Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சென்னை லயோலா கல்லூரியில் பாலியல் ரீதியாக பேராசிரியைகள் மாணவிகளை கற்பழிப்பு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சென்னை லயோலா கல்லூரியில் பாலியல் ரீதியாக பேராசிரியைகள் மாணவிகளை கற்பழிப்பு
Permalink  
 


 #சென்னை #லயோலா #கல்லூரியில் #பாலியல் ரீதியாக பேராசிரியைகள் மாணவிகளை கற்பழிப்பு செய்து இனங்க மறுப்பவர்களை கல்லூரியை விட்டு நீக்கும் பாதிரியார் கள்ள கூட்டம்

சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து, கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ராஜராஜனால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி, தற்போது கல்லூரி நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஜோஸ்ஃபின் ஜெயசாந்தி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த கண்ணீர் பேட்டி.
FILE

என்னுடைய பெயர் ஜோஸ்ஃபின் ஜெயசாந்தி. நான் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சென்னை லயோலா கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2008ஆம் ஆண்டு முனைவர் சி.அ.இராஜராஜன் தமிழ்த்துறையில் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்தேபலர் முன்னிலையில் அவமானப்படுத்துவது, விடுப்பு விண்ணப்பத்தை முகத்தில் தூக்கியெறிந்து கேவலமாகப் பேசுவது என்று செயல்பட்டார்.

அவரது மனித உரிமை மீறல் செயல்களின் உள்நோக்கம் என்னவென்று அப்போது எனக்குத் தெரியவில்லை. என்னைத் தொடர்ந்து இழிவுபடுத்தியதால் பேராசிரியர் சி.அ.இராஜராஜனுடைய மேற்சொன்ன செயல்களைக் குறிப்பிட்டு 28.07.2008 அன்று அப்போதைய கல்லூரி முதல்வர் Fr.ஆல்பர்ட் முத்துமாலை அவர்களிடம் எனது இராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். அவர் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்து, எனது பணியைத் தொடர கேட்டுக்கொண்டார். அதன் பிறகும் பேராசிரியர் சி.அ.இராஜராஜன் தொடர்ந்து எனக்கு பாலியல் வன்கொடுமைகளை இழைத்து என்னைத் துன்புறுத்தினார்.

2008 ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்படவிருந்த பணி நிரந்த நியமனத்தை ரத்து செய்ய வைத்து, அதன்மூலம் என்னை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் ஆய்வு மாணவியாக சேரும்படி வற்புறுத்தியதுடன் லாட்ஜில் வந்து தங்கும்படியும், கேவலமாகப் பேசினார். துறையில் எனக்கு வழங்கிய இடத்தை மாற்றி அவருடைய அறையிலேயே அமர வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தினார்.

மேலும், ‘புருஷன் இல்லாம காய்ஞ்சு போய் கிடக்கிற. என் ஆசைக்கு இணங்கிவிடு’ என்றும், பலர் முன்னிலையில், ‘உன்னோட உடம்பில ஒரு ஓட்டை இருக்குது. அதை அடைப்பது எப்படின்னும் எனக்குத் தெரியும்’

என்றும் ஆபாசமாகப் பேசினார். அவருடைய விருப்பத்திற்கு அடிபணிய மறுத்ததால் நான் வகுப்புக்குச் செல்வதில்லை என்றும் ஒழுங்காக வேலை செய்வதில்லையென்றும் நிர்வாகத்திடம் பல பொய்யான புகார்களைக் கொடுத்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். இவருடைய மிரட்டல் செயல்களுக்கு தமிழ்த்துறையில் பணிபுரியும் பேராசிரியர் அ.பிரின்ஸ் என்பவரும் தொடக்கத்திலிருந்தே உடந்தையாகச் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியை பணி ஆற்றியதோடு, சைஃப் (SIFE - Students in Free Enterprise) என்ற உலக அளவிலான கல்லூரி அமைப்பிற்கும், மே 2011 வரை பொறுப்பாளராகவும் நான் இருந்ததால், அதற்கென்று தனியாக எனக்கு அலுவல் அறை வழங்கப்பட்டிருந்தது. கல்லூரி கேன்டீனிற்கு மேல், சற்று ஒதுக்குப்புறமாக இருக்கின்ற அந்த அறைக்கே வந்து பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதனால், ஒரு முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

FILE

பேராசிரியர் சி.அ.இராஜராஜனுடைய பாலியல் வன்கொடுமைகள் அதிகமானதால் 14.12.2012 அன்று கல்லூரியின் ஆட்சிமன்றக் குழுவால் 2012 - 2013 கல்வியாண்டிற்கு என்று நியமிக்கப்பட்டிருந்த பாலியல் வன்கொடுமை விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தேன்.

18.12.2012 அன்று சி.அ.இராஜராஜன் என் நடத்தையைக் களங்கப்படுத்தும் விதத்தில் என்னைப் பற்றி மிகக் கேவலமான, பொய்யான 60 அவதூறுகளை கைப்பட எழுதி, கல்லூரிக்குள்ளும் வெளியிலும் விநியோகம் செய்தார். இந்த முறையற்ற செயல் மீதும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விசாரணையைத் தடுப்பதற்கு பேராசிரியர் சி.அ.இராஜராஜன் விருப்பப்படி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக, பேராசிரியர் சி.அ.இராஜராஜன் பரிந்துரைக்கும் ஆட்களையும் உள்ளடக்கி ஒரு புதிய விசாரணைக் குழு அமைக்க முயற்சி செய்தார்கள். அதை ஏற்க முடியாது என்று என்னுடைய நியாயமான மறுப்பைப் பதிவு செய்தேன்.

விசாகா வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை விசாரிக்கும் முறையான குழுவே என்னுடைய புகாரை விசாரிக்க வேண்டுமா என சட்ட ரீதியான கருத்து கேட்பதற்காக நிர்வாகம் அதனை வழக்கறிஞருக்கு அனுப்பி வைத்தது. இத்தகவலை 18.2.2013 அன்று அப்போதைய கல்லூரி முதல்வர் Fr.போனிஃபஸ் ஜெயராஜ் அவர்கள், மின்னஞ்சலில் எனக்குத் தெரிவித்தார். வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் விசாகா வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட அந்தக் குழுவே என் புகாரை விசாரிக்க வேண்டும் என அவர் உறுதிப்படுத்தினார்.

அதன் பிறகும், தற்போது முதல்வராக இருக்கும் Fr.ஜோசஃப் ஆண்டனிசாமி தலைமையில், 22.2.2013 அன்று புகாரைத் திரும்பப் பெறுமாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விசாரணையை முடக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

FILE

என்னுடைய தொடர் போராட்டத்திற்குப் பிறகு, 19.3.2013 அன்று அக்குழு என் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. அதன் பிறகு, என்-சார்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டார்கள்.

23.4.2013 அன்று பாலியல் வன்கொடுமை தடுப்பிற்கான குழு விசாரணை அறிக்கையை அப்போதைய கல்லூரி முதல்வரிடம் அளித்தது. தான் பணி ஓய்வு பெற்று செல்வதால், புதிய முதல்வர் அந்த அறிக்கையின் அடிப்படையிலும், மதுரை மறை மாநில இயேசு சபை தலைவர் வழிகாட்டுதலின்படியும் நடவடிக்கை எடுப்பார் என உறுதி கூறினார்.

அடுத்த கல்வியாண்டிற்கு, புதிய முதல்வர் Fr.ஜோசஃப் ஆண்டனிசாமி முதல்வராகப் பதவியேற்ற பிறகு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், லயோலா கல்லூரியை நடத்திவரும் இயேசு சபையின் மதுரை மறை மாநில தலைவர் Fr.L.செபஸ்டிராஜ் மற்றும் எட்வர்ட் முடவசேரி, Jesuit Provincial of South Asia, அவர்களுக்கும் 3.7.2013 அன்று விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு Fr.L.செபஸ்டிராஜ் அவர்களை 18.7.2013 அன்று நேரிலும் சந்தித்து முறையிட்டேன். அப்போது அவர் தனக்கும் பாலியல் வன்கொடுமை விசாரணைக் குழுவின் அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும், என்னுடைய புகாருக்கான எந்த முகாந்திரமும் அதில் இல்லை எனவும் அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார். அவரிடம் விளக்கமாகப் பேசிய பிறகே, பேராசிரியர் சி.அ.இராஜராஜன், பேராசிரியர் அ.பிரின்ஸ் - இருவரும் ஊழல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மட்டுமே அவருக்கு அனுப்பப்பட்டு உண்மையை மறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரிய வந்தது. எனவே,

பாலியல் வன்கொடுமை விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் மற்றும் விசாரணை நடத்தப்பட்ட விவரங்களையும் கூறி, இரண்டு விசாரணைக் குழுக்களும் வேறு, வேறு என்பதைத் தெளிவுபடுத்தி, 22.7.2013 அன்று மின்னஞ்சலும் அனுப்பி வைத்தேன். இயேசு சபை நிறுவனரான புனித இக்னேஷியசின் திருநாளான 31.7.2013-ஆம் தேதிக்குள் நீதியைப் போதிக்கும் இயேசு சபையின் கல்லூரியில் எனக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுமாறு கோரிக்கையும் வைத்திருந்தேன்.

அதன் பிறகும் எந்த சிறு நடவடிக்கையும் இல்லாத நிலையில், கல்லூரி முதல்வர், எனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை பற்றி எந்தத் தகவலும் அறிந்திராத புதிய ஒரு குழுவை நியமித்து, 7.8.2013 அன்று என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தச் செய்தார். பாலியல் வன்கொடுமை குழுவின் அறிக்கை நகல் எனக்குத் தரப்பட வேண்டும். அதன் அடிப்படையில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைத் தவிர, சட்டத்திற்கு புறம்பான எந்த சமரச உடன்பாட்டிற்கும் நான் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினேன்.

ஆகஸ்ட் மாத நடுவில், பேராசிரியர் சி.அ.இராஜரானிடம் விளக்கம் கேட்டு நிர்வாகம் show-cause notice கொடுத்தது. கூடவே இரண்டு மாதங்களுக்கு மருத்துவ விடுப்பும் அளித்தது. மருத்துவ விடுப்பில் சென்ற நிலையிலும் அடிக்கடி கல்லூரிக்கு வந்த சி.அ.இராஜராஜனுடன் பேராசிரியர் அ.பிரின்சும் சேர்ந்து என்னை துன்புறுத்தியதால், கல்லூரி முதல்வரிடம் முறையிட்டேன். எந்த பயனும் இல்லை.

மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்த சி.அ.இராஜராஜன், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் பேராசிரியர் அ.பிரின்சுடன் சேர்ந்து அதிக அளவிலான கொடுமைகளுக்கும், மன உளைச்சலுக்கும் என்னை ஆளாக்கினார். எனவே, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்றும், விசாரணைக் குழுவின் அறிக்கையை எனக்குத் தர வேண்டும் என்றும் 11.10.2013 அன்று கல்லூரி முதல்வரிடம் கடிதம் கொடுத்தேன். ஆனால், அதன் பிறகும் அறிக்கையின் நகல் எனக்குத் தரப்படவில்லை. தன்னுடைய கையில் அறிக்கையை வைத்துக்கொண்டே நீதிமன்றத்தை அணுகும்படி கல்லூரி முதல்வரே என்னிடம் தெரிவித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அதைவிட வருந்தத்தக்க அனுபவம் என்னவென்றால், பேராசிரியர் சி.அ.இராஜராஜனுக்கு விசாரணைக் குழுவின் அறிக்கை வழங்கப்பட்டதோடு, என்னுடைய சாட்சியங்களின் வாக்குமூலங்களும் வழங்கப்பட்டிருந்தன. அதை வைத்து எனக்காக சாட்சி சொன்னவர்களுக்கு அவர் வக்கீல் நோட்டீசும் அனுப்பி இருக்கிறார்.

எந்த நடவடிக்கையும் இல்லாமல் மேலும், மேலும் கொடுமைகளுக்கு நான் ஆளாக்கப்பட்டதால், 27.10.2013 அன்று தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) இணையதளத்தில் என்னுடைய புகாரைப் பதிவு செய்தேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு சென்னை மாநகர காவல் துறை இணை ஆணையருக்கு அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

7.1.2014 அன்று CM Cell இணையதளத்திலும் புகார் பதிவு செய்யப்பட்டு காவல்துறை ஆணையருக்கு forward செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமைக்கும், அதன் மேல் நடந்த விசாரணைக்கும் எந்தத் தீர்வும் எட்டப்படாததோடு, குற்றவாளிகளால் கொலை மிரட்டலுக்கு ஆளானதால் 31.12.2013 அன்று சென்னை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் அளித்தேன்.

என்னுடைய புகார் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு நான் விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். 6.1.2014 மற்றும் 8.1.2014 ஆகிய இரண்டு நாட்களும் சென்று என்னுடைய புகார் பற்றி விளக்கமாகத் தெரிவித்தேன். 21.1.2014 அன்று கல்லூரிக்கும் வந்து என்னை விசாரித்தார்கள்.ஆனால், FIR பதிவு செய்யப்படவில்லை. அதனால், 27.1.2014 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரை மீண்டும் சந்தித்து FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தேன்.

அடுத்த சில நாட்களில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாற்றப்படவே, புதிய ஆய்வாளர் என்னுடைய புகார் பற்றி முழு விளக்கம் தருமாறு காவல் நிலையத்திற்கு அழைத்ததால், 19.2.2014 அன்று காவல் நிலையம் சென்று முழு விளக்கம் கொடுத்தேன். உடனே முதல்-தகவல்-அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டும், கல்லூரி முதல்வரிடம் விசாரித்துவிட்டு முடிவு செய்வதாகக் கூறினார்கள்.

விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல்நிலைய புதிய ஆய்வாளரிடம், கல்லூரி நடத்திய விசாரணைக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றொரு பொய்யான தகவலை கல்லூரி முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை விசாரணைக் குழுவின் அறிக்கையின் நகலை எனக்கு வழங்குவதற்கும், பணிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆணையிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் (வழக்கு எண்: WP34958/2013), உச்சக்கட்டமாக, 28.02.2013 அன்று பணி நீக்க உத்தரவை எந்த முன்னறிவிப்புமின்றி நிர்வாகம் எனக்கு வழங்கி, பெரும் அநீதியை இழைத்திருக்கிறது. என்னைப் பணி நீக்கம் செய்வதற்கு எந்தக் காரணமும் அதில் தெரிவிக்கப்படவில்லை. காரணம் சொல்லவேண்டிய அவசியமல்லை என்று வாய்மொழியாக எனக்கு கல்லூரி செயலரால் தெரிவிக்கப்பட்டது. அதை வாங்க மறுத்ததால், பதிவுத் தபாலில் அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரு கல்லூரி ஆசிரியை என்ற முறையில் எனக்கு வழங்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவாகச் செய்திருக்கிறேன். பாடம் நடத்துவது மட்டுமின்றி சைஃப் என்ற மாணவர் அமைப்பின் பொறுப்பாளராக செயல்பட்ட ஐந்து ஆண்டுகளிலும் (2006-2011) மாணவர்களின் வழியாக தமிழ்ச் சமூகத்தில் பல்வேற பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தி இந்திய அளவில் வெற்றி பெறச்செய்து, நியூ யார்க் (2007), லாஸ் ஏஞ்சலஸ் (2010) நகரங்களில் நடைபெற்ற சைஃப் உலகப் போட்டிகளிலும் கல்லூரிக்கு வெற்றி தேடித் தந்து பெருமை சேர்த்திருக்கிறேன்.

துறைத்தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர் சி.அ.இராஜராஜன், மற்றும் பேராசிரியர் அ.பிரின்ஸ் இருவர் மீதும் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக 2012ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 2014 ஆண்டு பிப்ரவரி வரை விடாமல் போராடிய ஒரே காரணத்திற்காக கல்லூரி நிர்வகத்தால் பழிவாங்கப்பட்டிருக்கிறேன்.

குற்றவாளிகள் கல்லூரி முதல்வராலும் செயலராலும் பாதுகாக்கப்பட்டிருப்பதோடு, பேராசிரியர் அ.பிரின்ஸ், சுயநிதிப் பிரிவிலிருந்து அரசு உதவி பெறும் ஆசிரிய பணிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். குற்றப் பின்னணி உள்ளவருக்கு, வழக்கு நிலுவையில் உள்ளபோது, அரசுப் பணி எப்படி வழங்க முடியும் எனக் கேட்டு, சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளருக்கும், தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயக்குநரகத்திற்கும் 18.12.2013 அன்று புகார்க் கடிதம் அனுப்பியுள்ளேன்.

சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனம் என்பதால் அரசின் பொதுவான விதிமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை என்கிற போக்கில் கல்லூரி நிர்வாகம் செயல்படுகிறது. Ahmedabad St.Stephen’s College vs Govt. of Gujarat வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தங்கள் உரிமைகளை mal-administrationக்கு பயன்படுத்த முடியாது எனத் தெளிவாகத் தீர்ப்பளித்திருப்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஒரு பெண் முதலமைச்சர் ஆளும் தமிழ்நாட்டில், புகழ்பெற்ற கல்வி நிறுவனமான லொயோலா கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி நீதி கேட்ட பெண்ணுக்கு, பணி நீக்கம் என்ற தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க மதத்தின் தலைவராக இயேசு சபையை சார்ந்தவரான Fr.ஹோர்கே பெர்காக்லியோ, போப் முதலாம் ஃப்ரான்சிசாக பதவிவகிக்கும் நிலையில், சமூக நீதிக்காகப் போராடுவதாக, Social Forum for Justice போன்ற அமைப்புகளை வைத்திருக்கும் இயேசு சபை நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதை நான் என் தனிப்பட்ட பிரச்சனையாகக் கருதவில்லை. சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகளின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கிறேன். எனவே, துவண்டு போகாமல் இந்திய நீதித் துறை மீதும், பெண் முதல்வர் ஆளும் தமிழக அரசு மீதும் நம்பிக்கை கொண்டு, ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தினர், அவர்களைப் போலவே சமூக அக்கறை கொண்டவர்களின் ஆதரவுடன் நியாயம் கிடைக்கப் போராட முடிவு செய்திருக்கிறேன்.

எனக்குக் கிடைக்கும் நியாயம் இனி எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற அநீதி இழைக்கப்படாமல் தடுப்பதற்குக் காரணமாக அமைய வேண்டும் என்பதே என்னுடைய எனது தொடர் போராட்டத்தின் நோக்கம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறேன் என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜோஸ்ஃபின் ஜெயசாந்தி கூறினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: சென்னை லயோலா கல்லூரியில் பாலியல் ரீதியாக பேராசிரியைகள் மாணவிகளை கற்பழிப்பு
Permalink  
 


4 ஆண்டுகளாக நீதி கிடைக்காத லயோலா பாலியல் துன்புறுத்தல் வழக்கு. AICF களமிறங்கியது. தமிழக ஊடக மெளனம்?

லயோலா கல்லூரி பாலியல் துன்புறுத்தல் வழக்கு. பாதிக்கப்பட்டவருக்கு நான்கு ஆண்டுகளாக மறுக்கப்படும் நீதி. முன்னாள் கல்லூரி முதல்வரும் இயக்குனருமான Fr.சேவியர் அல்போன்ஸுக்கு எதிராக விசாரணை தேவை என AICF வலியுறுத்தல்.

குற்றம் சாட்டப்பட்டவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் அதிபரும் இயக்குநருமான Fr.சேவியர் அல்போன்ஸ் ஆவார். பாதிக்கப்பட்டவர், இந்த வழக்கில், அந்த கல்லூரியில் மூத்த ஆசிரியராக பணிபுரிந்த மேரி என்று கூறப்படுகிறது. அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான போராட்டத்தில் லயோலா கல்லூரி ஒத்துழைக்காமல் இருந்து வந்தது, இதனால் 2016 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர்.  Fr.சேவியர் அல்போன்ஸுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் ஒரு பதிலையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.

AICF இன் தலைவரான சவியோ ரோட்ரிக்ஸ், பாலியல் துஷ்பிரயோகம் என்பது கத்தோலிக்க திருச்சபைக்குள் இருக்கும் ஒரு தீமை என்று ஒப்புக் கொண்டார். இதுபோன்ற குற்றங்கள் அனைத்தும் கடுமையாகவும் விரைவாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  ஜேசுயிட்  என்ற சக்திவாய்ந்த அமைப்பு அல்போன்சைக் காப்பாற்றுவதாக ரோட்ரிக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “சென்னை லயோலா கல்லூரியின் ஜேசுட் ஆணை - இன் சக்திவாய்ந்த அமைப்பின் பாதுகாப்பின் கீழ்  Fr.சேவியர் அல்போன்ஸ் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட பாதிரியாரிடமிருந்தும், லயோலா கல்லூரியிலிருந்தும் 4 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற அறிவிப்புகளுக்கு எந்த பதிலும் கிடைக்காததற்கு இந்தப் பின்னணியே காரணம் ”, என்றார்.  ரோட்ரிக்ஸ் மேலும் கூறுகையில், நீதித்துறையின் அதிகாரத்தை நம்புவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு நீதியை உறுதிப்படுத்த சட்ட நிபுணத்துவத்தைப் பயன்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்  தனது கெளரவுத்துக்காகவும் சுய மரியாதைக்காகவும் போராடி வருவதால் அவருக்கு ஆதரவளிக்க அமைப்பு முடிவு செய்துள்ளதாக ஏ.ஐ.சி.எஃப் தலைவர் தெரிவித்தார். அவரது குடும்பத்தினர் ஏ.ஐ.சி.எஃப்-ஐ அணுகியபோது, அவர்கள் வழக்கை எடுத்துக் கொண்டு அவருடைய நீதிக்காக போராட முடிவு செய்தனர். ரோட்ரிக்ஸ் மேலும் கூறுகையில், லயோலா கல்லூரியின் நிர்வாகமும் பழைய மாணவர்களும் சக்திவாய்ந்தவர்கள், அவர்கள் இந்த விவகாரத்தில் ஒரு மெளனத்தை பேணி வருகின்றனர் என்றார்.

முன்னதாக, இந்தியாவில் ஜேசுயிட் துஷ்பிரயோகம் குறித்தும், கிறிஸ்துவத்தின் பல்வேறு பிரிவுகளில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாகவும் ஏ.ஐ.சி.எஃப், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஜேசுட் ஆணையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, இந்த வழக்கில் இரண்டு தனித்தனியான விசாரணைகளை நடத்துவதற்காக ரோமில், ஜேசுயிட் குரியா மேற்கொண்ட முயற்சிகளை அகில இந்திய கிறிஸ்தவ மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இயேசு சங்கம் தனது சமீபத்திய விசாரணையின் அறிக்கையை வெளியிடத் தவறியதாக அவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஊழல் நிறைந்த குருமார்கள் ‘உண்மை கண்டுபிடிப்பு மற்றும் அறிக்கையிடலில் செல்வாக்கு செலுத்துவதைத்’ தடுக்க ஒரு மதச்சார்பற்ற / வெளி விசாரணையை சேவியோ ரோட்ரிக்ஸ் கோரியுள்ளார். ஆரம்ப விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர் நேர்காணல் செய்யப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

சேவியர் அல்போன்ஸ் போன்ற ஊழல் நிறைந்த குருமார்கள் அவர் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளில் நிரபராதிகள் என்று விடுவிக்கப்படலாம் என்று நாங்கள் உணர்கிறோம், இதனைத் தடுக்க, லயோலா கல்லூரி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வெளி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விவகாரம் பற்றி எந்த மகளிர் அமைப்பும் கண்டு கொண்டதாக இல்லை. எந்த ஒரு தமிழக ஊடகமும் முறையான செய்தி வெளியிட்டது இல்லை எனத் தெரிகிறது. தொலைக்காட்சி விவாதங்கள் நடந்ததாகவும் தெரியவில்லை. நடுநிலை ஊடகம் என்று தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டவர்கள், இவ்விவகாரம் குறித்து விவாதிப்பார்களா? என்பது பொதுப்பார்வையாக உள்ளது. 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

https://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/%E0%AE%B2%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-114030600047_1.html



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Single judge order on reinstating suspended Loyola College professor upheld

Published: 16th March 2018 04:34 AM  |   Last Updated: 16th March 2018 04:34 AM

According to advocate P Chandrasekaran, Dr V Joseph was suspended from service by an order dated December 7, 2017 of the college.

By Express News Service

CHENNAI: A division bench of the Madras High Court upheld the order of a single judge, which set at naught an action of the management of Loyola College in Nungambakkam suspending the services of a professor and ordering his reinstatement.

 

“We are of the considered view that the finding given by the single judge need not be interfered with as it does not suffer from any illegality or irregularity. Accordingly, it is confirmed,” the bench consisting of Justices Huluvadi G Ramesh and RMT Teekaa Raman said and dismissed a writ appeal from the management.

According to advocate P Chandrasekaran, Dr V Joseph was suspended from service by an order dated December 7, 2017 of the college. The charges against him were that he had made a defamatory statement in an anonymous letter against another woman professor. During the pendency of the enquiry, he was placed under suspension. Challenging this, he filed a writ petition and a single judge on January 23 last set aside the suspension order and directed the college to reinstate him.
Aggrieved, the college put forth the present writ appeal.

Chandrasekaran pointed out that there was an unexplained delay of 45 days in filing the complaint against Prof Joseph. Though it was an anonymous letter, the management had attributed the same to Dr Joseph and suspended him for nine months and when he resumed the work after serving the suspension order and a domestic enquiry, headed by a retired district judge, was in progress, the management once again penalised him with another suspension order on ‘imaginary grounds.’
Chandrasekaran contended that the anonymous letter dated November 28, 2017 was a false and fabricated one and the punishment was nothing but a ruse to harass Joseph.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Chennai: Loyala College sacks professor who alleged sexual harassment

The Tamil teacher is seeking a stay on her termination from Loyola College.

Chennai: An assistant professor who alleged sexual harassment was sacked last week by Chennai's Loyola College, one of India's most prestigious institutions.

The former Tamil professor alleges that the college first pressured her to withdraw a sexual harassment complaint against her former head of department, and then sacked her without giving any reason.

The 51-year-old alleges that she was harassed by the head of the Tamil Department six years ago.

The college's committee against sexual harassment finally investigated her complaint after a five year struggle, but the professor says the probe report was not shared with her and no action was taken against the man she had complained against.

"They are shielding him because they don't want their name to be tarnished. Loyola College is more than 80 years old. They asked me to forgive him many times," she told NDTV.

Last week, the college reportedly sent a termination order and a cheque for a month's salary to her home.

 

She has moved the Madras High Court, which has ordered the police to file an FIR or first information report against the professor accused of sexual harassment.

Loyala College has not offered any justification for sacking the professor.

 

 

 

 

"The issue is sub-judice. The particular member was on contract and we don't require her anymore. So we have terminated her contract," Loyola College Principal G Joseph Anthony Samy told NDTV.

Left without a job, the professor is worried about her future. She says "Just because I stood against sexual harassment, I could be seen as a troublemaker. No institution will give me job."

ChennaiReported by Sam Daniel, Edited by Zoya Anna ThomasUpdated: March 07, 2014 01:12 pm IST
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Why Madras High Court Is Right In Observing That Christian Institutions Are Unsafe For Girl Children

Why Madras High Court Is Right In Observing That Christian Institutions Are Unsafe For Girl ChildrenThe MCC in Chennai.
Snapshot
  • Reported cases of sexual abuses in Christian institutions are only a handful with several cases having gone unreported due to fear of the authority, political patronage or the helplessness of victims.

    When Justice Vaidyanathan said that Christian institutions have become “highly unsafe for girl children”, he was reflecting the anguish of many silent parents.

Last week, an observation by Justice S Vaidyanathan of the Madras High Court, while hearing a petition from an assistant professor of Madras Christian College (MCC), on the safety of Christian institutions for girl students in Tamil Nadu, caused a flutter in the state.

The judge made the remarks when MCC Assistant Professor Samuel Tennyson moved the High Court to quash a show cause notice issued to him on charges of sexually harassing at least 34 girl students.

The students were studying zoology in the college and were in the final year of their undergraduate course.

The show cause notice was issued after an internal complaints committee of the college found substance in students’ complaints of sexual harassment during an academic tour to Bengaluru, Mysuru and Kodagu in January this year.

Quashing Tennyson’s plea, the judge said that though Christian institutions “impart good education, their preaching of morality will be a million-dollar question.” He said Christian institutions have become “highly unsafe for girl children”.

Justice Vaidyanathan’s remark has drawn reactions in favour and against.

However, his observations are not out of place if one were to look at some of the past records of some Christian institutions in Tamil Nadu.

In August last year, Chennai Police arrested four people under the Protection of Children from Sexual Offences (POCSO) Act for sexually harassing children of an orphanage run by a Christian organisation. The arrest and filing of cases followed complaints from the girls of the orphanage.

In June last year, a case under POCSO Act was filed against 63-year-old Rev Guna Jothimani or Gunajyothi, correspondent and hostel warden of Methodist School at Uraiyur near Trichy, for sexually abusing a girl studying in Class IX.

Initially, the police refused to entertain a complaint from the victim’s family but as the information spread, the correspondent himself surrendered in the additional magistrate court, Trichy.

Later, he was let out on bail though the judge said that allegations against him were serious.

A more famous abuse case was that of a girl student from a Christian institution in Salem. The body of the Dalit girl, Suganya, was found in a well near the Omalur Fathima Girls Higher Secondary School near Salem in 2006. Blood, broken bangles were found along with condoms and liquor bottles from the school premises resulting in the people suspecting involvement of some school authorities in the student’s death.

The then Bishop of Salem rejected a request from the ruling Dravida Munnetra Kazhagam minister to transfer the staff to pacify the restless public. Forensic tests later revealed that the girl had been sexually molested.

A priest, who was a suspect in the case, was asked to undergo medical tests but nothing much has been heard after that. The culprits are still free.

A year later, a girl was reported to have committed suicide in Cuddalore St Anne’s Girls Higher Secondary School hostel. The family of the girl, Ananthavalli, suspected foul play. Local media reported that the girl’s mouth was found stuffed with cloth and a bunch of her hair was found a little away. However, nothing happened in this case.

In 2008, a Catholic priest was found murdered in his hostel room of a pilgrim centre in Tamil Nadu. Subsequent investigations by the Tamil media revealed that he was part of a network that abused girls in orphanages.

In September 2015, 17-year-old girl Sivasakthi, studying in Class XII at the Little Flower Roman Catholic School for Girls at Chinna Salem in Kallakurichi district, was found hanging. The girl belonged to the Schedule Caste community and foul play was suspected behind her death, but the school authorities said she committed suicide as she had fared poorly in mathematics.

These are cases that have come to light.

There are some cases like that of Rathinam Rajarathinam, a priest and president of St Joseph’s College Trichy, that was kept a secret for over a decade before they became public in recent months. Rajarathinam raped and impregnated a nun, who was pursuing a master’s degree in the college.

The priest continuously threatened and abused her between 2006 and 2008 leading to her pregnancy in 2008. The pregnancy was terminated and she was expelled from the church. The nun’s case was taken up by the college rector Susai Pitchai but he was found dead in 2010. Police said Susai Pitchai died of a heart attack.

Police filed a case against Rajarathinam for abusing the nun but he got a bail from the Madras High Court in November 2010. He is now the secretary of the Loyola College at Vettalam in Thiruvannamalai district. The case against him is still pending in a court specially set up to deal with cases of women abuses.

Reported cases of sexual abuses in such institutions are only a handful. There are many cases that have gone unreported either due to fear of the authority, political patronage or the victim feeling helpless against powerful authorities.

The case against MCC Assistant Professor Tennyson, therefore, isn’t something to be dismissed off lightly. He has been accused of sexual misconduct by at least 34 girl students.

Justice Vaidyanathan has only reflected the anguish of many silent parents, who according to him, generally feel that co-educational study in Christian institutions is “highly unsafe for the future of their children”, especially female students.

In reflecting the concerns of thousands of such parents, his observations seem justified.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Why did Loyola College Chennai tell Mary Rajasekaran not to go to the TN police on sexual harassment case?

Chennai: In a shocking revelation in the Mary Rajasekaran sexual harassment case by Father Xavier Alphonse, Loyola College Chennai told the victim not to approach the Tamil Nadu police to file a complaint against sexual harassment she faced while in the college as Administrator of the Office of the Alumni Association.

In her petition affidavit in the Madras High Court, Mary Rajasekaran, states, “I further submit that inspite of this I was continuously harassed by the said Rev.Fr. Xavier Alphonse SJ, over telephone as well as in person at my office in the College campus and whenever I brought these to the knowledge of the management including the Rector of Loyola College Chennai herein I was dissuaded by them from pursuing any action against the said Rev.Fr. Xavier Alphonse SJ, including lodging of Police Complaint, by stating that name and goodwill painstakingly earned by the Loyola College Institution will be sullied if the matter is made public. They also informed me that steps are being taken to transfer Rev.Fr. Xavier Alphonse SJ, to some other institution by the management and I was asked to wait till then.”

According to the petition affidavit in the Madras High Court there is clear attempt on the Loyola College to prevent the matter of sexual harassment at workplace reaching the Tamil Nadu police authorities. 

More so, not a single Internal Complaints Committee was setup by the Loyola College Chennai on this case under the guidelines stipulated by the University Grants Commission (UGC).

The Sexual Harassment of Women in Higher Education Institution (HEI) is prohibited by the University Grants Commission (Prevention, Prohibition and Redressal) Act, 1956, along with The Sexual Harassment of Women at the Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013. 

The act acts on all HEIs Campuses which includes all facilities such as Libraries, Laboratories, Lecture Halls, Residence Halls, Toilets, Hostels, Dining Halls, Canteens, Parking Area and Parks. The Act also covers within its scope ‘Extended Campus’ such as transportation provided the purpose of commuting to and from the institution, and locations outside the institutions such as sports meets, cultural fests etc. where the employee or student of the HEI is participating.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Refusing to answers questions on Mary’s sexual harassment case, Loyola College Chennai Alumni blocks Savio Rodrigues on Twitter

Chennai: It appears that the Loyola College Alumni Association, Chennai dislikes answering tough questions with regards to a sexual harassment case filed in the Madras High Court by Mary Rajasekaran, Administrator of the Alumni Association against its Former Director Father Xavier Alphonse. It has blocked GoaChronicle.com Founder & Editor-in-Chief Savio Rodrigues on social media platform Twitter.

Mary Rajasekaran had filed a case of sexual harassment against Fr Xavier Alphonse in 2016. In her petition she has also named Loyola College Chennai and the Office of the Alumni Association.

In the grounds of the petition in the Madras High Court, Mary Rajasekaran has stated, “Loyola College Chennai and its Office of the Alumni Association has committed a serious offence by not taking action on my complaint of sexual harassment at the work place as required under the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 and the guidelines laid down by the Hon’ble Supreme Court in Vishaka and others Versus State of Rajasthan and others reported in (1997) 6 SCC 241.”

The question GoaChronicle.com has been asking Loyola College Chennai and Loyola College Chennai Alumni Association is that when such a grave offence has occurred to a senior lady, a representative of their own college by Fr Xavier Alphonse why has such a prestigious institution and its alumni not fought for the human rights and the modesty of a woman of their own college.

Mary Rajasekaran was sexually harassed by Fr Xavier Alphonse because she exposed his corruption as mentioned in the Madras High Court affidavit, “I questioned the dubious methods used by the Director, Alumni Association Rev.Fr. Xavier Alphonse SJ, to siphon off amounts close to about Rs.1 Crore lying in the corpus of the Loyola Alumni Association to a personal Trust run by him elsewhere.”

In the affidavit, Mary Rajasekaran further states that keeping this vengeance against me the said Rev.Fr. Xavier Alphonse started harassing me and abusing me at every possible instance and sometimes behaved in a manner unbecoming of a reverend priest. I brought these matters to the notice of the management of the Loyola College who would then try to pacify me but failed to take any meaningful action and were indirectly shielding the nefarious activities of the said Ref.Fr. Xavier Alphonse.”

The affidavit further stated, “I further submit that inspite of this I was continuously harassed by the said Rev.Fr. Xavier Alphonse SJ, over telephone as well as in person at my office in the College campus and whenever I brought these to the knowledge of the management including the Rector of Loyola College Chennai herein I was dissuaded by them from pursuing any action against the said Rev.Fr. Xavier Alphonse SJ, including lodging of Police Complaint, by stating that name and goodwill painstakingly earned by the Loyola College Institution will be sullied if the matter is made public. They also informed me that steps are being taken to transfer Rev.Fr. Xavier Alphonse SJ, to some other institution by the management and I was asked to wait till then.”

After the case was filed in the Madras High Court in 2016 and court notices issued to Fr Xavier Alphonse and Loyola College Chennai there has been no response to the notices. The case continues to drag on.

Blocking the questions of GoaChronicle.com does not stop the truth from coming out. Loyola College Chennai and Loyola College Chennai Alumni Association must answer for their inaction on this case.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard