ஆஜீவகம் என்னும் மதம் மஸ்கரீ கோசாலரால் வளர்க்கப்பெற்று மஹாவீரருக்குச் சரியான காலத்தில் திகழ்ந்தது என்பது அறிந்ததுதான். ஆனால் அதன் சடங்குகள் எப்படி இருந்தன என்பதுதான் கேள்வி. பல ஆராய்ச்சியாளர்களும் பௌத்த நூல்களான மஜ்ஜிம நிகாயத்திலிருந்தும் ஜைன நூலான பகவதி ஸுத்தத்திலிருந்தும் மேற்கோள்களைக்காட்டுகின்றனர். அவற்றுள் ஆஜீவகர்கள் உடல்முழுதும் நீறுபூசி முள்படுக்கை படுத்தல் போன்ற கடினமான நோன்புகளை மேற்கொண்டிருந்தமையை எடுத்துக் காட்டுகின்றனர். பகவதி ஸுத்தம் கோசாலரைக் கிண்டல் செய்யும் முகமாக அவர் ஆடி மதுவருந்தி ஹாலாஹலா என்னும் பெண்ணின் வீட்டிலிருந்து சென்றமையைக் குறிப்பிட்டு அதனாலேதான் இறந்தார் என்றும் கூறுகிறது.
ஆய்வாளர்கள் இவற்றைக் குறிப்பிட்டு ஆஜீவகர்கள் முதலில் சைவர்களாகவே அதிலும் பாசுபதர்களாக இருந்து பிறகு மாறியிருக்கவேண்டும். நீறு பூசுதல் முதலியன தொடர்ந்திருக்க வேண்டுமென்று கருதுகின்றனர்.
தமிழகத்தில் ஆஜீவகம் என்று குதிப்பவர்களுக்கு : நோட் திஸ் பாயிண்ட் யுவர் கானர்....