Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வரலாற்று இயேசு Vs கிருஸ்துவ இயேசு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
வரலாற்று இயேசு Vs கிருஸ்துவ இயேசு
Permalink  
 


 
பைபிளை இறைவேதமாக ஏற்றுக்கொண்டுள்ள கிருஸ்தவர்கள் அனைவரும் “இயேசு உலகில் அவதரித்தார்” என்றும் “அவர் பல‌ அற்புதங்களை நிகழ்த்தினார்” என்றும் “மனிதர்களின் பாவமீட்சிக்காய்” சிலுவையில் அறையப்பட்டு மரித்து, பின்பு உயிர்த்தெழுந்தார் என்றும் நம்புகின்றனர்.
 
 
எனினும் பைபிள் விபரிக்கும் இயேசு, கிருஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ‘இயேசு’ என்ற பாத்திரம் உண்மையிலேயே வரலாற்றில் வாழ்ந்த ஒருவரா? வாழ்ந்தவராயின் வரலாறு இயேசு பற்றி என்ன குறிப்பிடுகிறது என்பதை மத, இன, மொழி, தேச வேறுபாடுகள் இன்றி பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் விமர்சகர்களும் ஆய்வுகள் செய்துள்ளனர்;  செய்துவருகின்றனர்.
 
 
இவ்வாறு “கிருஸ்துவ இயேசுவு“க்கும் “வரலாற்று இயேசு” வுக்குமிடையேயான ஒப்பீட்டு ரீதியான விபரங்களை தமிழில் தரும் நாம் இது பற்றிய தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், ஆதாரங்கள் அடிப்படையிலான மாற்றுக் கருத்துகளையும் பெரிதும் வரவேற்கின்றோம்.
 
 
“வரலாற்று இயேசு” தொடர்பில் அண்மைக்காலம் வரை பல்வேறுபட்ட ஆய்வாளர்களும் பல ஆய்வு நூற்களை வெளியிட்டுள்ளனர். அவைகளுள் குறிப்பிடத்தக்கதாக:
 
 
1.வரலாற்று இயேசு-  பேராசிரியர் கிரீபிலியூப்
 
2.நம்பிக்கையிலிருந்து பகுத்தறிவை நோக்கி- ப்ரூஸ்பர் அல்பிரீக்
 
3.இயேசு கிருஸ்து ஒரு மூடப்புராணம்- முன்னால் கிருஸ்துவ மதபோதகர் கைபூ
 
4.வரலாற்று இயேசுவைத் தேடி-  அல்பிரட்ஸ் பைஸ்டர்
 
5.கடவுளாய்ப் போன மனிதன்-  ஜீரார் மீஸாதியஃ
 
ஆகிய நூற்களைச் சுட்டிக்காட்டலாம்.
 
 
இவ்வாறு பைபிள் கூறும் “இயேசு கிருஸ்துவை” வரலாற்று ரீதியாக ஆய்வுக்குட்படுத்திய அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் கிருஸ்துவர்களது “நம்பிக்கை இயேசு” தொடர்பில் மூன்று விதமான பிரிவினராகக் காணப்படுகின்றனர்.
 
 
1. கிருஸ்துவம் கூறும் “இயேசு” என்பவர் வரலாற்றில் ஒரு போதும் வாழவில்லை என ஒரேயடியாக மறுத்துரைக்கும் சாரார்.
 
2. கிருஸ்துவம் கூறும் ”இயேசு” என்பவர் வரலாற்றில் வாழ்ந்த, அக்காலத்தில் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட புராணப் பாத்திரங்கள் பலதை வைத்து திருச்சபையால் சோடிக்கப்பட்ட ஒரு “கலவைப் பாத்திரம்” என்று கூறும் சாரார்.
 
3. கிருஸ்துவம் கூறும் “இயேசு” என்பவர் ஏனைய ”தீர்க்கதரிசிகள்” போன்று சாதாரணமாக அற்புதங்கள் நிகழ்த்தி, உபதேசங்கள் செய்து வாழ்ந்த ஒருவரே அன்றி சுவிஷேசங்கள் சித்தரிப்பது போன்ற ஒரு பாத்திரம் அல்ல என்று கூறும் சாரார்.
 
 
இவ்வாறு பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த, சிந்தனைப் பிண்ணனிகளைக் கொண்ட அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் பைபிள் கூறும் இயேசுவை, கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு”வை நிராகரிக்கும் வகையில் முடிவுகளைக் கூறுவதற்கான முக்கிய காரணம் என்ன‌ என்பதையே இக்கட்டுரையில் நாம் அலச உள்ளோம்.
 
 
எனவே, பைபிள் கூறும் “கிருஸ்தவ இயேசு” பற்றிய விபரங்களை முதலில் பார்த்து விட்டு பின்பு “வரலாற்று இயேசு” பற்றி நோக்குவோம்.
 
 
கிருஸ்துவ இயேசு
 
 
கிருஸ்துவர்கள் இறைவேதமாக நம்பும் பைபிள், அதன் புதியஏற்பாடு “இயேசு” பற்றி பின்வரும் விபரங்களைத் தருகின்றது.
 
 
1.இயேசு பற்றிய, இயேசுவுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நூற்றுக்கணக்கான “முன்னறிவுப்புகள்” பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. இயேசு, யூத சமுதாயத்துக்கு மத்தியில் யூதமத போதனைகளை க்கடைப்பிடிப்பவராக, சடங்கு சம்பிரதாயங்களை எதிர்ப்பவராக வாழ்ந்தார்.
 
 
எனவே, இயேசு பற்றிய விபரங்களை அக்காலயூதர்கள் நன்கறிந்திருந்தனர்.
 
 
2.இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய விஷேட நட்சத்திரத்தை அடையளங்கண்டு பாலஸ்தீனத்திற்கு கிழக்கே பாரசீகத்திலிருந்து (இன்றையஈரான்) ஞானிகள் வருகை தந்து இயேசுவை பணிந்து சென்றனர். (ம‌த்தேயு 2: 1-12)
 
 
எனவே, இயேசு பற்றிய விபரங்களை பாரசீகர்கள் அறிந்திருந்தனர்.
 
 
3. பாரசீக ஞானிகளிடத்தில் இருந்து அக்கால ஆட்சியாளன் ‘ஏரோது ராஜாவும் எருசலேம் நகரமக்கள் அனைவரும்’ இயேசு பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர்.(மத்தேயு 2:3)
 
 
எனவே இயேசு பற்றிய விபரங்களை ஆட்சியாளனும் எருசலேம் மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.
 
 
4. ஏரோது ராஜா “யூதர்களின் அரசன்” பிறந்து விட்டான் என்ற அச்சத்தின் காரணமாக “பெத்தலேகம்” மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் உள்ள குழந்தைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டான். ( மத்தேயு 2:16)
 
 
இக்கொலை நடவடிக்கையில் 14,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக கிருஸ்துவ மூலங்கள் உறுதி செய்ய வேறு சிலரோ இத்தொகை 144,000ஆக இருக்கலாம் எனக் கணிக்கின்றனர்.
 
 
எனவே, இந்த நகரங்களில் வாழ்ந்தவர்கள், அக்குழந்தைகளின் குடும்பத்தார்கள், உறவினர்கள் என குறைந்தது கால் மில்லியன்-இரண்டரை இலட்சம் மக்களாவது இச்சம்பவத்தினால் இயேசு பற்றிய விபரங்களைஅறிந்திருந்தனர்.
 
 
5.இக்கொலை நடவடிக்கைக்குப் பயந்து இயேசுவின் குடும்பம் எகிப்துக்கு தப்பிச் சென்று சிலகாலம் அங்கு வாழ்ந்தனர். (மத்தேயு2: 14-15)
 
எனவே, எகிப்தியர்களும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
6.பின்பு, இயேசு பயணங்கள் பல மேற்கொண்டு இன்றைய பாலஸ்தீன், லெபனான், சிரியா ஆகிய தேசங்களுக்குச் சென்று அங்கு மக்கள் கூடும் இடங்களில் போதனைகள் செய்தார். இத்தகைய உபதேசங்களின் இறுதியில் ‘சுவிஷேச ஆசிரியர்கள்’ பெரும்பாலும் “அதிகமானவர்கள் இயேசுவை விசுவாசித்தனர்” என்று எழுதியுள்ளனர். (மத்தேயு4: 14 -15 மற்றும் 4: 23- 24)
 
 
எனவே, பலஸ்தீன், லெபனான், சிரியா ஆகிய தேசமக்களும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
7.இயேசு மக்களுக்கு பகிரங்க சொற்பொழிவுகள் ஆற்றியதுடன் யூதமதத்தலைவர்களுடன் சர்ச்சைப்படுபவராகவும், தேவாலயங்களுக்குள் நுழைந்து வியாபாரிகளின் பலகைகளை கவிழ்த்துப் போடுபவராகவும் இருந்தார்.(யோவான் 2:13-25)
 
எனவே, மத்தலைவர்கள் மற்றும் வியாபாரிகள் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
8.பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் இயேசு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவைகளின் எண்ணிக்கை சுமார் நாற்பது அளவில் சுவிஷேசங்களில் கூறப்பட்டுள்ளன.
 
 
இது தொடர்பில் கலாநிதி வில்லியம் ஹாம்பல் என்பவர் தனது “வரலாற்று மற்றும் விஞ்ஞான ஒளியில் அல்குர்ஆனும் பைபிளும்” என்ற நூலில் 302ம் பக்கம் முதல் 319ம் பக்கம் வரை பைபிள் கூறும் இயேசுவின் அற்புதங்களையும் அதை அறிந்தவர்களது எண்ணிக்கையையும் பட்டியலிட்டுள்ளார்.
 
 
கீழ்வரும் அட்டவனையினூடாக அதை நாமும் நோக்குவோம்.
 
 
தொடர் இலக்கம்
அற்புதம்
ஆதாரம்அறிந்தவர்களது எண்ணிக்கை
1
முப்பெத்தெட்டு வருட நோயாளியை இயேசு குணப்படுத்தல்யோவான் 5: 5-9
200
2
பத்து குஷ்டரோகிகளைக் குணப்படுத்தல்லூக்கா 1 7:12-14
1000
3
நாலாயிரம் பேருக்கு உணவளித்தல்மாற்கு 8: 1-‍ 9
4000
4
அதிக நோயாளிகளைக் குணப்படுத்தல்மாற்கு 1: 32-34
4000
5
இரண்டு மீன்கள், கொஞ்ச ரொட்டிகளை வைத்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல்யோவான்     7: 1-‍14
5000
6
கலீலியோயூதேயாஎருசலேம்இதுமேயாயோர்தானுக்கு அக்கரை திருசீதோன் பட்டணங்களின் அநேக நோயாளிகளக் குணப்படுத்தல்மாற்கு 3: 8-11
20,000
7
கலீலியோ கடலுக்கு கிழக்கு பகுதியில் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தல்.மத்தேயு      15: 29-31
20,000
8
இயேசு தடவியவர்கள் அனைவரும் குணமடைதல்மாற்கு 6: 53-56
40,000
9
இயேசுவின் பேரால் அற்புதங்கள் நிகழ்த்தும் 72 பேரை இயேசு இரண்டிரண்டு பேராக நகரங்களுக்கு அனுப்பி வைத்தல்லூக்கா 10: 1-17
72,000
10
தீய ஆவியினால் பிடிக்கப்பட்டவனை இயேசு குணப்படுத்தல்மாற்கு 5: 2-15
அப்பகுதி மக்கள் அனைவரும்
 
 
இவ்வட்டவணையின்படி ‘கலாநிதி வில்லியம் ஹாம்பல்’ அவர்கள் “இயேசுவின் காலத்தில் 20 இலட்சம் மக்கள் வசித்தார்கள் என்றிருந்தால் அதில் குறைந்தது 5% வீதமான மக்கள் அதாவது, ஒரு இலட்சம் பேர் இயேசுவின் அற்புதங்களைக் கண்டோ அல்லது கேள்விப்பட்டோ இருப்பார்கள்” என்ற முடிவுக்கு வருகிறார்.
 
 
சுருங்கக்கூறின், மருத்துவ வசதிகள் அதிகமில்லாத அன்றைய காலகட்டத்தில் சுவிஷேசங்களில் “ஒரு நடமாடும் வைத்தியசாலையாக” சித்தரிக்கப்படும் இயேசு பற்றிய விபரங்களை அதிகம் பேர் அறிந்திருந்தார்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியுமாயிருக்கிறது.
 
 
இதனோடு சேர்த்து “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகின்றேன்” (யோவான்21:25) என்ற இறுதி சுவிஷேசத்தின் இறுதி வசனத்தையும் நாம் கவனத்திற்கொண்டால் பைபிள் கூறும் கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு” அக்காலமக்கள் அனைவரும் அறிந்துவைத்திருந்த ஒரு “ஜனரஞ்சகநாயகனாக” இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
 
 
9.இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லவேண்டும் என்ற தீர்மானம் ரோமசக்கரவர்த்தியின் பிராந்திய ஆட்சியாளரான பிலாத்து என்பவரால் நிறைவேற்றப்பட்டது. (யோவான்18:29 – 19:16)
 
எனவே அரசஅதிகார அலுவலகர்கள் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
10.பின்பு, பெருந்திரளான மக்கள் மத்தியில் பொது இடத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.
 
எனவே, அப்பிராந்திய மக்கள் அனைவரும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
11.இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் மரணித்தவர்கள் கல்லறைகளில் இருந்து உயிர்த்தெழுந்து நகரங்களில் நுழைந்து அதிக மக்களுடன் பேசினர்.    (மத்தேயு 27:52-53)
 
எனவே, இயேசுவின் மரணத்தை அந்நகரங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.
 
 
12.அவ்வேளையில், பூமி அதிர்ச்சி ஏற்பட்டு மலைகளும் பிளந்ததுடன் பூமியெங்கும் சூரிய கிரகணம் ஏற்பட்டது. (லூக்கா 23:44)
 
ஆக, பைபிளின் பிரகாரம் கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு” என்பவர் முதல் நூற்றாண்டில் பாமரர்கள், மதத்தலைவர்கள், மருத்துவர்கள், அரசஅதிகாரிகள், பௌதீகவியலாளர்கள் மற்றும் வியாபாரிகள் என சகல மட்டத்து மக்களாலும் பிராந்திய வேறுபாடு இன்றி அறியப்பட்ட “ஜனரஞ்சக நாயகனாக” இருந்தார் என்பதை நாம் நோக்கினோம்.
 
 
இனி “வரலாற்று இயேசு” வின் பக்கம் எமது பார்வையை திருப்புவோம்.
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வரலாற்று இயேசு
 
 
பைபிளை இறைவேதமாக ஏற்றுள்ள கிருஸ்தவர்களது நம்பிக்கையின்படி ‘இயேசு’ என்ற பாத்திரம் அக்கால மக்கள் அனைவரும் அறிந்திருந்த ஒரு “ஜனரஞ்சகமான பாத்திரம்” என்பதை முதல் பகுதியில் நோக்கினோம்.
 
 
பைபிள் கூறும் பிரகாரம் சகல தரப்பு மக்களாலும் நன்கு அறியப்பட்டிருந்த இயேசு பற்றிய விபரங்கள், செய்திகள் அக்காலமக்களின், அப்பிரதேசவாசிகளின் இலக்கியங்கள், புத்தகங்கள், ஆவணங்களில் குறைந்தது சில நூறு தடவைகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும். ஏன் சில ஆயிரம் தடவைகள் என நாம் கூறினாலுங்கூட அது மிகையாகது.
 
 
இவ்வாறு சகல விதத்திலும் சகல தரப்பு மக்களிடமும் பிரபல்யமான “கிருஸ்துவ இயேசு” பற்றி அக்கால அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் என்ன வாக்கு மூலம் தருகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
 
 
1.சிறிய பிப்லினூஸ் (கி.பி 61- 124)
 
இரண்டாம் நூற்றாண்டில் கிருஸ்துவர்கள் இயேசு பற்றிப் பாடிய பக்திப்பாடல் ஒன்றின் ஒரு வரியை மாத்திரம் இவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பைபிள் கூறும் இயேசு பற்றி எந்தத் தகவலையும் இவர் தரவில்லை.
 
 
2.தாஸிதூஸ் (கி.பி 55 – 120)
 
“நீறோன் மன்னன் காலத்தில் ரோம் நகரில் ஏற்பட்ட தீவிபத்து பற்றியும் ‘கிருஸ்து’என்ற பேரில் இருந்து தோற்றம் பெற்ற கிருஸ்துவர்கள் பற்றியும்……” என்று போகிற போக்கில்,  உறுதியில்லாத வதந்திகள் என்ற வகையில் சில வரிகளை எழுதியுள்ளார்.
 
அது தவிர இவர் இயேசு பற்றி எந்தத் தகவலையும் தரவில்லை.
 
 
3. பெரிய பிலீனூஸ் / காயூஸ்பிலீன் (கி.பி 23-79)
 
மிகப் பெரும் இலத்தீன் வரலாற்றாசிரியரும் பௌதீகவியலாளருமான ‘பிலீனூஸ்’ அவர்கள் கி.பி 65-70 காலப் பகுதியில் பலஸ்தீனத்துக்கு விஜயம் செய்து ஐந்து வருடகாலம் அங்கே தங்கியிருந்து பல்வேறு விடயங்களையும் மிக நுணுக்கமாக எழுதியுள்ளார்.
 
 
1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட “சாக்கடல் சாசனங்களுக்குச் சொந்தக்காரர்களான கும்ரான் குகைவாசிகள்” தொடர்பில் அன்று இவர் எழுதிய குறிப்புகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் பொருந்திப் போவது இவரது நுணுக்கமான வரலாற்றுப் பதிவுக்கு சான்று பகர்கிறது.
 
 
குறித்த “கும்ரான்” பகுதியில் இருந்து சில மைல்கள் தூரத்தில்தான் “கிருஸ்துவ இயேசு” வாழ்ந்த ,அற்புதங்கள் நிகழ்த்திய பிரதேசங்கள் காணப்படுகின்றன.
 
அத்துடன் பௌதீகவியலாளரான இவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி, மலைகள் பிளவுபட்ட சம்பவம், சூரிய கிரகணம் என்பன இவரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.
 
 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியரும், பௌதீகவியலாளருமான “பிலினூஸ்” அவர்கள் இயேசு பற்றி என்ன எழுதியுள்ளார்?
 
ஒன்றுமில்லை”
 
 
4.பீலூன் அலெக்ஸந்தரிய்யா (கி.மு 10-கி.பி 50)
 
அலெக்ஸந்தரிய்யாவில் வாழ்ந்த பிரபல்யமான யூத தத்துவவியலாளரான இவர் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள் தொடர்பில் பலவிடயங்களை எழுதியுள்ளார்.
 
 
இயேசு காலத்து ஆட்சியாளன் “பிலாத்து” பற்றியும் குறிப்பிட்டுள்ள இவர் “யோவான் தனது சுவிஷேசத்தை எழுத முன்னரே “வார்த்தை” (லோகோஸ்) பற்றி பல இடங்களில் விரிவாக விளக்கியுள்ளார்.
 
 
பழைய ஏற்பாட்டின் ஆரம்ப‌நூல்களுக்கு விரிவுரை எழுதியுள்ள இவர் “கும்ரான் குகைவாசிகள்” பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியர் இயேசு பற்றி என்ன குறிப்பிட்டுள்ளார்?.
 
ஒன்றுமில்லை”
 
 
5ஸின்கா / லூஸியூஸ் அனாயூஸ் (கி.மு 4- கி.பி 65)
 
ரோம இலக்கியவாதியும், தத்துவவியலாளருமான இவ்வறிஞர் பன்னிரண்டு தத்துவக் கட்டுரைகளையும், ஒரு வானியல் கட்டுரையையும் எழுதியுள்ளார். அத்துடன் எரிமலைகள், சூறாவளிகள், பூமியதிர்ச்சிகள் பற்றி ஆய்வுக்குட்படுத்தி பௌதீகவியல் தொடர்பிலும் ஒரு நூலை எழுதியுள்ள இவர் ரோம சக்கரவர்த்தி ”நீறோன்” என்பவரது ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
 
இவருக்கும் ஆரம்பகால கிருஸ்துவ போதகரான “பவுல்” என்பவருக்குமிடையே கடிதத் தொடர்புகள் காணப்பட்டதாக ஒரு வரலாற்று வதந்தி நிலவினாலும் அக்கடிதங்கள் நாலாம் நூற்றாண்டில் போலியாக உருவாக்கப்பட்டவை என்பதை கிருஸ்துவ சமூகமே உறுதி செய்துள்ளது.
 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த “ஸின்கா” அவர்கள் இயேசு பற்றியோ அல்லது வானவியல் தொடர்பில் எழுதியவர் என்ற ரீதியில் “இயேசு பிறந்த போது தோன்றிய நட்சத்திரம்” பற்றியோ அல்லது பௌதீகவியலாளர் என்ற வகையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, மலைகளின் பிளவு, சூரிய கிரகணம் பற்றியோ என்ன குறிப்புகளை தந்த்துள்ளார்?
 
ஒன்றுமில்லை”
 
 
6யூஸ்த் (கி.பி 2 ம் நூற்றாண்டு)
 
இரண்டாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தின் வட பகுதியில் இயேசு விஜயம் செய்த “கபர்நாகூம்” பகுதியில் வாழ்ந்த வரலாற்றாசிரியரான இவர் “யூத ராஜாக்களின் வரலாறு” என்ற நூலை எழுதியுள்ளார். இவர் எழுதிய எந்த நூலும் இன்று எம்மத்தியில் இல்லை என்றாலும் இவரது நூற்களில் இருந்து பலவிடயங்களை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கொனஸ்தாந்து நோபில் தலைமை கிருஸ்துவ மதகுருக்களில் ஒருவரான “பூதியூஸ்” என்பவர் எடுத்தெழுதியுள்ளார்.
 
இவரது மேற்கோள்களில் இயேசு பற்றி எமக்கு என்ன தகவல்கள் கிடைக்கின்றன?
 
ஒன்றுமில்லை”
 
 
.சுபிதோன்/ ஜாயூஸ்திரான்கிலூஸ் (கி.பி 69 -140)
 
ரோம வரலாற்றை எழுதிய இவர் கி.பி 122 வரை ரோமச்சக்கரவர்த்தி “ஹாத்ரியான்” என்பவரது அந்தரங்க செயலாளராக கடமையாற்றினார். அத்துடன் 12 சீசரிய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
 
மேலும் கி.பி 39- 40 காலப்பகுதியில் ரோம சாம்ராஜ்யத்துக்கெதிராக யூதர்கள் செய்த கிளர்ச்சியையும் விரிவாக எழுதியுள்ளார்.
 
இவ் வரலாற்று ஆசிரியர் இயேசு பற்றி எந்த விபரங்களை எமக்குத் தருகிறார்?.
 
எதுவுமில்லை”
 
 
8.  யூஸிபியூஸ் பிலாபியூஸ் (கி.பி 38-100)
 
யூத வரலாற்றாசிரியரான இவர் எருசலேம் பகுதியில் பிறந்து யூதர்களுக்கும் ரோமர்களுக்கும் சண்டை மூண்டபோது கலீலியோவுக்கான ஆட்சிப்பிரதிநிதியாக பதவி வகித்தார். எருசலேம் நகர் கி.பி 70ம் ஆண்டு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ரோமுக்குச் சென்ற இவர் யூதவரலாறு பற்றி 20 பாகங்கள் கொண்ட நூலை எழுதியுள்ளார். சுமார் 50 எழுத்தாக்கங்களுக்கும் இவர் சொந்தக்காரராக உள்ளார்.
 
 
இவரது நூல் ஒன்றில் இவர் “இயேசு பற்றிக் குறிப்பிடுவது போல்இவரை கிருஸ்துவாரச் சித்தரிக்கும் வகையில் சில பந்திகளை பிற்கால கிருஸ்தவர்கள் இடைச்செருகல் செய்துவிட்டனர்.
 
 
எனினும், இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அனைவரும் குறித்த பந்திகள் இடைச்செருகல் செய்யப்பட்டதுதான் என்பதிலும் யூஸிபியூஸ் அவர்கள் கிருஸ்தவர் அல்ல, யூதர்தான் என்பதிலும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்.
 
இவ்வரலாற்று ஆசிரியர் இயேசு பற்றி என்ன குறிப்பிடுகிறார்?
 
ஒன்றுமில்லை”
 
 
9புளூதர்கஸ் (கி.பி 48-125)
 
கிரேக்க வரலாற்றாசிரியரான இவர் அணியிலக்கணம்,, கணிதம் ஆகிய துறைகளில் பல நூற்களை எழுதியுள்ளார். ரோம், எகிப்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்த இவர் கல்வி, பண்பாடு, அரசியல், மதம் தொடர்பிலான பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
இன்று காணப்படும் இவரது இரு நூற்களில் இயேசு பற்றி என்ன‌ தகவல்கள் காணப்படுகின்றன?
 
ஒன்றுமில்லை”
 
 
10.சாக்கடல் சாசனச் சுருள்கள் (கி.பி 1ம் நூற்றாண்டு)
 
1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சாக்கடல் சாசனச்சுருள்களின் சில ஆவணங்கள் இயேசு வாழ்ந்த பகுதியில், இயேசு வாழ்ந்த காலகட்டதில் எழுதப்பட்டதாக இருக்கின்றன.
 
இச்சுருள்களில் பைபிள் விபரிக்கும் இயேசு பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?
 
எதுவுமில்லை”
 
 
*சாக்கடல் சாசனச் சுருள்கள் எவ்வாறு கிருஸ்துவர்களது மதநம்பிக்கையைத் தகர்த்தெறிகிறது என்பதை தனியாக ஒருகட்டுரையில் வேறொரு சந்தர்ப்பத்தில் நோக்குவோம்.
 
 
11.ஸ்த்ராபூன் (கி.மு 58- கி.பி 25)
 
கிரேக்க அறிஞரும், புவியியலாளருமான இவர் மனித இனங்களின் மூலம், அவர்களின் இடம்பெயர்வு, ஆட்சி உருவாக்கம் பற்றியும் எழுதியுள்ளார்.
 
இயேசு பற்றி இவர் என்ன கூறுகிறார்?
 
ஒன்றுமில்லை”
 
 
12.ஜூபினால் (கி.பி 14 – 130)  மற்றும் லூகானூஸ் (கி.பி39- 65)
 
பிரபல்யமான ரோம இலக்கியவாதிகளான இவ்விருவரும் சில இலக்கிய ஆக்கங்களை எழுதியுள்ளார்கள்.
 
இவ்விருவரும் இயேசு பற்றி என்ன எழுதியுள்ளார்கள்?
 
ஒன்றுமில்லை”
 
 
இவ்வாறு வரலாற்றின் திரும்பிய திசைகள் எல்லாம் இயேசு பற்றிய தகவல்கள் குறித்து “ஒன்றுமில்லை”! ” ஒன்றுமில்லை”!! “ஒன்றுமேயில்லை”!!! என பதிலளிப்பது பைபிள் கூறும் கிருஸ்துவர்களது “நம்பிக்கை இயேசு” என்ற பாத்திரம் “வெறும் கற்பனைப் பாத்திரம்தான்” என வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் முடிவுக்கு வர முக்கிய காரணமாக அமைந்தது.
 
 
நாம் மேற்கண்டவாறு “முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட எந்த வரலாற்று நூற்களிலும், ஆவணங்களிலும் இயேசு பற்றிய விபரங்கள் எதுவும் நம்பகமான முறையில் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை ஆய்வாளர்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனையே வரலாற்று ஆய்வாளர்கள் “ஒரு நூற்றாண்டின் மௌனம்” என்ற பரிபாஷயில்யில் சுட்டிக்காட்டுவர்.
 
 
அத்துடன் பைபிள் கூறும் “கிருஸ்துவ இயேசு”வின் போதனைகளைக் கேட்டு விசுவாசித்தவர்கள் எங்கே? அவர் பிறந்தபோதும் மரித்த போதும் ஏற்பட்ட பூகோள அடையாளங்களைக் கண்டவர்கள் எங்கே? இயேசுவின் அற்புதங்களைக் கண்டவர்கள், கேட்டவர்கள், நிவாரணம் பெற்றவர்கள் அனைவரும் எங்கே? இவர்களில் ஒருவர் கூடவா வரலாற்றுக் குறிப்புகளிலோ, ஆவணங்களிலோ, முதுசங்களிலோ, கல்வெட்டுகளிலோ இயேசு பற்றி எந்த ஒரு குறிப்பையும் எழுதவில்லை என்ற கேள்விக்கு கிருஸ்தவர்களிடம் எந்த பதிலும் இல்லை. பதிலளிக்கவும் முடியாது.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

இயேசு ஒரு கற்பனையா?

 எம்.எம். மங்காசரியான்

மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல்

நான் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் முறையைப் பற்றிய திட்டத்தை உங்கள் முன் வைக்கிறேன். கி.பி.3000-த்தில் வாழ்கிற ஒரு மாணவன் ஆபிரகாம் லிங்கன் என்று ஒரு மனிதர் இருந்தாரா? என்றும், அவர் செய்ததாகக் கூறப்படுபவை உண்மையா? என்றும் பரீட்சிக்க விரும்பினால் என்ன செய்வான்?

எந்தவொரு மனிதனுக்கும் பிறப்பிடமும், பிறந்த நாளும் இருக்கும். லிங்கனைப் பற்றிய அனைத்து ஆவணங்களும் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது போதுமானதாய் இராவிடினும் முக்கியமான ஆதாரங்களுள் ஒன்று.

இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன. இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன. இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும் போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும். டிசம்பர் இருபத்தைந்தாம் தேதியை இயேசுவின் பிறந்த நாளாகக் குறித்தது தன்னிஷ்டப்படி எடுக்கப்பட்ட முடிவல்ல. அந்த நாள் சூரியக்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். தேவ மைந்தனும், சூரியனும் ஒரே நாளில் பண்டிகை கொண்டாடுவது எதைக் குறிக்கிறதென்றால், ஒரு காலம் வரையில் இருவரும் ஒன்றாகவே கருதப்பட்டு வந்தார்கள் என்பதை. இயேசு இறந்த போது சூரியன் மறைந்ததாகக் கூறப்படும் கதையும், இயேசு இறந்த அன்று இளவேனிற்கால நாட்சமநிலை என்ற பாரம்பரிய நம்பிக்கையும், இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சூழ்ந்துள்ள கதைகளும் இயேசுவின் கதை சூரிய தேவனின் புராணத்தைச் சுற்றிப் பின்னப்பட்டது என்பதை நிரூபிக்கின்றன. இயேசு பூமிக்கடியில் மூன்று நாட்கள் இருந்தது, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்தது, ஹெர்குலிஸ் திமிங்கலத்தின் வயிற்றில் மூன்று நாள் இருந்தது, லிட்டில் ரெட் ரைடிங் ஹுட் ஓநாயின் வயிற்றில் இருந்தது போன்ற கதைகள் பழங்கால மனிதன் இரவையும் பகலையும் சுற்றிப் பின்னிய கற்பனைக் கதைகளை ஒத்திருக்கின்றன. சூரியன் ஒரு டிராகன் அல்லது திமிங்கலம் அல்லது ஓநாயால் விழுங்கப்படுவது இருட்டை ஏற்படுத்துகிறது. அந்த டிராகன் கொல்லப்படும் போது சூரியன் வெற்றிகரமாக அடுத்த நாளில் காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட கதைகள் எகிப்திய நாகரிகத் துவக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரையிலான அனைத்து மதங்களிலும் வழக்கில் இருக்கின்றன.

மத்தேயு அதிசய நட்சத்திரத்தைப் பற்றியும், அது பெயரில்லாப் பிச்சைகளான மந்திர வித்தைக்காரரை அதிசயக் குழந்தையின் தொட்டிலுக்கு வழிநடத்திச் சென்றதைப் பற்றியும் கூறியுள்ளார். ஆனால் இந்த விண்மீன் என்னவாயிற்று என்பதைப் பற்றியோ, அந்த மந்திர வித்தைக்காரர், அவர்கள் கொடுத்த பரிசுகள் என்ன ஆயிற்று என்பவற்றைப் பற்றியோ மத்தேயு மூச்சு விடவில்லை. இந்த சுவிசேஷ எழுத்தாளரின் சோதிட விருப்பங்களையே இந்த நட்சத்திரம் பற்றிய நிகழ்ச்சி தெரிவிக்கின்றது. நட்சத்திரங்கள் மனித வாழ்க்கையை நிர்ணயிப்பவை என்ற நம்பிக்கை மிகப் பழமையான ஒன்று. நமது மொழியில் உள்ள சொற்களான (ஆசிரியர் ஆங்கிலத்தைக் குறிப்பிடுகிறார்) ill starred”,”lucky star, “lunacy” போன்ற சொற்கள் மனித மனத்தின் மீதான சோதிடவியலின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இன்றும் நாம் மனிதரின் பல்வேறு உணர்வுகளைக் குறிப்பிட கிரகங்களின் அடிப்படையில் அமைந்த பெயர்களை உபயோகிக்கிறோம். சுவிசேஷங்களில் சூரியனுக்கும், விண்மீன்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயேசுவை சரித்திரப்பூர்வமான மனிதர் என்பதிலிருந்து சோதிடவியலின் அடிப்படையில் அமைந்த கற்பனா கதாபாத்திரம் என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது.

இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுந்ததாகக் கருதப்படும் நாள் ஆகியவற்றை சரியாகக் கூற முடியாது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிச்சயமற்ற நிலை ஒரு குறிப்பிட்ட அளவு வரையாவது இயேசுவின் உண்மைத் தன்மையை கேள்விக் குறியாக்குகிறது.

டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி இயேசுவின் பிறந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது. ஆனால் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்தநாளைப் பற்றி எதுவும் கூறாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஆனாலும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் இயேசு டிசம்பர் இருபத்தைந்தில் தான் பிறந்தார் என்பதை மறுக்க முடியும். பாலஸ்தீனம் வெப்ப நாடாயிருப்பினும் டிசம்பர் மாதத்தில் பனி பெய்வதால் மேய்ப்பர்கள் ஆடுகளுடன் டிசம்பர் மாதத்தில் இராத்தங்குவதில்லை. பெரும்பாலும் இந்த நேரங்களில் மலைச்சிகரங்களும் பனியால் மூடப்பட்டிருக்கும். மேய்ப்பர்கள் உண்மையிலேயே வானம் திறந்ததையும் தேவதூதர்கள் பாடுவதையும் கண்டிருப்பார்களானால் அது நிச்சயமாக டிசம்பர் மாதத்தில் நடந்திருக்காது. ஆரம்பகாலங்களில் கிறிஸ்தவர்கள் மே மாதத்திலும், ஜுன் மாதத்திலும் இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.

இயேசு பிறந்த நாளைப் பற்றி அறிய வேண்டியது நமக்கு அவசியமில்லை. ஆனால், அது ஏன் அறியப்படவில்லை? இயேசுவின் பிறந்த நாள் மட்டுமல்ல, இயேசு பிறந்த ஆண்டு எது என்பதைப் பற்றியும் தெளிவான செய்திகள் நமக்கு இல்லை. சுவிசேஷகர்களில் ஒருவரான மத்தேயு இயேசு ஏரோதின் ஆட்சிக் காலத்தில் பிறந்ததாகச் சொல்கிறார். ஏரோதின் ஆட்சிக்காலத்தில் தான் மூன்று ஞானிகளின் வருகை நிகழ்ந்ததாகவும், இயேசுவைக் கொலை செய்யும் திட்டத்தை ஏரோது செயல்படுத்தியதாகவும் மத்தேயு கூறுகிறார். ஆனால் லூக்கா கூறுகிறார், சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்த போது. அப்படியானால், இயேசுவின் பிறப்பு மத்தேயு கூறுவதை விட பதினான்கு வருடங்கள் பிந்தி நடந்திருக்க வேண்டும். வரலாற்று ஆவணங்களில் இப்படிப்பட்ட தவறுகள் இருக்குமா? சில தெய்வீக இயலாளர் கூறுகின்றார்கள், “பிழைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் இப்படிப்பட்ட உத்திகள் உபயோகப்பட்டிருக்கலாம்” என்று. ஆனால் ஏன் மத நூல்களில் மட்டும் ‘இப்படிப்பட்ட உத்திகள்’ உபயோகிக்கப்பட வேண்டும்?

மத்தேயு, ஏரோது இயேசுவைக் கொல்ல திட்டம் தீட்டியதையும், அதனால் யோசேப்பும், மரியாளும் குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிப் போனதாகவும் கூறுகிறார். ஆனால் லூக்கா இந்த நிகழ்வுகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை. ஆனால், நாற்பது நாட்கள் சுத்திகரிப்பு நிறைவேறிய பின்பு இயேசுவை பகிரங்கமாக ஆலயத்துக்கு கொண்டு வந்ததாக லூக்கா கூறுகிறார். ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இதனால் இக்கதைகளுக்கு சரித்திர மதிப்பை அளிக்க முடியாது என்பது தெளிவாக விளங்குகிறது.

இயேசுவைப் பற்றிய முக்கியமான அத்தியாயங்களுள் நுழையும் போது நமக்கு சிக்கல் மேலும் அதிகமாகிறது. ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? இயேசுவின் மரண நாள் வெள்ளிக்கிழமை என்பது மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. இயேசு உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டிருந்தாரானால் கூட அவருடைய துல்லியமான மரண தேதி இன்னதென்று யாருக்கும் தெரியாது. போதகர்களின் மாநாடுகள் ஒரு செயற்கையான தேதியை நிர்ணயித்தன. ஒரு வெள்ளிக்கிழமையின் போதே சிலுவை மரணம் நினைவு கூரப்படுகிறது. ஆனால் எந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை என்பது ஒவ்வொரு வருடத்துக்கும் வேறுபடுகிறது. புனித வெள்ளி வசந்த கால நாட்சமநிலைக்கு முன்னால் கொண்டாடப் படுவதில்லை. ஆனால் வசந்த கால நாட்சமநிலை முடிந்தவுடன் முழுநிலவின் அடிப்படையில் கொண்டாடப் படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் இந்தப் பண்டிகையானது சூரியன் நட்சத்திரக் கூட்டங்களினிடையே (ராசிகளிடையே) இருக்கும் நிலையின் அடிப்படையிலும், நிலவின் நிலைகளின் அடிப்படையிலும் கொண்டாடப்படுகிறது. இப்படித் தான் சிலை வழிபாட்டுக்காரரின் கடவுளான ஆஸ்டிராவின் பண்டிகையும் கொண்டாடப் படுகிறது. ஆஸ்டிரா என்ற பெயரிலிருந்தே ஈஸ்டர் என்ற பெயர் வந்தது. இப்படிப் பட்ட விஷயங்களால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்கிறோம், பிற மதப் புராணக் கதைகளுக்கும் இயேசுவின் கதைக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.

ஆதி திருச்சபை பிதாக்களுள் ஒருவரான ஒரிஜன், இயேசுவின் உண்மைத் தன்மையைப் பற்றி கேள்வி எழுப்பிய பகுத்தறிவுவாதியான செல்சசுக்கு பதில் அளிக்கும் போது வரலாற்று ரீதியில் இயேசுவின் உண்மைத் தன்மையை நிறுவ முற்படாமல் கிரேக்க- ரோமக் கடவுள்களை விட இயேசுவின் கதை நமப முடியாத தன்மையில் அமைந்தது அல்ல என்று விடையளிக்கிறார். நான் ஒரிஜினின் சொந்த வார்த்தைகளையே தர விரும்புகிறேன், நான் செல்சசுக்கு பதிலளிக்கும் முன் ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் உண்மையை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் நம்மிடம் எதுவும் இல்லை. இதன் மூலமாக கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே இயேசு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அறியப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஆதாரங்கள் இல்லாத நிலையில் வெறுங் கோட்பாட்டின் அடிப்படையிலான வாதங்களை ஒரிஜன் செல்சஸ் முன்வைக்கிறார். 1. பிற மதத்தாரின் புராணங்கள் உண்மை என்று கருதப் படுகிற போது இயேசுவின் வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? 2. இயேசுவின் கதை உண்மை இல்லையென்று கருதினால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் நிறைவேறவில்லை என்று அர்த்தப்படுகிறது. செல்சசின் பகுத்தறிவு வாதத்துக்கு முன்பு சொத்தையான வாதம் ஒன்றை ஒரிஜன் முன் வைக்கிறார். அதாவது இயேசு என்ற கற்பனையை ஏற்றுக் கொள்ளாதது பிற மதத்தவர் மற்றும் யூதரின் புராணங்களை ஏற்றுக் கொள்ளாததற்கு சமமாகும் என்று கூறுகிறார். இயேசு உண்மையில்லை என்றால் அப்பொல்லோ உண்மை இல்லையென்றும், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறவில்லையென்றும் கூறுகிறார். நமக்கு புராணக் கதைகள இருக்குமானால் அதனோடு இயேசு என்ற கற்பனையையும் சேர்த்துக் கொள்வதால் என்ன நட்டம் என்று ஒரிஜன் கேட்கிறார். இயேசு என்ற கற்பனைக்கு ஆதரவாக வாதாடியவர்களால் இதைவிட சொத்தையான, பலவீனங்களை ஒப்புக் கொள்ளும் வாதம் ஒன்றை முன் வைக்க முடியாது.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இனி ஆதி திருச்சபை பிதாக்களுள் ஒருவரான ஜஸ்டின் மார்ட்டியர் அவநம்பிக்கையாளர்கள் முன் இயேசுவுக்கு ஆதரவாக வைக்கும் வாதத்தைப் பார்ப்போம். கடவுளின் முதல் பிறப்பான அந்த வார்த்தை பாலுறவு இல்லாமல் உருவாக்கப்பட்டது. அவரே நமது குருவான இயேசு. அவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்து, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறிப்போனார். இதை நாம் சொல்லும் போது ஜுபிட்டரின் மகன்களைப் பற்றி சொல்லப் படுவதை விட அதிகமாக சொல்லி விடவில்லை, என்கிறார். பிற மதத்தவரின் புராணங்களுக்கும், இயேசுவின் கதைக்கும் அதிக வித்தியாசமில்லை, எனவே பிற மதத்தவரின் கதைகள் எவ்வளவு உண்மையோ அதே அளவு இயேசுவைப் பற்றிய கதைகளும் உண்மையே என்று ஜஸ்டின் மார்ட்டியர் நிரூபிக்க விரும்புகிறார் என்று தோன்றுகிறது. அவர் தனது வாதங்களை தொடரும்போது பிற மதத்தவரின் கதைகளுக்கும், தான் போதிக்கும் விஷயங்களுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதை உணர்கிறார். அவர் தொடர்கிறார், ஜுப்பிட்டருக்கு எத்தனை புதல்வர்கள் உண்டு என்று உங்களுக்குத் தெரியும். மெர்க்குரி, ஏஸ்குலாப்பியஸ், ஹெர்குலிஸ், பெர்சியஸ், பெலரபோன் முதலியவர்கள் மனிதர்களாகப் பிறந்து பெகாசசின் குதிரைகள் வழி மேலுலகத்துக்குப் போனவர்கள். ஜஸ்டின் மார்ட்டியர் கேட்க விரும்பும் கேள்வி இது தான். ஜுபிட்டருக்கு ஆறு மகன்கள் இருக்கும்போது யெகோவாவுக்கு ஒரு மகன் இருக்கக் கூடாதா?

சீசர், அலெக்ஸாண்டர் முதலியோர் வாழ்ந்ததை நிரூபிக்க வரலாற்றுச் சான்றுகளோ நம்பத் தகுந்த ஆதாரங்களோ காட்டப் படுகின்றன. ஆனால் ஜஸ்டின் மார்ட்டியர் இயேசுவின் உண்மைத் தன்மையைப் பற்றிய விளக்கத்திற்கு புராணங்களை துணைக்கு கூப்பிடுகிறார். ஜஸ்டின் மார்ட்டியருடைய விருப்பம் என்னவென்றால் அக்கால தேவர்களில் இயேசுவுக்கு முக்கியமான இடம் தரப்பட வேண்டும் என்பதாகும்.

தங்கள் விவாதங்களுக்கு உதவுவதற்காக பழைய ஏற்பாட்டில் பல குளறுபடிகளை கிறிஸ்தவ மத சார்பாளர்கள் செய்தார்கள். கிழக்கத்திய புத்தகங்களில் இருந்து மாட்டுக் கொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையையும், சுற்றி நின்று உற்றுப்பார்க்கும் மிருகங்களையும் இரவல் வாங்கிய கிறிஸ்தவர்கள் இது ஏற்கனவே முன்குறிக்கப்பட்டது என்று கருதுவதற்காக ஆபகூக் நூலில் ஒரு குளறுபடியை செய்தார்கள். கர்த்தாவே! வருஷங்களின் நடுவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்(ஆப 3:2) என்று இருந்ததை கர்த்தாவே! மிருகங்களின் நடுவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும் என்று மாற்றினார்கள். இது போன்ற பொய் வாதங்களின் அடிப்படையிலேயே கிறிஸ்தவ மதம் எழுப்பப்பட்டு இருக்கிறது, இதிலிருந்தே கிறிஸ்தவ மதம் எத்தனை சதவீதம் உண்மையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நாம் வாதங்களை தொடரலாம். ஆபிரகாம் லிங்கனின் நண்பர்களும், சமகாலத்தைச் சேர்ந்தவர்களும் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகியிருக்கிறார்கள். ஆனால் இயேசுவின் தோழர்களோ இயேசுவைப் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களாகத் தான் இருக்கிறார்கள். மத்தேயு யார்? மாற்கு யார்? யோவான், பேதுரு, மரியாள், யூதாஸ் இவர்களெல்லாம் யார்? அப்படி யாரும் இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாம் அவர்களை புதிய ஏற்பாட்டு நூற்களைத் தவிர வேறு எங்கேயும் பார்க்க முடிவதில்லை. பேதுரு ரோமுக்கு புதிய கொள்கையுடன் போனால் வரலாற்றாசிரியர்கள் ஏன் பேதுருவைப் பற்றி எழுதவில்லை? பவுல் மார்ஸ் மேடையிலிருந்து தனது விசித்திர சுவிசேஷங்களை பிரசங்கித்திருந்தால் ஏன் ஏதென்ஸ் வரலாற்று நூற்கள் பவுலைப் பற்றி எதுவும் கூறவில்லை? பவுலும் பேதுருவும் உண்மையிலேயே வாழ்ந்திருக்கலாம். ஆனால், அது ஒரு ஊகம் மட்டுமே. அவர்கள் இருந்ததை தெளிவுபடுத்தக் கூடிய எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. இயேசுவின் அப்போஸ்தலர்களைப் பற்றிய நிச்சயமின்மை, இயேசுவைப் பற்றிய நிச்சயமின்மைக்கு கொண்டு செல்கிறது.

இயேசுவுக்கு பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் உண்டு என்பதும் புராணங்களின் போக்கில் அமைந்த கற்பனை என்றே கூறலாம். ஏழு, மூன்று, நாற்பது என்ற எண்களைப் போன்றே பன்னிரெண்டு என்ற எண்ணும் சூரியக்கடவுளின் அனைத்து புராணங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் அவை பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. யாக்கோபின் பன்னிரெண்டு மகன்கள், இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்கள், ஒரு வருடத்தின் பன்னிரெண்டு மாதங்கள், சொர்க்கத்தின் பன்னிரண்டு தூண்களும், பன்னிரண்டு வாசல்களும் இன்னும் இவை போன்ற பிறவும் பன்னிரண்டு என்ற எண்ணின் ஆதிக்கத்தைக் குறிக்கின்றன. உலகின் பெரும்பாலான மதங்களில் பன்னிரண்டு என்னும் எண் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பன்னிரண்டு சிஷ்யர்களில்லாத தேவ இரட்சகர்கள் மிகக் குறைவு. புதிய ஏற்பாட்டின் ஒருசில பகுதிகளில் இயேசு உலகத்தில் சுவிசேஷத்தை பரப்புவதற்காக எழுபது பேரை அனுப்பினார் என்று கூறப்படுகிறது. இது இன்னொரு கற்பனையாதாரத்திலிருந்து வந்தது. அந்தக் காலத்தில் உலகில் எழுபது நாடுகள் இருந்ததாகக் கருதப்பட்டன. எழுபது அறிஞர்கள் எழுபது தனித்தனி அறைகளில் அமர்ந்திருந்து பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்ததாக ஒரு பாரம்பரியக் கூற்று உண்டு. அதனால் அவர்களின் மொழிபெயர்ப்பு செப்டுவாஜின்ட் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் இவையனைத்தும் கற்பனையே. இவற்றுக்கு ஆதாரம் இல்லை. ஆதித் திருச்சபைப் பிதாக்களில் ஒருவர் மட்டும் எழுபது அறைகளையும் சொந்தக் கண்ணால் பார்த்ததாக சாதிக்கிறார். மொத்தத்தில் அவர் மடடும் அப்படிக் கூறுகிறார். அந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களுள் பெரும்பாலோர் காட்சிகளில் அவ்வளவாக வருவதில்லை. பேதுரு, பவுல், யோவான், யாக்கோபு, யூதாஸ் ஆகியோரே நிகழ்வுகளை மொத்தமாக ஆக்கிரமிக்கின்றனர். பவுல் அப்போஸ்தலராக இருந்தால் நமக்கு மொத்தம் பதினாலு அப்போஸ்தலர்கள் இருக்கிறார்கள். யூதாஸை விட்டுவிட்டு மத்தியாவை சேர்த்துக்கொண்டால் சீடர்களின் எண்ணிக்கை பதின்மூன்று.

ஆதிகால புராணக்கதைகள் பலவற்றில் நாற்பது என்ற எண் வருகிறது. யூதர்கள் வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் அலைந்ததும், இயேசு நாற்பது நாள் உபவாசம் இருந்ததும், மோசே கடவுளோடு நாற்பது நாட்கள் இருந்ததும் இந்தக் கதைகளில் சில. இவை உண்மையாகக் காட்சியளிக்கவில்லை. செயற்கைத்தனமாக காட்சியளிக்கின்றன. லிங்கனின் வரலாற்றை எழுதியவர்களும், சாக்ரடீசின் வரலாற்றை எழுதியவர்களும் எண்களில் ஆர்வம் செலுத்தவில்லை. ஏனென்றால் அவர்கள் கதை எழுதவில்லை. வரலாற்றை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

மட்டுமல்லாமல் லிங்கனின் சமகாலத்தவர் பலரும் லிங்கன் இருந்தார் என்பதற்கு சாட்சி கொடுக்கிறார்கள். அவரது காலத்திலிருந்த வரலாற்றாசிரியர்களும், அரசியல்வாதிகளும் அவரோடு தொடர்பு கொண்டிருந்தார்கள், இல்லையேல் கேள்வப்பட்டு இருந்தார்கள். ஆனால் இயேசுவின் சமகாலத்தவர்களான பல எழுத்தாளர்களும், வரலாற்றாசிரியர்களும் இயேசுவைப் பற்றி ஏன் எதுவும் கூறவில்லை என்பதை விளக்க முடியவில்லை. ஆபிரகாம் லிங்கன் தனது சமகாலத்தவரின் கவனத்தை ஈர்த்திருப்பாரானால் இயேசுவால் ஏன் அது முடியவில்லை? இயேசுவைப் பற்றி புறமத எழுத்தாளர்களும், யூத எழுத்தாளர்களும் அநேகங் காரியங்களைக் கேள்விப்பட்டும் ஒன்றும் கூறவில்லையென்பது பகுத்தறிவுக்குத் தகுந்ததாகக் கருதப்படுகிறதா? அவர்கள் எல்லாரும் இயேசுவுக்கெதிராய் சதியில் ஈடுபட்டிருந்தார்களோ? இந்த முழு மௌனத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? அதிசயங்களைச் செய்கிற இயேசுவை அவர்கள் எப்படி அறியாமல் இருந்திருக்க முடியும்? காரணம் இது தான். அவர்களுக்கு இயேசுவைப் பற்றித் தெரியாது. ஏனென்றால் இயேசு அவர்களின் காலத்தில் வாழ்ந்தவரல்ல. இந்த பூமியில் அப்படிப்பட்ட யாரும் பிறக்கவில்லை.

இப்பொழுது ஆபிரகாம் லிங்கனின் வரலாற்றை ஆய்வு செய்யும் அம்மாணவனை எடுத்துக் கொள்ளுங்கள். ஆபிரகாமின் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய யாரும் ஆபிரகாம் லிங்கன் எங்கு பிறந்தார் என்றோ, எங்கு வாழ்ந்தார் என்றோ குறிப்பிடவில்லை என்றால் அவர்கள் ஆபிரகாம் லிங்கனை மிகைப்படுத்துகிறார்கள் என்று அம்மாணவன் கருத இடமுண்டு. நாமும் அது போன்ற நிலையில் தான் இருக்கிறோம். பல மாமனிதர்களின் பிறந்த தினமும், பிறந்த இடமும் நமக்குத் தெரியாது. ஆனால், அவர்களைப் பற்றிய பிற ஆதாரங்கள் அவர்களின் இருப்பைக் குறித்த சந்தேகங்களை நீக்கி விடுகின்றன. ஆனால், இயேசுவைப் பற்றிய எந்த தெளிவான ஆதாரமும் இல்லை. இயேசுவின் சமகாலத்தவர்களாய் கருதப்படும் சுவிசேஷ ஆசிரியர்கள் கூட இயேசுவைப் பற்றி எந்த தெளிவான விவரமும் கொடுக்கவில்லை.

ஆனாலும், நாம் ஆய்வைத் தொடருவோம். ஆபிரகாம் லிங்கனைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கும் செய்திகளின் உண்மைத் தன்மையை நம்மால் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இயேசுவைப் பற்றிய செய்திகளை ஒப்புமைப்படுத்தி சரிபார்ப்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்தவர், விடுதலை சாசனத்தில் கையெழுத்திட்டவர், கொலை செய்யப்பட்டவர் என்பது போன்ற செய்திகளை சரிபார்த்து விடலாம்.

இயேசு ஒரு கன்னிக்குப் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இப்படிப் பட்ட தகவல்களை நாம் சரிபார்க்க முடியாது. வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் இப்படிப் பட்ட தகவல்கள் ஏற்கத் தகுந்தன அல்ல. இவை புராணக்கதைகளின் பாற்பட்டவை ஆகும். இப்படிப் பட்ட தகவல்கள் இயேசுவின் கதைக்கு உண்மைத் தன்மையை அளிப்பதைவிட சிதைப்பதிலேயே அதிக வேகத்துடன் செயல்படுகின்றன.

அதுபோலவே இயேசு ஒரு கடவுள் என்கிற தகவலையும் நம்மால் சரிபார்க்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நபர் கடவுள் தன்மை பெற்றவரா இல்லையா என்பதை நாம் எப்படி நிரூபிக்க முடியும்? இயேசு ஒரு அபூர்வ மனிதராக இருக்கலாம். ஆனால் எல்லா அபூர்வ மனிதர்களும் கடவுளாக முடியுமா? இயேசு தான் கடவுள் என்று கூறியிருக்கலாம். எத்தனையோ மனிதர்கள் தங்களைக் கடவுள் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் கடவுள்கள் என்பதற்கு நிரூபணங்கள் என்ன?

சாதாரண மனிதரான இயேசு இருந்திருக்கலாம், இல்லாதவராயும் இருக்கலாம். ஆனால் கன்னிக்குப் பிறந்த கடவுளை நம்புவதை விசுவாசம் என்ற பெயரால் நியாயப்படுத்துவது அர்த்தமில்லாத ஒன்று. இயேசு என்று ஒருவர் இருந்தார் என்பதற்கான இறுதி வாதமாக விசுவாசம் முன்வைக்கப்படுகிறது. இதே விசுவாசத்தின் அடிப்படையில்தான் முகமது தான் கூறுவதை நிரூபிக்கவும், பிரிஹம் யங் தனது வெளிப்படுத்தலை முனவைக்கவும் செய்கின்றனர். இப்படிப்பட்ட குறுக்கு வழிகளைத் தவிர கன்னிக்குப் பிறந்த மனிதனின் இருப்பை நிரூபிக்கக் கூடிய வழியில்லை. இப்படிப்பட்ட விசுவாசம் சுதந்தரமானதல்ல. இக்காலத்தில் வாளாலும், பிற்காலத்தில் நரகத் தீயாலும் அது பாதுகாக்கப்படுகிறது.

ஆபிரகாம் லிங்கன் தம் மரணத்தைக் குறித்து முன்னறிவித்து இருந்தாலோ, தனது தோழர்களிடம் நான் ஆகாயத்தில் தோன்றும் வரை நீங்கள் என்னைப் பார்ப்பதில்லை என்று சொல்லியிருந்தாலோ, நான் பரலோகத்தில் உங்களுக்கு சிங்காசனங்களைத் தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தாலோ, தனது தோழர்களிடம் நீங்கள் எனது பெயரால் விஷத்தைக் குடிப்பீர்கள் என்று சொல்லியிருந்தாலோ, நீங்கள் எனது பெயரில் எதைக் கேட்டாலும் உங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தாலோ அப்படிப்பட்ட லிங்கனின் இருப்பைப் பற்றி நமக்கு சந்தேகம் எழுவது இயல்பு. ஆனால் இதைப் போன்ற பல மொழிகள் இயேசுவின் வாயிலிருந்து வெளிவந்துள்ளன. என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் அது உங்களுக்குக் கொடுக்கப்படும். எந்த மனிதனும் இப்படிப்பட்ட நடக்காத விஷயங்களை யாரிடமும் நடக்கும் என்று சொல்லி சத்தியம் பண்ணுவதில்லை. இப்படிப் பட்ட வெற்றுப் பேச்சுகள் ஒரு மனிதனைக் கடவுளாக்குவதுமில்லை. இயேசு தனது சத்தியத்தைக் காப்பாற்றினாரா? அவர் தன்னைப் பின்பற்றுபவர்கள் தம் பெயரால் எதைக் கேட்டாலும் கொடுப்பாரா? இதற்கு ஒரு சொத்தை பதில் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு எது நல்லது என்று அவர் கருதுகிறாரோ அதை அவர் கொடுப்பார். இதை விட ஒரு சத்தியத்திலிருந்து நழுவ சிறந்த வழியுண்டா? இதை அவர் சொல்லக் கருதியிருப்பாரானால் ஏன் முதலில் இன்னொரு விஷயத்தைச் சொன்னார்? அவர் சொல்லக் கருதியதை ஏன் அவர் சொல்லவில்லை? இப்படிச் சொல்வது தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நிறைவேறாத எதிர்பார்ப்புகளை உண்டாக்கும் என்பதை அவர் ஏன் உணரவில்லை? குறைந்த வாக்குறுதிகளை அளித்து விட்டு அதிகமாகச் செய்வது, அதிகமான வாக்குறுதிகள் கொடுத்து ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட எவ்வளவோ மேலானது. இப்படிப் பட்ட நிறைவேற்றாத ஒரு சத்தியத்தை இயேசு செய்தார் என்பது அவரது இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. புராணங்களில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும். இயேசு தான் கொடுத்த சத்தியத்துக்கு மதிப்பளித்திருந்தால் இவ்வுலகத்தில் துன்பம் இருக்காது, அனாதைகள் இருக்க மாட்டார்கள், குழந்தையிழந்த தாய்மார்கள் இருக்க மாட்டார்கள், கப்பல் விபத்துகள் நிகழ்ந்திருக்காது, வெள்ளப் பெருக்கு இருக்காது, பஞ்சம் இருக்காது, வியாதி இருக்காது, ஊனமுற்ற குழந்தைகள் இருக்க மாட்டார்கள், மனவியாதி இருக்காது, யுத்தங்கள் இருக்காது, குற்றங்கள் இருக்காது, தவறுகள் இருக்காது. எத்தனை ஆயிரம் பிரார்த்தனைகள் பூமியின் முகத்தைப் புண்ணாக்கும் தீமைகளுக்கு எதிராக நடந்திருக்கிறது? பின் ஏன் இத்தனை அதிருப்தி? இயேசுவைப் பின்பற்றுபவர்களால் மலைகளை நகர்த்த முடிந்ததா? விஷங்களைக் தீங்கின்றி குடிக்க முடிந்ததா? பாம்புகளை கையில் பயமின்றி எடுக்க முடிந்ததா? இயேசு செய்ததாகச் சொல்லப்பட்ட அற்புதங்களை விட பெரிய அற்புதங்களைச் செய்ய முடிந்ததா? தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்ட எத்தனையோ மதஸ்தர்கள் அப்படிப்பட்ட போதனைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் எத்தனை பிரச்சினைகள் வந்தன?

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியாக் தன் தாய் எவ்வளவு கண்ணீரோடு முழங்காலில் நின்றார்கள் என்றும், எப்படிப்பட்ட விசுவாசத்தை இயேசுவின் உதவும் தன்மை மீது வைத்திருந்தார் என்றும், பட்டினியாய் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிப்பேன் என்று இயேசு கூறியதன் மீது வைத்திருந்த விசுவாசத்தைப் பற்றியும் கூறுகிறார். அவர்கள் ஜெபிக்கும் போது அவர்கள் சுமை குறையவில்லை. மாறாக அதிகரிக்கவே செய்தது. ஒரு கல்லோ, மரக்கட்டையோ கூட அவர்கள் கண்ணீரினால் கசிந்துருகி விடும். அந்த நாட்களை எண்ணும் போது என் மனது வலிக்கிறது என்று ஹோலியாக் எழுதுகிறார். ஒருநாள் அவர் அருட்திரு. கிரிபேஸ் என்ற பாதிரியாரிடத்தில் சென்றார். அவாpடம் கேட்டார், நாம் விசுவாசத்தோடு எதைக் கேட்டாலும் அது கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?. மேலும் ஹோலியாக் எழுதுகிறார், அந்த போதகரின் நைந்து போன துணியும், அரைப்பட்டினித் தோற்றமும், வசூலாக வேண்டிய பணத்திற்கு காத்திருக்கும் நிலையும் அவர் தனது வருமானத்திற்கு விசுவாசத்தை சார்ந்திருக்கவில்லை என்று எனக்கு அப்போது உணர்த்தவில்லை. பிரார்த்தனையால் எல்லா உதவியும் கிடைக்குமென்றால் எந்த சபைக்கும் தேவைகள் இருக்காது, எந்த விசுவாசியும் வறுமையாளராய் இருக்க மாட்டார் என்று அப்போது எனக்கு உறைக்கவில்லை. தனது கேள்விக்கு அந்த பாதிரியார் அளித்த பதிலைப் பற்றி அவர் எழுதுகிறார். அவர் பல வார்த்தைகளால் அதை விளக்கினார். இயேசு கொடுத்த உறுதிமொழியின் கூட ஒரு வார்ததை சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது அவர் தமது விசுவாசிகளின் நன்மைக்கானதை அளிப்பார் என்றார். அப்படியானால் இயேசு ஏன் தான் உறுதிமொழியளிக்கும் போது இவ்வார்த்தையைக் கூறவில்லை? இயேசு ஒரு உறுதிமொழியின் அரைப்பகுதியை மட்டும் கூறிவிட்டு, தன்னிடம் கோரிக்கை வைத்து நம்பிக்கையிழந்தவர்களிடம் அடுத்த அரைப்பகுதியை உபயோகப்படுத்துவாரா? ஆனால் அவர் சொன்னார், என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் நான் உங்களுக்குச் செய்வேன். அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேனே என்கிறார். அவர் தாம் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததைக் கூறாமல் வேறு எதையோ கூறினாரா? உண்மை என்னவென்றால் சுயநினைவோடு இருக்கும் மனிதன் இப்படிப்பட்ட அசாதாரணமான, சாத்தியமில்லாத சத்தியங்களைச் செய்வதில்லை. இயேசு இப்படிக் கூறுவதாக இருக்கும் தகவல், அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரமே என்ற கூற்றுக்கு வலு சேர்க்கிறது.

ஹோலியாக்குக்கு உண்மை புரிந்த போது அவர் பரலோகத்திற்கு விண்ணப்பங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டார். அவர் அந்த செயலை வெற்றுக் கிணற்றில் வாளியை விடுவது போனறது என்பதை உணர்ந்து கொண்டார். தனது உதவிக்காக பிற இடங்களை நாடினார். இந்த உலகின் முன்னேற்றம் எதில் இருக்கிறது என்றால் மனிதர் பரலோக உதவியை எதிர்பாராமல் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்வதில் தான் இருக்கிறது. பிரார்த்தனை அல்ல, சுயமுயற்சியே அறியாமை, அடிமைத்தனம், வறுமை, ஒழுக்கக்குறைவு போன்ற அனைத்திற்கும் மருந்தாக இருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக இல்லாத இயேசுவையும், சாத்தியமில்லாத சத்தியங்களையும் காட்டி மனுக்குலத்தின் வளர்ச்சயை தள்ளிப்போட மட்டுமே திருச்சபையால் முடிந்ததேயொழிய அதை நிறுத்தி விட முடியவில்லை. இதுவே மனிதனின் இயல்புக்குக் கிடைத்த வாழ்த்தாகும். மேலும் பயத்தால் அடக்கி வைக்கப்பட்டு மவுனத்திலும், அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடந்த மனித இனம் விரைவில் இது போன்ற மாயைகளிலிருந்து விடுதலை பெற்று விடும் என்பதற்கு இப்போதைய நிலைகள் உறுதியளிக்கின்றன.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

(மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: இதற்கு எதிரான வாதங்களை நான் மொழிபெயர்த்து முன் வைக்கவில்லை என்று சில தோழர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு எதிரான கருத்துகளை மொழிபெயர்க்காதது ஒருதலைப்பட்சமானது என்று தெரிவித்திருந்தனர். இக்கட்டுரைத் தொகுப்பை மொழிபெயர்த்து முடித்தவுடன் அடுத்தடுத்த வாரங்களில் இக்கட்டுரைக்கு எதிரான வாதங்களையும் மொழிபெயர்ப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேள்விகளை எழுப்பவே விரும்புகிறேன். பதிலளிப்பது அவரவரது தனிப்பட்ட பார்வையையும், நோக்கங்களையும் பொறுத்தது. மதிப்பு மிக்க கருத்துகளைப் பதிந்த நண்பர்களுக்கு நன்றி)

2.கிறிஸ்தவ ஆவணங்கள்

எம்.எம். மங்காசரியான்

மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல்

 

    கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ஆவணங்கள் வரலாற்று மனிதரைப் பற்றிக் குறிப்பிடும் எந்த ஆவணங்களோடும் பொருந்திப் போகவில்லை. எனவே நாம் நமது ஆய்வில் இரண்டு மடங்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

 

இயேசுவின் வரலாற்றுத்தன்மையை கிறிஸ்தவர்கள் நான்கு சுவிசேஷங்களின் அடிப்படையிலேயே நிரூபிக்க முயல்கிறார்கள். ஆனால் அந்தப் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களின் அசல் பிரதிகள் நம்மிடையே இல்லை. நகல்கள் மட்டுமே உள்ளன. அசல்கள் இருந்ததற்கான ஆதாரங்களும் இல்லை. இந்தக் கூற்றை யாராலும் மறுக்க முடியாது. ஆதி விசுவாசிகள் தங்கள் கவனக்குறைவால் அப்போஸ்தலர்கள் எழுதிய அனைத்து நூற்களையும் இழந்துவிட்டு, அநாமதேயங்களால் எழுதப்பட்ட நகல்களை மட்டும் காவல் காத்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அருட்கிளர்ச்சியால் உந்தப்பட்ட கிறிஸ்தவ அப்போஸ்தலர்களின் நூற்கள் எல்லாம் காணாமற்போனபின் வெறும் எழுத்தர்களால் எழுதப்பட்ட நகல்கள் நிலைத்து நிற்பது ஏன்? மத்தேயுவின் அசல் நூல் காணாமற் போயிருக்கும் நிலையில், வேற்று மொழியில் எழுதப்பட்ட நகல் எப்படி பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்றது? இயேசு ஒரு வரியாகிலும் எழுதவில்லை. பரவலான நம்பிக்கையின்படி அவர் கடவுளின் விருப்பத்தை வெளிப்படுத்தும் முக்கியமான பணிக்காக பூமிக்கு வந்தார். ஆனால் அவர் கடவுளின் விருப்பத்தை தமது வாழ்நாளில் எழுத்துகளில் வெளிப்படுத்தவில்லை. ஆனால் உண்மையில் பரலோகத்திலிருந்து யாராவது தேவபோதனையாளராய் வந்திருந்தால் அதைச் செய்திருப்பார்கள். ஆனால், அவர் தமது பணியை தவறுகள் செய்யக் கூடிய அநாமதேய எழுத்தாளருக்கு விட்டுச் செல்கிறார். இந்தக் குழப்பமே கிறிஸ்தவத்தை பல பிரிவுகளாகப் பிரித்தது. தமது சீடர்களுக்குப் பதிலாக இயேசுவே தான் கொடுக்க விரும்பிய செய்தியை தெளிவாகவும், எளிமையாகவும் சொல்லிச் சென்றிருந்தால் எத்தனை தண்டனைகள், எத்தனை யுத்தங்கள், கசப்புகள், வெறுப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்?

 

மேலும், இயேசு தான் எதையும் எழுதி வைக்காததோடு தம் அப்போஸ்தலர்கள் எழுதியதைப் பாதுகாக்கவும் முயற்சி எடுக்கவில்லை. அசல் கையெழுத்துப் பிரதிகள் இருந்ததானால் அவை இது வரையிலும் கண்டறியப்படவில்லை. இது மிக மோசமான விஷயம். நாம் அப்பிரதிகளின் நகலை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறோம். யார் அவற்றைப் படியெடுத்தார்கள்? எப்பொழுது அவை நகலெடுக்கப்பட்டன? நாம் எந்த அளவுக்கு இந்த பிரதிகளை நம்ப முடியும்? ஏன் இப்படி பல்லாயிரம் விதமான நகல்கள் இருக்கின்றன? எதன் அடிப்படையில் நாம் ஒரு பிரதியை ஏற்க முடியும்? இயேசுவின் வருகையால் விளைந்தவை அநாமதேய, காலமறியாத நகல் பிரதிகள் தானா? கடவுள் தனது குமாரனை பூவுலகிற்கு அனுப்பி வைத்தது ஏன்? நாம் இப்படி பல நகல்களை ஆராய்ந்து ஏன் கடவுள் தன் குமாரனை பூமிக்கு அனுப்பினார் என்றும், அவரது குமாரன் என்ன போதித்தார் என்றும் கண்டுபிடிப்பதற்கா?

கிறிஸ்தவ திருச்சபை அசல் கையெழுத்துப் பிரதிகள் அழிந்து போனதற்கு ஒரே ஒரு காரணத்தைத் தான் கூற முடியும். அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இறைவனின் எண்ணத்தைக் கொண்டு புனித ஆவியின் அருட்கிளர்வால் எழுதப்பட்ட ஒரு மதிப்புமிக்க ஆவணம் திடீரென்று காணாமற் போனால் அதை எழுதிய தெய்வீகத் தன்மை உடையவர் அதைச் சுற்றிலிருந்து நிறுத்திவிட்டார் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் கூற முடியும்? கடவுள் புதிரான, நம்மால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் செயல்படுகிறார், என்பதே ஒரு விசுவாசியின் இறுதி வாதமாகும். ஆனால் இந்த வாதத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் வானத்தின் கீழ் எழுந்த எல்லா மதங்களையும், எல்லா இசங்களையும் உண்மை என்று நினைக்க வேண்டியிருக்கும். இஸ்லாமியர்களும், பிற மதத்தவர்களும் விசுவாசத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். விசுவாசத்தால் மறைக்க முடியாத அறிவின் ஒளி எதுவும் இல்லை. ஆனால் ஆதாரங்கள் இல்லாத விசுவாசம் மூடநம்பிக்கை இல்லையென்றால் மூடநம்பிக்கை என்றால் என்ன? கத்தோலிக்க திருச்சபை புனித சிலுவை, எருசலேமில் உள்ள புனித ஆலயம், இயேசுவின் அங்கி என இன்னும் பலவற்றை கடவுள் பாதுகாத்துள்ளதாக நம்புவது போல் நடிக்கிறது. அந்த நம்பிக்கையினால் சம்பாதிக்கவும் செய்கிறது. ஆனால் கடவுள் அசல் கையெழுத்துப் பிரதிகளை ஏன் பாதுகாக்கவில்லை என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை. அசல் கையெழுத்துப் பிரதிகள் இருந்ததேயில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். நான் இதைப் பற்றி உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் நகங்களும், எலும்புகளும் கடவுளால் பாதுகாக்கப்பட்டுள்ள போது ஏன் அசல் கையெழுத்துப் பிரதிகள் காணாமற்போயின? அருட்கிளர்வால் எழுதப்பட்ட நூற்கள் காணாமற்போக அல்லது பூச்சிகளால் அரிக்கப்பட்டுப் போக கடவுள் அனுமதிப்பாரா?

 

கிடைத்துள்ள ஆவணங்களையும் நாம் கவனமாக ஆராய்ந்தால் அவை ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் காணலாம். மத்தேயு கொடுத்துள்ள இயேசுவின் வம்சவரலாறு லூக்கா கொடுத்துள்ள வம்ச வரலாற்றிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் அந்த வம்ச வரலாற்றை நாளாகமங்களில் இருந்தே எடுத்துள்ளார்கள் என்பது தெளிவு. ஒரு சுவிசேஷகர் இயேசு சாலமோனின் பரம்பரையில் வந்தவர் என்கிறார். அதாவது இயேசு கள்ளக் காதலின் மூலம் உருவான வம்சத்தில் வந்தவர் என்கிறார். இன்னொருவர் இயேசு நாத்தானின் பரம்பரையில் வந்தவர் என்கிறார்.

 

லூக்கா யோசேப்பின் தந்தையின் பெயர் ஏலி என்கிறார். மத்தேயு யோசேப்பின் தந்தையின் பெயர் யாக்கோபு என்கிறார். சுவிசேஷகர்கள் யோசேப்பின் சமகாலத்தவர்களாய் இருந்தால் அவர்களால் யாக்கோபின் தந்தையின் பெயரைத் தெளிவாகக கூறியிருக்க முடியும்.

 

    யோசேப்பு இயேசுவின் தந்தையில்லையென்றால் ஏன் இந்த சுவிசேஷகர்கள் யோசேப்பின் வம்ச வரலாற்றைக் கூறுகின்றனர்? மரியாள் தாவீதின் வம்சத்தவள் என்று அவர்கள் வம்ச வரலாற்றின் மூலம் நிரூபித்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட தகவல்கள் சுவிசேஷங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்குகின்றன. இயேசு உண்மையில் வாழ்ந்த மனிதராகவும், சுவிசேஷங்களை எழுதியவர்கள் இயேசுவின் சமகாலத் தோழர்களாகவும், அருட்கிளர்வு பெற்றவர்களாகவும் இருந்தால் ஏன் வம்ச வரலாற்றில் முரண்பாடுகளும், தவறுகளும் காணப்படுகின்றன?

 

இயேசு ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்பதை ஒரு நிகழ்வின் மூலமாக எடுத்துக் காட்டலாம். ஞானஸ்நானங்கொடுக்கும் யோவான் பகிரங்கமாக இயேசுவே கிறிஸ்து என்றும், தான் அவர் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதியுடைவன் அல்ல என்றும் கூறுகிறார். சுவிசேஷங்களின் கூற்றுப்படி புனித ஆவி ஒரு புறாவைப் போல் இயேசுவின் மீது வந்திறங்கி, வானத்திலிருந்து இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் நான் பிரியமாயிருக்கிறேன் என்ற சத்தம் புறப்பட்ட போது யோவானும் உடனிருந்தார்.

 

    சில அத்தியாயங்கள் கழித்து யோவான் தான் கூறியதை அப்படியே மறந்து விட்டு தனது இரண்டு சீடர்களை இயேசுவிடம் அனுப்பி அவர் யாரென்று விசாரித்து வரச் சொல்கிறார். இது நிகழக்கூடிய ஒன்றா? இதன்மூலம் நமக்குக் கிடைக்கும் முடிவு என்னவென்றால் எழுத்தாளர் தன்னிடமிருந்த இரண்டுவித கற்பனைக் கதைகளையும் ஒன்றாகக் கலந்துவிட்டார் என்பதாகும்.

 

சுவிசேஷ ஆசிரியர்களின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கு இன்னொரு உதாரணம் நான்காம் சுவிசேஷத்தின் முடிவாகும். இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். இது ஒரு புராணக் கதையாசிரியரின் கூற்றாக இருக்கலாமேயொழிய சரித்திராசிரியனின் கூற்றாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கூற்றைத் தரும் ஒருவரின் மீது நாம் எந்த அளவு நம்பிக்கை வைக்க முடியும்? ஒரு மத ஸ்தாபகரின் பொதுவாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு வருடமே இருந்தது. அவரைப் பற்றி சொல்லப்படாதவை  உலகங்கொள்ளாதவையாம். சொல்லப்பட்டவை சில பக்கங்களாம். இதுவே சுவிசேஷகர்களது கூற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

 

நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இயேசுவின் வாழ்க்கை வரலாறு என்று வந்த நூற்கள் இயேசுவும் அவரது சீடர்களும் பேசியதாகக் கூறப்படும் மொழியில் எழுதப்படவில்லை. அவைகளில் எழுதப்பட்ட காலமும் இல்லை. எழுதியவரின் கையெழுத்தும் இல்லை. இயேசுவும் அவரது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் யூதர்கள். ஆனால் சுவிசேஷங்கள் ஏன் கிரேக்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன? அவை எபிரேய மூலங்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாயிருப்பின், நாம் மூலங்களை ஒப்பிட்டுப்பார்க்காமல் மொழிபெயர்ப்பு சரியானது என்று எப்படிக் கூற முடியும்? ஏன் சுவிசேஷங்கள் அநாமதேயமாகக் காட்சியளிக்கின்றன? ஏன் அவற்றில் காலம் குறிப்பிடப்படவில்லை? ஆனாலும் நாம் நமக்குக் கிடைத்துள்ள மூலங்களாகக் (சிறு துண்டுகள்) கூறப்படுபவற்றுள் நம் ஆய்வை அடக்கிக் கொள்வோம். பண்டிதர்கள் இத்தகைய பழங்கால சொற்களை வாசிப்பதும், தெளிவில்லாததைப் புரிந்து, முரண்களைக் களைந்து மொழிபெயர்ப்பதுங் கடினம் என்கிறார்கள். இது எதைக் காட்டுகிறதென்றால் இறைவனின் வார்த்தைகள் என்று திருச்சபை அழைப்பவை மனிதனின் வார்த்தைகள் என்பது மட்டுமல்ல, தெளிவில்லாத தன்மையுடையதும் ஆகும்.

 

இவ்வாறு, இயேசுவின் மீதான நம்பிக்கை திருத்தப்பட்டதும், மாற்றப்பட்டதுமான இரண்டாம் நிலை ஆவணங்களிலும், காணாமற் போன மூலப்பிரதிகளிலும், சம்பவங்கள் நிகழ்ந்து சில காலங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட கைப்பிரதிகளிலும் என ஒன்றுக்கொன்று முரண்படும் ஆவணங்களின் அடிப்படையில் அமைந்தது ஆகும். இதுவே சரித்திரப்பூர்வமான இயேசுவின் அடிப்படை. இப்படிப்பட்ட போதாமையே கிறிஸ்தவப் போதகர்களை பொய்யான கற்பனைகளின் அடிப்படையில் இயங்க வைத்தது.

 

    இயேசுவைப் பற்றிய போதுமான ஆதாரங்கள் இருந்தால் ஏன் கிறிஸ்தவப் போதகர்கள் பொய்க் கற்பனைகளின் அடிப்படையில் இயங்க வேண்டும்? ஆதாரங்களைக் கேட்டவர்களுக்கு பதிலளிக்க முடியாத போதகர்களின் நிலையைப் பற்றியும், அவர்கள் பொயக் கற்பனைகளின் அடிப்படையில் இயங்கியதைப் பற்றியும் கிறிஸ்தவ எழுத்தாளர்களே கூறுகிறார்கள். சபையின் சரித்திர ஆசிரியரான மோஷீம் கூறுகிறார், திருச்சபைப் பிதாக்கள் ஏமாற்றுவதையும், பொய்க்கற்பனைகளையும் புனிதமான செயலாகக் கருதினார்கள்.”

 

    மேலும் அவர் கூறுகிறார், மிகப் பெரியவர்களாகவும், புனிதமானவர்களாகவும் கருதப்பட்ட திருச்சபைப் பிதாக்கள் கூட இந்த நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். இயேசு சரித்திரப்பூர்வமான மனிதராயிருந்தால் அவரது இருப்பை நிரூபிக்க ஏன் இப்படிப்பட்ட ஏமாற்று வித்தைகள் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றி ஒரு விசுவாசி நம்மிடம் கூறமாட்டாரா? இன்னொரு சரித்திராசிரியரான மில்மன் எழுதுகிறார், கிறிஸ்தவத்தின் ஆதிப் போதகர்களால் புனிதமான மோசடிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிஷப் எல்லிகாட், அது இலக்கிய மோசடிகளின் காலம் என்று இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் காலத்தைப் பற்றிக் கூறுகிறார். அதிக அளவிலான புத்தகங்கள் மோசடி வேலைக்காகவே எழுதப்பட்டன” என்று முனைவர் கைல்ஸ் கூறுகிறார். சில பிரிவினர்களின் கோணங்களிலிருந்து ஏகப்பட்ட போலியான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன என்று முனைவர் ராபர்ட்சன் ஸ்மித் கூறுகிறார். இப்பொழுது கிறிஸ்தவ திருச்சபையால் தடைசெய்யபட்ட நூற்கள் ஒரு காலத்தில் அருள்வெளிப்பாடுகளாகக் கருதப்பட்டன. இப்பொழுது நம்பப்படும் நூற்கள் ஒரு காலத்தில் அதிகாரமற்றவையாகக் கருதப்பட்டன. இயேசு சரித்திரப்பூர்வமான நபராயிருந்தால் அவரைச்சுற்றி ஏன் இத்தனை மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இயேசு கற்பனைக் கதாபாத்திரமாக இருந்தால் இத்தகைய செப்பிடுவித்தைகள் இயல்பானவையே என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

    இயேசுவின் ஆதிவிசுவாசிகள் இத்தகைய மறுப்பின் தாக்குதலைத் தாங்காமல் மோசடிவித்தைகளில் இறங்கினார்கள் என்பது நாம் புரிந்துகொள்ளக் கூடியதே.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

  கிறிஸ்தவத்தின் துவக்க கால எதிரிகளில் ஒருவர் போர்பிரிரி என்ற சிலை வணக்கக் காரர் ஆவார். ஆனால் ஆதித் திருச்சபைப் பிதாக்கள் அவரது எழுத்துகளிலும் தங்கள் செப்பிடுவித்தையைக் காட்டாமல் விட்டுவைக்கவில்லை. முதலில் இவரது நூற்கள் அனைத்தையும் அழித்து விட்டார்கள். இறைவாக்கின் தத்துவம், என்று ஒரு கிறிஸ்தவ நூலை எழுதப்பட்டது. அதற்கு எழுத்தாளர் என்று இதே போர்பிரிரியை அறிவித்தார்கள். பரி.அகஸ்டின் இதை போலி என்று சொல்லி மறுதலித்தார். இப்படிப்பட்ட மோசடிவித்தைகளில் இருந்து இயேசுவின் இருப்பை நிரூபிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைகளும், தடுக்கப்பட்ட நூற்களும், போலியான ஆவணங்களும் இயேசுவின் இருப்பை நிரூபிப்பதற்கு உதவுகின்றனவா? இப்படிப்பட்ட சந்தேகோபஸ்தமான ஆவணங்களின் மொத்த உற்பத்தியும், பிற மதத்தவரின் இலக்கியங்களை வெறியோடு அழித்ததும் இயேசு கற்பனையல்ல என்று நிரூபிக்க முயற்சித்தவர்களின் செயல்களே. இப்படிப்பட்ட அனைத்தும் ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உண்மை என்று நிரூபிக்க முயற்சி எடுப்பது எவ்வளவு கடினமானது என்பதைத் தெளிவாக்குகிறது.

3.கன்னியரின் குழந்தைகள்

    கன்னிக்குப் பிறந்த கடவுள்களின் கதைகள் எல்லா நாடுகளிலும், எல்லா காலங்களிலும் காணப்படுகின்றன. எத்தனையோ கன்னித் தாய்மார்கள் புராணங்களில் காணப்படுகிறார்கள். கன்னி மரியாள் தன் குழந்தையுடன் காட்சியளிப்பது ஒரு பழைய புராணத்தின் மொழிபெயர்ப்பு. சீனம், இந்தியா, கிரீஸ், பாபிலோன், எகிப்து, ரோம் முதலிய பிரதேசங்களிலும் கடவுள்கள் தாங்கள் பூமிக்குள் வர ஒரு நல்ல குடும்பப் பெண்ணை தேர்ந்தெடுத்ததாகப் பல கதைகள் உலாவுகின்றன. அவர்கள் தங்கள் மனித அவதாரத்திலும் தங்கள் தெய்வீகத் தன்மையைக் காப்பதற்காக ஒரு தெய்வீகத் தந்தையின் மூலமாக பிறக்கின்றனர். ஜுப்பிட்டர் ஒரு அன்னத்தின் வடிவத்தில் லெடாவை அணுகினார். யெகோவா புறாவின் வடிவில் மரியாளின் மேல் நிழலிட்டார்.

    ஒரு நதியில் குளித்துக் கொண்டிருந்த வனதேவதை ஒரு தாமரைச் செடியினால் தொடப்பட்டு தெய்வக் குழந்தையான ஃபோகிக்கு பிறப்பளித்தாள்.

    சியாமில் சூரியக்கிரணம் பதிவயதில் இருக்கும் ஒரு பெண்ணை அணைக்கிறது. கோதோம் என்னும் மகான் பிறக்கிறார். புத்தரின் கதையில் புத்தர் தெய்வீகத்தன்மை பொருந்திய ராணியாகிய மாயாதேவியின் கருப்பைக்குள் நுழைந்து உலகினைக் காக்க அவளது வலப்பக்கமாகப் பிறந்தார் என்று கூறப்படுகிறது. கிரீஸ் நாட்டில் அப்பொல்லோ ஏதென்சில் உள்ள ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கிறார். பிளேட்டோ பிறக்கிறார்.

    பழங்கால மெக்ஸிகோவிலும், பாபிலோனிலும், இக்கால கொரியாவிலும், பாலஸ்தீனத்திலும் கன்னிகள் குழந்தை பெறும் கதைகளுக்குப் பஞ்சமில்லை.

    இத்தகைய கதைகளுக்கு அடிப்படை எகிப்து நாட்டில் உள்ளது. இயேசு பிறப்பதற்கு 1800 வருடங்களுக்கு முன் எகிப்து நாட்டில் லக்ஸரில் உள்ள பெரிய ஆலயம் ஒன்றில் சுவரில் செதுக்கப்பட்ட காட்சிகளில் இதைப் பார்க்கிறோம். அங்கே மூன்றாம் அமென்ஹோதப்  அரசரின் அவதாரத்துக்கான அறிவிப்பும், கருத்தரித்தலும், பிறப்பும் செதுக்கப்பட்டுள்ளன. அவை இயேசுவின் வாழ்க்கைச் சித்திரத்தையே பிரதிபலிக்கின்றன. எகிப்தியர்கள் கத்தோலிக்கரிடம் இருந்து இந்தச் சித்திரக் கதையை கடன் வாங்கினார்கள் என்று நமது கிறிஸ்தவ பாதிரியார்கள் வாதிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்! மால்வெர்ட் கூறுகிறார், லூக்காவின் சுவிசேஷத்தின் ஒன்றாம், இரண்டாம் அத்தியாயங்கள் அமென்ஹோதப்பின் பிறப்புக் கதையிலிருந்தே களவாடப்பட்டன.

    எகிப்திய புராணக்கதைகளைப் பற்றி கூர்மையான அறிவுடைய ஜி.டபிள்யூ.பூட் தனது  வேதாகமக் காதல் கதைகள் என்றும் நூலில் லக்ஸர் சித்திரங்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார், இடப்பக்கத்திலிருந்து முதல் காட்சியில் தாஹ்த என்றும், லோகோஸ் (தெய்வீக வார்த்தை) என்றும் அறியப்படும் எகிப்தியக்கடவுள் கன்னியான அரசி ஒரு குழந்தைக்கு பிறப்பளிக்கப் போவதைப் பற்றி அவளுக்கு அறிவிக்கிறது. இரண்டாவது காட்சியில் க்னேப் கடவுள் (ஹாத்தோர் கடவுளுடன்) அவளுக்குள் ஒரு உயிரைச் செலுத்துகிறது. இதுவே புனித ஆவி அல்லது கருவை உண்டாக்கிய ஆவி எனலாம். அடுத்ததாக இருக்கும் காட்சியில் தாயார் குழந்தை பெற்றுவிட்டாள். ஒரு தாதி குழந்தையை கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாள். நான்காவது காட்சியில் அந்தக் குழந்தை அரியணையில் அமர்ந்திருக்கிறது. கடவுளரிடமிருந்தும், மனிதரிடமிருந்தும் பரிசுகளையும், பணிவையும் ஏற்றுக் கொள்கிறது. லக்ஸர் கோயிலில் இருக்கும் இச்சித்திரத்தை பெயரற்ற சுவிசேஷ எழுத்தாளர் தனது சுவிசேஷத்தின் மூலமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். அவர்கள் எதனிடமிருந்து இக்கதையைக் கடன் பெற்றார்களோ அதை மறைத்து விட்டார்கள்.

    கன்னித்தாயின் கதை மட்டுமல்ல. அதிசயங்கள், மாட்டுக் கொட்டிலில் தொட்டில், வழிகாட்டி நட்சத்திரம், குழந்தைகளின் படுகொலை, எகிப்துக்கு ஓடுதல், உயிர்த்தெழுதல், உயிரோடு வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் போன்ற சம்பவங்களும் கடன் வாங்கப்பட்டவையே.

    ஆக ஆதிக்கால கிறிஸ்தவர்கள் இயேசுவின் கதையையும், தங்களின் பிற நம்பிக்கைகளையும் புற மதத்தவரின் நூற்களில் இருந்து கடன் வாங்கினர் என்று தெளிவாகிறது. எகிப்தியர்களைப் பற்றிய தனது நூலில் ஜெரால்டு மாஸே என்பவர் இயேசுவின் தாயாகிய மரியாளின் கதை ஹோரசின் தாயாகிய ஐசிசின் கதையோடு பொருந்துகிறது என்கிறார். மிகப்பழமையான, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட, புகை படிந்த  கன்னியையும், குழந்தையையும் கொண்ட பைஜாண்டிய ஓவியங்கள் நாசரேத்தில் உள்ள ஒரு மனிதத் தாயைக் காட்டவில்லை. ஐசிசையே காட்டுகின்றன. அறிவியலும், ஆய்வும் இதை உண்மை என்று நிரூபித்து விட்டன. ஒரு பக்கம் அறியாமையும், இன்னொரு பக்கம் ஆர்வமும் மட்டுமே அந்த அநாமதேய, தேதியிடப்படாத ஆவணங்களை அருள் வெளிப்பாடுகள் என்று சொல்ல வைக்கிள்றன. இயேசு செய்ததாக சொல்லி களவாடப்பட்ட அற்;புதங்களையும், கட்டுக்கதைகளையும், அவர் பிற மதங்களின் சாரத்திலிருந்து எடுத்து  உபதேசித்ததாகக் கூறப்பட்டவற்றையும் நீக்கி விட்டால் அவரிடம் என்ன மிச்சமிருக்கும்? அவரது உபதேசங்கள் என்பவை பிற மதங்களிலிருந்து எடுக்கப்பட்டு அவர் கூறியதாக அவர் வாயில் திணிக்கப்பட்டன என்றும், அவரைப் பற்றிய கதைகள் பிற மதங்களின் புராணங்களிலிருந்து தொகுக்கப்பட்டன என்ற அறிவும் மட்டுமே மிச்சமிருக்கும்.

    கிறிஸ்தவ மதத்தின் எல்லாக் கொள்கைகளும், விழாக்களும் பழைய மதங்களில் இருந்தே களவாடப்பட்டன. உயிர்த்தெழுதல், வானில் ஏறுதல், திருவிருந்து, திருமுழுக்கு, முழங்காற்படியிட்டு வழிபடுதல், மார்பில் கைகட்டிக் கொள்ளுதல், மணியடித்தல், தூபங்காட்டுதல், ஆலயங்களில் உபயோகிக்கப்படும் அங்கிகள், பாத்திரங்கள், மெழுகுவர்த்தி, புனித நீர் இவையனைத்துமே பழங்கால மதங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்தால் களவாடப்பட்ட சடங்குகள். திரியேக தத்துவம் கிறிஸ்தவ மதத்தைப் போல வேறு மதங்களிலும் உள்ளது. கடவுளின் மகன் என்னும் கோட்பாடு மிக மிகப் பழமையானது. எல்லா புராணக்கதைகளிலும் கதிரவனே வானத்தின் மகனாகக் காணப்படுகிறான். கதிரவன் உண்மை அல்லது கடவுளின் மகனாகவும், ஆகாயம் கடவுளாகவும் கூறப்படுகிறது. இயேசுவின் தலையைச் சுற்றியுள்ள ஒளிவட்டமும், பிறமதத்தவரின் கடவுளரின் கொம்புகளும், இந்து மதத்தவர் மற்றும் பிறமதத்தவரின் கடவுளரின் தலையிலிருந்து புறப்படும் ஒளிக்கிரணங்களும் கிறிஸ்தவ மதத்தவரின் நம்பிக்கைகள் புதுமையானதல்ல என்று நிரூபிக்கின்றன.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

காம்பிங் vs இயேசு கிறிஸ்து

Yles

 
Spread the love
 
 

செப்டம்பர் 7, 1994 அன்று, ஹரோல்ட் கேம்பிங் அவர்களும் அவரது ஆதரவாளர்களும் சர்ச்சுக்கு போகும்போது உடுத்து சிறந்த ஞாயிற்றுக்கிழமை உடைகளுடன், விவிலியத்தை திறந்து வைத்துகொண்டு வான் நோக்கி பார்த்து இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்தார்கள்.செம்டம்பர் 8 ஆம் தேதி, ரப்சர் Rapture என்று கிறிஸ்துவர்கள் எதிர்பார்க்கும் எந்த வித நிகழ்வும் இல்லாமல் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல சூரியன் உதித்தது. ஹரோல்ட் காம்பிங் தனது கணக்கில் ஏதோ ஒரு தவறை கண்டுபிடித்தார். ரப்சர் ஏற்படும் நாளை (இயேசு திரும்பி வரும் நாளை) மே 21, 2011க்கு மாற்றி அமைத்தார்; இன்னொரு நாளும் வந்தது. அதுவும் எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் கடந்து சென்றது.

கேம்பிங் அவர்களது கணிப்பு பற்றி ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்து பெரிய புயலை கிளப்பிகொண்டிருந்த போது, பல செய்திகளில் பின்னூட்டம் இடுபவர்களில், கேம்பிங் அவர்களை பின் தொடர்பவர்களை கிண்டல் செய்பவர்களாகவும், அவர்களை கண்டிப்பவர்களாகவும் பெரும்பாலும் கிறிஸ்துவர்களாகவே இருக்கக்கண்டேன். நான் படித்த ஒரு கட்டுரையில், கேம்பிங் அவர்கலது பேமிலி ரேடியோவை 1994இல் அவர் தோல்வியடைந்த கணிப்பை வெளியிட்டதிலிருந்து பின் தொடரும் நபரை பற்றியும் குறிப்பிட்டிருந்தது. ஒரு சிலர் சிரித்தாலும், ஒரு சிலர் கண்களை உருட்டினாலும், ஒரு சிலர் திட்டினாலும், ஒருவரது தீர்க்கதரிசனம் தோல்வியடைந்த பின்னாலும் ஏன் அவரை பின்பற்றுகிறார்கள் என்று இந்த கிறிஸ்துவ சமூகம் புரிந்துகொள்ளமுடியாமல் திணறியது.

தனிப்பட்ட முறையில், திரும்பத்திரும்ப தனது தலைமுறையை சேர்ந்தவர்கள், தன் முன்னால் நிற்கும் அப்போஸ்தலர்கள் உயிருடன் இருந்து, தான் இரண்டாவதாக திரும்பவும் வருவதை காண்பார்கள் என்று இயேசு சொல்வதை பற்றிய பைபிள் வசனங்களை படித்த போதே என்னுடைய கிறிஸ்துவ மத நம்பிக்கை உடைய ஆரம்பித்தது. என்னதான் தலைகீழாக திருப்பி அந்த வசனங்களை கிறிஸ்துவ பிரச்சாரகர்கள் விளக்க முயன்றாலும், அவரது வசனங்கள் என்ன சொல்கின்றனவோ அதை தவிர அதற்கு எதிர்ப்பதமான விளக்கத்தை கொடுத்து என்னை ஏமாற்றமுடியாது. பைபிளின் கீழ்த்தரமான ஒழுக்கநிலைப்பாடுகளும், அதன் தொடர்ந்த தவறுகளும் தனியாக இருக்க, பைபிளே இயேசு கிறிஸ்துவை ஒரு பொய் தீர்க்கதரிசியாக சிறப்பாக காட்டுகிறது. ஆமாம், ஒரு ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் பேசிய அப்போஸ்தலர்களும் அவரது தலைமுறையும் போய் விட்டன. அதன் பின்னால் வந்த பல தலைமுறைகளும் இயேசுவின் இரண்டாம் வருகை இல்லாமலேயே வந்து சென்றுவிட்டன. இருப்பினும், கேம்பிங் அவர்களை 1994இல் தோல்வியடைந்த தீர்க்கதரிசனத்தின் பின்னாலும் பின்பற்றுபவர்களைப் போல, பல கோடிக்கணக்கான கிறிஸ்துவர்கள் இயேசுவின் தெளிவாகவே தவறான தீர்க்கதரிசனத்தை புறம் தள்ளிவிட்டு தனக்கு வசதியானதை வைத்துகொண்டிருக்கிறார்கள்.

கேம்பிங் அவர்களது தோல்வியடைந்த மே 21 இறுதி தீர்ப்பு நாள் தீர்க்கதரிசனத்துக்கு ஆதாரமாக அவர் காட்டுவது பைபிளின் காரண்டியே. மே 22ஆம் தேதி நானும் என் நண்பரும் யூட்யூபில் மே 21ஆம் தேதி நிச்சயமாக இயேசு இரண்டாவதாக வருகிறார் என்று உறுதியாக கூறுவதை பார்த்தோம். இவ்வாறு கூறும் இந்த யூட்யூப் விசுவாசி நிச்சயமாக அக்டோபர் தாண்டியும் கேம்பிங் அவர்களை பின் தொடர்பவராகவே இருப்பார் என்று நம்புகிறேன். இது பற்றி எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவர் தனது நேரம் பணம் ஆகியவற்றை செலவு செய்திருப்பது மட்டுமல்ல, தனது வேலையையும் விட்டுவிடு, குடும்பம் வீட்டையும் விட்டுவிட்டு இந்த தீர்க்கதரிசனத்துக்காக தனது எதிர்கால வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கக்கூடும். பலர் மே 21ஆம் தேதி மிகத்தெளிவாக பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது என்று முழுமையாக நம்பியிருப்பார்கள். கேம்பிங் அவர்களை விட்டுக்கொடுப்பது என்பது தங்களது சொந்த நம்பிக்கையையே விட்டுக்கொடுப்பது போன்றது. பெரும்பாலானவர்கள் அதற்கு தயாராக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இதே காரணத்துக்காகத்தான் பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்து பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தாலும், அதனை உதாசீனம் செய்துவிடுகிறார்கள். பைபிள் பொய் என்றால் தங்களது முழு நம்பிக்கையுமே பொய்.

இது போன்ற ஒருவனாக நான் இருந்ததால், இது ஒப்புக்கொள்ள மிக மிக கடினமான ஒன்று என்பதை அறிவேன். திறந்து வைத்த பைபிளின் முன்னே, கண்ணீர் அந்த பக்கங்களில் சிதற, இயேசுவின் வார்த்தைகளில் ஒரு ஆழமான கருத்தை கண்டுகொள்ள நான் துடித்தேன். பரிசுத்த ஆவி என்னை வழிநடத்தி அதன் உண்மையான கருத்தை அறிந்துகொள்ள வைக்க பிரார்த்தித்தேன். புத்தகங்களையும் ஏராளமான இணையப்பக்கங்களையும் தேடி அவற்றுக்கு பதில் தேடினேன். பலருக்கு எழுதினேன். ஆனால் யாருமே எனக்கு திருப்திகரமான பதில் அளிக்கவில்லை. கிறிஸ்துவம் உண்மை அல்ல. இறுதியாக கிறிஸ்துவத்தை நான் விட்டேன். ஆனால் பல கிறிஸ்துவர்களால் அது முடியாது என்பதை அறிவேன்.

ஆகவே, 1994இன் தோல்வியடைந்த தீர்க்கதரிசனத்தின் பிறகும் பலர் கேம்பிங் அவர்களின் பின்னே பின் தொடர்வார்கள் என்பதை மக்கள், அதுவும் கிறிஸ்துவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அக்டோபர் 21க்கு பிறகும் இன்னும் பலர் அவர்கள் பின் தொடர்பவர்களை கிறிஸ்துவர்கள் நிச்சயம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை.

ஆங்கில இணையப்பக்கம்
http://new.exchristian.net/2011/06/camping-vs-christ.html#disqus_thread
இதில் சில பின்னூட்டங்களும் இருக்கின்றன
பின் குறிப்புகள்
1) ஹரோல்ட் காம்பிங்
http://en.wikipedia.org/wiki/Harold_Camping
ஹரோல்ட் காம்பிங் என்ற கிறிஸ்துவ மத பிரச்சாரகர், இயேசு எப்போது திரும்ப வருகிறார் என்பதை பற்றி பைபிள் சொல்வதை வைத்து மே 21 1988 என்று முதலில் சொன்னார். அது நடக்கவில்லை என்றதும், செப்டம்பர் 7, 1994 என்று கணக்கை சரி செய்தார். அப்போது நடக்கவில்லை. பிறகு மே 21 2011 தான் இயேசு திரும்ப வருகிறார் என்று உறுதியாக பிரச்சாரம் செய்தார். அதுவும் நடக்கவில்லை என்றதும், இப்போது உறுதியாக அக்டோபர் 21ஆம் தேதி 2011இல் பிரபஞ்சமே முழுமையாக அழிந்துவிடும் என்று சொல்லி வருகிறார். இவருக்கு இப்போது வயது 90. அமெரிக்காவில் சுமார் 150 ரேடியோ நிலையங்களை நடத்தும் இவர் இப்படியான பிரச்சாரத்தின் மூலம் பெரும் பணக்காரராக ஆகியிருக்கிறார்.

2) மாற்கு 13 அதிகாரம்
23. நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
24. அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும்;
25. வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.
26. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
27. அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலுதிசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்.
28. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
29. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
30. இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 24
29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

30. அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
32. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
34. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 21
26. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
27. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
28. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
29. அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30. அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
31. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
32. இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மொழிபெயர்ப்பு:

மல்லித்தம்பி__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யூத மெஸையாக்கள் (Messiahs)


pl0127066.jpg

 

வாழ் முறை

சரக்குப்பெட்டி மதங்களுக்கும் ஆரம்பகால கிரிஸ்துவ மத நம்பிக்கைகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை கவனித்திருப்பீர்கள் என்று நிச்சயம் கருதுகிறேன். நாசரேத்தின் இயேசு, கொடூரமானவர்களின் வீழ்ச்சியையும், ஏழைகளுக்கு நீதியையும், துன்பம் வருத்தம் ஆகியவற்றின் முடிவையும், இறந்தவர்களுடன் மீண்டும் இணைவதையும், புத்தம்புது தெய்வீக ராஜாங்கம் உருவாகும் என்ற நம்பிக்கையையும் தீர்க்கதரிசனமாகக் கூறினார். யாலியும் அதைத்தான் கூறினார். நமது (மேலைநாடுகளின்) மத நம்பிக்கைகளின் தோற்றத்தையும் புரிந்துகொள்ள சரக்குப்பெட்டி மர்மம் நமக்கு (மேலைநாடுகளுக்கு) உதவுமா ?

முக்கியமான வேறுபாடுகள் இருப்பது போல தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்பை வீழ்த்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோடுகளுடைய ஒரு நிலப்பரப்பைக் குறிவைத்தும் சரக்குப்பெட்டி மதங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. நியுகினியில் உள்ள போலீஸ்காரர்களை எதிர்த்தும், ராணுவத் துருப்புக்களை எதிர்த்தும் போராடும் பழங்குடியினர் தங்கள் போரில் மூதாதையர்கள் ஆயுதங்களை ஏந்திய போர்வீரர்களாக உயிர்கொண்டு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்பையும் வீழ்த்த நாசரேத்தின் இயேசு ஆர்வப்படவில்லை. அவர் அரசியலுக்கு மேலானவர். அவரது ராஜாங்கம், ‘இந்த உலகத்தினது அல்ல ‘. கிரிஸ்துவர்கள் கொடூரமானவர்களுக்கு எதிரான ‘போர்களில் ‘, அவர்களது ‘வாள்கள் ‘, ‘நெருப்புகள் ‘, ‘வெற்றிகள் ‘ ஆகியவை ஆன்மீக தளத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு கொடுக்கப்பட்ட பூமி சார்ந்த உவமேயங்கள். குறைந்த பட்சம், ஏறத்தாழ, இதைத்தான் இயேசு மதம் கூறுகின்றது என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

மறுமையை முக்கியமான அங்கமாக கொண்ட வாழ்நெறி, சமாதானம், அன்பு, சுயநலமின்மை ஆகியவற்றுக்கு அர்ப்பணித்துக்கொண்ட வாழ்நெறி மிகவும் அடிப்படையான முறையில் ஒரு சாதாரண பெளதீக காரணங்களுக்காக தோன்றியது என்பது சாத்தியமற்றது என்றே தோன்றும். இருப்பினும் இந்தப் புதிர், மற்ற எல்லா புதிர்களையும் போலவே, மக்கள் மற்றும் நாடுகளின் அடிப்படை நடைமுறைகளின் மீதே பதிலையும் கொண்டிருக்கிறது.

உண்மையில் இரண்டு புதிர்களை கவனிக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதர்கள் மத்தியில் கிரிஸ்துவ மதம் முதலில் தோன்றியது. கிரிஸ்துவின் காலத்தில் இருந்த யூத மதத்தில் முக்கியமான அங்கமாக ஒரு மெஸைய்யா -(மனிதன் போல தோற்றமளிக்கும் சிறுதெய்வம் அல்லது தெய்வாம்சம் பொருந்திய மனிதன்) – இன் வருகை இருந்தது. இயேசுவை பின்பற்றியவர்கள் அனைவருமே (ஏறத்தாழ அனைவருமே யூதர்கள்) இயேசுவே அந்த மெஸைய்யா என்று நம்பினார்கள். (கிரிஸ்து என்ற வார்த்தை Krystos என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இது யூதர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் மெஸைய்யாவை கிரேக்கத்தில் குறிப்பிட உபயோகித்த வார்த்தை) ஆரம்ப கால கிரிஸ்துவ வாழ்க்கை முறைகள் (lifestyles) பற்றிய புதிரை விளக்க மெஸைய்யாவைப் பற்றிய யூதர்களின் நம்பிக்கையை நான் விளக்க வேண்டும்.

நவீன காலத்திய மக்களைப் போலவே, புராதன காலத்து மக்களும் தெய்வீக உதவியில்லாமல் போர்களில் வெற்றி பெற முடியாது என்று நம்பினார்கள். ஒரு பேரரசை நிறுவனம் செய்யவும், ஏன் ஒரு தனிநாடாக இருக்கக்கூட, மூதாதையர்கள், தேவர்கள் (Angels), தெய்வங்கள் ஆகியவர்கள் ஆதரிக்கக்கூடிய போர்வீரர்கள் தேவை.

யூதர்களின் முதலாவதும் மிகப்பெரியதானதுமான யூதப்பேரரசை நிர்மாணித்த டேவிட், தான் யூத தெய்வமான யெஹ்வா (Jahweh அல்லது யூதர் எழுத்தில் JHWH)உடன் தெய்வீகக் கூட்டணியில் இருப்பதாக கூறினார். மக்கள் டேவிடை மெஸையா (messiah, யூத உச்சரிப்பில் mashia) என்று அழைத்தனர். இந்த வார்த்தை, யூத மதகுருக்கள், கவசங்கள், டேவிடுக்கு முன்னால் இருந்த சாவுல் (Saul), டேவிடின் மகன் சாலமன் ஆகியொருக்கும் உபயோகிக்கப்பட்டது. ஆகவே மெஸையா என்ற வார்த்தை எந்தவொரு தெய்வீக சக்தி பொருந்திய ஆளையோ அல்லது பொருளையோ குறிப்பிட உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை. டேவிடை அபிஷேகம் பண்ணப்பட்டவர் (Anointed one என்ற வார்த்தையின் தமிழ் பைபிள் மொழிபெயர்ப்பு) என்றும் அழைத்தனர். அதாவது டேவிட், யெஹ்வா தெய்வத்துடன் கூட்டணியாக இருந்து, யெஹ்வாவின் பூமிப் பிரதேசங்களை ஆள பாத்தியதை கொண்டவர்.

டேவிடின் இயற்பெயர் எல்ஹானன் பென் ஜெஸ்ஸி (Elhanan ben Jesse). போர்க்களத்தில் அவர் பெற்ற வெற்றிகளைக் கொண்டாட அவருக்கு அளிக்கப்பட்ட பெயர்தான் டேவிட். மிக எளிய ஆரம்பத்திலிருந்து அவர் பெற்ற உச்ச அதிகாரமே – அவரது வாழ்க்கை வரலாறே- யூத ராணுவ மெஸையாவுக்கு இலக்கணமாக இருந்தது. அவர் பெத்லஹேமில் பிறந்தார். அவரது இளமைக்காலத்தில் ஒரு ஆட்டிடையனாக இருந்தார். பிறகு ஜுடாயா (Judea) பாலைவனத்தில் இருந்த கொரில்லாப் படைக்குத் தலைவராக இருந்தார். தனது மைய இடமாக ஒரு குகையைக் கொண்டிருந்தார். கோலியாத்துக்கு எதிரான போரில் வெற்றி பெற்றது போன்று, மாபெரும் தடைகளுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார்.

இயேசுவின் காலத்திலும், யூத மதகுருக்கள் டேவிடுடன் யாஹ்வா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார் என்று வலியுறுத்தி வந்திருந்தனர். டேவிடின் வம்சம் என்றும் முடிவுறாது என்று யாஹ்வா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், டேவிடின் பேரரசு அவர் இறந்த உடனேயே நொறுங்க ஆரம்பித்துவிட்டது. நெபுசாட்னெஜ்ஜர் (Nebuchadnezzar) ஜெருசலத்தை கி மு 586இல் கைப்பற்றியபோது தற்காலிகமாக யூத பேரரசு காணாமல் போயிற்று. அங்கிருந்த யூதர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் பாபிலோனியாவுக்கு(தற்போதைய ஈராக்) நாடுகடத்தப்பட்டார்கள். அதன் பிறகு யூத அரசு மீண்டும் தோன்றினாலும், அது வேறு பேரரசுகளுக்கு கப்பம் கட்டும் சிற்றரசாகத்தான் அங்கிங்கும் அலைந்தாடியது.

யாஹ்வா மோஸஸிடம் சொன்னார், ‘நீங்கள் பல நாடுகள் மீது ஆட்சி செலுத்துவீர்கள். ஆனால் உங்கள் மீது அவர்கள் ஆட்சி செலுத்த மாட்டார்கள் ‘. இருப்பினும் யாஹ்வாவின் வாக்களிக்கப்பட்ட பூமி, உலகத்தை ஆக்கிரமித்து ஆட்சி செலுத்த வசதியற்ற பூமி. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் பேரரசுப்படைகள் எகிப்திலிருந்தும் எகிப்துக்கும் ஒன்றை ஒன்று துரத்தும் பூமி. பாலஸ்தீனத்தில் ஏதேனும் சுதந்திரமாக ஒரு பேரரசு தோன்ற வேர் விடும் முன்னர், பல கோடி ராணுவக் கால்கள் கொண்ட ராட்சதம் அதனை நசுக்கிவிட்டு ஒரு திசையிலிருந்து மறு திசை நோக்கிச் செல்லும். எகிப்தியர்கள், அசிரியர்கள், பாபிலோனியர்கள், பெர்ஷியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோர் இந்த புனித நிலத்தின் மீது முன்னும் பின்னும் சென்று, ஒரே இடத்தையே இரண்டு முறை எரித்து தனக்குப்பின் இன்னொருவர் எரிப்பதற்கு விட்டுவிட்டுச் சென்றார்கள்.

யெஹ்வாவின் புனிதப்புத்தகங்களில் சொல்லப்பட்டவைகளின் மீதான நம்பகத்தன்மையையும் யெஹ்வாவை நோக்கிய மதகுருக்களின் போதனைகள் மீதான நம்பகத்தன்மையையும் இப்படிப்பட்ட அனுபவங்கள் குறிப்பிடத்தக்க அளவு பாதித்தன. எத்தனையோ நாடுகள் மாபெரும் தேசங்களாக உருவாக அனுமதித்த யெஹ்வா ஏன் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அடிக்கடி ஆக்கிரமிக்கப்பட்டவர்களாகவும், அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கினார் ? ஏன் டேவிடுக்குக் கொடுத்த வாக்குறுதியை யெஹ்வா காப்பாற்றவில்லை ? யூத புனிதர்களும், இறைதூதர்களும், தீர்க்கதரிசிகளும் இந்த மாபெரும் மர்மத்தின் விடையைக் கண்டறிய மறுபடி மறுபடி முயன்றனர்.

அவர்களது விடை: டேவிடுக்கு கொடுத்த வாக்குறுதியை யெஹ்வா காப்பாற்றாததன் காரணம், யூதர்கள் யெஹ்வாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாததே. மக்கள் புனிதமான விதிகளைக் காப்பாற்றாமல், அசுத்தமான சடங்குகளை பின்பற்றி செய்துவிட்டார்கள். அவர்கள் பாவம் செய்துவிட்டார்கள். அவர்கள் குற்றவாளிகளாகிவிட்டார்கள். தங்கள் அழிவுக்குத் தாங்களே காரணமாகி விட்டார்கள். ஆனால், யெஹ்வா ஒரு மன்னிக்கக்கூடிய தெய்வம். இப்படிப்பட்ட தண்டனைகளுக்குப் பிறகும், யூதர்கள் தங்களது நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி யாஹ்வாவையே ஒரே உண்மையான தெய்வமாக வணங்கிவந்தால், அவர் மன்னித்து தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார். தாங்கள் என்ன செய்துவிட்டோம் என்று உணர்ந்து, தன்னுடைய தவறுகளை உணர்ந்து அவைகளுக்கு மன்னிப்பை கோரி, தங்கள் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்தால், யாஹ்வா மீண்டும் ஒப்பந்தத்தை சரிப்படுத்தி அவர்களை காப்பாற்றி, மீட்டு, முன்னைவிட உச்சத்துக்கு யூதர்களை கொண்டு செல்வார். மிகவும் மர்மமாக, எப்போது பிராயச்சித்தம் முழுமையாகிறதோ அப்போது – அந்தத் தருணம் யாஹ்வாவுகு மட்டுமே தெரியும் – தன்னுடைய மக்களுக்காக அவர் பழிவாங்குவார். யாஹ்வா டேவிடைப் போன்ற ஒரு ராணுவ இளவரசரை அனுப்பி வைப்பார். அவர், மெசையா, அபிஷேகம் பண்ணப்பட்டவர்(the anointed one), எதிரி தேசங்களை பூண்டோடு அழிப்பார். மாபெரும் யுத்தங்கள் நடைபெறும். போர்களாலும், நகரங்களின் வீழ்ச்சிகளாலும் பூமியே பொங்கியெழும் (heave).

அது இந்த உலகத்தின் முடிவு, இன்னொரு உலகத்தின் தொடக்கம். ஏனெனில், யெஹ்வா ஒரு மாபெரும் பரிசை யூதர்களுக்குக் கொடுக்க தயார் செய்துகொண்டிருக்கிறார், இல்லையெனில் இந்த அளவுக்கு யூதர்களை காத்திருக்க வைத்து, துன்பத்துள் ஆழ்த்தி வைத்திருக்க மாட்டார். ஆகவே, பழைய ஏற்பாடு பைபிள் முழுவதும், இஸையா, ஜெரெமியா, எஸக்கியல், மிகா, ஜக்கரியா (Isaiah, Jeremiah, Ezekiel, Micah, Zechariah) போன்ற மீட்பர்களான தீர்க்கதரிசிகள் ( Redemptive prophets) கூறிய வாக்குறுதிகளால் நிரம்பி உள்ளன. எல்லோருமே, ராணுவ மெஸையா வாழ்வு முறையை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று யூதர்களை வற்புறுத்தியும், அதற்கு அங்கீகாரம் அளித்தும் எழுதியிருக்கிறார்கள்.

இஸையா எழுதும்போது,(9:6) ‘அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானப்பிரபு ‘ (Wonderful counselor, might God, Everlasting Father, Prince of peace) ஆனவர், டேவிடின் சிம்மாசனத்தில் வீற்றிருந்து நிரந்தரமாய் ஆட்சி செய்வார் என்று கூறுகிறார். இந்த மெஸையா அஸிரியர்களுக்கு (10:6) ‘விரோதமாய் அனுப்பப்பட்டு, கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல மிதித்துப் போடவும் ‘ (Like the mire of the streets) செய்வார். பாபிலோன் நகரத்தில் (13.20) ‘காட்டு மிருகங்கள் படுத்துக்கொள்ளும், ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும், காட்டாடு அங்கே துள்ளும் ‘(inhabited by owls, satyrs and other doleful creatures) மோவப் (Moab) மக்கள், ‘வழுக்கை விழுந்து தாடி இல்லாதவர்களாக ஆவார்கள். டமாஸ்கஸ் அழிவுக்குவியல் ‘ (bald and beardless, reduce Damascus to a ruinous heap) ஆகும் என்கிறார். எகிப்தை உள்நாட்டுப்போருக்குள் இழுத்து, “ சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும், ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய்,” செய்வார்.(Everyone against his neighbor, city agaist the city and kingdom against the kingdom – Isaiah 19.2)

யாஹ்வா சொல்வதாக ஜெரெமியா எழுதுகிறார் “அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன், அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். ”( In those days and in that time, will I cause the Branch of Righteousness to grow up unto David; and he shall execute Judgement and righteousness in the land 33:15)

எகிப்தியர்களை “வாட்கள் உண்டு, அவர்களது ரத்தத்தில் திருப்தியாகி போதையுண்டு இருக்கும்”(தமிழ் பைபிள் “பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்” The sword shall devour, it shall be satiate and made drunk with their blood 46:10) பாலஸ்தீன “மனுஷர்கள் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள்.” (47:2 shall cry and all the inhabitants of the land shall howl) மோவாப் மக்களிடமிருந்து “அழுகையின்மேல் அழுகை எழும்பும், (48:5 continual weeping will go up) அம்மோன் நாடு “அது பாழான மண்மேடாகும், அதற்கடுத்த ஊர்களும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும், (49:2 a desolate heap and her daughters shall be burned in fire) “அப்படியே ஏதோம் பாழாகும்,” (49:17 Edom will be a ‘desolation), டமாஸ்கஸின் “வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள்” (49:26 the young men shall fall in her streets) “ஆத்சோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்” (49:33 Hazor will become ‘ a dwelling for dragons ‘) ஏலாமியர்கள் நிர்மூலமாக்குமட்டும், பட்டயத்தை பின்னால் அனுப்புவார் (Elam is to be ‘consumed by the sword ‘ 49:37) பாபிலோன் பகுதியோ, “கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து,

அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போட”ப்படும். (50:26 Come against he from the utmost border, open her store houses; cast her up as heaps and destroy her utterly ‘ let nothing of her be left)

கிமு 165இல் சிரியாவைச் சார்ந்த கிரேக்கர்களால் பாலஸ்தீனம் ஆளப்பட்டுக்கொண்டிருந்தபோது டேனியலின் புத்தகம் எழுதப்பட்டது. இதுவும் ராணுவ மெஸையாவான அபிஷேகம் பண்ணப்பட்டவர்( anoninted one) மூலமாக மாபெரும் யூத சாம்ராஜ்யம் நிறுவப்படுவதைப் பற்றி பேசுகிறது. “இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார். . . . சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜாங்கமும் கொடுக்கப்பட்டது. அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாதததுமாயிருக்கும்.” (7:13-14 I saw in the night visions, and behold the son of man came with the clouds of heaven… and there was given him dominion, and glory, and a kingdom, that all the peoples, nations and languages shall serve him.. and an everlasting dominion.. (a) kingdom that shall not be destroyed ‘ )

இப்படிப்பட்ட பழிதீர்க்கும் தீர்க்கதரிசனங்களை படிக்கும் மக்கள் உணரத்தவறுவது என்னவென்றால், இவை அனைத்தும், உண்மையான ராணுவ மெஸையாக்களின் தலைமையில் நடந்த உண்மையான விடுதலைப்போர்களின் பின்னணியில் எழுதப்பட்டவை என்பதே. இந்த போர்கள் சுதந்திர யூத அரசின் மறு நிர்மாணத்தை குறித்து மட்டுமல்ல, வெளிநாட்டார் ஆட்சியினால் பெருகிவிட்ட பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அழிக்கவும் வாக்குக்கொடுத்தமையால், இந்த போர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு இருந்தது.

சரக்குப்பெட்டி மதங்களைப் போலவே, பழிதீர்க்கும் மெஸையாவும், அரசியல் பொருளாதார காலனியாதிக்கத்தின் கீழ் அமைந்த சுரண்டல் அமைப்பை வீழ்த்துவதற்காகப் பிறந்து, புதிது புதிதாய் தன்னையே மறு நிர்மாணம் செய்து வந்திருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில், யூதர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ராணுவ ரீதியில் சமதையாகப் போரிடக்கூடியவர்கள். இவர்களை வழிநடத்தியவர்கள் படிப்பறிவுகொண்ட ராணுவ இறைதூதர்கள். இவர்களுக்கு இறந்த காலத்தின் தொலைவில் தங்கள் மூதாதையர்கள் தங்களுக்கென ஒரு பேரரசை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்பதும் தெரியும்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 ரோமானிய ஆட்சியின் காலத்தில், பாலஸ்தீனத்தில் ஏதாவதொரு வாழ்வு முறை (lifestyle) மிகவும் முக்கியமானதாக இருந்ததெனச் சொன்னால், அது பழிவாங்கும் ராணுவ மெஸையாவினதுதான் (military messiah) எனச் சொல்லலாம். கோலியாத்துக்கு எதிரான டேவிடின் வெற்றியினால், உந்தப்பட்டு யாஹ்வாவின் ராணுவ மெஸையா மீட்பு(redemption) என்ற வாக்குறுதியால் உந்தப்பட்டு, ரோமானிய அதிகாரிகளுக்கு எதிராகவும், ரோமானிய ராணுவத்துக்கு எதிராகவும் தொடர்ந்த நீண்ட போராட்டத்தை யூத கொரில்லாக்கள் நடத்தினார்கள்.

அன்றைய விடுதலைப் போராட்ட போர் தந்திரங்களின் நடுவே முழுக்க முழுக்க முரண்பாடாக, இத்தகைய கொரில்லா போரின் மத்தியிலேயே, இப்படிப்பட்ட தீவிரவாத புரட்சி கலவர வேலைகளின் மையமாக இருந்த பாலஸ்தீன மாவட்டங்களிலேயே இயேசுவும் அவரது சீடர்களும் பிரச்சாரம் செய்த அமைதி மெஸையா மதம் தோன்றியது.

யூத சுதந்திரப் போருக்கும் இயேசுவுக்கு உள்ள தொடர்பைப் பற்றிய சிறு குறிப்பையும் புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள்சொல்வதில்லை. கிரிஸ்துவ புதிய ஏற்பாட்டை (சுவிஷேசங்களை) மட்டும் வைத்துக்கொண்டு, வரலாற்றின் மிகவும் தீவிரமான கொரில்லா போரின் நடுவே இயேசுவின் வாழ்வு நடந்துகொண்டிருந்தது என்பதை அறியவே முடியாது. புதிய ஏற்பாட்டை மட்டும் படிப்பவர்களுக்கு, இயேசு கொல்லப்பட்ட பிறகும் பல வருடங்கள் இந்த போர் மிகவும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது என்பதும் தெரியாது. கிபி 68இல் மாபெரும் புரட்சிப்போரை யூதர்கள் நடத்தினார்கள் என்பதும் புது ஏற்பாடு மட்டும் படிப்பவர்களுக்கு தெரியவராது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர இரண்டு எதிர்கால ரோமானிய பேரரசர்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குக்கீழ் போர் நடத்த வேண்டிவந்தது என்பதும், ஆறு ரோமன் படைப்பிரிவுகள் தேவைப்பட்டது என்பதும் புது ஏற்பாட்டை மட்டும் படிப்பவர்களுக்குத் தெரியவராது. யூத புரட்சியாளர்களின் இந்த ராணுவ மெஸையா மனஉணர்வை அழிப்பதற்கான ரோமானியர்களின் முயற்சியில் ஒரு பலியாகத்தான் இயேசுவும் கொல்லப்பட்டார் என்பதுவும் தெரியவராது.

ஒரு மோசமான காலனிய ஆட்சியின் எல்லா அரசியல் பொருளாதார விளைவுகளையும் ரோமானிய காலனியாக இருந்த பாலஸ்தீனம் அனுபவித்துக்கொண்டிருந்தது. மதகுருவாகவும், அரசியல் தலைமைகளிலும் வைக்கப்பட்டிருந்த யூதர்கள் பொம்மைகள் அல்லது ஏவல் செய்பவர்கள். உயர்ந்த நிலையில் இருந்த யூத மதகுருக்கள், பணக்கார நிலச்சுவான்தார்கள், வியாபாரிகள் ஆகியோர் வளமை கொழிக்க வாழ்ந்துவந்தார்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் நிலமற்றவர்களாகவும், அந்நியப்பட்டுப்போன விவசாயிகளாகவும், சரிவர கூலி கொடுக்கப்படாத கிராமப்புற கைவினைஞர்களாகவும், வேலையாட்களாகவும் அடிமைகளாகவும் இருந்தனர். கட்டாயவரி, அதிகாரத்துவத்தின் ஊழல், தன்னிச்சையான கப்பம், கட்டாய உழைப்பு, கட்டுக்கடங்கா பணவீக்கம் ஆகியவற்றின் எடையால் நாடு நசிந்துகொண்டிருந்தது. நிலத்தில் உழாத பண்ணையார்கள் ஜெருசலத்தில் சொர்க்கபோகத்தில் வாழ்ந்துகொண்டிருக்க, குத்தகைக்காரர்கள், விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு ரோமானியர்கள் போட்டிருந்த 25 சதவீத வரியை கட்டவேண்டிவந்தது. மீதமிருப்பதில் 22 சதவீதத்தை யூத கோவில்களுக்குக் கொடுக்க வேண்டும். கலிலியைச் சார்ந்த விவசாயிகளும் ஜெருசலத்தைச் சார்ந்த மேல்தட்டு வர்க்கமும் ஒருவருக்கொருவர் பாராட்டிய பகைமை பட்டவர்த்தனமானது. தால்முது (யூத புனிதப்புத்தகம்) புத்தகத்துக்கு எழுதிய விளக்க உரைகளில், உண்மையான யூதர்கள் ‘நிலத்து மக்களுக்கு ‘ பெண்கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டார்கள். கலிலி பிரதேசத்தின் விவசாய மக்கள் அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். ஏனெனில், அவர்கள், ‘சுத்தமற்ற மிருகங்கள் ‘. மிருகங்களைக் கூட கொல்லாத மிகவும் புனிதமான நாட்களில் கூட இவர்களைக் கொல்லலாம் என்று ரப்பி எலேஜர் கிண்டலுடன் அறிவுறுத்துகிறார். ராபை (யூத மதகுரு) ஜோஹனன் (Joahanan) ‘ஒரு சாதாரணனை ஒரு மீனை கிழிப்பது போலக் கிழிக்கலாம் ‘ என்று கூறினார். யூத மதகுரு எலேஜர் (Rabbi Eleazar) கூறினார், ‘படிப்பாளியைப் பார்த்து ஒரு சாதாரணன் கொள்ளும் விரோதம், யூதனல்லாதான் இஸ்ரவேலரைப் பார்த்து கொள்ளும் விரோதத்தைவிட அதிகம் ‘.

யூத தேசியவாதிகள் வெளிநாட்டு பொம்மைகளை வீழ்த்தி அரசேறுவதைக் காண மக்களுக்கு ஆர்வம் அதிகம் இல்லை, ஆனால் ராணுவ மெஸையாவுக்கான ஆதரவு மக்களிடம் அதிகமிருந்தது. ஏனெனில், இறைதூதர்கள் (தீர்க்கதரிசிகள்) மெஸையா வந்ததும், பொருளாதார சமூக சுரண்டல்கள் அழிக்கப்பட்டு, கெட்ட மதகுருக்களையும், நிலச்சுவான்தார்களையும் அரசர்களையும் தண்டித்து, பின்பு டேவிடின் அரசாங்கம் மீண்டும் மறுநிர்மாணம் செய்யப்படவேண்டும்என்று கலிலியின் மக்கள் விரும்பினார்கள். இந்த கருத்து எனோக்கின் புத்தகத்தில் எதிரொலிக்கிறது:

“பணக்காரர்களே உங்கள் பணத்தை நம்புகிறீர்கள், உங்கள் பணம் பறிக்கப்படும். அண்டைவீட்டார் மீது தீமையை ஏவி விடுபவர்களே, உங்கள் செய்கையைப்போலவே இஉங்களுக்கு பலனும் கிடைக்கும். பொய்சாட்சி சொல்பவர்களே நீங்கள் துயர் அடைவீர்கள். கஷ்டப்படும் மக்களே, பயப்படாதீர்கள், நீங்கள் சுகம் பெறுவீர்கள்.”( Woe to you, ye rich, for ye have trusted in your riches, And from your riches shall ye torn away.. Woe to you who requite your neighbor with evil, for you will be requited according to your works. Woe to you, ye lying witnesses.. But fear not, ye that suffer, for healing will be your portion.)

யெஹ்வாவின் அரசாங்கத்தின் இயங்கியல் முழுமையான மனித அனுபவத்தை அணைத்துக்கொண்டது. சரக்குப்பெட்டி போன்றே, நடைமுறை அங்கங்களும், ஆன்மீக அங்கங்களும் பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. ‘இந்த உலகத்து ‘ கருத்துக்களும் மறுமையின் கருத்துக்களும் பிரிக்கமுடியாதவை. அரசியல், மதம், பொருளாதாரம் ஆகியவை உருக்கி ஒன்றாக ஆக்கப்பட்டுவிட்டன. சொர்க்கமும் பூமியும் குழம்பிப்போய், கிடந்தது. தெய்வத்துக்கு இயற்கை திருமணம் செய்விக்கப்பட்டுவிட்டது.புதிய பிரபஞ்சத்தில், வாழ்க்கை முழுவதுமாக மாறியிருக்கும். எல்லாமே தலைகீழாக இருக்கும். யூதர்கள் அரசாளுவார்கள், ரோமானியர்கள் அடிமைகளாக இருப்பார்கள். ஏழை பணக்காரனாக இருப்பான். கொடியவன் தண்டிக்கப்படுவான். நோயாளி நோய் தீர்க்கப்படுவான். இறந்தவன் உயிர்த்தெழுவான்.

ரோமானிய செனட்டினால், ஹரோது மாமன்னன் பொம்மை அரசனாக நியமனம் செய்யப்படுவதற்கு சற்று முந்தி யூதர்கள் ரோமுக்கு எதிரான தங்கள் போரை தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ரோமானியர்களும் யூத ஆளும் வர்க்கமும், யூத போராளிகளை கொள்ளைக்காரர்கள் என்றே அடையாளப்படுத்தினார்கள் (Bandits – lestai) ஆனால், ரோமானிய வரி வசூலிப்பவர்களுக்கு எதிராகவும், ஜெருசலத்தில் உட்கார்ந்திருக்கும் உழாத பண்ணையார்களுக்கும் எதிராகவும் இந்த போராளிகள் செய்யும் செயல்களால்தான் குற்றவாளிகளாக்கப்பட்டார்களே அன்றி, திருடுவதற்காக அல்ல. கொரில்லா போராளிகளுக்குக் கொடுக்கப்பட்ட இன்னொரு பெயர் மதத்தீவிரவாதிகள் (zealots.) யூத விதிகளுக்கும், யாஹ்வாவின் ஒப்பந்தத்துக்கும் மிகுந்த விசுவாசமாக இருப்பதனால் வந்த பெயர்.

இந்த போராளிகள் செய்து வந்த விஷயங்களை விளக்க இந்த இரண்டு வார்த்தைகளுமே சரியாக பொருந்துவதில்லை. மதத்தீவிரவாதிகள்-கொள்ளையர்-கொரில்லாக்கள் (Zealots-Bandits-Guerillas) என்று ஒட்டுமொத்தமாக கூறினாலே அவர்களது தினசரி வாழ்க்கையை அவர்களது உலகத்துடன் பொருத்தமுடியும். இவர்கள் ஒரு மெஸையாவின் உதவியுடன் ரோம சாம்ராஜ்யத்தைக் கவிழ்த்துவிடமுடியும் என்று நம்பினார்கள். அவர்களது நம்பிக்கை அவர்களது மனத்தின் ஒரு நிலை. புரட்சிகர அச்சில் இயங்கும் கொள்ளைகள், தூண்டுவது, தொல்லைப்படுத்துவது, கொலை செய்வது, பயங்கரவாதம் என்று சென்று மிகுந்த தைரியத்துடன் வீர சாகசச் செயல்கள் செய்து மரணத்தை தழுவுவது வரைக்கும். நகர்ப்புர கொரில்லா போர் முறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் குறுவாள்போராளிகள் (Daggermen – Latin Sicarii) என்றழைக்கப்பட்டார்கள். மற்றவர்கள் கிராமப்புறங்களிலும், குகைகளிலும், மலை இடுக்குகளிலும் ஒளிந்து அங்கிருக்கும் விவசாயிகளை உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நம்பி வாழ்ந்தார்கள்.

கி.மு முதலாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் அரசியல் ராணுவ நிகழ்ச்சிகளைப் பற்றிய எந்த விவரணையும் புராதன காலத்தின் மாபெரும் வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ஃப்ளேவியஸ் ஜோஸஃபஸ் (Flavius Josephus) என்பாருடைய எழுத்துக்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கமுடியும். நான் இங்கே எழுதப்புகும் விஷயங்கள் பரிச்சயமில்லாதவையாக இருப்பதனால், இந்த ஆதாரத்தின் நம்பகத்தன்மையைப் பற்றி ஒருவார்த்தை கூற அனுமதியுங்கள். கிரிஸ்துவ லிகிதங்களை எழுதியவர்களது காலத்தைச் சார்ந்தவர் ஜோஸஃபஸ். முதலாம் நூற்றாண்டு பாலஸ்தீனத்தைப் பற்றி அறிவதற்கு, புதிய ஏற்பாடு லிகிதங்களுக்கு கொஞ்சமும் குறையாத முக்கியத்துவத்துடன், அவைகளை விட முக்கியமானவையாக இவரது இரண்டு புத்தகங்களான ‘யூதப் போர் ‘ (The Jewish war), யூத புராதனங்கள் (Jewish Antiquities) ஆகியவை கருதப்படுகின்றன. நமக்கு ஜோஸஃபஸ் என்பது யார், அவர் ஏன் இந்த புத்தகங்களை எழுதப்புகுந்தார் என்பதைப் பற்றிய விவரமான அறிவு நமக்கு உண்டு. ஆனால், ஆகமங்கள் எழுதியவர்களைப் பற்றிய எந்த அறிவும் நமக்கு இல்லை. ஜோஸஃப் பென் மாத்தியாஸ் ( Joseph Ben Matthias) என்ற இயற்பெயர் கொண்ட இவர் கிபி 37இல் மேல்தட்டு யூத குடும்பத்தில் பிறந்தார். கிபி 68இல், இவரது 31 வயதில், கலிலி பிரதேசத்தின் கவர்னராகி, ரோமுக்கு எதிரான யூத விடுதலை படையின் தளபதியாக ஆனார். ஜோடபடா (Jotapata) பகுதியை கைப்பற்றும் போரில் அவரது போர்வீரர்கள் அனைவரும் ெ

கால்லப்பட்ட பின்னர், ஜோஸஃபஸ் சரணடைந்து ரோமானிய தளபதியான வெஸ்பாஸியன்(Vespasian), அவரது மகன் டிடஸ் (Titus) முன்னிலையில் கொண்டு வரப்பட்டார். அப்போது, ஜோஸஃபஸ் வெஸ்பாஸியனே யூதர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மெஸையா என்றும், வெஸ்பாஸியன், டிடஸ் இருவருமே எதிர்காலத்தில் ரோமானிய பேரரசர்களாக ஆவார்கள் என்றும் அறிவித்தார்.

கிபி 69இல் வெஸ்பாஸியன் உண்மையிலேயே ரோமானிய பேரரசராக ஆனார். ஜோஸஃபஸின் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்குப் பரிசாக ஜோஸஃபஸ் புதுப் பேரரசரின் அருகாமை குழாமில் ஒருவராக ரோமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ரோம் நகர குடியுரிமை வழங்கப்பட்டது. பேரரசரின் அரண்மனையில் ஒரு அறையும் அளிக்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் கைப்பற்றப்பட்ட நிலங்களில் ஒரு பகுதி அவருக்கு அளிக்கப்பட்டு அதிலிருந்து வரும் வருமானம் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது.

ஏன் யூதர்கள் ரோமுக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள் என்பதையும் ஏன் அவர் ரோமுக்குக் கட்சி மாறினார் என்பதையும் விளக்கி புத்தகங்கள் எழுதுவதில் ஜோஸஃபஸ் தன் மீந்த வாழ்நாளைக் கழித்தார். ரோமில் உட்கார்ந்து கொண்டு, அந்த நிகழ்வுகளிலும் போர்களிலும் பங்கு பெற்ற ரோமின் பேரரசர் உட்பட்ட ரோமானிய வாசகர்களுக்காக எழுதும்போது, அடிப்படை வரலாற்று விஷயங்களை கற்பனை செய்து எழுதியிருக்க வாய்ப்பில்லை. ஜோஸஃபஸ் தன்னை ஒரு துரோகி என்று காட்டிக்கொள்ளக்கூடாது என்று எழுதிய வார்த்தைகள் எளிதில் கண்டறியக்கூடியவையாக இருப்பதால், அவற்றை ஒதுக்கி அவர் எழுதும் முக்கிய நிகழ்வுகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பின்றி புரிந்துகொள்ளலாம்.

ஜோஸஃபஸ் கூறும் நிகழ்வுகளிலிருந்து, யூத ராணுவ மெஸையா மனவியலும் கொரில்லா போராட்டமும் ஒன்றாக எழுந்து ஒன்றாக தணிந்தன என்பதை புரிந்துகொள்ளலாம். புழுதி நிறந்த, சூரியனால் வேகடிக்கப்பட்ட பாலஸ்தீனத்து பாலைவனத்து புற நிலங்கள், அலைந்து திரியும் சாமியார்களாலும், வினோதமாக உடை உடுத்தி parables மூலமாகவும், உவமேயங்கள் மூலமாகவும் உலகத்தை முழுவதும் ஆள்வதற்காக வரப்போகும் மாபெரும் போர் பற்றி தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசிகளாலும், இறைதூதர்களாலும் நிறைந்து வழிந்தது. வெற்றிகரமான கொரில்லா போர்தளபதிகளின் நிழல்களில் வருடம் முழுவதும் புதுப்பிக்கப்படும் இந்த மெஸையா சம்பந்தப்பட்ட ஹேஷ்யங்கள் வளமையாக பொங்கிப்பரவின. தொடர்ந்து வரும் பல மெஸையாக்கள் தாங்களே அந்த மெஸையா என்று கோரி வரலாற்றின் வெளிச்சத்துக்குள் வந்து நின்றனர். அதில் குறைந்தது இரண்டு பேர், உண்மையிலேயே ரோமானியப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கும் அளவுக்கு மாபெரும் புரட்சிகளை உருவாக்கினர்.

 

வடக்கு கலிலி பிரதேசத்தில் முழு மாவட்டத்தையே தன் ஆளுகைக்குள் வைத்திருந்த ஒரு கொள்ளைக்கார தலைவருக்கு எதிராக வீர்யமிக்க போரை நடத்தியதற்காகவே, ஹரோத் மன்னர் (Herod the Great)ரோமானிய ஆளும் வர்க்கத்தின் கவனத்துக்கு வந்தார். ஹெசெகியா (Hezekiah) என்றழைக்கப்பட்ட இந்த கொள்ளைக்கார தலைவரை கைப்பற்றிய இடத்திலேயே ஹரோத் கொன்றதாக ஜோஸஃபஸ் எழுதுகிறார். ஆனால், ஹெசெகியா ஒரு சாதாரண கொள்ளைக்காரர் அல்ல, அவர் கொரில்லா புரட்சித்தலைவர் என்பது நமக்குத் தெரியும். ஏனெனில், ஜெருசலத்தில் மிகுந்த சக்தி வாய்ந்த பலர், இந்த ஹெசெகியாவின் ஆதரவாளர்கள், ஹரோத் கொலைக்குற்றத்துக்காக கொலை வழக்கில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவரை கைது செய்தனர். ஜூலியஸ் சீசரின் உறவினர் வழக்கில் உட்புகுந்து ஹரோதை விடுதலை செய்தார். அதே நேரத்தில் ஹரோதுக்கு சிபாரிசும் செய்தது, கிமு 39இல் அவரை யூதர்களின் பொம்மை அரசராக நியமனம் செய்யப்படவும் உதவியது.

 

பாலஸ்தீனத்தை அவரது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, தொடர்ந்து ஹரோது கொள்ளையர்களோடு போராட வேண்டிவந்தது. ஜோஸஃபஸ் கூறுகிறார், ‘நாட்டின் பல பகுதிகளை கொள்ளையர்கள் ஆக்கிரமித்திருந்தனர். ஒரு போர் கொண்டு வரும் அத்தனை துயரங்கள் போலவும் இது நாட்டில் வசிப்பவர்களுக்கு துயரங்களை கொண்டுவந்தது. ‘ ஆகவே ஹரோது, ‘கொள்ளையர்களின் குகைகளுக்குள் போரை எடுத்துச் சென்றார் ‘. குகைகளுக்குள் சிக்கிக்கொண்டபோது, கொள்ளையர்கள் தங்களுடன் குடும்பத்தினரையும் கொண்டவர்களாக இருந்தார்கள்; சரணடையவும் மறுத்தார்கள். யாரும் நுழையமுடியாத பகுதியில் நின்றிருந்த ஒரு கொள்ளையன் ஹரோதின் பார்க்கும்போதே, தன் மனைவியையும் தன் ஏழு குழந்தைகளையும் கொன்றுவிட்டு ‘ஹரோதைப் பார்த்து கேவலமாக துப்பிவிட்டு ‘ அங்கிருந்து குதித்து மரணத்தை தழுவினான். தன்னை ‘குகைகளுக்கும் குகைகளில் வசிப்பவர்களுக்கும் தலைவன் ‘ என்று கருதிக்கொண்டு, ஹரோது சமாரியாவுக்குச் சென்றார். ஆனால் அவரது வெளியேற்றம், ‘கலிலியில் இருக்கும், தொடர்ந்து தொல்லை தரும் ஆட்களுக்கெல்லாம் ‘ கட்டுப்பாடு இல்லாமல் போகச் செய்துவிட்டது. இந்த ‘தொல்லை தருபவர்கள் ‘ டாலமி (Ptolemy) என்ற ரோமானிய தளபதியை கொல்லவும், ‘அமைப்பு ரீதியாக கிராமப்பகுதிகள் அனைத்தையும் ஆக்கிரமித்து அங்கெங்கும், போக முடியாத சதுப்புநிலப் பகுதிகளில் கூட முகாம்களை அமைக்கவும் ‘ ஏதுவாயிற்று.

 

கிபி 4இல் ஹரோது மன்னர் இறந்ததும், பல புரட்சிகள் வெடித்தன. ஹெசெக்கியாவின் மகன் “கலிலியின் யூதாஸ்” (Judas of Galilee) அரசின் ஆயுதக்கிடங்கைக் கைப்பற்றினார். அதே நேரத்தில், ஜோர்டானை அடுத்த பெரேயா (Peraea) வில் சிமோன் (Simon) எனப்பட்ட அடிமை ‘ஜெரிக்கோவில் இருந்த அரண்மனையை கொளுத்தினார். கூடவே பல அழகான கம்பீரமான கிராமப்புற மாளிகைகளையும் கொளுத்தினார் ‘. மூன்றாவது புரட்சியாளரான, முன்னாள் ஆட்டிடையரான அத்ரோங்கேயஸ் (Athrongaeous), ‘தன்னைத்தானே அரசர் என்று அறிவித்துக்கொண்டார் ‘- அதாவது அவரது சீடர்கள் அவரை மெஸையா என்று கருதினார்கள் என்பதை ஜோஸஃபஸ் தன்னுடையை மொழியில் அப்படி கூறுகிறார். அத்ரொங்கேயஸையும் அவரது நான்கு சகோதர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ரோமானியர்கள் கொல்வதற்கு முன் வரைக்கும், இந்த கொள்ளையர்கள், ‘ஜூடாயாவை தங்களது கொள்ளைகளால் துன்புறுத்தினார்கள் ‘. சிரியாவின் ரோமானிய ஆளுனரான வாருஸ் (Varus) சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டினார். அவர் சுமார் 2000 ‘புரட்சியாளர்களை ‘ கைப்பற்றி அவர்களை எல்லோரையும் சிலுவையில் அறைந்து கொன்றார். இந்த நிகழ்வு இயேசு பிறந்த வருடம் நடந்தது.

எல்லா கொரில்லா புரட்சியாளர்களுக்கும் தலைவராக கலிலியின் யூதாஸ் உருவானார். ‘அரசராக ஆக விரும்பினார் ‘ என்றும், சில வேளைகளில், ‘புத்திசாலியான ரப்பை (யூத மதகுரு) ‘ என்றும் ஜோஸஃபஸ் அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கிபி. 6இல் ரோமானியர்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பாலஸ்தீனத்தில் நடத்தினர். இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு மக்கள் எவரும் உதவக்கூடாது என்று யூதாஸ் எச்சரித்தார். ஏனெனில், ‘இது முழுமையான அடிமைத்தனத்துக்கே இட்டுச்செல்லும் ‘ என்றார். யூதாஸ் கூறுவதாக ஜோஸஃபஸ் கூறுகிறார், ‘யூதர்களுக்கு யாஹ்வாவைத்தவிர வேறெந்த அரசரும் இல்லை ‘. ஆகவே, ‘ரோமானியர்களுக்கு எந்தவித வரியும் கொடுக்கக்கூடாது ‘ என்றார். ரோமுக்கு கீழ்ப்படிபவர்களை எதிரிகள் என்றே நடத்தப்படுவதாக ஜோஸஃபஸ் கூறுகிறார். அவர்களது ஆடுமாடுகள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன. எவ்வாறு கலிலியின் யூதாஸ் தன் முடிவைச் சந்தித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரது மகன்கள் இந்தப் போரை தொடர்ந்து நடத்தினர் என்பது தெரிகிறது. அவர்களில் இருவர் சிலுவையில் அறையப்பட்டார்கள். 68-73இல் நடந்த புரட்சியின் ஆரம்பத்தில் இன்னொருவர் தன்னை மெஸையா என்று அழைத்துக்கொண்டார். அந்தப் போரில் மஸாடா கோட்டை (Fortress of Masada)யைகாப்பாற்ற முயல்வது தற்கொலைக்குச் சம என்று தெரிந்திருந்தும் கூட, கலிலியின் யூதாஸ் வழி வந்த ஒருவர் தலைவராய் இருந்து மஸாடா கோட்டையைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்திருக்கிறார் என்பதும் தெரிகிறது.

கிபி 28இல் இயேசு தன்னுடைய மெஸையா பிரச்சாரங்களை தீவிரமாக ஆரம்பித்தார். அப்போது இடைவிடாத கொரில்லாப் போர் கலிலியில் மட்டுமின்றி, ஜூடாயா, ஜெருசலம் ஆகிய பகுதிகளிலும் நடந்துவந்தது. இயேசுவுக்கு மரணத்தை விதித்த போன்டியஸ் பிளேட் (Pontius Pilate) என்ற ரோமானிய கவர்னர் கண்டுகொள்ளவேண்டிய போராளிக்கூட்டங்களில் இயேசு மதம் என்பது பெரியதும் அல்ல, பயமுறுத்தக்கூடியதும் அல்ல. உதாரணமாக, ஜெருசலத்தில் சிலைகளை வைக்கக்கூடாது என்ற விதிமுறைக்கு மாறாக பிளேட் நடந்துகொண்டதால், கோபம் கொண்ட நகரத்துக் கூட்டத்தோடு கிராமப்புறங்களில் வந்த கூட்டமும் இணைந்து பிளேட்டை சுற்றி வளைத்ததை பற்றி ஜோஸஃபஸ் விவரிக்கிறார். பிறகு, யூத கோவில் பணத்தை எடுத்து நீச்சல் குளம் கட்டியதற்காக பிளேட்டை சுற்றி வளைத்த கோபக்கார கும்பலைப் பற்றியும் எழுதுகிறார். புது ஏற்பாட்டிலிருந்தே, இயேசுவும் கோவில் மேல் ஒரு தாக்குதலை ஏற்படுத்த முனைந்தார் என்று அறிகிறோம். இயேசுவின் விசாரணைக்கு சற்று முன்னர், ஒரு புரட்சி வெடித்தது என்பதையும் அறிகிறோம். ஏனெனில், பாரபாஸ் (Barabbas) மற்றும் அவரது ஆட்கள் ஆகியோர் ஏற்கெனவே சிறையில் இருந்தார்கள்.

இயேசு கொல்லப்பட்ட பின்னரும், ரோமானியர்கள் தொடர்ந்து ஜூடாயாவின் கிராமப்புறங்களில் இருந்த ‘கொள்ளையர்களை ‘ சுத்தம் செய்ய முயன்றார்கள். தோலோமையோஸ் (Tholomaios) என்ற பெரிய கொள்ளைக்காரர் கிபி 44இல் பிடிக்கப்பட்டார் என்பதையும் ஜோஸஃபஸ் தெரிவிக்கிறார். அதன் பின்னர், தேடஸ் (Theudas) என்ற கவர்ச்சிகரமான மெஸையா நபர் பாலைவனத்தில் தோன்றினார். அவரைப் பின்பற்றியவர்கள் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு ஜோர்டான் ஆற்றின் கரையில் குழுமினார்கள். ஜோஷூவாவுக்கு செய்தது போல ஜோர்டான் நதியின் தண்ணீரை இரண்டாகப் பிரிக்க தேடஸ் முயற்சி செய்தார் என்று சிலர் கூறுகிறார்கள். மற்றும் சிலர், அவர் தன்னை பின்பற்றுபவர்களோடு மேற்குதிசை பக்கம், ஜெருசெலம் பக்கம், செல்ல முயற்சி செய்தார் என்று கூறுகிறார்கள். எதுவாயினும், கஸ்பியஸ் ஃபாடுஸ் (Cuspius Fadus) என்ற ரோமானிய ஆளுனர் தனது குதிரைப்படையை அனுப்பினார். அவர்கள் தேடஸின் தலையை கொய்து அவரை பின்பற்றியவர்களை கொன்று தள்ளினர்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கிபி 50இல் பாஸோவர் என்ற யூத விருந்து கொண்டாட்டத்தின் போது, ஒரு ரோமானிய படைவீரன் தனது உடையை தூக்கி கோவிலுக்கு வந்திருந்த பக்தர் கூட்டத்தைப் பார்த்து வாயு பிரித்தான். ‘தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாத இளைஞர்களும், இயற்கையாகவே அமைதியற்றிருந்த கும்பலும் உடனே போருக்கு பாய்ந்தார்கள். ‘ என்று ஜோஸஃபஸ் எழுதுகிறார். பெரிய ரோமானிய குதிரைப்படை அழைக்கப்பட்டது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஜோஸஃபஸ் கூற்றின்படி, சுமார் 30,000 பேர் நசுக்குண்டு இறந்தார்கள். (சிலர் இது 3000ஆகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்) கிபி 33இல் நடந்த பாஸோவர் யூத விருந்தை ஒட்டித்தான் இயேசு கோவிலில் தாக்குதல் நடத்தியது. கிபி 50இல் நடந்தது போன்று அடிக்கடி நடக்கும் வாய்ப்பு இருப்பதாலேயே இயேசுவை கைது செய்ய இரவு வரைக்கும் ரோமானிய அதிகாரிகள் காத்திருந்தார்கள் என்று பார்க்கலாம்.

கிபி 52இல் எலிஜார் பென் டெய்னோஸ் (Eleazar ben Deinaios) என்பவரின் தலைமையின் கீழ் ஏறத்தாழ நாடு தழுவிய புரட்சி வெடித்தது. இவர் ஒரு ‘புரட்சிகர கொள்ளைக்காரர் ‘. மலைகளில் சுமார் 20 வருடங்கள் வசித்தவர். குமானஸ் (Cumanus) என்ற ஆளுனர் ‘எலிஜாரின் ஆட்களைச் சுற்றி வளைத்தார், மேலும் பலரைக் கொன்றார் ‘. ஆனால் கலவரம் பரவியது. ‘நாடு முழுவதும் கொள்ளைக்கும்பல் பரவியது, தைரியமான ஆன்மாக்கள் புரட்சியில் எழுந்தன ‘. சிரியாவின் தலைவர் உள்ளே நுழைந்து, 18 புரட்சியாளர்களை தலையை வெட்டிக்கொன்றார். குமானஸ் சுற்றி வளைத்திருந்த எல்லா கைதிகளையும் சிலுவையில் அறைந்து சிரியாவின் தலைவர் கொன்றார். பாலஸ்தீனத்துக்கு புதிய கவர்னராக வந்த ஃபெலிக்ஸ் (Felix) இறுதியாக அந்த புரட்சியை அடக்கினார். எலிஜாரை பிடித்து ரோமுக்கு அனுப்பினார் – பெரும்பாலும் பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தை நெறித்து கொல்வதற்காக இருக்கலாம் . ஜோஸஃபஸ் கூறுகிறார், ‘அவர் சிலுவையில் அறைந்து கொன்ற கொள்ளையர்களும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களை பிடித்து தண்டித்ததும் எண்ணிலடங்கா ‘

ஜெருசலத்தில், தங்கள் உடைகளுக்குள் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு கொலை செய்யும் கத்திவீச்சுக்காரர்கள் (Daggermen – Sicarii) மிகவும் அதிகமாகிவிட்டார்கள். அவர்களது மிகவும் பிரபலமான பலி ஜோனதன் (Jonathan) என்ற உயர்ந்த நிலையில் இருந்த மதகுரு. இப்படிப்பட்ட ராணுவ மெஸையா பதவிக்கு போட்டிபோடுபவர்கள் அடிக்கடி வந்து கொண்டே இருந்தார்கள். இப்படிப்பட்ட ராணுவ மெஸையா தலைவர்களில் ஒரு பிரிவினரை ஜோஸஃபஸ் இப்படி குறிப்பிடுகிறார்.

‘ரவுடிகள், கொஞ்சமும் குற்றங்களில் குறைந்தவர்கள் அல்லர், அவர்களது தீய எண்ணங்களிலும் கொஞ்சமும் குறைந்தவர்கள் அல்லர், ஏமாற்றுக்காரர்கள், பித்தலாட்டக்காரர்கள். தெய்வம் வந்து கூறியது என்று ஊரை ஏமாற்றிக்கொண்டு, கும்பலை திரட்டி அவர்களைத் தூண்டி , புரட்சிகளை உருவாக்க திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கும்பலும் பேய் பிடித்தாற்போல ஆடுகிறது. வரப்போகும் சுதந்திரத்துக்கான அறிகுறிகளை யெஹ்வா தெய்வம் காட்டப்போகிறது என்று இந்த மக்களை காட்டுப்பிரதேசங்களுக்குக் கூட்டிச் செல்கிறார்கள். ‘

இவ்வாறு கூட்டிச் செல்வதை புரட்சியின் முதல் படி என்று கருதிய ஃபெலிக்ஸ் ரோமானிய குதிரைப்படை இந்த கும்பலை வெட்டிச் சாய்க்க ஆணையிட்டார்.

அடுத்து வந்தது யூத எகிப்திய ‘பொய் இறைதூதர் ‘ (Jewish Egyptian). பல்லாயிரம் ‘ஏமாளிகளுக்கு ‘ தலைமை தாங்கி பாலைவனத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து திசை திரும்பி ஜெருசலத்தை தாக்க முயன்றார். இது ரோமானியர்கள் எதிர்பார்த்தது போலவே இப்படிப்பட்ட ஆட்கள் அரசியல் ரீதியில் அபாயகரமானவர்கள் என்பதற்கான ஆதாரமாயிற்று. கிபி 55இல் பாலஸ்தீனத்தில் இருந்த நிலவரத்தை ஜோஸஃபஸ் வரைகிறார்.

‘மத ஏமாற்றுக்காரர்களும், கொள்ளைக்கார தலைவர்களும் ஒருங்கிணைந்து ஆயிரக்கணக்கானவர்களை புரட்சிக்குத் தூண்டினர். பல குழுக்களாகப் பிரிந்து கிராமப்புறங்களில் பரவி பணக்காரர்களது வீடுகளை கொள்ளையடித்து, அந்த வீடுகளில் உள்ளவர்களைக் கொலை செய்து, கிராமங்களுக்கு தீவைத்து கொளுத்தி, அவர்களது பைத்தியக்காரத்தனம் ஜூடாயாவின் மூலை முடுக்கெல்லாம் நிரம்பும் வரை இவ்வாறு செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் போர் முன்னைவிட தீவிரமாக நடந்தது ‘

கிபி 66இல், கொள்ளையர்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். அவர்களது ஆட்கள் யூதக்கோவில் பூசாரிகளிடையேயும் இருந்தனர். . அவர்கள் அனானையாஸ் (Ananias) என்ற தலைமை மதகுருவின் மகனான எலிஜாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். எலிஜார் ஏறத்தாழ ஒரு சுதந்திரப் பிரகடனத்தை செய்தார். இந்த பிரகடனம் மக்கள் ரோமானிய பேரரசரான நீரோவின் ஆரோக்கியத்துக்காக பலி கொடுப்பதைத் தடை செய்தது. ரோமானிய எதிர்ப்பு பிரிவுகளும் ரோமானிய ஆதரவு பிரிவுகளும் ஜெருசலம் தெருக்களில் போர் புரிய ஆரம்பித்தன. கத்திவீச்சுக்காரர்கள், விடுவிக்கப்பட்ட அடிமைகள், எலிஜாரின் தலைமையின் கீழ் இருந்த ஜெருசலம் கும்பல் ஒரு பக்கம். தலைமை மதகுருக்கள், ஹரோதின் மேல்தட்டு வர்க்கம், ரோமானிய படைப்பிரிவு இன்னொரு பக்கம்.

இதற்கிடையில் புறநிலப்பகுதிகளில், கலிலியின் ஜூதாஸின் (Judas of Galilee) கடைசி மகனான மனஹெம் (Manahem) மஸாடா கோட்டையை தாக்கி அங்கிருந்த ரோமானிய ஆயுதக்கிடங்கை கைப்பற்றி அவற்றை தனது கொள்ளையர்களுக்குக் கொடுத்து ஆயுதமேந்தவைத்து ஜெருசலத்தை நோக்கி வீரநடை போட்டு வந்தார். அந்த குழப்பமான காட்சியில், மனஹெம் புரட்சியின் தலைமைப்பதவியை ‘ஒரு அரசன் போல ‘ எடுத்துக்கொண்டார், என்று ஜோஸஃபஸ் கூறுகிறார். ரோமானிய துருப்புக்களை ஜெருசலத்தின் கோவில் பகுஇதியிலிருந்து துரத்தி அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அங்கிருந்த தலைமை மதகுருவான அனானையாஸை கொன்றார். மனஹெம் தன்மீது அரச உடைகளை அணிந்துகொண்டார், பிறகு தன் ஆயுதமேந்திய கொள்ளைக்காரப் படையோடு கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைய முனைந்தார். ஆனால், எலேஜார் தன் தந்தையை கொன்றதற்கு பழிவாங்குவதற்காக மறைந்திருந்து மனஹெம் ஊர்வலத்தைஐ தாக்கினார். மனஹெம் தப்பி ஓடினாலும், பிடிபட்டு, ‘நீண்ட நேரம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் ‘ என்று ஜோஸஃபஸ் எழுதுகிறார்.

யூதர்கள் தொடர்ந்து போரிட்டனர். உண்மையான மெஸையா இனிதான் தோன்றவேண்டும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து போரிட்டனர். ரோமானியர்கள் பல தோல்விகளை அடைந்ததும், பிரிட்டனில் போர் புரிந்து பெயர் பெற்ற சிறந்த தளபதியான வெஸ்பாஸியனை பேரரசர் நீரோ அழைத்தார். 65000 போர் வீரர்களுடனும், மிகவும் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட ராணுவ இயந்திரங்களுடனும் ஆயுதங்களுடனும் நுழைந்தார். ரோமானியர்கள் மெல்ல மெல்ல சிறிய நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கிபி 68இல் நீரோ இறந்ததும், பேரரசராக வெஸ்பாஸியனே பிரபலமாக இருந்தார். தனக்குத் தேவையான ஆட்களும் ஆயுதங்களும் உபகரணங்களும் இருந்தமையால், வெஸ்பாஸியனின் மகன் டிடஸ் போரை முடித்தார். படு தீவிரமான எதிர்ப்பு இருந்தும், கிபி 70இல் டிடஸ் ஜெருசலத்தின் உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தார். கோவிலை தீயிட்டு கொளுத்தினார். கண்ணில் பட்டவறை எல்லாம் தீயிட்டு அழித்தார்.

ஜெருசலத்தை காப்பாற்றுவதற்காக இழக்கப்பட்ட கோடிக்கணக்கான உயிர்களைப் பற்றி எழுதும்போது, மெஸையா தீர்க்கதரிசனங்களை மிகவும் கசப்புடன் திட்டினார். மோசமான தீச்சகுனங்கள் தோன்றியிருந்தன. பலிபீடத்தில் பிரகாசமான வெளிச்சங்கள், ஆட்டுக்குட்டி போட்ட பசுமாடு, சூரியன் மறையும்போது ரதங்களும் போர் படைகளும் வானத்தில் விரைந்து மறையும் காட்சிகள் ஆகியவை வந்தபோதும், கொள்ளையர்களும், அவர்களது மன்னிக்கமுடியாத இறைதூதர்களும் இப்படிப்பட்ட அழிவுச் சகுனங்களை கவனிக்கத் தவறிவிட்டார்கள். இந்த ‘ஏமாற்றுக்காரர்களும் பொய் இறைதூதர்களும் தெய்வீக பரிசு அவர்களுக்குத் தரப்பட இருக்கிறது என்று மக்களை ஏமாற்றினார்கள் ‘

ஜெருசலத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும், யாஹ்வா தங்களை இவ்வாறு கைகழுவிவிட்டுவிடுவார் என்று கொள்ளையர்களால் நம்பமுடியவில்லை. இன்னுமொரு வீர முயற்சி, இன்னுமொரு ரத்தபலி- அதன் பின்னர் யாஹ்வா உண்மையான ஒரு அபிஷேகம் செய்யப்பட்ட மெஸையாவை அனுப்பி வைப்பார். நான் முன்னமே சொன்னது போல, கிபி 73இல் மஸாடா கோட்டையில் கடைசி பலி நடந்தது. ஹெசெகியாவின் வம்சாவளியைச் சார்ந்த கலிலியின் யூதாஸ் வம்சாவளியைச் சார்ந்த எலிஜார் என்ற ஒரு கொள்ளைக்காரர் தனது மீதமிருந்த 960 ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் ஆகியோர் ரோமானியர்களிடம் சரணடைவதற்கு பதிலாக தங்களைத்தாங்களே கொன்று கொள்ளலாம் என்று தங்களைத்தாங்களே கொன்று கொண்டார்கள்.

சுருக்கமாக, கி.மு 40இலிருந்து கிபி 73 வரைக்கும் சுமார் ஐந்து யூத ராணுவ மெஸையாக்களை ஜோஸஃபஸ் குறிப்பிடுகிறார். இது இயேசுவையும் ஜான் பாப்டிஸ்டையும் தவிர்த்து. இவர்கள் அத்ரோங்கியஸ், தேடஸ், ஃபெலிக்ஸால் மரணதண்டனை கொடுக்கப்பட்ட பெயரற்ற ஒரு ‘ரவுடி ‘, யூத எகிப்திய ‘பொய் இறைதூதர் ‘, மனஹெம். ஆனால், பல மெஸையாக்களையும் மெஸையா தீர்க்கதரிசனம் கூறும் இறைதூதர்களையும் மறைமுகமாக குறிப்பிடுகிறார். இவர்களது பெயர்களையோ அல்லது விவரணைகளையோ கூற அக்கறைப்படவில்லை. இத்தோடு கூட, ஹெசெகியா வழியில் வந்த கலிலியின் யூதாஸ் வழி வந்த மனஹெம், எலிஜார் ஆகியோர் அவர்களை பின்பற்றியவர்களால் மெஸையாக்கள் என்றும் இறைதூதர்கள் என்றும் நம்பி வந்தார்கள் என்பதும் தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இன்று தெற்கு பசிபிக் தீவுகளில் எத்தனை சரக்குப்பெட்டி இறைதூதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு பேர்கள் இயேசுவின் காலத்தில் பாலஸ்தீனத்தில் மெஸையாக்களாக உலவி வந்தார்கள்.

மஸாடாவின் வீழ்ச்சியும் யூத ராணுவ மெஸையா கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. காலனியாதிக்கமும் வறுமையும் கொண்டுவந்த நடைமுறைப் பிரச்னைகளின் எதிர்வினையாக அது தொடர்ந்து புதிதாய் உருவாக்கப்பட்டுவந்தது. மஸாடாவிற்கு சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு, புரட்சி உந்துதல் மீண்டும் ஒரு முறை மாபெரும் மெஸையா நாடகமாக வெடித்தெழுந்தது. கிபி 132இல் பார் கோச்வா (Bar Kochva) (நட்சத்திரத்தின் மகன்) என்பவர் சுமார் 200,000 பேர்களைக் கொண்ட ஒரு பெரும் ராணுவத்தை நிர்மாணித்து சுதந்திர யூத அரசை நிர்மாணித்தார். இது மூன்று வருடங்கள் இருந்தது. பார் கோச்வாவின் அற்புதமான வெற்றிகளின் காரணமாக ஜெருசலத்தின் தலைமை யூத மதகுரு பார் கோச்வாவை மெஸையா என்று போற்றினார். பார் கோச்வா ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து வந்ததைக் கண்டதாக பொது மக்கள் பேசிக்கொண்டார்கள். ஹனிபாலுக்கு (Hannibal) பிறகு ஒரு மகத்தான தைரியம் மிக்க ராணுவ ரீதியான எதிரியை பார் கோச்வா வடிவில் ரோமானியர்கள் பெற்றார்கள். மிகவும் ஆபத்தான முனைகளில் நின்று, முன்னணிப் படைகளில் தானும் ஒருவராக பார் கோச்வா போர் புரிந்தார். பார் கோச்வாவை வெட்டிச் சாய்ப்பதற்கு முன்னால் ஒரு பெரிய ரோமானிய படையையே (legion) இழக்க வேண்டி வந்தது. ரோமானியர்கள் சுமார் 1000 கிராமங்களை தீயிட்டு கொளுத்தினர். சுமார் 500,000 மக்களை கொன்றனர். ஆயிரக்கணக்கில் மக்களை அடிமைகளாக்கி நாடு கடத்தினர். தலைமுறை தலைமுஇறை

யாக வந்த யூத அறிஞர்கள் கசப்புடன், பார் கோச்வாவை ‘பொய்யின் புத்திரன் ‘ என்று கூறினார்கள். பார் கோச்வாவால் தங்கள் தாய்நாடும் இழந்துபோனோம் என்று புலம்பினர்.

யூத ராணுவ மெஸையா வாழ்நெறியை (Adoptive Failure) சூழலுக்குத்தக்க மாற்றிக்கொள்ளாததால் விளைந்த தோல்வி என்று வரலாறு காட்டுகிறது. டேவிடின் சாம்ராஜ்யத்தை மீண்டும் நிர்மாணிக்க அதனால் முடியவில்லை. யூத நாட்டின் எல்லை ஒழுங்கை முழுவதுமாக இழக்க வைப்பதில்தான் அது முடிந்தது. அடுத்த 1800 வருடங்களுக்கு யூதர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் மூன்றாம்தரக் குடிமகன்களாக சிறுபான்மையினராகவே வாழ வைத்தது. இதன் பொருள், ராணுவ மெஸையா வாழ்நெறி என்பது நடைமுறைக்கு ஒவ்வாத, பைத்தியக்காரத்தனமான வாழ்நெறி என்பதா ? ஜோஸஃபஸ் மற்றும் இதர யூதர்கள் பார் கோச்வாவை திட்டியது ஒப்பாக நாமும் மெஸையாத்தனமான மேகத்தை துரத்தும் வேலைகள் வெற்றி பெற முடியாத ரோமானிய சக்தியை எதிர்த்து போரிட வைத்து யூதர்களை ஏமாற்றி தங்கள் தாய்நாட்டை இழக்க வைத்தது என்று முடிவு கூற முடியுமா ? நான் அப்படி நினைக்கவில்லை.

ரோமுக்கு எதிரான யூதக்கிளர்ச்சிகளின் காரணம் ரோமானிய காலனியாதிக்கமே. அதன் காரணம் யூத ராணுவ மெஸையாத்தனம் அல்ல. ரோமானியர்கள் வெற்றி பெற்றவர்கள் என்பதால், ரோமானியர்களை ‘நடைமுறையைப் புரிந்தவர்கள் ‘ என்றோ, ‘நிதர்சனம் ‘ தெரிந்தவர்கள் என்றோ கூற முடியாது. இருவரும் போருக்குச் சென்றது நடைமுறையான சாதாரணமான காரணங்களுக்குத்தான். ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்க புரட்சிப்போரில் தோற்றிருந்தால், நாம் அமெரிக்கப்படைகளை ‘சுதந்திரம் ‘ என்ற மேகத்தை துரத்தியவர்களால் ஏமாற்றப்பட்ட பலியாடுகள் என்று கூறுவோமா ?

விலங்கினம் மற்றும் தாவர உலகினைப் போலவே, கலாச்சாரத்திலும், குறிப்பிட்ட சக்திகளால் உருவாக்கப்படும் அமைப்புகள், வெற்றி பெறுவதில்லை என்பதன் காரணம், அவை குறைபாடுகள் உடையவை என்பதாலோ, அல்லது பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்பதாலோ அல்ல. தங்களை விட சக்தி வாய்ந்த, தங்களை விட மாறுதலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய மற்ற அமைப்புக்களை சந்திப்பதால்தான். பழிவாங்கும் மெஸையா கலாசாரம், சரக்குப்பெட்டி கலாசாரத்தைப் போலவே காலனியாதிக்கத்தின் விளைவுகளின் எதிர்வினையாகத் தோன்றியது என்பதை காட்டியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஒரு ராணுவத்தை உருவாக்கி பயிற்றுவிக்கக்கூடிய அமைப்பும் சூழலும் இல்லாத நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் ஒரு நடைமுறைச் சூழலை உருவாக்குவதில் இது மிகுந்த வெற்றி பெற்றது. எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இன்று வரலாறு காட்டும் விளைவைத்தவிர வேறெந்த விளைவையும் அது கொண்டு வந்திருக்காது என்பதால் அவர்களது தோல்விக்கான சாத்தியம் மிக மிக அதிகம் என்று காட்டப்பட்டாலொழிய மதத்தீவிரவாத கொள்ளையர் (zealot-bandits) ஏமாற்றப்பட்டார்கள் என்று நான் கூறமாட்டேன். ஆனால், மதத்தீவிரவாத கொள்ளையர்(zealots-bandits) தங்களது தோல்வி தவிர்க்கமுடியாதது என்று அவர்களாலேயே அறிய முடிந்திருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ரோமை வெற்றி பெறமுடியாது என்ற கருத்தைப் பொருத்தமட்டில், ரோமானிய சீசர்கள் தவறு என்றும், கலிலியின் யூதாஸ்தான் சரி என்றும் வ

ரலாறு நிரூபிக்கிறது. ரோமானிய சாம்ராஜ்யம் இறுதியாக அழிக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அது எண்ணிக்கையிலும், ஆயுதங்களிலும், ராணுவ உபாயங்களிலும் ரோமானியர்களை விட கீழ் மட்டத்திலிருந்த காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த யூதர்கள் போன்ற பிற மக்களாலேயே அழிக்கப்பட்டது.

ஒரு வரையறையின் படியே, புரட்சி என்பதன் பொருள் தங்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பவர்களை எதிர்த்து சுரண்டப்பட்ட மக்கள் பல மாபெரும் இடையூறுகளை சமாளித்து வேறு வழியின்றி எடுக்கும் செயல்பாடுகளையே குறிக்கிறது. வர்க்கங்கள், இனங்கள், நாடுகள் ஆகியவை இப்படிப்பட்ட பெரும் இடையூறுகளைத் தாண்டி சவால்களை எதிர்கொள்வதன் காரணம் அவை பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொள்கைகளால் ஏமாற்றப்படுவதால் அல்ல. அதைத்தவிர வேறு மார்க்கங்கள் இப்படிப்பட்ட சவால்களை விட அருவருக்கத்தக்கவையாக இருப்பதால்தான். அதுதான், யூதர்கள் ரோமானியர்களுக்கு எதிராக போராடியதன் காரணம். அதுவே கிரிஸ்துவின் காலத்தில் யூத ராணுவ மெஸையா மனவியல் மிகவும் விரிவடைந்து பரவியதற்கும் காரணம்.

பழிவாங்கும் மெஸையா மதம் எவ்வாறு ரோமானிய காலனியாதிக்கத்தின் நடைமுறை நிகழ்வுகளுக்கு எதிர்வினையாகத் தோன்றிய அளவுக்கு, புரிபடாத புதிராக, சமாதான மெஸையா (peaceful messiah) மதம் ஆகிவிடுகிறது. ரோமுக்கு எதிரான 180 வருட போரில் ஒரு சாத்தியமற்ற நேரத்தில் கிரிஸ்துவ மதத்தின் சமாதான மெஸையா மார்க்கம் தோன்றுகிறது. ராணுவ மெஸையா மதம், களங்கமற்ற யாஹ்வாவின் அருள் நோக்கி, வெகு வேகமாக விரைந்து சென்றுகொண்டிருக்கும் கால கட்டத்தில் இந்த சமாதான மெஸையா மதம் உருவாகிறது. இதன் நேரம் மிகவும் தவறானதாக இருக்கிறது. கிபி 30இல், மதத்தீவிரவாத கொள்ளையர் (zealot-bandit) புரட்சி உந்துதலுக்கு எந்த ஒரு பெரிய எதிர்ப்பும் இல்லை. யூதக்கோவில் உடைபடவில்லை. வருடாந்தரமாக மாபெரும் யாத்திரைகள் நடக்கின்ற காட்சிகள். கலிலியின் யூதாஸின் புத்திரர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள். மஸாடாவின் பயங்கரம் கற்பனைக்குள்ளேயே வரவில்லை. ராணுவ மெஸையா கனவுகள் மனஹெம், பார் கோச்வா ஆகியோரை அபிஷேகம் செய்யப்பட்ட மெஸையாக்களாக ஆக்குவதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கும்போது ஏன் யூதர்கள் சமாதான மெஸையாவுக்கு ஏங்கினார்கள் ? யாஹ்வாவின் புனிதமான கவசத்தில் ஒரு ஓரத்தைக்கூட தொடமுடியாமல் ரோமானிய அதிகார சக்தி இருந்தபோது ஏன் பாலஸ்தீனத்தை ரோமானிய மேல் தட்டு வர்க்கத்துக்கு அடைக்கலமாக எழுதி வைக்க வேண்டும் ? பழைய ஒப்பந்தம் ரோமானிய பேரரசை இரண்டு முறை அசைத்துப்பார்

க்கும் அளவுக்கு வலிமையாக இருக்கும்போது ஏன் புதிய ஒப்பந்தம் ?__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசு யார்?

மேசியா அல்லது ஒரு மனிதனா?

நசரேயனாகிய இயேசுவைப் பற்றிய யூத பார்வையில், அவர் ஒரு சாதாரண யூத மனிதராகவும், முதலாம் நூற்றாண்டில் இஸ்ரவேலின் ரோமர்களின் ஆக்கிரமிப்பு சமயத்தில் வாழ்ந்து வந்த பிரசங்கிப்பாளராகவும் இருந்தார். ரோமர்கள் அவரை கொலை செய்தனர் - பல தேசியவாத மற்றும் யூத மதத்தினர் - ரோமானிய அதிகாரிகள் மற்றும் அவற்றின் மீறல்களுக்கு எதிராக பேசுவதற்காக.

இயேசுவே மேசியா யூத மத நம்பிக்கைகளா?

இயேசு இறந்த பிறகு, அவருடைய சீஷர்கள் - அதாவது நசரேயனென்று அறியப்பட்ட முன்னாள் யூதர்களின் சிறிய பிரிவினர் - அவர் யூத நூல்களில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு மெசியாவாக ( மேஷியாச் அல்லது மோஷியுக்ஷு, அதாவது அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்றும், மேசியாவின் செயல்கள்.

பெரும்பாலான சமகால யூதர்கள் இந்த நம்பிக்கையை நிராகரித்து, யூத மதத்தை முழுமையாய் பின்பற்றினர். கடைசியில், கிறிஸ்துவ விசுவாசத்தில் விரைவாக உருவான சிறிய யூத மத இயக்கத்தின் மையமாக இயேசு விளங்கினார்.

யூதர்கள் தெய்வீக அல்லது "கடவுளுடைய மகன்" என்று யூதர்கள் நம்பவில்லை அல்லது யூதத் திருச்சபையில் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவர் ஒரு "பொய் மாசியாவாக" கருதப்படுகிறார், அதாவது (அல்லது அவரைப் பின்பற்றுபவர்களிடமிருந்து வந்தவர்) மேசியாவின் சால்வை, ஆனால் இறுதியில் யூத நம்பிக்கைக்குட்பட்ட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யாத ஒருவர் என்று பொருள்.

மெஸியானிக் வயது என்னவென்று பாருங்கள்?

யூத சரித்திரத்தின் படி, மேசியாவின் வருகையை முன், ஒரு யுத்தம் மற்றும் பெரும் துன்பம் ஏற்படும் (எசேக்கியேல் 38:16), அதன் பிறகு மெசியா அனைத்து யூதர்களையும் இஸ்ரேலுக்கு மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஒரு அரசியல் மற்றும் ஆவிக்குரிய மீட்பைக் கொண்டுவருவார். (ஏசாயா 11: 11-12, எரேமியா 23: 8, 30: 3, மற்றும் ஓசியா 3: 4-5).

பின்னர், மெசையா இஸ்ரேலில் ஒரு தோரா அரசாங்கத்தை அமைப்பார், இது அனைத்து யூதர்களுக்கும் யூதர்களுக்கும் அல்லாத உலக அரசாங்கத்தின் மையமாக செயல்படும் (ஏசாயா 2: 2-4, 11:10, 42: 1). பரிசுத்த கோவிலை மீண்டும் கட்டும் மற்றும் கோவில் சேவை மீண்டும் தொடங்கும் (எரேமியா 33:18). கடைசியாக, இஸ்ரவேலின் மதநெறி ஒழுங்குமுறை மறுபடியும் மாறும், தோரா நிலத்தின் ஒரே மற்றும் இறுதி சட்டமாக இருக்கும் (எரேமியா 33:15).

மேலும், மெசியாவின் வயது வெறுப்பு, சகிப்புத்தன்மை, போர் ஆகியவற்றில் இல்லாத மக்கள் அனைவரின் அமைதியான சகவாழ்வுகளால் குறிக்கப்படும் - யூதர்கள் அல்ல (ஏசாயா 2: 4). அனைத்து மக்கள் YHWH ஒரு உண்மை கடவுள் மற்றும் வாழ்க்கை ஒரு உண்மையான வழி என தோரா, மற்றும் பொறாமை, கொலை, மற்றும் கொள்ளை மறைந்துவிடும்.

அதேபோல், யூத மதத்தின்படி, உண்மையான மேசியா வேண்டும்

  • தாவீது ராஜாவிடம் இருந்து வந்த ஒரு யூத மனிதனாக இருங்கள்
  • ஒரு சாதாரண மனிதனாக (கடவுளின் சந்ததிக்கு எதிராக)

மேலும், யூத மதத்தில், வெளிப்பாடு ஒரு தேசிய அளவிலான நடக்கிறது, இயேசு கிறிஸ்துவின் கதை போன்ற தனிப்பட்ட அளவிலான அல்ல. கிரிஸ்துவர் முயற்சி Torah இருந்து வசனங்கள் பயன்படுத்த மெஸையா இயேசு சரிபார்க்க, விதிவிலக்கு இல்லாமல், mistranslations விளைவாக.

இயேசு இந்த தேவைகளை பூர்த்தி செய்யவில்லை, அல்லது மெஸியோனிக் காலம் வரவில்லை என்பதால், இயேசு ஒரு மனிதர் மட்டுமே அல்ல, அவர் மெஸையா அல்ல என்பதை யூத நோக்கமாகக் காட்டுகிறது.

பிற குறிப்பிடத்தக்க மேசியானியக் கோரிக்கைகள்

நசரேயனாகிய இயேசு சரித்திராசிரியர்களில் பல யூதர்களில் ஒருவராக இருந்தார், அல்லது மெஸ்ஸியா அல்லது அதன் ஆதரவாளர்கள் தங்கள் பெயரில் கூற்றுக்களை வெளிப்படையாகக் கூறிக்கொள்ள முயற்சித்தனர். இயேசு வாழ்ந்த சகாப்தத்தில் ரோம ஆக்கிரமிப்பு மற்றும் துன்புறுத்தலின் கீழ் கடினமான சமூக சூழ்நிலையைப் பெற்றதால், அநேக யூதர்கள் ஏன் சமாதானத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள் என்பதை புரிந்துகொள்ள கடினமாக இல்லை.

பண்டைய காலங்களில் மிகப் பிரபலமான யூத பொய் மேசியாக்கள் சைமன் பார்க் கோச்சா ஆவார். ரோமர்களுக்கு எதிராக ஆரம்பத்தில் வெற்றிகொண்ட ஆனால் இறுதியில் பேரழிவுகரமான கிளர்ச்சிக்கு வழிநடத்தியவர் ரோமர்களின் கைகளில் பரிசுத்த தேசத்தில் யூதாசியாவின் அருகாமை அழிவுக்கு வழிவகுத்தது. பார் கோச்சா மெஸையா என்றும், முக்கிய ரப்பி ஆகிவாவால் அபிஷேகம் செய்யப்பட்டவராகவும் இருந்தார், ஆனால் பட்டாச்சார்வையில் கொச்சா இறந்துவிட்டபின், உண்மையான மெசியாவின் தேவைகளை பூர்த்தி செய்யாததால், மற்றொரு முறை தவறான மெஸையா என அவரை நிராகரித்தார்.

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு பெரிய தவறான மேசியா தோன்றியது. சப்பாத்தி சுவி காபிலலிஸ்ட் ஆவார். அவர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மெசியாவாக இருப்பதாகக் கூறினார், ஆனால் அவர் சிறையிலடைக்கப்பட்ட பின்னர், அவர் இஸ்லாமிற்கு மாற்றினார், மேலும் நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் இருந்தனர்.

இந்த கட்டுரை ஏப்ரல் 13, 2016 அன்று சாவிவா கோர்டன்-பென்னட் அவர்களால் புதுப்பிக்கப்பட்டது.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard