ உயர்ந்தாரை முன்னிட்டுக்‌ கூறியனவாம்‌. இத்தகு சான்றோர்‌ போற்றும்‌ பண்புகளைக்‌ கடைப்பிடித்து அவர்‌ களால்‌ ப்ழிக்கப்பட்டன விலக்கப்பட்ட எல்லாவற்றையும்‌ தவிர்த்தல்‌ வேண்டும்‌.
ஈன்றாள்‌. பசிகாண்பா னாயினும்‌ செய்யற்க.
சான்றோர்‌ பழிக்கும்‌ வினை (குறள்‌ 856)
என்னும்‌. குறட்பா. குற்றம்‌ கடிந்து குணம்‌ பயப்பனவற்றைச்‌ செய்தலே முறைமையாம்‌ என அறிவுறுத்துகின்றது.
இவ்வாருக உலகத்து உயர்ந்த சான்றோரை முன்னிட்டு அறப்‌ பொருளைக்‌ காட்டும்‌ மரபும்‌ குறனகத்துப்‌ பலவாக உள்ளமை தெரிய வரும்‌. சான்றோர்‌ அருளிய கொள்கைகளையும்‌ நூல்‌ துணிபுகளையும்‌. எடுத்துக்‌ கூறும்‌ பகுதிகளும்‌ இதனோடு சார்த்தி உணரத்‌:தகுவனவாம்‌.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard