ஈரோடு மாவட்டம், காங்கேயம் ஈரோடு வழித்தடத்தில் அரச்சலுர் உள்ளது. இந்த ஊருக்கு அண்மையில் உள்ள நாகமலையில் ஆண்டிப் பாறை எனப்படும் இடத்தில் இயற்கையான குகையும் அதில் கற்படுக்கைகளும் உள்ளன. கல்வெட்டு 29:1 கற்படுக்கைகளுக்கு இடையே இருவரிகளில் சில எழுத்துகள் உடைந்த நிலையில் இக் கல்வெட்டு உள்ளது.
எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்
தேவன் சாத்தன் எனும் மலை வண்ணக்கன் எழுத்துகளைச் (இசை) சேர்த்து அமைத்தான் என்பது இதன் பொருள்.
கல்வெடடு 29:2
முன் உள்ள கல்வெட்டிற்கு இடப்புறமாக ஐந்து வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது. வ 1. த தை தா தை த வ 2. தை தா தே தா தை வ 3. தா தே தை தே தா வ 4. தை தா தே தா தை வ 5. த தை தா தை த மேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாகப் படிக்க ஒருவகை இசை ஒலிகளை உணர்த்துகின்றது.
கல்வெட்டு 29:3
முதல் கல்வெட்டின் வலப்புறம் வெட்டப்பட்டு உள்ளது. பல எழுத்துகள் சிதைந்து போனதால் இரண்டாம் கல்வெட்டின் அடிப்படையில் ஊகமாக படித்து உள்ளனர். வ 1. கை த தை த கை வ 2. த (கை) (த) (கை) (த) வ 3. தை த கை த (தை) வ 4. த கை (த) (கை) (த) வ 5. (கை) (த) (கை) த (கை) இரண்டாம் கல்வெட்டு போலவே அமைக்கப்பட்டு உள்ளது.